ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை தீண்டும் உயிரே -கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
உயிரே 10


ருத்ராவும் மகியிடம் பேச பல முயற்சிகளை செய்துவிட்டான் தான் செய்தது பெரும் தவறு என்று மன்னிப்பும் கேட்டு விட்டான் எது கேட்டாலும் “ஹ்ம்ம், சரி, இல்லை “என்று முடித்துகொள்பவளிடம் என்ன செய்ய முடியும் அவனால் “ஹ்ம்ம், சரி, இல்லை “என்பத்தை தவிர அதற்கு மேல் அதிகம் பேச மாட்டாள் அவனிடம் நாட்கள் இப்படியே நகர ஆபீஸ் கிளப்பியவள் வீட்டை விட்டு வெளியே வர திடீரென மயங்கி சரிய அவள் பின்னால் வந்தவன் அவள் கீழே விழாமல் தாங்கி பிடித்துக்கொண்டான்
“மகி என்னாச்சி கண்ணை திறந்து பாரு “என அவள் கன்னம் தட்ட அவளிடம் எந்த அசைவும் இல்லை அவன் மயங்கி கிடக்க மகிக்கு என்ன ஆனாது என்று புரியாமல் அவளை நெஞ்சோடு அணைத்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான் மருத்துவ மனையில் அவளை அனுமதித்து விட்டு பதற்றதோடு அவன் காத்திருக்க டாக்டர் அவனை உள்ளே அழைதார்
“டாக்டர் மகிக்கு என்னாச்சி “என்று அவன் பதற்றத்தோடு கேட்க டாக்டரோ அவனை பார்த்து புன்னகைக்க
“டாக்டர் நான் இங்க என்ன அச்சோ எது அச்சோனு பதறிட்டு இருக்கேன் நீங்க கூல்லா சிரிச்சிட்டு இருக்கிங்க”என்றான் எரிச்சலாய்
“கூல் மிஸ்டர் , எதுக்கு இவ்ளோ டென்ஷன் “
“டென்ஷன் ஆகாம எப்படி இருக்க முடியும்!?, என் பொண்டாட்டிக்கு என்னாச்சி ஏன் மயங்கி விழுந்தா!? “என்று அவன் பதற அவனருகில் வந்து அமர்ந்தாள் மகி,
“ஷி இஸ் பிரகனண்ட் “என்று மகியை பார்த்த படி டாக்டர் சொல்ல ருத்ரா ஒருகணம் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் சிலையாகி போனான்
“டாக்டர் உண்மையாவா!!??, நான் அப்பா ஆக போறேனா!?”என்று அவன் நம்ப முடியாமல் கேட்க அருகில் இருந்த மகியை திரும்பி பார்க்க அவளோ ஏற்கனவே தெரிந்ததுதானே என்ற தோரணையில் அமர்ந்திருந்தாள்
“எஸ் மிஸ்டர். ருத்ரதேவ் “என்றார் மருத்துவர்
“தேங்க்ஸ் அ லோட் டாக்டர்”என்றான்
“வெல்கம் மிஸ்டர். ருத்ரா “
“மூணு மாசம் அவங்களை ரொம்ப கவனமா பாத்துக்கணும் ஏற்கனவே அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க “என்று சில அறிவுரைகளை அவனுக்கு வழங்கிவிட்டு மகியிடம் திரும்பிய டாக்டர் “எழுதி குடுத்து இருக்க டேப்லெட்ஸ் எல்லாம் சரியா எடுத்துக்கோ மா அப்புறம் ஃபர்ஸ்ட் த்ரீ மன்ஸ் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் அதிகம் வைட் தூக்கக் கூடாது ரொம்ப ட்ரெயின் பண்ணி எந்த வேலையும் செய்யாதீங்க,“என்று டாக்டர் சில அறிவுரைகளை மகிழினிக்கும் சொல்ல அவர் சொல்லுவதற்கெல்லாம் சரி சரி என்று தலையாட்டி வைத்தாள்

ருத்ரா டாக்டரிடம் நன்றி தெரிவித்து விட்டு மகியை அழைத்துக்கொண்டு ஆபீஸ் சென்றான் “சோ உனக்கு முன்னாடியே தெரியும் அப்படித்தானே!!? “என்றான் கோபமாய், தன் சிசு உருவாக்கி இருப்பதை அவள் எப்படி தன்னிடம் மறைக்கலாம்!! என்ற கோவம் அவனுக்கு
“ஹ்ம்ம்ம் “என்றாள் மகி
“ஏன் என்கிட்ட சொல்லலை “என்றான் அடக்க பட்ட கோபத்துடன்
“கான்போர்ம் பண்ணிட்டு சொல்லலாம்னு நினைச்சேன்”என்றாள் அவனை பார்க்காமலே
“கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லலாம்னு நினைச்சியா!!?, இல்ல, குழந்தை இருந்தா சொல்லலாம்னு நினைச்சியா!!? “என்று அவன் கேட்க அவள் அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.அவளுக்கு முன்பே தெரியும் ஆனாலும் குழந்தையை சுமக்க அவள் விரும்பவில்லை ஆனால் அதை அழிக்கவும் அவள் நினைக்க வில்லை வளந்தால் வளரட்டும் இல்லை என்ற மனநிலை தான் அவளுக்கு..
இந்த உலகத்தில் தான் படும்பாடு போதும் இன்னொரு உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வந்து அதையும் வதைக்க அவள் விரும்ப வில்லை அதனாலேயே கரு தரித்ததை கூட கண்டும் காணாமல் இருந்தாள் இருந்தாள் இருக்கட்டும் போனால் போகட்டும் என்று தான் நினைத்தாள்

அவள் தாடையை அழுத்தமாக பிடித்தவன் “இங்க பார் என் குழந்தைக்கு எதாவது ஆச்சு அப்புறம் நான் மனிஷனாவே இருக்க மாட்டேன் நீயும் உயிரோட இருக்க மாட்டா “என்று அவன் கர்ஜிக்க அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்துக்கொண்டது..
“எனக்கு என் குழந்தை வேணும் என் குழந்தையை ஒழுங்கா பெத்து கொடுக்குறது மட்டும் தான் இனி உனக்கு வேலை “என்றான்
“இனி நீ ஆபீஸ் வர வேண்டாம்”என்று அவளுக்கு கட்டளை இட
“இல்ல நான் ஆபீஸ் வரேன் “என்றாள் அவசரமாக, அவளை முறைத்தவன் ஆபீஸ் வர கூடாதுனா வரக்கூடாது தான் “என்று சீற
“ப்ளீஸ் சார், இந்த சேலரி வச்சுத்தான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணுறேன்”என்று தன்னிலையை சொல்ல நெற்றியை நிவியவன் “வீட்ல இருந்தே ஒர்க் பண்ணு “என்றான் அவளும் சரி என்றாள்

வீட்டில் அணைத்து வேலைகளையும் செய்ய வேலையட்களை சேர்த்திருந்தான்..
மகி, சமைக்க கூடாது வீட்டில் எந்த வேலையும் செய்யக்கூடாதுனு என்று கட்டளையிட்ருந்தான் அவனின் கட்டளை படி அவளும் அவன் சொல்வதை மட்டும் கேட்டு நடந்தாள்..
அவளை தன் கண் எதிரே வைத்துக்கொண்டான் உண்ணும் உணவு முதல் தூங்கும் நேரம் வரை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தான் அவள் வயிற்றில் வளரும் குழந்தை மேல் அவன் காட்டும் அக்கறையை கண்டு அவள் நெகிழ்ந்தாலும் அது தன் மீதானா அக்கறை இல்லை என்ற வடு அவள் மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது.

மகிழினி சப்பாத்தி செய்வதற்கு மேலே இருந்த மாவு டப்பாவை எட்டி எடுக்க அது அவள் கைக்கு எட்டாமால் போக அங்கிருந்த ஸ்டூலை எடுத்து போட்டு அதன் மேல் ஏறி நின்று மாவு டப்பாவை எடுத்தவள் கண்கள் இருட்டி, தலை சுற்ற கீழே இறக்க முடியாமல் தடுமாறி கீழே விழ போனவளை ருத்ரா தன் கைகளில் தாங்கிக் கொண்டான்..
அங்கிருந்த மேடையில் அவளை அமர வைத்தவன் அவளுக்கு தண்ணீரை புகட்டி விட்டு அவள் முகத்தை தண்ணீர் கொண்டு துடைத்துவிட்டான்
“நீ என்ன லூசா டி “கோபமாய் கத்த
“ சாரீ சார் “ என்று பாவமாய் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்
“உன் சாரியை தூக்கிட்டு போய் குப்பையில் போடு கீழ விழுந்து ஏதாவது ஆகியிருந்தால் என்ன பண்றது “என்று கோபம் குறையாமல் கத்தினான் அவள் வயிற்றில் வளர்வது அவன் உயிராயிற்றே அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு அவளின் சிறு தவறு குழந்தையை பாதித்து விடுமோ என்று பயந்து அவளை எப்போதும் தன் கண் பார்வையிலேயே வைத்திருக்கிறான் அப்படி இருந்தும் அவள் பொறுப்பு இல்லாமல் இருப்பது அவனுக்கு எரிச்சலையும் பயத்தையும் கொடுத்தது
“மாவு டப்பா கைக்கு எட்டலை அதான் ஸ்டூல் போட்டு ஏறி நின்னு எடுக்க பார்த்தேன் திடீரென கண்ணெல்லாம் இருட்டிடுச்சி”
“இந்த வேலையெல்லாம் நீ செய்யக் கூடாதுனு ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன் இல்ல!!, எதுக்கு இந்த வேலையெல்லாம் நீ செய்கிற “என்று கர்ஜித்தான்
“ பசிச்சுது அதான் சப்பாத்தி செஞ்சு சாப்பிடலாம்னு மாவு டப்பாவை எடுக்க போய்... “என்று அவள் இழுக்க
“வீட்லதான் அத்தனை வேலைகாரங்க இருக்காங்கல்ல யார்கிட்டயாது சொல்லி இருந்தா அவங்க செஞ்சு கொடுத்திருக்க போறாங்க உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை எல்லாம் “
“சாரி சார்,இனி செய்யலை “என்றாள் வாடிய முகத்துடன்
“இப்போ எதுக்கு மூஞ்சை உம்முனு வச்சிருக்க, என்னை பாரு டி “என்றவன் அவள் தாடையை பிடித்து தூக்கி தன்னை நோக்க வைத்தான்
“டாக்டர் உன்ன ரொம்ப கேர்ஃபுல்லாக இருக்க சொல்லிருக்காங்க அதை எப்பவும் நினைவுல வச்சிக்கோ,இப்போ நீ ஒரு ஆள் இல்லை உன் வைத்துக்குள்ள நம்ம பாப்பாவும் இருக்கு அதை மறந்துடாத, இதுபோல கேயர்லெஸ்ஸா இருக்காத “என்றான் கண்டிப்பான குரலில்
“ஹ்ம்ம்ம், இனிமேல் கேர்ஃபுல்லா இருக்கேன் “என்றாள்
“ஹ்ம்ம் குட் “என்றவன் அவள் வயிற்று அருகே குனிந்து “என் செல்லத்துக்கு பசிக்குதா டா குட்டி அப்பா உங்களுக்கு சமைச்சி தரட்டுமா.. நீங்க சமத்தா சாப்பிட்டு பத்திரமா அம்மா வயித்துலயே இருக்கணும் சரியா “என்று அவள் வயிற்றில் இருக்கும் உருவம் கூட வராதா தன் குழந்தையிடன் பேசியவன் புடவையை விலகி அவள் வயிற்றில் முத்தமிட்டான் அவன் பிள்ளையிடம் அவன் காட்டும் அன்பும் அக்கறையும் கண்டு அவளுக்கு பொறாமையாக இருந்தது

“நீங்க சமைக்க போறிங்களா? “
“ஹ்ம்ம், ஆமா “
“உங்களுக்கு சமைக்க தெரியுமா? “
“தெரியும் “
“உண்மையாவா!!? “என்று அவள் ஆர்வமாக கேட்க
“ஆமா டி “என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் ருத்ரா
“என்னங்க நானே சமைக்குறேன், நீங்க உட்காருங்க “என்று அவள் சொல்ல
“நோ, நீ அமைதியா அங்கே உட்காரு “என்று அவளுக்கு கட்டளையிட அவளும் அப்படியே உட்கார்ந்துகொண்டாள்

ருத்ரா சப்பாத்திக்கு மாவை தண்ணீர் ஊற்றி பக்குவமாக பிசைந்து அதை உருண்டை உருட்டி முடி வைத்தவன் குருமா செய்வதற்கு காய்கறிகளை நறுக்க தொடங்கினான், கட் செய்த இரு காரட் தூண்டுகளை அவன் சாப்பிட்டுக்கொண்டே அவள் வாயில் இரு காரட் தூண்டுகளை வைத்தான் அவன் குடுத்ததை சாப்பிடவள் அவனை ரசித்து கொண்டு அமர்ந்திருந்தாள்

