ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காற்றாய் நுழைந்தாள் என்னுள்ளே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

திருமணம் நன்முறையில் நடைபெற்றதில் இன்னிலாவின் பெற்றோருக்கு மனநிறைவு. சட்டென அனைத்தும் நடந்து முடிந்தவாறு இருந்தாலும், இனி மகளின் வாழ்க்கை நன்றாக அமையும் என நம்பிக்கை கொண்டனர்.

அந்த அளவு ஈஷ்யுகன் மீதான நன்மதிப்பு அதிகரித்தது.

இளைய மகள்களோ "மாமா மாமா" என ஈஷ்யுகனின் மீது அதிக பாசம் வைத்திருக்க, அதற்கு குறைவில்லாமல் அவனும் அவர்களை அன்பாய் நடத்தினான்.

'உண்மையில் தான் இந்த சிடுமூஞ்சி சின்னப்பனைத் தான் திருமணம் செய்திருக்கிறோமா? அல்லது இவரை க்ளோன் எதுவும் செய்து விட்டார்களா' என்ற சந்தேகத்திலேயே அன்றைய நாள் கழிந்தது இன்னிலாவிற்கு.

இரவு புதுமண தம்பதிகளுக்காக முதலிரவு அறைத் தயாராக, ஜீவித் தான் முன்னே நின்று அனைத்தும் செய்தான். அவனுக்கும் நண்பனின் திருமணத்தை எண்ணி மகிழ்வே. நிமிஷாவின் நினைவு அவ்வப்பொழுது வாட்டினாலும், தோழனுக்காக மனதைத் தேற்றிக்கொண்டான்.

அறைக்கு வந்த ஈஷ்யுகன் தான், "என்னடா இது?" என அறையில் இருந்த அலங்காரங்களைப் பார்த்து கேட்க,

"ஃபர்ஸ்ட் நைட் செட்டப்டா. தெரியாத மாதிரி கேட்குற" என அவன் வயிற்றில் குத்திய ஜீவித்தைக் கண்டு புன்னகைத்தான்.

மனத்திலோ, 'ம்ம்க்கும்... இதை பார்த்து அவள் ஓடாம இருந்தா சரி...' என்று முணுமுணுத்துக் கொள்ள, "என்னடா?" எனக் கேட்டதும், "ப்ச் அவளுக்கு அடிபட்டு இருக்கு. இப்போ இது தேவையா" என லேசாய் முறைத்ததில், "கேட்கணும்ன்னு நினைச்சேன். ஏன் அடிபட்டுருக்கு அவளுக்கு" என்றான் அப்போது தான் சந்தேகம் வந்து.

"ப்ச் சூசைட் அட்டெம்ப்ட்டா." என்று வெகு சலிப்பாய் கூற, ஜீவித் அதிர்ந்தான்.

"என்னைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு படிக்கட்டுல இருந்து உருண்டு சூசைட் பண்ணிக்க போய்ட்டா. அப்பறம் காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்று பிசிறு இல்லாமல் உருட்ட, "அடப்பாவமே" என்று வாயில் கை வைத்தான் ஜீவித்.

"ஆனா, அவள் ரொம்ப அமைதியாச்சேடா. அவளுக்கு எப்படி லவ் வந்துச்சு" என்று ஜீவித் புரியாமல் கேட்க, "அதை அவள்கிட்ட தான் கேட்கணும்" என்று தோளைக் குலுக்கினான்.

இன்னிலாவை அலங்காரம் செய்த நீலவேணியிடம் மறுக்கவும் இயலாமல் தவித்திட, உடல் வேறு அசதியாக இருந்தது.

இன்னும் காயங்கள் முழுதாய் சரி ஆகவில்லை. தோழியின் இழப்பையும் முழுதாய் மனது ஏற்கவில்லை. இந்நிலையில் திருமணமே அதிகப்படி. அதிலும் கட்டாயப்படுத்தி ஒரு ஒப்பந்தத்திற்காக நடந்து முடிந்த திருமணத்திற்கு இதெல்லாம் அவசியமா என்றிருந்தது.

ஆனால், கணவன் தான் நடிக்க வேண்டும் என்று விட்டானே! அதில் நொந்து அவளும் அமைதியாக இருந்து விட்டாள்.

அன்று இரவே, அவளது குடும்பத்தார் திருச்சி செல்வதாக இருக்க, இன்னிலாவிற்கு பயம் அப்பிக்கொண்டது. இவனுடன் தனியாகவா? எனப் பதறியவள்,

"ஏம்மா உடனே கிளம்புறீங்க இருந்துட்டுப் போங்க" என்று நீலவேணியிடம் கெஞ்ச, அந்நேரம் ஈஷ்யுகனும் ஜீவித்தும் பேசியபடி அங்கு வந்தனர்.

அவளது கண்ணில் இருந்த கலவரத்தைக் கண்டுகொண்ட ஈஷ்யுகன் அவளை நோக்கி அர்த்தப்பார்வை வீச, நீலவேணியோ "ஏற்கனவே ரெண்டு நாளுக்கு மேல ஆகிடுச்சு இனி. உன் தங்கச்சிங்களுக்கும் ஸ்கூல் இருக்குல்ல. நீயும் மாப்பிள்ளையும் மறுவீட்டுக்கு வாங்க" என்றார்.

ஈஷ்யுகன் தான், "இங்க கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு அத்தை. கூடிய சீக்கிரம் எல்லாம் முடிஞ்சதும் வரோம்" என்று பதில் அளித்திட அதற்கு மேல் அவனை வற்புறுத்த வழியில்லாது போனது.

பின் குடும்பத்தார் கிளம்பி விட்டதும், ஜீவித்தும் "என்ஜாய் மச்சி" என்று கண் சிமிட்டி விட்டு கிளம்பிட, இன்னிலாவிற்கு இதயத்துடிப்பு வெளியில் கேட்டது.

அவள் இதுவரை இருந்த அறையிலேயே அங்கும் இங்கும் வேலை செய்வது போல சுற்றிக்கொண்டிருந்தாள்.

