ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை தீண்டும் உயிரே -கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
eiOSXRD77588.jpg


உயிரே 1

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள். கண் விழித்தவள் மிரட்சியுடன் சுற்றிலும் கண்களை சுழலவிட அங்கோ நான்கு தடியர்கள் அவளை கண்காணித்துகொண்டிருந்தனர்..
தன்னை ஏன் இவர்கள் கடத்தினர்கள் என்று குழம்பிப்போனவளுக்கு அவனாக இருக்குமோ!!?? என்று அவள் சிந்திக்க அவள் சிந்திக்க கூட அவகாசம் தரமாட்டேன் என்று அந்த நான்கு தடியர்களில் ஒருவன் அவள் அருகில் வந்து நின்றான் அவளை கண்களால் விழுங்கும் படி பார்க்க அதில் கூசிப்போனவள் அருவருப்பாக அவனை பார்த்து “டேய் யாருடா நீங்க எதுக்குடா என்னை கடத்துனீங்க, கட்டை கழட்டி விடுடா “என்று திமிறிய படி கத்த “ இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ உன் கேள்விக்கும் பதில் கிடைக்கும், எங்களுக்கும் நீ கிடைச்சிடுவ,உன்னையும் உன் அழகையும் அனு அணுவாய் ரசிச்சி ருசிச்சு அனுபவிக்க அவலா இருக்கோம் “என்று அவள் கற்பை சுரையாடி அவளை சீறழிக்கும் ஆசையில் அவன் சொல்ல,அவள் பயத்தில் விதிர்விதித்து போனாள் முகம் வெளிரி போய் வேர்த்து கொட்ட இவர்களிமிருந்து எப்படி தப்பிப்பது! ஏதேனும் வழி இருக்கிறதா? என்று நொடி பொழுதில் அவள் மூளை சிந்திக்க துடங்கியது ‘மனமோ நிச்சயம் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பிக்கையை தர ‘தப்பிக்க வழி ஏதும் இல்லை என்று தெரிந்த அடுத்த நொடியே அந்த நம்பிக்கையை இருந்த இடம் தெரியாமல் போனது.
அவளால் அங்கிருந்து ஒரு இன்ச் கூட அசையமுடியாத படி கயிற்றை கொண்டு அவளை கட்டிவைத்திருந்தனர் ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல் நகர அவர்களின் கொடூர பார்வையில் உடல் கூசி போனாள்..

அடுத்து என்ன நடக்கப்போகுதோ என்ற மரண பீதியில் அவளிருக்க அவள் முன் தடியன் ஒருவன் போனை ஸ்பீக்கெரில் போட்டு நீட்ட யாராக இருக்கும் என்ற பயத்தோடு போனை பார்த்தாள் அவள்
“என்ன டி நம்மளை யார் கடத்தினா எதுக்கு கடத்தினானு யோசிச்சி யோசிச்சி பைத்தியம் பிடிக்குதா!?“என்று அந்த புறம் பேசிய பெண்மணி சத்தமாக சிரிக்க அவள் யுகித்து விட்டாள் யார் என்று “ச்சை!!, நீ எல்லாம் ஒரு பொம்பளையா “என்றாள்
“என்னடி வாய் நீளுது ஒழுங்கா நான் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு சம்மதிச்சு என் புள்ளைகிட்ட போய் நான் சொன்ன மாதிரி பேசி அவனையும் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்குற இதுல எதாவது பண்ணி என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நினைச்சன்னு வை உன் குடும்பத்தை ஒன்னும் பண்ண மாட்டேன் உன்னையும் ஒன்னும் பண்ண மாட்டேன் ஆன நீ உயிருக்கும் மேல நினைக்குறியே அந்த கற்பை சிறழிச்சிடுவேன் உயிர் போன கூட அவ்ளோ வலிக்காது ஆன உயிரை விட மேல நினைக்குரிய கற்பு அதை காலங்கபடுத்திட்டா அப்புறம் உன் நிலை என்ன ஆகும்னு உனக்கே தெரியும்!. சோ நல்ல முடிவை எடு! எனக்கு சம்மதம் சொல்லிட்டு இப்போதைக்கு எஸ்கேப் ஆகிட்டு அப்புறம் என்கிட்ட இருந்து தப்பிச்சி எங்காவது ஓடிடலாம்னு பிளான் பண்ணாத இந்த உலகத்துல நீ எந்த முலைக்கும் போய் ஓடி ஒளிஞ்சாலும் சரி என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது நல்லா யோசிச்சி நல்லா முடிவை எடுக்கிற நான் திரும்ப கால் பண்ணுறதுக்குள்ள யோசிச்சி நல்லா முடிவா சொல்லுற “என்று அவளை மிரட்டிவிட்டு போனை கட் செய்தர் அந்த பெண்மணி

‘ச்சை என்ன ஜென்மம் இவரெல்லாம்’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால் இவர்களுக்கு பயந்து எவ்வளவு தூரம் தான் ஓடுவது என்று நினைத்தவளுக்கு சோர்வுதான் மிச்சம்...

இங்கு ருத்ர தேவ்வோ ருத்ரமூர்த்தியாக அவதாரமெடுத்து இங்கும் அங்கும் நடந்துகொண்டிருந்தான் பெண் மானை வேட்டையாடும் வேங்கையாய் அவளாக தன் காலடியில் வந்து விழும் தருணத்திற்காக அவளை வேட்டையாட காத்திருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்

“தேவ் இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சிருக்கோம் இன்னும் அவகிட்ட இருந்து எந்த பதிலும் வரலையே ப்பா என்ன பண்ணுறது?“என்று கைகளை பிசைந்தப்படி அவன் முன் நல்லவர் போல் நடித்துகொண்டிருந்தார் அவனின் தாய் வேதவல்லி
“வருவா மாம் கண்டிப்பா வருவா வரவைப்பேன் “என்றான் வெறியோடு தான் நினைத்தது நடக்கவேண்டும் நடந்தே தீறவேண்டும் அதை மாற்றவோ எதிர்த்து பேசவோ யாருக்கும் தைரியம் இல்லை என் அவனை பெற்றவளுக்கே அந்த தைரியம் இல்லை தான் வைத்ததுதான் சட்டம் அதற்க்கு அனைவரும் அடிபணிந்துதான் ஆகவேண்டும் இல்லையெனில் அடிபணிய வைத்துவிடுவான் தேவ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் குரூப்ஸ் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் தி கிரேட் எங் பிஸ்னஸ் மேன் ருத்ரா தேவ்..
“அம்மா நீங்க கவலை படமா போங்க அவதான் உங்க மருமகள் எந்த திமிருப்பிடிச்சவ என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னாளோ அவ வாயலையேநான்
என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கனு கெஞ்ச வைக்குறேன் “என்றான் குரோதமாய்

அவன் தாயியோ “என்னவோ செய் ப்பா ஆனா இன்னும் பத்து மாசத்துல எனக்கு ஒரு பேரகுழந்தையை பெத்து குடுத்துடுங்க இருக்க காலத்தை என் பேரப்பிள்ளையயை கொஞ்சியே கழிச்சிடுறேன்” என்று காரியத்தில் கண்ணாய் மகன் முன் பச்சையாக நடிதார் வேதவல்லி

இவர்களிடம் போராடி போராடி ஓய்ந்து போனவளின் மனமோ பின்னோக்கி பயணித்துகொண்டிருந்தது..
பட்டாம்பூச்சியாய் எந்த கவலையும் இன்றி சுற்றித்திருந்தவள் மகிழினி ரங்கநாதன்-வசுந்திரா தம்பதியின் முத்த புதல்வி இவளுக்கு அடுத்து மாறன் என்ற மகனும் உண்டு. மாறனுக்கு அக்கா என்றால் கொள்ளை பிரியம் சுட்டிப்பெண்ணாய் அவள் வாழ்வில் சுற்றி திரிந்துகொண்டிருந்தாள் அவளிடம் யார் என்ன நக்கல் பண்ணாலும் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துவிடுவாள் வாயாடி.அன்புக்கு எப்போதும் அவள் அடிமை தன்னிடம் அன்பு கட்டுப்பவர்களுக்கு உயிரையும் குடுக்க துணிந்தவள்

எந்த கவலையும் இன்றி அவள் வானில் சந்தோசமாய் சிறக்கடித்து பறந்துகொண்டிருந்தவளின் சந்தோஷத்தில் தீயை வைத்து எரிப்பதுபோல் ஒரு சம்பவம் அவள் வாழ்வில், கல்லூரி கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது அவர் தந்தை விபத்தில் சிக்கி இரத்துவிட யாரும் எதிர்பாராத இந்த விபத்து அவர்கள் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டது.
இதுவரை கஷடம் என்றாள் என்னவென்று கூட தெரியாதவள் வாழ்வில் அடுத்தடுத்து பண நெருக்கடி, கடன் நெருக்கடி தம்பியில் படிப்பு செலவு என ஏழ்மையின் கையில் சிக்கி தவித்தனர்.

கல்லுரி கடைசி ஆண்டு என்பதால் பகுதி நேர வேலைக்கு சென்று ஓரளவிற்கு பண நெருக்கடியை சமாளித்தாள்

கணவன் இருந்தவரை குடும்பத்தை தூக்கி தோளில் சுமந்தார் அவருக்கு பின் சிறு பெண்ணவள் அவள் தோள்களில் அந்த சுமையை ஏற்றிக்கொள்ள அதை சுமக்க முடியாமல் அவள் படும் பாட்டை கண்டவருக்கு மனம் கனத்தது...
வேலை,படிப்பு,கடன்,பணம் அணைத்து பிரச்சனைகளையும் அவைகளை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாது திணறி முட்டி மோதி வாழ்வை கடக்க நினைக்க முத்த பெண் குடும்பத்தை தாங்கும் சுமையும் அவள் தோள்களில் ஏறியது முதலில் கலங்கியவள் பின் இதுதான் வாழ்க்கை இதை எதிர்த்து போராடித்தான் வாழ வேண்டும் என்று தன்னை தானே தைரியப்படுத்திகொண்டாள் மகி

மனிதனுக்கு வலுவே அவன் மனம் தான் மனம் உற்சாகமாய் இருந்தால் எந்த கஷ்டமும் தெரியாது அதே மனம் தெளிவில்லாமலும், சோர்ந்து போனால் சிறு கஷ்டம் கூட மலைப்போல் காச்சியளிக்கும் எல்லாவற்றிற்கும் காரணம் மனமே,மனதின் தைரியமே மனிதனின் மிக பெரிய பலம் ‘இதுவும் கடந்து போகும் ‘என்று சிந்தித்தால் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஒன்றுமே இல்லமால் போய்விடும்..மனித வாழ்வில் சந்தோஷமும் நிறந்தரமல்ல கஷ்டமும் நிறந்தரமல்ல எதனோடு பயணிக்க பழகிக்கொள்ள வேண்டும். சந்தோசம் வரும் போதும் வானின் உச்சிகும் செல்ல வேண்டாம் துன்பம் வரும்போது மண்ணோடு மண்ணாய் போயிட்டால் நிம்மதி என்று சிந்திக்கவும் வேண்டாம் எந்த நிலையிலும் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளுவதே நன்மை.

கடைசி ஆண்டு கல்லூரி படிப்பும் முடிந்திட கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனவள் தேவ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் குரூப்ஸ்ல் வேலைக்கு சேர்ந்தாள் மகிழினி வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலே ருத்ர தேவ் தவிர மாற்ற அனைவரும் அவள் வேலையை பாராட்டினார், ருத்ரா மட்டும் அவள் வேலையில் குறை கண்டுபிடித்து அவளை திட்டுவான் தனக்கு சம்பளம் தரும் முதலாளி அவரிடம் எதிர்த்து பேசவும் முடியாமல் அவள் பொறுத்துக்கொண்டே தான் போனாள் அதை தவிர வேறு வழியும் இல்லை அப்படியும் மீறி எதாவது கேட்டுவிட்டால் வேலை பறி போய்விடுமோ!?, வேலை போய்விட்டால் குடும்பத்தை எப்படி சமாளிப்பது என்ற பயம் அவனிடம் அவளை ஊமையாக்கியது..
நாட்கள் இப்படியே நகர ருத்ரா மகியின் மீது காட்டும் வெறுப்பின் காரணம்மும் அவளுக்கு தெரிந்தப்பாடு இல்லை தெரிந்து மட்டும் என்ன செய்ய போகிறோம் என்று அவளும் அதை பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை. அவனிடம் அவள் கடைபிடிக்கும் பொறுமையும் அமைதியும் அதன் எல்லையை கடக்கையில் சூறாவளியாய் மாறி அவனின் நிம்மதியை மொத்தமாக உருக்குலைக்க போகிறது என்பதை இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை..

