ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 1

"ஜெய்ய்ய்ய்........" என்று பாவையவளின் குரல் நடுங்கி ஒலித்தது மெத்தையில் கத்தியுடன் அவள் மீது ஏறி அமர்ந்திருந்த ஜெய் கிருஷ்ணாவை பார்த்து.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசாலமான அல்ட்ரா டீலக்ஸ் அறையில் வெண்பஞ்சு மெத்தையில் ஷர்ட் இல்லாமல் குட்டி ஷார்ட்ஷூடன் அவன் இருக்க, அவன் அடியில் அரை நிர்வாணமாக கிடந்தாள் மாடல் அழகி ரூபா.

கையில் இருந்த கத்தியை கொண்டு அவள் இடையில் இறுகி போய் இருந்த பேண்டின் பொத்தான்களை அறுத்து எடுத்துக் கொண்டிருந்த ஜெய்யை பயம் கலந்த மோகப் பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபா.

ஜெய் கிருஷ்ணா... பெயரில் மட்டுமல்ல, நிஜத்திலும் பெண்கள் மதி மயங்கும் கிருஷ்ணன் தான் அவன். பளபளவென வெண்ணிற தேகமுமில்லை, கருநிற கண்ணனும் இல்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட திராவிட நிறம். ஆறடி உயரமும், பாறை போல் இறுகிய உடலும் படிக்கட்டு தேகமும் உடையவன்.

இந்தியாவில் பல மில்லியன்களில் தொழில் சாம்ராஜ்யம் நடத்தி வரும் சொற்ப பணக்காரர்களில் அவன் பெயர் தான் முதலில் இருக்கும். பரம்பரை பரம்பரையாக கோடிகளில் இருந்த அவர்கள் சொத்து மதிப்பை பல ஆயிரம் மில்லியன்களுக்கு மாற்றியிருந்தான் அவன் திறமையாலும், அயராத உழைப்பாலும்.

பேய் மாதிரி இரவு பகல் பாராது உழைப்பவன் உடலும், மனமும் சோர்வுறும் போதெல்லாம் போகப் பொருளாக அவன் பயன் படுத்wதிக் கொள்வது பெண்களை தான். உடலின் தேவையை தீர்க்க அவனுக்கு ஏதாவது ஒரு பெண் வேண்டும். அவன் ஆளுமை தோற்றத்திலும், அவனிடம் இருக்கும் பணத்திற்காகவும் மயங்கும் சில பெண்கள் தானாகவே அவனை நாடி வருவதும் உண்டு. தேவைப்பட்டால் கட்டிலுக்கு அழைப்பான். இல்லையேல் கரடி போல் குதறி துரத்துவான்.

உடல் தேவையை தீர்க்க தினம் ஒரு பெண் என்று வாழும் அவனின் இன்றைய தேவையை தீர்க்கவே அவன் அடியில் நசுங்கி கொண்டிருந்தாள் ரூபா. அவளுக்கும் அவனுடனான இன்றைய இரவு மிக முக்கியமானதாக இருந்தது. அவன் பணம் மீது ஆசை இருந்தாலும், அதை தாண்டி அவன் ஆண்மை மீது மோகம் அதிகமாகவே இருந்தது. அது தான் விடிந்தால் இன்னொரு பெண் கழுத்தில் தாலி கட்ட தயாராக இருப்பவனுடன் இன்றைய இரவை கழிக்கிறாள் வெட்கமின்றி.

அவள் உடலில் மிச்சமிருந்த ஆடைகளுக்கும் அவன் விடுதலை கொடுத்திருக்க, வெள்ளை நிற அழகி அவளின் அங்கங்கள் தங்கமாக தான் மின்னி கொண்டிருந்தது மெல்லிய டிம் லைட்டில். அவள் தேகம் முழுவதும் அவன் விழிகள் அலைபாய, அவள் விழிகளோ கூச்சமின்றி அவன் அந்தரங்கம் தேடி அவன் படிக்கட்டு தேகத்தை வருடியபடி கீழிறங்கி தன் தேவையை தீர்க்க முற்பட்டுக் கொண்டிருக்க, வெட்கமின்றி தன்னை நாடும் பெண்ணை அவனும் ஏமாற்றவில்லை. காமத்தில் கரைக்கண்ட இருவருக்கும் அந்த இரவு அவர்கள் உடல் தேவையை மட்டும் தீர்க்கும் இரவாக மட்டுமே மாறி இருந்தது.

கூடலில் முத்தமிட்டு சிவந்த ரூபா தேகம் போல தன் செந்நிற ஒளி கதிர்களை சூரியன் பூமிக்கு அனுப்பி கொண்டிருக்க, அதிகாலை சுப முகூர்த்தத்தில் ஜெய் கையினால் தாலியை வாங்கிக் கொள்ள அதிக அக்கறை எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள் மனிஷா.

மூன்று முறை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவள். சூப்பர் மாடல் என்று தனக்கு தானே சுய விளம்பரம் கூட ஓட்டிக் கொள்வாள். பேரழகி தான். அவள் அழகு மீது எப்போதும் கர்வம் உண்டு அவளுக்கு. ஜெய்யின் விளம்பர படங்களில் கூட அவள் தான் அரைகுறை ஆடையுடன் இருப்பாள். அவளால் தான் அவன் தயாரிக்கும் பொருட்கள் விற்பனையாகிறது என்று பீத்தல் வேறு.

மற்ற பெண்களை போல் தான் அவளையும் அவன் உபயோகித்து இருந்தான். ஆனால் எக்கு தப்பாக அவன் அன்னையிடம் அவளுடன் சேர்ந்து மாட்டிக் கொள்ள, மகனுக்கு கிருஷ்ணா... என்று பெயர் வைத்த அந்த புண்ணியவதியோ அவனை ராமன் ரேஞ்சில் தான் நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார். மகனின் வண்டவாளம், தண்டவாளம் எதுவும் அறியாத வெள்ளந்தியான அன்னை.

அவனுக்கும் அன்னை என்றால் உயிர். அம்மா என்றால் யாருக்கு தான் பிடிக்காது.

மனிஷாவுடன் ஒருநாள் அவனை பார்த்து விட்டவர் இருவரும் காதலிப்பதாக தவறாக புரிந்துக் கொண்டு "என் பையனை கட்டிக்கிறீயாமா?" என்று ஆசையாக அவளிடம் கேட்டிருக்க, சர்க்கரை வாங்க வந்தவளுக்கு கரும்பு தோட்டத்தையே எழுதி வைத்தது போல் இருந்தது. அவளும் உடனே ஒத்துக் கொண்டாள். கல்யாண ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்க ஆரம்பித்தது. ஜெய்க்கும் அன்னை மனதை நோகடிக்க விருப்பம் இல்லை. கல்யாணம் தானே பண்ணிக்கலாம் என்று எப்போதும் போல் அவன் நாட்களை நகர்த்தி கொண்டிருந்தான்.

மனிஷாவை பற்றி முழுதாக அறியாத அவன் அன்னை கலாவதியோ அவளை மருமகள் என்று தாங்கு தாங்கென்று தாங்க, அவளுக்கோ அவரின் அன்பும், அக்கறையும் எரிச்சலாக தான் இருந்தது.