அவசியமே இல்லாமல் ட்ரெஸ்ஸிங் டேபிளைத் திறப்பதும், அதில் இருக்கும் பொருட்களை மாற்றி வைப்பதும், பின் ஒரு ஹேர் பின்னை கூட விடாமல் எடுத்து வைப்பதுமாக சில்லிட்டுப் போன மனதை அடக்க வழி தெரியாமல் பயத்தில் ஏதேதோ செய்ய, அந்த அறையை விட்டு நகராமல் கையைக் கட்டிக்கொண்டு அவளது தவிப்புகளை வேடிக்கைப் பார்த்தான் ஈஷ்யுகன்.

"ரூமை க்ளீன் பண்ணி முடிச்சுட்டியா?" ஆழமாய் வந்த அவனது குரலில் திடுக்கிட்டவள், "ஹான்... அது அது... ப... பண்ணிட்டேன்." என்று தலையாட்டிட, "சரி அப்போ வா... நம்ம ரூமை கொஞ்ச நேரம் க்ளீன் பண்ணலாம்." என்றான் விஷமத்துடன்.

நெஞ்சில் கை வைத்துக் கொண்டவள், "இல்ல சார். இங்கயே இருக்கேன். நீங்க போங்க" என்று வேகமாக பதில் கூற, "சார்?" எனக் கேட்டவனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.

"இங்க யாரும் இல்லைல. நடிக்கத் தேவை இல்லையே" அவள் தலையைக் குனிந்து கொண்டு கூறியதில்,

"தனியா இருக்கும் போதும் அதே நடிப்பை ஃபாலோ பண்ணுனா தான் எல்லாரும் இருக்கும்போது அது சரளமா வரும் ஸ்வீட்மூன்." என்றபடி அவளை நோக்கி அழுத்த நடையுடன் முன்னேறினான்.

"சரிங்க யுகி. நான் ஃபாலோ பண்ணிக்கிறேன். இந்த ரூம்ல இருந்தே..." என்று மேலும் கூறும் முன் அவளைக் கையில் மிதக்க விட்டிருந்தான் ஆடவன்.

அவளோ திகைத்துப் பதறி அழுத்தம் அதிகமாகி மயங்கியே விட்டாள்.

"ஏய் ஏய் மூன்..." என அவளை எழுப்பிட அவளிடம் அசைவே இல்லை.

'இவளை வச்சுக்கிட்டு' என்று புலம்பிக்கொண்டவன் அவனது அறைக்குத் தூக்கிச் சென்றான்.

மலர்களால் நிறைந்திருந்த மஞ்சத்தில் பெண்ணவளைக் கிடத்தியவன், அவளை உச்சி முதல் பாதம் வரை விழிகளால் வருடினான்.

சிவப்பு நிற மெல்லிய புடவையில் செழிப்பாய் காட்சியளித்த பாவையின் வறண்ட இதழ்கள் அவனை உசுப்பேற்றியது.

ஆள்காட்டி விரலால், அவ்விதழ்களை மெல்ல வருடிக் கொடுத்தவன், "யூ டெம்ப்ட் மீ." என்று அவளையே குற்றம் சொன்னான் சலிப்பாக.

அவளது கையில் இருந்த காயம் அவனது எண்ணத்தை சிதறடிக்க, அவனால் ஏற்பட்ட காயத்தை மென்மையாய் நெருடியவன், பெருமூச்சுடன் ஆயின்மெண்ட்டை எடுத்து வந்தான்.

மறுநாள், உறக்கம் கலைந்து எழுந்த இன்னிலாவிற்கு மூச்சு முட்டியது. "என்னது இது... கரும்பு மெஷினுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி உடம்பே வலிக்குது." என்ற குழப்பத்துடன் கண்ணைக் கசக்கி விழித்தவள் அதிர்ந்து போனாள்.

ஈஷ்யுகன் தான் அவளை இறுக்கமாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.

அவளது ஆடைகள் வேறு கலைந்திருந்ததில், அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

வெகு நேரமாய் எழ முயற்சி செய்தவளுக்கு பாவம் அவனது சுண்டு விரலைக் கூட அசைக்க இயலவில்லை. வெகு அண்மையில் தெரிந்த ஆணவனின் அழுத்த முகமும், கன்னத்தைத் தீண்டி காயப்படுத்திய சூடான மூச்சுக்காற்றும் அவளை என்னவோ செய்தது.

அவன் வேறு சட்டை இல்லாமல், வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வெற்று மார்போடு அவளை அணைத்திருந்தான்.

கழுத்தில் ஊர்ந்த அவன் அணிவித்த மாங்கல்யத்தையும், உரிமையான அவனது அணைப்பில் அடங்கிப்போன தனது மேனியையும் நிந்தித்துக் கொண்டாள்.

"யுகி" ஹஸ்கி குரலில் இன்னிலா அழைக்க, "ம்ம்" எனப் புருவத்தைச் சுருக்கிக் கொண்டவன், இன்னும் வாகாக அவளை நெருங்கி உறக்கத்தைத் தொடர, "யுகி கையை எடுங்க. எந்திரிக்கணும்." என்றாள் மெல்லமாக.

"எந்திரிச்சு என்ன பண்ணப் போற. இன்னைக்கு ஆபிஸ் போற மூட் இல்லை. கெட் சம் ஸ்லீப்." என்றான் கண்ணைத் திறவாமல்.

அவளோ நெளிந்தபடி, "வாஷ்ரூம் போகணும்" என்றிட, பட்டென விலகியவன், "போயிட்டு சீக்கிரம் வா" என்று குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, "என்னது வரவா?" என்று மிரண்டாள்.

வேகமாக எழுந்தவளின் புடவை தலைப்பு கீழே சரிய, அதனை அவசரமாகப் பிடித்து தன்னை மறைத்துக் கொண்டவளுக்கு அதிர்ச்சி பரவியது.

'புடவையை பின் குத்தி தான கட்டி இருந்தேன். எப்படி அவுந்துச்சு.' என்ற பீதியில், சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

உதட்டைப் பிதுக்கி கண்ணில் நீர் வைத்தவள், "ஏன் இப்படி பண்ணுனீங்க?" என்று தேம்ப,

திடீரென கேட்ட அழுகுரலில் கண்ணைக் கசக்கிய படி அவள் புறம் திரும்பியவன், "ஏய் எதுக்குடி காலைலயே ஒப்பாரி வச்சுட்டு இருக்க" என்றான் கடுப்பாக.