மாறனும் படித்துக்கொண்டே பகுதி நேர வேலையை செய்து தன் அக்காவிற்கு துணையாய் இருந்தான்
வசுந்திரவோ பெற்ற பிள்ளைகள் படும் கஷ்டத்தை பாத்து மனம் நோந்து உள்ளுக்குள் வைத்து புழுங்கிகொண்டிருக்க தன் உடல் நலனை கவனிக்காது அலட்சிய படுத்த அதுவே அவருக்கு மிக பெரிய ஆபத்தை உண்டாக்கியது தொடர் வயிற்று வலி வர முதலில் அதை அலட்சியமாக விடவர் கைவைத்தியம் பார்த்தும்,மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிட்டும் என இருந்தார் இதை பிள்ளைகளுக்கும் அவர் தெரியப்படுத்தவில்லை நாட்கள் நகர வாசுந்திரவின் வயிறு வலி அதிகமாக பொறுக்க முடியாமல் மகிழினியிடமும்,மாறனிடமும் சொன்னார் உடனே வசுந்திரவை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றாள் மகி

டாக்டர் பல சோதனைகளுக்கு அடுத்து அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் என்று சொன்னது உருகுலைந்து போனார்கள் மூவரும் வசுந்திரவின் அலட்சியத்தினால் ஏற்பட்ட விபரீதத்தில் உடனடியாக ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும் இல்லை எனில் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூற அதற்க்கு அடுத்து அடுத்து சந்தோசம் என்ற வார்த்தையே மறந்து போகும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை சென்றது

திடிரென்று ஒருநாள் கிருஷ்ணா அவள் வீட்டிற்கு வர என்னவென்று புரியாமல் அவனை வரவேற்றாள் மகிழினி,வாசுந்திரவின் உடல் நலம் கேள்விப்பட்டு அவரை பார்க்க வந்ததாக கிருஷ்ணா சொல்ல அவளும் சரி என்றாள்.

கிருஷ்ணா அவள் கல்லூரியில் ஒன்றாய் படித்தவன் பெரும் கோடீஸ்வரன் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவிற்கு பணக்காரன் தான், படித்து முடித்தவன் தந்தையுடன் சேர்ந்து தொழிலையே பார்க்க தொடங்கினான், கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மகிழினியை ஒருத்தலையாக காதலித்து வருகிறான், அவளிடம் சொன்ன போது அவளோ குடும்ப பொறும்பு, கடமை, தம்பியின் வரும்காலம் என சொல்லி அவனை நிரகார்த்தித்தாள் ஆனாலும் அவன் விடாமல் அவளை காதலித்து கொண்டுதான் இருக்கிறான்... அவளும் அதற்க்கு மேல் அவனை கண்டுகொள்ளவில்லை வில்லை அதற்க்கு நேரமும் அவளிடம் இல்லை,

கிருஷ்ணா வாசுந்ததிராவிடம் தான் மகிழினியை காதலிப்பதாகவும் அவளை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் கூற தாய் உள்ளமோ தனக்கு ஏதேனும் ஆகிவிட்டால் தன் பிள்ளைகளுக்கு யார் ஆதரவு பெண் பிள்ளையை ஒருவன் கையில் ஒப்படைத்துவிட்டால் நிம்மதியாக சாகலாம் என்று கிருஷ்ணவிற்கு மகிழினியை திருமணம் செய்துகொடுக்க ஒத்துக்கொண்டார்

மகிழினி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வசுந்தரா அந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். தாயை கஷ்ட படுத்த விரும்பாமல் வேறு வழியின்றி மகிழினி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.
மகிழினி குடும்பம் சூழல் அறிந்த கிருஷ்ணா வசுந்தராவின் மருத்துவ செலவை தானே பார்த்துக் கொள்வதாக சொல்ல அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டாள் மகிழினி தானே சமாளித்துக் கொள்கிறேன் என்றவளை வற்புறுத்தினான், அவளோ உதவி வேண்டும் என்னும் போது கண்டிப்பாக கேட்கிறேன் என்று சொல்லி தற்போதைக்கு அவனை அடக்கினாள்.

கையில் இருந்த இருப்பு தொகையை வைத்து தன் அன்னைக்கு மருத்துவம் பார்த்தவள் கையிருப்பும் காலியாகிவிட அடுத்து பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஆபீஸில் லோன்க்கு அப்ளை செய்தாள். அங்கு வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் அகி இருக்க மேனேஜரிடம் லோனுக்கு வேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும் கூறிவிட்டு வெளியே வர அதே நேரம் ருத்ர தேவ்வை பார்க்க உள்ளே வந்துகொண்டிருந்தார் ருத்ர தேவ்வின் அம்மா வேதவல்லி

வேதவல்லியின் கண்களில் மகிழினி பாட அவளின் எளிமையான ஒப்பனையில்லா அழகு அவரை பொறாமை படத்தான் வைத்தது அதுமட்டுமல்லது அவர் மனதில் இவள் தான் தன் தங்களின் குடும்ப வாரிசை சுமக்க வேண்டும் என அவர் மனம் தீர்க்கமாய் சொல்ல அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்தவர் மனதில் பல கணக்குகளை போட துடன்கினார் அவளை பற்றி விவரங்களை அடுத்த ஐந்து நிமிடத்தில் தெரிந்துகொண்டவர் இவள் தான் தன் திட்டத்திற்கு ஏற்றவள் என்று முடிவே செய்துவிட்டார்..

அடுத்த இரு நாட்கள் தங்களின் அடியாட்களை வைத்து அவள் அவளை கண்காணித்தார்,அவள் குடும்ப நிலையும் அவளுக்கு பண தேவை மிகவும் அவசியம் என்றும் புரிந்துகொண்டர். இதுதானே அவருக்கும் வேண்டும் அவர் திட்டத்தை துடங்கும் முன் அவளிடம் சில விஷயங்களை பேச வேண்டும் என்று முடிவு செய்தவர் கேன்டினில் அவளை சந்தித்தார்.

மதியம் கேன்டினில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வேதவல்லி மிகியை தேடி அங்கு வந்தவர் மகியின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு அவளை மேலிருந்து கீழ் வரை அளந்து கொண்டு இருந்தார். தன்னை யாரோ பார்ப்பது போல் உணர்த்த மகி அவள் முன் நின்றிருந்த பெண்மணியை பார்க்க “உங்களுக்கு என்ன வேணும்?, எதுக்காக என்னை பாத்துகிட்டு இருக்கீங்க? “என்று நேரடியாகவே கேட்டுவிட்டவளை ஏளனமாக பார்த்துவிட்டு “அம் ருத்ர தேவ் மதர் “என்றார் திமிராய்

“சரி,ருத்ரா சார் அம்மாக்குறதுக்கும் இங்க நின்னு என்னை பாக்குறதுக்கும் என்ன சம்மந்தம்?“என்று நேரடியாக அவர் முகத்தை பார்த்து கேள்வி கேட்டுவிட்டு அவள் வேலையை பார்க்க துடங்கிவிட்டாள் ருத்ராவின் அம்மா என்ற பின்னும் அவள் துளியும் பயம் இல்லாமல் தைரியமாகவும் நேரடியான தெளிவாக எதிர் கேள்வி கேட்க வேதவல்லிக்கு தன் திட்டத்திற்கு இவள் ஒத்துழைப்பு தருவாளா?, என்ற சிறு பயமும் தோன்றியது, ‘இவள் பிடி தன்னிடம் இருந்தால் இவளுக்கு வேறு வழி என்ன இருக்கிறது நமக்கு ஒத்துழைச்சி தான் ஆகணும் ‘என்று தனக்கு தானே தேற்றிகொண்டார்

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்?”
“ஓ எஸ் பேசலாமே!, இன்னும் எனக்கு பைவ் மினிட்ஸ் பேலன்ஸ் இருக்கு, அதுக்குள்ள நீங்க பேச வந்ததை பேசி முடிச்சிடுவீங்கன்னா தாராளமா பேசலாம், லேட்டா போனா எங்க பாஸ் திட்டுவாரு “என்று அவள் கூற
‘திமிர் புடிச்சவ உன் கொழுப்பை அடக்குறேன் இரு டி, முதல்ல கல்யாணம் முடியட்டும் ‘என்று மனதில் கருவ, வெளியே புன்னகையை பூசிக்கொண்டார்.

“என்ன விஷயம், என்னை ஏன் பாக்க வந்திங்க? “
“நான் சுத்தி வளைச்சி பேச விரும்பலை நீ என் பையன் ருத்ர தேவ்வை கல்யாணம் பண்ணிக்கணும், உன் மூலமா எனக்கு வாரிசு வேணும் “
“வாட்!!!”என அதிர்ந்து போனாள் அவர் சொன்னதை கேட்டு
“உன்னை பாத்ததும் எனக்கு ரொம்ப புடிச்சி போச்சி எனக்கு மருமகனு ஒருத்தி வந்தா அது நீயா தான் இருக்கணும்னு ஆசை படுறேன் “என்றாள் நல்லவள் போல
“என்ன மன்னிச்சிடுங்க, கண்டிப்பா நீங்க நினைக்குறது நடக்காது, காரணமே இல்லாம திட்டி தீக்குறாரு, இங்க வேலை செய்யும் போதே இந்த நிலைனா அவரை கல்யாணம் பண்ணி என் தலையில என்னையே மண்ணை அள்ளி போட்டுக்க சொல்லுறீங்க, கண்டிப்பா மாட்டேன் “என்றாள் உறுதியாய்

‘என்ன திமிர்’என்று வேதவல்லி ஆத்திரம் கொள்ள’ இப்போ கோவப்பட்டாலோ அவசர பட்டாலோ காரியம் கை நழுவி போயிடும்’என்று கோவத்தை மறைத்து வஞ்சனையோடு வெளியே புன்னகையிக்க,“நீ தான் என் மருமகள் அதுல எந்த மாற்றமும் இல்லை”
“அதுக்கு வேற யாரையாது பாருங்க “
“யோசிச்சி பதில் சொல்லு “என்று அங்கிருந்து கிளம்பிவிட்டார். வேதவல்லி மகிழினிக்கு மனமே ஆறவில்லை எப்போது இந்த கம்பெனியை விட்டு போவேன்னு இருக்கேன் இதுல வேற இவனை கல்யாணம் பண்ணிக்கணுமாம் அப்படி இவரை கல்யாணம் பணிக்குறதுக்கு கல்யாணம்னு ஒன்னை பண்ணிக்காமலே இருந்துடுவேன்.

வேலையை முடித்து பைலை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கியவன் அதில் இருந்த சிறு பிழையை கூட பொறுக்காமல் அவள் முகத்திலேயே விட்டெரிந்தான்
“என்ன வேலை செய்ற?? கவனத்தை வேலையில் வைத்து செய்யணும்,வேலை நேரத்துல கனவுலகத்துல உன் லவர் கூட டூயட் பாடிட்டு இருந்தியா “என்று காட்டுக்கத்தல் கத்தினான்
“அப்படிலாம் இல்லை சார் “என்று அவள் விளக்கம் கொடுக்க வர
“உன் விளக்கத்தை இங்க யாரும் கேக்கலை, ஒரு வேலையை ஒழுங்கா செய்ய துப்பு இல்லை என் உயிரை வாங்கிட்டு இருக்க “என்று கத்த அதே நேரம் வேதவல்லி ருத்ரா கேபினுள் நிழைந்தார்

“ஸ்டாபிட் ருத்ரா, என்ன பண்ணிட்டு இருக்க இப்படியா ஒரு பொண்ணை டிரீட் பண்ணுவ “என்று கத்தினார் வேதவல்லி


அவனை நிரகரித்த மகிழுனியின் நிலை என்ன!!?...அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறான் ருத்ரா?



