அத்தியாயம்_1
கிழக்கில் ஆதவன் தன்வர்ணஜாலங்களை காட்டி உதயமாகிக்கொண்டிருக்க. பட்சியின் ஒசையும்," கொக்கரக்கோ கோ" எனும் சேவலின் ஓசையும் விடியலை பரைச்சாற்ற நாங்களும் தயார் என்ற தோரணையில் மனிதர்கள் ஆடு மாடுகளுடனும், சிலர் கலப்பையுடனும் , சிலர் வேப்பங்குச்சியை வாயில் குடைந்த படியும் தங்கள் வேலையை நோக்கி சென்றனர். அவ்வேளையில் விருதாசலம் வீட்டின் முன்பு ஊர்பெரியவர்கள் ஒன்றுகூடி வந்தனர்.
என்னடா வேலு, ஐயா வீட்ல இருக்காரா என பெரியவர் கேட்க.
வாக்க ஐயா, வணக்கம். ஐயா வீட்லதா இருக்காரு, இருங்க நான் நீங்க வந்தத சொல்லிட்டு வர . என வேலு விருதாசலத்திடம் சென்று விவரத்தை கூற . அவர்களை தோப்பிற்கு வர சொன்னார் விருதாசலம்.
என்னையா,எல்லாரு சேர்ந்து வந்திருக்கிங்க என்ன விஷேஷம். என நெற்றியில் பட்டையும், கழுத்தில் தங்கத்தில் கோர்க்கப்பட்ட கொட்டையும், மேலும் இரண்டு சங்கிலியும் , கையில் தங்க காப்பும் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஆண்மைக்கே உரிய தோரணையில் ஒற்றைக் கையில் தன் வெள்ளை மீசையை நீவியப்படி கேட்டார்.
வணக்க ஐயா, நம்ப ஊர்ல திருவிழா வருது அதா உங்கள பாத்து ஒரு எட்டு சொல்லிபுட்டுப் போலானு வந்தோம்.
எப்ப மாரி திருவிழா? என மஞ்சள் சிவப்பு வண்ண பட்டு சேலையில் நெற்றியில் குங்குமத்துடன் லட்சுமிகடாட்சமாக அனைவருக்கும் இளநீரை வழங்கும் படி ஏசினார் மீனாட்சி.
ஆடி பதினெட்டு காப்பு கட்டிட்டு இருபது திருவிழா வெக்கலானு பூசாரி சொன்னாரு அம்மா.
அதுகென்ன மாரி இந்தவாடி திருவிழாவ ஜமாய்ச்சிடுவோம்.
ஐயா இந்த முறை உங்க மூத்த பேரனுக்கும் பரிவட்டம் கட்டலாம் இருக்கோம் .
சரி கட்டிடலாம். மீனாட்சி திருவிழுவுக்கான செலவ பாத்து கொடுத்திடு. எனும் பொழுது அங்கு வந்த இளைஞ்சர் பட்டாளம் என்ன பெரியவரே எங்க சிவா அண்ணாவுக்கு மட்டுதா பரிவட்டமா எங்களுக்கெல்லா இல்லையா என்றான் விஷ்வா.
அது பெரியவங்களா கொடுக்கனும் நாமலா கேட்ககூடாது.என வடிவேலு பானியில் சொல்லிக்காட்டினால் ஹரிணி.
விருதாசலம் - மீனாட்சிக்கு மூன்று ஆண்பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும்.
மூத்தவர் பரஞ்ஜோதி மனைவி உமையாள். மகன் சிவா
நடுவர் சங்கரன் மனைவி பார்வதி .மகள் ருத்ரா
அடுத்தவர் அருண்குமார் மனைவி கவிதா மகன் விஷ்ணு, மகள் ஹரிணி.
மகள் கயல்விழி கணவர் கார்திகேயன். மகன் துருவன் மகள் தேன்மொழி.
அங்கு வந்த பார்வதி சண்டையெல்லாம்போதும் சாப்பிட வாங்க.ஐயா வந்தவங்களையும் அழைச்சிட்டு வாங்க.
