உயிரே 5
அவள் அவனை விட்டு விலக விலக கோபம் கொண்டவன் அவளை அடைய அசைகொண்டான் எங்கே தன்னை விட்டு விலகி விடுவாளோ என்ற பயமும் அதில் இருந்ததை அவள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.அவளை இழுத்து இதழை வன்மையாய் சிறைப்பிடிக்க அதையே தாங்க முடியாமல் திமிறியவளை முரடனாக மாறி அடக்கி அவளை ஆட்கொள்ள துவங்கினான்..
அவன் கோபத்தை பார்த்து பயந்தவள் கண்களை இறுகமூடிக்கொண்டாள் அவனின் படர்ந்த மார்புக்கு அடியில் சிக்கிகொண்டவள் அவன் பாரம் தங்க முடியாமல் நெளிய ,ஆடவனோ தன்னவளை தனதாக்கிக்கொள்ளும் ஆவலில் ஆவளுடன் இழைய,கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் தன்னை இழந்துகொண்டோருந்தாள் மகி இங்கு இருவர் மனமும் ஒன்றோடு ஒன்று இணையாமலே தாம்பத்தியம் என்னும் கணவன் மனைவி பந்தத்தில் இருவரும் இணைந்தனர்..
முதலில் அவனை காண பயந்தவள் முடிய கண்களை திறக்கவே இல்லை அவளை காயப்படுத்துவதற்காகவே அவளை ஆட்கொண்டவன் அதன் பின் அவளை விட்டு விலக முடியாமல் மேலும் மேலும் அவளை நாடினான் இரவு முழுவதும் அவளை உறங்க விடாது தனது ஆசையாய் அவளிடம் தீர்த்துக்கொண்டே இருந்தான் விடிந்த பிறகு அவளை விட்டு விலகி படுத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை தன்னோடு அணைத்துக்கொண்டு உறங்கிவிட்டான்..அவள் உடலும்,மனமும் ரணமாய் வலித்தது காதலோடு கூடியிருந்தால் இந்த வலி அவளுக்கு தெரிந்திருக்காதோ என்னவோ.
அவள் மேல் உள்ள கோவத்தில் வெறுப்பிலும் அல்லவா அவன் அவளை நாடினான், உடல் வலியை விட மன வலிதான் அவளை மிகவும் வாட்டியது.. காதலாய் கூடி இருந்தால் அவனுடைனான நெருக்கம் இனித்திருக்கோமோ அவளுக்கு!!
காலை எழுந்தவன் தன் அணைப்பில் படுத்திருந்தவளை வருட அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அவள் இதழில் மென்மையாய் முத்தமிட்டவன் அவள் உடலில் தன் பற்கள் பட்டு கண்ணீசிவந்திருந்ததை பார்த்து ஏனோ தன் மேலேயே கோவம் கோவமாய் வந்தது அவனுக்கு ‘கொஞ்சம் பொறுமையா அவளை ஹேண்டில் பண்ணி இருக்கலாம் ‘என்று நினைத்தவன் அவள் உடலில் கண்ணீசிவந்து இருந்த இடத்தில் களிம்பை பூசிவிட்டு மீண்டும் அவளை அணைத்துக்கொண்டு தூங்கினான்
காலை எழுந்தவளுக்கு மனம் முழுவதும் தாயின் ஆப்ரேஷன் பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது அவள் எழுந்து குளித்து தயாராகி வர ருத்ரா அப்போதும் எழ வில்லை காலை பத்து மணிக்குள் பணத்தை காட்ட வேண்டுமே என்று நினைத்தவள் எப்படி கேட்பது என்று தயங்கினாள் ருத்ரா எழுந்து குளிக்க சென்றான்
அவனாக பணத்தை தருவான் என்று அவள் எதிர்பார்த்து காத்திருந்தாள் அவன் குளித்து உடை மாற்றி வந்து ஆபீஸ் கிளம்ப, “சார்!!”என்றாள்
“என்ன!? “
“பணம் “என்று அவள் கேட்க, அவனிடம் பணத்தை பற்றி வேதவல்லி ஏதும் சொல்லாததால் அவனுக்கு அவள் சூழ்நிலை ஏதும் தெரியாமல் போனது அவள் திடிரென்று பணம் என்று கேட்டதும் கோபத்தோடு அவளை எரிக்கும் பார்வையை அவள் மேல் விசினான் அவளை பணத்திற்காக அலைப்பவள் என்று தவறாக புரிந்துகொண்டான் .. அதுதான் அவள் மேலான அவன் எண்ணமும் கூட,
அவனிடம் சொல்லி இருப்பார் என்று நினைத்தவள் பணம் என்று மட்டும் கேட்க அவனோ அதை தவறாக புரிந்துகொண்டான்
அவள் முகத்தில் சில பண கட்டுக்களை விட்டெரிந்தான் ருத்ரா அந்த செயலிலேயே கூனி குறுகி போனாள் மகி
“என்ன பொறுத்த வரைக்கும் நீயும் பணத்துக்காக உடம்பை விக்குறவங்களும் ஒண்ணுதான் என்ன வெளில இருந்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருத்தியை கூட்டிட்டு வரதுக்கு பதில் தாலிங்குற லைசன்ஸ் குடுத்து இங்கேயே தங்கவாச்சி பணம் தரேன் அவ்ளோதான் வித்தியாசம் “என்று நெருப்பாய் வார்த்தைகளை அள்ளி அவள் மேல் கொட்டினான் அவளை வார்த்தைகளால் வதைத்தான் அவள் மேல் இவ்வளவு கோவத்தையும் வெறுப்பையும் ஏன் காட்டுகிறான் என்பதை அவன் மட்டுமே அறிவான்..தான் நினைத்ததுதான் சரி என்று நினைத்தவனுக்கு அவள் புறம் இருக்கும் நியாயம் கண்ணுக்கு தெரியவில்லை தெரிந்துகொள்ளவும் விரும்ப வில்லை அவனின் இவ்வளவு வெறுப்பிற்கும் கோவத்திருக்கும் காரணமாளோ ஏன் தன்னை இவ்வளவு வெறுக்கிறான் என்று புரிந்துகொள்ள முடியாமலேயே நொந்து போனாள்
அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவளை உயிரோடு கொன்றது பணத்தை விட்டெரிந்தவன் ஆபீஸ் கிளம்பிவிட்டான் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் லட்சம் குண்டுஉசிகளை கொண்டு அவள் உடலை குத்துவது போல் வலிக்க தன்னை நினைத்து அருவறுத்தாள் என்ன வார்த்தையை சொல்லிவிட்டான் இதை விட ஒரு பெண்ணுக்கு என்ன அசிங்கம் இருந்திட முடியும் உயிராய் நினைக்கும் கற்பையே கலங்கபடித்திவிட்டானே என்று கதறினாள் தேம்பி தேம்பி அழுதவளுக்கு ஆறுதல் சொல்லத்தான் ஒருவரும் இல்லை
தன்னை நினைத்து அழுது கரைந்தவள் தாயின் ஆப்ரேஷனுக்கு நேரம் நெருங்குவதை உணர்த்தவள், அவன் விட்டு எறிந்த பணத்தை தொடவே உடல் கூசியது, இந்த பணத்தை எடுத்தாள் அவன் சொன்னது உண்மை என்று ஆகிவிடும் ஆனால் இந்த பணம் இல்லாவிட்டால் அன்னையை காப்பாற்ற முடியாதே என்று எண்ணி அவளால் அழ மட்டுமே முடிந்தது
பணத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல அங்கு முதலில் ஒரு மைனர் ஆப்ரேஷன் செய்து அதன் பின்னே மேஜர் ஆப்ரேஷன் செய்ய முடியும் என்று டாக்டர் சொல்ல அதன் படியே மைனர் ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு செய்தனர் இதில் ஒரு சிக்கலும் உண்டு இந்த ஆபரேஷனில் அவர் உயிர்க்கும் ஆபத்தும் வரலாம் என டாக்டர் சொல்லஅதை கேட்டு அதிர்ந்தவள் வேறு வழி இன்று சம்மதம் தெரிவித்தாள்
“முதலில் நடந்த மைனர் ஆப்ரேஷனில் வசுந்திரா உடல் மிக மோசமான நிலைக்கு போக அந்த ஆப்ரேஷன் செய்யும் போதே அவர் உயிர் இம்மண்ணுலகை விட்டு வசுந்திரா விண்ணுலகிற்கு சென்றார்
தன் தாயிகக்காக என்னன்னவோ கஷ்டங்களை தங்கிகொண்டவளால் அவர் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை மாறனும் உடைந்து போனான் தன் தாய்க்காக அணைத்து கடமைகளையும் தன் செலவிலயே செய்ய வேண்டும் என்று நினைத்தவள் அவளிடமிருந்த தொகை செலவு செய்தவள் மேலும் வெளியில் அவள் வருமானத்திற்கு மீறி கடன் வாங்கினாள் அதை தவிர வேறு வழியும் அவளுக்கு தெரியவில்லை மீண்டும் அவனிடம் பணத்திற்காக போய் நிற்க அவள் மனம் இடம் தரவில்லை
எல்லாம் சடகுகளும் முடிந்துவிட்டது அழுது அழுது கரைந்தவள் தன்னை தானே தேற்றிக்கொண்டு மாறனை தேற்றினாள் தானும் இடிந்து உட்கார்ந்தால் மாறனுக்கு யார் ஆதரவாக இருப்பார் என்று எண்ணியவள் தனக்குள்ளே சோகங்களை மறைத்து அவனை தேற்றினாள் அவள் இங்கு வந்து இன்றோடு இருப்பது நாள் கடந்து விட்டது
“ஏன் அக்கா மாமா, அத்தை எல்லாம் வரலை “என்று அவன் கேட்டதற்கு அத்தைக்கு உடம்பு முடியலை மாமா மும்பைல இருக்கார் அவரால இப்போ வரமுடியாத சூழல் அப்புறம் தேவ் வேலை விஷயமா வெளில போய் இருக்கார் “என்று பல பொய்களை சொல்லி சமாளித்தாள் அவனும் அதை. நம்பி சரி என்றான்
இங்கு வந்து இருபது நாள் ஆகிவிட்டது யாரும் வரவும் இல்லை போன் பண்ணவில்லை அவர்களை பற்றி தெரிந்தவளுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இதற்கு மேலும் இங்கேயே இருந்தால் எதாவது பிரச்சனை வரும் என்று நினைத்தவள் ருத்ரா வீட்டிற்கு கிளம்ப தயாரானாள்
தம்பியை இங்கே தனியே விட்டுவிட்டு செல்ல மனம் இல்லாதவள் தற்போதைக்கு அவன் ஹாஸ்டலில் தாங்குவதுதான் சரி என்று பட்டது “மாறா இப்போதைக்கு நீ ஹாஸ்டல தாங்கி படி அதுதான் நல்லது என்றவள் தன் தம்பியை காலேஜ் ஹாஸ்டலில் தங்க சொல்லி அதற்கான முன் பணத்தை அவனிடம் கொடுத்தாள்
வேதவல்லிக்கு மகியின் தாய் இறப்பு பற்றி தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்தார் ஆனால் இதை பற்றி பிள்ளையிடமோ கணவனிடமோ அவர் தெரிவிக்க வில்லை அதே போல் மகிழினியும் கணவனுக்கோ மாமனாருக்கோ தெரிவிக்க வில்லை, மகிழினி ருத்ராவிற்கு வர விருப்பம் இல்லை என்று நினைத்துக்கொண்டாள்
திருமணத்திற்கு மறுநாள் அங்கிருந்து வந்ததோடு சரி அதோடு இன்று தான் மீண்டும் அந்த வீட்டிற்கு செல்கிறாள் ருத்ரா வீட்டிற்கு வந்த மகியை வேதவல்லி கண்டுகொள்ளவில்லை இது அவள் எதிர்பார்த்தது தான் என்பதால் பெரிதாக அவளும் எடுத்துக்கொள்ள வில்லை அவள் வீட்டிற்கு சென்ற போது ருத்ரானும் வீட்டில் இல்லை அவன் எங்கே என்று தேடும் மனநிலையிலும் அவள் இல்லை
மறுநாள் காலை அவள் எழ கொஞ்சம் லேட் ஆனதும் வேதவல்லி கத்த துடங்கி விட்டார் அவள் குளித்து தயராகி கீழே வர “என்ன மகாராணிக்கு பொழுது வீடிஞ்சும் தூக்கம் கலையலையா?, உன்ன வந்து ஒருத்தர் எழுப்பி விடுவார்களா!? “என்று கோபமாய் கத்தினார்
“மன்னிச்சிடுங்க எழ கொஞ்சம் லேட் ஆயிடுச்சி “
“இப்படி லேட்டா எழுந்தா வேலையெல்லாம் யார் செய்வா உன் பாட்டியா வந்து செய்வங்க!, போடி போய் சீக்கிரம் காபி போட்டு கொண்டுவா “என்றார்
“சரிங்க அத்தை “என்றவள் காபி போடா கிச்சனுக்கு சென்றாள் கிச்சனை பார்த்தவள் மலைத்து போய் நின்றாள் அவள் வீட்டில் சாதாரமான சின்ன சமையல் கட்டில் சமைத்தவளுக்கு அந்த சமையல் அறை பிரம்மாண்டமாக தோன்றியது நவீன வசதிகளுடன் கூடிய மாடல் கிச்சன் அது அதை பார்த்து மலைத்து போனவள் ஒவ்வொன்றாக பார்த்து காபி பொடியையும் சக்கரையும் தேடி கண்டுபிடிக்கவே அவளுக்கு அரைமணி நேரம் பிடித்தது அதற்குள் வேதவல்லி குரல் கொடுக்க “இதோ வந்துட்டேன் அத்தை “என்றவள் அவசர அவசரமாக காபியை கொண்டுவந்தாள்
“ஒரு காபி போட இவ்வளவு நேரமா உனக்கு”என்று கத்தியவர் அதை வாங்கி பருகினார் காபியின் ருசியில் தன்னை மறந்து அதை ருசித்து குடித்த வேதவல்லி மறந்தும் அவளை புகழவும் இல்லை
“நாட் பேட், மார்னிங் டிபன் அண்ட் ஆப்டர்நூன் லஞ்ச் நைட் டின்னெர் எல்லாம் இனி நீதான் பண்ணனும் “என்றார்
“ஹான் அப்புறம் டைம்க்கு சாப்பாடு ரெடி ஆகணும் யார் யாருக்கு என்ன என்ன புடிக்கும்னு அந்த லிஸ்ட்ல இருக்கு அதை பாத்து தெரிஞ்சுக்கோ அண்ட் என்ன என்ன குக் பண்ணனும் பார்த்து சீக்கிரம் ரெடி பண்ணு “என்றார் அவர் சொன்ன லிஸ்ட்டை எடுத்துப் பார்த்து மயக்கம் வராத குறைதான் அவ்வளவு ஐட்டங்கள் அதில் இருந்தது அதை எல்லாம் செய்து முடிக்க ஒருநாள் பாத்து அவைகளை எல்லாம் சமைக்க வேண்டும் எனில் அவள் இருப்பத்தி நான்கு மணி நேரம் பாத்தது வேதவல்லியை பாவமாக பார்த்தவள்
“என் மூஞ்சில என்ன இருக்கு “
“அத்தை வேலைக்கு போகணும் இதை எல்லாம் செய்து முடிக்க ஒரு நாள் ஆயிடும், சமையல் காரங்க கிட்ட சொல்லி செய்ய சொல்லுறீங்களா?”என்றாள் மெல்லிய குரலில்
“ஓஹோ!!, மகாராணிக்கு வீட்ல வேலை செய்ய முடியாதோ!!?, இங்க எந்த வேலைகாரங்களும் இல்லை எல்லாரையும் வேலையை விட்டு நிறுத்திட்டேன் சோ இனி எல்லா வேலையும் நீ தான் செய்யணும் அப்புறம் நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம்”என்று பெரிய இடியை அவள் தலையில் போட்டார்
அந்த வேலையை நம்பி தானே கடன்களையெல்லாம் வாங்கியிருந்தாள் வேலைக்கு போகவிட்டால் அதுமட்டுமில்லாது மாறனின் படிப்பு செலவு எப்படி பார்ப்பது கடன்களை எப்படி அடைப்பது என்று தவித்துக்கொண்டு
நின்றிருந்தாள்
“ இன்னும் போகாம என்ன பண்ணிட்டு இருக்க சீக்கிரம் போய் வேலையை பாரு “என்று அவளை மேலும் பேச விடாமல் விரட்டினார் அவளும் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள் அந்த லிஸ்ட்ல் இருக்கும் ஒவ்வொரு டிஷ்ஷையும் செய்ய துவங்கினாள் வேர்த்து விருவிருக்க காலை உணவை தயார்செய்து வேதவல்லியை அழைத்து உணவை பறிமாறினாள்
அவர் சாப்பிட்டு முடித்ததும் சாப்பிடுவதை கூட மறந்து அடுத்து மதிய சமையலில் இறங்கினாள் மதிய உணவினை சமைத்து வேதவல்லியை அழைத்து சாப்பிட பரிமாறியவள் வயிறு வலிக்கவே துவங்கிவிட்டது காலையில் இருந்து ஏதும் சாப்பிடாமல் இருப்பதால் மயக்கம் வருவது போய் இருக்க தன்னை நிலைப்படுத்திகொண்டவள் வேதவல்லி சாப்பிடும் வரை பொறுத்து இருந்தவள் அதற்கு மேல் பொருக்க முடியாமல் அங்கிருந்த சாப்பாட்டை சாப்பிட்டாள் அன்று சமையல் கட்டிலே அவள் நேரம் போக அடுத்த வந்த நாட்களும் அப்படியே போக அன்றி இரவு அனைத்து வேலைகளையும் முடித்து அறைக்கு போய் உட்கார்ந்தவள் மனம் முழுவதும் எப்படியாவது வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணமே நிறைந்திருந்தது
திருமணம் ஆன மறுநாள் வெளிநாட்டிற்கு கிளம்பியவன் ஒரு மாதம் கழித்து இன்றுதான் வீட்டிற்கு வருகிறான் அதுவும் மூச்சி மூட்ட குடித்துவிட்டு தள்ளாடிப்படி
இவ்வளவு நாள் அவன் இல்லாது அவள் நிம்மதியாய் இருக்க அவள் நிம்மதியை கெடுக்க இதோ வந்துவிட்டன் ருத்ரதேவ் அவனை அந்த நிலையிலும் பார்த்தவளுக்கு அன்று நடந்ததது நினைவு வர உடல் நடுங்க துவங்கிவிட்டது அன்று அவன் தன்னிடம் நடந்து கொண்டதை நினைத்தவளுக்கு பயம் பிடித்துக்கொள்ள அன்று போல் என்றும் தன்னை காயப்படுத்துவானோ என்று பயந்தவள் அமைதியாய் எழுந்து அவனுக்கு வழி விட்டு நின்றாள் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் அவளை துளைதெடுக்கும் பார்வையை அவள் மேல் பதிக்க அந்த பார்வையை தங்க முடியாமல் அவள் தலைகுனிந்துகொண்டாள் அவள் அருகில் வந்தவன் அவளை விலகிவிட்டு பெட்டில் பொத்தென விழுந்தவன் உறங்கி போனான்.
