ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் நீ- கதை திரி

Status
Not open for further replies.

T23

Moderator
என்னுள் நீ episode 5

நிலா கல்லூரிக்கு செல்ல
வேண்டும் என்றால் ராஜபாளையம் வரை போக வேண்டும் தேனூரில் இருந்து கல்லூரிக்கு தினமும் இருபத்தைந்து கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் அதுவும் இருபாலரும் படிக்கும் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அதற்கும் வீட்டில் சண்டை வர இறுதியில் நட்ராஜ் சமாதானம் செய்தான். சில நேரங்களில் பஸ் வர தாமதம் ஆகும் என்பதால் காலை, மாலை இருவேளையும் யாராவது ஒருவர் அவளை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவர்.

இதில் அதிகமாக செல்வது நட்ராஜ்தான் வயல் வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும்போது அவளை அழைத்து வருவது. இருவரும் வரும் வழியில் அன்றைய நிகழ்வுகளை பேசிக் கொண்டு வருவார்கள் இதை ஊரில் இருக்கும் அனைவரும் அறிவர் ஒரு சிலர் வேடிக்கையாக கிண்டல் செய்வர் இன்னும் சிலர் வயிற்றெரிச்சலில் பேசுவர்.

கல்லூரி வாழ்க்கை இனிதாக தொடங்கியது நிலாவிற்கு முதலில் பேருந்தில் போகும் போது யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த நிலா நாட்கள் ஆக உடன் வரும் தோழிகளுடன் சேர்த்து நன்றாக பேச தொடங்கினாள் விதியும் தன் விளையாட்டை ஆரம்பித்தது.

மணி கல்லூரி படிப்பை முடிந்தபின் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்க முத்து ஒரு வியாபாரத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் அதை செய்ய முடியாது என்று சொல்ல இறுதியில் ஒரு ஆண்டுக்கு பின் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குள் அந்த தொழில் முறைகளை கற்றுக்
கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதுபற்றி மணி நட்ராஜ் இடம் சொல்லும் போது இருவருக்கும் சிறுவயது முதல் தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் ஆசை அப்படி இருக்க உன்னை விட்டு என்னால் ஆரம்பிக்க முடியாது என்று சொல்ல சரி சேர்ந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவானது.

மேலும் இது குறித்து அறிந்த கொள்ள இரண்டு பேரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.

இருவரும் நூல் தொழிற்சாலை
அமைக்க முடிவு செய்தனர். அதை
பற்றி முழுமையாக தெறிந்துக் கொள்ள வேறுவேறு இடங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள செல்கின்றனர்.

மேலும் நட்ராஜ் இதற்கிடையே தன் விவசாயத்தை தன் தந்தை மற்றும் மாமாவின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு தானும் தெழில் கற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.

நட்ராஜ் ராஜபாளையம் அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையிலும் மணி திருப்பூர் அருகில் இருக்கும் ஒரு தொழிற்சாலையிலும் வேலையில் சேர முடிவு செய்தனர். அப்போது கூட நட்ராஜ் வேண்டாம் இங்கு இருந்து கற்றுக்கொள்ளாம்
மேலும் இருவரும் சிறுவயது முதலே பிரிந்தது இல்லை அதனால் இந்த முடிவு வேண்டாம் என்று கூறிய போது அவனை சமாதானம் செய்தது மணிதான்.

இது வெறும் ஒரு வருடத்திற்கு அதன்பின் அனைவரும் எப்பொழுதும் போல் ஒன்றாக இருக்கலாம் என்று சொன்ன பின் அதற்கு ஒப்புக் கொண்டான் அதுவும் முழுமனதுடன் இல்லை. அதன்பின் இருவரும் அதற்கான
வேலைகளை செய்தனர்.

இவர்கள் இந்த வேலையில் கவனமுடன் இருக்க விதி மறுபடியும் ராசாவின் மகன் சிவாவின் உருவில் வந்தது. நிலா படிக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான் தன் தந்தையை விட பலமடங்கு திமிர் பிடித்தவன். இவனுக்கு தன்னை கட்டுப்படுத்தும் தாயை விட தன் தவறுகளை தட்டிக் கொடுக்கும் தந்தையை மிக பிடிக்கும் அதனால் அவருக்காக எதையும் செய்வான்.

