ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை தீண்டும் உயிரே -கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
உயிரே 15


கணண்டி முன் நின்றவன் தன் உருவத்தை பார்க்க இந்த மூன்று வருடத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் மனதிலும் உடலிலும் ட்ரிம் செய்யப்படாத தாடி எப்போதும் எய்ட் பேக் இருக்கும் அவன் வயிறு சரியாக சாப்பிடாமல் ஒட்டி போய் இருக்க மெலிந்த உடல் என அவனின் இந்த தோற்றமும் அவனை அழகனாய் தான் கட்டியது

மனமோ ஒரு நிலையில் இல்லாமல் தன்னவளையும் தான் உயிரில் உதித்த சிசுவையும் காண துடித்தது, எங்கு சென்று தேடுவது அவள் எங்கு இருக்கிறாளோ என்ன செய்கிறாளோ என்று மகியின் சிந்தனையில் இருந்தவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது இத்தனை வருடங்கள் அவளை விட்டு உயிரில்லா மனிதனாய் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு உயிர்ப்பை கொடுத்தது அவன் அப்பாவின் வார்த்தைகள் தான்..

ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்தவன் மனம் போன போக்கில் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன் சென்றது டவுனிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் இருக்கும் அந்த சிறு கிராமத்திற்குதான்..
மனம் போன போக்கில் காரை இயக்கி கொண்டிருந்தவன் சிறுவர் விளையாடும் பூங்காவிற்கு முன்காரை நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான்.. அங்கு விளையாடிகொண்டிருக்கும் சிறுவர்களின் குரலை கேட்டுகொண்டிருந்தவன் மனம் சோர்ந்து போனது சீட்டில் தலை சாய்ந்து அமர்ந்தவன் மனமோ தந்தை அன்று பேசியதை அசைபோட்டது

இரண்டு வருடங்களாக வாழ்க்கையை வெறுத்து இருந்தவன் பிசினஸ்ஸை கவனிக்கவில்லை மகியையும் குழந்தையையும் இழந்த விரக்தியில் வாழ்க்கையை வெறுத்து வாழ்த்து கொண்டு இருந்தான் ருத்ரதேவ் எதன் மீதும் பிடிப்பு இல்லமல் அவன் இருக்க வேதவல்லிக்கு பிள்ளையை கண்டு கவலையாய் போனது தான் சொன்ன பொய் தன் பிள்ளையை இந்த நிலைக்கு கொண்டு வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை அவர் நினைத்தது ஒன்று நடப்பது வேறு ஒன்று அல்லவா முதலில் மகிழினியையும் குழந்தையையும் நினைத்து வேதனை படுவான் பின் காலப்போக்கில் மாறிவிடுவான் என்று நினைத்தவர் மாதங்கள் போக போக அந்த நம்பிக்கையும் குறைய துடங்கிவிட்டது சரியாக சாப்பிடாமல் சரியாக தூங்காமல் எப்போதும் எதையோ பறிகொடுத்தார் போல் அவன் இருக்க பெற்ற தாய்க்கு மனம் வலிக்க செய்தது

மகியும் காணாமல் போன அன்று விஷயம் தெரிந்து ருத்ரதேவ் துடித்து போனான் பிரசவ நாள் வேறு நெருங்கிவிட்டதே எங்கு போனாளோ!! என்ன ஆனளோ!! என்று பதறி தேட துடங்கினான்.
எங்கு தேடியும் மகி கிடைக்காமல் போக நாட்கள் ஓடியதே தவிர அவள் கிடைக்க வில்லை..

வேதவல்லிக்கு தான் இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒரு பயனும் இல்லமல் போய்விட்டதே என்று மிகுந்த ஆத்திரம் வந்தது ‘போனதும் போனாள் குழந்தையை பெத்து கொடுத்துட்டு போய் தொலைச்சிருக்கலாம்,இப்போ நான் பட்ட கஷ்டமும் வீனா போச்சு!!,சொத்தும் போச்சே!!!, கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே’ என வேதவல்லி வயிறு எரிந்தது

இரண்டு வருடம் மகியை தேடுவதிலேயே குறியாய் இருந்தவன் பிசினஸ்ஸை கவனிக்காமல் விட்டான் ஒருநாள் திடிரென்று ஹரிஹரன் வருகையில் ஆச்சர்யப்பட்டவன் தந்தையிடம் ஏதும் கேட்கவில்லை
தன் திருமணத்திற்கு வந்து சென்றவர் மகிழினி காணாமல் போனா விஷயம் தெரிந்து கூட கண்டும் காணாமல் இருந்தார் அப்போதும் தன் பிள்ளைக்கு ஆறுதலும் சொல்லவில்லை மருமகளையும் அவர் தேடவில்லை அதில் ருத்ரவிற்கும் மனம் வருத்தம் உண்டு ஆனால் அதை தந்தையுயிடம் காட்டிக்கொள்ள வில்லை

தந்தையின் வருகையை கண்டவன் ஓரிரு வார்த்தைகள் அவரிடம் பேசிவிட்டு அவன் அறைக்கு கிளம்பிவிட்டான் வேதவல்லியும் ஒமென்ஸ் கிளாப்பிற்கு கிளம்பிவிட்டார் ஹரிஹரன் ஓய்வேடுத்து விட்டு ருத்ராவை தேடி சென்றார்

ருத்ரா பால்கணியில் நின்று வானத்தை வெறித்து கொண்டிருக்க அவன் அருகில் வந்தவர் “என்ன இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல அம்மாவும் பிள்ளையும் “என்றார் நக்கலாய் அவர் கேட்டத்தின் அர்த்தம் விளங்காமல் அவன் அவரை பார்க்க
“நீங்க நினைச்ச மாதிரியே மகிழினியும் போய்ட்டா அப்புறம் என்ன??சந்தோசம் தானே?? “என்றார் அவன் வேதனையை அறிந்தே
“நான் அந்த அளவுக்கு கொடுமைகாரனா அப்பா, அவளுக்குத்தான் என் மனசு புரியலை உங்களுக்கு கூடவா என் மனசு புரியலை “என்றான் விரக்தியாய்
“உன் மனசு எனக்கு புரிஞ்சி என்ன பிரோயோஜனம் புரிய வேண்டியவளுக்கு புரியலையே!!,உன் மனசுல நினைக்குறதை என்னைக்காது அவளுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணி இருக்கியா??, இல்லை மனசுவிட்டுத்தான் பேசி இருக்கியா !?, அவ புரிஞ்சிக்கலைனு சொல்லாத நீ புரியவைக்கலைன்னு சொல்லு!”என்று அவர் சொல்ல,அவன் மௌனமாய் நின்றான்

“உன் மனசுல இருக்கத்தை அவளா மட்டும் எப்படி புரியணும்னு எதிர் பாக்குற தேவ்?? அவளும் சாதாரணமான பொண்ணு தான், உன் அன்பை அவளுக்கு என்னைக்காவது புரிய வச்சி இருக்கியா!? இல்லையே!, அப்புறம் அவ புரிஞ்சிக்கலைனு சொல்லுறது எந்த விதத்துல நியாயம்?!”

“அன்பை சொல்லித்தான் புரிய வைக்கணுமா!!?,என் கூட வாழ்ந்த இவ்ளோ நாள்ல அவளால கொஞ்ச கூடவா என் அன்பை உணர முடியலை “

“இங்க தான் நிறைய ஆம்பளைங்க தப்பு பண்ணுறோம், நாம மனசுல இருக்கறதை வெளிப்படுத்தாமலே அவங்க புரிஞ்சிக்கணும்னு நினைக்கிறோம், உள்ளுக்குள்ள அன்பையும் காதலையும் வச்சிக்கிட்டு வெளில கோவத்தையும் வெறுப்பையும் மட்டும் தானே காட்டுறோம்”என்றார் ஹரிஹரன் அவர் சொல்லுவதும் உண்மைதானே அவன் அன்பை கடல் அளவு உள்ளே வைத்திருந்தாலும் வெளியே கோவத்தை தானே கட்டினான், அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை அவனை சுட,

“சாரி ப்பா!!!..நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் என் மகியையும் பாப்பாவை இழந்துட்டேன் இனி எல்லாம் முடிச்சி போச்சி “என அவரை அணைத்துக்கொண்டு அந்த ஆறடி ஆண் மகன் அழ ஹரிஹரணும் கலங்கித்தான் போனார்