அவனோ மும்பராமாக சமையலில் ஈடுபட்டிருக்க காய்கறிகளையும் கட் பண்ணி வைத்துவிட்டு குருமா செய்ய துடங்கினான் அவளோ “ஹா” வேன அவன் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தாள் குருமாவை செய்து வைத்தவன் கரண்டியில் குருமாவை எடுத்து அதன் சூடு ஊதி ஆத்தியவன் ருசி பார்க்க அவள் கையில் வைத்தான் அதை நாக்கில் வைத்து ருசி பார்த்தவள் கண்கள் அகல விரிய “செமயா இருக்கு, காரம் உப்பு எல்லாம் சரியா இருக்குங்க “என்று சொன்னாள்
உருட்டி வைத்த மாவை திரட்டி தோசை கல்லில் போட்டு எடுத்தான் அவளோ சாப்பிட ஆர்வமாக உட்கார்ந்திருக்க தட்டில் இரு சப்பாத்தியை வைத்து குருமாவை ஊற்றி அவள் நீட்ட சாப்பிடும் ஆர்வத்தில் சூட்டை கூட பொருட்படுத்தாமல் அதை எடுத்து வாயில் வைக்க சுடு தாங்காமல் “ உப் .. உப் .. “என்று கையை அட்டியப்படி சூடு தாங்காமல் ஊதி கொண்டிருந்தவள் குனிந்து அவள் முகத்துக்கு அருகில் தன் முகம் வைத்து அவன் உதடு கொண்டு அவள் உதட்டை ஊதினான் அவளோ தன்னவன் அருமையில் உணவின் சூட்டயும் மறந்து அவனை ரசித்து அவன் ஸ்பரிசத்தில் கிறங்கி போக அவனோ நமட்டு சிரிப்புடன் அவள் இதழை அவன் இதழ் கொண்டு மூட அவள் கைகளை மாலையக்கி அவன் கழுத்தை சுற்றிக்கொண்டு கண்கள் முடி அவன் முத்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவனோ அவள் உதட்டை கவ்வி இம்சை செய்கொண்டே அவள் வாயில் வைத்திருந்த சப்பாத்தியை அவன் வாயிற்கு மாற்றி இருந்தான் அதை எல்லாம் உணரும் நிலையில் அவள் இருந்தால் தானே அவளுக்கு உணவு இடம் மாறியது கூடத்தெரியாமல் அவனின் அருகமையில் மயக்கத்தில் இருந்தாள்..
சிறிது நேரம் கழித்து விலக்கியவன் அவளை பார்க்க அவளோ அதே நிலையில் தான் இருந்தாள் அவள் காது மாடலை உதட்டினால் உரசியப்படி மோக குரலில் “சாப்பிட்டு போய் மிதி கிஸ்சை கன்டினியூ பண்ணலாம் டி “என்றான் அவன் குரலில் மயக்கம் கலைந்து நிகழ்விற்கு வந்தவள் அவன் முகம் பார்க்க கூட முடியாமல் சிவந்து போனாள்..

தட்டில் இருந்த சப்பாத்தியை பிய்த்து அவன் வாய் அருகே கொண்டு போய் ஊதி அவளுக்கு ஊட்டினான் அதான் ருசியில் கண்களை விரித்து ரசித்து சாப்பிடவள் “வாவ், செம டேஸ்ட் “என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் உட்டுவதற்கு ஆஆ என்று வாயை திறந்து காட்ட அவனும் அவளுக்கு ஊட்டிவிட்டான் அவள் சாப்பிடும் வரை காத்திருந்தவன் அவளை தூக்கிக்கொண்டு கிச்சனில் பாதியில் விட்டதை தொடர அறைக்கு சென்றுவிட்டான் போகும் போதும் அவள் காதில் அவன் சொன்ன வார்த்தைகளில் பெண்ணவள் “ச்சீ..!!”என்று முகம் சிவந்து போனாள் அதை ரசித்தவன் இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை கொடுக்க மகி சீனுங்கிக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள்..



Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 11


நாட்கள் இப்படியே நகர மேடிட்ட வயிற்றுடன் மகிழினி சும்மா இல்லாமல் வேண்டுமென்றே இங்கும் அங்கும் நடந்து கொண்டு எதாவது வேலையை செய்து கொண்டிருக்க ருத்ரா லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இவள் செய்வதை எல்லாம் கவனித்து கொண்டிருந்தான் அவள் செயலை பார்த்து சிரிப்புதான் வந்தது அவனுக்கு ஒரு ஐஸ் கிரீம்காக எவ்ளோ வேலை காட்டுற என்று நினைத்தவன் “இப்போ எதுக்கு இங்க அங்கனு நடந்துகிட்டு இருக்க “
“நான் என்னவோ பண்றேன் உங்களுக்கு என்ன? “என்றவள் மீண்டும் அதையே செய்ய
“ஒழுங்கா ஒரு இடத்துல உக்காரு டி “என்று ருத்ரா அதட்ட
“முடியாது “என்றவள் உதட்டை சுழித்து காட்ட
“நீ என்ன பண்ணாலும் நோனா நோ தான் “
“ஒரு ஐஸ் கிரீம் தானே கேட்டேன் என்னவோ உங்க சொத்தையா கேட்டேன் ”
“இப்போதான் பீவர் வந்து சரி ஆச்சு ஐஸ் கிரீம் சாப்பிட்ட உடனே திரும்ப பீவர் வரும் “
“அதெல்லாம் ஒன்னும் வராது “
“ஏன் டி இப்படி இம்சை பண்ணுற, ஒழுங்கா ரெஸ்ட் எடு “என்று அவன் சொல்ல அவள் முகத்தை திருப்பி கொண்டு போய் அமந்துவிட்டாள்
‘இப்படி மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டே காரியத்தை சாதிச்சுகிறா ‘என்று நினைத்தவன் பிரிட்ஜில இருந்து ஐஸ் கிரீம் எடுத்து வந்து அவளிடம் நீட்டினான் கண்கள் மின்ன அதை வாங்கியவள் ஐஸ் கிரீமை சாப்பிட,
அவள் அருகில் அமர்ந்தவன் “இண்ணைக்கு ஒண்ணுதான் இதுக்கு மேல நோ ஐஸ் கிரீம் “என்று சொல்ல அவளோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “இன்னும் ஒன்னே ஒன்னு “என்றாள்
“அடி வாங்குவ மகி,ஒரு நாளைக்கு ஒண்ணுதான் “என்றவன் அவள் உதட்டின் மேல் மீசை போல் இருந்த ஐஸ் கிரீம் கண்டு சிரித்தவன் அவள் அருகில் சென்று அவள் உதட்டை மென்மையாய் பற்றி ருசித்தான் அவனின் திடீர் முத்தத்தில் அவனிடம் இருந்து விலக அவனோ அவளை மேலும் நெருக்கி கொண்டவன் அவன் தேவையை தீர்த்துக்கொண்டே அவளிடமிருந்து விலகினான்
“நைஸ் டேஸ்ட் “என்றவன் அவள் இதழ்களில் பார்வையை பதிக்க மகியோ அவனை முறைத்தாள்
“ஏன் டி முறைக்குற? “
“ஹா நீங்க பண்ண வேலைக்கு முறைக்காம வேற என்ன பண்ணுவாங்க, ஹால்ல உட்கார்ந்து செய்ற வேலையா இதெல்லாம் “என்று முறைக்க
“அப்போ பெட்ரூம்ல போய் செய்யலாமா டி “என்று கண்கள் மின்ன கேட்க
“ஒழுங்கா போய் வேலையை பாருங்க “என்றவள் எழ போக அவளை அப்படியே தூக்கியவன் மாடிக்கு சென்றான் “ஒழுங்கா வந்து கொஞ்ச நேரம் தூங்கு டி “என்றவன் அவளை தூக்கிக்கொண்டு பெட்டில் படுக்க வைத்தான்

வெளியே சென்றிருந்த ஷாலினி வீட்டிற்கு வர,கணவன் மனைவி இருவரும் கொஞ்சி குளாவியதை பார்த்தவள் வயிறு பற்றி எரிந்துகொண்டிருந்தது “உன்னை சந்தோசமா இருக்க விட மாட்டேன் டி ருத்ரா எனக்கு சொந்தமானவன் அவனை உனக்கு விட்டு குடுக்க மாட்டேன் “என்று ஷாலினி கருவினாள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் மகிழினியை காயப்படுத்தினாள்

இரவு மகி சாப்பிட்டு அறைக்கு செல்ல எத்தனிக்க ஷாலினியின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது
“என்ன மகி முன்ன விட ஒருசுத்து ஏரிட்ட போல எல்லாம் எங்க அத்தை விட்டு சாப்பாடு செய்ற மாயம் “என்று ஷாலினி நக்கலாய் சொல்ல
“அப்படி எல்லாம் இல்லை நான் எப்போவும் போலதான் இருக்கேன்”
“என்னடி ருத்ரா உன்மேல காட்டுற அக்கறையை காதல்னு நினைச்சி வானத்துல மிதந்து கிட்டு இருக்க போல , ருத்ரா உன் மேல காட்டுற அக்கறையும் பாசமும் உன் மேல இருக்க பரிதாபத்தாலையும் அவன் குழந்தையை வயித்துல சுமக்குறக்குறதுனாலயும் மட்டும் தான்,அதை காதல்னு முட்டாள் தனமா நினைச்சிக்காத!!, ருத்ராவோட காதல் எப்பவும் எனக்கே எனக்கானது மட்டும்தான், ருத்ரா என்னதான் உயிர்க்குயிராய் காதலிக்கிறான் அவன் மனசுல அம்முவா எப்பவும் நான் தான் இருக்கிறேன் “ என்று ஷாலினி சொல்ல மகி அதை நம்பாமல் அவளை பார்க்க
“இப்போ நான் சொல்றது மேல உனக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே, நீ நம்புற மாதிரி இன்னொரு விஷயத்தை சொல்றேன் ,எங்க காதலுக்கு அடையாளமா ருத்ராவோட நெஞ்சில என் உருவத்தை தான் டாட்டூ வரைந்து இருக்கான், நம்பலைனா அவன்கிட்டயே போய் கேளு “என்றாள்
ஷாலினி சொல்வது உண்மையா பொய்யா என்று கூட அவளால் நம்ப முடியவில்லை கணவன் மனைவி உறவில் முன்பெல்லாம் அவனை காண பயந்து இமைகளை முடி கொண்டவள் பின் அவனுடன் காதல் வயப்பட்டு வெட்கத்தில் பெண்ணவள் நாணம் கொண்டு கண்களை முடிகொள்வாள் அவனும் அவள் போக்கிலேயே விட்டுவிடுவான்

முன்பு ருத்ரா வார்த்தைகளால் அவளை காயப்படுத்தி கொண்டே இருந்தான், அவள் கரு தரித்த பின் அவள் மேல் அளவில்லா காதலையும் அன்பையும் அக்கறையும் அவன் காட்டினாலும்,இருடல் ஒருயிராக சேர்ந்திருந்தாலும் மனதால் முழுவதுமாக இணையாமல் சிறு விலகல் இருந்துகொண்டேதான் இருந்தது அதற்க்கு காரணமும் குடித்துவிட்டு”என் அம்முவை ஏண்டி என்கிட்ட இருந்து பிரிச்சா, நீ துரோகி டி “என்று சில முறை அவன் அவளிடம் சொன்னதின் விளைவுதான் “யார் அந்த அம்மு அவர் அவளை இந்த அளவிற்கு காதலித்து இருக்க ஏன் தன்னை மணந்தார் “என்று அவளும் எப்போதும் இந்த கேள்வி இருந்துகொண்டே இருக்கும் அவனிடம் இதைப் பற்றி அவள் விசாரிக்கவும் இல்லை... அவள் மேல் அவன் காட்டும் அன்பும் அக்கறையும் அவளை வாயடைக்க செய்தது, அதற்க்கு மேல் அவனிடம் கேட்க பயம் அவளுக்கு...

தன் கணவனை தானே பார்த்திறாது இருக்க, இவள் அவன் உடலில் உள்ள டாட்டூவை இப்படி பார்த்தாள் ஒரு வேலை இவள் சொல்வது உண்மையா?? இவள் தான் அம்முவா??, இவளைத்தான் காதலித்தாரா??, நான் தான் இவர்களுக்கு இடையில் தேவை இல்லாமல் நுழைந்து இவர்களின் காதலை பிரித்து விட்டேனா!!??, என்று அவள் திருமணத்திற்கு ருத்ரா தான் காரணம் என்பதை மறந்து ருத்ரா ஷாலினியை காதலித்தார் என்று ஷாலினி சொன்னதை நம்பி கலங்க துவங்கிவிட்டாள்

அவளால் அவனை விட்டு விலகுவதும் என்பது முடியாத காரியம் அவன் மேல் உயிராய் இருப்பவள் அவனைவிட்டு எவ்வாறு விலக முடியும் , தன்னவன் தனக்கு மட்டும் சொந்தமானவன். அவன் தனக்கு மட்டுமே உரியவன் என்று அவள் மனம் கதற ஷாலினிக்கும் முன் அழக்கூடாது என்று கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தாள்

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் மாடிக்குச் சென்று அவள் சொன்னது உண்மையாக இருக்கக்கூடாது என்று தனக்குத்தானே பிதற்றிக் கொண்டு அழுது கரைந்தாள் ருத்ரா அறைக்கு வரும் ஆரவாரம் கேட்டு கண்களைத் துடைத்தவள் அவள் மார்பில் ஷாலினி சொன்ன டாட்டூ இருக்கிறதா?? என்று இன்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தாள்..
வழக்கம் போல் அறைக்கு வந்த ருத்ரா பின்னிருந்த படியே அவளை அணைக்க அவள் கவனம் முழுவதும் ஷாலினி சொன்னதில் தான் இருந்தது
அவன் அவளை திருப்பி அவள் இதழ்களில் முத்தமிட அவ்ளோ அவன் மார்பில் பார்வை பதித்தாள் அவளோ அவளை மென்மையாய் அணைக்க அவள் ஒன்பது மாத மேடிட்ட வயிறு அவன் வயிற்றில் மோதி தன் இருப்பை காட்டியது..
“என்னடி தூங்கலையா? “
“கால் வலிக்குது,தூக்கம் வரலை “என்றாள்
“சரி வா படு நான் கால் பிடிச்சி விடுறேன் “என்றவன் அவளை பெட்டில் படுக்க வைத்து அவள் கால்களை பிடித்து விட அவளுக்கோ எப்படி அவன் நெஞ்சில் இருக்கும் டாட்டூவை பார்ப்பது என்று சிந்தனையில் இருந்தாள்..

அவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட அவன் ஷார்ட்டை பிடித்து இழுந்தவள் அவன் ஷர்ட் பட்டனை கழட்ட துடங்க
“என்ன மேடம் சம ரொமாண்டிக் மூட்ல இருக்கீங்க போல “என்று அவன் அவளுக்கு ஒத்துழைக்க அவள் ஷார்ட்டை கழட்டிவிட்டு அவன் மார்பை பார்த்தவள் கண்கள் கலங்கியது ஷாலினி சொன்னது போல் அவன் இடப்பக்கம் மார்பில் ஒரு பெண்ணின் உருவத்தை டாட்டூ போட்டிருந்தான் அப்பெண்ணின் இடைவரை நீண்டு பின்னிய கூந்தல் அவள் திரும்பி பார்ப்பது போல் அந்த டாட்டூ இருக்க அதை பார்த்தவள் கண்கள் கரித்து கொண்டு கண்ணீர் வர அவன் பார்க்காத வண்ணம் கண்ணீரை துடைத்தவள் மனம் அவனுடன் முன்பு போல் ஓட்டவில்லை

‘அவன் மனதில் அம்முதான் இருக்கிறாள் அவனுக்கு தன் மீது காதல் இல்லை அவன் குழந்தையை சுமப்பதினால் காட்டும் அக்கறை குழந்தை பிறந்ததும் தன் நிலை பழையபடித்தான் ஆகும், அவர் அழகும் தகுதிக்கும் உன்னை போய் காதலிக்குறாருனு பைத்தியம் மாதிரி நீயா நினைச்சு கற்பனை பண்ணிகிட்டயே தவிர அவர் என்னைக்குமே உன்னை விரும்புறத சொல்லலையே அப்போ ஷாலினி சொன்னதுதான் உண்மை’ என்று எதற்கும் எதற்க்கோ முடிச்சி போட்டது அவள் மனம்..

அவனோ அவனை அணைத்துக்கொண்டு படுத்தவன் களைப்பில் அப்படியே உறங்கிவிட்டான் அவனிடம் காதல் இல்லாது அனைப்பை கூட அவளால் ஏற்க முடியவில்லை பஞ்சி மெத்தை கூட முள்ளை போல் குத்தியது அதற்க்கு மேல் அங்கு படுக்க முடியாமல் அவள் பெடில் இருந்து இறங்கி தரையின் சுருண்டு படுத்துக்கொண்டாள் அந்த இரவு முழுவதும் அழுகையிலேயே கரைய அவளுக்கு அவ்விரவு தூங்க இரவானது..

அழுத்துக்கொண்டே படுத்திருந்தவள் அழுது அழுது அப்படியே தூங்கிப்போனாள் துக்கத்தில் ருத்ரா மகியை தேட அவள் படுத்திருந்த இடம் வெறுமையாய் இருந்ததை உணர்ந்தவன் சட்டென உறக்கம் கலைந்து அவள் படுத்திருந்த இடத்தை பார்க்க அங்கு அவள் இல்லை
அவள் பெட்டியில் இல்லாதது கண்டு பதறிப் போனான் முற்றிலும் தூக்கம் கலைந்து அவள் எங்கே என்று தேட அவன் கண்கள் ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது கீழே தரையில் சுருண்டு படுத்திருந்தவளை பார்க்க மனம் வலித்தது அவனுக்கு “என்னாச்சி ஏன் கீழ அதும் தரையில படுக்கணும் “என்று நினைத்தவன் அவள் அருகில் சென்று அமர அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரின் ஈரம் கண்டவனுக்கு குழப்பமா இருந்தது ‘இவ்வளவு நேரம் அழுது கொண்டிருக்கிறாள்,இப்போதுதான் தூங்கி இருக்கிறாள்.. ஏன் இந்த அழுகை?, ஏன் இந்த வேதனை??, ஏன் இந்த ஒதுக்கம்?’என்று மட்டும் அவனுக்கு புரியவில்லை அவளை தூக்கி பெடில் படுக்க வைத்தவன் உறக்கம் துலைத்து போனது “ஏன்?? ஏன்??”என்ற கேள்வி அவனை குடைய அதற்க்கு பதில் சொல்லவேண்டியவளோ ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாள்

காலை எழுந்தவன் அவளை கவனிக்க அவளிடம் என்றும் இல்லாத ஒதுக்கம் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது அவனிடம் இருந்து மனதளவில் அவள் விலகி இருந்தாள் அதற்க்கு காரணம் அவன் மீது அவள் வைத்திருக்கும் காதல் மட்டுமே அதை அறியாதவன் அவளின் விலகலுக்கான காரணம் புரியாமல் தவித்தான் அவளின் மன அழுத்தம் குழந்தையை பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்தவன் “என்னாச்சி??, ஏன் ஒரு மாதிரி இருக்க மகிம்மா? “என்று ருத்ரா பலமுறை கேட்டபோதும் அவளிடம் இருந்து சரியான பதில் வரவில்லை என்ன கேட்டாலும் மழுப்பலான பதில்தான் சொன்னாள் மகி.. பிரசவ காலத்தில் பெண்களுக்கு வரும் பயம் என்று நினைத்துக்கொண்டான் ருத்ரா..

நாட்கள் இப்படியே நகர இன்னும் ஒருவாரம் பிரசவம் என்றிருக்க அன்று காலை சாப்பிட வந்தவளுக்கு ஷாலினியும் வேதவல்லியும் பேசிக்கொண்டது காதில் விழும்படி ஆனாது..
“அத்தை இந்த மகி ருத்ரா கூட காலம் பூற ஒட்டிப்பா போல “என்று ஷாலினி சொல்ல
“அப்படி ஆக நான் விட்ருவேனா ஷாலு, உன் அத்தை இருக்க வரைக்கும் உனக்கு அந்த கவலை வேண்டாம், குழந்தை பிறந்ததும் அவளை தூரத்திடலாம் “என்றார் வேதவல்லி
“அப்போ குழந்தை “
“சொத்து நம்ம கைக்கு வந்ததும் எதாவது அசராமத்துல சேர்த்துடலாம் “என்று வேதவல்லி சொல்ல மகிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது இவர்கள் இந்த அளவிற்கு மோசமானவர்களாக இருப்பார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை அதற்க்கு மேல் சாப்பாடு கூட அவள் துண்டையில் இறங்க வில்லை குழந்தைக்காக இரு வாய் சாப்பாட்டை சாப்பிடவள் அவள் அறைக்கு சென்று முடங்கிவிட்டாள்...
திடிரென்று வலி வர பிரசவத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே இது சாதாரண வலிதான் சரியாகிவிடும் என்று நினைத்தாள் ஆனால் நேரம் ஆக ஆக வலி அதிகமானதே தவிர குறையவில்லை வலி தங்க முடியாமல் மகி கத்த அவள் ஏன் கத்துக்கிறாள் என்று பார்க்கதான் அங்கு ஒருவரும் இல்லாமல் போனார் வேதவல்லி ஒமென்ஸ் கிளப்பிற்கும், ஷாலினி ருத்ராவை பார்க்க ஆபீஸ்க்கும் போய் இருக்க வீட்டில் ஒருவரும் இல்லை வேலை ஆட்கள் கூட யாரும் இல்லாமல் போக வலியில் துடித்துகொண்டிருந்தாள் மகி
வலியில் துடித்தவள் கத்தி கதற அழ எழ முடியாமல் எழுந்து போனை எடுத்தவள் ருத்ராவிற்கு அழைக்க இரு ரிங் போய் கட் ஆனாது மறுபடி மறுபடி மகி ருத்ராவிற்கு போன் செய்ய இரு ரிங்கில் போன் கட் ஆனாது அதற்க்கு மேல் அவள் போன் சார்ஜ் இல்லாமல் ஸ்வீட்ச் அப் ஆகிவிட்டது..

அங்கு ருத்ராவின் அறையில் ஷாலினி உட்கார்ந்திருக்க ருத்ரா மீட்டிங் செல்லும் போது போனை மறந்து அவன் கேபினில் வைத்துவிட்டு சென்றுவிட்டான் அவன் போன் அடிப்பதை பார்த்து அதில் தெரிந்த மகியின் அழைப்பை கண்டு எரிச்சலுற்று போனை அட்டென்ட் செய்யாமல் கட் செய்தாள் ஷாலினி...மகி மீண்டும் மீண்டும் போன் பண்ண அதை கட் செய்தவள் அவள் போன் செய்ததை ருத்ரா பார்க்க கூடாது என்று கால் ஹிஸ்டரியில் இருந்து அவள் போன் கால்ஸ்ஸை டெலீட் செய்தாள் இதை அறியாத ருத்ரா பிரசவத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்ற தைரியத்தில் நாளையில் இருந்து லீவ் போடுவதற்காக இன்று ஆபீஸில் சில வேலைகளை முடிக்க வந்தான்.

வலி பொறுக்க முடியாமல் போனை விட்டேரிந்துவிட்டு கவனமாக படிகளில் இறங்கி மெதுவாக நடந்தாள் வலி அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு இடமாக நின்று நின்று நடந்தவள் கை பட்டு மேல் இருந்த பொருட்கள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தது.. ஏதேனும் வண்டி கிடைத்தால் ஹாஸ்பிடல் போய்விடலாம் என்று தட்டு தடுமாறி நடந்து வந்தாள் ஏற்கனவே உடலும் மனத்தாலும் பலவீனமாக இருந்தவள் வெய்யிலின் தாக்கத்தில் உடல் சோர்ந்து போக, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது மயக்கமாக வர அங்கிருந்த மரத்தை பிடித்துக்கொண்டாள், கீழே விழுந்தாள் குழந்தைக்கு எதாவது ஆகிவிடும் என்று பயந்து நின்ற இடத்திலேயே மெதுவாக அமர அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்...


❤️❤️❤️ உங்க கருத்துக்களை மறக்காம பதிவிடுங்கள் டியர்ஸ் ❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 12



மூன்றரை வருடங்களுக்கு பிறகு...


“அத்தான் என்ன கட்டிக்குவியா மாட்டியா?? “என்று இதோடு பலாயிரம் முறை கேட்டிருப்பாள் அவனிடம்
“மாமா மாட்டேன்னு சொல்லு அவகிட்ட “என்று அவளை வெறுப்பேற்ற ஆதினி மழலை மொழியில் சொல்ல
“எனக்கும் அத்தானுக்கும் நடுவுல நீ வராத டி “என்று தான் முட்டி அளவே இருக்கும் மூன்று வயதான ஆதினியிடம் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு சண்டைக்கு நின்றாள் மித்ரயாழினி
“எனக்கும் மாமாக்கும் நடுவுல நீ வராத டி “என்று அவள் சொன்னதையே அவளிடம் திருப்பி சொன்னாள் ஆதினி
“அவர் என் அத்தான் அப்புறம் தான் உனக்கு மாமா “
“இல்லை,எனக்குத்தான் முதல்ல மாமா “என்று ஆதினி சொல்ல வழக்கம் போல் இருவருக்கும் சண்டை துடங்கியது
“ஹே ஆழாக்கு சும்மா கிட “என்று மித்ரயாழினி ஆதினியை சொல்ல
“நீ தான் டி குள்ளச்சி “என்றாள் ஆதினி . மாறன் பின்னால் வந்துகொண்டிருந்த யாழினி குடுகுடுவென ஓடி சென்று அவன் முன் வழியை மறைத்து இரு கைகளையும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு மேலும் கீழும் மூச்சி வாங்கியப்படி நின்றாள்
“அத்தான் அவளை அமைதியா இருக்க சொல்லு “என்று அவன் கையில் வைத்திருக்கும் ஆதினியை பார்த்து சொல்ல
“ முடியாது டி “என்று மாறன் கழுத்தை கட்டிக்கொண்டு குட்டி தேவதை ஆதினி சொல்ல
“போடி ஆழாக்கு “என்றாள் யாழினி
“நீ போடி குள்ளச்சி “
“அத்தான்...!!”என்று யாழினி கத்த, இவ்வளவு நேரம் இவர்களின் சண்டையை பார்த்துக்கொண்டிருந்த மாறன் முடிந்தமட்டும் சிரிப்பை அடக்கி கொண்டு நின்றுருந்தான் இதற்கு மேல் அமைதியாக இருந்தா வேலைக்கு ஆகாது இவளை சமாளிக்க முடியாது என்று நினைத்தவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு தொண்டையை செருமி தன் கைகளில் அமர்ந்து கழுத்தை கட்டிகொண்டிருக்கும் தேவதையிடம் “ஆதுமா....”என்று ஆதினியை அடக்கினான் மாறன்