மூக்கை உறிஞ்சியவள், "அக்ரிமெண்ட் மேரேஜ், லவ் பண்ற மாதிரி நடிக்கலாம்ன்னு தான சொன்னீங்க. இப்போ ஏன் இப்படி பண்ணுனீங்க. அதுவும் நான் சுயநினைவுல இல்லாதப்ப." என்று கேவியதில், குழப்பத்துடன் எழுந்தவன், அருகில் இருந்த டீ - ஷர்ட்டை அணிந்து கொண்டான்.

அதில் தலையைக் குனிந்து கொண்டு கண்ணீர் வடித்தவளிடம், "ஹே ஸ்வீட்மூன். வாட்ஸ் ராங் வித் யூ?" என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.

அவளோ தேய்ந்து போன ரெக்கார்டராக "ஏன் இப்படி பண்ணுனீங்க" என்று ஆரம்பிக்க, "ஏய் பைத்தியம். என்ன செஞ்சேன்னு சொல்லிட்டு புலம்பு" என்று உறுமிட, அவள் இன்னும் சத்தமாக அழுதாள்.

அவனோ சில நொடிகள் அவளைக் குழப்பத்துடன் பார்த்து விட்டு, பின் அவள் புடவையை மார்போடு அணைத்துப் பிடித்திருந்த கோலம் கண்டு, அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், பட்டென புன்னகைத்தான்.

கட்டிலுக்கு அருகில் டேபிளில் இருந்த ஆயின்மெண்ட்டை எடுத்து அவள் மீது விட்டெறிந்தவன், "உன்னை ரேப் பண்ணனும்ன்னா, எதுக்குடி கல்யாணம் பண்றேன். உன்னைத் தூக்கிட்டு வந்து நினைச்சதை முடிக்க, எனக்கு ரொம்ப நேரம் ஆகாது மூன். உனக்கு ஆயின்மெண்ட் தான் போட்டு விட்டேன். தேவை இல்லாமல், நீயே என்னைத் தூண்டி விட்டு உன்னை ரேப் பண்ண வச்சுடாத" என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவள் தான் கண்ணீரைக் கூட துடைக்காமல் திகைத்துப் பின் அசடு வழிந்தாள்.

' ச்சே... அவசரப்பட்டுட்டோமே' என நொந்தாலும், வேகமாக "ஆயின்மெண்ட் நானே போட்டுப்பேன். நீங்க ஏன் போட்டு விட்டீங்க எங்க போட்டு விட்டீங்க?" எனப் பதறி கேட்டாள்.

"எங்க எங்க போட்டேன்னு விளக்கமா சொல்லவா? இல்ல தொட்டுக் காட்டவா?" சீண்டலாய் கேட்டதில்,

"இல்ல இல்ல வேணாம்" என்றவளுக்கோ ஐயோ என்றிருந்தது.

"அடிச்ச எனக்கு தெரியும் எங்க எங்க காயமாகி இருக்கும்ன்னு... தொடர்ந்து மருந்து போட்டா தான் காயம் ஆறும். அதான் போட்டு விட்டேன்." என்றிட, அவனால் காயமானது ஒரு புறம் வலித்தாலும், அக்காயங்கள் இருக்கும் இடத்திலெல்லாம் மருந்து போட்டு விட்டானா என்றெண்ணி தடுமாறவும் செய்தாள்.

"அதுக்காக சேரியை ரிமூவ் பண்ணிட்டா..." எனப் பேச இயலாமல் தவிக்க, அரை நொடிக்கும் அதிகமாக அவளை அமைதியாக ஏறிட்டவன், பாவையை அப்படியே தூக்கி தனது மடியில் அமர வைத்தான்.

அந்த திடீர் ஆக்கிரமிப்பில் அவளது புடவை தலைப்பு கீழே சரிய, அவளோ கையால் தன்னை மறைத்துக் கொண்டாள்.

திகைத்த அவளது விழிகளை நேராய் பார்த்தவன், "இங்க பாரு... என் முன்னாடி நீ ஒட்டுத்துணி இல்லாம இருந்தாக்கூட, நீயா என் டச்சிங்க அக்செப்ட் பண்ற வரைக்கும், உன் கூட லவ் மேக் பண்ற ஐடியா எனக்கு இல்லை. உனக்கு மருந்து போட்டப்ப நான் தப்பாவும் யோசிக்கல. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம். இனி தினமும் நான் தான் உனக்கு மருந்து போட்டு விடுவேன். என்னை வக்கிரம் புடிச்சவன்னு கூட நினைச்சுக்கோ ஐ டோன்ட் கேர்." என்று தோளைக் குலுக்கினான்.

இன்னிலா தான் பேச்சிழந்து போனாள்.

மெல்ல அவனை விட்டு விலகி கட்டிலில் இருந்து இறங்கியவள், அவன் முகம் காணாமல் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவன் மீண்டும் கட்டிலில் விழுந்தான்.

'இடியட்... இவளால நைட்டும் தூங்க முடியல. பகல்லையும் தூங்க முடியல. வச்சுருக்காங்க பேர் ஸ்வீட்மூனாம். ஹாட்மூன்னு வச்சிருக்கணும்." என்று புலம்பும் போதே மெலிதான சிரிப்பும் எழுந்தது.

குளித்து முடித்து வெளியில் எட்டிப் பார்த்த இன்னிலா, அறையில் ஈஷ்யுகன் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள்.

அந்நேரம் வேலையாள் டீ - ட்ரேயுடன் வந்து கதவைத் தட்ட, அதனை வாங்கி தனக்கு ஒரு கப்பை ஊற்றிக் கொண்டு பால்கனியில் சென்று நின்றாள்.

இங்கிருந்த இந்த இரண்டு நாட்களில், வீட்டின் நடைமுறை சற்றே பழகி விட்டது. நேரம் தவறாமல், டீ, ஜூஸ், பழங்கள் என அனைத்தும் அவள் அறைக்கு வந்து விடும். உணவு தயாரானதும் அவளை வேலையாள் வந்து அழைப்பு விடுத்து விடுவார்.

இரண்டு செஃப்களை வேலைக்கு அமர்த்தி இருந்தான். தலையைத் துவட்டியபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தவளின் பின்னால் ஆடவனது ஸ்பரிசம் உணர, உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வையைத் துடைத்தபடி அவளை நெருங்கி நின்றான் ஈஷ்யுகன்.