புகை பிடிப்பது மது அருந்துவது என அனைத்திலும் தந்தையை மிஞ்சும் அளவிற்கு இருப்பான் இதில் ராசாவிற்கு மகிழ்ச்சி மகன் தன்னை போல் இருப்பது மேலும் அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுப்பது ராசாதான் .

இதில் இவனுக்கும் மனைவி மல்லிகாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் இறுதியில் அடிவாங்குவது அவன் மனைவி. அதனால்
அவள் இருவரிடமும் அதிகம் பேசுவதில்லை தன் கணவன் மற்றும் மகனின் நடத்ததையை கண்டு இறைவனிடம் கண்ணீர் விட்டு வேண்டுவதை விட ஓன்றும் செய்ய இயலவில்லை.

ஆனால் ராசாவிற்கு அவள் சண்டை போடும் போது எல்லாம் கண்முன் வருவது ஆண்டாள்தான் இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அந்த நிகழ்வுகளில் இருந்து அவன் வெளிவரவில்லை.

அவர்களை இன்னும் பழிவாங்கும் வெறியும் அடங்கவில்லை இதற்கு எல்லாம் சேர்த்து எரியும் தீயில் எண்ணை ஊற்றுவதைப் போல் நிலா தன் மகன் கல்லூரியில் சேர்ந்து படிப்பது தெரிந்தால் என்ன செய்வான் என்பதுதான்

ஆனால் மூர்த்தியும் முத்துவும் இப்படி ஒரு தனி மனிதன் இருந்ததையும் மறந்து விட்டனர். அவன் தங்கள் வாழ்க்கையை அழிக்க தன் வாரிசுடன் காத்து இருப்பதையும் தெரிந்துக் கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இதன் விளைவு தங்கள் வீட்டு பெண்ணின் வாழ்க்கையை மட்டும் இல்லை ஒட்டு மொத்த குடும்பத்தையும் அழிக்கும் என்பதையும் அறியவில்லை.

நிலா பயணம் செய்யும் அதே பேருந்தில்தான் சிவாவும் பயணம் செய்வது ஆரம்பத்தில் அவளை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நாட்கள் செல்ல அவளை காதலிக்க ஆரம்பித்தான் அதை காதல் என்று சொல்ல முடியாது.

அனைவரும் தன்னை புகழும் போதும் பெருமை பேசும் போது தன்னை பற்றி அவள் அறியாமல் இருப்பதும் தன்னை தவிர மற்ற அனைவரிடமும் நன்றாக பழக அவளைப் பற்றி நன்றாக தெரிந்துக் கொண்டு அவனை அவளை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தான்.

நிலா பேருந்தில் மட்டுமில்லை தன் கல்லூரியில் என அனைவரிடமும் அதிகம் பேசுவது நட்ராஜ் பற்றிதான் தன் அத்தான் சிறுவயது முதல் இப்பொழுது வரை தனக்காக என்ன செய்தார் என்பதை சொல்லிக் கொண்டு இருப்பாள் அதனால் அவர்கள் அனைவருக்கும் நட்ராஜ் முகம் தெரியாவிட்டாலும் அவனைப் பற்றி நன்றாக தெரியும்.

அதனால் அவள் தோழிகள் அனைவரும் அவளையும் நட்ராஜ்யும் அவளையும் ஒன்றாக சேர்த்து வைத்து கிண்டல் செய்தனர் இதுபோல் தங்களை ஊரில் எப்போதும் செய்வது என்பதால் ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

ஆனால் நாட்கள் ஆக மனதில் சிறு ஆசை வந்தது அதற்கு மேலும் வலு சேர்ப்பது போல் அவனும் தொழில் கற்றுக்கொள்ள அவளுடன் காலை மாலை என ஓரே பேருந்தில் பயணம் செய்ய அவன் மேல் அவள் கொண்ட காதலும் நாளுக்கு நாள் யாருக்கும் தெரியாமல் வளர்ந்தது.