மார்டர்ன் மங்கை அவளுக்கோ தழுவ தழுவ பட்டு புடவையை இழுத்து சொருகிக் கொண்டு எப்போதும் "மருமகளே மருமகளே" என்று தேனொழுக பேசும், அவரின் பேச்சும் கவனிப்பும் நச்சரிப்பாக தான் இருந்தது. அது அவள் நடத்தையிலும் வெளிப்பட, சில நாட்களிலேயே அவள் மீது இருந்த நல்ல எண்ணம் படிப்படியாக குறைந்து போனது. இருந்தும் மகன் விரும்பிய பெண்ணாயிற்றே! அவன் வாழ்க்கை தானே முக்கியம் என்று அரை மனதுடனே கல்யாண ஏற்பாடுகளை தொடர்ந்தார் கலாவதி.

கிராமத்து பெண் அவர். கணக்கிட முடியாத அளவிற்கு சொத்து என்பதை விட, கணக்கிட போதிய அறிவும் அனுபவமும் அவருக்கு இல்லை என்பதே உண்மை. கலாவதி தந்தையோ வெள்ளந்தியான மகளையும், தன் சொத்துக்களையும் பார்த்துக் கொள்ள மகளுக்கு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு கணக்கு பிள்ளையை தான் தேடினார்.

அவர் விரும்பிய படியே அறிவும், அழகும், அவர்கள் அந்தஸ்திற்கு சற்றும் குறைவில்லாத செழிப்பும் உடைய பாலகிருஷ்ணன் என்பவரை மகளுக்கு திருமணமும் முடித்து வைத்தார். அவர் தான் ஜெய்யின் தந்தை.

அவரும் கிராமத்து வாசி தான் என்றாலும், மேற்படிப்புற்காக நகரத்துக்கு வந்தவர், அங்கேயே தொழில் தொடங்கி செட்டில் ஆகி விட்டார். திருமணம் என்ற பெயரில் இரு மனங்களுக்கு பதில் இருவரின் சொத்துகள் தான் ஒன்றாக இணைந்தது.

பாலகிருஷ்ணனோ தன் தொழிலை பெருக்குவதில் தீவிரமாக இருந்தாரே தவிர, தன் துணை மீது எந்தவித காதலும் அன்பும் இருவருக்கும் இருந்ததில்லை. கடமையே என்று ஒரு பிள்ளையை பெற்றுக் கொண்டனர்.

பாலாவுக்கோ மக்கு மந்தாகினி கலாவதியை தன் மனைவி என்று ஊர் மெய்ப்புக்கு கூட்டி செல்ல சற்றும் விருப்பம் இல்லை. கலாவதி கூட அவர் தன் மீது அன்பை பொழியவில்லை, தன்னை எங்கும் அழைத்து செல்லவில்லை என்றெல்லாம் கலங்கியதும் இல்லை. கணவர் மீது எந்த எதிர்பார்ப்பும் ஆசையும் வைத்ததுமில்லை. ஜெய் பிறந்த பிறகு அவன் தான் அவர் மொத்த உலகும்.

அவன் விசயத்திலும் அவர் முட்டாளே. மகன் மீது கண்மூடி தனமான நம்பிக்கையும், பாசமும் கொண்டவர். அது தான் அவன் தவறுகளை அவர் ஐம்புலன்களும் ஏற்க மறுக்கிறது.
பாலா தொழில் என்று ஓடினாலும் நேர்மையானவர், தான் செய்யும் காரியம் யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்.

ஆனால் அவர் மகன் அப்படி இல்லை. பணம் மட்டும் தான் அவன் குறிக்கோள். அதற்காக எளியவர்கள் வயிற்றில் அடிக்கவும், வாழ்வை கெடுக்கவும் அவன் தயங்குவதில்லை.

மகனின் தொழில் யுக்தியையும், நடத்தையையும் வெகு சீக்கிரமே கண்டு கொண்ட பாலா, நல்ல தந்தையாக அவனை நல்வழி படுத்தவே முயன்றார். ஆனால் அவனோ அவர் பேச்சை மதிக்காது, தாந்தோந்தி தனமாக இருக்க, மனைவியிடம் சொல்லி கண்டிக்க சொன்னார். மனைவியோ மகன் மீது கொண்ட அன்பில் கணவரை தான் குறை சொல்ல, "எக்கேடும் கெட்டு போங்க" என்று தனியாக சென்று விட்டார்.

இன்று விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து தங்க தாரகையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் மனிஷா. கண்ணாடி முன் அமர்ந்து தன் அழகை கர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மனிஷா பின்னால் வந்து நின்ற ரூபா விம்பமும் அதில் தெரிய, இளக்காரமாக அவளை பார்த்து சிரித்தாள் மனிஷா.

இருவரும் மாடலிங் துறையில் தான் இருக்கிறார்கள். ரூபாவை விட மனிஷாவுக்கே அதிக மவுசு இருக்க, அந்த ஆணவம் எப்போதும் அவள் கண்ணில் மின்னும். இப்போது உலக தொழிலதிபர்களே வாயை பிளந்து பார்க்கும் தி கிரேட் பிசினஸ் மேன் ஜெய் கிருஷ்ணாவின் மனைவியாக வேற ஆக போகிறாள். கர்வம், திமிர், ஆணவம் எல்லாம் சேர்ந்து அவள் பார்வை துட்ஷமாக ரூபா மீது படிய, ரூபாவுக்கு அவளை வெறுபேற்ற வேண்டும் என்று தோன்றியது.

"ப்பா..... என்ன ஆளுல்ல இந்த ஜெய் நைட் ஒரு நிமிஷம் கூட விடல, உடம்பெல்லாம் பார்ட் பார்ட்டா வலிக்குது. நீ குடுத்து வச்சவ தான்." என்று நேற்றைய கூடலை கூட்டத்தின் முன் வெட்கமில்லாமல் அவள் சொல்ல, முகம் கறுத்து போனது மனிஷாவுக்கு. அவளோ கண்களை சுருக்கி ரூபாவை எரிக்க, "எனிவே கங்கிராஸ் மனிஷா" என்று உள்ளுக்குள் புழுங்கிய படி வாழ்த்து சொல்லி வெளியேறினாள்.

அவள் சென்றதும் மனிஷா அருகில் வந்தார் மனிஷா அம்மா சந்திரா.

"என்னடி இது? மாப்பிள்ள இவ்வளவு கேவலமானவரா? அரசல் புரசலா நானும் கேள்வி பட்டேன். தினம் ஒரு பொண்ணு வேணுமாமே" என்று மகளுக்காக கலங்கிக் கேட்க, கோணல் சிரிப்பு ஒன்றை சிந்திய மனிஷாவோ, "எவள வேணா வச்சிக்கட்டும் மாம். எனக்கு அது பத்தியெல்லாம் கவலை இல்ல. சுத்தி பாத்திங்கல்ல எவ்வளவு பெரிய பங்களா, இது போல இந்தியாவில மட்டும் இருபதுக்கு மேல இருக்கு. பணம் இருக்கிறவன் பகட்டுக்கு தினம் ஒன்னுன்னு மேஞ்சிட்டு போகட்டும். மொத்த சொத்தையும் அமுக்குறது எப்படினு நாம யோசிக்கலாம்" என்று இந்த திருமணத்தை வைத்து அன்னையும் மகளும் பலமாக பெரிய திட்டம் ஒன்றை போட்டுக் கொண்டிருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்க ராஜா தோரணையில் மிடுக்குடன் கம்பீராக மண்டபம் நோக்கி வந்த ஜெய்யை அனைவரும் வாயை பிளந்து பார்க்க, பெத்த மகராசிக்கு மகனைப் பார்த்து பூரிப்பு தான். அவன் அருகே வந்ததும் கைகளால் திருஷ்டி கழித்து கொண்டார்.