“அத்தான் எனக்கு ஒரு முடிவை சொல்லிட்டு போ “
“என்ன சொல்லணும் “
“என்னைய கட்டிக்குறேன்னு சொல்லு”
“முடியாது “
“அத்தான்....!!!”
“சும்மா சும்மா அத்தான் பொத்தான்னிக்கிட்டு , இப்போ உனக்கு என்ன வேணும்? “
“நீதான் அத்தான் “
“ஒழுங்கா போய் படிச்சி இருக்க அரியர்ஸ்ஸ கிளியர் பண்ற வழியை பாரு “என்று வழக்கம் போல் சொல்ல
“க்கும்... சும்மா சும்மா படி படினு சொன்னா என்ன பண்ணுறது படிப்புக்கும் எனக்கும் ஆகவே மாட்டிங்குது அதுக்கு நான் என்ன பண்ணுறதாம் “என்று அலுத்துகொண்டவளை முறைதான் மாறன்
“எதாவது கேட்டா ஒன்னு படினு சொல்லுறது இல்லை முறைக்குறது “என்று யாழினி மீண்டும் அலுத்துக்கொள்ள,
“தோ பார் அத்தான் என்னிக்கு இருந்தாலும் நான்தான் உன் பொண்டாட்டி நீதான் என் புருஷன் சொல்லிட்டேன் என்னை தவிர வேற எவளையாது கட்டிக்கணும்னு நினைச்சா அம்புட்டு தான் சொல்லிட்டேன் “என்றாள் யாழினி
“நடக்கும் போது பாத்துக்கலாம் “இப்போ கிளம்பு
“முடியாது எனக்கு இன்னைக்கே முடிவு தெரிஞ்சாகணும் “என்று அடம் பிடித்துக்கொண்டு அவனிடம் சண்டைப் போட அவன் அவளை சட்டை செய்யாது அவளை ஒதுக்கிவிட்டு முன்னே நடந்தான்
“யோவ்.. அத்தான் இப்போ எனக்கு ஒரு முடிவை சொல்லுறியா இல்லை நான் கிணத்துல குதிக்கவா? “
“தயவு செஞ்சி அதை செய்யு முதல்ல “என்றவன் திருப்பியும் பாராமல் நடக்க
பொத்தென கிணற்றில் குதித்தாள் யாழினி... “மாமா மித்து கிணத்துல குதிச்சிட்டா “என ஆதினி சொல்ல மாறன் திரும்பி கிணற்றுக்கு அருகில் வந்து “சீக்கிரம் குளிச்சிட்டு விடு வந்து சேரு “என்றான்
“எல்லாம் எங்களுக்கு தெரியும் “என்று சிலுத்துக்கொண்டாள் யாழினி
இவர்களின் இந்த சண்டை வழக்கமாய் நடப்பதுதான் சில நேரங்களில் அவளை சமாளிக்க முடியமால் தலையில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு அவள் இம்சை செய்வாள் அவன் எவ்வளவு கோபப்பட்டாலும் சரி சலிக்காமல் அதையேதான் கேட்பாள் அவள் இம்சை தாங்க முடியாமல் அவளை திட்டி அனுப்பினாலும் அடுத்த பத்து நிமிடத்தில் “என்ன கட்டிக்குவியா அத்தான் “என்று கேட்டு அவனை கடுப்பேற்றுவள்
இன்றும் அதுபோல் தோட்டத்திற்கு வந்தவனை விடாது பின்னாலே வந்து இம்சை செய்து கொண்டிருந்தாள் அவனும் சலிக்காமல் எப்போதும் சொல்லும் பதிலையே சொல்ல கடுப்பாகி விட்டாள்

மித்ரயாழினி நடேசன் சிவகாமி தம்பதிகளின் ஒரே புதல்வி வால் இல்லா வானரம் பி எஸ் சி செகண்ட் இயர் படித்துகொண்டிருக்கிறாள் எழுதிய மூன்று செமஸ்டரிலும் முகால்வாசி அரியர் தான். படி என்று சொன்னாலே காததூரம் ஓடுபவள் நடேசனின் கட்டளையால் டவுனில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்துகொண்டிருக்கிறாள்...
கணேசன் மற்றும் லட்சுமி தம்பதிக்கு இரு பிள்ளைகள் மூத்தவர் சுப்புரமணி அவர் மனைவி தெய்வனை இரண்டாவது பெண் சிவகாமி அவர் கணவன் நடேசன் இவர்களின் செல்ல புதல்வி தான் மித்ரயாழினி,
லட்சுமியும் கணேசனும் தவமாய் தவமிருந்து கோவில் கோவிலாக சுற்றி செய்யதா பிராத்தனை இல்லை செய்யாத வேண்டுதல், இல்லை,வேண்டாதா தெய்வம் இல்லை இருப்பது வருட வேதனை மற்றும் தவிப்பின் பலனாக கிடைத்தவர்கள் தான் மகிழினியும் மாறனும்...

யாழினிக்கு மாறன் என்றால் கொள்ளை ஆசை அவனை தான் திருமணம் செய்வேன் என்று சுற்றிகொண்டிருக்கும் யாழினிக்கு இதுவரை மாறன் ஒரு பதிலும் சொல்லவில்லை, தினமும் அவள் இவ்வளவு சண்டை போட்டு கத்தினாலும் போராடினாலும் அவன் பிடியில் இருந்து அவன் இறங்காமல் தான் இருப்பான் எப்போதும் அவனின் பதில் “ஒழுங்கா படிச்சி முடி அப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம் “என்று முடித்து விடுவான் . இவள் இப்படி எல்லாம் பண்ணுவதற்கு ஒரே காரணம் சிவகாமியும் கணேசன் தாத்தாவும் லட்சுமி பாட்டியும் தான் மாறனுக்கு யாழினியை கட்டிடலாம் என்று அவள் முன் சொல்லி சொல்லி அவளையும் கெடுத்துவிட்டார்கள் இப்போது அதன் விளைவு “என்னை கட்டிக்குவியா மாட்டியா அத்தான் “என்று அவள் கேட்டு அவன் பின்னாலே சுற்றுக்கிறாள் அவன் எவ்வளவு கண்டித்தாலும் அவள் திருந்த போவதில்லை என்பது அவனுக்கே தெரியும்.

கிணற்றில் குதித்தவள் ஈர உடையுடன் நேராக வீட்டிற்கு வர “என்ன டி இப்போதானே குளிச்சிட்டு போன திரும்ப எதுக்கு டி குளிச்சிட்டு ஈர துணியோட நிக்கிற “என்று சிவகாமி கேட்க
“ஹா வேண்டுதல்”என்றாள் கோவமாய், சிவகாமிக்கு தெரியாத இவள் செயும் அக்கப்போறை பற்றி
“வேண்டுதல்னா நேர கோவிலுக்கு போகுறதை விட்டுட்டு இங்க ஏன் வந்த “
“உன் அண்ணன் பெத்த ரத்தினத்தை பார்க்க தான், எங்க உன் மருமகன் “
“உள்ளதான் இருக்கான்,ஏன் கேக்குற என் மருமகன் என்ன பண்ணான்? “
“எதுமே பண்ணலை அதான் பிரச்சனையே, அவன் அவன் இப்படி ஒரு அத்தை பொண்ணு இல்லாம போய்ட்டுச்சேன்னு பொலம்பிட்டு இருக்கான் ஆன உன் மருமகனுக்கு மட்டும் நான் கண்ணுக்கே தெரிய மாட்டுறேன் “என்றாள் சலிப்பாய்
“ என் புள்ளை அப்படி என்னாடி பண்ணான்? “என்று தெய்வனை கேட்டுக்கொண்டே அங்கு வர
“வா தெய்வா உனைத்தான் எதிர்பாத்தேன் “
“ஹ்ம்ம் என்ன பண்ணான் என் புள்ளை “
“ஏதும் பண்ணலை அதான் பிரச்சனையே “
“எதாவது பண்ணாத்தானே டி தப்பு எதுமே பண்ணலைக்குறதுலாம் எப்படி தப்பா ஆகும் “
“எத்தனை வருஷம் நீ கோவில் கோவில போய் பூஜை புனஸ்காரம், வேண்டுதல்னு பண்ணி அதுக்கெல்லாம் நான் தானே உன் கூட இருந்தேன் நீ பண்ணுற அளவு இல்லனாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் இருந்து, என் வேலையை எல்லாம் விட்டுட்டு வந்து அந்த கடவுளை தரிசனம் பண்ணேன், நீ வேண்டிணத்துக்கு உன் பசங்க கிடைச்சாச்சு நான் வேண்டிணத்துக்கு உன் புள்ளை எனக்கும் புருஷனா கிடைக்கணும் தானே அதானே சரி,அதை தான் நானும் கேட்டேன் உன் புள்ளை சலிச்சிக்குறான் சிலுத்துக்குறான்”என்றாள்
“எது மூக்கை பிடிக்க தின்னுட்டு.. விரதம் இருந்தாளாம் விரதம் “என்றார் தெய்வா
“எதோ என்னால முடிஞ்சது ஒரு வேளை சாப்பிடாமலாவது இருந்தேன்ல “
“அடியே ஒருவேள சாப்பிடாலம்னா அதுக்கும் சேர்த்து ரெண்டு வேளை சாப்பாட்டை ஒரே வேளையில் சாப்பிட்டுட்டு விரதம்னு சொல்லிட்டு திரியாத டி “என்றார் தெய்வனை
“இதோ பார் தெய்வா எதோ உன் முகத்தை பாத்துதான் உன் புள்ளையை கட்டிக்கவே ஒத்துக்கிட்டேன், ஒழுங்கா சொல்லி வை உன் பிள்ளைகிட்ட, இல்லனுவை ஊர்ல எனக்கு காம்பெடிஷன் அதிகம் அப்புறம் எவனையாவது ஓகே சொல்லிட்டேன்னு என்னை குத்தம் சொல்ல கூடாது சொல்லிட்டேன் “என்று நீட்டி முழக்கி பேச

“ஹே வாயாடி இப்போ என்ன கல்யாணத்துக்கு அவசரம் ஒழுங்கா படிக்குற வேலையை பாரு “என்றார் தெய்வனை
“படிப்பு வந்தா படிக்க மாட்டோமா நானே டைம் பாஸ் பண்ணத்தான் காலேஜ்கே போறேன் நீ வேற படி கிடின்னு சொல்லிக்கிட்டு இருக்க, சட்டுப்புடுன்னு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு,நல்லா சாப்புட்டு தூங்கி ரெஸ்ட் எடுத்தோமான்னு இல்லாம படி காலேஜ்க்கு போனு உயிரை வாங்கிட்டு இருக்க “என்றாள்

“இணைக்கு என்ன பஞ்சாயத்து?”என்று கேட்டுக்கொண்டே மகிழினியும் ருத்ராவின் மறு உருவாமாக இருக்கும் ஆதினியை அழைத்துக்கொண்டு உள்ளே வர
“வேற என்ன எல்லாம் உன் தம்பியாலதான் மதனி “என்றாள் யாழினி
“டெய்லி இதே பஞ்சாயத்து தானா!”என்று மகி சிரிக்க
“மதனி சிரிக்காத என் வயத்தெரிச்சல் உனக்கு சிரிப்பா இருக்கா!!, வர வர என் அத்தனுக்கு காம்பெடிஷன் அதிகமாயிடுச்சு அதுல முதல்ல இருக்றதே உன் பொண்ணுதான் எப்போ பாரு அத்தான் கூடயே ஓடிக்கிட்டு இருக்கா போற போக்கை பாத்த என் அத்தனை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவா போல “

“உனக்கு ஏன் டி என் பொண்ணை பாத்து வாயித்தெரிச்சல் “
“பொண்ணா பெத்து வச்சிருக்க என்னையும் என் அத்தனையும் பிரிக்குற வில்லியே அவதான் “என்றவளை தலையிலேயே ஒரு கொட்டுவைத்து “போய் வேலையை பாரு டி “என்றார் சிவகாமி

“இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்”என்றவள் நேராக மாறன் அறைக்கு செல்ல அவன் லேப்டாப்பின் வேலை செய்துகொண்டிருந்தான்
“அத்தான்...!!”
“ஹ்ம்ம்ம் “என்றான் வேலையை பார்த்தபடி
“அத்தான் “என்று மீண்டும் அழைக்க
“ஹ்ம்ம்ம் “அவளை பார்க்காமலே
“அத்தான்...!!!!!!”என்று கத்த
“என்னாடி வேணும் உனக்கு “என்றான் அவளை பார்த்து
“எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும், நீ என்னை கட்டிக்குவியா மாட்டியா “ என்றவளை மேலிருந்து கீழ் வரை பார்க்க. பாவாடை தாவணி முழுவதும் ஈரமாகி தண்ணீர் சொட்ட சொட்ட தாவணி விலகி அவள் பாதி இடை தெரிய அதை எல்லாம் கவனிக்காமல் அவள் நின்றிருந்தாள்
‘சும்மா இருந்தாலும் விடமாட்டா போலயே!!, இப்படி அறையும் குறையுமா முன்னாடி நின்னு சும்மா இருக்குறவனையும் சீண்டி விடுறாளே!’என்று நினைத்தவன் “என்ன தெரியணும் “என்றான் வேண்டுமென

“நீ அந்த நிஷா பின்னாடி அலையுறதா அவளைத்தான் கட்டிக்க போறன்னு நிஷா சொல்லுறா “உண்மையா அத்தான் அவளைத்தான் நீ கட்டிக்க போறயா அதான் என்னை வேண்டாம்னு சொல்லுறாயா? “என்றாள் வாடிய முகத்தோடு நிஷா அவளுடன் படிக்கும் பெண் அவளும் இதே ஊர்தான் நிஷா வளர்த்தது படித்தாது எல்லாம் சென்னையில் தான் அவளின் தாத்தா பாட்டியின் விருப்பத்திற்காக சென்னையிலிருந்து இங்கு வந்து தாத்தா பாட்டியுடன் தங்கியிருக்கிறாள் டவுனில் உள்ள காலேஜில் தான் சேர்ந்து யாழினியுடன் படித்துகொண்டிருக்கிறாள் நிஷாவிற்கு மாறன் மேல் விருப்பம் அதைவிட யாழினியை வெறுப்பேற்ற அதிக விருப்பம்..