உங்க கருத்துக்களை மறக்காம சொல்லிட்டு போங்க ??? லட்டூஸ் ❤️❤️❤️❤️


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி'
https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
உயிரே 2


“அம்மா, இவ விஷயத்துல நீங்க தலையிடாதீங்க “
“ருத்ரா ஸ்டாபிட் “
“அம்மாடி அவன் ஏதோ கோவத்துல இருந்து இருப்பான் அதான் இப்டிலாம் பேசுறான் நீ ஒன்னும் மனசுல வச்சிக்காதம்மா, இதை மனசுல வச்சிக்கிட்டு என் பையனை வேணாம்னு சொலிடாத “என்று அவர் நாடகத்தை நடத்த
“நான் எப்போ உங்க பையனை கல்யாணம் பணிக்குறேன்னு சொன்னேன், உங்ககிட்ட தெளிவா முன்னாடியே சொல்லிட்டேன் உங்க பையனை கல்யாணம் பணிக்குறதும் மாலை உச்சில இருந்து குதிச்சி தற்கொலை பண்ணிக்குறதும் ஒன்னு யாராவது சாகவிரும்புவங்களா?,இந்த ஜென்மத்துல அது நடக்காது சோ ப்ளீஸ் என்கிட்ட இதை பத்தி பேசாதீங்க “என்று மகிழினி சொல்ல கர்வதின் மறு இருவமாய் நிற்கும் ருத்ராவின் ஆண்மையை ஒருத்தி நிரகாரித்து செல்வதா?

வேதவல்லி நினைத்தது போல் மகிழினியை கொண்டே தன் திட்டத்தின் முதல் படியை துடன்கினார்.
“அப்படி எல்லாம் சொல்லாதே டா அவன் கொஞ்சம் கோவகாரன் அவ்ளோதான் கோவம் இருக்க இடத்துலதான் குணம் இருக்கும்”என்று வேதவல்லி சொல்ல,
“எத்தனை முறை சொல்லுறது உங்களுக்கு, பெரிய மனிஷி தானே நீங்க ஒரு தடவை சொன்ன புரியாதா,உங்க பையனுக்கு கழுத்தை நீட்ட நான் ஒன்னும் முட்டாள் இல்லை “என்று அவள் முடிக்கும் முன்னே பளிரென்று ஒரு அறை விட்டிருந்தான் ருத்ரா
அவன் அறைந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தவளுக்கு வலி தாங்க முடியாமல் கண்கள் கலங்கிட இன்னும் அதிலிருந்து அவள் வெளிவர வில்லை சிறு வயதிலிருந்தே அடி வாங்கியே பழக்கப்பட்டில்லாதவளுக்கு அவன் அறைந்ததின் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு போனாள் “என்ன டி என் அம்மாகிட்டயே இவ்ளோ திமிரா பேசுற “என்றவன் அவள் தலை முடியை கொத்தாக பிடித்து தூக்க
“ஹா வலிக்குது என்னை விடு!!.. “என்று ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவள் கத்தினாள்
“என்ன டி துள்ளுற, என்ன கல்யாணம் பண்ண மாலை உச்சில இருந்து குதிச்சி சாகுறதுக்கு சமமா!?, அப்போ சாக தயாரா இரு!!”என்றவன் அவளை இழுத்து வந்து வேதவல்லி காலடியில் தள்ளினான் “மன்னிப்பு கேளு டி!”என்றான்
“நான் ஏன் மன்னிப்பு கேக்கணும் நான் என்ன தப்பு பண்ணேன் மன்னிப்பு கேக்க, தப்பு பண்ணாம யார்கிட்டயும் மன்னிப்பு கேக்க மாட்டேன் “என்றவள் எழ
“தேவ் அவ ஏன் மன்னிப்பு கேக்கணும் அவ என்ன தப்பு பண்ணா?!, கொஞ்ச நேரம் அமைதியா இரு, அம்மாடி என்ன மன்னிச்சுடுடா “என்று வேதவல்லி சொல்ல
“ஜஸ்ட் ஸ்டாபிட் மாம்,நீ என்ன இவகிட்ட எல்லாம் போய் மன்னிப்பு கேக்குற, இந்த ருத்ரதேவ்வோடா அம்மா ஒரு பிளாட்பார்ம் கிட்ட போய் மன்னிப்பு கேக்குறதா “என்று எரிமலையாய் கொதிக்க
“மாம் இவதான் உங்க மருமகள் இன்னும் ஒன் வீக்ல மேரேஜ் நீங்க போய் அந்த வேலையை கவனிங்க “என்றான் உறுதியாய், வந்த வேலை முடிந்தது என்று நிம்மதியுடன் வேதவல்லி அங்கிருந்து வெளியேறினார்

மகிழினி அந்த இடத்தை விட்டு அசையாது அப்படியே நிற்க அவள் முடியை பிடித்து அவளை தன்புறம் இழுத்தன் “ச்சை நீயெல்லாம் மனிஷனா?, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நடத்துக்குற, உங்கிட்ட வேலை பாத்தா உனக்கும் உன் அம்மாவுக்கும் கால்லல விழுந்து கிடைக்கணுமா??,என்னை விடு டா “என்று திமிரா அவள் ஒட்டுமொத்த வெறுப்பையும் வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள்

“ஓஹோ நான் தொட்ட உனக்கு அருவெருப்பாகுதா??,அப்போ அவன் தொட்ட மட்டும் தான் இனிக்குமோ? “என்று அவளை வார்த்தைகளால் காயப்படுத்த துடங்கினான்
“ச்சை, உனக்கெல்லாம் அவரைப் பற்றி பேச கூட அருகதை கிடையாது உன்னை மாதிரி பொறுக்கினு நினைச்சியா அவரையும் “என்றவளின் கண்களில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் வடிய,

“இந்த பொறுக்கி என்ன பண்ணுவான் தெரியுமா!? “என்றவன் அவளை தன்புறம் திருப்பி அவள் மெல்லிய பூவிதழ்களை வருட அவள் உடல் நடுங்க துடங்கியது சாயம் இல்லாது சிவந்து இருக்கும் அதரங்கள் பயத்தில் வறண்டு இருக்க துடிக்கும் உதட்டினை அவன் விரல் கொண்டு அழுத்தம் கொடுத்து வருடினான். அவனின் இந்த தொடுகையை எதிர்பாக்காவள் அவனிமிருந்து விலக போராடிகொண்டிருந்தாள்
அவளின் எதிர்ப்பில் எரிச்சலுற்றவன் அவள் இடையை சுற்றிவளைத்து தன்னோடு அனைத்து அவள் மெல்லிய அதரங்களை வன்மையாய் சுவைக்க துடங்கினான் அவன் தாக்குதலை தாங்க முடியாதவள் அவனிடமிருந்து திமிர அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் பெண்ணவளின் ரோஜா இதழ்களிலே குடிகொண்டான் அவன்,அவள் திமிரளோ, அவன் நெஞ்சில் அவள் அடித்த அடிக்களோ அவனிடத்தில் சிறு மாற்றத்தை கூட ஏற்படுத்தவில்லை அவள் அடிகளை எல்லாம் பஞ்சி மோதியது போல் நினைத்தவன் அவைகளை உள்வாங்கியப்படியே அவன் நினைத்ததை மட்டுமே செய்துகொண்டிருந்தான்

அவனிடம் போராடியவள் ஓய்ந்து போய் கீழே சரிய அவளை அப்படியே இரு கைகளால் தூக்கியவன் அங்கிருந்த ஷோபாவில் அமரவைத்தான் அவள் முகத்தை தன் விரல் கொண்டு தன்னை நோக்க வைத்தவன், “உன் காதலானை மறந்துட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகுற வேலையை பார்!, அதை விட்டுட்டு நீ என்ன சொல்லுறது நான் என்ன செய்ரதுனு எதாவது செஞ்சன்னு தெரிஞ்சது அப்புறம் இந்த ருத்ரா யார்னு பாக்க வேண்டி வரும், அப்புறம் இந்த வேலையை ரிசைன் பண்ணிட்டா பிரச்சனை முடிஞ்சிடும்னு நினைச்சி வேலையை ரிசைன் பண்ணலாம்னுல பிளான் பண்ணாத, அப்படி பண்ண எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை ஆனா தேவ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் குரூப்ஸ் உன் மேல பத்து கோடி கேட்டு கேஸ் போடும் ஓகேனா தாராளமா ரிசைன் பண்ணு பட் மேரேஜ் பிக்ஸ் பண்ண டேட்ல கரெக்ட்டா நடக்கும் அதுல எந்த மாற்றமும் இல்லை என்று அடுத்த இடியை சர்வ சாதகரானமாய் அவள் தலையில் இறக்கினான்
‘இங்கு வேலை செய்வதினால் தானே எவ்வளவும் இங்கிருந்து போய்விட்டாள் இவர்கள் யார் தன்னை மிரட்ட, அதன் பின் இவர்களிடம் இருந்து தப்பித்து விடலாம் ‘என்று அவள் மனதில் நினைத்து இருக்க அதற்கும் தடை போட்டான் ருத்ரதேவ்
“நொவ் ஜஸ்ட் கெட் அவுட் ஆப் மை ரூம் “என்று அவனுக்கே உரிதான கம்பீர குரலில் சொல்ல அதற்கு மேல் அங்கு இருக்கும் தைரியம் அவளுக்கு இல்லை பிரம்மை பிடித்தவள் போல் சென்று கேபினில் அமர்ந்து கொண்டாள்

‘ஏன் எனக்கு மாட்டும் இப்படி எல்லாம் நடக்குது என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டவளுக்கு அழுவதை தவிர வேறு வழியும் தெரியவில்லை குடும்ப சூழல் ஒரு பக்கம் அம்மாவின் உடல் நிலை ஒருபக்கம் பண தேவை ஒருபக்கம் என அவள் போராட இவைகள் எல்லாம் போதாது என்று புதிதாய் ஒரு பிரச்னை இதை எப்படி சமாளிப்பாள் வழி தெரியாமல் கலங்கி நின்றாள் மகிழினி

துள்ளிக்கொண்டு தன் பெரிய சேனைகளோடு திரண்டு வந்து கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் அலைமகளை வெறித்துகொண்டிருந்தாள் மகிழினி கண்கள் தானாகவே கண்ணீர் சிந்திகொண்டிருந்தது ஆபீஸில் லோன் கேட்டதற்கு பெரிதாக எந்த பதிலும் இல்லை இனி அது கிடைக்கும் என்று நம்பிக்கையும் இல்லை, நாளாக நாளாக அம்மாவின் உடல்நிலை ரொம்ப மோசமாகிக் கொண்டே இருக்கிறது யாரிடம் சென்று உதவி கேட்க?, கேட்டாலும் யார் உதவுவார்கள் இருந்த ஒரு நம்பிக்கை ஆபீஸ் லோன் இப்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதாது என்று இவன் வேறு புதிதாக ஒரு பிரச்னையை இழுத்து படுத்துகிறது எதை சமாளிக்க என்று நினைகையிலே சோர்த்து போனாள் மகி “என்ன டி பலமான யோசனைல இருக்க போல “என்ற மஞ்சுவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள் “ஒன்னும் இல்லை மஞ்சு “என்று சுரத்தை இல்லாத குரலில் சொல்ல,
“நீ ஒன்னும் இல்லைன்னு சொல்றதே ஏதோ இருக்குன்னு சொல்லுதே டி ”என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தாள் மஞ்சு
“என்னடி ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க”
“நாளாக நாளாக அம்மாவோட உடம்பு ரொம்ப சீரியஸா ஆயிட்டே இருக்கு மஞ்சு சீக்கிரம் ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர்ஸ் சொல்லுறாங்க என்ன பண்ணுறதுனே புரியலை லோன்க்கு அப்ளை பண்ணலாம்னு பாத்தாலும் இப்போதைக்கு அதுக்கும் முடியாது போல, பதினைந்து லச்சதுக்கு நான் இங்க போவேன்!”என்று கலங்கியவளை எப்படி தெற்றுவது என்று தெரியாமல் மஞ்சுவும் கலங்கித்தான் போனாள் ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ என்றாள் எங்காவது கடன் வாங்காலம் பதினைந்து லட்சத்துக்கு எங்கே போவது என்ன செய்வது என்று இரு பெண்களும் வழி தெரியாமல் தவித்தனர்
“எனக்கும் ஒன்னும் புரியலை மகி, கம்மியான அமௌன்ட்டா இருந்த அங்கங்க கொஞ்சம் கடன் வாங்கி சமாளிக்கலாம் ஆனா பதினைந்து லட்சத்துக்கு என்ன பண்றது? நம்மளை நம்பி யார் கடன் தருவாங்க?”
“ஏன் நான் தர மாட்டேனா!? “என்று கோவமாய் குரல் வர, குரல் வந்த புறம் இருவரும் திரும்பி பார்க்க அங்கு கிருஷ்ணா நின்றிருந்தான் அவர்களை இருவரின் பேச்சையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தவன் ஒருக்கட்டத்திற்கு மேல் பொறுக்காமல் கேட்டுவிட்டான்,
வரும் வழியில் மகியை பார்த்தவன் அவளை அழைக்க அவளோ நிகழ் உலகில் இருந்தாள் தானே காதில் கேட்க பிரம்மை பிடித்தவள் போல் யாரையும் கவனிக்காமல் நடந்து கொண்டிருந்தவளை பின் தொடர்ந்து வந்தான்,அவளின் செயலில் மாற்றத்தை கண்டு ஏதோ சரி இல்லை என்று நினைத்தவன் அவள் பின்னாலே அவனும் தொடர்ந்தான் அவனாக வந்து எதாவது கேட்டால் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லுவாள் எல்லாவற்றையும் அவளுக்குள்ளே போட்டு தன்னை தானே வதைத்துக்கொல்பவளிடம் என்ன கேட்டு என்ன பயன் என்று நினைத்தவன் தூரத்திலிருந்தே அவள் செயல்களை கவனித்துக்கொண்டிருந்தான்
“ஏன் மகி உனக்கு ஒரு கஷ்டமான நான் உதவ மாட்டேன்னு நினைச்சியா, இல்லை இவன் யாரோதானே இவன் கிட்ட ஏன் கேக்கணும்னு நினைச்சியா?”என்று வருத்தமாக கிருஷ்ணா கேட்க
“அப்படி எல்லாம் இல்ல கிருஷ்ணா, உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைச்சோம்”என்று அவன் வருத்தத்தை கண்டு பதறினாள் மகி
“இதில் கஷ்டம் என்ன இருக்கு மகி, இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு கல்யாணம் ஆகபோகுது உன்னோட குடும்பமும் என்னோட குடும்பம்தான் நம்ம குடும்பத்துல இருக்கவங்களுக்கு செய்ரது எப்படி எனக்கு கஷடமா ஆகும்? “என்றவன் அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து கொண்டான்