மகன் திருமணம் என்று பாலாவுக்கும் ஒரு பத்திரிக்கை அனுப்ப பட்டிருந்தது. அவரும் வந்திருந்தார் வெறும் விருந்தாளியாக மட்டுமே. மகன் செயலை வெறுப்பவர் தான். இருந்தாலும் பெற்ற மகனை இல்லை என்று சொல்லி விட முடியாதே. கடமைக்காக வந்தமர்ந்திருந்தார். மனிஷா பற்றி கூட அவர் நல்லவிதமாக கேள்வி படவில்லை. சிறிதும் விருப்பம் இல்லாமல் பெற்ற கடமைக்கு வந்திருந்தார் பாலா.

ஜெய் வந்தமர்ந்த சில வினாடிகளில் மனிஷாவும் வந்து சேர, ஐயர் மந்திரங்கள் ஓத, மங்கள இசை இசைக்க, வைரமும், வைடூரியமும் பதிக்கப்பட்ட தங்க தாலி கொடியை மனிஷா கழுத்துக்கு அருகே ஜெய் கொண்டு சென்ற நேரம் மேள தாள சத்தம் தாண்டி "நிறுத்துங்க....." என்ற பெண் குரல் மொத்த அரங்கையும் அதிர வைத்தது.

ஒட்டு மொத்த அரங்கும் பின் வரிசையில் கூட்டத்தில் எழுந்து நின்றிருந்த பெண்ணை தான் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது, மேடையில் இருந்த ஜெய், மனிஷா உட்பட.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத ஒரு உருவம். வெளறிய தாவனியும், எண்ணெய் படிந்த தலையும், ஊரில் அடிக்கும் வெயில் எல்லாம் என் மேல் தான் என்பது போல் கருமை நிற தேகமும் கொண்டிருந்தாள். கண்களோ மேடையில் இருந்தவனை தீ பிழம்பாக எரித்து கொண்டிருக்க, கால்களோ பயத்தில் சற்று நடுங்கிக் கொண்டிருந்தது.

"ஏ புள்ள! பணக்கார ஊட்டுக் கல்யாணம் ஓசி சோறு தின்ன கூட்டியாந்தனு நெனச்சா, என்னடி கூட்டத்துல கொரல் உட்டுட்டு இருக்க? கருப்பு சொக்காக்காரன் வேற பெரிய பெரிய துப்பாக்கி வச்சிட்டு நம்மலையே பாக்குறான். பேசாம உட்காரு புள்ள" என்று எழுந்து நின்றவள் அருகில் இருந்த அவள் தோழி அவள் கையை பிடித்து இழுத்து கீச்சு குரலில் கிசு கிசுக்க, அதையெல்லாம் அவள் எங்கே கேட்டாள்.

தோழியின் கையை தட்டி விட்டு, "இவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லி ஏமாத்திட்டாரு" என்று மேடையில் மணக் கோலத்தில் இருந்த ஜெய்யை கைக்காட்டியவளை பார்த்து மொத்த கூட்டமும் ஏளனமாக தான் சிரித்தது.

அவன் யோக்கியதை தான் ஊருக்கே தெரியுமே, பட்சி வெளியூர் போல! அவர்கள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் முழித்தவள் "நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்" என்று மீண்டும் கத்த, மொத்த கூட்டமும் இன்னும் ஏளனமாக சலசலத்து கொண்டது. 'அது நடந்தா இதுவும் நடக்கிறது இயல்பு தானே' என்பது போல் இருந்தது அவர்கள் எண்ணம்.

"அடி பாவி இது எப்போ நடந்துச்சு? என்கிட்ட கூட சொல்லல..." என்று வாயை பிளந்து அவளை தான் இமை தட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தோழி இளமதி. அனைவரின் சிரிப்பிற்கும் அர்த்தம் விளங்காது எல்லாரையும் சுற்றி பார்த்தவளை ஒரு கார்ட் வந்து "பெரிய இடத்தில வந்து பிரச்சனை பண்றியா? வெளிய வா மா" என்று இழுத்து செல்ல, உண்மையோ பொய்யோ பத்திரிக்கையாளர்களுக்கு தொக்காக ஒரு செய்தி கிடைத்தது அல்லவா.

ஜெய் திருமண செய்தியை சேகரிக்க வந்தவர்களுக்கு இவள் காரசாரமான மசாலா நியூஸ் ஒன்றை வழங்கி இருக்க விடுவார்களா?
அவன் கர்ப்பமாக்கிய பெண்களை எல்லாம் திருமணம் செய்ய வேண்டுமானால் அவனுக்கு இந்நேரம் அறுபதாம் திருமணமே நடந்து முடிந்திருக்கும். ஆனால் அவன் தான் அந்த அளவிற்கு யாரையும் கொண்டு சென்றதில்லையே. பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே! என்பதில் மிகவும் கவனமாக தானே எப்போதும் இருக்கிறான். அதையும் தாண்டி ஏதாவது வயிற்றில் தங்கி விட்டால் கத்தை பணத்தை மட்டும் தான் அவனிடமிருந்து எதிர்பார்ப்பார்கள்.

பணத்திற்கு உடலை விற்கும் அவன் பழகிய பெண்கள் மத்தியில் முகம் கூட பரிச்சயம் இல்லாத இந்த கிராமத்து பைங்கிளி அவன் சுவாரஸ்யத்தை கூட்டினாள்.

கறுப்பு சொக்காக்காரன் நம் கருப்பழகியை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக கூட்டத்தை விட்டு வெளியே இழுத்து வர, பத்திரிக்கையாளர் கூட்டம் மொத்தமும் அவளை சூழ்ந்து கொண்டது.

"உங்க பேரு என்ன?
எந்த ஊரு?
உங்களுக்கும் மிஸ்டர் ஜெய் கிருஷ்ணாவுக்கும் எப்படி பழக்கம்?
எவ்வளவு நாள் பழக்கம்?
அடிக்கடி உங்களை வந்து சந்திப்பாரா?
இது எங்க நடந்தது? எப்போ நடந்தது? எப்படி நடந்தது?"

என்று அந்தரங்க கேள்விகளை கூட சபைக்கு கொண்டு வந்து கணக்கில்லாம் கேள்வி கணைகளை அவள் மீது வீசினர். மைக், கேமரா என்று சுற்றி நின்ற கூட்டத்தை மருண்டு பார்த்தவளுக்கு உடல் நடுங்கியது. பதில் வராமல் நா மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொண்டது.