நட்ராஜ் மற்றும் நிலா ஒன்றாக இருப்பதை பார்த்த சிவா இருவரை பற்றி விசாரிக்க இருவரும் உறவினர்கள் என்பதை தெரிந்துக் கொண்டவன் கல்லூரியில் வைத்து நிலாவிடம் இனி அவனிடம் பேசக் கூடாது அவனைப் பார்க்க கூடாது என்று கூற

நிலா சிவாவை பார்த்து நீ யார் அதை சொல்ல என்று கேட்க உன்னை கட்டிக்க போறவன் என்று கூற இருவருக்கும் சண்டை வந்தது. நிலா செய்த பெரிய தவறு இதை நட்ராஜ்யிடமும் வீட்டில் இருந்த மற்ற அனைவரிடமும் சொல்லாமல் இருந்தது தான்.

ஆரம்பத்தில் சிவாவை பற்றி தெரிந்துக் கொண்டவள் அதன்பின் அவனை திரும்பிக் கூட பார்ப்பதில்லை இப்பொழுது இப்படி பேசியது அவன் மேல் இருந்த வெறுப்பை இன்னும் அதிகமாக ஆக்கியது.

இங்கு சிவாவும் ஒரு நிமிடம் கூட நிலா மேல் இருப்பது வெறும் ஈர்ப்பா இல்லை காதலா என்று ஆராயவில்லை மேலும்
அவன் திமிர் மற்றும் கர்வம் அவனை அதைப் பற்றி யோசிக்க இடம் கொடுக்கவில்லை.

மணி மற்றும் நட்ராஜ் மற்றும் இருவரும் அனைத்தையும் நல்ல முறையில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போக போக நன்றாக பழக கொண்டனர்.

அடிக்கடி மணி மற்றும் நட்ராஜ் இருவரும் தொழிற்சாலையில் இருக்கும் தொலைபேசி மூலம் கொள்வர் அதனால் பிரிவின் வருத்தம் அதிகமில்லை.மேலும் பேசும் போது ஒரு முக்கியமான விஷயம் அதை நேரில் கூறுவதாகவும் சொல்லி இருந்தான் நட்ராஜ்.

இங்கு நிலா சிவா பேச்சை கேட்காமல் எப்பொழுதும் போல் நட்ராஜ் உடன் வர அவன் கோவம் இன்னும் அதிகமானது அவளிடம் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தான். நிலாவிற்கு பயம் வீட்டில் சொன்னால் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

நட்ராஜ்யிடம் கூறலாம் ஆனால் இப்பொழுதுதான் அவன் தன் குடும்ப பாரம் விவசாயம் என அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு தன் கனவை அடைய ஆசைப்படுகிறான் அதனால் அவனை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறாமல் இருந்தாள்.

மேலும் தன் அண்ணனிடம் கூறலாம் என்றால் அவனும் அருகில் இல்லை அதனால் கொஞ்ச நாட்கள் இதை சமாளித்துக் கொண்டாள் போதும் என்று எண்ணினால் ஆனால் நாம் ஓன்று நினைக்க இறைவன் வேறு நினைக்கிறார். இவர்களின் பிரச்சினை பற்றி வீட்டில் அனைவரும் அறிய முற்படும் போது காலம் மிகவும் கடந்து இருக்கும்.

நாட்கள் போனது ஒரு வழியாக மணி மற்றும் நட்ராஜ் இருவரும் தொழில் கற்றுக்கொண்டர். நிலா இரண்டாம் வருடமும் சிவா மூன்றாம் வருடம் படிக்கின்றனர்.

நிலா அன்று கல்லூரிக்கு வரவில்லை என்ன என்று சிவா விசாரித்ததில் அவள் அண்ணன் ஊரில் இருந்து வருவதால் தன் அத்தான் உடன் அவளும் சென்று இருப்பதை அறிந்தவன் இன்னும் கோபம் கொண்டு காத்திருந்தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்றாக இருந்தனர். ஆண்டாள் தன் மருமகனுக்கு ஆடு
கறி எடுத்து சமைத்திருந்ததார். இரு வீட்டிலும் மணிக்கு விருந்து பலமாக இருந்தது .