அவனது நெருக்கம் இதயத்தைப் படபடக்க வைக்க, "உங்களுக்கு டீ?" எனக் கேட்டாள்.

பின்னிருந்தே அவள் கையில் வைத்திருந்த தேநீர் கோப்பையை அவள் கையைப் பிடித்தே அவனும் உறிஞ்சினான்.

"ம்ம். சுகர் அதிகம் போட்டுட்டியோ" சந்தேகமாய் அவன் கேட்டதில், சிவந்து போனவள், "வேற கப்ல எடுத்துட்டு வரேன்" என்று அவனை நிமிர்ந்து பாராமல் நகர எத்தனிக்க, அவளால் நகர தான் இயலவில்லை.

ஒரு கையால் அவள் நகர இயலாதவாறு அவளை இடித்தவாறு பால்கனி கம்பியைப் பிடித்துக் கொண்டவன், அவனது மார்பு முழுதும் அவள் முதுகைத் துளைப்பது போல நெருங்கி நின்று, மறுகையால் அவள் கையில் வைத்திருந்த கப்பைப் பிடித்துக் குடிக்கத் தொடங்க, அவளுக்கு தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்தது.

ஒவ்வொரு முறை அவன் தேநீரை சுவைக்க முன் வரும் போதும், அவனது கன்னம் அவள் கன்னத்தோடு உரசிச் சென்றது.

ட்ரிம் செய்திருந்தவனின் குட்டி குட்டி தாடி அவள் கன்னத்தைப் பதம் பார்க்க, மெல்லிய எரிச்சலைக் கொடுத்தது.

ஆனால், அந்த எரிச்சலில் ஒரு வித இனிமை இருப்பதை உணர்ந்தவளுக்கு கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்தது போல செங்கொழுந்தாய் சிவந்து போனாள்.

"நீ குடிக்கல?" ஹஸ்கி குரலில் அவள் செவிமடலில் மூச்சுக்காற்று உரச அவன் வினவினான்.

சிலிர்த்து குறுகிய இன்னிலா, "நான் அப்பறம் குடிச்சுக்குறேன்." என்றாள் வார்த்தைக்கும் வலிக்கும்படி.

"சேர்ந்தே குடிக்கலாம்..." என்றவன், அவள் கையில் இருந்த குவளையை அவளது இதழ்களுக்கு அருகில் கொண்டு செல்ல, வேறு வழியற்று தேநீரை அருந்தியவளுக்கு, வெட்கம் பிய்த்துத் தின்றது.

"ஃபர்ஸ்ட் குடிச்சத விட இது டேஸ்ட் அதிகம்ல?" கேள்வி போல வந்த ஆடவனின் குரலில், அதரங்களை அழுந்தக் கடித்தவள், "ஒரே மாதிரி தான் இருக்கு" என்றாள் எழுந்த சில்லென்ற உணர்வை ஒப்புக்கொள்ள இயலாமல்.

"ரியலி? அப்போ கொஞ்சம் ஸ்வீட் கம்மியா தான் இருக்கா." மீண்டுமொரு ஒரு குறுகுறுப்பு அவனது கேள்வியில்.

பதில் கூற தெரியாமல் "ஆம்" என தலையாட்டிட, விஷமப் புன்னகை பூத்தவன்,

"நான் ஒர்க் அவுட் பண்ணிட்டு ஸ்வெட் ஆகி வந்தேன் ஸ்வீட்மூன் சோ... என் லிப்ஸ்ல இருக்குற சால்ட்னெஸ் 'டீ'ல இருக்குற ஸ்வீட்னெஸை கம்மி பண்ணிடுச்சு. பட் நீ இப்போ தான் பிரெஷா குளிச்சு இருக்க. உன் பேர்லேயே ஸ்வீட் இருக்குறனால நான் குடிக்கும் போது உன் லிப்ஸோட ஸ்வீட்னெஸ் எக்ஸ்டராவா தெரியுது. காட் மை பாயிண்ட்" என்று வெகு தீவிரமாய் விளக்கம் கூறி, அவளது மூக்கு நுனி சிவப்பதை கண்ணெடுக்காமல் ரசித்தான்.

இத்தகைய விளக்கத்தை எதிர்பாராத இன்னிலாவிற்கு நாணம் மூச்சை அடைத்தது.

கணவனின் கள்ளப் பேச்சிலும், மென்மையாய் தன்னை கையாளும் விதத்திலும் இளகிக் கொண்டிருந்தாள் பாவை.










 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

ஒருவழியாய் தேநீரை அருந்தி முடித்தவன், "இனிமே நம்ம இப்படியே டீ குடிக்கலாம். ஓகே வா ஸ்வீட்மூன்?" எனக் கிசுகிசுப்பாகக் கேட்க, தன்னிச்சையாய் தலையாட்டியவள், அவன் மெல்ல நகர்ந்து இடம் கொடுத்ததும் உள்ளே ஓடியே விட்டாள்.

அதில் மோனப் புன்னகை வீசிய ஈஷ்யுகனுக்கு, தன்னை நினைத்தே வியப்பாக இருந்தது. வாழ்வை இத்தனை நிதானமாக ரசிச்சு வாழ்வானென்று கனவிலும் எண்ணியதில்லை.

ஏன் ஒரு வாரத்திற்கு முன்பு கூட இப்படியெல்லாம் ஒரு பெண்ணை சிவக்க வைத்து, ரொமான்ட்டிக் டீ டைமாக காலைவேளை கழியுமென்று அறிந்திருக்கவில்லையே.

இடையில் அவனுக்கும் அவளுக்கும் அந்த கசப்பான சம்பவம் மட்டும் நேர்ந்திராமல் இருந்திருந்தால், தனது தங்கை தன்னை விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் இன்னிலாவை தேனிலவுக்குக் கடத்தி இருப்பான்.

அவள் மீது ஏற்படும் மோகத்தையும் தாபத்தையும் அடக்கியாள்வது கடினமாக இருக்கிறது அவனுக்கு. இத்தனைக்கும் அவள் தனக்கு உரிமையுள்ளவளாய் மாறி முழுதாய் ஒரு நாளே ஆகி இருக்க, அவள் புறம் அதிகமாய் ஈர்க்கப்படுகிறான். வெறும் ஒப்பந்தத் திருமணம் என்று கூறி அவளைத் திருமணம் செய்து விட்டு, அவளைச் சீண்டுவதும் தவிக்க விடுவதும் அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

தனது சீண்டும் வேலையைத் தொடரும் பொருட்டு மாடியில் இருந்து கீழே இறங்கினான்.