“என் அத்தான் என்னைய கட்டிக்கமாட்டிங்குது என் அத்தனை கரெக்ட் பண்ண ஐடியா கொடுங்க டி “என்று தோழிகளிடம் சொல்லி புலம்புவாள் அதை தனக்கு சாதகமாக பயன் படுத்திகொண்டு யாழினியை வெறுப்பேற்றுவாள்..

நிஷா இன்றும் அதே போல் காலை தோட்டத்திற்கு சென்றவளை வலுக்கட்டாயமாய் நிறுத்தி தானும் மாறனும் விரும்பிகிறோம் அதனால் தான் மாறன் உன்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறான் நீயும் அவனை விட்டு விலகி விடு என்று சொல்ல புசு புசுவேனா கோவம் வந்துவிட்டது யாழினிக்கு உடனே அவளிடம் மல்லுக்கு நின்றாள் அடுத்து மாறனிடம் வந்தாள் அவனும் வழக்கம் போல் பதில் சொல்லி அனுப்பிவிட கடுப்பானவள் அவன் அறைக்கே தேடி வந்துவிட்டாள்

“சொல்லு அத்தான் நீ அவளை தான் கட்டிக்க போறியா?”
“லூசு மாதிரி ஒளறிட்டு இருக்கமா போய் காலேஜ் கிளம்புற வழியை பாரு “என்று அவன் சொல்ல
“முடியாது நான் காலேஜ் போகமாட்டேன் நீ சொல்லு “
“என்ன சொல்லணும்? “
“உனக்கு என்னை பிடிக்காதா அத்தான்?, அதுனாலதான் நீ என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லுறியாம் “
“அப்படி யார் சொன்னா? “
“நிஷாதான் “
‘முதல்ல இந்த நிஷாவை நாலு சாத்து சாத்தனும், படிக்குற பொண்ணுனு பாவம் பாத்து டவுட் கேக்கும் போதுலாம் பொறுமையா சொல்லிகுடுத்ததை இந்த லூசு கிட்ட இப்டிலாம் தப்பு தப்பா சொல்லி வச்சிருக்கு அதை கேட்டுகிட்டு வந்து இந்த லூசு மல்லுக்கு நிக்குது சரியான டியூப் லைட் காது வரைக்கும் வாய் தான் இருக்கு ஒரு மன்னாங்கட்டியும் புரிஞ்சிக்க மாட்டிங்குறா, இந்த ட்யூப் லைட்டை வச்சுக்கிட்டு எப்படித்தான் குடும்பம் நடத்த போறேனோ ‘என்று மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டான் மாறன்
“சொல்லு அத்தான் “என்று மீண்டும் அவள் கேட்க ‘இவளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது ‘என்று செயலில் இறங்கினான் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவள் அருகில் வந்தான் “ஹ்ம்ம் சொல்லுறேன்” என்றவன் அவள் இடையை பற்றி தன்னோடு சேர்த்து இதழோடு இதழ் சேர்க்க யாழினி சொல்ல முடியாத உணர்வில் விலக கூட தோன்றாது நெளிந்தாள் தன்னிடம் சொல்லத்தான் வருகிறான் என்று நினைத்தவள் அசால்ட்டாக நிற்க சட்டெனே அவள் இடையை பற்றி தன்னோடு சேர்த்து தன் காதலை சொல்லாமல் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். அவள் கால்கள் ஓய்ந்து போக உடல் நடுக்கம் கண்டது அவனின் முதல் ஸ்பரிசத்தில் சிலிர்த்து போனவள் அதன் உணர்வை புரிந்துகொள்ள முடியாமல் பேதையவள் விட்டால் போதும் என்று ஓடியே விட்டாள்

இவ்வளவு நேரம் அனைவரையும் வம்பிலுத்துக்கொண்டு இருந்தவள் மூச்சி பேச்சு இன்றி நல்லப்பிள்ளையாய் காலேஜ்க்கு கிளம்பினாள்
“அடியே சாப்பிட்டு போடி “என்று பாட்டி கத்த அவள் காதில் அது விழுந்தால் தானே அவள்தான் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறாளே பிரம்மை பிடித்தவள் போல் அவள் பாட்டிற்கு எதையும் காதில் வாங்காமல் நடக்க அவள் முன்னால் பைக்கில் வந்து நின்றான் மாறன்
அவனை பார்க்க வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றவளை “ வண்டில ஏறு “என்றான் அவளும் ஏதும் பேசாமல் வண்டியில் அமர்ந்து கொண்டாள்
‘ச்சை.. நீ சரியான லூசு டா மாறா இவ்ளோ நாள் எதுக்கு ஒதுங்கி இருந்தயோ அதை எல்லாம் இப்போ நீயே கெடுத்துட்ட டா!! லோடலோடன்னு பேசிட்டு இருந்தவளை இப்படி அமைதி போராழியா மாத்திட்டியே டா ஏற்கனவே ரொம்ப படிப்பா இதுல நீ வேற கண்டதையும் பண்ணி விட்டுட்ட இனி இவ படிச்ச மாதிரிதான் ‘என அவன் செய்ததை நினைத்து மனதுக்குள் தன்னை தானே நொந்துகொண்டான்

மாறனுக்கு யாழினி என்றால் விருப்பம் தான் எப்போதும் அத்தான் அத்தான் என்று அவன் பின்னாலே சுற்றிகொண்டு படிப்பில் கோட்டைவிடுகிறாள் என்று அவனுக்கு வருத்தம் ஏற்கனவே என்னை கட்டிக்குவியா அத்தானு பின்னாடியே சுத்துறா நாமளும் உன்னைத்தான் டி காதலிக்குறேன் நீ தான் என் பொண்டாட்டின்னு சொன்னா படிக்குறதை எல்லாம் ஓரம் கட்டிட்டு என் பின்னாடி சுத்துறதையே முழு வேலைய செய்ய ஆரம்ப்பிச்சிடுவா என்று நினைத்தவன் அவள் படிப்பு முடியும் வரை அவளிடம் தன் விருப்பதையும் வெளிகாட்டாமல் ஒதுக்கியே இருக்க நினைத்துதான் அவளிடம் பேசுவதை கூட தவிர்த்தான் யாழினி லூசுக்கு அது எல்லாம் புரியாமல் அவனையே நச்சரித்து சீண்டி விட்டாள் அவன் என்ன செய்வான் தன்னையும் மறந்து அவளிடம் நெருங்கிவிட்டான் தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்தவன் ஆபீஸ்சுக்கு கிளம்ப தயாரானான்

மாறனும் டவுனில் உள்ள புகழ் பெற்ற கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறான் தினமும் யாழினியை மாறன் தான் காலேஜ்க்கு அழைத்து செல்வான் வரும்போது அவள் பஸ்சில் வந்து விடுவாள் மாறனும் ஆபீஸ் கிளம்பி வர எப்போதும் போல் அவளை ஏற்றிக்கொண்டி கிளம்பினான் வரும் வழில அவள் வாயை கூட திறக்கவில்லை எப்போதும் வரும்போது இதை வாங்கித்தா அத்தான் அதை வாங்கித்தா அத்தான் என்று நச்சரிக்கும் அவள் இன்று பேசாமடந்தையானாள்..

அவளை காலேஜ்ல் இறக்கி விட்டு ஆபீஸ் நோக்கி புறப்பட்டான் மாறன் வாழ்க்கை ஒரே நாளில் என்னவெல்லாம் செய்துவிடுகிறது அப்படி ஒருநாள் தான் மகிழினி மாறனின் வாழ்க்கையையே மாற்றி எழுதியது...
மகிழினி மாறன் வாழ்வில் எதிர் காலம் என்ன என்னவெல்லாம் வைத்து காத்திருக்கிறதோ!!!




❤️❤️❤️உங்க கருத்துக்களை மறக்காம பதிவிடுங்கள் டியர்ஸ் ❤️❤️❤️

Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 13


“என்ன மித்ரா உன் அத்தான் கிட்ட கேட்டியா? “என்று நிஷா அவளை சீண்ட அவள் காதில் அது விழுந்தால் தானே பதில் சொல்ல
“ஹே உன்ன தான் டி கேக்குறேன் “என்று அவளை பிடித்து உலுக்கினாள் நிஷா l
“ஹான் என்ன டி “என்று துக்கத்தில் இருந்து முழிப்பது போல் முழித்தாள் யாழினி
“என்கிட்ட வரிச்சிக்கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்தியே உன் அத்தான் கிட்ட போய் கேட்டியா? “
“ஹ்ம்ம்ம் “என்று சுரத்தையே இல்லாமல் சொல்ல
“என்ன வழக்கம் போல மழுப்பி விட்டுட்டாரா “என்று நக்கலாய் சிரிந்தாள் நிஷா
“ம்ச்....”என்றாள் சலிப்பாக
“ஆமா, இல்லை எதாவது சொன்னாரா? “
“இல்லையே “என்று பரிதாபமாய் யாழினி சொல்ல நிஷா சிரிக்க துடங்கிவிட்டாள்
“ஏன் சிரிக்குற? “
“நான் நினச்சா மாதிரியே தான் நடந்து இருக்கு “என்றாள் நிஷா
“என்ன நினச்சா? “
“நீ கேட்டாலும் உன் அத்தான் கண்டிப்பா உன்னை மதிச்சு பதில் சொல்லி இருக்க மாட்டார், இல்லைனா எதாவது பண்ணி உன் தொல்லைல இருந்து எஸ்கேப் ஆகிருப்பார் “என்று சொல்ல யாழினிக்கு அப்படித்தான் தோன்றியது தான் கேட்டதுக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லையே என்ன என்னவோ பண்ணி நானே ஓடி வரமாதிரி பண்ணிட்டான் அப்போ நிஷா சொல்லுற மாதிரி அத்தனுக்கு என்னை பிடிக்காதா? ‘என்று நினைத்தவளுக்கு முன்பு இருந்த படபடப்பு சந்தோசம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனது..
‘அத்தானுக்கு நம்மளை புடிக்கலை அதனாலதான் கட்டிக்குறேன்னு சொல்ல மாட்டிங்குறார் ‘என்று நினைத்தவளுக்கு அழுகையாக வந்தது நிஷா வேறு அவளை வேண்டிமென்றே சீண்டிகொண்டிருக்க யாழினி உண்மையிலேயே வாடிப்போனாள்
மாலை வீட்டிற்கு சென்றவள் அமைதியாகவே இருக்க மற்றவர்களுக்கு தான் ஆச்சரியமாக போனது இவளின் அமைதியைக் கண்டு..
“என்ன டி உடம்புக்கு முடியலையா என்ன?”என்று சிவகாமி கேட்க
“நல்லாத்தான் இருக்கேன் “
“அப்புறம் ஏன் இவ்ளோ அமைதியா இருக்க “
“ஒன்னும் இல்லை “
“நீயும் சரி இல்லை உன் பேச்சும் சரி இல்லை “
“எல்லாம் சரியாதான் இருக்கு இப்ப இங்கிருந்து நீ கிளம்புரியா “
“என்னவோ பண்ணு, காபி கொண்டு வரவா?”என்று சிவகாமி கேட்க
“வேண்டாம் “என்றவள் என்றும் இல்லாத திருநாளாய் இன்று புத்தகத்தை எடுத்து பிரித்துவைத்து படிப்பதுபோல் நடிக்க துடங்கினாள் அப்போதுதானே மாறனும் மற்றவர்களும் எதுவும் கேட்க மாட்டார்கள்