“நீ என்னை இன்னும் புரிஞ்சிகளை மகி “என்று அவன் கூற
“அப்படி எல்லாம் இல்லை கிருஷ்ணா “
“ஏன் மகி உனக்கு ஒரு பிரச்சினைனா உனக்கு என்னோட ஞாபகமே வரலையா மகி?, என்கிட்ட சொல்லனும்னு கூட உனக்கு தோணலையா?”
“சமாளிச்சிடலாம்னு நினச்சேன் கிருஷ்ணா, சொல்ல கூடாதுனு நினைக்கலை “
“எல்லாத்தையும் உனக்குள்ளேயே வச்சு புழிங்கிட்டு இருக்காத மகி, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு உனக்காக எப்பவும் நான் இருக்கேன்”என்றவனின் வார்த்தை அத்தனை பெரிய பலத்தை அவளுக்கு கொடுத்தது
“தேங்க்ஸ் கிருஷ்ணா “
“ஆன்ட்டியோட ஹாஸ்பிடல் செலவை நான் பாத்துக்குறேன் நீ அதை நினைச்சி கஷ்டப்பட வேணாம் டா “என்று அவளின் பெரும் மன வேதனையை அவன் ஏற்றுக்கொண்டன்
“அது.... நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் “என்று அவள் தயங்க
“மகி நான் சொன்னது சொன்னதுதான். நான் பாத்துக்குறேன் இனி நீ அதை பத்தி கவலை படவேணாம் “என்றான் கண்டிப்பாய்
அவள் அரைமனத்துடன் “ஹ்ம்ம்ம் “என்று சொல்ல தன் தோழியின் மனதை படித்தவள் அவள் அரைமணத்துடன் சம்மதம் சொன்னதை அறியாமல் இல்லை
“மகி கிருஷ்ணா சொல்லுறதும் சரிதான், இப்போதைக்கு நமக்கும் கிருஷ்ணாவை விட்டா வேற வழி இல்லை “என்று சூழ்நிலையை எடுத்து சொல்லி புரிய வைத்தாள் அஞ்சு
“சரி டைம் ஆகுது நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க, மாறனும் நீ இன்னும் வீட்டுக்கு வரலன்னு கவலையா இருப்பான் மகி “என்று சிறு சிறு விஷயங்களில் கூட அவளுக்காக சிந்தித்தான்
“சரி கிருஷ்ணா, நாங்க கிளம்புறோம் “என்று இருவரும் எழ
“ரெண்டு பேரையும் நானே ட்ராப் பண்ணுறேன் “
“பரவால்ல நாங்களே போகிறோம் “என்றவளை முறைத்தான் கிருஷ்ணா
“சரி முறைக்காத,நீயே கூட்டிட்டு போ “என்று அவள் அவன் கோவத்தை கண்டு சட்டேனே மாற்றி சொன்னத்தில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது
அவர்கள் இருவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு அவர்களில் வீட்டில் இறக்கிவிட்ட பின்பு தான் அவன் கிளம்பினான் நண்பர்களுடலான உரையாடலில் ருத்ரதேவ்வை மறந்திருந்த மகிழினிக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் நினைவு வந்து பதற்றத்தை ஏற்படுத்த என்ன செய்வது என்று உள்ளுக்குள் தவித்தாள் தெரியாமல் கூட அவள் பயத்தை வெளியே காட்டவில்லை அவள். அன்னை, தம்பியுமாவது நிம்மதியாக இருக்கட்டும் அவர்களின் நிம்மதி எதனாலும் கேட்டுவிட கூடாது என்று நினைத்தவள் யாரிடமும் ஏதும் சொல்லாமல் உள்ளுக்குள்ளே மறுகினாள்..

“அம்மா சாப்பாடு மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? “என்று வந்த உடனே தாயை விசாரிக்க,
“சாப்பிட்டேன் மகிமா “
“மாறன் எங்க மா? “
“கடைக்கு போறேன்னு கிளம்பினான் “
“அக்கா வந்துட்டயா?,ஏன் இவ்ளோ லேட் என்னவோ ஏதோனு பயந்துட்டேன் “
“கொஞ்சம் வேலைடா மாறா அதன் லேட் ஆய்டுச்சி “
“லேட் ஆன போன் பண்ணி சொல்லுக்கா “
“சரி இனிமேல் லேட் ஆன போன் பண்ணி சொல்லிடுறேன் டா “
“சரி அக்கா நீ போய் முகம் கழுவிட்டு வா நான் காபி போட்டு தரேன் “என்று மாறன் கிச்சனுக்குள் சென்றான் தனக்காக மாறனும் வருந்துகிறான் என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது..

அவள் சென்று முகம் கழுவி வர மாறன் காபியோடு வந்தான் அதை குடித்துவிட்டு இரவு உணவிற்கன ஏற்பட்டை செய்ய துடங்கினாள் “அம்மா நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும் மாறனுக்கு நாளைக்கு காலேஜ் லீவ் அவன் கூட்டிட்டு போய்ட்டு வந்துடுவான் “என்றாள்
“மாறா நீ மேனேஜ் பண்ணிடுவியா?, இல்லை ஆபீஸ் லீவ் போட்டுட்டுl நான் வரவா? “
“அக்கா இந்த வீக் டூ டேஸ் லீவ் போட்டுட்டா சும்மா சும்மா லீவ் கேட்ட உங்க பாஸ் திட்ட மாட்டாரா? நான் பாத்துக்குறேன் நீ ஆபீஸ் கிளம்பு”என்றான் பெரிய மனுஷனாய்
‘உன் பாஸ் திட்ட மாட்டாரா?’என்று மாறன் கேட்டதில் இன்று ஆபீஸ்ஸில் நடந்த நிகழ்வுகள் ஆடுகடுக்காய் நினைவிற்கு வந்து அவளுக்கு திகிலை கிளப்பியது ‘என்ன மனுஷன் இவன் பொண்ணுங்க கிட்ட இப்படித்தான் நடத்துப்பானா!??, “என்று அவனை பற்றி நினைக்கும் போதே ‘நாளை என்ன நடக்குமோ!? “என்று அவள் நினைக்கையிலே உடல் நடுங்கம் கொண்டது கண்கள் முடி தன்னை சமன் செய்து கொண்டு சமையலை தொடர்ந்தாள்..

மூவரும் சாப்பிட மகி வழக்கத்தை விட மிக அமைதியாக இருக்க மாறனுக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியது “மகிக்கா ஏன் டல்லா இருக்க ஏதாவது பிரச்சனையா? “ என்று தன் அக்காவின் மீது அக்கறை கொண்டு கேட்க,
“ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை மாறா “
“ இல்லக்கா நீ ரொம்ப டல்லா இருக்க,என்ன ஆச்சு மகிக்கா, என்கிட்ட எதையாவது?, மறைக்கிறியாக்கா “என்று சரியாய் மாறன் அவளை யூகிக்க
“ அப்படியெல்லாம் இல்லை மாறா நான் எதையும் உன்கிட்ட மறைக்கலை, நீ கண்டதையும் நினைச்சி மனசை குழப்பிக்காம இரு, எக்ஸாம் வருது உன் கவனம் முழுக்க படிப்புல மட்டும்தான் இருக்கணும் மத்ததை எல்லாம் நான் பாத்துக்குறேன் “என்று அவனை சமாளித்தாள் சரி என்றதோடு அதற்க்கு மேல் அவனும் ஏதும் பேசிக்கொள்ள வில்லை

“காலை கிருஷ்ணா மகியின் அன்னையை பார்க்க வந்தான் நலன் விசாரிப்புகளுக்கு பின் அவருக்கு ஆறுதல் கூறியவன் மகியிடம், “மகி ஆபீஸ் தானே கிளம்புற நானே ட்ராப் பண்ணுறேன் “என்று அழைக்க
“பரவால்ல கிருஷ்ணா உனக்கு எதுக்கு வீண் சிரமம் “என்று மறுக்க
“எனக்கு ஒரு சிரமமும் இல்லை நீ வா “என்றவன் அவளை அழைத்துக்கொண்டு ஆபீஸில் இறக்கி விட்டான் காரிலிருந்து இறங்கியவள் அவனிடம் கார் கண்ணாடியை இறக்கும் படி சைகை காட்ட,
கார் கண்ணாடியை இறங்கிய உடன் “தேங்க்ஸ் கிருஷ்ணா “என்றாள்
“உன் தேங்க்ஸ் நீயே வச்சிக்கோ எனக்கு வேண்டாம் “என்றவன் முகத்தை திருப்பிக்கொள்ள,
“இவ்ளோ நேரம் நல்லாத்தானே பேசிட்டு வந்த, நான் என்ன பண்ணேன்? ஏன் இந்த கோவம்? “என்று மிக மெல்லிய குரலில் அவள் கேட்க
“நான் என்ன உன்ன அவ்ளோ கொடுமை பண்ணுறேனா மகி? “
“’ஏன் சம்மந்தமே இல்லாம இப்படி ஒரு கேள்வி கேக்குறான்‘என்று அவள் முழிக்க
“போகும் போது கூட ஒரு சின்ன ஸ்மைல் கூட இல்லையா?”என்று அவன் ஏக்கமாய் கேட்க, அவனை பார்த்து அவள் ரோஜா இதழ்கள் மெல்லியதாய் விரிய அவள் அழகுக்கு மேலும் அழகை கூட்டியது அந்த சிறு புன்னகை
“அப்பப்பா, மகி எப்படியோ சிரிச்சிட்டா இன்னைக்கு மழை வர போது “என்றவனை பார்த்து அவள் முறைக்க அந்த சிறு பார்வை பரிமாற்றம் கூட அவனுக்கு மிக பெரிய தேவாமிர்தமாய் தான் இருந்தது..
“இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் லைட்டா, இன்னும் கொஞ்சோண்டு “என்று அவளை சிரிக்க சொல்ல அவன் சொன்ன விதமும் அவனின் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று சொல்லுகையில் மாறி மாறி வந்த முக பாவனைகளையும் கண்டவளுக்கு உண்மையிலேயே சிரிப்பு வந்துவிட்டது
“தட்ஸ் மை கேர்ள், இப்படி சிரிச்ச முகமா இருந்தா எவ்ளோ அழகா இருக்கு பாரு இதே போல எப்பவும் சிரிச்சிகிட்டே இரு மகிம்மா”என்றான் அவளின் மேல் அக்கறை கொண்டவனாய்

“ஹ்ம்ம்ம், பாய் கிருஷ்ணா “என்றவள், அதே புன்னகையுடனே உள்ளே போக இதை இரு கண்கள் ரௌத்திரத்தோடு பார்த்தபடி அங்கிருந்து அகன்றது..
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
உயிரே 3

ருத்ரா பற்றிய சிந்தனையை மூலையில் தள்ளிவிட்டு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். காலை கிருஷ்ணாவிடம் பேசிய பின் மனம் லேசானதுபோல் இருந்தது அவனின் அன்பிலும் நட்புலும் எள்ளளவும் மாற்றமோ குறையோ இதுவரை இருந்தது இல்லை அவன் அவளுக்கு நண்பனான காலத்திலிருந்தே மகிழினியின் சின்ன சின்ன விஷங்களில் கூட அதீத அக்கறை எடுத்து .பார்த்து பார்த்து செய்வான் அதுவே ஒருகட்டத்திற்கு மேல் கிருஷ்ணாவிற்கு மகிழினியை காதலிக்க செய்தது..