இல்ல அம்மணி கோவில் வேலை இருக்கு இன்னொரு முறை சாப்பிடுறோம் .வரங்க ஐயா , போய்யிட்டு வரோங்க மா என அனைவரும் சென்றவுடன். வீட்டினர் சாப்பிட சென்றனர்.
சாப்பிட அமர்ந்த ஹரிணி, வாங்க இன்சினியர் சார் . ஊர்ல திருவிழா வருதாம் இந்தமுறை உங்களுக்கும் பரிசமாம் என்றாள் விஷ்வாவை பழிப்புக்காட்டி.
என்ன தாத்தா இது, எனக்கு பரிசம் எல்லாம் வேண்டாம்.அப்படி எல்லா சொல்லாத அவங்க நமக்கு கொடுக்கும் மரியாதய ஏத்துகனும்டா கண்ணு. என்றார் மீனாட்சி சிவாவின் தலையை வருடியப்படி.
பாட்டி நானும் பெரியவந்தா பரிசம் எனக்கும் கட்டலாம். என விஷ்வா கூறிய போது அங்கு வந்த அருண் அதுக்கு முதல்ல பொறுப்பா மில்ல பாத்துக்க பிறகு பரிசம் கட்டலாம். படிச்சிட்டு ஊர் சுத்தரவனுக்கு பரிசம் ஒன்னுதா குறை.
அருணுக்கு பரிமாரிய உமையாள்.விடுங்க கொழுந்தரே குழந்த ஏதோ ஆசையா சொல்லிட்டா விடுங்க.
அடி பூசணி கத்தரிக்கா மாதிரி இருந்துகிட்டு என்ன வெள்ளபன்னினு சொல்லுறியா என தலையில் குட்டினான்.
விஷ்வாவிற்கும் சிவாவிற்கும் இடையிலிருந்த நாற்காலியில் வந்தமர்ந்த ருத்ரா. என்ன சாப்பிடும்போது விளையாட்டு எப்ப மில் பக்கம் போறாமாதிரி இருக்க நான் மால் வோர்க் (mall work) ஆரமிச்சா என்னால மில் பக்கம் போக முடியாது என்றாள் விஷ்வாவை பார்த்து.
அக்கா இன்னக்கு சார் காலேசுக்கு வர சொன்னார் அங்க போலானு இருக்க.
அக்கா சார், இன்னக்கும் மில் பக்க வரமாட்டனு சிம்பாலிக்கா சொல்லுறார்.அப்படிதான விஷ்ணு அண்ணா.
இல்ல கா , சீக்கிரமாவே மில் பக்கம் வர. இருடி பூசணி உனக்கு இருக்கு என்றான் ஹரிணிக்கு மட்டும் கேட்கும் குரலில்.
தாத்தா நாம மால் கட்டபாத்து வெச்சிருக்க இடத்தோட ஓனர் இன்னக்கு நம்ம ஊருக்கு வரராம் அவர பாத்து இடத்த நமக்கான ரிஜிஸ்டர்பத்தி பேசிட்டு அப்படியே மில்பக்கம் போய் கணக்கு முடிச்சிட்டு மதியசாப்பாட்டுக்குதா வீட்டுக்கு வருவேன். சிவா அண்ணா நீ மாலுக்கான பிளான் டிசைன் பண்ணு இடம் நமக்கு கிடச்சிடும்னு நினைக்கிறேன்.
அங்கிருந்த மீனாட்சி கவலையவிடுடா அந்த இடம்நமக்குதான். ருத்ரா கைவைத்த வேலை முடியாம இருக்குமா என்ன? அதான என்று மாமியாரை ஆமோதித்தார் உமையாள்.
சாப்பிட்டுவிட்டு அனைவரும் எழும்ப .ருத்ரா, ஹரிணி நானே உன்ன காலேஜ்ல இறக்குறேன் அந்த வழியாதா போகனும் வா.
அக்கா, டயர்ல காத்து செக் பண்ணிக்கோ ஓவர் வெயிட்ல டயர் வெடிச்சிடப் போகுது.
அப்படி ஒண்ணும் குண்டில்ல என் மருமகள் என கூறியப்படி உள்ளே நுழைந்தார் கயல்விழியும் துருவனும்.