அவனது பிரம்மாண்ட பங்களாவில் இல்லாத பொருட்கள் என்பதே இல்லை.

ஜிம், ஸ்விம்மிங் பூல், ஜாக்கிங் டிராக், கார்டன், டென்னிஸ் கோர்ட் எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது.

இரு நாட்கள் அங்கிருந்தாலும் கூட, அதிகமாக பங்களாவைப் பார்வையிட்டதில்லை இன்னிலா. அவளுக்கு உடல்நிலை சரி இல்லாததும் ஒரு காரணம்.

அமிர்தாவும் தேன்மொழியும், "ஸ்விம்மிங் பூல் சூப்பரா இருந்துச்சுக்கா. ஜிம்க்கு போய் நாங்களும் எக்சர்ஸைஸ் செஞ்சோமே. டென்னிஸ் விளையாடுனோமே" என வந்து பீத்திக் கொள்வார்கள்.

அவளே திருமணம் பற்றிய பயத்தில் இருக்கும் போது இவற்றை எல்லாம் எங்கே கவனிப்பது. இப்போது தான், பங்களாவின் செழுமையை கவனித்துப் பார்த்தாள்.

'இவ்ளோ பெரிய இடத்துல இருக்குறவரை கல்யாணம் பண்ணுனதே தப்பு. அவரு தான் ஆதாரத்துக்காக, ஒப்பந்தம் அது இதுனு சொன்னாலும் நம்ம ஒரு தடவை யோசிச்சு இருக்கணுமோ. ம்ம்கும் அவரு தான் யோசிக்கவே டைம் குடுக்கலயே.' என்று மாறி மாறி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

"உன் குட்டி மூளைக்குள்ள எதை யோசிச்சு கன்ஃபியூஷ் பண்ணிட்டு இருக்க?" திடுமென கேட்ட ஆடவனின் குரலில் தன்னிலைக்கு வந்தவள், "ஒன்னும் இல்லையே" என்று வேகமாக தலையாட்டினாள்.

"ம்ம்... வா! ஒரு வாக் போகலாம்" என்று அழைக்க, அவனுடன் நடந்தாள்.

பலதரப்பட்ட மலர்கள், காய்கள், கனிகளென அனைத்தையும் ஒருங்கே கொண்ட தோட்டத்தை ரசித்தபடி அவனுடன் நடந்தவளுக்கு, இந்த காலைவேளை நடைப்பயிற்சி மனதை புத்துணர்ச்சியாக்கியது.

"தோட்டம் அழகா இருக்கு..." மெல்லிய குரலில் இன்னிலா கூற, அவனும் தோட்டத்தை ஒரு முறை பார்த்து விட்டு, "ம்ம்! எல்லாமே என் அம்மா வச்ச செடி தான்." என்றான்.

"ஓ... அதை நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க. ஆனா, ஏன் அங்க அங்க காய் எல்லாம் சொத்தை ஆகி இருக்கு." எனக் கேட்டிட,

"தோட்டத்தைப் பார்த்துக்க ஆள் இருக்கு தான். ஆனால் என்னமோ அம்மா இருந்தவரை அழகா விளைஞ்ச காய், பழம் எல்லாம் இப்போ வேஸ்ட்டா தான் போகுது. மே பி அவங்க இருந்து மேனேஜ் பண்ணுவாங்க. கரெக்ட்டா இருக்கும்." என்றவனின் வார்த்தைகளில் ஒரு வித ஏக்கம் நிறைந்தோடியது.

"எனக்கும் தோட்டத்தைப் பராமரிக்கிறது எப்டின்னுலாம் தெரியாது. வீட்ல கத்தாழை, துளசி, கற்பூரவல்லி மட்டும் தான் இருக்கும். ஆனா அது தானாவே வளந்துடும்." என்றவள், "சரி இதுல வர்ற காய் பழத்தையெல்லாம் என்ன பண்ணுவீங்க வீட்டுக்கு யூஸ் பண்ணுவீங்களா?" எனக் கேட்டாள்.

"ம்ம்... ஐ திங்க் சோ!" என்றவனின் பதிலில், அவள் புரியாமல் பார்த்தாள்.

"எனக்கு கார்டன் மெயின்டெய்ன் பண்ற அளவு பொறுமை இல்லை. இன்ஃபாக்ட், கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு நான் வீட்டில இவ்ளோ நேரம் இருக்குறதே இன்னைக்கு தான். மிதிலன் மேனேஜ் பண்ணிப்பான். கொஞ்ச மாசம் அவனும் வரலை. இப்போ தான் ரீ-ஜாயின் பண்ணிருக்கான்."

"ஓ!" என்றவளுக்குத் தெரியுமே அவன் எவ்வளவு பிஸியான தொழிலதிபர் என்று. அவன் அதிகமாய் நின்று பேசுவதே இப்போது சில நாட்களாகத் தான். அதிலும் இன்று அவனது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் வெகுவாய் அவளை பாதிக்கிறது.

அவள் இயல்பாய் பேசியதில் இன்னும் கவரப்பட்டவனாக, அவனும் அவனது இறுக்கத்தை தளர்த்தி வீட்டிலிருந்து தோட்டம் வரை அனைத்தையும் விவரித்தான்.

"நான் ஒரு ஐடியா சொல்லட்டா யுகி..." இன்னிலா கேட்டதில்,

"எஸ் ஸ்வீட்மூன் சொல்லு! ஆபிஸ்ல தான் திட்டு வாங்குற மாதிரி ஏதாவது பண்ணுவ. இங்க நீ என்ன செஞ்சாலும் திட்ட மாட்டேன்" என்று சிரியாமல் அவளை வாரிட, முதலில் அவனை முறைக்க முயன்றவளுக்கு அவனது அதரம் ஓரம் வழிந்த சிறு குறுநகை அவளுக்கும் தொற்றிக்கொண்டது.