இரவு உணவு முடித்து விட்டு நண்பர்கள் இருவரும் முத்து வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விட்டு போன நிறைய கதைகளை பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது நட்ராஜ் மணிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினான் இருவருக்கும் ஆறு மாதம் பழக்கம் என்றும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்கும் என்றும் நீ வந்த உடன் இதைப் பற்றி பேசி முடிவு செய்யலாம் என்றும் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்று கூறினான்.

மேலும் பெண்ணை பற்றி கூறும் போது அவளும் தன் வேலை பார்த்த தொழிற்சாலையில் கணக்கு வழக்கு பார்த்த ராஜேஸ்வரி என்று கூறினான் அவளுக்கு பெற்றோர் இல்லை என்றும் பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் கூறினான்.

அப்போது இருவருக்கும் பாய் மற்றும் போர்வை கொண்டு வந்து கொடுத்த நிலா காதில் விழுந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலா யாரிடமும் சொல்லாமல் அழுது கரைந்தாள்.

அதன்பின் நாட்கள் செல்ல அவள் குணம் மற்றும் நடவடிக்கைகள் மாறியது எப்போதும் சோகமாக இருந்தாள் வீட்டில் கேட்டதற்கு நிறைய படிக்க வேண்டி இருப்பதாக கூறினாள்.

அதற்கேற்ப நட்ராஜ் மற்றும் மணி இருவரும் நிறைய வெளிவேலை இருந்தது இரவு பகலாக தொழிற்சாலை ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டனர் அப்படி இருந்ததும் சில நேரங்களில் நட்ராஜ் நிலாவை பார்க்க சொல்வதுண்டு.

ஞாயிறு கிழமை சில நேரங்களில் வீட்டிற்கும் வெளியே சென்றால் மாலை கல்லூரி விடும்போது அழைத்து வருவது என எப்போதும் போல் இருந்தான் அவளுக்கு பிடித்த ஸ்வீட் மற்றும் சாக்லேட் வாங்கி செல்வான் சிறுவயது பழக்கம் இன்றும் தொடர்கிறது

ஆனால் நிலாவிற்கு இந்த நெருக்கம் நெருப்பாக இருந்தது. தன் மனதில் இருந்த காதலை மறக்கவும் முடியவில்லை வேறு ஒரு பெண்ணை விரும்பும் அவனிடம் அவளை ஏற்றுக்
கொள்ளக் கேட்க முடியவில்லை.

இந்த நேரத்தில் ராஜேஸ்வரியின் பாட்டிக்கு உடல் நலம் சரி இல்லாமல் போக அவள் நிலைமையை
என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னும் நட்ராஜ் தன் குடும்பத்தில் தங்கள் காதலை பற்றி கூறி இருக்கவில்லை.

தொழில் தொடங்க இருப்பதால் அவனும் பிறகு வீட்டில் பேசுவதாக கூறியதால் அவளும் சரி என்று சொல்லி இருந்தாள் ஆனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள்

இங்கு பாட்டியோ தனக்கு ஏதும் ஆகிவிடும் முன் அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்றும் நினைத்தார் அதனால் நட்ராஜ்யிடம் பேசி விரைவில் திருமண பற்றி முடிவெடுக்க சொன்னார்.















 

T23

Moderator

FB_IMG_1686678915224.jpg


என்னுள் நீ episode 6

நட்ராஜ்க்கு அழைத்து விஷயத்தை கூறிய ராஜேஸ்வரி ஏதாவது செய்யுமாறு சொல்ல சரி என்று மணியிடம் இதைப்பற்றி ஆலோசனை செய்தான். இருக்கும் சூழ்நிலையில் இருவருக்கும் வேறு வழி இல்லாததால் வீட்டில் பேசி எளிமையாக திருமணம் செய்யலாம் என்று முடிவானது.