அத்தையின் செல்ல மருமகளைப் பற்றிஇதற்கு மேல் பேச முடியாது என அறிந்த விஷ்வா . அட வா மாப்ள என துருவனை அணைத்துக்கொண்டு எஸ் ஆகிவிட்டான்.
வா கயலு, என்ன விஷயம் இவ்வளவு காலையில வந்நிருக்க என மீனாட்சி கேட்க.
அது வந்து அம்மா நம்ம துருவனுக்கு போலிஸ் வேலை கிடச்சிருக்கு.நம்ப கோயம்பத்தூர்ல DSP யா சார்ஜ் எடுக்குறான். அத சொல்லிட்டு என மருமகளுக்கு புடிச்ச குலாப்ஜாமுன் பண்ணிண அத குடுத்துட்டு போலானு வந்தே என்றவாறு ஹரிணியிடன் தூக்குவாலியைக் கொடுத்தார்.
அத்தைக்கு முத்தத்தை கொடுத்துவிட்டு.அனைவரிடமும் சொல்லிவிட்டு பையுடன் வெளியே வந்தாள். ருத்ரா யாருடனே பேசிக்கொண்டுருக்க காரின் அருகில் நின்றிருந்தாள்.அப்பொழுது உள்ளே நுழைந்த துருவனின் கண்ணில் ஹரிணி பட அவள் முன் சென்று புன்னகைத்தான்.
என்ன காலேசுக்கா?
ஆமா, வாழ்த்துக்கள் DSP சார் .
அங்கு வந்த ருத்ரா DSP ஆயிட்ட எப்ப லவ் சொல்லுற ஐடியா.
படிச்சிட்டு இருக்கா இன்னும் கொஞ்சநாள்ள படுப்பு முடிஞ்சிடும்.அப்றம் சொல்லலானு.
ஒகே, நாங்க கிளம்புறோம். பாய் என இருவரும் காரில் சென்றனர்.
ஹரிணியை விட்டுவிட்டு மால் கட்டும் இடத்தின் முதலாளியை பார்க்க அவர் அழைத்த மில்லுக்கு சென்றாள் அவள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தை அறியாமல்.
மில்லில் முதலாளியை பார்துது அதிர்ந்து நின்றாள். பின்பு யாரை பார்க்கவே கூடாது என்று இருந்தாளோ அவன் முன்போ அவளை நிற்க வைத்தது விதி.
அத்தியாயம்_2
மில்லுக்குள் சென்ற ருத்ரா முதலாளி அறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த ஆதவை. பார்த்து அதிர்ந்து நின்றாள்.பிறகு சுதாரித்துக்கொண்டு
மார்கெட் பக்கத்தில இருக்கிற இடம் விஷயமா பேச யார பார்கனும் என்றாள் ஆதவனை பார்த்து.
எதிரே இருந்த நாற்காலியில் இருக்கும்படி சைகை செய்து, அந்த இடம் என்னுடையதுதான்.எதுக்காக நீங்க ரிஜுஸ்டிரேசன் பத்தி பேசுரிங்கனு தெரிஞ்சிக்களாமா.என்றான் வலக்கையின் சுட்டுவிரலால் புருவத்தை நீவியப்படி.
ஆறடியில் உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடலும் , வெள்ளை நிறசட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு ஆண்மைக்கே உரிய ஆளுமையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
அந்த இடத்துல ஒரு மால் கட்டலானு இருக்கோம். அதுக்கு உங்க 20 ஏக்கர் இடம் வசதியா இருக்கும். உங்களுக்கு ஓகேனா, நாளைக்கே ரிஜிஷ்டேஷன் வைச்சிக்களாம்.
உங்களுக்கு அந்த இடம் ரொம்ப முக்கியம்னு தெரியுது.ஆனா நா அத விற்க தயாராயில்ல.உங்களுக்கு சம்மதம்னா நீங்களும் நானும் பாட்னர்சா இருந்து மால்ல(mall) தொடங்களாம். எனும் பொழுது அங்கு வந்து சேர்ந்தான் சிவா.