“இன்னும் ஏதும் முடியலை தேவ், வாழ்க்கையோட அத்தியாயம் இனிதான் துடங்குது “என்றார்
“என்ன டாட் சொல்றிங்க புரியலை “
“புரியும் படி சொல்லணுனா மகிழினியும் உன் குழந்தையும் இன்னும் உயிரோடதான் இருக்காங்க”என்றார்
“டாட் உண்மையா தான் சொல்றிங்களா!? “என்ற தன் தந்தையை உலுக்கினான் சந்தோஷத்தில்
“எஸ் என் மருமகளும் என் பேர பிள்ளையும் உயிரோடதான் இருக்காங்க “
“அம்மா இறந்துட்டாங்கன்னு சொன்னாங்களே டாட் “என்றான் அன்று தன் தாய் சொன்னதை தந்தையிடம் சொன்னான்,அதை கேட்டு சிரித்தவர்”உன் அம்மா எதைத்தான் உங்கிட்ட ஒழுங்கா சொன்னா, அவ சொன்ன பொய்ல இதுவும் ஒன்னு அவளோ தான் “என்றார் சாதாரணமாய்
“என்ன டாட் சொல்றிங்க, அம்மா என்கிட்ட ஏன் பொய் சொல்லணும் “என்றவன் முன் சொத்து பத்திரங்களை போட்டார் ஹரிஹரன்
“என்ன டாட் இதெல்லாம்”
“எந்த சொத்துக்காகத்தான் மகியை உனக்கு கட்டிவச்சா உன் அம்மா “
“வாட்!!”
“ இந்த சொத்து தான் உன் அம்மாவுக்கு தேவை அதுக்கு தான் இந்த கல்யாணம், உன் வாழ்க்கையை விட உன் சந்தோசத்தை விட இந்த சொத்துதான் உன் அம்மாக்கு முக்கியம் “
“டாட் அவளை நான் விரும்பித்தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். மாம் சொன்னதுக்காக இல்லை “
“ஹ்ம்ம்ம், ஆனா உன் அம்மா நோக்கம் இந்த சொத்தை அடையனும்னு தான், அதுக்குத்தான் மகியை யூஸ் பண்ண “
“மகியை யூஸ் பன்னாங்களா??,புரியும் படி சொல்லுங்க டாட் “
“இந்த சொத்து முழுசும் என் அப்பா, தாத்தா எல்லாரும் கஷ்டப்பட்டு உழைச்சி சேத்துவச்ச பரம்பரை சொத்து,இப்போ நீயும் நானும் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை விட பல மடங்கு அதிகம், இந்த சொத்துகளோட மதிப்பு இப்போ மில்லியனையும் தொடும்.. இதுதான் உன் அம்மாக்கு வேணும் ஆனா இதை ஈஸியா அடைய முடியாது..
இந்த சொத்து உன் அம்மா கைக்கு வரணும்னா,ஒரு ஏழை பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்,அவளுக்கும் உனக்கும் குழந்தை பிறந்த பிறகு இந்த சொத்து முழுசும் உனக்கு வந்துடும், சொத்து உனக்கு வந்துட்டா அந்த சொத்தை உன்முலமா ஈஸியா அனுப்பவவிச்சுடலாம்னு கணக்கு பண்ணா அதுக்குத்தான் மகியோட பண கஷ்டத்தை பயன்படுத்தி அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சா, இதுல உன் அம்மாவுக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கு “
“ இந்த உயிலை என் அப்பா எழுதி வச்சிட்டு போனதா தான் உன் அம்மா நினைச்சிட்டு இருக்க ஆனா உண்மை என்னனா இப்படி ஒரு உயிலை எழுதினதே நான்தான் ”என்றார்
“பணம் பணம்னு அலஞ்சிட்டு இருக்க உன் அம்மாவுக்கு எனக்கு மனைவியா இருக்கவும் நேரம் இல்லை உனக்கு அம்மாவா இருந்து உன்னை பாத்துக்கவும் நேரம் இல்லை, நானும் பிஸ்னஸ் பிசினஸ்னு ஓடிக்கிட்டே இருந்துட்டேன்.. உன்னக்கு ஒரு நல்லா நண்பனா நல்லா அப்பாவா இருக்கலைனு நான் பீல் பண்ணாத நாள் இல்லை தேவ், என்னாலதான் உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலையே அட்லீஸ்ட் உன் அம்மாவது உன் கூட இருந்து உன்ன நல்லா பாத்துப்பானு நினைச்சேன் ஆனா அவளுக்கு ஒமென்ஸ் கிளப் , பார்ட்டினு போகவே நேரம் சரியா இருந்தது. ஒரு கட்டதுக்கு மேல எல்லாமே என் கையை மீறி போயிடுச்சி தேவ்... என் வாழ்க்கை ஆன மாதிரி உன் வாழ்க்கையும் ஆகிட கூடாதுனு தான் உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கணும்னு நினச்சேன்..
ஆனா அதையும் பொறுக்கமா உங்க அம்மா தன்னோட குணத்துல இருக்க அவ அண்ணன் பொண்ணு ஷாலினியை உனக்கு கட்டிவைக்க முடிவு பண்ணா..ஷாலினி கண்டிப்பா உனக்கு நல்ல மனைவியை இருப்பான்னு எனக்கு தோணலை ...உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு இந்த உயிலை மாத்தி எழுத முடிவு பண்ணேன்
‘ஒரு சாதாரண குடும்பத்துல பொறந்த பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் சொத்து உன் கைக்கு கிடைக்குற மாதிரி உயிலை மாத்தி எழுதினேன் நான் நினைச்சா மாதிரியே கல்யாணமும் நடந்துச்சு...
உன் அம்மா சொத்துக்காக மகிழினியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ண பிறகு மகிழினியையும் அவங்க குடும்பத்தை பத்தியும் விசாரிச்சேன் அதுக்கு அப்புறம் தான் இந்த கல்யாணதுக்கு உன் அம்மா கிட்ட சம்மதம் சொன்னேன்,
மகியை பார்த்ததுக்கு அப்புறம் அவ உன் வாழ்க்கையை அழகா மாத்துவானு எனக்கு நம்பிக்கை வந்துச்சு, அவளால மட்டும்தான் இந்த குடும்பத்துக்கு நல்ல மருமகளாவும்,உனக்கு ஒரு நல்ல மனைவியாகவும் இருக்க முடியும்னு தோணுச்சு...உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தா உங்களுக்குள்ளயும் அண்ணியோண்யம் அதிகரிக்கும்னும் குழந்தையை பார்த்த பிறகு உன் அம்மாவோட புத்தியும் மாறும்னு நினைச்சேன் ஆன என் கணக்கு பொய்யா போயிடுச்சி “என்று வருந்தினார் ஹரிக்காரன் இவ்வளவு நேரம் அவர் பேசுவதை அதிர்ச்சியுடன் கேட்டுகொண்டிருந்தவனுக்கு பேச வார்த்தையே எழவில்லை

“அது மட்டும் இல்லை உனக்கும் மகிக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுனு உனக்கு தெரியுமா?? “என்றார் ஹரிஹரன்
“உன்னை கல்யாணம் பண்ணிக்க மகி ஒதுக்கலைன்னு மகியை கடத்தி எந்த பொண்ணும் உயிரை விட மேல நினைக்குற கற்பையே சுரையாட பாத்தா “என்றார் அவர் சொன்ன கடைசி வாக்கியத்தில் உண்மையிலேயே விதிர்விதிர்த்துதான் போனான் ருத்ரதேவ்
தன் அன்னையா இப்படி எல்லாம் செய்தார் என்று இன்னுமும் அவனால் நம்பவே முடியவில்லை அதிர்ச்சியின் உச்சதுக்கே சென்றவன்
“இது எல்லாம் தெரிஞ்சும் ஏன் இவ்ளோ நாளா அமைதியா இருந்தீங்கனு நீ கேக்கலாம் ஆனா அதை அப்போ சொல்லி இருந்த கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்து இருக்காது உனக்கு அமையுற நல்லா வாழ்கையை நானே கெடுத்துட கூடாதுனுதான் பொறுமையா இருந்தேன் “என்றார்

இந்தியாவில் டாப் பிசினஸ்மேன் ஆனா ஹரிஹரனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாதா என்ன!!,அனைத்தையும் அறிந்தே இருந்தார், நடப்பது அனைத்தும் தன் பிள்ளையின் வாழ்க்கைகைக்கு சாதகமாக இருப்பதால் அதை அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார் தன் மருமகள் காணாது போனதை அறிந்தவர் முழு மூச்சாக மகிழினியை பல டிடக்டிவ் ஏஜென்ட் மூலம் கண்டறியும் தேடலில் இறங்கினார் அவர் செல்வாக்கை வைத்து அவர் வேலையை மிக எளிதாகவே முடித்தார்..

மகிழினியும் மாறனும் ஊட்டியில் இருப்பதை அறிந்தவர் அவர்களை பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொண்டார் மகிழினி மாறன் மற்றும் தன் பேத்தி அங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாக இருப்பதை உறுதி செய்தவர் அவர்கள் சில காலம் அங்கு இருப்பதுதான் நல்லது என நினைத்தார் அப்போதுதான் தன் பிள்ளைக்கும் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியும் என்று முடிவு செய்தவர் அவர்களை ஊட்டியில் இருப்பதை ருத்ரதேவ்விடமும் சொல்ல வில்லை..
வேதவல்லியோ மகியும் குழந்தையும் இறந்ததாக சொல்லி ருத்ராவை தேற்றி அவனுக்கு ஷாலினியை திருமணம் செய்து வைக்க நினைத்தார். மகியும் குழந்தையும் இறந்ததாக அன்னை சொன்னதை நம்பியவன் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்க எதிலும் பிடிப்பு இல்லமால் வாழ்ந்தான் நாட்கள் இப்படியே போக வேதவல்லிக்கு தன் பிள்ளையை நினைத்து மனம் வருந்தியது

மகி காணாமல் போனதை தந்தை கண்டும் காணாமல் இருந்ததை நினைத்து சில நேரம் எரிச்சல் தான் வரும் அவனுக்கு, இரண்டு வருடங்கள் இப்படியே போக தந்தையின் திடீர் வருகையில் கண்டு ஆச்சர்யப்பட்டவன் அவர் சொன்ன விவரத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். அத்தோடு தாயின் முகத்தை கூட பார்ப்பதை நிறுத்துவிட்டான்.

மகியும் குழந்தையும் உயிரோடு இருப்பதை சொன்ன ஹரிஹரன் அவர்கள் இருக்கும் இடத்தை வேண்டுமென்றே சொல்லவில்லை அவனாக தேடி கண்டுபிடிக்கட்டும் என்று அதன் பின் கடந்த ஒரு வருடமாக மகியையும் குழந்தையும் தேடி அலைந்தவன் அவர்கள் கிடைக்காமல் அவர்களை தேடி தேடி சோர்ந்து போனான்...

இரண்டு நாட்கள் முன் ருத்ரதேவ்விற்கு தந்தையிடமிருந்து அழைப்பு வர அதை அட்டென்ட் செய்தவன்
“எப்படி இருக்கீங்க டாட்? “
“பைன் தேவ் “
“நீ எப்படி இருக்க “
“இருக்கேன் டாட் “
“மகி பத்தி ஏதும் தகவல் தெரிஞ்சதா? “
“இல்லை டாட் என்றான் வருத்தமாய் “
“ஹ்ம்ம்ம், ஊட்டில ஒரு இம்போர்ட்டண்ட் கிளைன்ட் மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கு தேவ் என்னால அதை அட்டென்ட் பண்ண முடியாது சோ எனக்கு பதில் நீ போய் அட்டென்ட் பண்ணு “என்று சொல்ல
“ஹ்ம்ம் ஓகே டாட் “என்றவன் ஊட்டிக்கு புறப்பட்டு விட்டான்




❤️❤️❤️ மறக்காம உங்க கருத்துக்களை பதிவிடுங்கள் டியர்ஸ் ❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 16


கண்களை மூடி சீட்டில் சாயிந்திருந்தவன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்க அவன் மனம் அங்கு செல்ல ஆர்வம் கொண்டது கண்களை திறந்தவன் பார்க்கில் குழந்தைகளை கவனிக்க அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் உதடுகள் அழுத்தமாய் “மகி “என்று உச்சரிக்க கால்கள் தானாய் அதன் போக்கில் இயங்க காரில் இருந்து இறங்கியவன் நேராக மகியை நோக்கி நடந்தான்
மகியோ ஆதினியோடு விளையாடிகொண்டிருக்க மெலிந்த தேகம்,ட்ரிம் செய்யப்படாத தாடி என அவளை நோக்கி ருத்ரதேவ் நடந்து வந்துகொண்டிருக்க அவனை எதிர்பாராதவள் அவனின் திடீர் வருகையில் அதிர்ந்து அப்படியே சிலையென நின்றாள். அவள் அருகில் வந்தவன் அவளை கூர்ந்து நோக்க அவன் கண்களில் என்ன இருந்தது காதலா?,கோபமா?, ஏக்கமா?,வெறுப்பா? என்ன என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை அவனின் மெலிந்த தோற்றம் வேறு மனதை பிசைய அவன் மேல் கொண்ட கோபம் பின்னுக்கு போய் அவன்மேல் கொண்ட காதல் மனது ‘ஏன் இப்படி இருக்கிறான்?’என்று சிந்தித்தது அவளை நோக்கி ஆழ்ந்த மூச்செடுத்து அவளிடமிருந்து பார்வையை திருப்பி அவனின் மறு உருவமாய் நிற்கும் தன் மகளின் மீது தன் பார்வையை பதித்தான்...
அவன் இதழ்கள் தானாய் விரிய “அப்பா கிட்ட வாடா செல்லம் “என்றவன் தன் தேவதையை தூக்கி கைகளில் ஏந்திக்கொள்ள அந்த தருணம் உலகிலேயே மிக அழகானதாக தோன்றியது அவனுக்கு...
தன் பிள்ளை தன் உயிரில் உதித்த சிசு என பெருமிதம் கொண்டான். இத்தனை காலம் தன் குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருந்த மகியின் மீது கொலைவெறி வந்தது ருத்ராவிற்கு..
எத்தனை நாள் ஏங்கி இருப்பான் இந்த குழந்தையை பார்க்க, எத்தனை நாள் உண்ணாமல் உறங்காமல் தவித்திருப்பான் இவர்களை காணாமல் ‘ஏன் இப்படி செய்தாள்??, எதற்காக தன் பிள்ளையை தன்னிடமிருந்து பிரித்து வைத்தாள்!!??’என பல கேள்விகள் அவனுள் இருந்தாலும் அவளிடம் சண்டையிடும் எண்ணம் பின்னுக்கு தள்ளப்பட்டு தன் குழந்தையுடன் செலவிடும் நேரம் மட்டுமே அவனுக்கு முதன்மையாய் இருந்தது..