மிரண்டு போய் அனைவரையும் அவள் பார்க்க, அவளை தான் தூரத்தில் மேடையில் இருந்து ஜெய்யின் கூர் விழிகள் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தது.

தன் இரையை வட்டமடித்து தூக்கி செல்லும் பருந்தின் பார்வை அது. அத்தனை கூட்டம் நடுவே அவள் மட்டும் தான் அவன் கருவிழி திரையில் முழுவதும் பதிவாகி இருந்தாள்.
தன் உதவியாளன் தினேஷை அழைத்து அவன் காதில் ஏதோ கிசு கிசுக்க, தினேசும் மொத்த கூட்டமும் மொய்த்துக் கொண்டிருந்த கருப்பழகி கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றான். அவர்கள் பின்னே சில பத்திரிக்கையாளர்கள், மேடை அருகே நுழைந்திருந்தனர்.

"மிஸ்டர் ஜெய் கிருஷ்ணா? இந்த பொண்ண உங்களுக்கு தெரியுமா?
அவங்க சொல்றது எல்லாம் உண்மையா?
அந்த பொண்ணு உங்க மேல போட்ட பலிக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?"

என்று மீண்டும் கேள்விகள் பத்திரிக்கையாளர்கள் பக்கத்தில் இருந்து இந்த முறை ஜெய் மீது பாய, அவனோ அவர்களுக்கு பதில் சொல்லாது, தன் முன் உடல் முழுதும் வியர்வையில் குளித்து, பயத்தில் எச்சில் விழுங்கி, நடுங்கி கொண்டிருந்தாலும், விழிகள் மட்டும் அவனை குற்ற சாட்டும் பார்வையில் எரித்து கொண்டிருந்த பைங்களி மீது தான் அழுத்தமாக பதிந்து இருந்தது.

இரண்டு நொடிகள் தான் அவன் கண்களை பார்த்திருப்பாள். அவ்வளவு தான். அத்தனை நேரம் இழுத்து பிடித்த தைரியம் எல்லாம் காணா தூரம் போய் விட, அவனுக்கு அவ்வளவு அருகில் நின்றவள் உடல் மேலும் நடுங்க, அவன் பார்வை தீட்சண்யத்தை தங்க முடியாமல் மறுநோடியே மூர்ச்சையாகி இருந்தாள்.

அடுத்து அவள் கண் விழித்தது என்னவோ போதை ஏற்றும் வாசனை மலர்களால் அலங்கரித்த கட்டிலில் தான்.

மெதுவாக கண்களை திறந்தவள் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க, மெல்லிய நீல நிற ஒளி மட்டுமே அறையை நிரப்பி இருந்தது. "நான் எங்க இருக்கேன்?" என்ற வழக்கமான கேள்வி தான் முதலில் அவள் மண்டைக்குள் ஓடியது. மயக்கத்திற்கு முந்தைய நிகழ்வுகளை மூளை நினைவு படுத்த, கட்டிலை விட்டு பதறி எழுந்தாள்.

"ஜெயில்ல ஏதும் தூக்கி போட்டாங்களா?" என்று பயந்து மீண்டும் அறையை அலச, நிச்சயம் இது ஜெயில் இல்லை. அருகில் மூக்கை உரசிய மலர் தோரணம் வேறு ஏதோ ஒன்றை தவறாக உணர்த்த, தன் உடலை குனிந்து பார்த்தாள். இளம் பச்சை நிற பட்டு புடவை கோல்டன் கற்களால் மின்னிக் கொண்டிருந்தது.

கைகளை தூக்கி பார்த்தாள் முழங்கைக்கு ஒரு இன்ச் முன்பு வரை வைர வளையல்கள் கண்ணை பறித்தது. காலையில் அத்தனை பேர் இருந்த கூட்டத்தில் எழுந்து நின்ற தைரியம் இப்போது துளியும் இல்லை. கழுத்து வேறு பாரமாக இருக்க, கைக் கொண்டு தடவி பார்த்தாள். தங்கம், வைரம், வைடூரியம் என அடுக்கடுக்காய் அத்தனை நகைகள். அதன் நடுவே தடிமனான மஞ்சள் கயிறும், தாலி கொடியும் பள பளக்க, நடுங்கிய விரல்களால் அதை தூக்கி பார்த்தாள்.

"தாலியா? இது எப்படி என் கழுத்துல?" கண்களில் நீர் கட்டிக் கொண்டது. நரம்பு தளர்ச்சி உள்ளவன் போல் கண்ட்ரோல் இல்லாமல் கைகள் கிடு கிடுவென ஆடியது.

நிதானமாக யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. மொத்தமாக குழம்பி போனாள். ஏதோ ஒன்று இல்லை... மொத்தமும் தவறு தான் என்று இப்போது தான் மரமண்டைக்கு புரிய, ஓடி சென்று கதவை திறக்க முயன்றாள்.

அந்தோ பரிதாபம் அதுவோ பூட்டி இருந்தது.
அவள் கதவு கைப் பிடியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, "எழுந்துட்டியா?" என்று பின்னால் இருந்து ஒரு ஆண் குரல். பதறி திரும்பினாள்.

ஜெய் தான் பால்கனி கண்ணாடி கதவை பூட்டி விட்டு, திரை சீலையை இழுத்து மூடி விட்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். இங்கே மங்கையவளோ தன் மை விழிகளால் 'இவரா?' என்று அதிர்ந்து அவனை மட்டும் தான் இமை தட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அருகே வந்தவன், "கர்ப்பமா இருக்க பொண்ணு இவ்வளவு நேரம் நிற்க கூடாது, வா... வந்து உட்காரு" என்று அவள் கைகளை பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தியவன், தானும் ஒரு காலை மடக்கி அவளை பார்த்த படி அமர்ந்து கொண்டான்.

"அப்புறம்... எப்படி இருக்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சுல்ல... ஆமா எத்தனை மாசம்" என்று பலநாள் பழகியவர்கள் போல் இயல்பாக கேட்டு அவள் வயிற்றில் கை வைக்க, சகலமும் ஆட்டம் கண்டது பச்சக்கிளிக்கு.

காலையில் அவள் செய்த செயலுக்கு இந்நேரம் ஏதாவது சிறைச்சாலையில் இருந்திருந்தால் சாதாரணமாக எடுத்திருப்பாள். ஆனால் அவள் இருப்பதோ ஜெய் வீட்டில், அதுவும் ஜெய் அறையில், அதுவும் யார் மீது பழி போட்டாளோ அவன் எதிரில். அதையெல்லாம் விட இப்போது அவன் பேச்சு தான் அவளை தலை சுற்ற வைத்தது.

அவனை பற்றி அறிந்திருக்கிறாள் தான், வெறும் ஊடகங்கள் வழியாக மட்டுமே. அவன் நிழலை கூட இதற்கு முன்பு தீண்டியது கிடையாது. காலையில் சொன்னதெல்லாம் பொய் என்று அவளும் அறிவாள், அவனும் அறிவான். அப்படி இருக்க, அவன் பிரிந்து சென்ற காதலன் கணவனாக கைகூடியது போல் அக்கறை காட்டினாள். உடல் மொத்தமும் நடுங்கியது.