டேய் மச்சான், என்னாடா தீடிர்னு போன் போட்டு நாளைக்கு ஊருக்கு வரனு சொன்னியே என்ன விஷயம் என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அப்பொழுது அங்கிருந்த ருத்ராவைப் பார்த்து , என்ன ருத்ரா இங்க வந்திருக்க.
மால் இடம் விஷயமா அந்த ஓனரை பார்கனம்னு சொன்னனே அதா அண்ணா. நீ எங்க இங்க?
அதுவா, மச்சா என்னோட உயிர் நண்பன் ஆதவ். இரண்டு வருஷம் கழிச்சி இப்பதா ஊர்பக்கம் வரனு போன் பண்ணாரு அதா சார பாத்துட்டு நல்லா கவனிச்சிட்டு போலானு வந்தேன் என்றான் தன் கையை குத்துவது போல் முறுக்கிக்கொண்டு.
ஆதவ் தன் அண்ணணின் நண்பன் என அறிந்ததும் மிரண்டு பின் சமநிலைக்கு வந்தவள். ஆதவை பார்த்தால்.
மிஸ். ருத்ரா பார்ட்னர்சிப்பக்கு ஓகேனா மேற்கொண்டு பேசலாம்.
என்ன ருத்ரா , என்ன பார்ட்னர்சப்?
அண்ணா, இடத்த விற்கராமாதிரி இல்லையா பார்ட்னர்சிப்ல மால் கட்டலாமானு கேட்கிறார்.
நீ என்ன பண்ணலானு இருக்க?
தாத்தா கிட்ட பேசிட்டு சொல்லலானு இருக்க அண்ணா. சார் நா உங்களுக்கு இரண்டு நாள்ள என்னுடைய முடிவை சொல்றேன். என அவ்விடத்தைவிட்டு புறப்பட்டாள்.
ஆதவிற்கு அர்சணையை முடித்த சிவா,
என்ன விஷயமா ஊர்பக்கம் வந்திருக்க?என்றான்.
இனி அப்பாகூட சேர்ந்துதா தொழில் பாக்கபோகிறேன்.உண்மைய சொல்லனும்னா கல்யாணம் பண்ணிக்கலானு என்றான்.
என்னடா குண்ட தூக்கிபோடுற .பொண்ணு யாரு இந்திகாரியா. டெல்லிக்கு போய் நல்லா பாலிஹூட் ஹிரோ மாதிரி ஆயிட்ட.
சச்ச.. பொண்ணு ஆரா.
டேய் போதும் டா , இதுக்கு மேல என் நெஞ்சி தாங்காது. நீ அப்படி பேசினதுக்கு பிறகு அந்த பெண்ணு உன்ன எப்படி கல்யாணம் பண்ணிக்கோ? நீ பேசினபேச்சிக்கு அந்த பொண்ணு உன்ன அடிக்காம விட்டதே அதிகம்.போடா போய் வேலையப்பார்.
இப்ப செருப்பால அடிச்சாலும் வாங்கிப்ப.எனக்கு அவ வேணுண்டா .plz help me.
அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இருந்தா என்ன பண்ணுவ?
கல்யாணம் ஆகல.
அப்ப ஒரு முடிவோடதா வந்திருக்க.சரி பொண்ணு கையால அடிவாங்கணும்னு உன் தலையில எழுதியிருக்கு போல யாரால மாத்த முடியும்.என பேசிக்கொண்டே இருவரும் ஊரை சுற்ற கிளம்பிவிட்டனர்.
கல்லூரிக்கு சென்ற விஷ்வா, கல்லூரி முதல்வரிடம் பேசிவிட்டு பேராசிரியராக பணிநியமன ஆணையுடன் வீட்டிற்கு சென்றான்.
மில்லுக்கு சென்ற ருத்ராவால் வேலையில் ஈடுப்பட முடியாமல் மேசையில் கையை குத்தியபடி தலையைப்பிடித்து அமர்ந்திருந்தாள்.
யாரை தன் வாழ்வில் மீண்டும் பார்க்ககூடாது என நினைத்தாளோ அவன் முன்பே சென்று வேலை விஷயமாகப்பேசியதால் எழுந்த கோபத்தில் வேலைகளை அப்படியே விட்டு வீட்டிற்கு சென்றாள்.