அவன் முகத்தில் தெரிந்தது என்ன உணர்வென்று அவளால் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த பார்வையின் அவள் உடல் சில்லிட்டு போனது ‘என்ன பார்வை இது இதற்கு என்ன அர்த்தம் ‘என்று புரியாமல் தூங்கும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் கிரேக்க நாட்டு சிலையே அவள் எதிரில் தூங்கிகொண்டிருபவனை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் இவன் அழகிற்கு தான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள் தன்னை ஏன் இவன் கல்யாணம் செய்ய வேண்டும் இவன் நினைத்தால் உலக அழகிகள் கூட இவன் காலடியில் விழுந்து கிடப்பார்கள் என்று நினைத்தவள் அவனையும் தன்னையும் ஓப்பிட்டு பார்த்தாள் பால் நிறம் மேனி, எதிர் நிற்பவர் துளைதெடுக்கும் சாம்பல் நிற கண்கள், கூர்மையான நாசி சிவந்த அதரங்கள், உடற் பயிற்சியால் முறுக்கேறிய ஆம்ஸ், சீஸ் பாக்ஸ் துளியும் தேவையற்ற சதைபிடிப்பில்லாத தேகம் என மேல் மாடல் போல் அவன் இருக்க, பொதுவான நிறம், ஒப்பனை ஏதும் இல்லாமையே பார்ப்பவரை சட்டென ஈர்க்கும் கலையான முகம் ஒல்லியும் இல்லாமல் குண்டும் இல்லமல் வளைந்து நெளிந்த உடல் இடைவரை நீண்ட கூந்தல் என பார்ப்பவரின் மனதை சட்டென ஈர்க்கும் அவள் அழகு இப்படி அவள் இருக்க தன் நிறம் என்ன?? அவன் நிறம் என்ன?? ஏணி வைத்தால் கூட எட்டாத இடத்தில் இருக்கும் அவன் எங்கு??இவன் ஏன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்?? இன்று யோசித்தவளுக்கு ஏன் என்ற காரணம் புரியவே இல்லை அவளின் அனைத்து கேள்விகளுக்கும் விடை அவன் மட்டுமே அறிவான்
அதற்க்கு மேல் இதை பற்றியும் சிந்திக்காமல் போய் படுத்துவிட்டாள் காலை அவள் கண்விழிக்கும் போது அவன் அணைப்பில் இருந்தவள் பதறி எழ முற்பட அவன் விட்டால் தானே எழ முற்பட்டவள் மீண்டும் அவன்மேலே விழுந்தாள் அவனோ நன்கு தூங்கிக்கொண்டிருக்க எழுந்து திட்டுவானோ என்ற பயத்தில் அவள் அவனிடமிருந்து விலக பார்க்க அவனோ மேலும் அவளை இறுக்கிக்கொண்டு தூங்கினான்.. அவனிடம் விலக போராடி அதில் பலன் இல்லாமல் தோற்றவள் அவன் முகம் நோக்கிமெல்லிய குரலில் “விடுங்க தேவ் “என்றாள் கெஞ்சலாக அவளின் குரலில் என்ன இருந்ததோ கண்களை முடி இருந்தவன் இதழ்கள் விரிய அவன் அழகில் அவள் சொக்கி போய் அவனை பார்க்க தன்னிலை உணர்ந்தவள் ‘ என்ன பண்ணிட்டு இருக்க லூசு மாதிரி!!, இதை மட்டும் அவன் பார்த்தா அவ்வளவுதான் அப்புறம் இதுக்கும் சேர்த்து உன்ன வச்சி செய்வான், ஏற்கனவே உன்ன பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது, இல்ல நீ அவன சைட் அடிச்ச விஷயம் மட்டும் அவனுக்கு தெரிஞ்சது அப்புறம் நரசிம்ம அவதாரம் எடுத்து உன்னை வதம் பண்ணாலும் பண்ணிடுவான் ‘என்று தன் செயலை நினைத்து நொந்துகொண்டாள்
‘தன்னால் எப்படி அவனை ரசிக்க முடியும் தனக்கு தான் அவனை புடிக்காதே தன்னை தான் அவன் சித்திரவதை செய்கிறானே அப்படி இருக்க அவனை எப்படி நாம் ரசிக்கலாம் இவ்வளவு நாள் அவனை கண்டபோது தோன்றததா உணர்வு இப்போது ஏன் தோன்றுகிறது ஒரு வேலை மஞ்சள் கயிறு செய்யும் மாயமா ‘என்று நினைத்தவள் தலையை உலுக்கிக்கொண்டு அவனிடம் மீண்டும் கெஞ்ச தயாரானாள் அன்று அவன் அவளை விலை மாது என்று சொன்னது அவள் நினைவில் இல்லை
அவன் அணைப்பில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தில் நெளிந்தவள் “தேவ் ப்ளீஸ் விடுங்க “என்று கொஞ்சலோடு கெஞ்சும் குரலில் கேட்க அது அவனுக்கு திருப்தியாகத்தான் இருந்தது மயக்கும் புன்னகையை இதழில் தவழ விட்டிருந்தவன் கண்களை திறக்காது அவளை விடுவித்தான் விட்டால் போதும் என்று அவள் அங்கிருந்து அவசர அவசரமாக குளியல் அறைக்குள் நுழைந்தவள் குளித்து தயாராகி ‘லேட் ஆகிடுச்சே இன்னைக்கும் திட்டு வாங்கணுமா!”என்று நினைத்தப்படியே கீழே சென்றாள்
‘இவ்வளவு அவசர அவசரமாக எங்கு செல்கிறாள் ‘என்று நினைத்தவன் அவன் தளத்தில் இருக்கும் ஜிம்முக்குள் நுழைந்து வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மேற்கொண்டான் இரண்டு மணி நேரம் வேர்த்துகொட்ட உடற்பயிற்சி செய்தவன் அறைக்குச் சென்று குளித்து ஆபீஸ்க்கு தயாராகி கீழே வர அங்கு மகி அவசர அவசரமாக காலை உணவை சமைத்து டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தாள்
“ஒரு வேலையை கூட ஒழுங்கா செய்ய துப்பில்லை.. உன் மார்னிங் பிரேக்பாஸ்ட் எவ்ளோ நேரம்தான் சமைப்ப எவ்ளோ நேரம் வெயிட் பன்னிட்டு இருக்கறது!! “என்று வேதவல்லி அவளை திட்டிக் கொண்டிருந்தார் புருவ முடிச்சோடு அனைத்தையும் கவனித்துகொண்டிருந்தவன் சாப்பிட அமர அவசர அவசரமாக சமையலை முடித்து அவனுக்கு பரிமாற வந்தாள் மகிழினி.. டேபிளில் அடுக்கிவைத்திருந்த அணைத்து டிஷ்ஷையும் பார்த்தவனுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது ‘எப்படி இவ்வளவையும் குறுகிய நேரத்தில் செய்து முடித்தாள்’என்று யோசித்தவன் அவளை பார்த்தான் அவளோ அவன் முகத்தையே பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுக்கு தான் செய்த உணவு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற பயத்தில்
அவனோ ஏதும் சொல்லாமல் சாப்பிட்டுகொண்டிருக்க,உணவின் ருசி கேவலமாக இருந்தால் அவன் இவ்வளவு அமைதியாய் இருக்க வாய்ப்பு இல்லை ‘சமையல் கேவலமாக இல்லை போல ‘என்று நினைத்துக்கொண்டாள்..
அவளின் கை பக்குவத்தில் அவன் வியந்துதான் போனான் ஒவ்வொரு உணவும் அத்தனை ருசியாக இருந்தது தன் மனைவியின் கை பக்குவதை நினைத்து மனதில் மெச்சிகொண்டவன் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை...
‘எப்படி இவ்ளோத்தையும் தனியா செய்றா!?, இவளை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது.இதே போல மூணு வேளையும் சமைச்சிட்டு இருந்தா இனி இவ சமையல்கட்டோடதான் குடும்பம் நடத்தணும் ‘என்று நினைத்தவன்
“இன்னும் ஆபீஸ் கிளம்பாம என்ன பண்ற!? “என்றான் கர்ஜனையாய் அவன் கேள்விக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் முழிக்க
“கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாதா “என்று அதற்கும் எரிந்து விழுந்தான் ,
“அது.. அது வந்து.. “என்று
“இப்போ எதுக்கு வந்து போயினு இழுத்துகிட்டு இருக்க!!”என்றான் எரிச்சலாய்
“உன் வேலையை உன் அப்பனா வந்து பாப்பான் “என்று அவன் சொல்ல அவளுக்கு சட்டென்று கண் கலங்கி விட்டது ‘என் அப்பாவை ஏன் இழுக்கிறான், அவர் இருந்திருந்தால் கண்டிப்பா என்னை இவ்ளோ கஷ்டப்பட விட்டு இருக்க மாட்டார்’என்று மனதில் நினைத்தவளுக்கு தந்தையும் நினைவு வந்து கண் கலங்க செய்தது
“எதுக்கு எடுத்தாலும் அழுது அழுது ட்ராமா போடுறியா “என்று அதற்கும் நான்கு திட்டு விழுந்தது அவளுக்கு
நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் திட்டவேண்டும் என்ற கோவத்தில் “உங்க அம்மாதான் வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னாங்க சார் “என்றாள் மகி
அவன் வேதவல்லியை பார்க்க எங்கே தன்னை திட்டிவிடுவனோ என்ற பயத்தில் “இல்லைப்பா எதுக்கு வேலைக்கு போய்ட்டு கஷ்ட படனும் அதான் வீட்லயே இருக்க சொன்னேன்”என்றார்
“அம்மா சொன்ன உடனே இதான் காரணம்னு மகாராணி வீட்டிலேயே உட்கார்ந்து நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கலாம்னு பிளான் பண்ணிட்டீங்களோ? “என்றான் நக்கலாய், அவள் அமைதியாய் இருக்க,
“இடியட், யூ சுட் பி இன் ஆபீஸ் விதின் ஹாஃப் அன் ஹவர், காட் இட் “என்றான் கட்டளையாய்.
“ஓகே சார் “என்றவள் உடனே அவள் அறைக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பிவிட்டாள் பஸ்ஸில் ஏறி அவன் சொன்ன நேரத்துக்குள் வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...
இந்த ஒரு மாதம் ஆபீஸ் வராமல் போனதால் வேலை மலை போல் குவிந்து கிடந்தது வேலை எல்லாவற்றையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் இல்லை எனில் அதற்கும் அவனிடம் திட்டு வாங்க வேண்டும் என்று வேலையை பார்க்க துடங்கினாள்
அவள் கேபினில் வேலை பார்த்துக்கொண்டிருக்க அருண் அங்கு வந்தான் ..
அருண் மகி இந்த ஆபீஸ் சேர்ந்த நாளில் இருந்தே நல்லா நண்பனாக அவளுக்கு தெரியாதவைகளை சொல்லி கொடுத்தும், உதவி செய்தும் என அவளுக்கு துணையாய் இருக்கும் நல்ல தோழன் அவள் அம்மாவின் இறப்பில் உதவிக்கு யாரும் இல்லாமல் அவள் கஷ்டப்படும் போது அவளுக்கு பக்க பலமாய் இருந்தவன்..