எப்போதும் மாறன் தான் தினமும் அவளுக்கு சொல்லிக்கொடுப்பான் அவன் அரட்டி மிரட்டி அவளை படிக்க வைப்பான் மற்றவர்களிடம் அடங்காதவள் மாறனின் கண்டிப்பில் அடங்கி விடுவாள் அடங்கவில்லை என்றானும் ஒரே முறைப்பில் அடக்கி விடுவான்...
அவன் அறைக்கு சென்று தினமும் படிக்கும் அவள் இன்று அங்கு போகாமல் இங்கேயே இருந்தாள்,இனிமேல் மாறன் அத்தான் ரூமுக்கு போய் படிக்க கூடாது, அவனிடம் பேசக்கூடாது என்று இங்கேயே புக்கை பிரித்துவைத்து அமர்ந்து விட்டாள். அப்போது தானே அவன் கூப்பிட மாட்டான் என்று இந்த ஐடியா, ஒரு கண்ணை புத்தகத்திலும் மறுகண்ணை வாசலிலும் என படிப்பது போல் பாவனை செய்துகொண்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி அங்கு வந்த தெய்வனைக்கு ஆச்சர்யம் ஆனால் உண்மை என்ற நிலைதான்
‘இவ பரிட்சைக்கே படிக்குற ஆள் இல்லையே இன்னைக்கு ஏன் புக்கை எடுத்து வச்சி பொறுப்பா படிக்குறா’ என்று நினைக்க
“என்ன மித்து படிக்குற!!”என்று ஆச்சர்யமாக கேட்க
“படிக்க தானே செய்றேன் அதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற தெய்வா “
“அதுனாலதான் டி ஷாக் ஆகிறேன் “
“இனி அப்படித்தான் “
“என்னமோ நடக்குது மர்மமா இருக்கிது “என்று தெய்வனை பாட
“ஒரு மர்மமும் இல்லை ஒழுங்கா போய்ட்டு தெய்வா மனுஷனை கடுப்பேத்தாத “என்றாள் மாறன் வருகிறனா என்று வாசலை பார்த்தபடியே யாழினி சொல்ல
“என்னமோ பண்ணு, இந்த செமஸ்டர்லையாவது அரியர் வைக்காம இருந்தா சரிதான் “
“அதெல்லாம் சிறப்பா பண்ணிடுவோம் “
“ஹ்ம்ம்ம், பாக்கத்தானே போறேன்”
“பாக்கும் போது பாத்துக்கலாம் இப்போ இங்கிருந்து கிளம்பு காத்து வரட்டும் ”என்றாள்
“கிளம்புறோம் கிளம்புறோம் “என்று தெய்வானை கிளிம்பிவிட

மாறனோ யாழினிக்காக காத்திருந்தான் அவள் வந்தால் தானே, நேரம் ஆகியும் வராமல் இருக்க பொறுமை இழந்தவன் அவள் அறைக்கு செல்ல அவளோ அவன் வருவதை பார்த்து ஆர்வமாக படிப்பதை போல் பாவனை செய்துகொண்டிருந்தாள்
‘ஓஹோ மேடம் என் ரூம்க்கு வர மாட்டாங்களா?’ என்று நினைத்தவன் அவள் அருகில் செல்ல அவளோ அவன் வருவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள்
“ரூமுக்கு வரலையா?”
“வரலை “என்றாள் பட்டென
“ஏன்?”
“இனி வரதா இல்லை “
“ அதான் என கேட்டேன் “
“ வரலனா வரல அவ்ளோ தான்”
“ஓகே “என்றவன் கிளம்பிவிட்டான் அவளுக்கு புஸ் என ஆகிவிட்டது “தன்னை வா என்று கெஞ்சுவன் என்று நினைத்தாள் அவனோ சரி என்று கிளப்பிவிட்டானே என்று கோவம் ஒருபுறம் அழுகை ஒருபுறம் என முகத்தை தொங்கபோட்டு அப்படியே படுத்துவிட்டாள்
‘அப்போ அந்த நிஷா பிள்ளை சொன்னதுதான் உண்மையா?’என்று நினைத்தவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது அத்தான் என்னை கட்டிக்க மாட்டாரு நிஷாவதான் கட்டிப்பாரு என அவளாகவே முடிவு செய்துகொண்டு அழுவதற்கு காரணத்தை தேடிக்கொண்டாள்..
அவளால் மாறன் தனக்கு இல்லை என்று நினைப்பதையே தாங்கிக்கொள்ள முடியவில்லை, தன்னை பிடிக்காதவரை என்ன செய்ய முடியும் என்று நினைத்தவள் வராதா சோகத்தை வரவழைத்து முஞ்சை தொங்கபோட்டுக்கொண்டு என்றும் இல்லாத அமைதியை இழுத்து பிடித்து சுற்றிக்கொண்டு இருந்தாள்..
மாறனுக்கு அவளை பார்ப்பதற்கு சிரிப்புதான் வந்தது இரண்டு நாட்கள் இப்படியே போக இதற்கு மேல் விட்டால் சரி வராது என்று நினைத்தவன் அவளை காலேஜ்ல் விட்டு விட்டு ஆபீஸ் நோக்கி சென்றான் மாறனின் மனமோ அவளின் விலகலை விரும்ப வில்லை எப்போதும் அவன் தான் விலகி செல்வான் அவள் அவன் பின்னாலே திரிவாள் ஆனால் இரண்டு நாட்களாக அவனிடம் பேசவில்லை “என்னை கட்டிக்குவியா அத்தான் “என்று அவள் கேட்கவே இல்லை,ஏனோ மனம் அவள் அருகாமையை தேடியது மாலை சீக்கிரம் வேலையை முடித்து வீட்டிற்கு சென்றான் மாறன்

“யாழினி புக் எடுத்துக்கிட்டு என் ரூம்க்கு வா “என்றுவிட்டு மாறன் சென்றுவிட அவளோ வேண்டா வெறுப்பாக சென்றாள் போக வில்லை என்றால் அதற்கும் வந்து திட்டுவான் எதற்கு வம்பு என்று நல்ல பிள்ளையாய் அவள் செல்ல,
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ “
“ஏதும் நினைக்கலையே “என்றாள்
“எல்லார் கிட்டையும் நல்லா பேசுற என்ன பாத்ததும் மூஞ்சை திருப்பிகிற “
“அப்படியெல்லாம் இல்லை!”
“அப்டியா!!? “
“ஹ்ம்ம் “
“லூசா டி நீ?, யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவியா, நிஷா தான் கண்டதையும் ஒளறுறா அதை நம்பி என்கிட்ட பேசம சுத்திகிட்டு இருக்க? “
“நீங்க நிஷாவைத்தான் கட்டிக்க போறிங்களாம், நான் உங்களை தொல்லை பண்ணுறேன்னு நீங்க நிஷா கிட்ட சொன்னீங்களாம் அவ தான் உங்களை தொல்லை பண்ண கூடாதுனு சொன்ன “என்றவள் கண்கள் கலங்கி இருந்தது”என்னை கட்டிக்குவீங்களா அத்தான் “என்று அவள் விளையாடய் கேட்க தொடங்கினாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து இருந்தான் மாறன் அவன் தனக்கு இல்லை என்றதும் அதை ஏற்க மறுத்த மனதை வலுக்கட்டாயமாக எதிலாவது திசை திருப்பினாள்...

எப்போதும் கலகலப்பாக எல்லாரையும் ஒரு வழி செய்துகொண்டிருப்பவள் அமைதியாக இருப்பதை மாறன் துளியும் விரும்ப வில்லை அவனுக்கு எப்போதும் வம்பு செய்துகொண்டு திரியும் யாழியை மனம் விரும்பியது

“அத்தான்னு கூட கூப்பிட மாட்டா அப்படித்தானே “என்று அவன் கேட்க அவள் மௌனமாக இருந்தாள்
“நீ உண்மையாவே லூசு தான் டி, நான் எப்போவது அவளை லவ் பண்ணுறேன்னு சொல்லி இருக்கேனா? அந்த லூசு தான் பொய் சொல்லிட்டு திரியுதுனா நீயும் நம்புற, உனக்கு மூளைனு ஒன்னு இருக்குல்ல அதை வச்சி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா, சரியான டியூப் லைட் டி நீ” என் திட்டியவன் அவளை அருகில் அழைத்து அமர வைத்தவன்

“நான் யாரையும் லவ் பண்ணலை டி “ என்று அவன் சொன்னதும் அவள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் “உண்மையாவா அத்தான் “என்றாள் கண்கள் மின்ன,
“ஹ்ம்ம், ஆமா “
“அப்போ என்னை கட்டிக்குவியா அத்தான் “
“ஹ்ம்ம், உன்னை தவிர வேற ஒருத்தியை மனசால கூட நினைக்க மாட்டேன் டி”
“அப்போ வா அத்தான் தெய்வா கிட்ட சொல்லி நாம கல்யாணம் பண்ணிக்கலாம் “என்றவளை தலையில் ஒரு கொட்டு வைத்தான் மாறன்
“ஏன் அத்தான் கொட்டுற “
“லூசாடி நீ “
“ஏன் திட்டுற? “
“இன்னும் ஒரு வருஷம் தான் காலேஜ் ஒழுங்கா படிச்சி எல்லாம் அரியர்ஸும் கிளீயர் பண்ணு டி “
“அய்யோ அத்தான்!!!, அரியர் கிளீயர் பண்ணனுமா?? “என்று அலற
“ஆமா”
“யோவ் வராதா படிப்பை வா வானு சொன்னா நான் எங்க போறது “
“புக் திறந்து வச்சி படிச்சாலேயே போதும் “
“அது ரொம்ப கஷ்டம் “
“அப்போ கல்யாணமும் ரொம்ப கஷ்டம் தான் “
“அத்தான்...!!, எனக்கு தெரியாது நீ வா நாம தெய்வா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம் “
“நீ படிப்பை முடிக்காம நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் யாழ் “
“உனக்கு என்னை கட்டிக்க இஷ்டம் இல்லை அதான் இப்டிலாம் சொல்லிட்டு இருக்க “என்று அடுத்த சண்டைக்கு ரெடி ஆனாள் யாழினி
“லூசு மாறி பேசாத யாழ், பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் உன் படிப்புதான் உனக்கு கடைசி வரை துணையா இருக்கும், பொண்ணுங்க படிக்கறது வெறும் பட்டம் வாங்க மட்டும் இல்லை டா அவங்களோட வாழ்க்கையை போராட தைரியத்தையும் மன வலிமையையும் படிப்பு தரும் “
“ஏன் நம்ம அம்மாலாம் படிக்கவா செஞ்சாங்க அவங்க எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க, அப்புறம் நான் மட்டும் ஏன் படிக்கணும் “
“சரி நமக்கு. கல்யாணம் ஆயிட்ட பிறகு நான் இறந்துட்ட நீ எப்படி நம்ம குழந்தையை காப்பாத்துவ?? “
“அத்தான்!!!!”என்று அவள் கத்த
“ஏன் அத்தான் இப்டிலாம் பேசுற நீ இல்லனா நானும் செத்துடுவேன் “என்றவள் தேம்பி தேம்பி அழ
“பச்.... யாழ்மா நெருப்புன்னா வாய் சுட்டுடாது”
“நீ என்கிட்ட பேசாத “என்று அவள் அழ
“இங்க பாரு யாழ், நம்மளோட அம்மா அப்பாவோ இல்லை சொத்து சொகமோ கடைசி வரை நமக்கு துணையா இருக்காது நீ படிக்குற படிப்பு மட்டும் தான் உனக்கு துணையா இருக்கும் இந்த படிப்பு தான் உனக்கு தைரியத்தை தரும், தைரியமும், தன்னம்பிக்கையும்,படிப்பும் இருந்தா மட்டும் தான் உன்னால இந்த உலகத்தோட போராட முடியும் “
“அதுக்காக செத்துடுவேன்னு சொல்லுவியா “என்று அதையே பிடித்து கொண்டு அழ
“பைத்தியமாடி நீ!!!, நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்க, இதோ பார் யாழ் நான் எப்பவும் உன்கூடத்தான் இருப்பேன் உன்ன விட்டு போக மாட்டேன் நாம நூறு வருஷம் சேர்ந்து வாழுவோம் போதுமா!!”என்றவன் அவளை தடையைபிடித்து தூங்கி தன்னை நோக்க வைக்க அவள் இன்னும் சமாதானம் ஆகாமல் இருக்க மென்மையாய் அவள் நெற்றியில் இதழை ஒற்றி எடுத்தான்..
“இன்னொரு வாட்டி அப்படிலாம் சொல்லாத அத்தான் “
“ஹ்ம்ம் சரி “என்று அவளை ஆறுதல் படுத்தினான்
“ஒழுங்கா படி யாழ், எல்லாம் அரியர்ஸும் கிளீயர் பண்ணு, அப்போதான் நம்ம கல்யாணம் “என்று அவன் சொல்ல
“கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட படிக்கலாம் அத்தான் “
“ஒரு மண்ணும் வேணாம், அதுக்கு அப்புறம் நீ படிக்குற பக்கமே போகமாட்ட “
“இல்ல இல்ல, நான் சமத்தா படிப்பேன் “
“காலேஜ் முடியாம நோ கல்யாணம் “என்றான் கண்டிப்பான குரலில்
“ம்கூம், என்றவள் உதட்டை சுழித்து கொண்டு வெளியே போக “
“எங்க டி போற “
“வேற எங்க படிக்கத்தான், அப்போதனே சீக்கிரம் கல்யாணம் பண்ண முடியும் “என்று விட்டு அவள் போக அவனுக்கு சிரிப்புதான் வந்தது.. ‘எப்படியோ படிச்சா சரி ‘என்று நினைத்துக்கொண்டான்