அவனை கண்ட அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தவள் சட்டென நிகழ்வுக்கு வர ஆதினி அவன் கைகளில் இருக்க அதை கண்டு கோபமுற்றவள், எங்கே தன்னிடமிருந்து தன் பிள்ளையை பிரித்து தூக்கி சென்று விடுவானோ என்று பயந்து “ஆதினி...!!” பதட்டதோடு ருத்ராவிடமிருந்து ஆதினியை வாங்க முயற்சிக்க அதற்க்கு அவன் விட்டால் தானே..

“என் குழந்தையை விடு தேவ் “என்று அவள் கோபமாய் கத்தினாள்
“ஆதினி..!!நீ கீழ இறங்கு நம்ம வீட்டுக்கு போலாம் “என்று சொல்ல அவனோ குழந்தையை கெட்டியாக பிடித்திருக்க, தன் தாயின் கோவத்தை கண்டு ஆதினி பயந்து தாயை பார்க்க, அவனோ அவள் கோவத்தை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஆதியை தன் கையிலேயே வைத்திருந்தான் அதை கண்டு மகிக்கு மேலும் கோபம் வர,
“நீ யார் என் குழந்தையை தூக்க, என் குழந்தைக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, அவளை விடு “என்று கோபமாய் கத்தியவளை அடிக்க கை ஓங்கிவிட்டிருந்தான் ருத்ரா,
அவன் கை ஓங்கியதும் எங்கே அடித்து விடுவானோ என்று பயந்தவள் இறுக கண்களை மூடிக்கொண்டாள் வந்ததில் இருந்து கோபத்தை அடக்கி பொறுமையாய் இருந்தவன் அவள் கடைசியாய் பேசியதை கேட்டு அவன் பொறுமை இழந்து அடிக்க கை ஓங்கி விட்டான் குழந்தை இருப்பத்தை மனதில் கொண்டு சட்டென கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன் “கொன்னுடுவேன் “என்று அவளை நோக்கி ஒற்றை விரல் காட்டி கர்ஜித்தான். அவனின் கோபத்தை கண்டு விதிர்விதிர்ந்தவள் அப்படியே வாயை மூடிக்கொண்டாள்..

“ஏற்கனவே உன் மேல கொலை வெறில இருக்கேன், இதுக்கு மேல எதாவது பேசின அப்புறம் நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்”என்று அவன் மீண்டும் கர்ஜிக்க அவன் கோவத்தை பற்றி தெரிந்தவளோ அதற்கு மேல் வாய் திற்காமல் அமைதியாய் நின்றாள்..
அவனோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு திரும்பி நடக்க அவள் அதே இடத்திலேயே நின்றிருந்தாள் “அவளை எங்க தூக்கிட்டு போறீங்க!?”என்று அவள் கேட்க சட்டென திரும்பியவன் முறைத்த முறையில் அவள் வாயை திறக்கவே இல்லை. ‘சும்மா சும்மா முறைச்சிட்டே இருக்கான் நாமதானே கோவமா இருக்கணும்!?, இவன் நம்ம பண்ணவேண்டியதை எல்லாம் பண்ணுறான்!!, நீ ஏண்டி அவனை பார்த்து பயப்படுற!!??, வரட்டும் அவன ஏன் டா இங்க வந்தேன்னு நல்லா நாலு கேள்வி கேட்டு அனுப்புறேன் ‘என்று தனக்கு தானே பேசிக்கொண்டு அவள் அங்கே நின்றிருக்க, ருத்ரா மகளை தூக்கிக்கொண்டு பார்க் வெளியில் இருக்கும் கடைக்கு சென்று சாக்லேக்ட்ஸ் ஐஸ் கிரீம் என அனைத்தையும் வாங்கி கொடுத்து அழைத்து வந்தான்..

குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தவன் மகியை பார்த்து “ஈவினிங் ரெடியா இரு சென்னைக்கு கிளம்பனும் “என்றான் அழுத்தமாய்
“நான் வரலை “
“உன்னை வரியா இல்லையானு நான் கேக்கலை!!, கிளம்பி இருனுதான் சொன்னேன், நாலு பேரும் நைட் சென்னை கிளம்புறோம் “என்று அவளிடம் கோபமாக சொன்னவன்,குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் அவன் கிளம்பி விட “நீ சொன்னா உடனே நான் வரணுமா!!, கண்டிப்பா வரமாட்டேன்”என்று அவள் கத்த அதற்குள் அவன் அங்கிருந்து வெளியேறி விட்டிருந்தான்...
அடுத்த பத்து நிமிடத்தில் மகிழினி இருக்கும் இடத்தை தெரிந்துகொண்டவன் ஹோட்டலை நோக்கி காரை செலுத்தினான்...

மகிழினியோ ருத்ராவை திட்டிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள் ஆதினியோ “அம்மா அப்பா எங்க போனாங்க?, அப்பா எப்போ வருவாங்க? “என நொடிக்கு ஒருமுறை அப்பா அப்பா என்று அவள் தன் அப்பாவை பற்றி பேசிக்கொண்டு ,கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வர மகிக்குத்தான் கோவம் கோவமாக வந்தது, வந்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தைக்கு கண்டதையும் வாங்கி கொடுத்து குழந்தையை தன்னிடமிருந்து பிரிந்து விட்டானே என்ற கோவம் அவளுக்கு..

வீட்டிற்கு வந்தவள் நிலைகொள்ளாமல் இங்கும் அங்கும் நடைப்பயில வீட்டிற்கு வந்த ஆதினி அனைவரிடத்திலும் “எங்க அப்பா நிறைய சாக்லேட் வாங்கிக் கொடுத்தாரு தெரியுமா??,அப்பாவும் நானும் நிறைய ஐஸ் கிரீம்ஸ்லாம் கூட சாப்பிட்டோம், இன்னைக்கு நாங்க ஊருக்கு போக போறோமே!! “என்று சொல்லி குதூகலிக்க லட்சுமி பாட்டிக்கும் கணபதி தாத்தாவிற்கும் விஷயம் புரிந்துவிட்டது அவர்கள் மூலம் அனைவருக்கும் மாலை மகிழினியை அழைத்து செல்ல மாப்பிளை வருவதாக கூறி விருந்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்ய சொன்னார் லட்சுமி பாட்டி..

மகிழினிக்கோ அவன் வந்தால் கண்டிப்பாக போகவே கூடாது அவன் சொன்னா நாம் ஏன் கேட்கணும் என்று நினைத்துக்கொண்டு இருக்க அவள் கண்களோ கடிகாரத்தையும் வாசலையும் நொடிக்கொருமுறை பார்த்துக்கொண்டே இருந்தது

மாலை கதவு தட்டும் ஓசை கேட்க மகிழினி சென்று கதவை திறந்தாள் வெளியே ருத்ரதேவ் குல்லேஸ் அணிந்துகொண்டு வசீகர புன்னகையுடன் நின்றிருக்க அவன் புன்னகையில் தன்னை துலைத்தவள் தன்னை மறந்து அவனை ரசிக்க, சட்டென தலையை உலுக்கி கொண்டவள் ‘என்ன வேணும், இங்க ஏன் வந்தீங்க? “என்றாள் அதே நேரம் உள்ளிருந்து தெய்வானை வர “உள்ள வாங்க தம்பி “என்று மரியாதையுடன் அவனை உள்ளே அழைத்து அமரவைத்து காபி கொண்டு வர உள்ளே சென்றார். மகியின் பேச்சில் இருந்தே மகியின் கணவர் வந்துவிட்டத்தை கணித்திருந்தார் தெய்வானை, மகியின் பையில் இவர்களின் திருமண போட்டோவை சிலமுறை கண்டிருந்தத்தினால் ருத்ராவை அடையாளம் கண்டுகொண்டார், தங்கள் விட்டு மருமகனை மரியாதையாய் வரவேற்று அமரவைத்தவர் காபி கொண்டு வர உள்ளே சென்றார்...

“நானும் என் பொண்ணும் எங்கேயும் வர மாதிரி இல்லை “என்று அவள் சொல்லி வாயை முடிப்பதற்குள்,அங்கு வந்த ஆதினி “அப்பா!!”என்று ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டாள் “அப்பா நாம எப்போ ஊருக்கு போவோம் “என்று ஆதினி கேட்க அய்யோ வென்றாகிவிட்டது மகிழினிக்கு
‘எல்லாம் சேர்ந்து சதிபண்ணுறாங்கனு பாத்த நான் பெத்ததும் சேர்ந்து சதி பண்ணுதே ‘என்று உள்ளுக்குள் புலம்ப, ருத்ராவோ நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்
தெய்வானை ருத்ராவிடன் காபி கொண்டு வந்து அவனிடம் நீட்ட “அம்மா அவருக்கு காபி பிடிக்காது “என்று தன்னை மீறி அவள் சொல்ல தெய்வானைக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது எங்கே மகளின் வாழ்க்கை இப்படியே போவிடுமோ என்று பயந்தவர் தன் மகள் அவள் கணவன் மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் இதோ அவள் மூலமாகவே தெரிந்துகொண்டாரே.
“தெரியாம போட்டுட்டேன் தம்பி, கொஞ்சம் இருங்க நான் டீ போட்டு கொண்டுவரேன் “என்று தெய்வானை சொல்ல
“பரவால்ல ஆன்ட்டி குடுங்க”என்றவன் புன்னகையுடன் அதை எடுத்து பருக துடங்கினான் ருத்ரா
“நீங்க பேசிட்டு இருங்க தம்பி “என்று அவர்கள் பேசட்டும் என அங்கிருந்து அகன்றார் தெய்வானை