அது வந்து தாத்தா , நாம மால் கட்டபோற இடத்தோட ஓனர்கிட்ட பேசின அவரு நா இடத்த விக்கறாமாதிரிஇல்ல உங்ஙளுக்கு வேணும்னா இரண்டு பேரும் சேர்ந்து தொழில் தொடங்களாம்னு சொல்லுறார் அதா என்ன பண்ணலாம் தாத்தா.
அப்பா, அந்த ஆளு சொல்லுறா மாதிரி சேர்ந்தே தொழில் தொடங்குவோம். நமக்கு வர வருமாணத்துல மால்கட்டினாலும் இலாபம் எடுக்கர வரைக்கும் தொழில்ல இன்னொருத்தரோட பங்கு இருந்தா அதிகமா கஷ்டம் இருக்காது நா என்ன சொல்லவரனு புரியும்னு நினைக்குறேன் அப்பா என்றார் சங்கரன்.
நீ சொல்லுறதும் சரிதா சங்கரா. ருத்ரா நீ அவர்கிட்ட சேர்ந்தே தொழில் தொடங்களாம்னு சொல்லிடுமா.
இல்ல தாத்தா, நாம தனியாவே வேற இடம்பாத்து மால் கட்ட தொடங்களாம்.
அருண், ருத்ரா புதுசா ஆரம்பிக்கர தொழில தனியா தொடங்குறத விட கூட ஒருத்தர்துணையோட தொடங்குனா பல நஷ்டங்கள தவிர்களாம். எடுத்த உடனே ஆழத்துல கால விடமுடியாது. பள்ளம் மேட பாத்துதா நடக்கனும்.
ருத்ரா அந்த ஓனர்கிட்ட பேசி தொழிலுக்கான ஒப்பந்தத்த தயார் செய்திடு. ஒரு நல்ல நாள்ள பூமிபூஜை போட்டு தொழில் தொடங்கிடலாம் என்றார் விருதாசலம்.
அனைவரையும் ஆமோதிப்பதாக சரி எனும் தலையசைப்புடன் சோர்வுடன் தன் அறையை நோக்கி நடந்தாள்.
இனி ருத்ரா ஆதவின் வாழ்க்கை எனும் அணை, விதி எனும் வெள்ளத்தால் இணைய போகிறது. நாமும் இவர்களுடன் சேர்ந்து பயணிப்போம் வாருங்கள்.
அத்தியாயம்_3
கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி.
வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள்.
ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் முன்பு சடன்பிரேக் இட்டு நிறுத்தியதில், அதிர்ந்து இரண்டடி பின்சென்றாள்.
கருப்பும் சிவப்பும் கலந்த காட்டன் புடவை அவள் வெண்நிறத்திற்கு மேலும் அழகு சேர்க்க, வளைந்த புருவத்தின் மத்தியில் சிறிய கருப்பு நிற பொட்டும் அதற்கு மேலே சிறிய பட்டை சந்தனமும், மையிட்ட விழிகள் அதிர்ந்ததில் மேலும் விரிந்திருக்க, கூரான நாசியில் சிவப்பு நிற மூக்குத்தியும், சிவந்த உதடுகளும், சிறிய கழுத்தில் மெல்லிய நீண்ட செயினில் இசை சிம்பிலின் (?) மத்தியில் M என கற்கள் பதிக்கப்பட்ட டாலரும், வலக்கையில் மெல்லிய பிரேஸ்லைட்டும், இடக்கையில் ரோஸ்(ம)தங்க நிறம் கலந்த கடிகாரமும், வலது தோள்பட்டையில் இடைவரை தொங்கும் பையும், இடைவரை நீண்ட கற்றைமுடியை சென்டர் க்ளிபில் அடக்கியிருக்க, காலில் படிந்த(Flate)செருப்புடன் இருந்தவளை விஷ்ணு அச்சிறிய நேரத்திலும் ரசிக்க தவரவில்லை.
( செருப்பெல்லாமா ரசிப்ப?)
ஏய், கருப்பு புடவையில தலவிரி கோலமா யார் கிட்ட நீதி கேட்க போகிறாய் , மார்டன் கண்ணகி என்றான்.