"நீங்க தான் நான் சின்னத் தப்பு செஞ்சாலும் திட்டுவீங்க" என்று உதட்டைக் குவித்து சிலிர்த்துக் கொள்ள,

"எது... கிளையண்ட் மீட்டிங் டைமை மாத்தி சொன்னது, தப்பு தப்பா டீடெய்ல் ஃபீட் பண்றது, ஆடி அசைஞ்சு வேலை பாக்குறது எல்லாம் உனக்கு சின்ன மிஸ்டேக்கா?" ஒற்றைப் புருவத்தை உயர்த்தி முறைப்பாகக் கேட்ட கணவனைக் கண்டு அசடு வழிந்தவள், "உங்க ஸ்பீடுக்குலாம் யாராலயும் வேலை பார்க்க முடியாதாக்கும்" என்று உதட்டைச் சுளித்தாள்.

"சரி ஏதோ ஒரு ஐடியா சொல்றேன்னு சொன்னியே சொல்லு." என்று கேட்டபடி அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.

அவளுக்கோ அவனது தீண்டலில் பேச்சே எழவில்லை. "என்னன்னு சொல்லுடி." அவன் மீண்டும் கேட்டதில், தொண்டையை செருமிக்கொண்டவள் "கையை விடுங்க சொல்றேன்" என்றாள்.

ஈஷ்யுகன் மூக்கு விடைக்க முறைக்க, "எனக்குப் பேச்சே வர மாட்டேங்குது அதான்..." என்று தலையைக் குனிந்து நின்றவளின் கையை விட்டவன், இடையோடு இழுத்து தன்னருகில் இருத்திக் கொள்ள அவள் திகைத்தாள்.

"இப்போ பேசு" கேலியுடன் ஈஷ்யுகன் கூறியதில் திணறியவள்,

"முதல்லையாவது பேச்சு தான் வரல. இப்போ மூச்சே விட முடியல" எனப் படபடப்புடன் கூறிட,

"இஸ் இட்... அப்போ மூச்சு தரவா." என குறும்பு கொப்பளிக்க கேட்டான்.

அவனது கூற்று புரியாமல் அவள் நிமிர்ந்து பார்க்க, வெகு அருகில் தெரிந்த அவனது முகத்தில் மின்னும் ரசனையில் அவள் மெய்மறந்து போனாள்.

இருவரது விழிகளும் பாரபட்சமின்றி தீண்டிக் கொள்ள, ஆரஞ்சு சுளை உதடுகளில் ஈர்க்கப்பட்டவன், "ஜஸ்ட் ப்ரீத்" என்று விட்டு, அவள் இதழோடு இதழ் பொருத்தினான்.

சொன்னது போன்றே சுவாசக்காற்றை கடன் கொடுத்தவன், அவளிடம் இருந்த சுவாசத்தைக் களவாடிக்கொண்டான்.

முதலில் விழிகளை அகல விரித்து அதிர்ந்தவள், விலகவும் அவனை விலக்கவும் தோன்றாமல் உறைந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல், அவனது இதழ்களின் கட்டளைக்கு அடிபணிந்து விட்டவளின் ஊனும் உயிரும் அம்முத்தத்திற்கு கட்டுப்பட்டு செயலிழந்து போனது.

அவளது ஒத்துழைப்பில் கர்வப் புன்னகை வீசியவன், சில நிமிடங்களுக்குப் பிறகே அவளை விடுதலை செய்ய, அவளுக்கோ நிற்கவே கால்கள் தள்ளாடியது.

அதில் மீண்டும் அவளை இடையோடு அணைத்துக் கொண்டான். இம்முறை, அவளது புடவை லேசாய் விலகியதில் வெற்றிடையில் ஆடவனின் கரம் தவழ, அதன் குறுகுறுப்பில் தலையைத் தரையில் புதைத்துக் கொண்டவள், மெல்ல நடுங்கினாள்.

புதிதாய் தேகம் அனுபவித்த உணர்வுகளின் ஆக்கிரமிப்பில் முதலில் பயமே தோன்றியது அவளுக்கு.

"ஈஸி மூன். ரிலாக்ஸ்..." என்று மென்மையாய் அணைத்துக் கொண்ட ஈஷ்யுகன், அவள் முதுகை தடவைக் கொடுக்க, மெல்ல மெல்ல அவளது இதயத் துடிப்பு சீரானது.

முதலில் இதமாக உணர்ந்த அவனது வருடல் நேரம் செல்ல செல்ல எரிச்சலைக் கொடுத்தது.

எல்லாம் அவனாலான காயத்தின் எரிச்சல் தான். அதில் இன்னிலா சட்டென விலகிட, அவன் புரியாமல் பார்த்தான்.

"என்ன ஆச்சு ஸ்வீட் மூன்?" எனக் கேட்டவனுக்கு அவளது முகம் ஏதோ ஒரு அவஸ்தையில் இருப்பது போல தோன்ற, முத்தமிடும் போது கூட நன்றாக தானே இருந்தாள் எனக் குழம்பினான்.

"அது ஒன்னும் இல்ல" அவள் மறுப்பாய் தலையசைத்ததும்,

"இல்ல ஏதோ இருக்கு. வாட் ஹேப்பண்ட் மூன்?" எனக் கேட்டான் அழுத்தமாக.

அவளோ நெளிந்தபடி, "முதுகுல காயம் எரியுது. நான் போய் ஆயின்மெண்ட் போடுறேன்." என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் வீட்டினுள் செல்ல, ஈஷ்யுகனின் தாடை இறுகியது.

அத்தனை நேரம் அனுபவித்த அத்தனை சிலிர்ப்பான உணர்வுகளும் வற்றி விட, "இடியட்... இடியட்... இடியட்... யூ ஃப**ங் இடியட்..." என்று தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவன், பளார் பளாரென அவனை அவனே கன்னத்தில் கைரேகை பதிய அறைந்து கொண்டான்.

தான் செய்து வைத்த முட்டாள்தனத்தின் வீரியம் அவளை விட அவனை வலிக்க வைப்பது ஏனென்று அவளை அடிக்கும் போது கூட புரியவில்லை. கோபம் மறைந்து நிதானத்திற்கு வந்த பிறகே உறைத்தது, அவள் ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்திருக்கிறாளென்று.