“நைட் எயிட்டோ கிளாக் நம்ம இங்க இருந்து கிளம்பனும் “என்று அவன் சொல்ல
”நாங்க வரலை “என்றாள்
“உன் ரூம் எங்க இருக்கு? “என்று கேட்க ஆதினியோ “வாங்க ப்பா நான் கூட்டிட்டு போறேன் “என்று மகிழினி அறைக்கு அழைத்து சென்றாள் ருத்ராவோ பீரோவை திறந்து அவள் உடைகள் மற்றும் ஆதினி உடைகளை எல்லாம் எடுத்து ஒரு சூட்கேஸ்ஸில் திணிக்க அவன் பின்னால் வந்த மகிழினி அவன் வைத்த துணிகளை எல்லாம் வெளியே எடுத்து போட்டாள்

“ஆது குட்டி நீங்க போய் வெளில விளையாடுங்க அப்பா அம்மாகிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு “என்று ருத்ரா சொல்ல ஆதினி விளையாட சென்றாள். ருத்ரா கதவை தாள்ப்பாள் போட்டுவிட்டு அவளை நெருங்க மகிக்கு அடித்து விடுவானோ என்று உள்ளுக்குள் உதறல் எடுக்க துடங்கிவிட்டது

அவனோ அவளை நோக்கி வர அவளோ பின்னே நகர்ந்தாள் அவன் அவளை நெருங்க அவளோ சுவற்றில் மோதி நின்றாள் அவளை நொறுங்கி நின்றவன் அவள் வெற்றிடையில் கரம் பதித்து தன்னோடு மேலும் அவளை நெருக்கி அவள் இதழ்களில் இதழ் பதித்தான்..
அவள் கண்கள் தானாக மூடிக்கொள்ள அவனை விலக்க முடியாமல் அவள் அப்படியே நிற்க,அவளை பார்த்து சிரித்தவன் “சாரி டி “என்றான் இறைஞ்சும் குரலில் அவனின் சாரி என்ற குரலில் மோன நிலையில் இருந்து மீண்டவள் கண்களை திறக்க அவனோ அவள் மூச்சு காற்று படும் அளவிற்கு நின்றிருக்க, அவளை அனைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து வெளியேறினான்..

ருத்ரா சென்ற சிறிது நேரம் கழித்து லட்சுமி பாட்டியும் தெய்வானையும் உள்ள வர “என்ன முடிவு பண்ணி இருக்க மகி “என்றார் தெய்வானை
“தெரிலமா “என்றாள்
“அவர் உன்னையும் குழந்தையையும் பிரிஞ்சு ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கார் டா அதே போல நீயும் தான் அவரை பிரிஞ்சி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க, இப்போ அந்த தம்பி திருந்தி வந்து இருக்கு இதுக்கு அப்புறமும் நீ பிடிவாதம் புடிச்சா உன் வாழ்க்கை தான் வீனா போகும் “என்று தெய்வானை சொல்ல
“இதுக்கு மேல உன் இஷ்டம், யோசிச்சி நல்ல முடிவ எடு “என்றுவிட்டு தெய்வானை சென்றுவிட்டார்
“இது உன் வாழ்க்கை பிரச்சனை,நல்லா யோசிச்சி முடிவு எடு டா “என்று சொல்லிவிட்டு பாட்டி கிளம்பிட்டார்

ருத்ராவிற்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க ருத்ராவையும் மகியையும் அமரவைத்து விருந்து பரிமாறினார் தெய்வானை
மாறன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வர ருத்ராவை கண்டு அவனுக்கு அதீத மகிழ்ச்சி.
ருத்ராவை மகிழினி திருமண போட்டோவில் தான் பார்த்து இருக்கிறான்.திருமணத்திற்கு போக முடியாததால் ருத்ராவை சந்திக்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை அதன் பின் வந்த சூழ்நிலைகளும் ருத்ராவை சதிக்கும் வாய்ப்பை கொடுக்கவில்லை.. முதல் முதலில் தன் அக்காவின் கணவரை இன்றுதான் பார்க்கிறான்.. ருத்ராவின் பிசினஸ் பற்றியும் செல்வாக்கை பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறான்..

மாறன் தயங்கியபடி ருத்ராவிடம் பேச ருத்ராவோ மாறனிடம் மிக சகஜமாக பேசினான் ருத்ராவின் எளிமையான பேச்சி மாறானுக்கு மிகவும் பிடித்திருந்தது மகிக்கு ருத்ராவின் பேச்சை கண்டு ஆச்சர்யம் தான்.
ருத்ரா இப்படியெல்லாம் பேசுபவன் இல்லை யாரிடமும் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டான் அதும் கடுமை கலந்துதான் இருக்கும் அப்படி இருப்பவன் இன்று இத்தனை இனிமையாய் மென்மையயைய் தன் தம்பியிடம் பேசுவது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது...

“மாறா நீயும் எங்ககூட வர “என்று ருத்ரா சொல்ல
“இல்ல மாமா நான் வரலை என்மேலயும் மகிக்கா மேலையும் இவங்க எல்லாரும் உயிரையே வச்சிருக்காங்க நானும் வந்துட்டா இவங்களால தாங்கிக்க முடியாது, இனி வாழ்க்கை முழுக்க இவங்களுக்கு மகனா இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் மாமா , நீங்க போய்ட்டு வாங்க “என்றான் மாறன்.ருத்ராவிற்கு மாறனை மிகவும் பிடித்து போனது.

தெய்வானையும், சிவகாமி, லட்சுமி பாட்டி என அனைவரும் மகிக்கு அறிவுரை சொல்லி அனுப்பிவைக்க, யாழினியோ மகியை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் ஆதினியை பிரிவதை நினைத்து யாழினி தேம்பி தேம்பி அழ அவளை சமாதான படுத்துவதுதான் பெரும் பாடாய் போனது அனைவருக்கும். மகிழினியும் ஆதினியும் விடைபெற்று ருத்ரவுடன் சென்னைக்கு புறப்பட்டனர்..

மகி ருத்ராவிடம் ஏதும் பேசவில்லை ஆதினி தன் தந்தையிடம் வளவளத்துக்கொண்டே வர ருத்ராவும் கொஞ்சமும் சளைக்காமல் தன் மகள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆதினி அப்படியே தூங்கிப்போனாள் மகியும் கூட அவ்வபோது தூங்கி எழ,ருத்ராவோ ஓய்வில்லாமல் காரை ஓடிகொண்டிருந்தான்..
விடிய காலை சென்னைக்கு வந்தவர்கள் நேராக சென்றது ருத்ராவின் கெஸ்ட் ஹவுஸ்ஸிற்கு தான் மகியோ கேள்வியாக அவனை பார்க்க “இனி இங்கதான் இருக்க போறோம் “என்று சொல்லிவிட்டு தூங்கிகொண்டிருக்கும் ஆதினியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்...

ருத்ரா முன்பு இருந்த வீட்டிற்கு துளியும் குறைவில்லாமல் இருக்க அதை பார்த்தவளுக்கு சலிப்புதான் வந்தது “இவங்களுக்கு சின்னதாவே விடு கட்ட தெரியாதா?, இவங்க வீட்டை பேய் பங்களா மாறி தான் கட்டுவாங்களோ!?, இந்த வீட்டை பராமரிக்கவே பத்து பேர் வேணும் போல “என்று அவள் முனுமுனுத்துக்கொண்டே வர,
ருத்ரா பெட் ரூமிற்க்கு சென்று ஆதினியை படுக்கவைத்தது விட்டு தானும் படுத்து கொண்டான், ருத்ராவிற்கு மகி மேல் காட்டுக்கடங்காத கோபம் எங்கே அவளிடம் பேசினால் தன் கோபத்தை காட்டிவிடுவோமோ என்று நினைத்தவன் அவளிடம் பேசுவதை தவிர்த்தான் இரவு முழுவதும் ஓய்வில்லாமல் வண்டி ஒட்டி வந்த களைப்பில் படுத்தவன் ஆதினியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அப்படியே தூங்கி விட்டான்,மகியும் அசதியில் படுத்த உடனே உறங்கிவிட்டாள்!!,



❤️❤️❤️ உங்க கருத்துக்களை மறக்காம பதிவிடுங்கள் ❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 17


காலை ஒன்பது மணி போல் எழுந்த மகிழினி கடிகாரத்தை பார்க்க “இவ்ளோ நேரம் தூங்கிட்டோமே,ஆதினி எழுவதுக்குள் சீக்கிரம் எதாவது சமைக்க வேண்டும்“என்று நினைத்தவள் குளித்து தயாராகி கீழே சென்றாள் சமையலறை எங்கிருக்கிறது என்று தேடி கண்டுபிடித்து ஃப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்து காய்ச்சி வைத்துவிட்டு காலை உணவை தயார் செய்ய துடங்கினாள்
ஆதினி கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்து வர அவளுக்கு முகம் கழுவி விட்டு பாலை புகட்டினாள் “அப்பா இன்னும் எழலையா ஆதி? “என்று மகி கேட்க
“இல்லைம்மா “என்றுவிட்டு வெளியே போய் வேடிக்கை பார்க்க துடங்கிவிட்டாள் ஆதினி
‘நைட் கூட ஒழுங்கா சாப்பிடலையே, இப்போ காபியாவது கொண்டு போலாமா? வேண்டாமா? ‘என்று அவள் யோசிக்க ருத்ரா கீழே வந்து ஷோபாவில் அமர்ந்து “மகி காபி“என்று ருத்ரா கேட்க,
சட்டென அவனுக்கு காபியை போட்டு கொண்டு வந்து அவன் எதிரே இருக்கும் டிபாயில் வைத்துவிட்டு அவள் திரும்ப “ஆதி எங்க? “என்றான்
“வெளில விளையாடுறா “என்றுவிட்டு மீண்டும் சமயலறைக்குள் புகுந்து கொண்டாள். அதற்கு மேல் இருவரும் எந்த வார்த்தையும் பேசிக்கொள்ள வில்லை.
ருத்ரா காபியை குடித்துவிட்டு ஆதினியுடன் சிறுது நேரம் விளையாடிவிட்டு அப்பாவும் மகளும் அறைக்கு சென்று வெளியே கிளம்ப தயாரானவன் ஆதினியையும் குளிக்க வைத்து அவன் அணிந்திருக்கும் உடையின் நிறத்திலேயே ஆதினிக்கும் உடையை அணிவித்து, அவளை தூக்கி கைகளில் வைத்துக்கொண்டு கண்ணாடி முன் நின்று இருவரும் தங்களை பார்க்க “ பர்ஃபெக்ட் “என்றான் ருத்ரா..
இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து கீழே வர மகிக்குத்தான் தனித்து விட்டப்பட்டார் போல் இருந்தது அப்பாவும் மகளும் கதையளந்துகொண்டு ஒன்றாக சுற்ற மகியை இருவருமே கண்டுகொள்ளவில்லை மகிக்கு தான் தன்னை கண்டுகொள்ளவில்லை என்று கோவமாக வந்தது