கட்டிய கணவன் கூட வராதா போது பழகிய ஒரே காரணத்திற்காக அருண் வந்து அவளுக்கு பல உதவிகளை செய்தான் சொந்தம் எல்லாம் தூரம் நின்று பார்த்துவிட்டு போய்விட அருண் அவளை அப்படியே விட்டு செல்லவில்லையே அவள் நிலையை புரிந்து அல்லவா அவளுக்கு உதவினான் .. தாயின் இறப்பிற்கு பிறகு அருண் மேல் மதிப்பும் மரியாதையும் கூடிப்போனது மகிழினிக்கு
“நீ ஓகே வா மகி “
“ஓகே அருண் “என்றாள்
“மாறன் எப்படி இருக்கான் “
“பரவால்ல, இப்போதைக்கு ஹாஸ்டெல்ல தங்க சொல்லி இருக்கேன்”
“ஹ்ம்ம், நீ “
“கொஞ்ச நாளைக்கு நானும் லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கலாம்னு இருக்கேன் “என்று பொய் உறைத்தாள். உண்மையை சொல்ல முடியாது என்றுதான் பொய் சொன்னாள்..ருத்ராவிற்கு அவளுக்கும் திருமணம் ஆனது யாருக்கும் தெரியாது என்பதால் அருணிடம் பொய் செல்ல வேண்டிய நிலை அவளுக்கு.
“சாப்டியா மகி “என்றான் அக்கறையான நண்பனாய்
ஹ்ம்ம்ம் சாப்டுட்டேன் “என்றவளை அவன் சந்தேகமாக பார்க்க
“பொய் சொல்லாத நீ இன்னும் சாப்பிடவே இல்லை தானே “என்றான் “ஹ்ம்ம் “என்றாள்
“இந்த இதை சாப்பிடு “என்று ஒரு லன்ச் போஸ்ஸை அவளிடம் நீட்டினான்
“இல்லை அருண் இப்போ சாப்பிடலாம் டைம் இல்லை, வேலையை முடிச்சிட்டு போய் சாப்ட்டுக்குறேன் இப்போதைக்கு வேலையை சீக்கிரம் முடிச்சாதான் நிம்மதி” என்றாள்
“அதெல்லாம் முடிக்கலாம் நீ முதல்ல சாப்பிடு”என்று அவளை அழைத்துக் கொண்டு வந்து சாப்பிட வைத்தான் அருண் இதை எல்லாம் அவன் அறையின் அமர்ந்து சிசி டிவி கேமராவில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரதேவிற்கு சினம் தலைக்கு ஏறியது...
காலையில் இருந்து அதிக வேலையால் சாப்பிட கூட நேரம் இல்லாமல் வந்துவிட்டாள் சாப்பிடு என்று சொல்ல கூட அங்கு அவளுக்கென ஒரு ஜீவன் இல்லை.
அவசர அவசரமா சாப்பிட்டு வேலையை துடங்கினாள் மதிய சாப்பிட கூட போகாமல் ஆறு மணி நேரம் அமர்ந்த இடத்தில் இருந்து எழாமல் வேலை பார்த்தவளுக்கு கால் வலியே வந்துவிட்டது காலையும் ஓய்வில்லாமல் வேலை செய்து இங்கு வேலை செய்தவளுக்கு அதற்குமேல் முடியவில்லை செய்த வரை எடுத்துக்கொண்டு ருத்ராவிடம் சென்றாள்
அவனிடம் பைலை வைக்க அதை பார்வையிட்டவன் அவளை கேள்வியாய் பார்த்து “வாட் இஸ் திஸ்!? “என்றான் கர்ஜனையாய்
“சார் மீதி ஒர்க்கை நாளைக்கு முடிச்சி குடுத்துடுறேன் சார்”
“வாட்!!!, நாளைக்கா?? நோ!! இன்னைக்கே எல்லாம் பைல்ஸும் என் டேபிள்க்கு வந்து ஆகணும் எவ்ளோ நேரம் ஆனாலும் ஒர்க் முடியாம நீ போக கூடாது “என்றான்
“சார்!!” என்றவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது கால் வலி வேறு அதிகமாக இருக்க ஒரு இடத்தில் நிற்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள்
“இப்போ எதுக்கு டான்ஸ் ஆடிட்டு இருக்க?”
“கால் வலி சார்“
“எப்படி டி உன்னால இப்டிலாம் இன்னசென்ட் மாதிரி நடிக்க முடியுது??அவன்கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசும் போதுல்லாம் கால் வலி தெரில வேலை சொன்ன மாட்டும் எல்லா வலியும் தெரிந்ததா??, பணத்துக்காக என்ன வேனா செய்றவ தானே நீ “என்று அவன் அவளை கேவலமாக பேச அவனின் வார்த்தைகள் நெருப்பை அள்ளி அவள் மேல் போட்டாற்போல் தகித்தது அவள் உடல்...
அன்றும் இப்படி தானே பணத்தை விட்டெரிந்து தன்னை விலைமாது என்றான் அன்று அவன் சொன்ன வார்த்தை அவளை எப்படி எல்லாம் கூசி போகவைத்தது இப்போதும் நெருப்பாய் வார்த்தைகளை கொட்டி அவளை காயப்படுத்தி அதில் திருப்தி அடைந்தான்.
அடக்கி வைத்த கண்ணீர் இமை தாண்டி கன்னத்தில் வழிய அவனை பார்த்தாள் அவனிடம் பதில் சொல்லவோ, எட்டிக்குப்போட்டியாய் பேசும் மன நிலையில் அவள் இல்லை அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் அவள் கேபினுக்கு சென்று அமர்ந்தவள் கண்ணீர் மட்டும் நின்ற பாடில்லை ‘என்ன நினைத்தான் என்னை பற்றி என்ன பேசினாலும் அமைதியாய் போவதால் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்தானா ‘என்று மனம் வெதும்ப இனி இவனிடம் நின்று பேசுவது கூட தவறு என்று நினைத்தவள் அவனிடமிருந்து மனதளவில் தூரம் சென்றுகொண்டிருந்தாள்
முடிக்க வேண்டிய வேலைகளை செய்ய தொடங்கியவள் நேரம் பார்க்காமல் வேலை மூழ்கி போனாள் அவன் சொன்ன படி வேலையை முடித்து கொடுக்கும் போது மணி ஒன்பதை தாண்டி இருந்தது அவனிடம் பைலை சமிட் செய்து விட்டு கேபினுக்கு வந்தவள் பேக்கை எடுத்துக்கொண்டு நடதக்கலானாள்.
காலையில் சாப்பிட்டத்தோடு சரி மதியம் சாப்பாட்டிற்கு கூட போகாமல் வேலையை பார்த்தாள் காலையில் இருந்து ஓய்வு இல்லாமல் வேலை செய்ததால் உடல் அசதி நடக்க முடியாமல் தளர்ந்த நடையில் அவள் நடக்க அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை இரவு நேரம் என்பதால் ஒரே இடத்தில் நிற்கவும் பயமாக இருக்க மெதுவாக நடந்துகொண்டே ஆட்டோ வருகிறதா என்று பார்த்தாள் நேரம் ஆக ஆக பசி வேறு உயிர் போக துடங்கியது... மெதுவாக நடந்து கொண்டிருந்தவள் கண்கள் இருட்டிக்கொண்டு வர நிலை தடுமாறி அப்படியே மயங்கி சரிந்தாள்.
மயங்கி சரிந்தவளை இரு காரங்கள் பூ போல் தூக்கி கைகளில் எந்திக்கொண்டு காரை நோக்கி சென்றான் ருத்ரதேவ்
“உன்னை கண்டிப்பா என்னால மன்னிக்கவும் முடியாது நீ செஞ்ச நம்பிக்கை துரோகத்துக்கு உன்னை பாக்க பாக்க கோவம் தான் வருது,உன்னால தான் என் அம்மு என்னைவிட்டு போய்ட்டா!!!” என்றவன் கண்களில் அவ்வளவு கோபம் இருந்தது, அவன் மனதில் வன்மம் மட்டுமே நிறைத்திருக்க தான் செய்த தவறை என்னவென்று தெரியாமலே பாவையவள் தண்டனையை அனுபவைத்து கொண்டிருக்கிறாள்..
அவளை பெட்டில் படுக்க வைத்து அவள் மயக்கத்தை தெளியவைத்தவன் “இடியட் அப்போ. அப்போ மயக்கம் போட்டு விழுந்தா உன்னை தூக்கிட்டு வர நான் என்ன உனக்கு சர்வன்ட்டா “என்று கர்ஜிக்க
‘ஆமா சாப்பிட கூடாதுனு வேண்டுதல் பாரு!!,சாப்பிட கூட டைம் தராம வேலை வாங்கிட்டு பேச்சை பாரு சரியான சிடுமூஞ்சி ‘என்று மனதில் சலித்துக்கொண்டாள்
“என்னை திட்டினது போதும் போய் சாப்பிட்டு வேலையை பாரு “என்றவன் ஸ்டடி ரூம் சென்று ஒரு நாவலை படிக்க துடங்கினான்.. எப்போதும் தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் இன்று அவன் மனம் பழைய நினைவுகளை நினைவு படுத்த தன்னை கட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்தான் ருத்ரா
மனம் பழைய நினைவுகளை நியாபகம் படுத்த மனம் ரணமாய் வலித்தது எங்கே அங்கிருந்தால் ஒட்டுமொத்த கோபமும் வெறுப்பாய் அவள் மீதே காட்டிவிடுவோமோ என்று அங்கிருந்து வந்துவிட்டான்
சாப்பிட்டு வந்தவள் ஜன்னலில் நின்று வானத்தை வெறித்துகொண்டிருக்க உறங்க வந்தவன் வாசலில் நின்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவளை பார்க்க பார்க்க என்றும் இல்லாமல் இன்று பழைய நினைவுகளை வந்து அவன் மனதை கல்லாக்க அவள் அருகில் சென்றவன் பின்னிருந்தே அவளை இருக்கமாய் அணைக்க அந்த திடீர் அணைப்பில் அதிர்த்தவளை திருப்பி கீழ் உதட்டை வன்மையாய் கவ்வினான் அவள் திமிறி அவனை விட்டு விலக முற்பட அதில் கோபம் கொண்டடு அவள் உதட்டை கவ்வி இழுக்க உதட்டில் மெல்லிய கீறல் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது அவளுக்கு எரிச்சலாய் இருந்தது அவனை பொறுத்த வரை அவளை காயப்படுத்த வேண்டும் அது மட்டுமே அவனின் பிரதான எண்ணம் அவள் அவனிடமிருந்து விலக நினைத்து அதற்க்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்றே அவள் இதழ்களை வன்மையாய் ருசித்தான் அவன் கண்களை பார்க்க பயந்தவள் அணிச்சையாகவே தன் கண்களை மூடிக்கொண்டாள்
அவளை இருக அனைத்தவன் அப்படியே அவளை தூக்கி சென்று பெட்டில் கிடத்தி அவன் தேடலை தொடர்ந்தான் அவள் மீது கொண்ட கோவத்திற்கும் வெறுப்பிற்கும் அவளே வடிகலாய் மாறினாள் ஆரம்பத்தில் அவளை முரடனாக கையாண்டாலும் அதன் பின் அவனை அறியாமலே அவளிடம் பூ போல் மென்மைன்மையாய் தன் தேடலை தொடர்ந்தான்...
பகலில் அவளை காயப்படுத்தும் அவன் இரவில் அவளை ஆராதித்தான் அவனை புரிந்து கொள்ள முடியாமல் அவள் தான் குழம்பி போனாள்.
இப்படியே நாட்கள் நகர காலையில் சமைத்து அணைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு ஆபீஸ் கிளிம்பி செல்வாள் அதன் பின் இரவு ஆபீஸ் இருந்து வந்து இரவு உணவு தயார் செய்து மாற்ற வேலைகளை முடித்து வைத்து தூங்க செல்வாள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஓய்வின்றி சுழன்று கொண்டிருந்தாள் நாட்கள் ஓட ஓட ஓய்வின்றி வேலை ஒரு புறம் ஆபீஸ் பிரஷர் ஒருபுறம் ருத்ராவின் சூடு பேச்சுக்கள் என மனதை யாரிடமும் பகிர முடியாது தவித்தவள் மனதிலேயே புழுங்க அதுவே மன அழுத்தத்தை உருவாக்கியது முன்பெல்லாம் அவன் என்ன திட்டினாலும் மர கட்டை போல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தவள் இப்போது அவன் பேச்சுக்களை தாங்க முடியாமல் அவனிடம் திருப்பி சண்டை போட்டாள்.