அதுவா , என் காதல் கணவராக போகிறவனை, கொன்றவனை பார்த்து நீதி கேட்க போறேன்.
அடி பாதகத்தி, உன் காதல் கணவனாக போகிறவன், உன் முன்னாடி தானே இருக்கேன். என்றான் அதிர்ந்த குரலில்
ஹலோ, இன்னொரு முறை காதல், கணவன்னு சொன்ன, மாமா பையனுகூட பார்க்க மாட்ட, தாத்தா கிட்ட சொல்லிடுவ அப்புறம் வீட்ல சாப்பிடுற தண்டசோறும் கட்டு தா. என்றாள் கோப குரலில்.
சரி வந்து வண்டில ஏறு, நானே காலேஜ்ல விட்டுறேன்.என்றான் வண்டியை திருப்பிக் கொண்டு.
அதுக்கு வேற ஆளப்பாரு, உன் வண்டில எப்பவும் ஏற மாட்டேன்.என கூறிவிட்டு
வேகமாக நடந்து சென்றாள்.பாவம் அவள் அறியவில்லை, அவள் வாழ்க்கையே அவனுடன் தான் செல்ல போகிறதென்று.
வீட்டில் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க. விஷ்ணு,
தாத்தா பாட்டி அப்பா அம்மா அண்ணா ருத்ரா உங்க எல்லார் கிட்டயும் ஒண்ணு சொல்லனும் என்றான் மெல்லிய குரலில்.
அங்கிருந்த ஹரிணி, எதுக்கிப்ப அட்டணென்ஸ் எடுக்கற , நீ என்ன சொல்லப் போற தாத்தா, என்னால நாளைக்கு மில்லுக்கு போகமுடியாது எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அதான சொல்லப்போற, என்றபடி இட்டலியை வாய்குள் அடைத்தாள்.
ஹரிணியை முரைத்து விட்டு, தாத்தா எனக்கு *** கல்லூரில பேராசிரியரா வேல கிடச்சியிருக்கு.நாளையில இருந்து வேலைக்கு வர சொன்னாங்க , நீங்க என்ன சொல்ரிங்க? என்றான் தயங்கியபடி.
ஹரிணிக்கு விஷ்ணு சொன்னதைக் கேட்டு புரையேற.அருகில் இருந்த கவிதா பொறுமையா சாப்பிடுடி, என
தலையை தட்டியபடி தண்ணீரை கொடுத்தார்.
உனக்கெல்லாம் யாரு வேல கொடுத்தாங்களோ? நீயே ஒரு தண்டசோறு உன்கிட்ட படிக்கபோற பசங்களோட நிலைமை என்னமோ? கையை உயர்த்தி மேலே பார்த்தாள்.
அங்கிருந்த உமையாள், ஹரிணி அண்ணனு மரியாத கொடுத்து பேசு.மாமா, என் மகனுக்கு புடிச்ச வேலய அவ பாக்கட்டுமே,பாடம் சொல்லி கொடுக்கறவங்க கடவுளுக்கு சமமானவங்க. என விஷ்ணுவின் தலையை வருடினார்.
விருதாசலம், விஷ்ணுவை பார்த்து நீ என்ன வேலைக்கு வேணுனாலும் போ ஆனா வாரத்துக்கு ஒரு முறை மில்லுபக்கம் போய் என்ன வேல நடக்குதுனு பார் . நம்ப தொழில நம்பதா பாக்கனும்.என்றபடி சாப்பிட முனைந்தார்.
அங்கு நடந்த அனைத்தையும் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்த ருத்ராவின் மனதில், அவனுடைய நினைவுகளையே ஏற்கமுடையாத என்னால் அவனுடன் சேர்ந்து எவ்வாறு தொழில் தொடங்குவது என்ற எண்ணத்திலே சரியாக சாப்பிடாமல் அறைக்கு சென்றுவிட்டாள்.
தாத்தாவின் சம்மதத்தால், மூன்று தாய்மார்களும் விஷ்ணுவிற்கு இனிப்பு ஊட்டி மகிழ. அதனை ஏளனபார்வையுடன் கடந்து சென்றாள் ஹரிணி.