அப்பாவும் மகளும் சாப்பிட அமர ருத்ரா ஆதினியை தூக்கி மடியில் அமரவைத்து இட்லியை மகளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே அவனும் உண்டான் மகிக்கோ தன்னை கண்டுகொள்ளாமல் இருவரும் சாப்பிடுவதை பார்த்து மேலும் கோவமாக வர உதட்டை சுழித்தவள் அங்கிருந்து நகர முற்பட அவள் கையை பிடித்து நிறுத்திய ருத்ரா “உட்காரு “என்றான்
அவளோ ‘மாட்டேன்’ என்று வீம்பாக நிற்க, பிடித்திருந்த அவள் கையை ஒரு இழு இழுத்தான் அவள் தடுமாறி சேரில் பொத்தெனா விழுந்தாள்
“இதுக்குத்தான் சொன்னா கேக்கணும்னு சொல்றது “என்றவன் அவளுக்கு உணவை ஊட்ட ‘வேண்டாம்’ என்று அவள் முகத்தை திருப்பி கொள்ள அவளை முகத்தை திருப்பி அவள் தாடையை பிடித்து இட்லியை அவள் வாயில் திணித்தான் அவள் வேண்டாம் என்று எவ்வளவு மறுத்தும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவன் வேலையில் குறியாய் இருக்க அவளும் வேறு வழி இல்லாமல் அதை சாப்பிட்டாள் அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன் மீண்டும் இட்லியை பிட்டு ஊட்டிவிட அவள் எவ்வளவு தடுத்தும் புரோயோஜனம் இல்லாமல் போக அவன் ஊட்ட ஊட்ட அவள் அமைதியாக சாப்பிட்டாள்

அப்பாவும் மகளும் எங்கே கிளம்ப தயாராக இருக்க “மகி நாங்க வெளில போய்ட்டு வரோம் “என்றுவிட்டு ஆதினியை தூக்கி கொண்டு கிளம்பிவிட்டான் ருத்ரா, போகும் இருவரையும் வெறித்துகொண்டிருந்தவள் உதட்டை சுழித்துக்கொண்டு சமையலை கவனிக்க சென்றுவிட்டாள்

இங்கு வந்ததில் இருந்து பல குழப்பங்கள் அவளுள் ஓடிகொண்டிருக்கிறது , ஷாலினியை இவன் ஏன் திருமணம் செய்யவில்லை!?, அந்த வீட்டை விட்டு தங்களை ஏன் இங்கு அழைத்துவந்தான்! என பல சிந்தனையில் சுழன்றவள் அப்படியே சமையலை முடிக்க அதே நேரம் வெளியே சென்றிருந்த ருத்ராவும் ஆதினியும் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு விடு வந்து சேர்ந்தனர்.. ருத்ரா ஆதினிக்கு உடைகள்,பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் என ஒரு கடையையே காலிசெய்து வந்திருந்தான்.
வாங்கிய பொருட்களை எல்லாம் டெலிவரி செய்துவிட்டு கடைக்காரன் செல்ல,மகிக்கு அவைகளை எல்லாம் பார்ப்பதற்கே கண்ணை கட்டியது ஏன் இவ்வளவு என்றுதான் தோன்றியது “ஆதுமா என்ன பழக்கம் இதெல்லாம் வர வர நீ ரொம்ப கெட்டு போய்ட்டா ஆது, இப்படித்தான் பாக்குறதை எல்லாம் கேப்பியா “என்று கண்டிக்க, ஆதினி தன் அப்பாவை பார்த்தாள்

“அவளை ஏன் திட்டுற மகி நான்தான் என் பொண்ணுக்கு வாங்கினேன் அதுக்கு என்ன!? “என்று அவன் சொல்ல அவனை முறைத்தவள் “இதே போல அவ வளந்தா, எதுக்கெடுத்தாலும் கோவம் பட்டுக்கிட்டு, பொறுமை இல்லாத, பிடிவாதம் பிடிக்குற இன்னொரு ருத்ராவாதான் வளருவ”என்றாள் கோபமாக,
“என் பொண்ணு என்னை மாறித்தான் இருப்பா ”என்று அவன் சொல்லி முடிக்க,
“தேவ்!”என்றபடி உள்ளே நுழைந்தார் வேதவல்லி
வேதவல்லியை பார்த்து ருத்ரா எரிச்சலாகி, பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு நின்றிருக்க,மகியோ எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே நின்றிருந்தாள் வேதவல்லியை வா என்றும் அழைக்கவில்லை எதற்கு வந்தீங்க என்றும் கேட்கவில்லை அவர்களுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல் அவள் இருக்க,
உள்ளே வந்த வேதவல்லி மகியை பார்த்து முகம் மலர்ந்து “மகி”என்று அழைத்த படி அவள் அருகில் வர மகியோ எதையும் கண்டுகொள்ளாதது போலவே நின்றிருந்தாள் அவரால் அவள் அனுபவத்த காயங்கள் அவள் மனதில் இன்னும் ஆறாமல் வடுவாய் அப்படியே இருக்க அவளால் மட்டும் எப்படி அவரை மன்னிக்க இயலும்..

“என்னை மன்னிச்சுடுனு கேக்க கூட எனக்கு தகுதி இல்லனு தெரியும், நான் உனக்கு பண்ண கொடுமைக்கு எனக்கு மன்னிப்பே கிடையாதுனும் எனக்கு தெரியும் உன்னையும் தேவ்யையும் பிரிக்க எவ்வளவோ இடஞ்சல் பண்ணி இருக்கேன், என் தப்பை எல்லாம் உணர்ந்து இன்னைக்கி உன் முன்னாடி நிக்கிறேன் தயவு செய்து என்னை மன்னிக்க முயற்சி பண்ணும்மா “என்று வேதவல்லி அழ மகிக்கு மனம் தாங்க முடியவில்லை, வயதானவர் எப்படி தன்னிடம் மன்னிப்பை கேட்டு கதறுவதை பார்த்தவளுக்கு மனதில் அவர் மேல் இருந்த கோபம் அனைத்தும் மறந்து போனது..
“பழசை பேசி ஒன்னும் ஆக போறது இல்லை அத்தை, விடுங்க “என்று அவரை சமாதானம் செய்ய,

“இவங்களை யார் இங்க வர சொன்னது, இவங்களை வெளில போக சொல்லு மகி “என்று ருத்ரா கர்ஜித்தான் ,இந்த முறை அதிர்ந்தது என்னவோ மகிதான்
“நான் உனக்கு செஞ்ச பாவத்துக்கு தண்டனையா என் புள்ளை என்கிட்ட பேசி ஒரு வருஷம் ஆயிடுச்சி “என்று வேதவல்லி அழ மகிக்கு அதிர்ச்சிதான் அவர் சொன்னதை கேட்டு தேவ் அவங்க அம்மா கிட்ட பேசி ஒரு வருஷம் ஆகுதா என்று அதிர்ந்தவள் ருக்ராவை காண உண்மையிலேயே வேதவல்லியை நினைத்து கவலையாக இருந்தது

“அழுது ட்ராமா போடுற வேலைலாம் இங்க வேண்டாம், யாரும் அதை நம்ப தயாரா இல்லை “என்று ருத்ரா எரிச்சலாய் சொல்ல
“நீ என்னை மன்னிக்கலைன்னா கூட பரவால்லை தேவ் ஒரே ஒரு முறை பேத்தியை என்கிட்ட கொடு ஆசை தீர என் பேத்தியை கொஞ்சிட்டு தரேன் “என்று அந்த வயதானவர் கெஞ்ச அவன் மனம் இறக்கவே இல்லை, ருத்ரா குழந்தையை அவரிடம் கொடுக்கவே இல்லை
“மகி ப்ளீஸ் ஒரே ஒரு முறை மட்டும் என் பேத்தியை தூக்கி கொஞ்ச அனுமதி கொடு “என்று மகியிடம் வேதவல்லி கெஞ்ச,
வேதவல்லியின் கண்ணீரில் எந்த நாடகமோ சூழ்ச்சியோ இருப்பதாக மகிக்கு தோன்றவில்லை அவர் கண்களில் தெரிந்த ஏக்கம் மகியின் மனதை அசைக்க,ருத்ராவிடம் இருந்து ஆதினியை வாங்கி வேதவல்லியிடம் கொடுத்தாள் மகி..
“மகி!!”என்று ருத்ரா கோவமாய் பேச துடங்க
“உஸ்ஸ்ஸ்!!, சும்மா சும்மா கத்திகிட்டே இருக்காதீங்க மிஸ்டர், அவங்க பேத்தியை கொஞ்சவும், விளையாடவும் அவங்க யார்கிட்டயும் அனுமதி கேக்கவேண்டிய அவசியம் இல்லை “என்றாள்
“அத்தை நீங்க தூக்கிட்டு போங்க “என்று வேதவல்லியிடம் சொல்ல வேதவல்லிக்கு நிலைக்கொள்ளவில்லை.
தன் மகனின் வாரிசை கைகளில் ஏந்துகையில் சொல்லமுடியாத பல உணர்வுகள் அவருள், இதுதானே சந்தோஷம் இதை விட வேறு என்ன சொத்து வேண்டும் பிள்ளை சொத்தை விட பணம் பெரியது இல்லை என்பது இப்போதுதான் அவருக்கு புரிந்தது...
வாழ்வில் தன் எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என்று இப்போதுதான் அவர் உணர்ந்தார் பணம் பணம் என்று பெற்ற பிள்ளையை கூட சரியாக பார்த்துக்கொள்ளாமல் கட்டின கணவனையும் கவனிக்காமல் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் அந்த காலம் எல்லாம் மீண்டும் கேட்டாலும் கிடைக்காத பொக்கிஷங்கள் ஆயிற்றே என்று காலம் கடந்தே உணர்ந்தார் வேதவல்லி..

தன் மகனை அருகில் இருந்து பார்த்துக்கொள்ளமால் அவனுக்கு நல்லா தாயாய் இல்லாமல் போனதற்கெல்லாம் பிராயச்சித்தமாக தன் பேத்தியை அருகில் இருந்து வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் வேதவல்லி...
ஆதினியை கண்டதும் அவர் மனதில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் மறைய சிறு பிள்ளையாய் மாறி ஆதினியுடன் விளையாட துடக்கிவிட்டார் வேதவல்லி.

மாலை ருத்ரா மகியையும் ஆதினியையும் அழைத்துக்கொண்டு பீச்க்கு சென்று மகியுடனும் ஆதினியுடன் நேரம் செலவிட்டவன் அப்படியே ரெஸ்டாரெண்ட் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு விடு திரும்ப ஆதினி காரிலயே தூங்கிவிட்டிருந்தாள் ..