போட்ட திட்டம் தோல்வி என்று வருந்துவதா? அரக்கன் திட்டத்தில் மாட்டியதை எண்ணியதை மிரள்வதா? முழி பிதுங்கி அறிவிழந்து நின்றாள் அறிவு சுடர். ஜெய் கிருஷ்ணாவின் அதிகார பூர்வ மனைவி....

அறியா இருவரின், புரியா பயணம் புதிராக இனிதே தொடரும்....
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 2


வேண்டா வெறுப்பாக, அன்னையின் சந்தோஷத்திற்காக மட்டுமே திருமணத்திற்கு தலையை ஆட்டி வைத்த ஜெய்க்கு அன்னையின் ஆர்வ குறைவும் தெரிய வந்தது.


"உங்களுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?" என்று கேட்ட மகன் காதலை அமர காதலாக எண்ணி "எனக்கு விருப்பம் தான் ராசா" என்று சொல்லி சென்றிருந்தார் கலாவதி.


அவனே எப்போ எப்போ என்று அன்னை மனம் நோகாமல் திருமணத்தை நிறுத்த சந்தர்ப்பம் தேட, தொக்காகா வந்து சிக்கிக் கொண்டது பலியாடு.


அவள் உடல் மொழியில் அவளை அறிந்து கொண்டான். பயந்தாகோழி தன் கைபொம்மையாக மாற்றி விடலாம் என்று அவளை பார்த்த அரை நொடியில் ஓநாய் மூளை திட்டம் தீட்டி மான்குட்டிக்கு குடைப்பிடிக்க, அவனைப் பற்றி முழுதாக அறியாமல் வந்து சிக்கி கொண்டது புள்ளி மான்.


மயங்கி சரிந்தவளை இடையில் கைவிட்டு தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். மீண்டும் கேள்விகளை கேட்டு பத்திரிக்கையாளர்கள் புற்றீசலாக நச்சரிக்க, ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு வார்த்தை "அதான் சொன்னாங்கல்ல என் குழந்தை இங்க வளருதுனு. டாக்டர் சர்டிஃபிகேட் வேணுமா?" திமிராக வந்தது பதில்.



"ஜெய்ய்ய்..." அலறியது வேறு யாருமில்லை மனையில் இருந்த மனிஷா தான். எங்கே சொத்துகள் கை நழுவி போய் விடுமோ என்ற பயம். அது அவள் கைநழுவி, கன்னியாகுமரிகாரி இடுப்பு சொருகளுக்கு எப்போதோ போய் விட்டதே.


அப்போ விடியகாலை மூனு மணிக்கே எழுந்து நான் அடிச்ச அரைகிலோ பவுடரும் வேஸ்டா? நியாயம் கேட்க எழுந்து விட்டாள் மனிஷா.


"ஜெய் இது உண்மை இல்லனு சொல்லுங்க. நான் தான் உங்க மனைவி. நீங்க என்னை தான் கல்யாணம் செஞ்சிக்கணும்" வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள, அவள் கண்ணீர் நாடகம் ஒன்றை அரங்கேற்ற,


"நான் என்ன பண்ணட்டும்? ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் பண்ணிடவா" என்று பத்திரிக்கையாளர் கூட்டத்தை பார்த்தான்.


"கூட்டத்தில் ஒருவன், அதெப்படி ரெண்டு கல்யாணம் பண்ணுவீங்க" என்று கேட்க


"ஆமா நான் ஒத்துக்க மாட்டேன். நீங்க என்ன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்." முழு சொத்தும் எனக்கே எனக்கு. எவளுக்கும் பங்கு கிடையாது பதறினாள் மனிஷா. "முதல்ல அவள கீழ விடுங்க" நடப்பது எதுவும் அறியாது சொகுசாக அவன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளை பிடித்து இழுக்க போனவள் ஜெய்யின் ஒற்ற பார்வையில் அடங்கி, உள்ளுக்குள் கருகி, முகம் சிவக்க நின்றிருந்தாள்.



"ரெண்டு கல்யாணம் பண்ண சட்டத்துல இடம் இருக்கு. உங்க ரெண்டு மனைவிக்கும் சம்மதம்னா தாராளமா பண்ணுங்க" கிசு கிசு நியூஸ் பார்ட்டி ரேட்டிங் ஏத்த பாய்ண்ட் எடுத்து கொடுக்க, "அதெப்படி சூப்பர் மாடல், த்ரீ டைம் மிஸ் இந்தியா மனிஷா மேடம் இதுக்கு ஒத்துப்பாங்க?" மனிஷாவால் பாதிக்கப்பட்ட ஒருவன் அவள் பெருமையை சொல்லி இழுத்து விட,



மனிஷாவும், "ஹாங்... என் இமேஜ் டேமேஜ் ஆகிடும்" என்றால் ஜெய் கை வளைவில் கிடந்த கறுப்பழகியை துட்சமாக பார்த்த படி.


"அதான் அவங்களே சொல்லிட்டாங்களே... பெண் குலத்தின் விடிவெள்ளி அவங்க, சிங்க பெண், இன்னொரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து இனியும் உங்களை கல்யாணம் செஞ்சிக்க மாட்டாங்க" என்று அவள் சொன்ன ஒற்றை வார்த்தையில் அவளை ஸ்க்ரீனில் இருந்து தூக்கி வீசி விட்டான்.


என்றோ ஒருநாள் பேட்டி எடுக்க போனவனை அவள் உதாசீனப்படுத்தி இருக்க, இன்று அவன் நேரம் பார்த்து பழிவாங்கி விட்டான். 'இப்போ தான் டா என் பாரமே குறைஞ்சி இருக்கு' என்ற நிம்மதி அவனுக்கு. யாரையும் எந்த சூழலிலும் உதாசீன படுத்தாதீங்க. நேரம் வந்தா எறும்பு கூட ஹெலிகப்டர்ல வந்து உங்க கனவை கலைக்கும்.


'எத! நான் எப்போ டா கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னேன்' அவள் ஙே என்று விழித்துக் கொண்டு நிற்க, அவள் அருகே வர நினைத்த அவள் அன்னைக்கு தன் கரத்தால் கேட் போட்டு தடுதிருந்தான் தினேஷ்.


நடப்பவை யாவையும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தன் அன்னையை மட்டும் ஜெய் விழிகளால் அழைக்க, அவரும் குழப்பம் நீங்கா முகத்துடன் அவன் அருகே வந்தார்.


அவர் அருகே வந்ததும் தன் நெஞ்சில் கிடந்தவளை அவர் கையில் கொடுக்க, அவரும் தன் தோளோடு தங்கி பிடித்துக் கொண்டார். "முகூர்த்த நேரம் முடிய போகுது. யார் கழுத்துலயாவது தாலி காட்டுறேளா?" முழு பேட்டா உண்டா, இல்லை கல்யாணம் கலவரத்துல நின்னு பாதி பேட்டாவோட ஆத்துக்கு போகணுமா? என்னும் வகையில் ஐயர் கேட்க,


ஜெய்யும் "கேள்வி முடிஞ்சதா" என்று கேட்டுக் கொண்டே தாலி கட்ட போனான். "சார் மயக்கமா இருக்க பொண்ண..." பத்திரிக்கையாளனில் மற்றொருவன் ஏதோ சொல்ல வர, "கர்ப்ப கால மயக்கம். கொஞ்ச நேரத்தில சரியாகிடும்" என்று தினேஷ் தன் பாஸின் செயலுக்கு ஒத்து ஊதினான்.