ருத்ரா ஆதவ் வாழ்வின் அடுத்தகட்டத்தை பார்க்க காத்திருப்போம்.
ஹாய் பிரண்ஸ் , படிச்சிட்டு அப்படியே போகாம நிறை குறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்க....
வேற ஒண்ணு இல்லையே, நேத்தில இருந்தே உன் முகமே சரியில்ல, ஏதாவது பிரச்சணையினா சொல்லுடா என்றார் முகத்தை வருடிய படி.
ருத்ரா குரலை சமநிலைக்கு கொண்டுவந்து, என் செல்ல பெரியம்மா, என அவரின் முகத்தை கொஞ்சிக்கொண்டு. எந்த பிரச்சணையும் இல்ல மா , மால் விஷயமும் யோசிச்சதால கொஞ்சம் தலவலி மத்தபடி ஒண்ணு இல்ல.
சரி , தாத்தா உன்ன வர சொன்னாரு. சீக்கிரமா ரெடியாகி கீழ வா என கூறி இறங்கி சென்றார்.
கீழே சென்ற ருத்ரா. தாத்தா அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்து. என்ன தாத்தா என்ன விஷயமா வர சொன்னிங்க?
அது ஒண்ணு இல்லடா இன்னும் இரண்டு நாள்ள திருவிழா ஆரமிக்க போகுது. அதானால நாளைக்கு நாள் நல்லா இருக்கு மாலுக்கான பூமி பூஜைய நாளைக்கே போட்டுடலானு அந்த இடத்தோட ஓனர்கிட்ட பேசிடுமா.ஒப்பந்தமும் இன்னைக்கே முடிச்சிடுமா.என ருத்ராவின் முகத்தை பார்த்து விருதாசலம் கூறினார். சரி எனும் தலையசைப்போடு எழுந்துவிட்டாள்.
அனைவரும் அவர் அவர் வேலைக்கு புறப்பட , மில்லை நோக்கி சென்றாள் ருத்ரா.ஆதவன் மில்லுக்கு வராததால் விருந்தினர் அறையில் அமர்ந்திருந்தாள்.
ஆதவ் வந்தவுடன் அவனுடைய அறைக்கு சென்று எவ்வாறு பேசுவதென்று தயங்கிபடி அமர்ந்திருந்தாள்.
ஆதவ் , சொல்லுங்க ருத்ரா என்ன விஷயம்?
அ..அது, நா உங்க கூடசேர்ந்து மால் வேலைய தொடங்கலாம்னு இருக்க நீங்க என்ன சொல்ரிங்க.என்றாள் தயங்கிய படி.
அப்பொழுது அங்கு வந்த சிவா, ருத்ராவிடம் ஒப்பந்த பத்திரத்தையும், ஒரு பென்டிரவும் கொடுத்து அருகில் அமர்ந்தான்.
பத்திரத்தை ஆதவின் முன்பு நீட்டி, இத படிச்சிட்டு கையெழுத்து போடுங்க. அப்புறம் இன்னும் இரண்டு நாள்ள திருவிழா வரதால நாளைக்கு மால்லுகான பூமி பூஜை போட்டுடலாம்.இந்த பென்டிரவ்ல மாலுக்கான மாடல் இருக்கு, இதல எதாவது மாத்தனும்னா சிவா அண்ணா கூட பேசி மாத்திக்கங்க.என அவன் முகத்தை பார்க்காது எங்கோ பார்த்த படி பேசிமுடித்தாள்.
ஆதவ் பத்திரத்தை படித்துக்கொண்டிருந்தபொது, சிவாவிற்கு அழைப்பு வர பேசியபடியே வெளியே சென்றான்.
கால்மேல் கால் போட்டபடி தலையை சற்று வலபுறம் சாய்த்து ருத்ராவை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்த ஆதவ்.
என்ன ருத்ரா ,கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு அழுதிங்களா என்ன?? சொல்லபோனா அந்த அழுகைக்கு காரணம் நானாதா இருப்ப. என்றான் தெணாவட்டாக.