வீட்டில் மணி இது பற்றி சொல்லும் போது அனைவருக்கும் மிகவும் ஆச்சரியம் அதைப்போல் மணி மற்றும் செல்விக்கு வருத்தம் தன் மகளை நட்ராஜ்க்கு திருமணம் செய்யவில்லை என்பதால். ஆனாலும் தாய்மாமனாக பண்ண வேண்டியதை சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அனைவரும் சென்று பெண் வீட்டில் பேசி இரு வாரங்களில் திருமணம் என்று முடிவானது. அனைத்து வேலைகளும் மணி பொறுப்பில் விடப்பட்டது. பெண்ணிற்கு தேவையான உதவியை செய்ய நிலாவிடம் கூறினர். உடனே ஏற்பாடு செய்யப்பட்டது என்பதால் இரு வீட்டின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தனர்.

அருகில் உள்ள கோவிலில் திருமணம் முடித்து வீட்டில் மற்ற சடங்குகள் அனைத்தும் நட்ராஜ் வீட்டிலும் மறுவீட்டு அழைப்பு மணி வீட்டிலும் என்று முடிவானது. திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு பெண்ணிற்கு தேவையான நகைகள்,புடவை, தாலி என அனைத்தும் வாங்கப்பட்டது. புடவை கூட நிலாவிற்கும், மணப்
பெண்ணிற்கும் ஒன்றுபோல் வாங்கினான் நட்ராஜ்.

இதற்கெல்லாம் அனைவரும் செல்லும் போது கூட நிலா உடல்நலம் சரி இல்லை என்று கூறி வீட்டில் இருந்து விட்டாள், கல்லூரிக்கு சென்றாள் அங்கும் தன் அத்தான் திருமணம் பற்றி கேள்வி கேட்டதால் அங்கும் போக மனமில்லை.

தனிமையில் நட்ராஜ் மீது அவள் கொண்ட காதலுடன் தன்னை தானே சிறைப்படுத்திக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் சிரிக்க முயன்று தோற்றுப் போனாள். பொய்யாக நடிப்பதை விட கொடுமையானது நாம் சந்தோஷமாக இருப்பதைப் போல் சிரிப்பது. இப்போது நிலா அந்த நிமிடங்களை கடந்து வர பழகி கொண்டு இருக்கிறாள்.

நான்கு நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது இன்று வீடு மிகவும் ஆரவாரத்துடன் இருந்தது இன்னும் சிறிது நேரத்தில் திருமணம் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர் நிலா ஒருவளை தவிர என்னதான் நன்றாக இருப்பதை போல் தோன்றினாலும் காதல் கொண்ட மனம் கலங்கியது.

நல்ல முகூர்த்த நேரத்தில் தன் பெற்றோர் மற்றும் தாய்மாமன் தாலி எடுத்துக் கொடுக்க, உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். பால் பழம் விருந்து
சாப்பிடுவது மறுவீட்டு அழைப்பு என அனைத்தும் நல்லமுறையில் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்கு பிறகு இன்றுதான் நிலா கல்லூரி செல்கிறாள் அவள் வராத நாட்களில் எல்லாம் ஒரு மாதிரி மனநிலையில் இருந்தது என்னவோ சிவாதான் அது காதலா இல்லை கோபமா என்று அவனுக்கு தெரியவில்லை.
அதிலும் அவள் தோழிகள் நிலாவிற்கும் நட்ராஜ்க்கும் திருமணம் என்று கூற அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

இறுதியில் அவளைப் பற்றி விசாரிக்க அது பொய் என்று தெரிந்த பின்தான் அமைதியாக இருந்தான் ஆனால் அப்போதே முடிவு எடுத்து இருந்தான் என்ன நடந்தாலும் அவளை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க கூடாது என்று அதனால் வரும் பின் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அவன் அறியவில்லை.

இந்த நாட்களில் மகனின் நடவடிக்கைகள் சரி இல்லாததால் அவன் நண்பர்களிடம் என்ன என்று கேட்ட போது தெரிந்தது அவன் காதல் விஷயம் அதுவும் தன் பழிவாங்க விரும்பும் தன் எதிரியின் மகள் என்ற உடன் தொடங்கியது ராசாவின் நடிப்பு.

