T23
Moderator
Episode 10
மதியம் போல் தூங்கி எழுந்த இருவரும் தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கினர். ராகேஷ் மிகவும் சந்தோஷமாக இருந்தான் பல நாட்களுக்கு பிறகு நீண்ட உறக்கம் அதுவும் அவனுக்கு பிடித்த மாதிரி அவன் உற்சாகம் அனைத்து வேலைகளிலும் தெரிந்தது.
மதிய உணவை சாப்பிட்டு விட்டு தங்கள் புதிய கட்டிடத்தை பார்வையிட வந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் அதன் திறப்பு விழா தங்களுக்கு என்று வேலை செய்வதற்கு ஒரு இடம் வேண்டும் அதற்காகவே இந்த ஆபிஸ் அதனால் கடைசியாக அங்கு அனைத்தும் சரியாக இருக்கிறதா என தனது பி.ஏ உடன் விவாதித்து கொண்டு இருந்தான்.
இங்கு நிஹாவுக்கு இனிமையாக ஆரம்பித்த நாள் மிகவும் வெறுப்பாக நகர தொடங்கியது.
அதுவும் அனைவரும் ராகேஷ் மற்றும் அவன் பி.ஏ வருகையை பற்றி பேசும் போது எல்லாம் தன் பொருளை யாரோ ஒருவர் ரசிப்பது போல் ஒரு தோற்றம் எதனால் இந்த உணர்வு என்று தெரியவில்லை.
அவர்கள் பேச்சை கேட்டு கோபமானவள் ராகேஷை திட்ட ஆரம்பித்தாள். அந்த நேரம் இங்கு தன் பி.ஏ உடன் பேசிக் கொண்டு இருந்தவனுக்கு புறை ஏறியது. அதை கண்டு அருகில் இருந்த ஒருவன் தண்ணீர் கொடுத்தான் அவன் குடிக்கும் போது அவர்கள் இருவரும் நினைத்தது ஒன்றுதான்.
நம்ம இன்னும் வேலையை ஆரம்பிக்கவே இல்லை அப்படி இருக்கும் போது யாருடா இப்போவே இப்படி திட்டுறாங்க என்றுதான் ஆனால் அவனுக்கு தெரியவில்லை அவன் ஒருவளின் வாயில் நன்றாக அரைபட்டு கொண்டு இருப்பது.
இருவரும் மாலை இருக்கும் மீட்டிங் வந்தனர். இவர்களுக்காக பல கம்பெனிகளில் இருந்தும் பிரஸ் மீடியா என அனைவரும் வந்து இருந்தனர். அங்கு இருந்த நிறைய பெண்களுக்கு இவர்கள் மீது கண்கள் என்றால் ஆண்களுக்கு கூட இவர்கள் மேல் பொறாமை
ஊரில் உள்ள அனைத்து பெண்களின் தூக்கத்தை ஒரு நாளில் கெடுத்தவர்கள் இவர்கள் அல்லவா. இருவரும் மாநிறத்தில் இருந்தாலும் வெளிநாட்டு வாழ்க்கை அவர்களை இன்னும் அழகாக காட்டியது.
எப்போது எங்கு சென்றாலும் தனக்கு அருகில் இருக்கும் இருக்கையை தனது பி.ஏவிற்கு அளிக்க சொல்லிவிடுவான் மற்றவர்களுக்கு அதை பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் அவன் சொல்வதை செய்து விடுவார்கள். அதையும் மீறி செய்யாமல் இருந்தால் அவன் பதில் அதற்கு வேறு மாதிரி இருக்கும்.
அவனை பொருத்தவரை அவன் மிகவும் முக்கியமானவன் அவனுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அவன் பங்கு மிகவும் முக்கியமானது. அதனால் தனக்கு நிகரான மரியாதையை அவனுக்கும் அளிப்பான்.
மீட்டிங் ஆரம்பம் ஆகியது ஓவ்வொருவரும் தங்கள் கேள்விகளை கேட்க தொடங்கினர்.
பிரஸ்: இந்தியாவை உங்கள் ஆராய்ச்சிகாக தேர்வு செய்தது ஏன்??
இங்கு இருக்கும் தட்ப வெப்பநிலை, காலநிலை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் முதலியன.
பிரஸ்: இந்த ஆராய்ச்சியின் மூலம் யாருக்கு நன்மை ??
நாட்டு மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் மேலும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்
பிரஸ்: மிகவும் தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நிறைய இடங்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது அது உண்மையா??
ஆமாம். மேலும் இது அனைத்து கம்பெனிகளிலும் நடைபெறும் நிகழ்வு இதற்கு இவ்வாறு முக்கியத்துவம் என்பது தேவை இல்லாதது.
பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தான். அவன் பதில்கள் அனைத்தும் இதையும் விரிவாக சொல்லவில்லை எல்லாம் முடிந்த பின் விரிவாக இது பற்றி பேசலாம் என்று கூறினான்.