மகிழினி மனநிலை இப்படி இருக்க ருத்ராவின் மனநிலையோ எரிமலையாய் கொதித்துகொண்டிருந்தது புள்ளிமானை வேட்டையாடும் புலியாய் அவன் காத்திருக்க பெண்ணவளோ அவன் மிரட்டலை அலட்சியம் செய்து அவள் வேலையை செய்துகொண்டிருந்தாள்.
அவள் நிம்மதியை ஊருக்குலைப்பதற்காகவே வேதவல்லி வர “என்ன மருமகளே கல்யாணத்துக்கு தயாரா?, என் பையன் நேத்து நல்லா எடுத்து சொல்லி அனுப்பினான் போல “என்று நக்கலாய் அவர் கேட்க மகிழினியோ அவர் பேச்சுக்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அவள் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்
“என்ன டி திமிரா?,நான் பேசிக்கிட்டே இருக்கேன் திமிரா உக்காந்துருக்க “என்று கடுப்பாக பேச
“வேலை நேரத்துல வெட்டி கதை பேசினா எங்க பாஸ்க்கு புடிக்காது மேடம் “
“’எவ்ளோ பேசுறயோ பேசு எல்லாத்துக்கும் சேத்து வச்சி மொத்தமா இருக்கு உனக்கு ‘என்று கருவிக்கொண்டே அங்கிருந்து சிந்தனையோடு சென்றார்.
‘இவ்வளவு தூரம் நாம் சொல்லியும் அதை அலட்சியமாய் நினைத்து கொண்டு இருக்கும் இவளை இப்படியே விட்டால் சரிவராது என்ன செய்வதென்று’ யோசித்தவருக்கு அடுக்கடுக்காய் பல யோசனைகள் வர கண்கள் மின்ன அவைகளை செயல்படுத்த ஏற்பாடுகளை செய்தார் வேதவல்லி.

மகியை கடித்து குதறும் ஆத்திரத்தில் ருத்ரா இருக்க அது தெரியாமல் பைலை அவனிடம் சமிட் செய்ய சென்றாள் மகி
“சார் நியூ ப்ராஜெக்ட்கான டீடைல்ஸ் எல்லாம் இந்த பைல்ல இருக்கு “என்று அவனிடம் நீட்ட அதை வாங்கி பார்வையிட்டவன் கவனம் முழுவதும் அவளிடமே இருந்தது

“அப்புறம் நல்லா என்ஜோய் பண்ணிங்க போல “என்று அவன் நக்கலாக கேட்க ஒன்றும் புரியாமல் என்ன என்பதுபோல் அவனை பார்க்க
“என்ன ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்குற!, உன் நடிப்பை அவன் வேணும்னா நம்பலாம் நான் நம்ப மாட்டேன் “
“சார் பைல் சமிட் பண்ணிட்டேன், நான் கிளம்புறேன் “என்றவள் அங்கிருந்து நகர சட்டென அவள் கையை பிடித்து இழுத்தவன் அவள் பின் இடையில் அவள் இரு கைகளையும் அவன் ஒரு கையால் முறுக்கி பிடித்து அவளை தன்னோடு அனைத்தவாறு நின்றான் ருத்ரா. “என்ன டி அவ்ளோ சொல்லியும் அதை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காம அவன் கூட ஊர் சுத்திட்டு வரியா?” என்றவன் கண்கள் சிவந்து அவன் கோவத்தை அப்பட்டமாக காட்டியது
“சார் கையை விடுங்க “என்றவள் விலக முயல, அவள் காது அருகில் வந்தவன் அவன் மூச்சு காற்று அவள் மேல் பட அவள் கழுத்தில் தலை சாய்த்து அவள் காது மடலை பற்களால் கவ்வி இழுத்தான்
“என்ன விடு”என்று அவள் முகத்தை திருப்ப அதில் எரிச்சலுற்றவன் அவள் கழுத்து வளைவில் பற்கள் கொண்டு கடித்தான்
“ஹா!!.. அம்மா வலிக்குது ஹா வலிக்குது!!!”என்று அவள் கத்த அவள் காதருகில் “அவன் கூட கைகோர்த்து மெய் மறந்து இருந்ததுக்குத்தான் இந்த தண்டனை “என்றவன் அடுத்து அவள் முகம் நோக்கி தன் தேடலை தொடர்ந்தான். அவள் கன்னத்தோடு கன்னம் உரசியவன் அவள் கைகளுக்கு மேலும் அழுத்தம் குடுக்க
“சார் கை வலிக்குது விடுங்க, என்ன விட்ருங்க”என்ற அவளின் கெஞ்சலை காதில் வாங்காது அவள் இதழ்களில் மையம் கொண்டான்.
அவள் கழுத்து வளைவில் குனிந்து அவள் காதில் “அவனை பார்த்து சிரிச்ச இந்த உதட்டுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா!? “என்றவன் வன்மையாய் அவள் இதழை சிறைபிடித்து வலிக்க வலிக்க அவள் இதழை சுவைத்தான் வலி தாங்க முடியாமல் அவள் கண்களில் கண்ணீர் வடிய ஒற்றை கை கொண்டு அவள் இடையை தன்னோடு மேலும் நெருக்கிகொண்டான். அவன் கழுத்தில் இருந்த தாங்க செயின்னை கழற்றியவன் அவள் இதழை சிறை பிடித்தப்படியே அவள் கழுத்தில் அணிவித்து தன் அழுத்தமான அதரங்களில் இருந்து அவள் பூவிதழை விடுவித்து அவளை காற்று கூட புகமுடியாத படி அவளை தன்னோடு இருக்கிகொண்டான்.

“மோதிரம் மாத்தினாலே பாதி கல்யாணம் முடிஞ்சது மாறினு சொல்லுவாங்க நான் உனக்கு செயினே போட்டுட்டேன் அப்போ தாலி கட்டினதுக்கு சமம் தானே?, இன்னைல இருந்து நீ என் பொண்டாட்டி “என்று அவன் பொண்டாட்டி என்ற வார்த்தையில் அழுத்தம் குடுத்து சொல்ல
‘என்ன ஒளறிட்டு இருக்கான் ‘என்று நினைத்தவள் கண்கள் மட்டும் கீழே தாழ்த்தி கழுத்தை பார்க்க அவனுடைய தங்க சங்கிலி அவள் மார்போடு உரசியபடி மின்னிக்கொண்டிருந்தது ‘இதை இப்போ நமக்கு போட்டான் ‘என்று அவள் யோசிக்க
“என்னோட ஒரு முத்ததுக்கே மயங்கி கிறங்கி கிடந்தா நான் எப்போ போட்டேனு உனக்கு எப்படி தெரியும்? “என்றான் குத்தலாய்
அவனின் குத்தல் பேச்சில் கூசிப்போய் அவனிடமிருந்து விலக முயல அது முடியாமல் மேலும் தன்னை நினைத்து நொந்து கொண்டாள். பிடித்தது ருத்ரதேவ் ஆயிற்றே அவன் நினைத்தால் மட்டுமே அவனிடமிருந்து அவள் விடுபட முடியும்
“நீ இந்த ருத்ரதேவ் பொண்டாட்டிக்குறதை மனசுல வச்சிக்கிட்டு நடந்தா உனக்கு நல்லது கண்டவன் கிட்டலாம் பல்லைக் காட்டிக்கிட்டு நின்னா அடுத்து என்ன நடக்கும்னு உனக்கு தெரியும்னு நினைக்குறேன், இனி அவனை பாக்கும் போதும் பேசும் போது இன்னைக்கு நான் உனக்கு குடுத்த இந்த ஸ்வீட் பனிஷ்மென்ட் உனக்கு நியாபகம் வரும்!!, வரணும்!!!.., பாத்து நடந்துக்கோ மிஸ்ஸஸ். ருத்ரதேவ் “என்று அழுத்தமாய் துடங்கி கடைசியாய் சொன்ன மிஸ்ஸஸ். ருத்ரதேவ் வில் என்ன மாதிரியான உணர்வோடு அவன் சொன்னான் என்பதையும், தன் எப்படி உணர்கிறோம் என்பதையும் அவள் அறியவில்லை அந்த வார்த்தையின் அர்த்தத்தையும் அவன் மட்டுமே அறிவான் ஒருவேளை அதை அவள் உணர்த்திருந்தால் வாழ்வில் வரப்போகும் இன்னல்களை எளிதாக கையாண்டுருப்பாக்ளோ என்னவோ!!!

“நொவ் யூ கெட் அவுட் “என்றான் அவள் கால்கள் அணிச்சையாக அங்கிருந்து நகர “ஒன் செகண்ட்” என்றவனின் கணீர் குரலில் நின்றவளின் விழிகள் அவனை பார்க்க
“இனி அவனை நீ பாக்க கூடாது, பேச கூடாது!!””என்றான் கட்டளையாய்
‘ஏன் பாக்க கூடாது??,ஏன் பேச கூடாது??, நீ யார் அதை சொல்ல??, நீ சொன்னால் நான் கேட்கணுமா??’என்று கேட்டவள் வழக்கம் போல் தன் மனதில் மட்டுமே கேட்டுக்கொண்டாள் தெரியாமல் கூட ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை

“உன் புருஷன்,ஹ்ம்ம்ம், கேட்டுத்தான் ஆகணும், அதை தவிர வேறு வழி இல்லை, அவனை பாத்து பேசினன்னு தெரிஞ்சிது அப்புறம் கண்டிப்பா பனிஷ்மென்ட் இவ்ளோ சிம்பிளா இருக்காது “என்றவன் உதட்டை கடித்து அவள் உடல் அங்கங்களில் பார்வை பதிக்க அவனின் பதிலில் அதிர்ந்தவள் அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து சட்டெனே திரும்பி கொண்டாள் ‘நாம மனசுல நினைச்சதை கரெக்ட்டா சொல்லுறான்!, இனி இவன் முன்னாடி மனசுல கூட நினைக்க கூடாது ‘என்று மனதில் குறித்து கொண்டாள்
அவள் மனதில் நினைத்ததை வாய் விட்டு வெளியே சொல்லாவிட்டாலும் அவள் கண்கள் அதை சொல்லிவிட்டதே அவள் முகத்தில் காட்டிய ஒவ்வொரு உணர்வையும் படித்தவன் அவள் மனதில் நினைத்ததை அறிந்துவிட்டானே!! அவள் தலை முதல் பாதம் வரை அவளின் ஒவ்வொரு அசைவையும் அறிந்தவனுக்கு அவள் உணர்வுகளை அறிந்துகொள்ள முடியாத என்ன!?
அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் சென்றவள் அவள் இருக்கையில் அமர்த்த பிறகும் பதற்றம் குறையவில்லை அவன் கடைசியாக சொன்ன வார்த்தையை நினைத்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்துக்கொண்டது அவனை மறக்க தன்னை சமநிலை படுத்த படாதப்பாடு பட்டுகொண்டிருந்தாள் அவள்.. ருத்ரனோ ஏதும் நடவதாது போல் எப்போதும் அவனிடம் குடிகொண்டிருக்கும் கடுமையுடன் அவன் வேலைகளை செய்துகொண்டிருந்தான் அவனை பார்க்கும் போது ‘நாம் எதாவது கேட்ட கனவு கட்டோமா, நடந்தது எல்லாம் கனவா?’என்று கூட தோன்றியது அவளுக்கு.
அவள் குனிந்து தன் கழுத்தை பார்க்க அவன் அணிவித்த தங்க சங்கிலி அவளை பார்த்து மின்னிக்கொண்டிருந்தது நாம் கனவு காணவில்லை எல்லாம் உண்மைத்தான் ஆனால் அவனின் சிறு அசைவில் கூட துளி மாற்றம் இல்லை, அவனிடத்தில் சிறு தடுமாற்றமோ, சந்தோஷமோ, ஆர்வமோ அவளுக்கு தெரியவில்லை