தன் மகனை அழைத்து பேசி அனைத்தையும் விசாரித்து விட்டு தன்னை அசிங்கபடுத்தியவர்கள் அவர்கள் என்று அதற்கு ஏற்றாற்போல் ஒரு கதையை கூறிய ராசா தன் மகனின் சந்தோஷத்திற்காக அதை எல்லாம் மறந்து அவளை மணமுடித்து தருவதாக கூற அதை நம்பிய சிவாவிற்கு நிலாவின் மேல் இருந்த கோவம் அளவை கடந்தது.

கல்லூரி வந்ததும் நிலா முதலில் பார்த்தது என்னவோ சிவாவை
தான் அவனும்அவளை பார்த்துக் கொண்டு வந்தவன் அவளை சற்று அதிகமாக மிரட்டினான் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் அதற்கு சம்மதம் சொல்ல வேண்டும் என்று கூறினான்.

ஏற்கனவே சோகமாக இருந்த நிலா இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை. அவளும் பதிலுக்கு கோபத்தில் நீ எல்லாம் ஆம்பளையா ஒரு பொண்ணோட மனசு புரியாது அவளுக்கு என்ன வேண்டும் அவர்களின் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அப்படி எதுவும் தெரியாது மிகவும் திமிர் பிடிச்சவன் இப்படி இருக்கும் போது உன்னை எப்படி நான் கல்யாணம் பண்ணுவேன் என்று கூற சிவா மனது கோபத் தீயில் எரிந்தது.

மேலும் தன் தந்தையின் சொற்கள் காதில் கேட்டுக் கொண்டு இருக்க அவள் குடும்பமே இப்படிதான் என்று அவனுக்கு தோன்றியது. அவர்கள் திமிரை அடக்க வேண்டும் என்று நினைத்தவன்.
அவள் கையை பிடித்து இழுத்து என்னை பார்த்தா டி ஆம்பளையா என்று கேட்ட கூடிய சீக்கிரம் இதற்கு நீ அனுபவிப்ப என்று கூறி விலகி சென்றான்.

சிவாவிற்கு ஆரம்பத்தில் அவள் மேல் காதல் இல்லை என்றாலும் நாட்கள் செல்ல மெதுவாக வந்தது அதற்குள் இருவருக்கும் திருமணம் என்று நண்பர்கள் சொல்ல அவன் காதலை முழுமையாக உணரும் முன்னரே அவன் திமிரும், கோபமும் அதை ஆராய விடவில்லை. அவன் வாழ்க்கையில் சிறுவயது முதலே கேட்டது அனைத்தும் கிடைத்தே பழக்க பட்டுவிட்டதால் இதை ஏற்றுக் கொள்ள மனது விரும்பவில்லை.

நிலா ஏற்கனவே தன் காதல் சிறு முளையிலேயே கருகி இருக்க அதை பற்றிய சோகத்தில் இருந்தவள் அவள் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை அறியவில்லை. அதன் பலன் விரைவில் தெரியவரும் போது நிலா மனநிலை இன்னும் மோசம் ஆகும்.

நாட்கள் சந்தோஷமாக நகர்ந்தது நட்ராஜ் மற்றும் ராஜேஸ்வரிக்கு அவ்வப்போது முத்து வீட்டில் இருந்து வந்து அனைவரும் பார்த்து செல்வது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என வாழ்க்கை இனிமையானது இருவருக்கும்.

ராஜேஸ்வரியின்
பொறுமை மற்றும் வீட்டில் அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பண்பு என அவளை எல்லோருக்கும் மிகவும் பிடித்தது.

நாட்கள் மாதங்கள் ஆகியது நட்ராஜ் மற்றும் மணி இருவரும் தங்கள் தொழிற்சாலையை ஆரம்பித்தனர். மணி தன் கம்பெனிக்கு நிலா என்றும் நட்ராஜ் தன் கம்பெனிக்கு தன் பெயரின் முதல் எழுத்து மற்றும் மனைவி பெயரின் முதல் எழுத்தை சேர்த்து NR என்று ஆரம்பித்தனர்.

நட்ராஜ் நூல் தொழிற்
சாலையும் மணி பட்டுபூச்சி வளர்க்கும் பண்ணை மற்றும் அது தொடர்பான தொழிற்சாலையை ஆரம்பித்தனர்.தொழில் நல்ல முறையில் நடைப்பெற தொடங்கியது ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும் ஓரளவு சிறிய வாய்ப்புகள் இருவருக்கும் வர ஆரம்பித்து இருந்தது.