கீழே பேரதிர்ச்சியில் நின்றிருந்த இளமதியை திருப்திகாரமான புன்னகையுடன் பார்த்தவன் விழிகள் எள்ளும் கொள்ளும் வெடிக்க வயிறெரிய முறைத்து கொண்டிருந்த மனிஷா மீது ஏளனமாக படிந்து, தன் அன்னை தோளில் மயங்கி கிடந்த பேதையவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, பொன் தாலி கொடியை அணிவித்து ஊரார் முன் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.


சிறிய சலசலப்பு கூட்டத்தில். கடைசி நேரத்தில் பெண் மாறி விட்டது என்று. 'நீ யார கட்டினா எங்களுக்கு என்ன? பத்திரிக்கை தந்த, தொழில் முறை நட்பில் விரிசல் வந்துவிட கூடாதுனு வந்தோம்' என்று மேல் தட்டு வர்க்கத்தின் ஒதுங்கி நிற்கும் குணத்தால் பெரிதாக எந்த பிரச்சனைகளும் இல்லை.


பாலா தான் மகன் கையால் தாலி ஏறியது கூட உணர்வின்றி, மனைவி தோளில் மயங்கி கிடந்த அப்பாவி பெண் மீது கழிவிரக்கம் கொண்டு பாவமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டால் யார் என்ன செய்ய முடியும். (எலி குட்டி சைஸ்ல இருக்க அவ யானையா என்று கேட்க படாது.) மயங்கி விழுந்த புள்ளைய ஹாஸ்பிடல் கூட்டி போகாம தாலிய கட்டி மனைவியாக்கி கொண்டான் கேடி.


திருமணமும் சிறப்பாக முடிந்திருக்க, மேடையை விட்டு இறங்கிய ஜெய் "நைட் வரை அவ கண்ண திறக்க கூடாது" தினேஷ்க்கு உத்தரவிட்டவன், "க்ளியர் பண்ண வேண்டிய ஃபைல்ஸ் கொஞ்சம் இருக்கு" என்று வேக நடையுடன் சென்று விட்டான்.


சிறிது சிறிதாக குளோரோ ஃபார்ம் கொடுத்து அவளை மயக்கத்தில் வைத்தே, இரவுக்கு அவளை தயார் படுத்தி அறையில் போட்டு விட்டு சென்றார்கள்.


இதோ இப்போது மிஸஸ் ஜெய்யாக, அவன் கைகளை தொட்டு அழைத்து வந்ததற்கே உடல் நடுங்கி அமர்ந்து இருந்தவள், அவன் வயிற்றில் கை வைக்கவும் பதறி எழுந்து நின்றாள்... இல்லை இல்லை அவன் காலிலே விழுந்து விட்டாள்.



"நான் காலைல சொன்னதெல்லாம் பொய் தான். என்ன எதுவும் பண்ணிடாதீங்க." ஒப்பாரி வைத்தவள் உயிர் பயத்தில் காலை பிடிக்கவும் தயங்கவில்லை.


அவன் தேவைக்கு எத்தனை உயிரையும் வதைப்பான் என்பதை கண் முன்னே பார்த்தவள். எங்கே கொன்று விடுவானோ என்ற பயம் சூழ்ந்தது.


கண் மூடி கவுந்து கிடந்து கதறியவள், எங்க கால காணோம் என்று கண் திறக்க, அவனோ கால்கள் இரண்டையும் கட்டிலில் நீட்டி, கால் மேல் கால் பிணைய விட்டபடி சாய்ந்து அமர்ந்து அவளை தான் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான், சொல்லு உன் கதையையும் கேட்போம் என்ற தோரணையில்.


எச்சில் கூட்டி விழுங்கியவள் "உங்கள பழி வாங்க தான் அப்படி சொன்னேன்" என்றால் எழுந்து நின்று விழிகளில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்த படி.



உலோகங்களை உருக்கும் தொழிற்சாலை ஒன்றை தென்கோடியில் நிறுவி இருந்தான் ஜெய் கிருஷ்ணா. அவனுக்கு இருக்கும் பல தொழிலில் அதுவும் ஒன்று.


அவன் சொந்த இடத்தில் தான் பல கோடி செலவழித்து ஆலை அமைத்து, செம்பு கம்பி மற்றும் கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் என உற்பத்தி செய்தான்.



ஆலையில் இருந்து விசவாயு கசிந்து சுற்றி இருந்த மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றி எங்கிலும் பச்சை பசேலென விவசாய பூமி. அதன் நடுவே இவன் ஆலையை அமைத்து நிலத்தடி நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தி கொண்டிருந்தான். விளை நிலம் தன் தன்மையை இழந்து உவர் நிலமாக மாற துவங்கியது.


வெள்ளி மலை வெண்கல மலையாக மாறியது.


விவசாயத்தை நம்பி இருந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்க பட்டது. புகார் செய்தால், 'நிலத்தை எனக்கு வித்துடுங்க. எல்லாருக்கும் என் கம்பெனில நானே வேலை தரேன் பிராப்ளம் சால்வ்' என்று கூறி சென்றான்.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கலெக்டர், மினிஸ்டர் வரை புகார் கடிதம் கொடுத்து ஆலையை மூட சொல்லி கோரிக்கை வைத்தார்கள். அவன் பண பலம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வைத்தது.



இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு தொழிற்சாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த விவசாய நிலங்கள் முற்றிலும் கருகிப் போனது.


பல பிரச்சனைகள், போராட்டங்கள், பல உயிர் பலிகள் தாண்டி இன்றும் கம்பீரமாக இன்னும் எத்தனை தலையை வேண்டுமாலும் எடுப்பேன் வீழ மாட்டேன் என்று நின்று கொண்டிருக்கிறது.



ஆலையை மூட மாட்டேன் என்று திமிராக நிற்கும் அவனை எதிர்க்க வெளியே பெரிய கூட்டமே நிற்கிறது.


ஆனால் அவனோ அதை எதையும் பொருட்டாக கருதாது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தான்.


கிராம மக்கள் அவன் திருமண செய்தி அறிந்து, 'நாங்க இங்க வாழ வழியில்லாம இருக்கோம். உனக்கு கல்யாணம் கேட்குதா?' என்று வஞ்சம் கொண்டு நேத்து இரவு தான் பெரிய லாரியில் சென்னை வந்து இறங்கினார்கள்.


அவர்கள் கூட்டத்தில் ஒருத்தி தான் அறிவு சுடர். பிழைப்பின்றி பாதி பேர் ஊரை விட்டு சென்றிருக்க, பல ஏக்கர் நிலத்தை வைத்து வம்சா வழியாக விவசாயம் மட்டுமே செய்து வந்தவர்களால் திடீரென எல்லாத்தையும் விட்டு செல்ல முடியவில்லை.