சிரித்தபடி ருத்ரா, நா வாழ்க்கையில உண்மையா உயிரா நினச்சவன் என்ன ஏமாத்திட்டு போகும் போதே நா அழல உங்கல நெனச்சி நா ஏன் சார் அழனும்.
இப்ப நீங்களும் நானும் ஒரு தொழில்ல பார்ட்ணர்ஸ். அப்படி இருக்கும் போது என் அழுகைக்கு நீங்க எப்படி காரணமாகுவிங்க சார்.என புருவம் உயர்த்தி கூறினாள்.
இனி உன்ன அழவைக்க மாட்டடி ஆரா என ஆதவ் தன் மனதில் சொல்லியபடி, நான் இனி இங்க இருந்துதான் என் அப்பா தொழில பாத்துக்க போகிறேன், உண்மைய சொல்லனும்னா உன்ன கல்யாணம் பண்ணிக்கதா வந்தேன் எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்? என்றான் சட்டென ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி.
அவனை முரைத்த ருத்ரா, நா இங்க தொழில் விஷயமா பேச வந்திருக்க அதமட்டும் பேசலாம் என்றாள் மூஞ்சியில் அடித்த படி.
இதற்குள் சிவா உள்ளே வர, என்னடா பேப்பர்ஸ் எல்லா ஓகே வா மாடல்ல எதாவது மாத்தனும்மா?
இந்த பேப்பர்ல என்ன இருந்தாலும் நா படிக்காமலே சைன் பண்ணுவ, உன்ன விட நா வேறயார நம்ப போற என ருத்ராவை பார்த்த படி சிவாவிடம் கூறியவன் பேப்பர்சில் சைன் இட்டு மாடலை பார்க்காமலே நாளைக்கே பூஜை வைக்கலாம் என கூறினான்.
அதற்கு பிறகு சிவாவும், ருத்ராவும் ஆதவிடம் சில விஷயங்களை பேசிவிட்டு புறப்பட்டனர்.
கல்லூரியில் தன்னுடைய யமகா பைக்கை நிறுத்திவிட்டு. கிரே ஷர்டும் கருப்பு பேன்டுடன் இடகையில் பெரிய வட்டவடிவம் கொண்ட கருப்பு பட்டை வாட்சும், வல (ம) இட கையின் மோதிரவிரலில் மெல்லிய தங்க மோதிரமும், கழுத்தில் மெல்லிய தங்கசெயின் அவன் காலர் வழியே சிறிய இடைவெளியில் தெரிய, கருப்பு ஷூவுடன் உள்ளே சென்றவனை அங்கிருந்த அனைத்து பெண்களின், ஆண்களின் கண்களும் ரசிக்க தவரவில்லை.
யாருடா இவ செமையா இருக்கா? சும்மாவே இங்க நமள ஒருதரும் பாக்கமாட்டாங்க இதல இவன் வேற என்று தன் நண்பனிடம் ஒருவன் கூறினான்.
என்ன டிப்பார்ட்மெண்ட் மச்சி என்ன இயர், சமயா இருக்கான் என பெண்கள் பேசிக்கொண்டிருக்க.
பல மாணவர்கள் பேசுவதை கேட்ட விஷ்ணுவை பார்க்காத மாணவர்கள்,
முதல்லர் அறையுனுள் சென்ற விஷ்ணுவை பார்க்க ஆண்கள் பெண்கள் என வேறுபாடின்றி அறையை நோட்டமிட்டபடி அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர்.
அப்போழுது வருகைதந்த தேன்மொழி, அங்கு அலைந்துக்கொண்டிருந்த மாணவர்களை புரியாத பார்வை பார்த்துவிட்டு முதல்வர் அறையை நோக்கி சென்றாள். அங்கிருந்த காவலர் உள்ளே சார் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதாக கூறியவுடன் அவ்விடத்தைவிட்டு சென்றாள்..
ஐயர் மந்திரம் கூற ஆதவ், அருகே அமர்ந்திருந்த ருத்ராவை நோக்கி
எனக்கு இப்பவே உன்ன கல்யாணம் பண்ணணைம்னு இருக்கு என ஒற்றை கண்ணடித்தான்.