மேலும் ஆராய்ச்சி முடிய இரு வருடங்கள் ஆகலாம் என்றும் அதுவரை இந்தியாவில்தான்
இருப்பேன் தேவைபட்டால் மட்டும் அமெரிக்கா செல்வேன் என்றும்
கூறினான்.
ஒருவழியாக மீட்டிங் நல்ல படியாக முடிந்து இருவரும் வீட்டிற்கு சென்றனர். ஆபிசில் இருந்த நிஹாவுக்கு இது மிகவும் நீண்ட நாளாக தோன்றியது போகும் இடம் எல்லாம் அவர்கள் இருவர் பற்றிய பேச்சுதான்.
மாலையில் தலைவலி
என்று டீ சாப்பிட கேண்டின் சென்றது மிக பெரிய தவறு என்னும் அளவிற்கு அனைவரும் இருவரின் அழகை அவனை
புகழ்ந்தனர். இதற்கு தலைவலியே மேல் என்று கேபின் வந்தவளுக்கு மேலும் அதை அதிகமாகும் பொருட்டு அவளை பிரஷென்டேஷன் செய்ய சொல்லினர்.
அனைத்தையும் முடித்து விட்டு இரவு வீட்டிற்கு செல்ல நேரம் ஆகி விட்டது இதற்கும் காரணம் அவர்கள் இருவரும்தான் என்று அவர்களை திட்டினாள். மேலும் சமயம் பார்த்துக் அவர்களை பழிவாங்குவதாக வில்லி போல் சபதம் எடுத்துக் கொண்டாள்.
வீட்டில் இரவு உணவு
முடித்து விட்டு படுக்க சென்றவளுக்கு ஏனோ கனவில் வரும் அவனுடன் பேச வேண்டும் என்று தோன்றியது அவனும் அவளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பான் போல அவளுக்கு
முன்பாகவே வந்து எப்பொழுதும் இருக்கும் மரத்தின் அடியில் நின்று இருந்தான்.
அவனை பார்த்தவள் முகத்தில் கோடி புன்னகை என்று சொல்லலாம் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மற்றும் தலைவலி தீர்ந்த உணர்வு. இருவருக்குள்ளும் இருப்பது காதலா என்று தெரியாது.
ஆனாலும் இந்த நிமிடங்கள் மிகவும் பிடித்து இருந்தது. இன்று நடந்த
அனைத்தையும் அவனிடம் கூறியவள் அவர்கள் இருவரையும் பற்றி கூறி திட்டி கொண்டு இருந்தாள். அவள் தன்னை பற்றி கூறுவதை கேட்டு கோவம் படவேண்டியவன் அதை ரசித்து கொண்டு
இருந்தான்.
அவன் கண்களில் என்றும் இல்லாத ஒரு அதிசய சிரிப்பு அது அவன் கனவு தேவதையை விரைவில் காண போவதால் கூட இருக்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் உண்மையாக உணர்ந்து சிரிப்பது போல் ஒரு உணர்வு எப்போதும் அருகில் ஒருவன் இருந்தாலும் அவனோடு இவ்வளவு சிரித்து பேசுவது இல்லை.
அவனுக்கு எல்லைகள் எல்லாம் மற்றவர்களிடம் மட்டும்தான் போல
அவளுக்கு இல்லை போலும்
அதனால்தான் யாராலும் வர முடியாத ஒரு இடத்தில் அவனும் அவளும் மட்டும்
தனிமையில் இருக்கிறார்கள்.
இங்கு அவளின் சிரிப்பொலியை தவிர வேறு சங்கிதம் இல்லை. இந்த நொடி அவன் வாழ்வின் இனிமையான தருணம் அவனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்றுதான் அவள் கனவில் வருவது நான் என்று அறிந்தால் பேதை பெண் என்ன செய்வாள்.
இங்கு இருவர் இப்படி இருக்க ஒருவன் யாருக்கு வந்த விதியோ என்று நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். ஆனால் இங்கு ஒரு சிலரோ தங்கள் தூக்கத்தை கெடுத்து ராகேஷை என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து
கொண்டு இருந்தனர்.
அவன் செய்யும் ஆராய்ச்சி பற்றி யாருக்கும் விவரம் தெரியவில்லைமேலும் மற்றவர்களுடன் சேர்ந்து செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்பதால்
இந்த முறை தனியாக செய்வதாக அறிவித்து இருந்தான் அதனால் யாருக்கும் தெரியவில்லை.
இப்போது இருக்கும் கம்பெனிகளில் NR மிகவும்
நல்ல நிலையில் இருப்பதால் அவர்களோடு மட்டும் இணைந்து ஒரு சிறிய வேலையை செய்ய முடிவு செய்து இருக்கிறது.
அதனால் மற்ற
கம்பெனிகளுக்கு அவர்கள் மீது கூட கொஞ்சம் கோபம் ஆனால் மற்றவர்கள் அறியாத விஷயம்
ஒருவேளை NR கம்பெனி மோசமான நிலையில் இருந்து இருந்தாளும் கூட
இந்த வேலையை அவர்களே செய்வார்கள் என்று அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.