அறிவின் தாய் தந்தை சிறு வயதிலேயே இறந்திருக்க, அறிவு சுடர் வளர்ந்தது எல்லாம் தந்தை வழி பாட்டியின் நிழலில் தான். ஏக்கர் கணக்கில் நிலம் இல்லை என்றாலும் தங்கள் வாழ்வாதாரம் கழிந்தது அதில் இருந்த சிறு அளவு நிலத்தில் தான். ஊரில் உள்ள பெண்களுக்கு எல்லாம் பதினெட்டு வயது பிறந்த உடனே கடமை என்று திருமணம் முடித்து அனுப்பி இருக்க, அறிவின் பாட்டியோ அந்த காலத்து பெண்மணி என்றாலும் படிப்பின் மகத்துவம் புரிந்தவர், "நீ படி ஆத்தா... பொம்பள புள்ளைக்கு படிப்பு தான் முக்கியம்" என்று அவளை படிக்க வைத்தார். அப்படிபட்டவரின் ஆசைக்காக தான் அந்த ஊரை விட்டு போகாமல் தங்கள் விளை நிலத்திற்காக போராட கிராம இளைஞர்களுடன் இணைந்தாள்.


ஆலையை மூட எந்த எல்லைக்கும் செல்லும் துணிவில் கிராம இளைஞர்கள். ஆலையை மூட மாட்டேன் என்று திமிரில் அரக்கன். 'என்னை அடக்க இந்த உலகத்தில எவனும் இல்லை' என்ற ஆணவம் அவனுக்கு.


"நாளைக்கு எங்க ண்ணே போராட்டம் பண்ண போறோம்? முதலமைச்சர் அலுவலகம் முன்னயா?" கேட்டவளிடம் "ஜெய் கல்யாண மண்டபத்துக்குள்ள" என்று சொன்ன இளைஞர் அணியின் தலைவன் தினகரனை அதிர்ந்து பார்த்தாள் அறிவு.


நம் உரிமைக்காக போராடுவது சரிதான். ஆனால் அடுத்தவன் வாழ்க்கையை அழிக்க உரிமை இல்லையே "வேணாம் ண்ணே கல்யாணம் முடிஞ்ச பிறகு மண்டப வாசல் நின்னு போராட்டம் பண்ணலாம்" அரக்கன் என்றாலும் அவனும் மனிதன் தானே அவனுக்காகவும் யோசித்தாள்.


"நாம ***மணமா ஓடினா கூட நம்ம பிரச்சனையை இங்க எவனும் கேட்க மாட்டான். நாளைக்கு அவன் கல்யாணத்துக்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவாங்க. பிரச்சனை பண்ணி நியாயம் கேட்கலாம்" என்று ஏதேதோ பேசி தங்கள் திட்டத்தை சொல்ல, அதிர்ந்து விட்டாள் அறிவு சுடர்.


"இல்ல என்னால பண்ண முடியாது. பயமா இருக்கு" என்று பின் வாங்கிவளை, "இங்க இருக்கிறதுலயே நீ தான் தைரியமான பொண்ணு. நீயே இப்படி பயந்தா எப்படி? நீ குரல் விட்டு எல்லார் கவனத்தையும் உன் மேல திருப்பு. நாங்க புகுந்து பொண்ணுக்கு கற்பு எவ்வளவு முக்கியமோ அதே போல மண்ணுக்கு அதோட தன்மை முக்கியம். தாய் நாட்டு வளத்தை கெடுக்கிறான்னு நம்ம கோரிக்கைகளை அங்க இருக்கிற பெரிய மனுஷங்க முன்ன வைப்போம். என்னவெல்லாம் முயற்சி பண்ணியும் பாதி கிராமத்தை இழந்து நிற்கிறோம். மீதி காப்பாத்துறதும், முதலை வாய்க்கு போறதும் உன் கையில தான் இருக்கு" என்று ஏதேதோ இரத்தம் கொதிக்க பேசி அவளை அரை மனதாக சம்மதிக்க வைத்திருந்தனர்.


இந்த திட்டங்கள் அனைத்தும் இளைய தலைமுறைகளுடையது மட்டுமே. 'பொம்பள புள்ளையை வச்சி என்ன வேலை பார்க்கிறீங்க?' என்று பெரியவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களிடம் மண்டப வாசலில் போராட்டம் என்று சொல்லி விட்டு, சிலர் மட்டும் வேலையாட்களோடு இணைந்து உள்ளே செல்ல திட்டம்.


திட்டப்படி இலை எடுக்க வந்த பெண்கள் மத்தியில் புகுந்து இளமதியுடன் அறிவும் உள்ளே வந்து சேர்ந்து விட்டாள். பாதுகாப்பு கெடுபிடியில் ஆண்கள் மாட்டிக் கொள்ள, அவர்களை நம்பி உள்ளே வந்து குரல் கொடுத்த அறிவுசுடர் அரக்கன் பிடியில் வாழ்நாள் கைதியாக மாட்டிக் கொண்டாள்.


வெளியே கூட்டம் கூடிய போதே, அசப்பு தெரியாது தினேஷ் லாரியில் எல்லாரையும் அள்ளி போட்டு அப்புற படுத்தி விட்டான். அவர்கள் நிலை என்னவென்று அறியாமல் இவள் இப்போது அரக்கன் முன் கண்ணை கசக்கி கொண்டு நிற்கிறாள்.


அவள் சொன்ன கதைகளை நிதானமாக கேட்டு முடித்தவன், "எனக்கு எதிரா இவ்வளவு பெரிய சதி வேலை நடக்கது தெரியாம நான் அப்பாவியா இருந்திருக்கேன் பாரேன்" என்று எதுவும் அறியா பச்சப்புள்ள போல அவன் தாடியை நீவிக் கொண்டே கேட்க, தவறு செய்த உணர்வில் தலை கவிழ்ந்து நின்றாள் அறிவு சுடர். "தினேஷ் நல்ல வேலைக்காரன்ல இந்த மாதிரி அனாவசிய கேஸ் எல்லாம் என் காதுக்கு கொண்டு வர மாட்டான். அடுத்த மாசத்துல இருந்து ஒரு பத்தாயிரம் ரூபா அவனுக்கு ஏத்தி கொடுக்கணும்" என்று சொன்ன வாய் மறுநொடியே "புலிக்கு காவல் இருந்து, எலியை கொட்டைய விட்டான். அதுக்கு என்ன பண்ணலாம்?" என்று அவளிடமே கேட்க மரண பீதி அவள் கண்ணில். கூடவே இளமதி நினைவு "இளா எங்க?" தொண்டையை விட்டு வெளிவராத குரலில் மெதுவாக கேட்டாள்.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
"யாரு இளா?" கண்களை சுருக்கி அவளிடமே கேட்டான். இப்போது என்ன சொல்வாள்? ஒருவேளை அரக்கன் அவளை பார்க்க வில்லை என்றால் என்னுடன் வந்தவள் என்று மாட்டியும் விட முடியாதே? திருடனுக்கு தேள் கொட்டியது போல விம்மி வந்த அழுகையை உதட்டை கடித்து அடக்கி கொண்டு நின்றிருந்தாள்.