வழக்கம் போல் காலை சமையல் வேலையை முடித்து டைனிங் டேபிளில் அடுக்கியவள் உள்ளே சென்று வேலையை பார்க்க துடங்கிவிட்டாள் “தேவ்வுக்கு பரிமாறு மகி “என்ற வேதவல்லி குரல் கொடுக்க மகி வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருந்தாள் வேதவல்லி இரண்டு மூன்று முறை கூப்பிடும் மகி வராமல் இருக்க இவ்வளவு நேரம் இழுத்து பிடித்திருந்த பொறுமை காற்றில் பறந்தது ருத்ராவிற்கு சமையல் அறை வாசலில் சாய்ந்தபடி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்துகொண்டிருந்தான் தன்னை யாரோ பார்ப்பது போல் உள்ளுணர்வு சொல்ல திரும்பி பார்த்தவள் திடுக்கிட்டுப் போனாள் ‘ஏன் வரலைன்னு கேட்டா என்ன சொல்லுறது ‘என்று மனதுக்குள் சிந்திக்க
“அம்மா கூப்பிட்டது உன் காதில் விழலையா!? “என்றான் அடக்கிய கோபத்துடன்
“விழுந்துது “என்றாள் பட்டென,
“சோ வேணும்னு வரலை “
“வர விருப்பம் இல்லை “என்றாள்
“என்ன டி வாய் நீளுது “என்றவன் அவள் அருகில் வந்து அவள் முடியை பிடித்து அவன் முகத்திக்கு நேராக அவள் முகத்தை தூக்க
“உங்க கேள்விக்குத்தான் பதில் சொன்னேன், நீங்க என்ன பேசினாலும் வாயை மூடிட்டு இருக்க நான் ஒன்னும் ஊமை இல்லையே!!, வர விருப்பம் இல்லை!! சோ வரலை!! “என்றாள் அதே நிமிர்ந்துவுடன்
“அவ்ளோ திமிர் ஆயிடுச்சா!!“என்றவன்
“ஆமா அப்படியே வச்சிக்கோங்க “
“ஓஹோ!!, என்றவன் அவள் கைகளுக்கு அழுத்தம் தர
“பரிமாற விருப்பம் இல்லையா!!!”என்றவன் கண்கள் கோவத்தில் சிவந்து இருக்க
“ஆமா!!”என்றாள்
“இனி எப்பவும் நீதான் எனக்கு சாப்பாடு கொண்டு வர, கொண்டுவரது மட்டும் இல்லை எனக்கு சாப்பாட்டை ஊட்டி விடணும், நான் டைம்க்கு சாப்பிட்டேனா இல்லையானு கவனிச்சிக்குறதும் இனி உன் வேலை தான் “என்றான் கர்ஜனையாய்
“வாட்!!, நானா!!??, நோ வே!! கண்டிப்பா செய்ய மாட்டேன் அதும் உனக்கு ஊட்டி விடணுமா ச்சி!!!“என்று அருவருப்போடு திமிராய் சொன்னவளை தன்னை நோக்கி இழுக்க,அவள் இரு கைகளையும் தூக்கி தன் தலையை பிடித்த படி “வலிக்குது விடு!!”என்று கத்த அவள் சிவந்த இதழ்களை தன் இதழ் கொண்டு அவன் மூட அவன் இதழ் தாக்குதலை எதிர்பாராதவள் அவனை விலக்குவதற்கு அவன் மார்பில் அவள் கரம் கொண்டு குத்தினாள் அவனோ அதை எல்லாம் துளியும் சட்டை செய்யாமல் அவளை முத்தமிட்டு கொண்டிருந்தான், அவனுக்கு ஒத்துழைக்காமல் அவள் நாவை உள்ளிழுத்து உதட்டை அழுத்தமாக மூட அவளின் சிறுபிள்ளை தனத்தை கண்டு மனதில் சிரித்தவன் லாவகமாக அவள் மேல் உதட்டை கவ்வி அவளை மேலும் தன்னுடன் நெருக்கினான் அவனின் செயலின் அணிச்சையாக முடி இருந்த அவள் விழிகள் திறந்து அகல விரித்து அவனை பார்த்தாள் ‘முத்தம் கொடுக்கறதுக்கே பிஎச்டி முடித்திருப்பான் போல ‘என்று அவள் நினைக்க.. அவனோ அவள் என்ன செய்தலும் அதை அசால்ட்டாக அவனுக்கு சாதகமாக மாற்றி அவன் வேலையை தொடர்ந்தான் இதற்கு மேல் விடாமல் இருந்தாள் அவளுக்கு மூச்சு முட்டும் என்று நினைத்தவன் அவள் இதழை விடுவித்தான்
“எப்போ எல்லாம் நீ முடியாதுனு சொல்றியோ அப்போ எல்லாம் இப்படித்தான் பண்ணுவேன்... ஒழுங்கா மார்னிங் பிரேக்ட்பாஸ்ட் அண்ட் லஞ்ச் கொண்டுவர, ஆபீஸ் வந்து ஊட்டி விடுற!!, முடியாதுனு சொன்ன எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை இப்போ தனியா பண்ணதை ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும் பண்ணவேண்டியதா இருக்கும் “என்றவன் அவள் உதட்டை விரலால் வருட ஆபீஸ்ல கிஸ் பண்ணுவேன்னு சொன்னதில் அதிர்ந்து நின்றவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நிற்க அவள் முன் சொடக்கிட்டவன் “கம் பாஸ்ட் “என்றான்படி முன்னே நடந்தான் அவளும் அவனுக்கு பின்னே ஓடினாள் இல்லை எனில் அதற்கும் எல்லார் முன்னிலையிலும் முத்தம் கொடுத்தாலும் கொடுத்துவிடுவான் என்ற பயத்தில்...
உயிரே 7
அவன் வேண்டுமென்றே சாப்பிடாமல் போக அவன் பின்னே ஓடினாள் “இங்கேயே சாப்பிட்டு போலாம்ல “என்று அவள் பாவமாய் கேட்க
“இப்போ சாப்பிட மூட் இல்லை வேற மூட் தான் இருக்கு உனக்கு ஓகேனா சொல்லு இப்போவே நான் ரெடி “என்று கிரக்கமாய் இதழ் ஒற்றல் கொடுத்த மயக்கத்தில் அவன் சொல்ல
“அய்யோ கடவுளே!!”என்றவள் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர
“எங்க டி போற?”
“பஸ் ஸ்டாண்ட்க்கு “
“பஸ்ல போக வேண்டாம் என்கூடவே வா “
‘ஏற்கனவே இவன் பேச்சு சரி இல்லை மகி இவனை நம்பி கார்ல எறாத அப்புறம் போற வழில கடிச்சி வச்சிருவான் உஷார் ஆயிடு இப்படியே பஸ்ஸை புடிச்சி ஓடி போறலாம் ‘என்று மனதில் நினைத்தவள் சட்டென “இல்லை சார் நான் பஸ்லயே வந்துக்குறேன் “என்றாள்
“உங்கிட்ட வானுதான் சொன்னேன் வரியா இல்லையானு கேக்கலை!!”என்று அவன் புருவத்தை தூக்கியப்படி சொல்ல
“ஐயோ சார் ஏற்கனவே நம்மளை பத்தி ஆபீஸ்ல அரசல் புரசலா பேசிக்குறாங்க, நான் மட்டும் உங்க கூட கார்ல வந்தேன்னு வைங்க அப்புறம் இன்னைக்கு ட்ரீண்டிங் நியூஸ் இதுவாதான் இருக்கும் “என்றாள்
“சோ வாட்?”
“சார் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நம்ம கல்யாணம் விஷயம் யாருக்கும் தெரியாது அப்படி இருக்க ஆபீஸ்ல என்னையும் உங்களையும் கனெக்ட் பண்ணி தப்பா பேசுவாங்க அப்புறம் இதுல தேவை இல்லாம என் பேர்தான் கெடும் “என்றாள் அவனோ அதையெல்லாம் காதில் வாங்காமல்
”வந்து உக்காரு டி “என்று,ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு முன் பக்க கதவை திறந்து விட்டான் அவளோ அவனுடன் செல்ல தயங்கியபடி அங்கேயே நிற்க
“இப்போ நீயா வரியா இல்லை நான் வந்து தூக்கிட்டு வரவா??, நான் வந்தா அதோட மட்டும் விடமாட்டேன் உனக்கு வசதி எப்படி??“என்றான் மிரட்டுத்தலாய்
“அய்யோ வேணாம் நானே வரேன் சார் “ என்றவள் அவசர அவசரமாக ஓடி காரில் அமர்ந்து கொண்டாள்
“ அந்த பயம் இருக்கட்டும்”என்றவன் காரை இயக்கினான்
“சார் ஆபீஸ் முன்னாடி ஸ்டோப்பின்லயே இறக்கி விட்ருங்க சார் “என்றாள் கெஞ்சலாய்
“ஏன்?”
“ஏற்கனவே நான் உங்க கேபின்க்கு அப்போ அப்போ வரேன்னு ஆபீஸ் முழுக்க உங்களுக்கு எனக்கும் இதோ சம்மந்தம் இருக்குனு பேசிக்குறாங்க இதுல உங்ககூட போய் இறங்கினா அவ்ளோதான் எல்லாரும் கான்போர்ம் பன்னிடுவாங்க “என்றாள்
“இன்ட்ரஸ்டிங்,வேற என்னாலாம் பேசிப்பாங்க? “என்றான் ஆர்வமாய்
“அய்யோ சார் நான் என்ன கதையா சொல்லுறேன் அப்புறம் என்னனு சொல்ல “என்று அவனை முறைக்க அவள் முறைப்பை சட்டை செய்யாமல்
“உன் காலை மடில வைடி “என்றான் ருத்ரா
“சார் என்ன சொன்னிங்க?? “
“உன் காலை என் மடில வைடினு சொன்னேன் “
“சார்!!”என்றவள் அதிர்ந்து அவனை பார்க்க “நான் எப்படி உங்கமேல!!,வேண்டாம் சார் “
“உன்கிட்ட ஒவ்வொரு முறையும் நான் எஸ்பிளான் பண்ணிட்டு இருக்க முடியாது சொன்னதை செய்!!“என்றான் அதட்டலாய்.. எங்கே வேதாளம் முருங்கை மரம் ஏரிடா போதோ என்று பயந்தவள் சட்டென அவன் புறம் திரும்பி அமர்ந்து காலணியை கழட்டிவிட்டு அவன் மடியில் காலை வைத்தாள்
“ஹ்ம்ம் குட், இனி சும்மா சும்மா கேள்வி கேக்காம சொல்றதை மட்டும் செய் இல்ல என் ஸ்டைல்ல செய்ய வச்சிடுவேன் “என்றான்
“ஹ்ம்ம் “என்றவள் நெளிந்துகொண்டே இருக்க ,
“ஏன் டி எப்படி நெளிச்சிகிட்டே இருக்க ஒழுங்கா ஆடாம அசையாம உக்காரு டி “என்றவன் ஒரு கையால் ஸ்டாரிங்கை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் அவள் கால்களை வருடினான்
“சார் கூசுது “என்று அவள் நெளிய
“ஹ்ம்ம் “என்றவன் அவள் முகத்தில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு உணர்வையும் கண்டு ரசித்து அவள் பாதத்தை கொஞ்சம் உயர்த்தி அவள் மெட்டி அணிந்திருந்த விரல்களில் குனிந்து முத்தமிட்டான் அவனின் அந்த ஒற்றை முத்தத்தில் சிலிர்த்து போனாள் மகி...
அவனோ அவளின் ஒவ்வொரு சிணுங்கலையும் ரசித்தவன் மேலும் மேலும் அவள் பாதங்களுக்கு முத்தமிட இத்தனை நாள் அவன் முத்தமிடும் போது வராதா சிலிர்ப்பும் பரவசமும் அவளுள் தோன்றி அவள் உணர்வுகள் கட்டுப்பாட்டை மீறி அவன் அருகாமையை எதிர்பார்த்து ஏங்கியது..
அவளிடம் தோன்றும் ஒவ்வொரு மாற்றத்தையும் நமட்டு சிரிப்புடன் ரசித்துக்கொண்டே அவள் பாதங்களை வருடிக்கொண்டிருந்தான் ருத்ரா அவனின் இந்த சிறு செயல் கூட அவன் மேல் அவளை பைத்தியமாக்கியது...
இதுவரை தோன்றாத உணர்வுகள் அவளுக்குள் தோன்றி அவளை இம்சை செய்ய அதற்க்குமேல் பொறுக்க முடியாமல் ருத்ராவின் கன்னத்தில் தன் இதழை பதித்தான் தன்னவளின் முதல் முத்தம் அவனை கிறங்க செய்ய சட்டென காரை நிறுத்தியவன் அவன் இதழ்களை கட்டினான் பெண்ணவள் வெக்கப்பட்டு தன் கைக்கொண்டு முகத்தை மூடிக்கொள்ள அவள் கைகளை விலக்கியவன் மீண்டும் அவன் இதழ்களை விரலால் சுட்டிக்காட்ட அவன் கன்னங்களை இரு கரங்களால் தாங்கிகொண்டவள் அவன் இதழ் நோக்கி குனிந்து மென்மையாய் முத்தமிட்டு விலக. ஆடாவனோ அவள் விட்ட இடத்தில் இருந்து தன் இதழ் ஒற்றலை மீண்டும் தொடர்ந்தான்... வெகு நேரம் அவள் இதழை சுவைத்தவன் அவள் மூச்சி விட சிரம படுவதை விரும்பாமல் அவளுக்கு மூச்சிவிட விலகியவன் மீண்டும் அவளிடம் தொடர நினைத்து நெருங்க அவன் மார்பில் தன் கரம் வைத்து அவனை தடுத்தாள் இதழ் ஒற்றல் அறுபட்ட எரிச்சலில்”என்ன டி “என்று கேட்க
“டைம் ஆயிடுச்சி போலாம் “என்றாள் அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு கொண்டு
“ஹ்ம்ம்ம் “என்று தன் உணர்வுகளை கட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு அழுந்த தலை கோதியவன் காரை இயக்கி அலுவலகம் நோக்கி புறப்பட்டான...
ஆபீஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் அவளை பார்க்க “அய்யோ சார் நான்தான் முன்னாடி ஸ்டோப்பின்லயே இறக்கி விட சொன்னேனே போச்சி போச்சி இப்போ யார் எல்லாம் பாத்து என்ன என்ன புரளியை கிளப்பி விட போறாங்களோ”என்று அவள் புலம்ப
“ சும்மா புலம்பாம இறக்கு “
“சார் சார் ப்ளீஸ் நான் முதல்ல போயிடுறேன் அப்புறம் நீங்க வாங்க “என்று அவள் கெஞ்ச
“சரி போய் தோலை “என்றான் அவளோ உள்ளிருந்தே வெளியில் யார் யார் இருக்கிறார்கள் என்று சுற்றி சுற்றி பார்த்தவள் குனிந்த படியே கார் கதவை திறந்து இறங்கி யாரும் பார்க்கும் முன் குடுகுடுவென என்ட்ரன்ஸ்க்கு ஓடினாள் அவள் செயலில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு “லூசு “என்று அவளை திட்டிவிட்டு இறங்கி சென்றான் சன் கிளாஸ்ஸை அனிந்தப்படி கம்பிரமாய் நடந்து சென்றான் ருத்ரா...