ஆதினியை தூக்கிவந்து பெடில் தூங்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறியவன் வெகு நேரம் ஆகியும் தூங்க வரவில்லை..மகியும் அவனுக்காக காத்திருந்து காத்திருந்து அதற்க்கு மேல் முடியாமல் அவர்கள் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறை கதவை தட்டினாள்
இவர்கள் இங்கு வந்ததில் இருந்து ருத்ரா ஆதினியுடன் செலவிடும் நேரம் போக மற்ற நேரங்கள் எல்லாம் அந்த அறையில் தான் இருக்கிறான் அதை மகி கவனிக்காமல் இல்லை ‘அப்படி அந்த ரூம்ல என்னதான் இருக்கு?,யாரையும் அந்த ரூம்ல வர விட மாட்றாரு!!,இவரும் எப்போ பாரு அங்கேயே கிடக்குறாரு,அப்படி என்னதான் பண்ணுறாரு!!? ‘என்று நினைத்தவள் அந்த அறை கதவை தட்ட ருத்ரவிடமிருந்து ஒரு பதிலும் இல்லை, மகி மீண்டும் கதவை தட்ட அவன் சட்டென கதவை திறந்து எரிச்சலுடன் “என்ன!? “என்றான்
‘உனக்காக தூங்காம வெயிட் பண்ணிட்டு இருக்கேன், இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ’என்று கேட்க நினைத்தவள் அவனிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக நின்றாள்
“இப்போ எதுக்கு இங்க வந்த “என்று மீண்டும் அவன் எரிந்து விழ, அவளோ அவனுக்கு பதில் சொல்லாமல் அந்த அறைக்குள் பார்வையை செலுத்தினாள் அதை கவனித்தவன் பாதி திறந்திருந்த கதவை சட்டென சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டான்
“இவனை தூங்க கூப்பிட வந்தா கதவை சாத்திட்டு போறான் “என்று அவனை திட்டிக்கொண்டே வந்தவள் அறைக்கு வந்து உறங்கிவிட்டாள்...
காலை மகி கண்விழிக்கும் போது ருத்ரா அங்குதான் படுத்திருந்தான் ‘எப்போ வந்து படுத்தான் ‘என்று யோசித்துக்கொண்டு எழுந்தவள் அறையை விட்டு வெளியேற அவள் கண்கள் தானாகவே நேற்று அவன் இருந்த அறையை நோட்டம் விட அந்த அறை பூட்டப்பட்டு இருந்தது
“ஏன் இந்த ரூம் மட்டும் எப்பவும் பூட்டியே இருக்கு “என்று யோசிக்க அதனுள் அப்படி என்னதான் இருக்கிறது அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவளுள் தோன்றியது ‘அப்படி அந்த ரூம்ல என்னதான் இருக்குனு இன்னைக்கு பாத்தே தீறனும்’ என்று நினைத்துக்கொண்டாள்

காலை உணவை தயார் செய்து முடித்தவள் கவனம் எல்லாம் அந்த அறையில் தான் இருந்தாது. ருத்ரா எழுந்து வெளியே வந்ததை சமையல் கட்டிலிருந்தே பார்த்தவள் அவன் கீழே வருவான் என்று நினைத்திருந்தாள் ஆனால் அவனோ பூட்டப்பட்டு இருந்த அறைக்கு செல்ல
“அப்படி என்னதான் இருக்கு அங்க எப்போ பாரு அங்கேயே கிடக்குறான் “என்று மூனுமுனுத்தவள் இன்னைக்கு பூட்டை உடைச்சவது உள்ள போய் பார்த்தே தீறனும் என்று முடிவு எடுத்து அவன் ஆபீஸ் கிளம்பும் வரை காத்திருந்தாள்..
புட்டிய அறைக்குள் சென்றவன் அரைமணி நேரம் கழித்து வெளிவந்தவன் அவன் அறைக்கு சென்று குளித்து ஆபீஸ் கிளம்பி கீழே வர அதற்குள் ஆதினியை குளிக்க வைத்து உடை மாற்றி சாப்பிட வைத்திருந்தாள் மகிழினி..
ருத்ரா ஆபீஸ் கிளம்பும் நேரம் வேதவல்லி வந்து தன் பேத்தியை அவர் வீட்டிற்கு அழைத்து செல்ல,ருத்ரவும் ஆபீஸ் கிளம்பினான்.
மகி மெதுவாக மாடிக்கு சென்று அந்த அறையை பார்க்க இப்போது அந்த அறை பூட்டாமல் இருக்க அதை பார்த்தவள் அதன் உள்ள செல்ல ஆர்வம் கொண்டாள்..
அந்த அறையின் வாசலில் நின்று அவள் உள்ளே எட்டிபாக்க “எதுக்கு வெளிலயே நின்னு பாத்துகிட்டு!!,உள்ள போயே பாக்கலாமே!! “என்ற கர்ஜிக்கும் குரலில் ருத்ரா சொல்ல, ஆபீஸ் சென்றுகொண்டிருந்தவன் முக்கியமான பைலை மறந்து விட அதை எடுக்க வீட்டிற்கு வந்தவன் மகி அந்த அறையை ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதை பார்த்து அவள் பின்னே வந்து நிற்க அதை கவனிக்காதாவள் அறையின் உள்ளே எட்டி பார்த்துக்கொண்டிருந்த மகி அவனின் குரலில் திடிக்கிட்டு திரும்பினாள்,
“அது!!..சும்மா என்ன இருக்குன்னு பாக்க வந்தேன்!!”என்று அவள் சொல்ல ருத்ராவோ அவளை உள்ளே தள்ளி தானும் உள்ளே சென்று கதவை தாழ் இட்டான்

அவளுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுக்க ‘அய்யோ மாட்டினோமா!!??, என்ன பண்ண போறானோ!!”என்று பயந்துகொண்டு அவள் அவனை பார்க்க அவனோ “இங்க என்ன இருக்குனு பாக்கத்தானே வந்த!!, ஹ்ம்ம்ம் வந்து பாரு “என்றவன் அவள் கைகளை பிடித்து இழுத்து சென்று அவளை உள்ளே தள்ள,அந்த அறையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் மகி.



❤️❤️❤️ ஹாய் டியர்ஸ்..கதையை படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை பதிவிடுங்கள் ❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/

 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 18


“நல்லா பாரு!!, உன்னோட சந்தேகம் தீர்ந்துடுச்சா இப்போ!!? “என்று அவன் கேட்க
“இது எல்லாம்!!!... “என்று அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் அவள் கேட்க
“நீயேதான் “என்றான் ருத்ரதேவ்
அவள் கண்கள் அகல விரிய அங்கிருந்த ஒவ்வொரு போட்டோகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள், அந்த அறை முழுவதும் மகிழினியின் போட்டோக்களும் அவள் சார்ந்த பொருட்கள் மட்டுமே இருக்க ‘இதெல்லாம் எப்படி இங்க!!!??”என்று தன் கண்களையே நம்ப முடியாமல் கேட்டாள்
அந்த அறையில் அவள் கண்ட முதல் படம் ருத்ராவின் மார்பில் வரைந்திருக்கும் டாட்டூ தான், பின்னப்பட்ட இடை வரை நீண்ட கூந்தலுடன் மகி திரும்பி பார்ப்பது படாமக்க பட்டிருந்தது “உங்க நெஞ்சில இருக்குறது நான்தானா!!?”என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்க,
“ஏழு வருஷத்துக்கு முன்னாடியே இதோ இங்க வந்துட்ட நீ!! “என்று இதயத்தை காட்டினான்
“உன்னை என்னைக்கு முதல் முதலா பார்த்தனோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் நீதான் என் பொண்டாட்டின்னு, உன்னை பாத்த அந்த நொடி என் வாழ்க்கைல மறக்க கூடாதுனும், நீ எப்பவும் என்னை விட்டு பிரியாம இருக்கணும்னு உன்னையே படமா என் நெஞ்சில வரஞ்சிட்டேன், ஆனா உனக்கு என் காதலை விட கிருஷ்ணா காதல் தான் பெரிசா போயிடுச்சி“என்றான் வேதனையுடன்
“என்ன ஒளர்றீங்க நான் எப்போ கிருஷ்ணாவை காதலிச்சேன்”என்றாள் மகி
“நீ கிருஷ்ணாவை லவ் பண்ணலையா!? “
“இல்லையே!”
“அப்புறம் எப்படி அவனை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்ன “
“நான் எங்க ஓகே சொன்னேன், எங்க அம்மா தான் கிருஷ்ணாவுக்கு என்னை கல்யாணம் பண்ணி தரேன்னு சொன்னாங்க. அதுவும் கிருஷ்ணா வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா சொன்னதுனால தான் சம்மதிச்சாங்க, நானும் வேற வழி இல்லாம அப்போதைக்கு சரினு சொன்னேன், கொஞ்ச நாள் கழிச்சி நானே கிருஷ்ணா கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னுதான் சொல்லி இருப்பேன் “என்றாள் வெகு சாதாரணமாக,
“நீயும் கிருஷ்ணவாயும் லவ் பண்ணுறிங்கனு தானே நினைச்சேன் “
“இல்லை தேவ் கிருஷ்ணா எனக்கு ஒரு நல்லா பிரண்ட் அவ்ளோதான்“என்று அவள் சொன்ன நொடி அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவள் தன்னை விரும்ப வில்லை என்று நினைத்து அவன் பட்ட வேதனைகளை அவனின் இந்த அணைப்பு அவளுக்கு புரியவைத்தது..

“ருத்ரா மகிழினியை முதல் முதலில் பார்த்தது கடற்கரையில் தான் அவள் தோழியுடன் மகிழினி கடல் அலைகளோடு விளையாடிகொண்டிருக்க மஞ்சு கரையில் அமர்ந்து இருக்க மஞ்சுவின் அழைப்பின் திரும்பியவளை, கடல் அலைகளை கேமராவில் போட்டோ எடுத்துகொண்டிருக்கும் போது எதிர்ச்சியாக தன் கேமராவில் போட்டோ எடுத்தான் அந்த நொடி அவனுள் நுழைந்தாள் மகி.