அவள் பதட்டத்தை உதட்டை வளைத்து அரக்க புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், "யாரு இவ்வளவு கேவலமான பிளான் போட்டது. நாளைக்கு எனக்கு அவனை இன்ரோ பண்ற. அவனால பொண்ணு மாறி உன் கழுத்தில தாலி கட்ட வேண்டியதா போச்சு பாரு" என்று சலித்து கொண்டே டாப்பிக்கை மாற்றி, எழுந்து அவள் அருகே வர, அவளோ பயந்து பின்னால் நகர்ந்தாள்.



"நாளைக்கே எல்லாருக்கும் உண்மையை சொல்லிடறேன்" என்று அவசர அவசரமாக சொன்னாள். அவன் முன்னே நிற்கவே உடல் நடுங்கியது.


"அது நாளைக்கு பார்க்கலாம். இன்னைக்கு இப்போ ஆக போறத பார்ப்போம்" என்று சொன்னவன் குரலில் ஆடி தான் போனாள்.



"என்.. என்ன.. என்ன ஆகனும்?" எச்சில் விழுங்கி தொண்டை குழியில் சிக்கிய வார்த்தைகளை கஷ்டபட்டு கேட்க,


"கல்யாணம் முடிஞ்சா என்ன ஆகும்னு உனக்கு தெரியாது?"



"ஹி ஹி... அதெப்படி நமக்குள்ள, நீங்க கல்யாணம் பண்ண இருந்த பொண்ணு தான் இப்போ இல்லையே" சமாளிக்க முயன்றாள்.



"அதான் நான் கல்யாணம் பண்ண பொண்ணு நீ இருக்கியே" அவன் சொன்னதும் தூக்கி வாரி போட்டது அறிவுக்கு.



"முன்ன பின்ன தெரியாத பொண்ணு கூட?..... காதல் இல்லாம எப்படி ஒரு பொண்ண தொட முடியும்?" பயம் என்பதை தாண்டி இதை அவள் நம்பினாள். காதல் இன்றி பெண் மீது மோகம் வராது என்று. ஆனால் அவன் அகராதியில். உடலின் தேவை காமம், உள்ளத்தின் தேவை காதல்.



இரண்டும் ஒரு பெண் மீது தான் வர வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லையே. காதல் இருந்தால் தான் பெண் மீது மோகம் வரும் என்று பினாத்தி கொண்டிருந்தவளை வித்தியாசமாக பார்த்தான்.



ஆயிரம் இரவு கண்டவன், சிக்கிய சில்வண்டோடு முதலிரவுக்கு தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தான். பல இரவுகள் பலதரப்பட்ட கன்னிகைகளுடன் கழிந்தாலும் எதிலும் காதலின் போதை கண்டதில்லையே.



"ஆனா பாரு காலைல கல்யாணம் முடிச்சிட்டு நைட் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட எவ்வளவு ஆசையா இருந்தேன். எல்லாத்தையும் கெடுத்தது நீ தான்" அவள் மீது பழி போட்டு நியாயம் கேட்டான்.



"நான் உண்மையை சொன்ன பிறகு நாளைக்கே அவங்கள கல்யாணம் பண்ணிக்கங்க."


"அது நாளைக்கு பண்ணலாம். இன்னைக்கு எனக்கு நியாயம் சொல்லு" என்று பேசிக் கொண்டே அவன் ஒவ்வொரு அடியாக அவளை கண்களால் ருசித்த படி முன்னேற, அவளோ பின்னால் நகர்ந்தவள் இதற்கு மேல் வழி இல்லை என்று சுவரில் பின் தலை இடிக்க நின்றாள்.


அவனோ ஒரு கையை சுவரில் குற்றி கிறக்கமாக அவளை பார்க்க, என்ன பார்வை இது பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியவளுக்கு தலை சுற்றியது அவன் வாசம்.



அவள் முகத்தை நோக்கி குனிய, கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். அவள் வாசன் நுகர்ந்து "எத்தனை வருஷம் லவ் பண்ணோம்?" கிறக்கமாக அவள் காதில் கேட்க,



"நாம எப்போ லவ் பண்ணோம்?" கண்களை மூடிக் கொண்டே பதில் கேள்வியாக வந்தது.




"நீ தான் சொல்லணும். இதுவரை ஒத்துகிட்டல்ல" என்று கேட்க, "எதுவரைக்கும்?" புரியா கேள்வி அவளிடம்.



"அதான் என் குழந்தை இங்க வளருதே" சொல்லிக் கொண்டே அவள் வயிற்றில் கைவைக்க, "ஆ ஆ ஆ..." அவன் தீண்டலில் அரண்டு அலறியவள். "அதான் பொய்னு சொன்னேனே" என்றால் பரிதவிப்பாக.



"நீ சொன்ன பொய்ய நான் ஏத்துக்கிட்டேன். நாளைக்கு போய் இல்லனு சொன்னா நான் பொய் சொன்னதா ஆகிடும்"



"அதுக்கு?"



"சொன்ன பொய்ய உண்மையாக்கிடலாம்" சொல்லிக் கொண்டே அவனை காணாது முகத்தை திருப்பி கொண்டு நின்றிருந்தவள் கன்னத்தில் முதல் இச்சு அழுத்தமாக, அவன் மீசை முடி கன்னத்தை குத்தி செல்ல, பிள்ளை முத்தம் எச்சிலிட்டு வைத்தான்.



விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் கணக்கில் அவள் சொன்ன பொய்களுக்கெல்லம் உயிரூட்டிட திட்டமிட்டான்.



உலகில் எத்தனை எத்தனையோ போதை பொருள் இருந்தாலும், பெண் போதை பெரும் போதை அல்லவா! அவள் கன்னத்தில் முத்தமிட்டதே ஒவ்வொரு செல்களையும் சூடேற்றி விட்டது.



மெலிதாக நுனி பல்லால் கன்னத்து சதையை கடிக்க, "அம்மா.." வலியில் சிறிதாக முனங்கினாள் பெண்ணவள்.



அந்த முனங்கல் அவனுக்கு மேலும் தாபத்தை தூண்டியது. "டூ யூ க்நோ? டார்க் சாக்லெட் கசப்பா இருந்தாலும், அதோட டேஸ்டே தனி. அதுவும் சரக்கடிச்சுட்டு சாப்டா போதை அப்படி ஏறும். அது போல இருக்கு உன் கன்னத்த கடிச்சா" கம்ப்ளிமெண்டரி சொல்லி இன்னும் ஒரு முத்தம் வைத்தான்.


அவன் மூச்சு காற்று கன்னம் தீண்டிய போதே, உடல் முழுவதும் வெட வெடத்து போனவள், தன் கரம் கொண்டு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள, இன்னும் தள்ளிக் கொண்டு தான் இருந்தாள். அவனை தான் இம்மியும் அசைக்க முடியவில்லை.



கூர் வாளுக்கு படியா தலையும் பாவைகளின் மை விழிகளுக்கு படியுமே. இவன் தலை தன் தாலிக் கொடியை சுமக்கும் பெண்ணவளுக்காக படியுமா?
 
Status
Not open for further replies.
Top