“இந்த மனுஷனால இப்டிலாம் பயந்து பயந்து வராதா இருக்கு “என்று புலம்பியவள் தன் இருக்கையில் அமர அங்கு வந்த ருத்ராவோ “பிரேக் பாஸ்ட் எடுத்துக்கிட்டு என் கேபினுக்கு வாடி “என்றுவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்
“அய்யோ இப்போதானே இவன்கிட்ட இருந்து வந்தோம்!திரும்பவும் முதல்ல இருந்த!!”என்று புலம்பிக்கொண்டு அவன் அறைக்கு சென்றாள் மகி
“சீக்கிரம் வர மாட்டியா “என்று சிடுசிடுக்க
“சார் நீங்க பாட்டுக்கு வானு சொல்லிட்டு வந்துட்டீங்க அங்க இருக்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க சார் “என்றாள் பாவமாய்
“பாத்தா பாக்கட்டும் அதுல உனக்கு என்ன பிராப்லம் “
“சார் அவங்க உங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க ஆனா என்ன பத்தி தான் தப்பா பேசுவாங்க “என்றாள் வருத்தமாய்
“சும்மா எதையாவது ஒளறிட்டு இருக்கமா வந்து ஊட்டி விடு பசிக்குது “என்றான் ருத்ரா
“சார் இதுக்கு வீட்லயே சாப்பிட்டு வந்து இருக்கலாம் “
“நான் எப்போ சாப்பிடணும்னு நீ எனக்கு ஆர்டர் போடாத!,நான் சொல்றதை மட்டும் செய்.. காட் இட்!”என்றான் கோபமாய்
“ஹ்ம்ம் “என்றவள் அவனுக்கு ஊட்டி விட துவங்கினாள் அவன் அனுமதி இன்றி அவன் அறைக்கு யாரும் வரமாட்டார்கள் அந்த தைரியத்தில் தான் அவளும் அவனுக்கு ஊட்டி வீட்டுகொண்டிருக்கிறாள் அதே போல் வெளில இருந்து பார்த்தால் உள்ளே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளியே என்ன நடக்கிறது என்று தெள்ளத்தெளிவாக தெரியும்
அவனுக்கு ஊட்டி விட்டுவிட்டு அவள் கேபினுக்கு வந்து உட்கார ரிசப்ஷனிஸ்ட் வந்து “மகி உன்னை தேடி கிருஷ்ணன்னு ஒருத்தர் வந்து இருக்கார் “என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட,
”கிருஷ்ணாவா “என்று அதிர்த்தவள் அன் முகத்தில் எப்படி விழிப்பது என்று குற்றவுணர்ச்சியில் அவள் தடுமாற “தன்னை எப்படி நம்பினான் அவனை தானே ஏமாற்றினோம் “என்று நினைக்கையில் அவளுக்கு அழுகைத்தான் வந்தது ‘அவனுக்கு விஷயம் தெரிஞ்சி இருக்குமா??, உண்மையை அவன்கிட்ட எப்படி சொல்லுறது ‘என்ற பலவாறு சிந்தனைகளில் கிருஷ்ணாவை பார்க்க சென்றாள்
கிருஷ்ணவோ கண்கள் சிவக்க ரௌத்திரம் பொங்க கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு அங்கு அமர்ந்திருந்தான் அவள் கிருஷ்ணாவிற்கு முன் சென்று ஏதும் பேசாமல் தலைகுனிந்து நிற்க அவளை மேலிருந்து கீழ் வரை ஏளனமாய் பார்த்தவன் கண்கள் கடைசியாய் அவள் காலனி இல்லாத கால்களில் நிலைகுத்தி நின்றது அவள் கால்களை வெறுப்போடு கண்கள் சிவக்க பார்த்துக்கொண்டிருக்க அவள் அணிந்துருந்த மெட்டி அவளுக்கு திருமணம் ஆனதை மேலும் உறுதி படுத்தியது
காரில் இருந்து இறங்கும் அவசரத்தில் செருப்பை போடாமல் வந்தவள் அதை கூட கவனிக்காமல் இருந்தாள் கிருஷ்ணாவின் பார்வை அவள் காலில் நிலைகுத்தி நிற்க இதை வெறித்துகொண்டிருக்கிறான் என்று அவள் கீழே பார்க்க அவளுக்கு தூக்கிவாரி போட்டது ‘அய்யோ இந்த மெட்டி தெரியாம இருக்கதானே அந்த ஷூ போட்டுட்டு வந்தோம் கார்லயே மறந்து வீட்டுட்டோம் போலயே ‘என்று நினைத்தவள் கால்களை உள்ளே இழுத்து புடவையில் மறைத்துக்கொண்டாள்
கிருஷ்ணா இன்றுதான் வெளி ஊரில் இருந்து வந்தான் ஓரளவிற்கு பிசினஸில் ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்துவிட்டு இங்கு வந்திருந்தான்.. வந்தவன் முதலில் மகிழினி வீட்டிற்கு சென்று தன் நிலையை சொல்லி, சொல்லாமல் கொள்ளாமல் தன் காணாமல் போனத்திற்கும்,இத்தனை நாள் தன்னால் அவர்களுக்கு உதவமுடியாமல் போனதிற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைத்தவன் அவள் வீட்டிற்கு சென்று பார்க்க பூட்டிய வீடுதான் அவனை வரவேற்றது...வசுந்திரவின் உடல் நிலை பற்றி விசாரிக்க நினைத்தவன் மகிக்கு அழைக்க அவள் போன் ஸ்விட்ச் ஆஃப் இருந்ததனால் மாறனுக்கு அழைத்தான் மாறனுக்கு என்ன சொல்லுவதென்று தான் ஹாஸ்டலில் தாங்கி இருப்பதையும் சொன்னவன் மேலோட்டமாக தன் அக்காவின் திருமணத்தை பற்றி சொல்ல அதை ஏற்க முடியாமல் கோவத்தில் மாறனிடம் கத்திவிட்டு அழைப்பை தூண்டித்தவன் நேராக மகிழினியை பார்க்க அவள் ஆபீஸ்சுக்கே வந்துவிட்டான்..
“வாங்க மிஸஸ். ருக்ரதேவ் “என்று அவன் அழுத்தமாய் அதேநேரம் கேவலமான பார்வையை அவளுமேல் வீசியபடி சொல்ல அவன் சொன்ன “ மிஸஸ்.ருத்ரதேவ் “என்று சொன்னத்தில் அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தவள் எக்கி அவன் வாயை பொத்தினாள் ஏற்கனவே அவர்களை சிலர் பார்த்துக்கொண்டிருக்க எங்கே இவன் கத்தி உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுவானோ என்ற பயத்தில் அவன் வாயை பொத்தினாள்
“ப்ளீஸ் எது பேசுறத இருந்தாலும் வெளில போய் பேசிக்கலாம் “என்று அவள் கெஞ்ச அவன் அவள் வார்த்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை
“ப்ளீஸ் கிருஷ்ணா தயவு செஞ்சி இங்க ஏதும் பேசவேண்டாம், நான்லீவ் சொல்லிட்டு வரேன் ப்ளீஸ் நீ கார்ல வெயிட் பண்ணு “என்று அவனிடம் கெஞ்சியவள் கடக்கடவெனா ஓடி சென்று பேக்கை எடுத்துக்கொண்டு மேனேஜரிடம் லீவு சொல்லிவிட்டு வெளியே வந்து கிருஷ்ணாவுடன் புறப்பட்டாள்...
எங்கு போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை போகும் நேரம் முழுவதும் அமைதி மட்டுமே அங்கு நிலைத்திருக்க அவளும் வாயை திறக்காமல் கண்களை முடி தன்னை நிலைப்படுத்திகொண்டாள் அவனிடம் பேசுவதற்கு தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருந்தாள்..
‘தன்னிடம் சொல்லாமல் கிருஷ்ணாவுடன் அவள் எப்படி செல்லலாம், நான் அவ்வளவு சொல்லியும் கிருஷ்ணாவுடன் அவள் எப்படி பேசலாம், தன் மீது உள்ள பயம் போய்விட்டதா அவளுக்கு ‘என்று அவள் மீது காட்ட முடியாத அத்தனை கோபத்தையும் அங்கிருக்கும் பொருட்களின் மிது காட்டிகொண்டிருந்தான் ருத்ரா, இப்போது மட்டும் மகி இங்கிருந்தால் அவள் நிலை என்னவோ!!
கிருஷ்ணாவின் கார் நேராக கடற்கரைக்கு சென்று நிற்க விஷயத்தைக் கேள்விப்பட்டு மஞ்சுவும் அங்கு இவர்களுக்காக காத்திருந்தாள் மகியும் கிருஷ்ணாவும் இறங்க வர “என்னடி ஆச்சு கிருஷ்ணா என்ன என்னவோ சொல்லுறான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சினு சொன்னான் உண்மையா?”என்று மஞ்சு மகியிடன் கேட்க மகிழினி தலை குனிந்து இத்தனை நாள் உடைக்குள் மறைத்து வைத்திருந்த தாலியை வெளியே எடுத்து இருவருக்கும் காட்டினாள் இதை எதிர்பாராத மஞ்சு உண்மையிலே அதிர்ந்துதான் போனாள்
“என்னடி இது, எப்போ கல்யாணம் ஆச்சு?” என்று மஞ்சு கேட்க அவள் மௌனமாய் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றிருந்தால் மகி
“ அவ எப்படி சொல்லுவா!!, ஏன் இந்த கல்யாணம்னு நான் சொல்றேன்” கிருஷ்ணா
“இவன் பிசினஸ் லாஸ் ஆயிடுச்சு இதுக்கு அப்புறம் இவன் அஞ்சு பைசாக்கு பிரயோஜனம் இல்லை, இவனை கல்யாணம் பண்ணிட்டு நம்ம என்ன பண்றதுனு பெரிய பணக்காரனா பார்த்து உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்படித்தானா?!”என்று கிருஷ்ணா மகியை பார்த்து கேட்க
“ பணம் தான் உனக்கு முக்கியம்னு முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாமே டி என் தலையை அடமானம் வைத்தாவது நீ எதிர்பார்க்கிற பணத்தை உனக்கு தந்தி இருப்பனே!!, ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் உன் தேவையை நிறைவேற்ற கூட எனக்கு வக்கில்லை நினைச்சுட்டியா!!” என்று ஆக்ரோஷமாய் அவன் கேட்க
“ஐயோ!!! போதும் கிருஷ்ணா!!! நீயும் என்னை வார்த்தையால கொல்லாத கிருஷ்ணா, இதுக்கு மேல உங்க வார்த்தைகள் எல்லாம் தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்லை “ என்று அவன் காலில் விழுந்து கதறினாள்
“என்ன மன்னிச்சிடு கிருஷ்ணா உன்னை ஏமாற்றனும்னு நான் நினைக்கலை, நான் செஞ்ச துரோகத்துக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டா கூட அது போதாது தான், நான் வேணும்னே எதையும் செய்யல என்னுடைய ஏழ்மையும் பணத்தின் தேவையையும் அவங்களுக்கு சாதகமாக மாத்திகிட்டு என்ன சூழ்நிலை கைதியாக மாத்திதான் இந்த கல்யாணத்தையே செஞ்சாங்க, பணத்துக்காக நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல என்னை கடத்தி என் சூழ்நிலையை அவங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி என் வாயாலேயே இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன்னு ஒத்துக்க வச்சி, அவங்க கிட்டயே பணத்துக்கு கையேந்த வச்சிட்டாங்க “என்று கதறியவளை வாரி அணைத்துக் கொண்டாள் மஞ்சு
“என்னடி சொல்ற யார் உன்னை மிரட்டினது? “என்று மஞ்சு பதறி கேட்க
“ருத்ரதேவ்வும் அவங்க அம்மாவும் தான் “என்றாள் மகி
“அவங்க ஏண்டி உன்னை கடத்தினாங்க இதுனால அவங்களுக்கு என்ன லாபம் “என்று மஞ்சு கேட்க வேதவல்லி முதன் முதலில் அவளை ஆபீஸில் பார்த்தது முதல் ருத்ரா மிரட்டியதையும்,அவன் அம்மா அவளை கடத்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் அவள் கற்பை சூரையாடி விடுவேன் என்று மிரட்டியது என அனைத்தையும் சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்
மகி சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணாவிற்கு அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சிலையாய் நின்றான்
“ஏன் டி எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை “என்று மகியின் மேல் கோவப்பட்டாள் மஞ்சு
“சொல்ல முடியாத நிலைல இருந்தேன், அவங்க என்னை கடத்துறதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடலாம்னு நம்பினேன் ஆன அதுக்கு வழி இல்லாம அவங்களுக்கு அடிபணிய வச்சிட்டாங்க “என்று தன் கையாலாகாத தனத்தை சொல்லி அழ மட்டுமே முடிந்தது மகியால்
“ஆன்ட்டி எப்படி இருக்காங்க?”என்று மஞ்சு கேட்க விரக்தி புன்னகை சிந்தியவள்
“தான் பொண்ணு அவளை வித்து கொண்டு வந்த பணத்துல உயிரோட இருக்க கூடாதுனு நினைச்சாங்களோ என்னவோ கல்யாணம் ஆன மறுநாளே எங்களை விட்டு ஒரேடியா போய்ட்டாங்க “என்று அழுதாள்
“ என்ன ஆன்ட்டி இறந்துட்டாங்களா!!”என்று இருவரும் ஒருசேர அதிர்ந்து கேட்க
“ஆமா அந்த பாவப்பட்ட பணத்துல உயிர் வாழ்றதை விட சாகுறது மேல்ன்னு நினைச்சிட்டாங்க போல “என்றவளை கட்டினைத்து அழ மட்டும்தான் முடிந்தது மஞ்சுவால்
“ஏன் டி எதையுமே எங்ககிட்ட சொல்லாம மறச்ச, பிரண்டுனா அவ்வளவுதானா டி, இப்படித்தான் நாங்க உன்கிட்ட பழகினோமா “
“ நான் செஞ்ச துரோகத்துக்கு உங்க முகத்தில முழிக்கிற அருகதை கூட எனக்கு இல்லாம போயிடுச்சு, எப்படி உங்க முகத்துல முழிப்பேன் நான்??, எனக்கு உயிர் வாழவே பிடிக்கல மஞ்சு செத்துடலாம்னு தோணுது மாறன் ஒருத்தனுகாகத்தான் இப்போ வரை உயிரோட இருக்கேன் நானும் போய்ட்டா அவனுக்கு யாரும் இல்லாம அனாதையா ஆயிடுவான் “என்றவள் கன்னத்தில் பளீர் என்று அறைந்தால் மஞ்சு
“இதே போல பேசிட்டு இருந்த நானே உன்னை கொன்னுடுவேன், இன்னொரு முறை செத்துடலாம் போல இருக்கு மன்னாங்கட்டி போல இருக்குனு உளறின அவ்ளோதான் சொல்லிட்டேன் “என்ற மஞ்சுவின் கோவத்தில் நெகிழிந்துதான் போனாள் மகி கிருஷ்ணாவோ மகி கடைசியாக சொன்ன வார்த்தையில் நொறுங்கி போனான்
உயிரே 8
தன் காதல் தோற்று விட்டதே என்று வருந்துவதா?? இல்லை இத்தனை கஷ்டங்களையும் அனுப்பவித்து மனம் நொந்து தாயை இழந்து வேதனை அனுபவிளை நினைத்து வருந்துவதா?? என்று கிருஷ்ணா நிலைக்குலைத்து போனான்.. அவள் நிலையை சிந்திக்காமல் வார்த்தையால் அவளை என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்
தன்னுடைய இத்தனை வருட காதல் கானல் நீராய் போனதே என்று மனம் ரணமாய் வலித்தாலும் மகிழினிக்கு தங்களின் நட்பும் அரவணைப்பும் ஆதரவும் தேவை என்பது மட்டுமே அவனுக்கு முதன்மையாய் பட்டது இத்தனை நேரம் அமைதியாய் நின்று அவள் சொன்னது அனைத்தையும் கேட்டவன் தன் மௌனத்தை கலைத்து இதுவரை இருந்த பொறுமை அணைத்து இருந்த இடம் தெரியாமல் போனது
“எவ்வளவு திமிர் இருந்தா இந்த மாதிரி எல்லாம் அவன் செஞ்சு இருப்பான் உனக்கு ஒன்னுனா கேட்க ஆளில்லைனு நினைச்சுட்டனா அவன்!!?, அவனை சும்மா விடமாட்டேன், அவனை ஒரு கை பார்த்துடுறேன்“ என்றவன் சட்டையை மடித்து விட்டு கொண்டு ருத்ராவை பார்க்க புறப்பட
“இப்படி எல்லாம் எதுவும் நடந்திட கூடாதுனுதான் உங்ககிட்ட எதையும் சொல்லாம மறைச்சேன், ப்ளீஸ் கிருஷ்ணா எனக்காக ருத்ரா கிட்ட நீ சண்டை போடா கூடாது”
“கிருஷ்ணா தானடி சண்டை போடக்கூடாது நான் போடலாம் இல்ல, உனக்கு ருத்ரா செஞ்ச அநியாயத்துக்கு ருத்ராவையும் அவன் அம்மாவையும் கண்டிப்பாக நான் சும்மா விடமாட்டேன் “என்று மஞ்சு சொல்ல
“ப்ளீஸ் மஞ்சு நீயும் என் நிலைமை புரிஞ்சுக்காம இப்படி கோவப்பட்டா என்ன அர்த்தம், நீங்க ரெண்டு பேரும் எனக்காக யாருகிட்டயும் சண்டை போடக்கூடாது “என்றாள் மகி
“ஏன் டி போட கூடாது அவன் என்ன வேணும்னா செய்வான் நாம அமைதியா போகணுமா “என்று உச்சகட்ட கோவத்தில் மஞ்சு கத்த
“இதுக்கு மேல இன்னொரு பிரச்சனை தாங்கிக்கிற சக்தி எனக்கு இல்லை உங்க ரெண்டு பேருக்கு ஏதாவதுன்னு சத்தியமா அது என்னால் தாங்க முடியாது ப்ளீஸ் இதை இதோட விட்ருங்க, எனக்காக எந்த சூழ்நிலையிலும் அவங்க கிட்ட நீங்க பேசி சண்டை போடக்கூடாது ரெண்டு பேரும் என் மேல் சத்தியம் பண்ணுங்க “என்று மகி சொல்ல
“அவங்க கிட்ட நாங்க எதையும் கேக்கலை போதுமா!!, ஆனா சத்தியம் பண்ண முடியாது “என்றாள் மஞ்சு
“இப்போ நீங்க என்மேல சத்தியம் பண்ணலை உங்க யார் கிட்டயும் சொல்லாம கொள்ளாம எங்காவது போயிடுவேன் அப்புறம் நீங்க யார்கிட்ட வேணும்னாலும் சண்டை போடுங்க, நான் தான் இருக்க போறது இல்லையே!!”