அவளை முதல் முதலில் கண்ட போது மனதில் அவள் மேல் ஈர்ப்பு கொண்டான் ருத்ரா. பேரழகிகளின் மேல் வராத ஈர்ப்பும் காதலும் மகிழினி மேல் அந்த எதிர்பாராத சிறு சந்திப்பிலேயே வந்தது.
மகியை பற்றி தெரித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவளை பின் பின்தொடர்ந்தவன் அவள் வீட்டை கண்டுபிடித்தான் அதன் பின் தினமும் அவளுக்கு தெரியாமலே அவளை பின் தொடர்ந்தவன் அவளை பற்றிய மற்ற விவரங்களையும் தெரிந்துகொண்டான்,
அவள் கல்லூரி முதல் ஆண்டு படித்துகொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தவன் தன் காதலை வெளிப்படுத்தி அவள் படிப்பு தானே கெடுத்துவிட கூடாது என நினைத்து அவள் படிப்பு முடியும் வரை தன் காதலை அவளிடம் வெளிப்படுத்திக்கூடாது என்றும் அவள் படிப்பு முடிந்த பிறகு நேரடியாக தன் காதலை திருமணத்தில் முடிவு செய்துவிடலாம் என்று முடிவு செய்தான்,அதன் படி தூரத்தில் இருந்தே அவளை காதலிக்க துடங்கினான் மூன்று வருடங்கள் அதே போல் காதலித்தவன் அவ்வபோது தூரத்தில் அவளின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துகொள்வான் அதன் பின் அதையே வழக்கமாக கொண்டான் ஒவ்வொரு போட்டோகளையும் தன் அறையில் மாட்டிவைத்து ஒவ்வொரு நிமிடமும் அவள் நினைவுகளுடன் வாழ்த்துகொண்டிருந்தான் ருத்ரா. இதை எல்லாம் அறியாதவளோ கல்லூரி படிப்பை முடிந்து வீட்டில் இருக்க அப்போது கிருஷ்ணா அவள் வீட்டிற்கு வந்து அவளை பெண் கேட்க மகியின் அம்மாவும் மகியை கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்..
மகியும் கிருஷ்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொள்ள போவதாக நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டவன் அது உண்மையா பொய்யா என்று எல்லாம் தெரிந்துகொள்ளாமல் அதை அப்படியே நம்பினான் அதனால் மகியின் மேல் அவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் வர, மகியிடம் இதுவரை தன் காதலை வெளிப்படுத்தாமல் இருந்தது தன் தவறு என்பதை மறந்து அவள் தான் தவறு செய்தாள் பணக்காரன் என்பதனால் தான் கிருஷ்ணாவை மகி காதலித்தாள், இப்போது திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்

மகிழினி அவன் கம்பனிக்கு இன்டெர்வியூ செல்ல அவளை காயப்படுத்த இதுதான்நல்லா சந்தர்ப்பம் என்று நினைத்தவன் அவளை உடனடியாக வேலைக்கு சேர்த்தான் அதன் பின் காரணமே இல்லாமல் அவளை காயப்படுத்தினான்..

“சாரி தேவ், நீங்க என்னை இவ்ளோ லவ் பண்ணி இருக்கீங்க நான் ஒரு லூசு அது கூட தெரிஞ்சிக்காம உங்களை சந்தேக பட்டு உங்களை விட்டு பிரிஞ்சு போய்... “என்று அவள் தழுதழுக்க
“என்மேலயும் தப்பு இருக்கு டி, என் காதலை உன்கிட்ட சொல்லி இருக்கணும் ஆனா உன்கிட்ட என் காதலை வெளிப்படுத்தாமலே நீ தான் தப்பு பண்ணினேன்னு நானா முடிவு பண்ணி,உன்னையும் புரிஞ்சிக்காம நிறைய கஷ்டப்படுத்திட்டேன், நான் என்னோட காதலை வார்த்தையால வெளிப்படுத்தலைனாலும் என்னோட ஒவ்வொரு செயலிலும் உன்மேல நான் வச்சிருக்க காதலால வெளிப்பட்டதுதான், உன் மேல வச்சிருக்க அளவுகதிகமான காதலால,எங்க நீ எங்க என்னைவிட்டு விலகிடுவியோன்னு பயந்து உன்கிட்ட ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், என்ன மன்னிச்சுடு டா “
“என்கூட வாழ்நாத அந்த ஒரு வருஷத்துல ஒரே ஒரு தடவ கூட நீ என்னோட காதலை பீல் பண்ணவே இல்லையா மகி!? “என்று இதுவரை தன் மனதை அரித்துகொண்டிருந்த கேள்வியை அவளிடம் கேட்டான் ருத்ரா
“ஒரு முறை இல்லை பல முறை உங்க காதலை பீல் பண்ணி இருக்கேன் தேவ் அதுதான் நான் உங்களை காதலிக்க காரணமான்னுலாம் தெரியலை, உங்களை எப்போ எங்கிருந்து காதலிக்க துடங்கினேன்னு எனக்கு இப்போ வரை தெரியலை ஆனா என் காதலை நான் உணர்ந்தது அன்னைக்கு நாம கார்ல போகும் போதுதான், அன்னைக்கு நான் சாப்பாடு பரிமாற வர மாட்டேன்னு சொன்னதுக்கு நீங்க கோவப்பட்டு ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டாலும் அன்னைக்கு உங்க காதலை நான் பீல் பண்ணேன், அதோட விளைவுதான் என்னையே அறியாமல் உங்களை கிஸ் பண்ணேன். அப்போதான் நான் உங்கள எந்த அளவுக்கு காதலிக்குறேன்னு புரிஞ்சிக்கிட்டேன் தேவ்,உங்க காதலை புரிஞ்சிக்கிட்டும் நான் உங்களை நம்பாம பிரிஞ்சி போய் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.
அன்னைக்கு ஷாலினி சொன்னதை நான் நம்பி இருக்க கூடாது தேவ், உங்ககிட்ட கேட்டு தெளிவு படுத்தி இருக்கணும், நான் பண்ண பெரிய தப்பு உங்ககிட்ட கேக்காம நானா முடிவு பண்ணதுதான் “என்று அவள் வருந்த,

“ஷாலினி என்ன சொன்ன மகி”
“நீங்களும் ஷாலினியும் காதலிக்குறதாவும் அவதான் நீங்க காதலிச்ச அம்முனும் அவளை தான் நீங்க டாட்டூவா உங்க நெஞ்சில வரைஞ்சி இருக்கீங்கன்னு சொன்னா, நான்தான் உங்க ரெண்டு பேரையும் பிரிச்சிட்டேன்னு சொன்னா அப்போ இருந்த சூழ்நிலைல அவ சொன்னதை நம்பிட்டேன், நீங்க என்ன விரும்பலைக்கிறதை என்னால தாங்கிக்க முடில தேவ் அதான் இங்க இருந்து போய்டணும்னு முடிவு பண்ணேன் அன்னைக்கு பெயின் வந்த அப்போ உங்களுக்கு பல முறை கால் பண்ணேன் ஆன நீங்க எடுக்கவே இல்லை”
“எனக்கு கால் பண்ணியா!!? “என்று அவன் கேட்க,
“ஹ்ம்ம்ம் நிறைய முறை பண்ணேன் “
“ஓஹோ ஷீட்!!!”என்றவன் “சாரி டா அன்னைக்கு நான் ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங்ல இருந்தேன் மீட்டிங் போகும் போது போனை மறந்து வச்சிட்டு போய்டேன் மீட்டிங் முடிச்சிட்டு வந்தப்போ ஷாலினிதான் என்னோட போனை வச்சிருந்தா, நான் செக் பண்ணப்போ எந்த காலும் வந்த மாதிரி காட்டலை டா, நீ போன் பண்ணது எனக்கு தெரியக்கூடாதுனு கால் ஹிஸ்டரில இருந்து உன்னோட போன் கால்ஸை டெலிட் பண்ணி இருக்கணும்”என்று அன்று நடத்தத்திற்கான விளக்கத்தை கொடுத்தான் ருத்ரா
“ஹ்ம்ம், ஆனா அப்போ இப்படியும் கூட நடத்து இருக்கலாம்னு எனக்கு யோசிக்க தோணலை தேவ் நீங்க வேணும்னே அவாய்ட் பண்ணுறீங்கனு நினைச்சேன், அன்னைக்கு என்னையும் நம்ம குழந்தையையும் காப்பாத்த கூட இங்க ஒருத்தரும் இல்லை!!, பாப்பாக்கு எதாவது ஆயிடுமோனு பயந்து நானே ஹாஸ்பிடல் போக முடிவு பண்ணி நடக்கும் போது பாதி வழிலயே மயக்கம் வந்து விழுந்துட்டேன் அப்போதான் லட்சுமி பாட்டியும் கணபதி தாத்தாவும் வந்து என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் பாப்பா பொறக்குற வரை கூடவே இருந்து என்னை பாத்துகிட்டங்க, அன்னைக்கு அவங்க ரெண்டு இல்லைனா நானும் பாப்பவும் என்ன ஆகிருப்போம்னே தெரில “என்றவள் கண்களில் கண்ணீர் வடிய அவள் கண்ணீரை தன் விரல் கொண்டு துடைத்தவன் “சாரி மகிம்மா நான் கொஞ்சம் கேர்ஃபுல்ல இருந்திருக்கணும் “என்று அவன் வருந்த,
“விடுங்க தேவ் பழசை நினைச்சி ஒன்னும் ஆக போது இல்லை இப்போதான் எல்லாம் சரி ஆயிடுச்சில சோ இனி பழசை பத்தி பேச வேண்டாம் “
“ஹ்ம்ம் “
“ஆமா தேவ் நானும் வந்ததுல இருந்து கேக்கணும்னு நினச்சேன் இந்த ஷாலினி எங்க? “
“எப்போ அவளும் அம்மாவும் சேர்ந்து உன்னை கஷ்ட படுத்தினாங்கனு தெரிஞ்சதோ அப்போவே அவளை உண்டு இல்லைனு பண்ணிட்டேன் அதான் விட்டா போதும்னு லண்டனுக்கே ஓடி போய்ட்டா “என்றவன்,அவளை அணைத்து கழுத்தில் முகம் புதைத்து கொண்டு அவன் தாடியை அவள் கழுத்தில் உரசி அவளுக்கு கூச செய்தான்
“ஹாஆஆ!!தேவ் கூசுது!!”என்றவள் கூச்சத்தில் நெளிய அவளிடம் விளையாடியவன் அவளை விட்டு விலகியவன்,அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்து “ஐ லவ் யூ டி, வில் யூ அக்செப்ட் மீ“என்று அவள் கையை தான் கைகளால் எந்தியப்படி அவன் கேட்க..
“ஹ்ம்ம்ம்...!!”என்று தலையாட்டியவள் “லவ் யூ சோ மச் தேவ் “என்றவள் அவனை அணைத்து அவன் இதழ்களில் தஞ்சம் புகுந்தாள்




❤️❤️❤️ நெஸ்ட் ஒரு குட்டி அப்டேட்டோட கதை முடிபிச்சிடும் டியர்..
கதை எப்படி இருந்துனு மறக்காம உங்க கருத்துக்களை பதிவிடுங்கள் உங்களோட ஒவ்வொரு கருத்துக்களும் எனக்கு மிக பெரிய பூஸ்டர் 😍😍😍❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 19