மகி தோட்டத்தில் அமர்ந்து இருக்க அவள் அருகில் வந்த அமர்ந்தான் மாறன் “இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படியே இருக்க போற. அக்கா “
அவன் கேக்க வருவது புரிந்தும் புரியாதது போல் “என்னது டா?? “
“மாமாக்கும் உனக்கு என்ன தான் பிரச்சனை, இந்த மூன்றரை வருஷதுல உங்கிட்ட பலநூறு முறை கேட்டதுதான் நீயும் இப்போ வரை உண்மையை சொல்ல மாட்டிங்குற “
“நீ நினைக்கிற மாதிரி ஒரு பிரச்சனையும் இல்லை “
“இதைத்தான் எப்போவும் சொல்லுற, பிரச்சனை இல்லைனா நீயும், மாமாவும் ஏன் பிரிஞ்சி இருக்கீங்க??, ஆது குட்டியையும் மாமாக்கு தெரியாம ஏன் இங்க வச்சிருக்க?? “என்று மாறன் கேட்க மகி வழக்கம் போல் மௌனம் காத்தாள்
“ஏன் மகிக்கா இப்படி அமைதியா இருந்தா எல்லாமே சரி ஆயிடுமா “
“இதை பத்தி இனி என்கிட்ட பேசாத மாறா “என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகி
“என்னமோ பண்ணுக்கா”என்றுவிட்டு பெருமுச்சுடன் மாறன் சென்றுவிட்டான் அதற்க்கு மேல் துருவி கேட்டாலும் சரி கட்டாய படுத்தினாலும் சரி மகிழினியிடம் இருந்து எந்த பதிலும் வராது என்று மாறனுக்கு தெரியும், ஆனால் அப்படியே விடவும் முடியவில்லை அவனால்,வந்த புதிதில் ருத்ராவிற்கு போன் செய்து தகவல் சொல்லுகிறேன் என்று அவன் சொன்ன போது மகி கோபப்பட்டு “நம்ம இங்க இருக்கோம்னு யாருக்கும் தெரிய கூடாது மாறா அப்படி மீறி தெரிஞ்சது அப்புறம் நான் உயிரோடயே இருக்க மாட்டேன் “என்று அவள் சொல்ல பதறியே விட்டான் அவனை நம்பாமல் சத்தியமும் வாங்கி கொண்டாள் இல்லை எனில் அவன் கண்டிப்பாக ருத்ராவிற்கு தகவல் சொல்லுவான் என்று அவளுக்கு தெரியும்..

மாறனுக்கோ அக்கா எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்று தெரிந்தாலும் அவளிடம் என்ன கேட்டும் ஒரு பயனும் இல்லை, என்ன நடந்தது ஏன் நாம் மாமாவிற்கு தெரியாமல் இங்கு இருக்க வேண்டும் என்று பல கேள்விகள் கேட்டுவிட்டன் இன்று வரை ஒரு பதிலும் இல்லை அவளிடம்...மாறனும் அதற்க்கு மேல் கேள்வி கேட்டு மகிழினியை வற்புறுத்துவது இல்லை.

தாத்தா, பாட்டி,தாய், தந்தை, மாமா, அத்தை, ஆதினி, யாழினி, மாறன் என அன்பிற்கும் அக்கறைக்கும் பாசத்திற்கும் பஞ்சம் இல்லாத பல உறவுகள் அவளுக்கு பக்கபலமாய் இருக்கிறது அவளை சோர்வடைய செய்யாமல் தாங்கி கொள்கின்றனர்.மனதில் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் கவலைகள் இருந்தாலும் இவர்களின் உண்மையான அன்பிற்கு முன் அவை எல்லாம் பொருட்டே இல்லை..

மகி மனதிலும் சமீபக்காலமாக இதே எண்ணம் தான் ஓடிகொண்டிருக்கிறது,ஆதினி கருத்து தெரிந்து அப்பா எங்கே என கேட்டால் என்ன சொல்வது இப்போதே ‘அப்பா எங்க அம்மா என்று கேட்கிறாள்’ மகி தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஏதேதோ சொல்லி மழுப்பி கொண்டிருக்கிறாள் ஆனால் எத்தனை நாளைக்கு இப்படியே எதையாவது சொல்லி சமாளிப்பது... என்று நினைத்தவள் மனமோ ருத்ரானை நினைத்து இறுகியது..

இனி தன் வாழ்க்கையில் அவனுக்கு இடம் இல்லை என்று தீர்க்கமாய் இருக்கிறாள் தனக்கு துரோகம் செய்து தன் வாழ்க்கையை சிரழித்தவனை மன்னிக்க அவள் மனம் இடம் கொடுக்க வில்லை அதே போல் தன் பிள்ளையை அனாதையாக்க நினைத்த வேதவல்லியையும் மன்னிக்கவும் முடியாது, தாத்தா பாட்டியை தவிர மற்ற யாருக்கும் மகியும் ருத்ராவும் பிரிந்த காரணம் தெரியாது அவளுக்கு ருத்ராவை மற்றவர்களிடம் விட்டுக்கொண்டுக்கவும் மனம் வரவில்லை ...

விளையாட்டாய் மூன்றாரை வருடங்கள் கடந்துவிட்டது இங்கு வந்ததில் இருந்து அவள் சந்தோசமாய் இருந்தாலும் ஏனோ மனதில் எதையோ பறிகொடுத்த வேதனை இருந்துகொண்டேதான் இருக்கிறது..
மகிழினியின் மன வேதனைக்கு ஆதினி மட்டுமே மருந்தாவள்..ஏனோ இப்போதெல்லாம் மனம் காரணமின்றி வாடுகிறது
சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவள் மனமோ பழைய நினைவுகளை அசைபோட்டது..

அன்று பிரசவ வலியோடு நடந்து வந்தவள் மயங்கி கீழே சரிந்தாள், சொந்தகார பெண்ணிற்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்ப பஸ் ஸ்டாண்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த லட்சுமி பாட்டி, கணபதி தாத்தா கண்களில் மகிழினி பட்டாள், வயதான லட்சுமி பாட்டிக்கு மனம் பொறுக்காமல் பதறி போய் ஆட்டோவை நிறுத்திவிட்டு மகியின் அருகில் வர மகிழினியோ அறைமயக்கதில் கிடந்தாள் “என்னங்க பிள்ளத்தாச்சி பொண்ணு மயங்கி கிடக்குறா, யாரு பெத்த பிள்ளையோ பாவமா இருக்கு”என்று லட்சுமி பாட்டி வருந்த,
“ஆமா லட்சுமி என்ன ஆச்சோ தெரில பிள்ளை மயங்கி கிடக்குறா “என்றார் கணபதி தாத்தா...லட்சுமி பாட்டி மகிழினி உச்சம் தலையில் கைவைத்து பார்க்க அவள் உச்சம் தலை அனலாய் கொதித்தது லட்சுமி பாட்டி பதறி போய் “என்னங்க இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை பொறந்துடும் சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் சீக்கிரம் தூக்குங்க ஹாஸ்பிடல் தூக்கிட்டு போலாம் “என்று பரபரத்தார் லட்சுமி பாட்டி,பலருக்கு பிரசவம் பாத்த அனுபவம் அவருக்கு,
“வா லட்சுமி நீயும் கொஞ்சம் புடி “என்று ஆட்டோ டிரைவர்,கணபதி தாத்தா, லட்சுமி பாட்டி என மூவரும் மகியை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஹாஸ்ப்பிட்டலுக்கு சென்றனர்.

மகியை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு லட்சுமி பாட்டியும் கணபதி தாத்தாவும் வெளியில் காத்திருக்க மருத்துவர்களோ அவள் மகிழினியின் மயக்கம் அடையாமல் இருக்க பாடுபட்டு கொண்டிருந்தனர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகிழினி ஆதினியை பெற்றெடுத்தாள்...



❤️❤️❤️ உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போக டியர்ஸ் ❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 

T22

Well-known member
Wonderland writer
உயிரே 14


ஏதோ ரோட்டில் பார்த்தோம் மருத்துவமனையில் சேர்த்தோம் இனி நமக்கு என்ன வேலை என்று கிளம்ப நினைக்காமல் லட்சுமி பாட்டிவும்,கணபதி தத்தாவும் அங்கேயே பதற்றதுடன் காத்திருந்தனர் அப்பெண்ணை அப்படியே நிற்கதியில் விட்டுவிட்டு செல்ல இருவருக்கும் மனம் வரவில்லை மகிழினி பிரசவத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு இருக்க, குழந்தை நல்லபடியே பிறந்து விட வேண்டும் என்று லட்சுமி பாட்டி பல தெய்வங்களுக்கு வேண்டுதல் வைத்துவிட்டார்,
ஆதினி பிறந்த பிறகே லட்சுமி பாட்டிக்கு, கணபதி தாத்தாவிற்கும் பதற்றம் குறைந்தது,மகிழினி மயக்கம் தெளிந்து நார்மல் வார்டுக்கு மாற்ற லட்சுமி பாட்டியும் கணபதி தாத்தாவும் அவளை பார்க்க சென்றனர்.
“எப்படிம்மா இருக்க? “என்று பாட்டி அவள் தலையை வருட, “அடடே!!!!, பேத்தி பொறந்து இருக்கா “என்று குழந்தையை கையில் தூக்கினார் தாத்தா
“ரொம்ப நன்றி பாட்டி நீங்க மட்டும் உதவலனா எனக்கும் என் குழந்தைக்கு என்ன ஆயிருக்கும்னுனே தெரில “என்றவள் கண்கள் கலங்கியது எத்தனை உன்னதமான மனிதர்கள் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்
மகிழினி அறை மயக்கத்தில் இருந்ததால் இவர்கள் உதவியது அவளுக்கு தெரியும்

“இதுல என்ன தாயி இருக்கு புள்ளத்தாச்சி புள்ளையை அப்படியே விட்டுட்டு போக முடியுமா!!”என்றார் கணபதி தாத்தா
“லட்சுமி இங்க பாறேன் பேத்தி எம்புட்டு அழகா இருக்கா, அப்படியே ரோசா பூ மாறி இருக்கா பாரேன் “என்று தாத்தா குதூகலித்தார்
“யோவ் புள்ளைக்கு கண்ணு பட்டுட போவுது “என்றார் லட்சுமி பாட்டி சொல்ல குழந்தையை வாங்கிக்கொண்டர் லட்சுமி பாட்டி “ராஜாத்தி மாறி இருக்க “என்று குழந்தையை நெஞ்சோடு அனைத்துக்கொண்டார் லட்சுமி பாட்டி
“இப்போ மட்டும் கண்ணு படாதா “என்று தாத்தா முறைக்க
“அதெல்லாம் படாது “என்றார் லட்சுமி பாட்டி இருவரின் சண்டையை பார்த்து மகிக்கு சிரிப்புதான் வந்தது.
“உன் பேரு என்னடா? “என்று மகியிடம் கேட்டார் லட்சுமி பாட்டி,
“மகிழினி “
“அம்மாடி உன் புருஷன் விலாசம் கூடு நாங்க விஷயத்தை சொல்லி கூட்டியாந்து விட்டுட்டு போறோம் “என்று லட்சுமி பாட்டி கேட்க,
“அதெல்லாம் வேணாம் பாட்டி, இவ்ளோ தூரம் நீங்க செஞ்ச உதவியே ரொம்ப பெரிசு, இதுக்கு மேல உங்களுக்கு கஷ்டம் தர நான் விரும்பலை “என்றாள் மகிழினி
“இதுல என்ன டா கஷ்டம் இருக்கு, உன்னை பத்திரமா உன் குடும்பத்துகிட்ட சேர்த்துட்ட பிறகு நாங்க நிம்மதியா கிளம்புறோம், நீ விலாசம் சொல்லு டா“என்று பாட்டி மீண்டும் விலாசம் கேட்க,
“என் தம்பியை தவிர உறவுனு சொல்லிக்க யாரும் இல்லை பாட்டி,, எனக்கு என் தம்பி மட்டும் தான் எனக்கு இருக்க ஒரே சொந்தம் பாட்டிமா அப்பா அம்மா இறந்துட்டாங்க, வேற யாரும் இல்லை “என்றாள் அழுத்தபடி புருஷன் மாமனார் மாமியார் என அணைத்து உறவும் இருந்து யாரும் இல்லாத நிலை இதை சொல்லுகையில் அவள் மனம் பட்ட பாட்டை அவள் மட்டுமே அறிவாள்..