“என்னடி பேச்சு பேசுற “என்று மஞ்சு அதட்ட
“அப்போ சத்தியம் பண்ணுங்க ரெண்டு பெரும் “என்றாள் மகி வேறு வழி இன்றி மகியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இருவரும் மகி மேல் சத்தியம் செய்தனர்
“சத்தியம் பண்ணது எப்பவும் நினைவுல இருக்கட்டும் “என்றாள் தனக்கு நியாயம் கேட்டு இவர்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் தான் அவள் இருவரிடமும் சத்தியம் வாங்கினாள்
“நாங்க எப்பவும் உன் கூடவே தான் இருப்போம், நீ எப்பவும் தனி ஆள் இல்லை உனக்காக நாங்க இருக்கோம் அதை எப்பவும் மறக்காத “என்று கிருஷ்ணா சொல்ல
“ஹ்ம்ம் “என்றவள் இருவரையும் அணைத்துக்கொண்டாள் இதைவிட வேறு என்ன வேண்டும் அவளுக்கு..தனக்கு ஒன்று என்றால் துடிக்கும் நட்புகளை அவள் வாழ்வில் சம்பாதித்து விட்டாள் இதை விட வேறு சொத்து வேண்டுமா என்ன!!
மகி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்த கண்ணீர் வருத்ததாலோ வேதனையாலோ வரும் கண்ணீர் அல்ல தன் நண்பர்கள் இருவரும் தன் மேல் காட்டும் அன்பிற்கும் சான்று!!...
வெகு நாட்கள் கழித்து நண்பர்களை பார்த்து தன் மன பாரத்தை இறக்கியதில் அவள் மனம் லேசானது நீண்ட நாள் கழித்து நண்பர்களிடம் பேசியதில் மனம் நிறைவாக உணர்ந்தாள் மகி நண்பர்கள் மூவரும் கடற்கரையில் சிறிது நேரம் விளையாடி விட்டு ஹோட்டல் சென்று சாப்பிட்டு என அன்றைய நாளை தன் நண்பர்களுடன் செலவிட்டாள் மகி
ருத்ராவோ எல்லாரிடமும் கோவத்தை காட்டிகொண்டிருந்தான் அவன் ஏன் கோவ படுகிறான் எதற்கு கோபப்படுகிறான் என்று தெரியாமல் அனைவரும் குழம்பினார் தேவை இல்லாமல் அவனை பார்க்கவே பயந்தனர் அனைவரும் “அவள் எப்படி செல்லலாம் அதும் அந்த கிருஷ்ணாவுடன் “என்று நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது இதுக்காக கண்டிப்பா என்கிட்ட அனுப்ப வைப்படி என்று கருவினான் ருத்ரா
அவனை பொறுத்தவரை அவள் அவனுக்கு சொந்தமானவள் அவளிடம் அடுத்தவர் உரிமை கொண்டாடுவதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவளுக்கு அவன் மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதனால் வரும் கோபம்..
திருமணத்திற்கு முன்பு மகிழினி கிருஷ்ணாவை காதலித்தாள் என்று ருத்ரா நினைத்திருக்க, மகியின் அன்பையும் காதலையும் பெற்ற கிருஷ்ணாவின் மேல் அவனுக்கு பொறாமை, வெறுப்பு என்று கூட சொல்லலாம், அவளுக்காக காத்திருந்த தனக்கு கிடைக்காத அன்பும் காதலும் அவனுக்கு கிடைத்ததே என்ற ஏக்கம் கூட அவனின் கோவத்திற்கு காரணம்...மகிழினி கிருஷ்ணாவை நண்பனாக தான் பார்த்தாள் இப்போதும் அவள் அப்படித்தான் கிருஷ்ணாவை பார்க்கிறாள் இதை அறியாமால் அவளை தவறாக புரிந்துகொண்டான் ருத்ரா..
நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டவள் மாலை வீட்டிற்கு வந்தவளுக்கு பெரும் அதிர்ச்சி காலையில் நண்பர்களுடன் பேசியதில் லேசான மனது மீண்டும் பாரமானது போல் உணர்ந்தாள் அவள் நிம்மதியை. அவள் வீட்டிற்குள் நுழையும் போதே ருத்ரா ஷோபாவில் ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக அமர்ந்திருந்தான் மகி வீட்டில் நுழைந்த உடனே அவள் கண்களில் இந்த காட்சிதான் பட்டது அதை பார்த்த கணமே அவள். முகம் மாறி அவள் மனதில் இனம்புரியாத வேதனை சூழ்ந்தது தாலிகாட்டிய கணவனை இப்படி வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பார்க்க எப்பெண்ணால் தான் முடியும்
காலையில் அவனின் சிறு செயலில் அவன் மனதில் தன் மேல் காதல் உள்ளது என்று எண்ணி மனதில் சந்தோஷப்பட்டவள் இனம் புரியாத உணர்வுகளின் தவித்தவள் பல போராட்டங்கள் பின்பே அது தனக்கு ஏற்படும் உணவுகள் எல்லாம் காதலின் வெளிப்பாடு என்று உணர்த்தாள் மனம் அவளை அறியாமலே அவன் மேல் காதல் கொண்டது.. அவள் சந்தோசத்தை உருகுலைபதற்கென்றே ஒருத்தி அவள் வீட்டில் வந்து அமர்ந்திருந்தாள்
மகியின் முக மாற்றத்தை கண்டவன் அவள் மனம் படும் பாட்டை கண்டு ‘உனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும் டி, நல்லா வேதனை படு ‘என்று மனதுக்குள் நினைத்தவன் தன் அருகில் இருந்த ஷாலினி மேல் கை போட்டப்படி அமர்ந்தான் அருகில் அமர்ந்ததையே பொறுத்துக்கொள்ள முடியாமல் அவள் வேதனை பட அவன் வேண்டுமென்றே அவள் மேல் கை போட்டுக்கொண்டு அமர அதை பார்க்க முடியாமல் அவள் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்..
மகிழினி அங்கிருந்து உள்ளே செல்ல முற்பட அவளைத் தடுத்து நிறுத்தினார் வேதவல்லி “மகி இவ என் அண்ணன் பொண்ணு நம்ம ருத்ராக்கு முறை பொண்ணு லண்டன்ல இருந்து வந்து இருக்கா இனி நம்மவீட்லதான் தங்க போற அவளுக்கு என்ன என்ன தேவையோ அதெல்லாம் பக்கத்துல இருந்து நீயே செஞ்சிகுடு “ என்று சொல்ல,
“என்னது இனி இங்கதான் தங்க போறாளா!!?? “என்று உள்ளுக்குள் அதிர்ந்தவள் வேதவல்லியிடம் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போக “ஹே... “என்ற ருத்ராவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது
“பேபி என்ன குடிக்கிற? “என்று ருத்ரா ஷாலினியிடம் கேட்க அவளோ “ஆப்பிள் ஜூஸ் ஓகே மாமா “என்றாள்
“சொன்னது காதில விழுந்துச்சா!?, என் ஷாலு குட்டிக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வா “ என்று அவளை விரட்டினான்
“என் ஷாலு குட்டி “என்று அழுத்தமாக சொன்னது அவளை இதயத்தை குத்தி கிழிப்பது போல் இருந்தது மகிக்கு அவளால் அவன் சொல்வதை கேட்பதை தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை.அவர்கள் முன் அழ விருப்பம் இல்லாமல் கண்ணரை வெளியே வராமல் கட்டுப்படுத்தி கொண்டு நின்றிருந்தாள்.
ஷாலினிக்கோ வானில் பறப்பது போல் இருந்தது ருத்ராவின் அழகில் மயங்கி கிடப்பவளுக்கு அவனின் அக்கறை பேச்சு அவனின் அருகமையும் அளவில்லா மகிழ்ச்சியை தந்தது... அவளை இங்க வர வரவழைத்ததே ருத்ராவையும் மகியையும் பிரித்துவிட்டு மகியை வீட்டைவிட்டு துரத்தி விட்டு விட்ட ஷாலினியை ருத்ராவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து தான் ஷாலினியை இங்க தங்க வைத்திருந்தார் வேதவல்லி..
இதிலிருந்தே ருத்ராவின் மீது மயக்கத்தில் இருப்பவள்,ருத்ரா என்றாலே கொள்ளை ஆசை அதும் அவனின் அழகும் திமிரும் என அனைத்தும் அவளை அவன் மேல் ஈரப்பை உருவாக்கியது ருத்ராவோ அவளை அருகில் கூட அண்ட விடமாட்டான் அவளை பார்க்கும் போது எல்லாம் சிறு தலையசைப்புடன் கடந்து சென்றுவிடுவான் அவன் அவளை எப்போதும் கண்டுகொண்டது இல்லை அவளுக்கு அது எரிச்சலாக இருந்தாலும் தன் அழகிலும் கவர்ச்சியிலும் மயங்கி அவள் பின் சுற்றும் ஆண்களை மட்டும் பார்த்தவளுக்கு தன்னை கண்டுகொள்ளாமல் செல்லும் ருத்ராவை பிடிக்காதான் செய்தது அவனின் அழகும் உடற்பயிற்சியால் முருக்கேரிய சிக்ஸ் பேக் பாடியும் அவளை அவன் மேல் மயக்கம் கொள்ள வைத்தது..
ருத்ராவை திருமணம் செயதே தீர வேண்டும் என்ற முடிவோடு வேதவல்லியிடம் தான் ருத்ராவை காதலிப்பதாகவும் அவன் இல்லாமல் வாழ முடியாது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய தன் அண்ணன் மகளின் மேல் பாசம் கொண்ட வேதவல்லி உடனடியாக ருத்ராவிற்கு ஷாலினியை திருமணம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்... அதான் பின் ஹரிஹரனிடம் விஷயத்தை சொல்ல அதை கெட்டவர் பதறித்தான் போனார் ஷாலினியையும் அவள் குணத்தையும் அறிந்தவரால் தன் மகனின் வாழ்க்கையில் இப்படி ஒரு பெண் மனைவியாக வந்தாள் அவன் வாழ்க்கையே சீறழிந்து விடும் என்று பயந்தார்..
ஷாலினிக்கும் ருத்ரவிற்கும் திருமணம் செய்யலாம் என்று நினைத்திருக்கும் போதுதான் வேதவல்லியில் தலையில் இடியாய் வந்து இறங்கியது ஒரு செய்தி அதை ஏற்க முடியாமல் வேதவல்லி அடிப்போனார் தன் பிள்ளைக்கு அண்ணன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மண்ணை அள்ளி போட்டாது வேதவல்லியில் மாமனார் எழுதிவைத்தார் உயில்
வேதவல்லியால் ஷாலினியை ருத்ராவிற்கு திருமணம் செய்து வைக்க முடியாத ஒர் நிர்பந்தம் அந்த உயில் படி ஒரு ஏழை பெண்ணை தன் மகளுக்கு திருமணம் செய்யது அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு தான் அந்த சொத்து அவர்கள் கொடுப்பதிற்கு கிடைக்கும், இல்லை எனில் மொத்த பரம்பரை சொத்தும் அனாதை அசரமத்துக்கு போகும் படி உயிலை எழுதி இருந்தார் ஹரிஹரனின் அப்பா அதான் படி அதற்க்காக தன் பிள்ளைக்கு மகிழினியை தேர்தெடுத்தார் அதற்க்கு காரணம் அவள் ஏழை வேதவல்லியை கேள்வி கேட்கும் அளவிற்கு மகிழினி வீட்டில் யாரும் இல்லை என்பதாலும் அவளின் பண கஷ்டமும்,வேதவல்லிக்கு மிக சாதகமாக போனது மகிழினியை ருத்ராவிற்கு திருமணம் செய்துவைத்துவிட்டு குழந்தை பிறந்ததும் அவளை ருத்ரவிடமிருந்து பிரித்து அனுப்புவது மிக எளிது என நினைத்தார் அதான் பின் ஷாலினியை ருத்ராவிற்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என கணக்கு போட்டு மகிழினியை ருத்ராவிற்கு திருமணம் செய்துவைதார்..
முதலில் ருத்ரா மகிழினி திருமணத்தை ஷாலினி ஒத்துக்கொள்ள வில்லை பின் உயில் விஷயத்தை சொல்ல ஷாலினிக்கு பணத்தில் மேல் உள்ள ஆசையால் அவர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்... இவ்வளவு நாள் பொறுத்து இருந்தவள் அதற்க்கு மேல் பொறுக்க முடியாமல் இந்தியா கிளம்பி வந்துவிட்டாள் வந்ததும் ருத்ரா அவள் மேல் காட்டிய அக்கறையும் அவனின் அருகமையும் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தான்..
மகிழினி அவளுக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க அதுவரை மகிழினியை சரியாக கவனிக்காத ஷாலினி இப்போதும் அவளை மேலிருந்து கீழ் வரை கேவலமான பார்வையை விசினாள் இதை மகிழினி கவனித்தாலும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை ஆனால் ருத்ரா போன் பேசிகொண்டிருந்ததில் ஷாலினியின் பார்வையை கவனிக்க வில்லை. அதற்க்கு மேல் அங்கு நிற்காமல். மகிழினி கிளம்பி அறைக்கு சென்றுவிட்டாள்
அறைக்கு வந்தவள் மனம் முழுவதும் ரணமாக வலித்தது ருத்ரா இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை ருத்ரா ஷாலினியுடன் நெருக்கி அமர்த்திருந்ததை நினைக்க நினைக்க அழுகை அழுகையாக வந்தது தனக்கு கிடைக்காத உரிமை அவளுக்கு கிடைக்குறது என்ற ஏக்கம் அவளுள்..