“மகி நான் சொல்ற அட்ரஸ்க்கு சீக்கிரம் வா “என்று ருத்ரதேவ் சொல்ல,
“என்னாச்சி தேவ் ஏன் இவ்ளோ டென்ஷனா பேசுறீங்க , இது என்ன அட்ரஸ்??, திடிர்னு அங்க எதுக்கு வர சொல்லுறீங்க?”என்று மகி கேள்வி மேல் கேள்வி கேட்க
“மகி சும்மா கேள்வி கேட்டு டென்ஷன் பண்ணாத சொன்ன அட்ரஸ்க்கு ஆதினியை கூட்டிகிட்டு சீக்கிரம் வந்து சேரு!, எனக்கு நிறைய ஒர்க் இருக்கு அப்புறம் பேசுறேன் “என்றவன் போனை கட் செய்துவிட மகிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
ருத்ரா சொன்ன அட்ரஸ்க்கு ஆதினியை அழைத்துக்கொண்டு மகி செல்ல, ருத்ரா சொன்ன அட்ரஸ்ஸில் ஒரு ஐந்து நட்சத்திரம் ஹோட்டல் தான் இருந்தது மகியும் ஆதினியை அழைத்துக்கொண்டு ஐந்து நட்சத்திரம் ஹோட்டலுக்குள் செல்ல, அங்கு கிருஷ்ணாவும் மஞ்சுவும் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தனர்.
மகிக்கு நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களை பார்த்ததில் அளவுகடந்த சந்தோசம் மகி அவர்களுக்கு அருகில் செல்ல கிருஷ்ணா மகியை கண்டதும் புன்னகையுடன் “வா மகி “என்று வரவேற்றவன் ஆதினியை தூக்கி மடியில் அமர்த்திகொண்டான்,மஞ்சுவோ மகியை திரும்பியும் பார்க்க வில்லை..
“ஏன் மஞ்சு என்கிட்ட பேச மாட்டியா டி “என்று மகி வாடிய முகத்தோடு கேட்க,
“கிருஷ்ணா இவங்க யாரு எதுக்காக என்கிட்ட பேசிட்டு இருக்காங்கனு கேளு “என்று மஞ்சு கிருஷ்ணாவிடம் சொல்ல
“உங்க கிட்ட கூட சொல்லாம கொள்ளாம நான் போனது ரொம்ப பெரிய தப்புதான் டி ப்ளிஸ் இனி அப்படிலாம் பண்ண மாட்டேன், இந்த ஒருமுறை மட்டும் என்னை மன்னிச்சுடு டி “என்று மகி கெஞ்சிகொண்டிருந்தாள் மஞ்சுவிடம்,இதற்கெல்லாம் மசிப்பவளா மஞ்சு
“கிருஷ்ணா இவங்க இதுக்கு என்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்காங்க, இவங்களை கிளம்ப சொல்லு “என்றாள் மஞ்சு, கிருஷ்ணாவோ இருவரையும் கண்டுகொள்ளாமல் ஆதினியுடன் கதையளக்க,
“ப்ளீஸ் மஞ்சு இனி அப்படி பண்ண மாட்டேன், என்கிட்ட பேசு “என்று மகி கண்கலங்க
“இப்போ எதுக்கு அழற “என்று மகியின் கண்ணிரை தங்கிக்கொள்ள மூடியாமல் அவளிடம் பேசிவிட்டாள்..
“ஏன் டி இப்படி பண்ண!?,அப்படி என்ன நடந்துடுச்சினு எங்க கிட்ட கூட சொல்லாம கொள்ளாம போன!!?, நானும் கிருஷ்ணாவும் உன்னை எங்கே எல்லாம் தேடினோம்னு தெரியுமா “என்றாள் மஞ்சு
“சாரி மஞ்சு, இனி அப்படிலாம் பண்ண மாட்டேன் டி “என்று நான் அன்று ருத்ராவை விட்டு சென்றதற்க்கான காரணத்தையும், ருத்ரா தன் மேல்கொண்ட காதலையும் மகி சொல்ல, மஞ்சுவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

“மஞ்சு, கிருஷ்ணா நீங்க ரெண்டும் பேரும் இங்க எதுக்கு வந்திங்க?”என்று தன் சந்தேகத்தை கேட்டாள் மகி
“ருத்ரா தான் கால் பண்ணி எங்க ரெண்டு பேரையும் வர சொன்னார் “
“ருத்ராவா!!??”
“ஆமா!!? “

“ஏன் உன் பிரண்ட்ஸ்ஸை நான் வர சொல்ல கூடாதா என்ன!!? “என்றபடி ருத்ரா அவர்கள் அருகில் வர
“அப்படிலாம் இல்லை தேவ், திடிர்னு எல்லாரையும் வர சொல்லி இருக்கீங்களே!?, அதான் “என்றாள் மகி ஆதினி தன் தந்தையை பார்த்ததும் அவனிடன் தாவி செல்ல, ஆதினியை தூக்கி கைகளில் வைத்துக்கொண்டு கிருஷ்ணா அருகில் அமர்ந்தான் ருத்ரதேவ்
“ஹாய் கிருஷ்ணா “என்று ருத்ரா சிநேகமாய் சிரிக்க
“ஹாய் ருத்ரா “என்றவன் தயங்கியப்படியே “அன்னைக்கு உன்கிட்ட ரொம்ப கோவமா பேசிட்டேன் சாரி “என்றான் கிருஷ்ணா
“மகி காணாம போன கோவத்துல தானே பேசினீங்க,நான் அதை அப்போவே மறந்துட்டேன் கிருஷ்ணா “என்றான் ருத்ரா
“அப்புறம் அடுத்து என்ன பிளான் “என்று ருத்ரா கேட்க,
கிருஷ்ணாவிற்கு ஒன்றும் புரியவில்லை “எதை பத்தி கேக்குறீங்க? “என்று கிருஷ்ணா கேட்க,
“எனக்கு சுத்தி வளைச்சிலாம் பேச தெரியாது நான் டிரெக்டா விஷயத்துக்கு வரேன் “என்று ருத்ரா சொல்ல கிருஷ்ணாவிற்கும் மகிக்கும் ஒன்றும் புரியவில்லை, மஞ்சுவோ நமட்டு சிரிப்புடன் தலைகுனிந்து அமர்ந்திருக்க,
“என் தங்கச்சி மஞ்சுவை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா!?”என்று பட்டென கேட்டுவிட்டான், கிருஷ்ணாவிற்குத்தான் ருத்ராவின் இந்த திடீர் கேள்வி மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது,ருத்ரா இப்படி கேட்பான் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை, மகியோ கண்கள் மின்ன அதீத மகிழ்ச்சியில் குதூகலித்தாள்

“சொல்லுங்க கிருஷ்ணா “என்றான் ருத்ரா, என்ன சொல்லுவான் அவன், மஞ்சு இல்லை எனில் அவனால் இப்போது மனிதனாக இருந்திருக்க முடியுமா!?, இந்நேரம் குடித்து குடித்து தன் வாழ்க்கையையே அழித்துக்கொண்டிருப்பேனே, மகியை பிரிந்த விரக்தியில் அவன் இருக்கும் போது ஒரு நல்லா தோழியாய் அவனை நல்வழி படுத்தி இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை இதற்கு பிறகுதான் உனக்கு வாழ்க்கையே இருக்கிறது என்று அவனை தேற்றி அன்பு காட்டி ஆதரவாய் அரவணைத்தவள் மஞ்சு

‘மஞ்சுவை விட ஒரு நல்லா பெண் உனக்கு மனைவியாக கிடைக்க மாட்டாள் ‘என்று அவன் மனம் தீர்க்கமாய் சொல்ல, கிருஷ்ணா மஞ்சுவை நோக்கினான் அவள் முகத்தில் இருந்த பூரிப்பை கண்டிவன் மன நிறைவுடன் ருத்ராவிடம் சம்மதம் என்றான்

உடனடியாக ருத்ரா சர்வரை அழைத்து எதையோ கொண்டுவர சொல்ல, அவனும் கொண்டுவந்து ருத்ராவிடம் கொடுத்தான். அதை வாங்கியவன் கிருஷ்ணாவிடமும் மஞ்சுவிடமும் இரு கவர்களை கொடுத்து “சீக்கிரம் ரெடியாகி வாங்க “என்றான்
இருவரும் புரியாமல் முழிக்க, “சீக்கிரம் போங்க “என்று இருவருக்குமான அறை எண்ணை சொல்லி அனுப்பி வைத்தான்
இருவரும் உடை மாற்றி தயாராக வர அங்கு கிருஷ்ணாவின் குடும்பமும் மஞ்சுவின் குடும்பமும் இவர்களுக்காக காத்திருந்தனர் இதை எல்லாம் அவர்கள் எதிர்பார்க்க வில்லை, மஞ்சுவும் கிருஷ்ணாவும் மாறி மாறி பார்க்க,
“எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை டா, நான் உன்னை லவ் பண்ணுறேன்னு மட்டும் தான் ருத்ரா அண்ணாகிட்ட சொன்னேன்,நம்ம ரெண்டு பேர் வீட்லயும் பேசி சம்மதம் வாங்கி இருக்கார் போல, இதெல்லாம் அவர் பிளான் “என்றாள் மஞ்சு, கிருஷ்ணா அவளை நம்பாமல் பார்க்க “டேய் நம்பு டா உண்மையைத்தான் சொல்லுறேன் “என்றவளை கிருஷ்ணா இடையோடு அணைத்தபடி அங்கு அழைத்து சென்றான்

“வாவ்!!, ரெண்டு பெரும் ரொம்ப அழகா இருக்கீங்க “என்று மகி இருவருக்கும் திருஷ்டி சுத்தினாள்
மஞ்சுவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இரு விட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது..ருத்ரா மகியையும் ஆதினியையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்று கடற்கரைக்கு பயணம் ஆனான் அந்த பௌர்ணமி இரவை ரசித்து அனுபவிக்க.

ருத்ரா கடற்கரை மணலில் அமர்ந்திருக்க ஆதினியை தன் மடியில் வைத்துக்கொண்டான், மகி அவன் அருகில் அமர்ந்து அவன் கையோடு தன் கையை பிணைத்துக்கொண்டு அவன் தோளில் தலை சாய்த்து அமர்த்திருந்தாள்..
மகியோ தன் கணவனை ஏறிட்டு பார்த்து “ஐ லவ் யூ தேவ்”என்றாள் மன நிறைவுடன், தன்னவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “லவ் யூ டூ டி “என்றவன் தன் மகளின் திரும்பி அவள் உச்சம் தலையில் முத்தமிட்டு, இருவரையும் தன்னோடு அணைத்துக்கொண்டான் பௌர்ணமி நிலவை போல் அவர்கள் வாழ்க்கையும் ஆதினி என்னும் தேவதையால் பிரகாசமானது.



🙏 முடிவுற்றது 🙏

❤️❤️❤️❤️கதை முடிவடைந்தது டியர்ஸ்.. இவ்ளோ நேரம் பொறுமையா இந்த கதையை படிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்.. உங்களோட ஒவ்வொரு விமர்சனமும் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது சோ ப்ளீஸ் விமர்சனங்களை மறக்காம பதிவிடுங்கள்...

கீழே கொடுத்திருக்க விமர்சனம் லிங்க்கை கிளிக் செய்து உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் ❤️❤️❤️


Thread '11. என்னை தீண்டும் உயிரே- நாவலுக்கான விமர்சனங்கள்' https://pommutamilnovels.com/index.php?threads/11-என்னை-தீண்டும்-உயிரே-நாவலுக்கான-விமர்சனங்கள்.1012/
 
Last edited:
Status
Not open for further replies.
Top