அருமையான சுவாரஸ்யமான கதை. ஆசிரிய தோழியே. அன்டி ஹூரோ கதை என்றாலும் இக் கதையை அருமையாக எழுதி முடித்தமைக்கு பாராட்டுக்கள்.. ஒரு சில குறைகள் இருந்தாலும்.. கதை அருமையாகவே உள்ளது.குறைகளை திருத்தி மேன்மேலும் உங்கள் எழுத்தை எதிர்வரும் காலங்களில் உயர்த்தி எழுத்துலகில் பெயர்பெற வாழ்த்துக்கள்..
கதையில் சரியான இடங்களில் நிறுத்தற் குறியீடுகள் இடப்பட வேண்டும் , எழுத்துபிழைகளால் சில வார்த்தைகள் அர்த்தம் மாறுகிறது.
அருமையான கதைக்கரு ! , ஆனால் இன்னும் அழகாக அதனை கையாண்டு இருக்கலாம் . எழுத்தாளர் கதையில் கையாண்ட வரிகளும் அருமை ஆனால் பந்தி பிரிப்பு இடம் பெற வேண்டும் இல்லை என்றால் கட்டுரையோ என்று வாசகர்களுக்கு தோன்ற வைத்து விடும்.
எழுத்தாள தோழி..தன்னால் இயன்றளவு கதையை சுவாரஸ்யமாக வாசகர்களை கவரும் வகையில் சிறப்பாக எழுதி முடித்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள்..
நேசத்தை வெளிப்படையாக காட்டாது நான் என்ற ஈகோ இருந்தால் என்ன விளைவுகள் கிடைக்கும் என்றதை ருத்ர தேவ் உணர்த்தி விட்டான். மகி குடும்ப ஏழ்மை நிலையிலும் சுயமாக நின்று கையாண்டயமை அருமை. அவளிற்கு சுயநலமில்லாத நட்புக்கள் துயரத்தில் தோள் கொடுக்கும் தனயன் என நல்ல உறவுகளும் நட்புகளும் அமைந்தமை ஆறுதல்.. மகியின் அவல நிலையில் யார் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று போகாது..அவளிற்கு மறுபிறப்மு கொடுத்த வயோதிக தம்பதிகளின் குணத்திற்கு முன்னால் நம் அனைவருமே அடிமை தான்
ஆனால் மூன்று வருடங்களின் முன்னதான பகுதியில் ருத்ரனின் அம்மு பற்றி தெளிவாக கூற படவில்லையோ? என்று எண்ண தோன்றுகிறது..!
ஆனாலும் ருத்ரனாலும் அவனின் தாயாலும் இவ்வளவு கொடுமை தனக்கு நடந்த பின்னும் பெண்ணவளின் தாய்மை குணமும் அவன் மீது வைத்துள்ள நேசமும் இலகுவில் அவனையும் வேத வலியையும் மன்னிக்க வைத்துவிட்டது மகிழினியும் எப்போதும் தனக்கு நடக்கும் அடக்குமுறைக்கு அடங்கியே போகாமல் தனக்காக எதிர்த்து கேள்வி கேட்டது அருமை. அதனை இன்னும் அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாம்..ருத்ரனும் தனது தாயின் மீதுள்ள கண்மூடி தனமான பாசத்தில் தன்னவளை காய படுத்தியது ரொம்ப மன்னிக்க முடியாத தப்பு. ஆனாலும் 3 வருடங்கள் தண்டனை அனுபவித்து விட்டான் அதுவே அவனிற்கு தக்க தண்டனையே!..
கிருஷ்ணா மஞ்சு நட்பு மிக அருமை. ஆனால் நேசிப்பவளை சுற்றி என்ன நடக்குதென்று தெரியாது , நட்பாக பேசியதற்கு இவன் படும் கோபங்கள் அவளை படுத்தும் பாடுகள்.. கொஞ்சம் அளவுக்கு மீறியாக இருகிறது..இவ்வளவு பெரிய தொழிலதிபரால் மனைவியின் பிறந்த வீட்டு நிலை அறிந்து கொள்ள முடியவில்லை என்பது கொஞ்சம் லாஜிக் இடிக்கிறதே!
எதுவாக இருப்பினும்,
நம் நேசிப்பவர் மேல் உள்ள நேசத்தை நாம் சரியான வகையில் வெளிப்படுத்தாதன் விளைவுகளை
கதை மூலம் அருமையாக கொடுத்தமைக்கு பாரட்டுக்கள்..