‘அவனிடம் ஏன் மாற்றம் இருக்க வேண்டும்?’என்று அவள் மனம் அவளிடமே திருப்பி கேட்க ‘
‘அவன் நினைத்தது தானே நடக்கிறது அதற்க்கு அவன் சந்தோசம் தானே பட வேண்டும் “
‘இப்போதுதான் அவன் நினைத்தது நடக்கிறதா!?, அவன் நினைத்தது எப்போது நடக்காமல் போயிருக்கிறது!!?,எப்போதும் அவன் நினைத்தது மட்டும் தானே நடக்கிறது இன்று அப்படித்தான் நடந்திருக்கிறது இதற்கு ஏன் அவன் சந்தோச படவேண்டும் ‘என்று அவள் மனம் எதிர் கேள்வி கேட்க
தன்னை அவன் பார்த்துவிட்டால் காலை போல் இப்போதும் தான் நினைப்பதை கண்டுபிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று நினைத்தவள் மனது கப் சிப் என்று அமைதியானது

வேலை முடிந்து அவள் வீட்டிற்கு கிளம்பும் போதே இருட்டி விட்டிருந்தது பஸ்சில் இருந்து இறக்கி நடந்தவள் தன்னை யாரோ பின் தொடருவது போல் உள்ளுணர்வு சொல்ல சட்டென திரும்பி பார்த்தாள் அங்கு யாரும் இல்லை மீண்டும் நடையை தொடர்ந்தவள் ஆள நடமாட்டம் இல்லாத வழியில் செல்ல மனம் மீண்டும் எச்சரிக்கை செய்தது யாரோ அருகில் தன்னை பின் தொடர்வது போல் மீண்டும் மீண்டும் உள்ளுணர்வு சொல்ல இந்த முறை மனதில் திகில் பரவ செய்தது மெதுவாக எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் தலையை திருப்பாமல் கண்களில் இருபுறமும் பார்க்க யாரும் இல்லை லேசாக தலையை திருப்பி பார்க்க அவளுக்கு கொஞ்சம் பின்னே இரு தடியர்கள் அவளை பாலோ செய்துகொண்டிருந்தனார் அவர்கள் தன்னைத்தான் ஃபாலோ செய்கிறார்களா?? என்பத்தை ஊர்ஜிதப்படுத்தியவள் ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு சென்றாள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்கும் அனைத்தையும் கண்டு பயந்து நடுங்கினாள் வீட்டிற்கு வந்தும் படபடப்பு குறையாமல் இருக்க ஆழ்ந்த மூச்சு விட்டவள் தன்னை சமன் செய்ய “நாம் நினைப்பது போல் இருக்காது” என தனக்கு தானே பலவாறு சொல்லி தேற்றிக்கொண்டாள்

வீட்டிற்கு வந்தவள் அன்னையின் உடல் நிலையை விசாரித்து டாக்டர் கூறியதை கேட்டுக்கொண்டாள் மாறனும் அக்கா வந்த பின் அவன் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்துவிட்டு பரிச்சைக்கு படிக்கும் வேலையில் இறங்கினான் மகியும் குளித்து உடை மாற்றி வந்து இரவு உணவை தயார் செய்து அன்னைக்கும் தம்பிக்கும் உணவை கொடுத்துவிட்டு தானும் உண்டு உறங்க சென்றவளுக்கு காலை ஆபீஸில் நடந்தவகைகள் நினைவிற்கு வந்து மனதில் பயத்தை ஏற்படுத்தியது நாளை கிருஷ்ணாவை பார்த்தால் அவனிடம் என்ன சொல்லி அவனை தவிர்ப்பது ருத்ரதேவ்வின் மிரட்டலை மீறி கிருஷ்ணாவிடம் பேசும் தைரியம் மகிக்கு இல்லை கிருஷ்ணாவை பார்த்தாலோ பேசினாலோ அவன் என்ன செய்வனோ!! என்றெல்லாம் சிந்தனையில் இருந்தவள் அப்படியே உறங்கி போனாள்

காலை வழக்கம் போல் ஆபீஸ் கிளம்பியவள் நேற்றுபோல் கிருஷ்ணா வராததினால் நிம்மதியாய் ஆபீஸ்க்கு சென்றாள் ருத்ரதேவ்வும் அவளுக்கு எந்த இடஞ்சலும் தராமல் இருக்க மாலை வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாகவே தான் போனது. வேலையை முடித்து வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்தவள் யாரும் அற்ற அந்த பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்க அவள் பின் நின்ற இருவர் அவள் முகத்தில் மயக்கமருந்து கலந்த கர்ச்சீப்பை வைத்து அழுத்தியத்தில் அப்படியே மயங்கி சரிந்தாள்..

தலை சாய்த்து இருக்கையில் அமர்ந்திருந்தவளின் கைகளை கட்டியிருந்த கயிரு கலட்டப்பட்டிருந்து கண்களில் கண்ணீர் வடிய கடந்த கால சிந்தனையில் இருந்தவளை நிகழ்விற்கு கொண்டுவந்தது வேதவல்லியின் போன் கால் “ஹே இந்தா மேடம் லைன்ல இருக்காங்க பேசு “என்று நான்கு தடியன்களில் ஒருவன் அவளிடம் போனை நீட்டினான் கைகள் நடுங்க அதை வாங்கியவள் காதில் வைக்க,
“என்ன முடிவு பண்ணி இருக்க? “என்ற அதட்டலான குரலில் வேதவல்லி கேட்க,இனி தப்பிக்க வழி இல்லை தன்னை சுற்றி பின்ன பட்ட வலையில் தான் வசமாக சீக்கிகொண்டதை உணர்ந்தவளுக்கு சரி என்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை

“சரி, நீங்க சொல்லுற மாதிரி செய்றேன், ருத்ரா சாரை கல்யாணம் பண்ணிக்குறேன் “என்று மனதை கல்லாக்கி கொண்டு சொன்னாள்
“குட், இதை தான் நான் எதிர்பாத்தேன், நீ ஒன்னும் என் புள்ளையை சும்மா கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் கல்யாணம் முடிஞ்சதும் பணம் வாங்கிக்கோ அதை வச்சி உன் அம்மாக்கு டிரீட்மென்ட் பண்ணு, இங்க நடந்ததையோ நான் பேசினதையோ என் பிள்ளை கிட்ட சொல்லலாம்னு ஏதாவது பிளான் பண்ணனு வை எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை தாராளமா சொல்லு ஆனா அதை அவன் நம்பனும், என்ன பத்தி எதாவது தப்பா சொன்ன உன்னை உயிரோட சமாதி கட்டிடுவான் என் புள்ள அப்புறம் இன்னொன்னு கல்யாணம் முடிஞ்சி மறுநாள் என் பையன் கிட்ட பணத்தை வாங்கிக்கோ “என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார் வேதவல்லி

அனைத்தும் அகர்கள் முடிவு செய்தனர் அதற்க்கு இவள் பொம்மை போல் அடவேண்டும் இல்லை எனில் ஆட வைத்துவிடுவார்கள் எங்கு அவளை கடத்தினர்களோ அங்கு அவளை இறக்கிவிட்டனர் வேதவல்லியின் ஆட்கள்.
அதன் பின் எப்படி வீட்டிற்கு போனாள் என்பது அவளுக்கே தெரியாது அவள் விடு வந்து சேரும் போது மணி பத்து இருட்டியும் மகிழினி வீட்டிற்கு வராததால் மாறன் பதட்டத்துடன் வெளியின் நின்று அவள் வருகிறாளா என்று ரோட்டை வெறித்துகொண்டிருந்தான்
அவள் உள்ளே நுழைந்ததும் “அக்கா, ஏன் இவ்ளோ லேட் “என்று மாறன் கேட்க அவள் காதில் அவை விழுந்தால் தானே பதில் கூற!,
‘சரி என்று சொல்லிவிட்டோம் கிருஷ்ணாவிற்கு என்ன பதில் சொல்வது, கிருஷ்ணாவிற்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு இப்போது ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்!, அவனுக்கு என்ன பதில் சொல்வது!?, இனி தன் வாழ்க்கையின் நிலை !!!??’என்றெல்லாம் சிந்தனையிலிருந்தாவளுக்கு மாறனின் குரல் செவிகளில் எட்டாவில்லை
“அக்கா உன் கிட்டத்தான் பேசுட்டு இருக்கேன் எங்க போற!? “என்று அவளை பிடித்து உளுக்க
“ஹான் “என்றவள் பேந்த பேந்தவென்று விழித்தாள்
“என்ன ஆச்சு அக்கா ஏன் இப்படி முழிக்குற!?”என்றவன் அவள் நெற்றியில் கை வைத்து பார்க்க “ ஜுரம் கூட இல்லையே நல்லா தான இருக்க? “
“என்ன மாறா!? “ என்று வெளிறிய முகத்தோடு கேட்க
“சரியா போச்சு!, நான் இங்க காட்டுக்கத்தல் கத்துக்கிட்டு இருக்கேன் என்னன்னு கேட்கிற? “
“ஏதோ ஞாபகத்தில் இருந்தேன் டா பேசினதை கவனிக்கலை “
“வரவர நீ சரியில்ல அக்கா, ராத்திரியானா அலறி கத்துற, எதைப் பார்த்தாலும் பயப்படுற? “
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா நான் எப்போவும் போலதான் இருக்கேன் “
“ஏன் இவ்வளவு லேட்டு!?, இவ்ளோ நேரம் ஆகியும் வரலன்னு நானும் அம்மா ரொம்ப பயந்துடோம் மகிக்கா “என்று அவன் கேட்க ‘என்ன செல்ல என்னை நாலு பேர் கடத்தி கொண்டு போய் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்கன் சம்மதிக்கலைன்னா இதோ இப்போ உங்க முன்னாடி உயிரோட நின்னு இருக்க மாட்டேனே வேற வழி இல்லாம நானும் சம்மதிச்சு தொலச்சனே!!!இதை எல்லாம் சொல்லி உங்க சந்தோசத்தையும் குழி தோண்டி போதைக்கவா!!??’என்று உள்ளுக்குள்ளே அழுதாள்

“என்ன அக்கா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ ஏதோ யோசனையிலேயே இருக்கு!? “
“ யோசனை எல்லாம் ஒன்னும் இல்லைடா மாறா, இன்னைக்கு ஆபிஸ்ல வேலை முடியவே ரொம்ப லேட் ஆயிடுச்சு அப்புறம் பஸ் வேலை கிடைக்கலை அதான் லேட் “என்று ஒருவராக எதை எதையோ சொல்லிபடத்திற்கு அவனை சமாளித்தாள்
திடிரென்று நியாபகம் வந்தவளாக, “அம்மாக்கு பரவாயில்லையா இப்போ!? “
“இல்லை அக்கா முன்னாடி விட இப்போதான் வலி அதிக இருக்குனு சொல்லுறாங்க , டாக்டர்ஸ் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க , இப்போதைக்கு வலி குறைய டேப்லெட் குடுத்து இருக்காங்க அக்கா, மாத்திரை குடுத்து தூங்க வச்சி இருக்கேன் நல்லா தூங்கிட்டு இருக்காங்க “
“ஹ்ம்ம் சரி சீக்கிரம் ஆபரேஷன்க்கு ஏற்பாடு பண்ணிடலாம் டா, நீ சாப்பிட்டு படு மாறா “என்றாள்
“நீயும் சாப்பிட வா மகிக்கா “
“எனக்கு பசி இல்லை டா, நீ சாப்பிட்டு தூங்கு “என்றவள் அவள் அறைக்கு சென்று முடங்கி விட்டாள்