தவறு செய்யாதவளைக் காயப்படுத்தி விட்டு, அவளை விட இயலாமல் திருமணமும் செய்து கொண்டான். அவள் மேலெழுந்த நேச உணர்வை வெளிப்படுத்தாமல் போனது தான் அவன் செய்த அதிக பட்ச முட்டாள்தனம்.

அவனே இப்பொழுது வரை அதனை முழுதாக உணர்ந்து விட்டானா என்பதே கேள்விக்குறி என்னும் போது, அவளுக்கு எப்படி விளக்க இயலும்... விளக்க இயலா வண்ணக்கவிதையவள். அவளை விலக்க முடியாமல் தானே, அவளுக்கு தவறு இழைத்து விட்டது உணர்ந்து, யாரிடமும் தழைந்து போகாதவன், அவளிடம் தண்டனை தருமாறு கேட்டது.

ஒருவேளை அவள் தண்டனையாக தன்னை அறைந்திருந்தாலோ அல்லது ஜெயிலில் போட்டிருந்தால் கூட அவன் மனம் சற்று அமைதியாகி இருக்கும். அவளோ தண்டனை தராமல் தனது தீண்டலுக்கு கரைந்து, தன்னிடம் இளகிப் போகும் அப்பாவையின் வெகுளித்தனத்தில் அவனும் அவளிடம் உருகிப் போனான்.

கால்கள் தன்னிச்சையாக அறைக்குச் செல்ல, அவள் ஆயின்மெண்ட்டை மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.

"மருந்து போட்டுட்டியா?" ஈஷ்யுகன் கேட்டதில், அவனை நிமிர்ந்து பார்க்க ஏதோ தடுக்க, "ம்ம்" எனத் தலையாட்டினாள்.

"காட்டு!"

"ஹான்?"

"மருந்து போட்ட இடத்தை காட்டு! முதுகுல எப்படி நீயா போட்டுக்க முடியும் கரெக்ட்டா போட்டு இருக்கியான்னு பாக்குறேன்"

விஷமத்துடன் பேசுகிறானோ என்ற குழப்பத்தில் அவன் முகத்தை நிமிர்ந்து ஆராய்ந்தவள், சற்றே அதிர்ந்தாள்.

"உங்க கன்னத்துல ஏன் சிவப்பா இருக்கு?" என விரல் நீட்டிக் கேட்க,

"நத்திங்" என்று உணர்வற்று கூறியவனின் குரலில் என்ன இருந்தது என்று அவளால் யூகிக்க இயலவில்லை.

"குடு..." மருந்தைக் கையில் வாங்கியவன், "திரும்பு" என்றான்.

"இல்ல நான் போட்டுட்டேன் யுகி" அவள் மறுத்துப் பேச வந்ததும், அவள் தோள்பட்டையைப் பிடித்து திருப்பியவன், "சுடிதார் போடாம ஏன் புடவையைக் கட்டி இருக்க. பிளவுஸ் பட்டு இன்னும் எரியப்போகுது." என்றவனின் கேள்விக்கு அவள் பதில் கூறாமல் இருக்க, "உன்னைத்தான் கேக்குறேன்" என்றான் அதட்டலுடன்.

அவளோ மீண்டும் மௌனம் காக்க, "இன்னிலா!" என்ற ஆடவனின் அழைப்பில்,

"பேண்ட் போட முடியல. தொடைல சைட்ல... காயமா இருக்கு..." விட்டு விட்டு அவள் சங்கடத்துடன் கூற, அவனுக்கோ பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என்றிருந்தது.

"நேத்து மருந்து போடும் போது நான் பார்க்கல. அங்கேயும் அடி பட்டுச்சா?" தொண்டையை செருமிக்கொண்டு கேட்டவனது வார்த்தைகளில் பிரித்தறிய இயலாதொரு வலி.

"ம்ம்" எனத் தலையாட்டியவளின் முதுகின் காயத்தில் மருந்தைப் போட்டு விட்டவன், "சாரி மூன்!" மீண்டுமொரு முறை மன்னிப்பை வேண்ட, அவளுக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவன் மீது கோபமா என்றால் தெரியவில்லை. ஆனா பயம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதே நேரம் அவன் அவளை நெருங்கி சீண்டுகையில் அனைத்தும் மறந்து விடுகிறது.

இது என்ன பைத்தியக்காரத்தனமான நிலையென்று பாவம் அவளுக்குப் புரியவே இல்லை.

"என்மேல கோபம் போக, தண்டனை குடுத்துடேன். ஏன் இப்படி மன்னிப்பையும் ஏத்துக்காம, தண்டனையும் குடுக்காம தண்டிக்கிற நிலா..." இதுவரை அவள் கண்டிராத தவிப்பு அவன் குரலில்.

குற்ற உணர்வில் தத்தளிக்கிறான் என்று புரிந்து போனது அவளுக்கு.

அதில் பட்டென திரும்பியவள், "எனக்கு கோபம் இல்லை யுகி" என்றாள் வேகமாக.

"நீ என்ன முனிவரா... இவ்ளோ அடிச்சும் கோபம் வராம இருக்குறதுக்கு." என அவன் லேசாய் முறைக்க,

"நீங்க வேணும்ன்னு செய்யலைல. நான் நிம்மியை ஏதோ பண்ணிட்டேன்னு நினைச்சு தான செஞ்சீங்க. முதல்ல கோபம் இருந்துச்சு. பயம் அதிகமா இருந்துச்சு. ஆனா கனகாம்மா இப்படி ஒரு துரோகத்தை செய்வாங்கன்னு நீங்க சத்தியம் பண்ணி சொல்லிருந்தா கூட நான் நம்பியிருக்க மாட்டேன். அவங்களை அடிக்கும் போது உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லைன்னு நினைச்சேன். அப்பறம் அவங்க தான் நிம்மிக்கு விஷமே வச்சாங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம், இந்த அடி அடிக்கலைன்னா அவங்ககிட்ட இருந்து விஷயத்தை வாங்கி இருக்கவே முடியாதுன்னு புரிஞ்சுது.

அதை தான் எனக்கும் செஞ்சீங்க. அந்த நேரத்துல எல்லார் மேலயும் சந்தேகம் வர்றது இயல்பு தான. நான் தப்பு செய்யலைன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் நீங்க என்னைப் புருஞ்சு, என்னை இப்போ வரை சேவ் பண்ண தான் ட்ரை பண்றீங்க." என அவன் செய்த செயலை நியாயப்படுத்தியவளை ஈஷ்யுகன் தான் அசையாமல் பார்த்தான்.