“எனக்கு உதவி பண்ணதுக்கு நன்றி பாட்டி, இனி நான் பாத்துக்குறேன் “
“அடுத்து என்ன பண்ண போற டா “
“தெரில பாட்டி”என்றவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிய
“அம்மாடி அழ கூடாது டா “என்ற பாட்டி அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “அம்மாடி உன் புகுந்த வீட்டுல உன்னை தேட மாட்டாங்களா? “என்று பாட்டி கேட்டத்திற்கு விரக்தி புன்னகையை அவருக்கு பதிலாய் கொடுத்தவள் “புடிக்காம நடந்த கல்யாணம் பாட்டி, நான் அவங்க அந்தஸ்துக்கும் தகுதிக்கும் கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவ, என் குழந்தைக்காகத்தான் என் கல்யாணமே நடந்தது இனி அங்க எனக்கு எந்த வேலையும் இல்லை பாட்டிமா “

“அவங்களை நம்பி என் குழந்தையை குடுக்க என்னால முடியாது, யார் கண்ணுலயும் படாம எங்காவது போய் என் குழந்தையை நல்லபடியா வளத்துருவேன் “

“அம்மாடி என்ன ஆச்சுனு விவரமா சொன்ன எங்களால முடிஞ்ச உதவியை செய்வோம் “என்றார் கணபதி தாத்தா
“உங்களுக்கு ஏன் சிரமம்”
“சிரமம்லா ஒன்னும் இல்லடா மா, உன் தாத்தா பாட்டியா நினைச்சி எங்க கிட்ட சொல்லு “என்று பாட்டி சொல்ல அவளால் அவர்களிடம் எதையும் மறைக்க தோன்றவில்லை தன் வாழ்வில் திருமணத்தில் துடங்கி இதுவரை நடந்த அனைத்துயும் அவர்களிடம் சொன்னாள் மகி..

“பாட்டி இப்போ சொல்லுங்க நாங்க அங்க போகணுமா??,என் குழந்தையை அனாதை ஆசரமத்துல சேத்துடுவாங்க பாட்டி நான் உயிரோட இருந்தும் என் குழந்தை அனாதையா வளரணுமா!!?? என்னால அங்க போகமுடியாது “என்று அவள் அழ
“நீ எங்கயும் போக வேண்டாம் டா, எங்க கூட வரியா எங்களுக்கு பேத்தியா என் மகனுக்கு பொண்ணா எங்க குடும்பத்துல நீயும் ஒருத்தியா எங்ககூட இருக்கியா?“என்று எதை பற்றியும் யோசிக்காமல் சட்டென முடிவு எடுத்து அவளிடம் கேட்டுவிட்டார் லட்சுமி பாட்டி, உண்மையிலேயே அவள் இதை எதிர்பார்க்கவில்லை
“பாட்டி!!”
“எங்க கூட வந்துடுறாயா டா எங்க குடும்பத்துல ஒருத்திய எங்க பேத்திய எங்க கூட வாடா,நாங்க உன்னையும் உன் தம்பியையும் நல்லா பாத்துப்போம் “என்றார் பாட்டி அவளுக்கு உண்மையில் என்ன சொல்லுவதென்று தெரியவில்லை ஆனால் இனி இந்த ஊரில் இருக்க கூடாது என்பதில் மிக உறுதியாய் இருந்தாள் மகி..

“வரேன் பாட்டி “என்றவள், அவர்களுடன் தன் புதியதோர் வாழ்க்கை பயணத்தை துடங்க தயாரானாள் மாறனுக்கு போனில் குழந்தை பிறந்ததை சொல்லிவிட்டு,இருவருடைய உடைமைகளையும் கொண்டு வர சொன்னாள் மகி மாறனும் குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் அவள் சொன்னதை எல்லாம் எடுத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு புறப்பட்டான்...

ரோஜா குவியலாய் இருக்கும் தன் அக்காவின் மகளை கைகளில் எந்தியவன் அதான் பட்டு கன்னத்தை மென்மையாக கிள்ளி முத்தமிட்டான் “அக்கா பாப்பா அப்படியே மாமா மாதிரியே இருக்கா “என்றான்
“மாறா என்னோட செர்டிபிகேட்ஸ் எல்லாம் இருக்குல்ல “
“இருக்கு மகிக்கா “
“ஆமா ஏன் இப்போ டிரஸ் செர்டிபிகேட்ஸ் எல்லாத்தையும் கொண்டு வர சொன்ன? “
“இனி நாம இங்க இருக்க போறது இல்லை”
“என்னக்கா சொல்லுற??, இங்க இல்லாம வேற எங்க போக போற?“
“போக போற இல்லை!, போக போறோம் “
“கிளம்பு மாறா “என்று அவளும் புறப்பட
“என்ன பண்ணுறக்கா நீ??,நாம எங்க கிளம்புறோம்?, எனக்கு ஒன்னுமே புரியலை “
“ஏன் எதுக்குன்னு கேக்காத!, இனி நாம இங்க இருக்க போறது இல்லை அண்ட் நாம எங்க போறோம்னு யாருக்கும் தெரிய கூடாது முக்கியமாக ருத்ராக்கு தெரிய கூடாது மீறி ருத்ரகிட்ட சொல்லணும்னு நினைச்சா அப்புறம் நான் உயிரோடயே இருக்க மாட்டேன் “என்றாள்

“சரி நான் சொல்ல மாட்டேன் ஆனா இப்போ ஏன் நாம இங்க இருந்து போகணும்??, எனக்கு தலையும் புரியலை வாலும் புரியலை, கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு மகிக்கா “
“மாறா இனி நாம சென்னைல இருக்க கூடாது, இதோ இவங்க கூட ஊட்டி போக போறோம் இனி நாம அங்கதான் இருக்க போறோம், இதுக்கு மேல என்கிட்ட எதையும் கேட்காத “என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகிழினி
“மகிக்கா உனக்கும் மாமாக்கும் எதாவது பிரச்சனையா?, எதுவா இருந்தாலும் பேசி திர்த்துக்கலாம் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்றது சரியா இருக்காது, பாப்பா பொறந்து இருக்கறதையாவது மாமாகிட்ட சொல்லலாம்ல!? “
“வேண்டாம், எதையும் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்“என்றவள் அதற்க்கு மேல் இங்கு இருந்தால் ருத்ரா கண்டு பிடித்து விடுவான் என்று அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டாள் மாறனும் கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடிகொண்டிருக்க அவனை இங்கு தனியே விட்டு செல்ல இயலாது என்பதால் அவனையும் அழைத்து கொண்டு லட்சுமி பாட்டி கணபதி தாத்தாவுடன் ஊட்டிக்கு பயணமானாள்...

புதிய இடம் புதிய மனிதர்கள் என்று நினைத்து பயந்தவளை சுப்பிரமணி, தெய்வானை, நடேசன், சிவகாமி, சுட்டி பெண் மித்ரயாழினி என அனைவரும் அவளை தாங்கிகொண்டனர் மகிழினி மாறானுக்கு உண்மையிலேயே அவர்கள் அனைவரையும் புடித்துப்போனது..

சுப்பிரமணி தெய்வனை பிள்ளைகளான நான்கு வயது ஆதி மற்றும் ஐந்து வயது ரஞ்சனா இருவரையும் திருப்பதிக்கு வேண்டுதலுக்காக அழைத்து செல்ல கோவில் விஷேச நாள் என்பதால் அதீத கூட்டம் சாமியை தரிசிக்கும் ஆர்வத்தில் இருந்த தெய்வானை குழந்தைகளை கவனிக்காமல் விட கூட்டத்தில் சிக்கி ஆதியும் ரஞ்சனாவும் துலைந்து போனார் அதன் பின் தெய்வானையும் சுப்பிரமணியும் எவ்வளவு தேடியும் குழந்தைகள் கிடைக்க வில்லை... குழந்தைகள் கிடைக்க வேண்டும் என வேண்டாத தெய்வம் இல்லை போகாத கோவில் இல்லை அவர்களின் வேண்டுதல்களின் வர பிரசாதமாக தான் மகிழுனியையும் மாறனையும் நினைத்தனர்
கூட்டத்தில் சிக்கி துலைந்து போன தன் பிள்ளைகள் மகிழினி மாறன் ரூபதில் மீண்டும் கிடைத்துவிட்டதாக எண்ணி சுப்பிரமணியும் தெய்வானையும் புரித்து போயினர்.மகிழுயும் மாறனும் அவர்களை தங்களின் பெற்றோர்களாகவே நினைத்தனர்..

லட்சுமி பாட்டியையும் கணபதி தாத்தாவையும் தவிர மாற்ற யாருக்கும் மகிழினி ருத்ராவை விட்டு பிரிந்த வந்த காரணம் தெரியாது தெய்வனையும் சுப்பிரமணிக்கு கூட அவளிடம் ஏதும் கேட்கவில்லை “உனக்கு எப்போ உன் புகுந்த வீட்டுக்கு போகணும்னு தோணுதோ அப்போ போ டா அதுவரை யாரும் உன்னை ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டாங்க “என்று தன் பெற்ற பிள்ளையாய் நினைத்து மகிழினிக்கு ஆதரவாய் இருந்தார் தெய்வானை

கடந்த கால சிந்தனையில் இருந்தவளை ஆதினியின் “அம்மா “என்ற அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வந்தது
“என்ன டா செல்லம் “
“அம்மா விளையாட போலாம் வாங்க “என்று ஆதினி அழைக்க மகிழினிக்கும் மாறுதல் தேவை பட்டது “சரி டா குட்டி அம்மா போய் டிரஸ் மாத்திட்டு வரேன் நாம பார்க் போய் விளையாடலாம் “என்று மகி சொல்ல
“ஐ!!! ஜாலி “என்று துள்ளளோடு ஆதினி சொல்ல ஆதினி கன்னத்தில் முத்தமிட்டு உடை மாற்ற சென்றாள் மகி..
ஆதினியை அழைத்துக்கொண்டு மகிழினி அருகில் இருக்கும் பார்க்குக்குள் செல்ல அங்கு ஆதினி போல் நிறைய குழந்தைகள் அவர்கள் பெற்றோருடன் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்..

தந்தை கட்டாயத்தின் படி மீட்டிங்காக ஊட்டி வந்த ருத்ரா மீட்டிங் முடித்து விட்டு ஓய்வெடுக்க ஐந்து நட்சத்திரம் ஹோட்டலில் தன் அறைக்கு சென்றான். இங்கு வந்ததில் இருந்தே உள்ளுக்குள் ஒருவித படபடப்பு ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை மனதினை ஒருநிலை படுத்த முடியாமல் குளியலறைக்குள் புகுந்தவன் ஷவரை திறந்து அதன் அடியில் நிற்க குளிந்த நீர் அவன் தேகத்தில் பட்டு அவன் உடலை குளிர்வித்தது அப்படியே நின்றவன் கண்களை முடி மனதை ஒருநிலை படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தான் எப்போதும் உடலையும் மனதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் தான் ஆனால் இன்று அவன் மனம் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க அதை கட்டுக்குள் கொண்டுவர கொஞ்சம் சிரம பட்டுத்தான் போனான்..
மூன்றாரை வருடமாக அவனுள் மீண்டும் வரும் கேள்வி “ஏன் டி என்னை விட்டு போன!!? “என்ற கேள்வி அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது அவள் மேல் கோவம் இருந்தாலும் அவள் மேல் கொண்ட காதல் மனம் அவளை கண்டுவிட முடியாதா என்று ஏக்கம் கொண்டது..அவள் சிந்தனையிலேயே இருந்தவன் குளித்து முடித்து வெளியே வர அதே நேரம் போன் அலறியது யாராக இருக்கும் என்று அதை எடுத்து பார்த்தவன் முகத்தில் சலிப்பு அதை அட்டென்ட் செய்யாமலே போனை பெட்டில் போட அதே நம்பரில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வர எரிச்சல் தான் வந்து அவனுக்கு மூன்று முறை போனை அட்டென்ட் செய்யமலேயே விட்டவன் நான்காவது முறை போன் வர ஏதேனும் அவசரமாக இருக்குமோ என்று அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தான் ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை

“தேவ்..”என்ற கவலை தேய்ந்த குரலில் வேதவல்லி அழைக்க அவனிடம் சிறு மாற்றமும் இல்லை அவன் மௌனமாகவே இருக்க கடந்த ஒரு வருடமா நடப்பது தான் இருந்தாலும் இன்றாவது தன் பிள்ளை தன்னிடம் பேசிவிட மாட்டானா என்று அல்ப ஆசைதான் அவருக்கு
“நான் பண்ணது தப்புதான் தேவ் அதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையை குடுக்காத , நான் பெத்த பிள்ளையே என்னை வெறுத்து ஒதுக்கினா என்னால எப்படி தாங்கிக்க முடியும், அம்மாகிட்ட பேச மாட்டியா தேவ் ப்ளீஸ் தேவ் ஒரு ஒரு முறை அம்மானு கூப்டு நீ அம்மானு கூப்பிட்டு ஒருவருஷத்துக்கு மேல ஆயிடுச்சி உன் கோவம் குறையும் குறையும்னு ஒவ்வொரு நாளும் நான் கத்துக்கிட்டு இருக்கேன் ஆன உனக்கு என் மேல இருக்க கோவம் குறைஞ்ச பாடு இல்லை, என்னால முடில தேவ் என்கிட்ட பேச மாட்டியா “என்று அவர் அழ, அவன் மனம் எரிமலையாய் கொதிக்க துடங்கிவிட்டது தன் தாயின் கண்ணீர் அவனை கரைக்க வில்லை அவனை மேலும் மேலும் இறுகவைத்தது வேதவல்லியின் அழுகையை கேட்டு எரிச்சல் அடைந்தவன் போனை ஆப் செய்து பெட்டில் தூக்கி போட்டான்..




❤️❤️❤️ஹாய் டியர்ஸ் ஸ்டோரி எப்படி போய்ட்டு இருக்கு??, கதைல இருக்க நிறை குறைகளை மறக்காம சொல்லுங்க❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 
Status
Not open for further replies.
Top