அவள் அறையில் இருந்த ரங்கநாதனின் பாடத்தை கையில் எடுத்தவள் கண்ணில் தரை தரையாக கண்ணீர் வழித்தோட “ஏன் ப்பா எங்களை தவிக்க விட்டுட்டு போனீங்க!?, நீங்க இருந்த வரைக்கும் கஷ்டம்னா என்னனே தெரியாம வளந்தோம் ஆன இப்போ வாழ்க்கை தலைகீழ ஆயிடுச்சி ப்பா, முடியல ப்பா என்னால!! ஒரு பக்கம் அம்மா படுத்த படுகிய இருக்காங்க இன்னொரு பக்கம் நான் எந்த தப்பும் பண்ணாம தண்டனையை அனுபவசிக்கிட்டு ஒவ்வொரு நிமிஷமும் செத்துக்கிட்டு இருக்கேன் என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு கூட எனக்கு தெரில ப்பா, ஏன் ப்பா இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு குத்துடுத்தீங்க!!,தம்பி பாவம் ப்பா இந்த வயசுல குடும்பத்தை சுமக்குறான் என் நிலைமையை அவன்கிட்ட சொல்லி அவனையும் கஷ்டப்படுத்த மனசு வரலைப்பா எனக்குள்ளயே போட்டு குமுங்கி செத்துக்கிட்டு இருக்கேன்”என்றவள் வாய்விட்டு அழுது திர்த்தாள் இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தன் நிலையை நினைத்து அழுது தீர்த்தவாளுக்கு கண்ணீர் கூட வற்றிப் போய் விட்டிருந்தது இதற்கு மேல் அழ திராணி இன்றி மனமும் இருக்கி போனது இனி என்ன இருக்கிறது எது நடத்தலும் நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள் விடிய விடிய அழுது தீர்த்தவள் காலை எழுந்து ஒரு முடிவோடு ஆபீஸ்சிற்கு கிளம்பி சென்றாள்


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
உயிரே 4


ஆபீஸிற்கு சென்றவள் ருத்ரன் வருகைக்காக காத்திருந்தாள் அவன் வந்த உடனே அவன் கேபினுக்கு சென்றாள்
என்ன என்று அவன் பார்வையாலேயே வினவ, “அது... சம்மதம்னு சொல்லிட்டு போக வந்தேன் சார் “

“எதுக்கு சம்மதம்? “ என்று புருவம் உயர்த்தி கேட்க

“அது... அது... கல்யாணத்துக்கு “என்று ஒவ்வொரு வார்த்தையும் திக்கி திணறி சொல்ல

“உன்னோட சம்மதத்தை யார் கேட்டது இப்போ?, உன்னை நான் ஒரு பொருட்டா நினைக்கல இதுல உன் சம்மதத்தை வேற எதிர்பார்த்துக் இருப்பன்னு நினைச்சயா!!??“என்று அவன் நக்கலாய் பேச அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உதாசினத்தை தாங்கிக் கொள்ளவும் முடியாமல் சிலையையாய் நின்றிருந்தாள்

“கம்மிங் சண்டே மார்னிங் சீக்ஸ் டு செவன் தட்டி மேரேஜ் வந்துடு “என்று அவள் திருமணத்திற்கு அவளையே அழைத்தான் ருத்ரா..
சரி என்பதைத் தவிர வேறு என்ன பதில் சொல்ல முடியும் அவளால் அவனிடம் சரி என்று தலையாட்டிவிட்டு வெளியே செல்ல முற்பட “ என்ன பாய் ஃப்ரெண்ட் பாக்காம ரொம்ப சோகமா இருக்க போல? “என்றவனின் கடுக்கடுத்த குரலில் நின்றவள் திரும்பி அவனை கேள்வியாய் பார்க்க அவனே மேலும் தொடர்ந்தான்
“அது எப்படி வருவான் அவன்தான் அங்க அவன் வாழ்க்கையை காப்பாத்திக்க போராடிட்டு இருக்கானே!”

“கிருஷ்ணாக்கு என்னாச்சு? “ என்று அவனருகில் வந்து படபடக்கும் விழிகளோடு அவள் கேட்க அதில் எரிச்சலுற்றவன் ‘லவர்க்கு ஒண்ணுன்னா எப்படி துடிக்குறா பாரு !’என்று நினைத்தவன் பதில் சொல்லாமல் இருக்க அவனை மேலும் உலுக்கினாள்

” சார் கிருஷ்ணாக்கு என்னாச்சு சொல்லுங்க கிருஷ்ணாவை என்ன பண்ணீங்க “என்று அவன் சட்டை கலரை கொத்தக பிடித்தாள்

“நான்தான் நீங்க சொல்லுறதுக்கெல்லாம் தலை ஆட்டிட்டேனே அப்புறம் என்ன!!?, “என்றவள் அழ கிருஷ்ணாவின் மேல் மகி காட்டும் அக்கறை ருத்ராவிற்கு துளியும் பிடிக்கவில்லை

“அவ்ளோ லவ்வோ!?,என்னடி காதலனை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியலையோ? “என்றான் நக்கலாய்

“கிருஷ்ணவா என்ன பண்ண!? “என்று கோபமாக கேட்டாள்

“நான் உன் கிருஷ்ணாவை ஒன்னும் பண்ணலை அவன் பிசினஸ்ஸை தான் லைட்டா டச் பண்ணேன் வேற ஒன்னும் பண்ணலை ஆன ஒரே நாள்ல அவன் பிஸ்னஸ் மொத்தமும் இந்த அளவுக்கு தரைமட்டம் ஆகும்னு நானே நினைக்கலை“என்றான் வெற்றி அடைந்த திருப்தியில்

“வாட்!!”என்று ஆதிர்ந்தவள் “என்ன சொல்றிங்க!?”

“உன் லவ்வர் பிசினஸில் லாஸ் ஆகி தலையில துண்டை போட்டுட்டார் “னு சொன்னேன்

அதை கேட்டவளோ முழுவதுமாக அதிர்ந்து விட்டாள் “என்ன!!??” ‘அவனோட எத்தனை நாள் உழைப்பு இப்படி என்னால நாசமா போய்ட்டுச்சே ‘என்று குற்றவுணர்ச்சி வேறு அவளை உருகுலைத்தது அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவள் கேபினுக்கு வந்தவள் கிருஷ்ணாவிற்கு அழைத்தாள் அவன் போன் ஸ்வீட்ச் ஆப் என்று வர மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தவள் சோர்ந்து போனாள் எப்போதும் போனை ஸ்வீட்ச் ஆப் செய்யும் பழக்கம் அவனுக்கு இல்லை இன்று ஸ்வீட்ச் ஆப் என்று வர அவனுக்கு என்னவோ ஏதோவென்று பயந்தவள் எல்லாம் தன்னால் தானே என்று தன்னை தானே நொந்து கொண்டாள்


அன்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு சென்றவளுக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது வீட்டிற்கு போனவள் வெளியே நின்ற பல விலை உயர்ந்த கார்களை பார்த்து குழப்பதோடு உள்ளே சென்றாள் அங்கு அவள் வரவை எதிர்பாத்து வேதவல்லி அமர்ந்திருக்க வசுந்திராவும் மாறனும் கூட அவர்களுடன் சிரித்த முகமாகவே பேசிகொண்டிருந்தனர் மகி ஏதும் பேசாமல் அமைதியாக அங்கு போய் நின்றாள்


“அம்மாடி எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல “ என்று சொன்ன தாயை குழப்பதோடு பார்த்தாள் மகி

“நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன் மகிமா நீயும் என் பையனும் லவ் பண்ணுறீங்கனு உங்க வீட்ல சொல்லிட்டேன் அவங்களும் உங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க “

‘என்ன லவ் வா!' என்று உள்ளுக்குள் அதிர்ந்தவள் வெளியே எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக நின்றாள்

“ ஏன் மகி எங்க கிட்ட ஏதும் சொல்லல நாங்க உன் விருப்பத்தை ஏத்துக்க மாட்டோம்னு நினைச்சியா?, உன் சந்தோசம் தானே எங்க சந்தோசம், இதுக்குத்தான் அவ்ளோ சோகமா இருந்தியா”என்று வசுந்திரா கேட்க ஆமா என்பது போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் மகி அடுத்த அடுத்த வேலைகளை செய்ய துவங்கிய வேதவல்லி மகியிடம் திருமணம் அன்று கட்ட வேண்டிய புடவை நகை என அனைத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு சென்றார் அவள் நடப்பதை வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது அதை தவிர வேறு ஒன்றும் அவளால் செய்ய முடியவில்லை


திருமணத்திற்கு முன் நாள் மாலை வசுந்திரா உடல் நிலை மிக மோசமாக உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றாள் மகி உடனே அட்மிட் செய்து மருத்துவம் பார்த்த டாக்டர்ஸ் நாளை மறுநாள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆபரேஷன் செயும் அன்று பத்து மணிக்குள் பணத்தை கட்டினால் மட்டுமே உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியும் என்று கூறினார் நாளை மறுநாள் பணத்தை கட்டிவிடுவதாக மகி டாக்டரிடம் கூறினாள்
மருத்துவரிடம் அப்படி கூறிவிட்டாலும் உள்ளுக்குள் ஒரு பயம் ‘பணம் கிடைத்துவிடுமா??’ என்று அவள் இருக்கையில் அமர்ந்து சிந்தனையில் இருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தான் மாறன் “அக்கா நீ வீட்டுக்கு போ நாளைக்கு உனக்கு கல்யாணம் எதை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத அம்மாக்கு ஏதும் ஆகாது நான் பாத்துக்குறேன் டாக்டர் அம்மா கூட ஒரு ஆள் இருந்தே ஆகணும்னு சொல்லிட்டார், உன் கல்யாணத்துக்கு என்னாலையும் அம்மாவாலையும் வர முடியலை “என்று அவன் கண்கலங்க,

“இந்த கல்யாணம் அம்மா சரி ஆனதும் பண்ணிக்கிறேனே “என்று இறைஞ்சும் குரலில் அவள் கேட்க

“இல்லை க்கா கல்யாணம் குறிச்ச டைம்ல நடக்கணும் அதான் அம்மாவோட அசையும் கூட “

“நீங்க இல்லாம எப்படிடா நான் கல்யாணம் பண்ணிக்க முடியும் ? “ என்று அவள் அழ

“அழாத அக்கா நேர்ல பாக்க முடியலைன்னா என்ன வீடியோல பத்துக்குறேன் நீ இதைலாம் நினைச்சி கஷ்ட படாத “என்று அவன் அவளை தேற்றினான்

மகி கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும் அந்த திருமணத்தை நம்பித்தானே அவளும் ஆப்ரேஷனுக்கு பணத்தை கட்டுவதாக சொன்னாள் திருமணம் நடக்காவிட்டாலும் அம்மாவை காப்பாற்ற இயலாதே என்று வருந்தினாள்

“அக்கா டைம் ஆயிடுச்சி நீ வீட்டுக்கு போ “என்று தன் அக்காவை வீட்டிற்கு அனுப்பி வைத்தான் மாறன் வீட்டிற்கு வந்தவளின் மனமோ அன்னை தம்பியிடமே நிலைகொண்டிருக்க உறக்கம் தான் எங்கோ போனது காலை சீக்கிரமாகவே எழுந்தவள் குளித்து தயாராகி வேதவல்லி குடுத்த புடவையையும் நகையையும் அணிந்து காத்திருந்தாள் வேதவல்லி அனுப்பிய கார் மகி வீட்டின் முன் வந்து நிற்க டிரைவர் வந்து மகியை அழைத்து சென்றான்.

திருமணம் எங்கு நடக்க போகிறது?, யார் யார் எல்லாம் வருவார்கள் என்று எல்லாம் அவளுக்கு தெரியாது இப்போது எங்கு போய்கொண்டிருக்கிறாள் என்று கூட அவளுக்கு தெரியாது கண்களை முடி சிட்டில் சாய்ந்து அமர்ந்தவள் எண்ணங்களோ அன்னையை சுற்றியே இருக்க அம்மா தம்பி யாரும் இல்லாமல் நடக்கும் திருமணம் என்று வேதனையாக இருந்தாலும் ஒரு வகையில் அவர்கள் இல்லாதது நல்லது என்றுதான் தோன்றியது வேதவல்லி அவர் உண்மை குணத்தை மறைத்து தன் குடும்பத்தினர் முன்னால் நடிக்கிறார் ஆனால் ருத்ரா அப்படி இல்லை தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்டிவிடுப்பவன் தன் மேல் உள்ள கோபத்தையும் வெறுப்பையும் அனைவர் முன்னாலும் காட்டிவிட்டால் அன்னைக்கும் தம்பிக்கும் கண்டிப்பாக சந்தேகம் வரும் என்று நினைத்தவள் அவர்கள் வராததும் நல்லதுக்குதான் என்று நினைத்துக்கொண்டாள்

காரிலிருந்து இறங்கியவள் கோயிலில் நுழைய அங்கு வேதவள்ளி மகிழினிகாக காத்திருந்தார்.
மகிழினி வேதவல்லி அருகில் போக அவளை கோவிலில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று காத்திருக்கும்படி சொல்லிவிட்டு வந்தார்


அக்னிகுண்டத்தின் முன் கம்பிரமாய் ஆண்களே கண்டு பொறாமை படும் அளவிற்கு ஆண் அழகனாய் அமர்ந்திருந்தான் ருத்ரதேவ். பட்டு வெட்டி சட்டையில் கோபம் வெறுப்பு திமிர் என அனைத்து உணர்வுகளும் கலந்த கலவையாய் அவன் அமர்ந்திருக்க அவன் அருகில் மகியை அழைத்து வந்து அமர வைத்தார் வேதவல்லி..


எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாய் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது வேதவல்லி மற்றும் அவர் கணவர் ஹரிஹரன், ருத்ராவின் நண்பன் பாலா மட்டுமே அங்கு இருந்தார் இப்படி ஒரு திருமணம் நடப்பது வெளிவுலகிற்கு தெரிய வாய்ப்பே இல்லை என்னும் படித்தான் அங்கு அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது

ருத்ரா மகியை திரும்பி கூட பார்க்க வில்லை அவன் முகத்தில் இருந்த கடுமையை பார்த்தவளுக்கு அதற்க்கு மேல் அவனை பார்க்கும் தைரியம் மட்டும் வரவே இல்லை எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஐயர் சொல்லும் மாத்திரங்களை சொல்லிகொண்டிருந்தான் ருத்ரா
மகியோ அவனுக்கு பயந்து மிக மெல்லிய குரலில் ஐயர் சொல்லும் மந்திரத்தினை சொன்னாள் எந்த நேரம் எப்படி சீறுவானோ என்று நினைத்தவள் மனமோ பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது

“கெட்டிமேளம்!! கெட்டிமேளம்!!!”என்று சொல்ல மங்கள வாத்தியங்கள் முழங்க தேவாதி தேவர்களின் ஆசீர்வாதத்தினால் ருத்ரா மகிழினி கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினான் மகிழினி நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்து அவளை தன் மனைவியாகினான்..

மணமக்கள் இருவரும் வேதவல்லி ஹரிஹரனிடம் ஆசிர்வாதம் வாங்கினர் பாலா தன் நண்பனை கட்டி அணைத்து திருமண வாழ்த்து கூறினான் “ஹாப்பி மேரிட் லைப் டா மச்சி என் தங்கச்சியை எப்போவும் சந்தோஷமா வச்சிக்கோ” என்றான் பாலா
“மகிம்மா ஹாப்பி மேரீட் லைஃப் டா,உனக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் இந்த அண்ணன் கிட்ட கேளு உனக்கு நான் இருக்கேன்” என்று பாலா சொல்ல மகிக்கு கண் கலங்கியது தனக்கு ஒரு அண்ணன் கிடைத்த சந்தோஷத்தில்

“தேங்க்ஸ் அண்ணா “

அனைவரும் வீட்டிற்கு கிளம்ப காருக்கு செல்ல வேதவல்லி ஹரிஹரன் ஒரு காரிலும் பாலா ஒரு காரிலும் சென்றுவிட ருத்ராவும் மகியும் ஒரே காரில் செல்லவேண்டிய நிலை ‘இவனோடு ஒரே காரில் செல்வதா!! ‘என்று பயந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க அதற்குள் ருத்ரா காரில் ஏறிவிட்டிருந்தான்

“என்ன மகாராணிக்கு வெத்தலை பாக்கு வச்சு அழைச்சா தான் வருவீங்களோ?, வந்து ஏறுடி “என்று கடுக்கடுக்க குடுகுடுவென ஓடி சென்று பின் கதவை அவள் திறக்க “நான் என்ன உனக்கு டிரைவர் வேலையா பாக்குறேன் முன்னாடி வந்து உக்காரு டி “என்று அவன் மீண்டும் அவளை அதட்டினான் அவன் சொன்னது போல முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் மகி..
அவனை நிமிர்ந்து பார்க்க கூட பயந்தவள் அவன் புறம் பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அதை கண்டவனுக்கு மேலும் எரிச்சல் தான் வந்தது


அவன் மனமோ எரிமலை போல் கொதித்து கொண்டிருந்தது நான் என்ன நினைத்து கனவு கண்டேன் ஆனால் நடந்தது கொண்டிருப்பது என்ன??’என்று அவன் மனம் மீண்டும் மீண்டும் அவனை கேள்வி கேட்டு பாடாய் படுத்தியது இதற்கெல்லாம் காரணம் இவள் தானே!! இவளால் தானே தன் வாழ்க்கை இப்படி ஆனாது என்று அவள் மேல் கோபம் வர அனைத்திற்கும் அவள் தான் காரணம் என அவன் மனம் முடிவு செய்து அதற்கெல்லாம் சேர்த்து அவளையே நோகடிக்க முடிவு செய்தான்


திருமணம் முடிந்து ருத்ரா வீட்டிற்கு மகியை அழைத்து செல்ல அவளை வரவேற்கவோ ஆரத்தி எடுக்கவோ எவரும் இல்லை தன் நிலையை நினைத்தவளுக்கு விரக்தியாக இருந்தது ‘இனி நம் வாழ்க்கை இப்படித்தான் இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் ‘என காலையிலிருந்து தனக்கு தானே பல முறை சொல்லிக்கொண்டாள் அப்படியாவது அதை தன் மனம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்


“என்னங்க நான் ஒமென்ஸ் கிளப் வரைக்கும் போய்ட்டு வரேன் “என்று சொல்லிவிட்டு வேதவல்லி கிளம்பிட அவர் பின்னே ருத்ரானும் மீட்டிங் என்று கிளம்பிவிட்டான் ஹரிஹரனுக்கோ ‘இதுங்க எல்லாம் திருந்தவே திருந்ததுங்க ‘என்று தலையிலேயே அடித்துக்கொண்டார்


“அம்மாடி நீ வந்து பூஜை அறையில விளக்கு ஏத்தும்மா “என்று தன் மருமகளை அழைத்து சென்று பூஜை அறையை காட்டினார் அவர் சொன்ன படி விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டு வந்தவள் அடுத்து என்ன செய்யவேன்று தெரியாமல் முழித்தாள்


“நீ போய் ரெஸ்ட் எடு டா “
“இல்லை சார் பரவால்லை நான் இங்கேயே இருக்கேன் “என்றாள்

“மாமானு சொல்லணும் டா “என்று அவர் உறவு முறையை சொல்ல

“சரிங்க மாமா

“நீ ருத்ரா ரூம்ல போய் ரெஸ்ட் எடு டா, ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல செகண்ட் ரூம் தான் ருத்ரா ரூம் “என்று அவன் அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பி வைத்தார் அவரிடம் ஏதும் சொல்ல முடியாமல் அவளும் சென்றாள்
அவன் வந்து பார்த்தால் என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டே ஒவ்வொரு படியாய் ஏறினாள் தன்னை பார்த்தாலே கோப படுவான் அவன் அறையிலேயே போய் ஓய்வெடுக்க செல்லுகிறாரே இவரிடம் என்ன சொல்லி புரியவைக்க என முனுமுனுத்தபடியே மேலே சென்றவள் அப்படியே வாயை பிளந்துகொண்டு நின்றுவிட்டாள் அந்த ப்லொர் முழுவதும் பார்வையிட ஸ்டடி ரூம், ஒர்கிங் ரூம், ஜிம் என அவன் பயன்படுத்தும் அறைகள் மட்டுமே இருந்தது அங்கு மற்றவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை அவன் அனுமதித்தால் மட்டுமே மற்றவர்கள் அங்கு வர முடியும்.


ருத்ராவின் அறைக்குள் நுழைந்தவள் இதயமோ படபடவேனா அடித்துக்கொண்டது அதன் பயத்தை காட்ட கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் ‘நம்மளா அவனை ஏமாத்தி கல்யாணம் செஞ்சிகிட்டோம் அவன்தானே நீதான் வேண்டும் என்று கல்யாணம் செய்துகொண்டான் அவனுக்கு ஏன் நீ பயப்படுகிறாய் ‘என்று மனம் தைரியம் கொடுக்க அவன் அறைக்கு சென்று அறையை சுத்தம் செய்து தனது பொருட்களை எல்லாம் அங்கு வைத்துவிட்டு ஓய்வெடுத்தாள்.

மாலை இருட்ட துடங்கிட ஆதவனும் அவன் வேலையை முடித்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானான் இரவின் அரசனோ கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஆதிக்கத்தை இருள் சாம்ராஜியத்தில் பரப்பிகொண்டிருந்தான்... மாலை கண்விழித்தவள் மணியை பார்க்க “அய்யோ இவ்ளோ நேரம் தூங்கிட்டோமா “என்று அவசர அவசரமாக எழுந்து கீழே வந்தாள்

“என்னமா நல்லா தூங்கினியா? “

“சாரி மாமா ரொம்ப நேரம் தூங்கிட்டு இருந்து இருக்கேன் “என்று மன்னிப்பு கேட்க

“இதுல என்னமா இருக்கு, சாப்பிட கூப்பிடலாம்னு உன்னை கூப்பிட்டேன் நீ வரலை சரி நல்லா தூங்கிட்டு இருக்கியோன்னு நினைச்சி தொல்லை பண்ணாம விட்டுட்டேன் டா “என்று அவர் அக்கறையாய் சொல்ல அவர் பேச்சில் நெகிழ்ந்து தான் போனாள் இந்த குடும்பத்தில் இப்படியும் ஒரு நல்லா மனிதனா என்று ஆச்சர்யம் தான் அவளுக்கு


ஹரிஹரன் டாப் டென் பிசினஸ்மேன்களில் ஒருவர் மும்பையில் உள்ள தங்களின் பிசினசை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டிலுள்ள பிசினஸ்ஸை ருத்ரதேவ்வும் மும்பை உள்ள பிசினஸ் ஹரிஹரனும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் தன் பிள்ளையின் திருமணத்திற்காக நேற்றுதான் மும்பையில் இருந்து வந்தார் எப்போதும் போல் மனைவியில் பொறுப்பில்லா தனத்தை கண்டு எரிச்சல் அடைந்தவர் ஏதும் பேசாமல் மௌனம் காத்தார்


மாமனாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு மாடிக்கு சென்றவள் பல்கணியில் நின்று ருத்ராவின் நினைவில் சுழன்று கொண்டிருந்தாள் அங்கேயே வெகுநேரம் நின்றிருந்தவள் அதற்கு மேல் கால் வலிக்க ருத்ரா அறைக்கு சென்று ஓய்வெடுத்தாள்...


இரவு வெகு நேரம் ஆகியும் ருத்ரா வராமல் இருக்க இதை மாமாவிடம் கேக்கலாமா?? வேண்டாமா?? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே ருத்ரா தள்ளாடியப்படி அறையினுள் நுழைந்தான் அவனை கண்டதும் சட்டென எழுந்தவள் ‘இவன் குடிப்பானா??’என்ற அதிர்ச்சியில் அவள் நிற்க அவள் அருகில் வந்தவன் “என்ன டி அப்படி பாக்குற, என்னடா இவன் கல்யாணம் ஆன அன்னைக்கே குடிச்சிட்டு வந்து இருக்கான்னு பாக்குறியா “என்று குளறியப்படி அவன் கேட்க,

“இல்லை, நான் ஏதும் நினைக்கலை “என்று அவசர அவசரமாக அவனுக்கு பதில் சொன்னாள்

“எல்லாம் உன்னால தான் டி “என்றவன் மேலும் அவளை நெருங்க உள்ளுக்குள் அவளுக்கு உதறல் எடுத்துக்கொண்டது அன்று ஆபீஸ் இருக்கும் போது அவன் அவளிடம் நடந்து கொண்ட விதம் நினைவு வந்து அவளை பயம் கொள்ள வைத்தது அவனை விட்டு விலக நினைத்து பின்னே போக அவனோ மேலும் அவளை நெருங்கி சென்றான்


“என்ன டி நீ விலகி போன நான் விட்டுடுவேனா!?, நெவெர் “என்று இடையை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்தான்


“ப்ளீஸ் என்ன விட்ருங்க எனக்கு பயமா இருக்கு “என்று அவள் அழ

“இப்போ எதுக்கு டி அழுது மூட ஸ்பாயில் பண்ணுற!”என்று அவளை அதட்டினான், அவள் கண்ணீரை அவன் இதழ் கொண்டு துடைக்க பாவையவள் உடலோ பயத்தில் நடுங்கியது


Thread 'என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்னை-தீண்டும்-உயிரே-கருத்து-திரி.983/

 
Last edited:
Status
Not open for further replies.
Top