"வேணும்ன்னு செஞ்சுருந்தாலும் தெரியாமல் செஞ்சுருந்தாலும் என்னால நீ ஹர்ட் ஆனது உண்மை. அதுக்கான தண்டனையை தான் நான் கேக்குறேன் நிலா." அவன் பிடிவாதமாக கேட்க,

"கோபம் இருந்தா தான தண்டனை குடுக்க முடியும். என்ன தண்டனை குடுக்குறதுன்னு எனக்கு தெரியல யுகி" எனப் பரிதாபமாகக் கூறியவளின் மைவிழிகளில் தொலைந்து போனான் ஆடவன்.

பின் அவளே, "என்னை சேவ் பண்றதுக்காக கல்யாணம் வரை வந்துருக்கீங்க. அதுக்காக நீங்க எனக்கு வாழ்க்கை குடுக்கணும்ன்னு இப்படி என்கிட்ட க்ளோஸா... அது வெளில நடிச்சா போதும் தான... வீட்டுக்குள்ள இதெல்லாம் வேணாம் யுகி." என்றாள் தவிப்பாக.

விழி இடுங்க அவளை முறைத்த ஈஷ்யுகன், "ஏன் பிடிக்கலையா?" எனக் கேட்டான் ஆழ்ந்த குரலில்.

இதற்கு அவள் என்ன பதில் கூற இயலும்! அவனது விருப்பத்தை முழுதாய் தெரிவிக்காமல், அவள் மனதை தெரிந்து கொள்ள எண்ணுவது விந்தை எனப் புரியவில்லை ஆடவனுக்கு.

அவள் பதில் கூறாமல் நின்றதில், "இனிமே நான் உன் பக்கத்துல வந்தா, உனக்குப் பிடிக்கலைன்னா என்னைத் தள்ளி விட்டுடு. சிம்பிள். நான் அதுக்கு அப்பறம் உன்பக்கம் வரமாட்டேன்." என்றவனது அலைபேசி அழைக்க, வேகமாக வெளியில் சென்று விட்டான்.

'நான் தள்ளி விடவா?' என்ற அதிர்ச்சியில் திகைத்தாள் இன்னிலா.

ஒவ்வொரு நாளும் சங்கர நாராயணனுக்கு எதிரான ஆதாரம் தயாரிப்பதிலேயே கரைந்தது. இரவில் அவளை அணைத்தவாறு உறங்குபவன், காலைவேளை தேநீரை பால்கனியில் அவளது கன்னம் உரச, அவள் இதழ் பட்ட குவளையிலேயே குடித்து முடிப்பவன், அவளிடம் பேச்சை மட்டும் தொடரவில்லை.

அவனது அண்மையில் உலகம் மறந்து போகும் பெண்ணவளுக்கு, அவன் கிளம்பிய பிறகே, 'ஒண்ணுமே பேசாம போறாரே. ஒருவேளை கோபமா இருக்காரோ' என்ற அச்சம் துளிர் விடும்.

ஆனால் அவனது தீண்டலின் மென்மை சிவப்பையே கொடுக்க, அவளும் அடுத்து வந்த ஒரு வாரமும் வீட்டிலேயே தான் இருந்தாள்.

காயங்களும் நன்றாக ஆறி இருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க இயலும்? அதனால் அவன் இரவு வரும் வரை உறங்காமல் காத்திருந்தாள்.

அழுத்த நடையுடன் ஈஷ்யுகன் அறைக்குள் வந்தவன், "இன்னும் தூங்கல?" எனக் கேட்டான்.

இழந்த தைரியத்தை இழுத்துப் பிடித்தவள், "தூங்கணும் உங்களுக்காகத் தான் வெய்ட் பண்றேன்" என்றதும், அவன் முகத்தில் மெல்லிய வியப்பு.

"சீரியஸ்லி?"

அந்த ஆச்சர்யத்தில் இருந்த ஆர்வத்தை உணராதவளாக, "ஆமா யுகி. ஆபிஸ்க்கு வர்றதை பத்தி தான் பேசணும்ன்னு நினைச்சேன். நாளைல இருந்து வரட்டுமா?" எனத் தயக்கமாகக் கேட்க, அவனுக்கு சப்பென்று ஆனது.

"இதை தான் கேட்க வந்தியா..." என்று எழுந்த ஏமாற்றத்தை அடக்கியவன், அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி வீசி விட்டு, டையையையும் லூஸ் செய்தவன், பெல்ட்டையும் கழட்டினான்.

அவ்வளவு தான் இன்னிலா அலறி விட்டாள்.

"ஐயோ யுகி. நீங்க சொல்ற வரை நான் ஆபிஸ்க்கு வரல. அடிச்சுடாதீங்க." என்று கட்டிலில் குறுகி அமர்ந்து காலை மடக்கிக்கொண்டவளின் பயத்தில் திகைத்தவன், அதன் பிறகே குனிந்து கையில் இருந்த பெல்ட்டைப் பார்த்தான்.

உடல் இறுகியது. சினத்தில் விழிகள் சிவக்க, தன் மீதான கோபம் பல்கிப் பெருகிட, "என்னைப் பார்த்தா உனக்கு சைக்கோ மாதிரி இருக்காடி. மிருகம் மாதிரி இருக்கா... ஹான்... ஆம் ஐ லுக் லைக் ஆன் அனிமல்? உன்னை நான் அடிமை மாதிரியா நடத்துறேன்." என்று நரம்பு புடைக்கக் கத்தினான்.

"ஐ டிட் திஸ். ஐ டிசர்வ் திஸ்..." என்று மேலும் கர்ஜித்தவன், அந்த பெல்டால் அவனையே பலம் கொண்டு சுளீர் சுளீரென அடித்துக் கொணடான்.

ஏற்கனவே அவனது உறுமலில் உதறலெடுக்க நடுங்கிய மேனியுடன் அவனை வெறித்திருந்தவள், அவனது திடீரென்ற செய்கையில் உறைந்து போனாள்.

தொடரும்...

 
Status
Not open for further replies.
Top