ஷாலினிக்கு அது பிடிக்கும் என பெரிய லிஸ்ட்டையே செய்ய சொல்லி குடுத்தார் வேதவல்லி அவளும் முகம் கோணாமல் அனைத்தையும் செய்து விட்டு அனைவர்க்கும் சாப்பாட்டை பரிமாற ஷாலினிக்கு மகியை எப்படி அசிங்க படுத்தலாம் என்று மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருக்க அதற்கான சந்தர்ப்பத்தை அவ்வபோது உருவாக்க வேண்டும் என்று நினைத்தாள்
அவள் செய்த உணவை எல்லாம் சாப்பிடவளுக்கு அதான் ருசி பிடித்திருந்தாலும் அதை வெளிகட்டிகொள்ளாமல் அவளிடம் “என்ன பண்ணி வச்சி இருக்க ஒன்னு கூட நல்லாவே இல்லை,உனக்கு ஒழுங்கா சமைக்க கூட தெரியாதா!? “என்று எரிந்து விழுந்தாள்
“வந்ததும் வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டா போல “என்று மகி மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்
ருத்ரா அறையிலிருந்து சாப்பிட வந்த பிறகு ஷாலினி மகியை குறை கூறுவது போல் ஒரு வார்த்தைகூட பேசவில்லை அவனுக்கு சாப்பாடு பரிமாறி அனைவரும் சாப்பிடும் வரை காத்திருந்துவள் அனைவரும் சாப்பிட்ட பின்பு மற்ற வேலைகளை பார்க்க துவங்கினாள்..
சாப்பிடும் மன நிலையில் அவள் இல்லை மனம் முழுவதும் ருத்ரா ஷாலினியிடம் காட்டும் நெருக்கம் மாட்டுமே வலியை குடுத்தது வேலைகளை முடித்துக்கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள் ருத்ராவோ தலைக்கு அடியில் கையை வைத்து படுத்திருக்க அவனிடம் ஏதும் பேசாமலே அமைதியாக சென்று படுத்துக்கொண்டாள்
எப்போதும் அவள் சிறு தவறு செய்தாலே தன் மீது கோபப்படுபவன் இன்று இவ்வளவு மௌனமாக இருப்பது கண்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது, வீட்டுக்கு போனதும் பெரும் பிரளயமே நடக்கும் என்று எதிர் பார்த்தவளுக்கு இந்த அமைதி விசித்திரமாக தான் இருந்தது..
அவ்ளோ சத்தம் போடாமல் திட்டி கோபத்தை காட்டாமல் வேறு வழியில் அல்லவா கோபத்தை காட்டுகிறான், அவளை ஒதுக்கி மகி பார்க்கும் போது எல்லாம் ஷாலினியிடம் நெருக்கமாக அல்லவா நடந்து கொள்கிறான் இந்த செயலால் மகி உள்ளுக்குள் எவ்வளவு வேதனை படுவள் என்று ருத்ராவிற்கு நன்றாகவே தெரியும் அதனால் தான் அவளை காயப்படுத்த இம்முறையை பயன்படுத்துக்கிறான்..
தன்னிடம் சொல்லாமல் கிருஷ்ணாவை பார்க்க சென்றதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை தனக்கு மட்டுமே சொந்தமானவள் அவள் மீது இன்னொருவர் அக்கறை காட்டுவதும் உரிமை எடுத்துகொள்வதும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தது..
ருத்ரா தன்னிடம் ஒருவார்த்தை கூட கேட்கவில்லையே என்று யோசித்துகொண்டிருக்க அப்படியே தூங்கிப்போனாள்..
காலை வழக்கம் போல் அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு ஆபீஸ் கிளம்பி கீழே வந்தவள் கண்டது ருத்ரா மடியில் அறையும் குறையுமாக உடை அணிந்து அவன் மடியில் அமர்ந்திருந்தாள் ஷாலினி இந்த காட்சியை பார்த்து அவள் இதயம் வேகமாக அடித்துக்கொள்ள ஒருகணம் ருத்ராவை உறுத்து பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் அவள் சட்டென பார்வையை தாழ்த்திக்கொண்டாள்..
அவனும் இதைத்தானே எதிர்பார்த்தான்.. ஷாலினி இன்று ருத்ரவுடன் ஆபீஸ் வருவதாக சொல்ல அவனும் வா என்றுவிட்டான் ஷாலினிக்கு ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது இன்று முழுவதும் அவனுடன் இருக்க போகிறோம் என்ன டிரஸ் போடலாம் இன்று குழம்பியவள் தன்னிடம் இருக்கும் டிரஸ்களில் மூன்று டிரஸ்ஸை தேர்வு செய்து அதில் மிக கவர்ச்சியாக இருக்கும் ஒரு குட்டி டிரஸ்ஸை தேர்வு செய்து அதை போட்டுக்கொண்டு அவன் முன் சென்றாள்
“நல்லா இருக்கா மாமா “இன்று ஷாலினி கேட்க அவனோ அவளை கண்டுகொள்ளாமல் போனை பார்த்தபடி “ நல்லா இருக்கு”என்றாள் அதே நேரம் மகி மாடியில் இருந்து இறங்கி வர சட்டென ஷாலினியை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் மகி பார்க்கும் போது அவள் காதருகே குனிந்து “ யூ லுக்கிங் வெரி கார்ஜியஸ் “என்றான் அவனிடமிருந்து இப்படி ஒரு பாராட்டை எதிர்பாராது வெக்கத்தில் முகம் சிவந்து “தேங்க்ஸ் மாமா “என்றாள் அவன் மடியில் அமர்ந்திருந்து வேறு அவளை கிறங்க வைக்க “மாமா.. “என்றாள் தாபமாய்
“ஹ்ம்ம் “என்று மகியை பார்த்தபடி சொல்ல
“நாம எங்காவது வெளில போலாமா “என்றாள் மகிக்கோ இதயம் வேகமாக அடித்துக்கொண்டது மனதில் “அய்யோ ஆண்டவா இவர் அவ கூட போக கூடாது “என்று மனதில் அவள் பதற
அவனோ மகியின் பதற்றத்தை ரசித்தபடி “கண்டிப்பா பேபி “என்று மகிக்கு அதிர்ச்சியை கொடுத்தான் சட்டென அவனை ஏறிட்டவள் அவனை உற்று பார்க்க அவனோ அலட்சியமாக அவளை பார்த்தான்
“ஆபீஸ்ல கொஞ்சம் ஒர்க் இருக்கு டா பேபி முடிச்சுட்டு நம்ம போலாம் நீ ரெடியா இரு நானே வந்து கூட்டிட்டு போறேன் “என்று சொல்ல. மகிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது அதற்க்கு மேல் அங்கு நிற்காமல் வெளியேறிவிட்டாள்.
ஆட்டோவை பிடித்து ஆபீஸ் சென்றவள் மனம் முழுவதும் இதே சிந்தனை..
அரை மனதோடு வேலை செய்து கொண்டிருந்தாள் ருத்ராவிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வர அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள் “உள்ளே வா டி “என்று மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டான் ருத்ரா
மகி உள்ளே போக “எதுக்கு சார் கூப்பிட்டீங்க? “என்றாள் அவனை பார்க்காமலேயே “பசிக்குது “
“அதான் புதுசா ஒருத்தி வந்து இருக்காளே கொஞ்சுறதுக்கும் குழாவுறதுக்கும் அவகிட்ட சொல்லுங்க சார் எதுக்கு என்கிட்ட சொல்றிங்க? “என்றாள்
‘ஓஹோ மேடம்க்கு பொசசிவ்னஸ் கூட வருமா இதுவும் நல்லாத்தான் இருக்கு’என்று நினைத்துக்கொண்டு
“நீதான பொண்டாடி, அப்போ புருஷனுக்கு நீதான செய்யணும் “
“க்கும்!! பொண்டாட்டியாம் பொண்டாட்டி, அவ கூட கொஞ்சி குலாவும் போதெல்லாம் தெரியல பொண்டாட்டின்னு இப்பதான் பொண்டாட்டி கண்ணுக்கு தெரியும் போல“ என்று முணுமுணுக்க
“என்னடி முணுமுணுப்பு “
“ ஒன்னும் இல்ல “என்றவள் அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டாள்
“சார்.. “
“ஹ்ம்ம்ம் “என்று சாப்பிட்டு கொண்டே கேட்க
“நீங்க ஷாலினிக்கூட போக கூடாது “என்றாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு
“ஏன் போக கூடாது, சம ஹாட்டா இருக்கா அப்படியே கடிச்சி சாப்பிடலாம் போல இருக்கு அவளை “என்றான் வேண்டுமென்றே
“என்னது!!!”என்று அவள் அதிர
“ ஷி லூக்கிங் வெரி ஹாட் ஆன்ட் செக்ஸி “என்று அவன் ஒரு மார்க்கமாய் சொல்ல
“அதெல்லாம் நீங்க போக கூடாது “என்றாள் படபடக்கும் நெஞ்சோடு
“கட்டின பொண்டாட்டி சரி இல்லனா புருஷன் போகத்தான் செய்வான் “என்று சொல்ல, அவ கூப்பிட்டா இவன் எப்படி போகலாம் அவன் போக கூடாது என்ற பயம் வேறு அவளை பாடாய் படுத்தியது
“நீங்க போக கூடாதுனா போக கூடாதுதான் “
“நீ சொல்லி நான் கேட்கணுமா, நீ யார் டி எனக்கு ஆர்டர் போட, போடி இங்கிருந்து “என்றான் உள்ளுக்குள் அவளை ரசித்தபடி அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அதட்டும் குரலில் சொல்ல அவளோ வாடிய முகத்தோடு வெளியேறினாள்
அவள் மனம் முழுவதும் அவளுடன் அவன் போய் விடுவானோ என்ற பயம் மட்டுமே இருக்க அவன் கேபினை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்
ருத்ரா கார் கீயை சுழற்றிக்கொண்டு “பேபி நான் கிளம்பிட்டேன் இன்னும் பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்”என்றபடி மகியை கடந்து சென்றான் அவளுக்கோ கோவம் அழுகை என ஒருசேர வர ருத்ராவின் மேல் ஆத்திரமாக இருந்தது...
வெகு நேரம் ஆகியும் ருத்ரா ஆபீஸ் வராமல் இருக்க நேரம் ஆக ஆக அவளுக்கு நெஞ்சம் தடதடக்க தொடங்கிவிட்டது அவன் வரவே இல்லை
வேலையில் கவனம் செலுத்த முடியாமல் ஏனோ தானோ வென்று வேலை பார்த்தவள் வேலையை முடிப்பதற்கு இரவு ஆகிவிட்டது அவள் கிளம்பும்போது ஆபீஸ்ஸில் ஒருவர் கூட இல்லை வீட்டிற்கு கிளம்புவதற்காக பேக்கை எடுத்துக்கொண்டு வெளிய வரும்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது நாளை மாறனுக்கு ஹாஸ்டல் பீஸ் கட்டவேண்டும் என்பது
“அய்யோ!!இப்போ என்ன பண்ணுறது நாளைக்கு கண்டிப்பா பணம் கட்டியே ஆகணுமே!!”என்று தலையில் கை வைத்து புலம்பி கொண்டிருந்தாள்
கையில் இருந்த இருப்பையும் மாறனுக்கு ஹாஸ்டல் முன் பணமாக கட்டிவிட்டாள் மீதம் இருக்கும் பணத்தை வைத்துதான் அவளின் போக்குவரத்து செலவை பார்த்துக்கொல்கிறாள்...
வாங்கிய சம்பளத்தையும் தாய் இறப்பிற்காக வாங்கிய கடனுகாக வட்டி கட்டிவிட்டாள், மஞ்சுவிடம் உதவி கேட்கலாம் என்றால் அவள் ஊருக்கு சென்றிருந்தாள் அவளை தொல்லை பண்ணவேண்டாம் என்று நினைத்தவள் கிருஷ்ணாவிடம் உதவி கேட்கலாம் என்று காலையிலேயே கிருஷ்ணாவிற்கு போன் செய்தாள் அவனோ பிஸியா இருந்ததால் போன் அட்டென்ட் செய்யவில்லை அதன் பின் ருத்ராவின் நினைவில் நாளை மாறானுக்கு ஹாஸ்டல் பீஸ் கட்டவேண்டும் என்பதையும் ,கிருஷ்ணவிற்கு போன் பண்ணியதையும் மறந்தே போனாள்.
தன்னுடைய கவன குறைவை எண்ணி நொந்துகொண்டவள் யாரிடமும் உதவி கேட்க முடியாமல் இருந்தாள் என்ன செய்வது என்று சிந்தித்து கொண்டே அவள் நடக்க மீண்டும் கிருஷ்ணாவிற்கு அழைக்கலாம் என்று அவனுக்கு போன் செய்தாள் அப்போதும் அவன் போனை எடுக்காமல் இருக்க ஐயோவென்றாக்கி விட்டது மகிக்கு
உதவி தேவை படும் போது கிருஷ்ணாவையும், மஞ்சுவைவும் நினைக்க தோன்றிய மனம் கணவனை நினைக்க தோன்றவில்லை இக்கட்டான சூழலில் அவன் அவளுக்கு உதவுவான் என்ற நம்பிக்கை அவன் அவளுக்கு தராமல் போக அவளால் மட்டும் எப்படி அவனை நினைக்க முடியும்!
அடிக்கடி நண்பர்களிடம் உதவி கேட்கவும் சங்கடமாக இருந்தது என்னதான் நண்பர்கள் ஆனாலும் அவர்களிடம் மீண்டும் மீண்டும் உதவி கேட்டு நிற்க முடியவில்லை அவளால்,அதே சிந்தனையில் அவள் நடக்க அவள் வழியை மறைத்தார் போல் வந்து நின்றது ருத்ராவின் கார் முன் பக்க கார் கதவை திறந்து விட்டு “வா”என்று அவன் சொல்ல அவளும் ஏறினாள்
நாளை எப்படி பீஸ் கட்டுவது என்ற சிந்தனையிலேயே வந்தாள் ருத்ராவும் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க என்றும் கேட்க வில்லை அவளும் சொல்ல வில்லை இருவருமே ஏதும் பேசாமல் அமைதியாக வர இவர்கள் அமைதியை கலைத்தது கிருஷ்ணாவிடமிருந்து வந்த போன் கால்,
திரையில் மிளிறிய கிருஷ்ணா என்ற பெயரை பார்த்தும் ருத்ராவை பார்க்க அவனும் அவள் போனை பார்த்து அதில் வந்த கிருஷ்ணா பெயரை பார்த்து கடுப்பாய் முகத்தை திருப்பிக்கொண்டான், கிருஷ்ணாவிடம் பேசினால் இவனுக்கு பிடிக்காதே இப்போது போன் அட்டென்ட் செய்யலாமா வேண்டாமா என்று அவள் குழம்ப வேண்டாம் என்று போனை அட்டென்ட் செய்யாமல் விட மீண்டம் கிருஷ்ணாவிடமிருந்து போன் வர “அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போட்டு பேசு “என்றான் கோவமாய் ருத்ரா அவளும் போனை ஸ்பீக்கரில் போட்டு “ஹலோ” என்றாள் ருத்ராவை பார்த்தப்படி
“சாரி மகி, மார்னிங் அவசர வேலையா வெளில போய்டேன் போன் வீட்லயே மறந்து வச்சிட்டு போய்டேன் இப்போதான் விட்டுக்கு வந்து போனை பார்த்தேன்,சாரி மகி “
“பரவால்ல கிருஷ்ணா “
“என்ன விஷயம் மகி? “
“அது... அது... அப்புறம் சொல்லுறேன் கிருஷ்ணா “
“மூணு நாலு முறை போன் பண்ணி இருக்க, ஏதும் இம்போர்ட்டண்ட் இல்லனா கண்டிப்பா இத்தனை முறை போன் பண்ணி இருக்க மாட்டா, என்ன விஷயம் மகி “என்று உண்மையான நண்பனாய் விசாரிக்க,
“ஒரு ஹெல்ப் பண்ணனும் அதான் போன் பண்ணேன் “என்று ருத்ராவை பார்த்தபடி பயந்துகொண்டே மகி கேட்க ருத்ராவின் முகத்திலும் ‘என்ன கேக்க போற ‘என்கிற கேள்விதான் இருந்தது
“என்ன ஹெல்ப் மகி சொல்லு “
“அது வந்து “என்று அவள் தயங்க ருக்ராவிற்கு பொறுமை இழுத்து பிடித்து என்னதான் கேட்க போகிறாள் என்று யோசனையோடு ரோட்டை பார்த்துப்படியே காரை இயக்கினான்
“என்கிட்ட கேட்க உனக்கு என்ன தயக்கம் மகி எதுக்கு இவ்ளோ தயக்குற எதுனாலும் கேளு மகி “என்றான் உரிமையோடு கிருஷ்ணா மகியிடம் காட்டும் அக்கறையும் உரிமையும் ருத்ராவிற்கு எரிச்சலையும் கோபத்தையும் தர அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தான்..
இதற்கு மேல் தயங்கினால் சரியாக இருக்காது என்று நினைத்தவள் “கிருஷ்ணா மாறனுக்கு நாளைக்கு ஹாஸ்டல் பீஸ் கட்டி ஆகணும் வாங்கின சம்பளம் எல்லாம் வட்டி கட்டிட்டேன் மாறனுக்கு பீஸ் காட்ட காசு இல்லை “என்றவள் குரல் தழுதழுத்தது கிருஷ்ணாவிற்கும் அவள் நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது
எப்போதும் யாரிடமும் உதவி கேட்க தயங்குபவள் தனக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும் போராடி வாழ்பவள் அவள் சூழ்நிலை புரிந்து மஞ்சுவும் கிருஷ்ணாவும் உதவி செய்ய முன் வந்தாலும் அதை வேண்டாம் என்று மறுத்துவிடுவாள் அப்படியா பட்டவள் இன்று கிருஷ்ணாவிடம் உதவி கேட்டு நிற்கிறாள்
கிருஷ்ணாவிடம் உதவி கேட்பதை ருத்ரா அன்றுபோல் பணத்துக்காக அலைக்கிறேன் என்று சொல்லிவிடுவனோ தன்னை அன்று போல். வார்த்தைகளை காயப்படுத்திவிடுவனோ என்று குனிகிறுக்கி போனாள் மகி
“மகி நான் பாத்துக்குறேன், இனி மாறனை பத்தி நீ கவலை படாத நான் பாத்துக்குறேன் “என்று கிருஷ்ணா சொல்ல
“தேங்க்ஸ் கிருஷ்ணா “என்றாள்
“சரி மகி பாய், எதைப்பத்தியும் நினைச்சி கவலை பாடமா தூங்கு “என்று அவள் நிலை அறிந்து அவளை சங்கட படுத்தாமல் போனை ஆப் செய்தான்
ருத்ராவோ ஒட்டுமொத்த கோவத்தையும் ஸ்டியாரிங்கில் காட்ட கார் அதீத வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அவன் மனம் எரிமலையாய் கொதித்துக்கொண்டிருந்தது ‘தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே, எங்கோ இருக்கும் அவனிடம் உதவி கேட்டவள் அருகில் இருக்கும் தன்னிடம் கேட்கவில்லையே!!, அவனிடம் உரிமையாய் கேட்டவள் தன்னிடம் கேட்காதது ஏன்? என்ற கோபம்’ அவனுள் எரிமலையாய் கொப்பளித்துக்கொண்டு இருந்தது..அவளிடம் ஏன் என்னிடம் கேட்கவில்லை என்று அவன் ஒருவார்த்தையும் கேட்கவில்லை அதேபோல் ‘அன்று அவன் அவளிடம் விட்டெரிந்தது இருபது லட்சம் இருபது லச்சத்தை ஒரே மாதத்தில் செலவு செய்துவிட்டளா!?’என்று அதிச்சியும் கூட,
அவளோ கிருஷ்ணாவிடம் பேசியதுனால் தான் இப்படி கோப படுகிறான் என்று தவறாக. நினைத்துக்கொண்டாள் அவளை வீட்டின் முன் இறக்கி விட்டவன் காரை எடுத்துக்கொண்டு அதிவேகமாக பறந்தான் அவளுக்கே அவன் கார் வேகத்தை கண்டு பயமாகத்தான் இருந்தது அவனிடம் மெதுவாக போக சொல்லும் அளவுக்கு அவளுக்கு தைரியமும் இல்லை என்பதால் அமைதியாகவே உள்ளே சென்றுவிட்டாள்
வீட்டிற்கு வந்தவள் வழக்கம் போல் வேலைகளை முடித்துவிட்டு ஷாலினியும் வேத வல்லியையும் சாப்பிட அழைக்க இருவரும் சாப்பிட அமர்ந்தனர்
ஷாலினிக்கோ இவளை எதாவது செய்யணுமே என்று நினைக்க “அத்தை எங்கிருந்து புடிச்சீங்க??,இந்த மாதிரி பிச்சைக்காரன் குடும்பத்தை “என்று நக்கலாக பேச மகிக்கு சட்டென கண்கள் கலங்கிவிட்டது தன்னை எவ்வளவு பேசினாலும் பொறுத்திருந்தவளால் அவள் குடும்பத்தை தரைகுறைவாக பேசுவதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை
“அந்த பிச்சைக்கார குடும்பத்துகிட்டதான் பொண்ணு குடுத்தே ஆகணும்னு உங்க அத்தை பிச்சை கேட்டாங்க “என்றாள் மகிழினி
“என்ன ரொம்ப ஓவரா வாய் நீளுது “என்று ஷாலினி மகியை அடிக்க கை ஒங்க அவள் கையை பிடித்து தடுத்த மகி பளிரென்று ஷாலினி கன்னத்தில் ஒரு அறைவிட்டாள் மகி விட்ட அறையில் காது குயிங்.... என்று சத்தம் கேட்க தடுமாறினாள் ஷாலினி
“என்னடி கை நீளுது!!”என்று வேதவல்லி கேட்க
“வயசாயிடுச்சு அடி வாங்குனா உடம்பு தாங்காது அதை மனசுல வச்சிக்கிட்டு நடந்தா நல்லது இல்லனா அவளுக்கு என்ன குடுத்தேனோ அதையே உங்களுக்கு திருப்பி கொடுக்க ரொம்ப நேரம் ஆகாது!! “என்றாள் ஆங்காரமாய் அவளின் இந்த ரூபத்தை பார்த்து இருவருமே அதிர்த்தத்தான் போனார்கள் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை வேதவல்லியும், ஷாலினியும் மறந்து போனார்..
ஷாலினியாலும், வேதவல்லியாலும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை இவளை இப்படியே விட்டால் சரிவராது என்று ருத்ரா வருகைக்காக காத்திருந்தனர் இருவரும் ருத்ரா கார் வாசலில் நிற்கும் சத்தம் கேட்க வேதவல்லியும் ஷாலினியும் கண்ணீர் விட்டபடி தங்களின் நடிக்க துடன்கினர் வீட்டிற்குள் நுழைந்த ருத்ராவிடம் ஷாலினி ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் இல்லை இல்லை அழுவது போல் நடித்துகொண்டிருந்தாள்
“என்னாச்சி ஷாலு? “என்று ருத்ரா கேட்க
“மாமா மகி அடிச்சிட்டா “என்று அவள் அழ
“வாட் உன்ன அடிச்சாளா? “
“ஆமா மாமா,அத்தையையும் அடிச்சிட்டா மாமா “என்றாள் தேம்பியப்படி
“எவ்ளோ தைரியம் இருந்தா என் அம்மாவை கை நீட்டி இருப்ப “என்று கண்கள் சிவக்க நின்றவனை வேதவல்லி மேலும் தூண்டிவிட்டார் “ஆமா தேவ் என்னை அடிச்சிட்டாப்பா “என்று வேதவல்லி அவர் சார்புக்கு சொல்லி அழ
தன் தாயை அடிக்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா!! அவளுக்கு என்று மகியை தேடி சென்றான் ருத்ராமூர்த்தியாய்
உள்ளே துணியை மடித்துகொண்டிருந்தவளை முடியை பிடித்து தூங்கி பளீர் பளீர் என்று கன்னத்தில் அறைய “அம்மா.. “என்று அலறி துடித்தவள் வலி தாங்க முடியாமல் மூலையில் சுருண்டு விழுந்துவிட்டாள்
“எவ்ளோ தைரியம் இருந்தா என் அம்மாவை அடிச்சி இருப்ப “என்று அவன் சீர
“என் குடும்பத்தை பிச்சைக்கார குடும்பன்னு சொல்ல உங்க அம்மாவுக்கு என்ன உரிமை இருக்கு “
“உன் குடும்பம் என்ன கோடிஸ்வர குடும்பமா??, பிச்சைக்கார குடும்பம் தானே அதை தானே சொன்னாங்க!!”
“உங்களை மாதிரி கேடுகெட்ட குடும்பம் இல்லை நாங்க “
“ஓஹோ நீ அதை சொல்லுற, பணத்துக்காக எவன் கிடைப்பன்னு திரியிறவ தானே நீ, பணத்துக்காக என்ன வேனா செய்ற குடும்பம் தானா டி நீங்க, பணத்துக்காக அன்னைக்கு கிருஷ்ணாவை மடக்க பாத்த இன்னைக்கு அவனை விட பணக்காரன் நான் மாட்டினதும் என்ன மடக்க பாக்குற “என்று அவன் முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பளீர் என்று ஒரு அறை விட்டிருந்தாள் மகிழினி
“யாரை பாத்து பணத்துக்காக அலையுறோம்னு சொன்ன “என்று அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள் அவள் அடித்தாள் என்பதையே நம்ப முடியாமல் அவன் அதிர்ச்சியில் இருக்க அவன் அதிலிருந்து அவன் வெளிவருவதற்குள் அவள் அவனை ஆக்ரோஷமாக அவனிடம் சட்டையை பிடித்து கத்த துடங்கிவிட்டாள்
“என்ன டா நினைச்சிட்டு இருக்கீங்க பணம் இல்லைனா மதிக்க மாட்டிங்களா நானும் ரத்தமும் சதையும் இருக்க மனுஷித்தான் எனக்கும் உணர்ச்சிகள் இருக்கும் பணம் இல்லைனா என்னவேனாலும் பண்ணுவிங்களா!!?, பணத்துக்கு அலையிறேன் பணத்துக்கு அலையிறேன்னு சொல்றியே நானா உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன்,இல்ல உன்னை காதலிச்சேனா!!, நீயா வந்த, நீயா கட்டாய படுத்தினா அப்போ கூட வேணாம் வேணாம்னுதானே ஒதுங்கி போனேன் நான் வேணாம்னு சொன்னதுக்கு நீயும் உன் அம்மாவும் எண்ணலாம் பண்ணீங்க!!!, என்ன மிரட்டி இந்தகல்யாணத்தை நடத்துனீங்க!!, என்னவோ நானா வந்து உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி சொல்ற “என்று அவள் ஆரோசமாக அவன் சட்டையை பிடித்து கத்த அவன் தான் செய்வதறியாது நின்றான்
“அன்னைக்கு சொன்னியே உன் அம்முவை நான்தான் பிரிச்சேன்னு நானா உன்னையும் உன் காதலியையும் பிரிச்சேன் மனசாட்சி தொட்டு சொல்லு, என் வாழக்கையையே இப்படி சிறழிச்சிட்டியே டா பாவி உனக்கு நான் என்ன துரோகம் பண்ணேன் ஏன் இப்படி என் வாழ்க்கையை நாசம் பண்ண “என்று எவ்வளவு நாள் மனதில் குமுறிகொண்டிருந்த அணைத்தும் வார்த்தையாய் வெளிவர..
பீரோவில் இருந்து பணத்தை எடுத்தவள் அவன் மீது விட்டேரிந்தாள் “என்ன பாக்குற காசு இல்லனு கடன் கேட்டாளே இப்போ இவ்ளோ பணத்தை விசுருராளேன்னு பாக்குறியா, இந்த பணம் அன்னைக்கு உன்கூட நான் படுத்ததுக்கு நீ குடுத்த பணம் அவளோ கேவலத்தையும் தாங்கிட்டு உடம்பு சரி இல்லாம இருந்த என் அம்மாவை காப்பாத்த அந்த பணத்தை உங்கிட்ட கேட்டேன் ஆனா நீ கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம என் கற்பையே கேவல படுத்தின அதை கூட எல்லாத்தையும் என் அம்மாகாக தாங்கிகிட்டேன்..
தன் பொண்ணு தன்னை வித்து கொண்டு வந்த காசுல உயிர் வாழ கூடாதுனு இந்த உலகத்த விட்டே போய்ட்டாங்க “என்று உடைந்து அழுதாள்
“என்ன!!! இறந்துட்டாங்களா!!?”என்று அதிர்ச்சியாக கேட்டான் ருத்ரா அவன் உயிரில் சரி பாதியாய் கலந்தவள் தன்னம் தனியாய் கஷ்டம் படும் போது தான் அருகில் இல்லாமல் போய் விட்டோமே என்று மனம் வலித்தது அவளின் ஒவ்வொரு அசைவையும் அறிந்து வைத்தவனால் அவளின் மனதை அறியமுடியாமல் போனதுதான் கொடுமை..
“ஆமா, இறந்துட்டாங்க இப்போ உங்க ரெண்டு பேருக்கும் சந்தோசம் தானே “என்றவள் முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழ அவன் முழுவதும் உடைந்து போனான்
ஷாலினியும் வேதவல்லியும் நடத்திய ட்ராமா அறியாமல் அவர்கள் அறையும் குறையுமாக சொன்னதை கேட்டு கோவ பட்டவன் யோசிக்காமல் அவளை கை நீட்டி விட்டான்
அழுது அழுது கரைந்தவள் அப்படியே உறங்கி போனாள் காலை எழுந்தவள் குளித்து தயாராகி சமையல் செய்து வைத்துவிட்டு ருத்ரா கீழே வருவதற்குள் ஆபீஸ் கிளம்பி சென்றுவிட்டாள் ருத்ராவை
ஆபீஸ்லும் வேலையை முடித்து அவனிடம் சமிட் செய்யும் போதும் கூட அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை வீட்டிற்கு வந்து வேலையில் மூழ்கியவள் அவன் தூங்கிய பின்புதான் அறைக்கு சென்றாள் நாட்கள் இப்படியே போக அவளின் பாராமுகம் அவனை வாட்டியது...