நட்ராஜ் மற்றும் மணிக்கு ஒரு இடத்தில் இருந்து பெரிய அளவில் ஆர்டர் வந்து இருந்தது இது நல்ல படியாக முடிந்தால் இருவருக்கும் லாபம் வருவது மட்டும் இன்றி தொழிலில் நல்ல முறையில் முன்னேற்றம் அடையவும் வாய்ப்பு என்று நேரம் காலம் பார்க்காமல் உழைத்தனர்.

முன்பு போல் இல்லாமல் நிலா வீட்டில் ஒரளவு ராஜேஸ்வரி உடன் பழக ஆரம்பித்து இருந்தாள். கல்லூரியில் நிலா மற்றும் சிவாவிற்கு மோதல் நடந்து
கொண்டு இருந்தது அதை அவள் அனைவரிடமும் சொல்லாமல் மறைத்தால். நிலா அவன் சொல்வதை கேட்க கூட விரும்பாமல் அவனை அவமானப்
படுத்தினால்.

இதனால் சிவாவிற்கு இன்னும் பழிவெறி மற்றும் கோபம் அதிகரிக்க அவன் தந்தையின் போதனை பல மடங்கு அவனை மிருகமாகியது. ஏதாவது செய்தாவது அவளை அடைய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டான்.

ராஜேஸ்வரி தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் அடுத்த மாதம் வளைகாப்பு போட வேண்டும் என்று முடிவு செய்தனர். இடையில் அவள் பாட்டி உடல்நலம் சரி இல்லாமல் தவறிவிட்ட காரணத்தால் அவளை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாய் கூறிவிட்டான் மணி.

இவர்கள் இங்கு இப்படி இருக்க சிவா எப்படியாவது நிலாவை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டான். நிலாவிற்கு மணி மற்றும் நட்ராஜ் இருவரின் வேலைபழு பற்றி தெரியும்.

அதனால் இப்போது எல்லாம் கல்லூரியில் இருந்து தனியாகவே வர பழகி இருந்தாள் இதை அறிந்தவன் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டான்.

அவள் வரும் வழியில் நின்று அவள் கை பிடித்து வாய் முடி அருகில் இருக்கும் தோப்புக்குள் இழுத்து சென்றான் இதை அந்த வழியாக வந்த நட்ராஜ் தூரத்தில் இருந்து பார்த்து விட யாரே ஒருவருக்கு பிரச்சினை என்று அருகில் செல்ல அங்கு சண்டை போட்டு கொண்டு இருந்தது நிலா மற்றும் சிவா.

நட்ராஜ் மற்றும் சிவாவிற்குமான மோதல் நன்மையில் முடியுமா??
 

T23

Moderator
Episode 7


நட்ராஜ் வருவதை பார்த்து சிவா அதிர்ந்து நின்ற அந்த இடைவெளி நேரத்தில் நட்ராஜ் இடம் சென்று இருந்தாள் நிலா. என்ன நடந்தது என்று விசாரிக்க அழுது கொண்டே அனைத்தையும் கூறினாள். சிறுவயது முதல் அவளுக்கு அதிகம் செல்லம் குடுத்தது நட்ராஜ்தான்.

இது வரை அவளை ஆழவிட்டது இல்லை அப்படி இருக்க இன்று அவள் அழுதது மற்றும் கூறியதை கேட்டு ஆத்திரம் அடைந்த நட்ராஜ் சிவாவை நன்றாக அடித்து விட்டு நிலாவுடன் சென்று விட்டான்.

சிவா சென்று இவ்வளவு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை என்று அவனை காண வந்த நண்பர்கள் அங்கு பார்த்தது அடிபட்டு கிடந்தவனைதான்.

அங்கு இருந்து அவனை தூக்கி சென்று
ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அவன் தந்தையிடம் இதைப்பற்றி கூறினர்.

தன்னிடம் சண்டை மட்டுமே போட்டார்கள் ஆனால் தன் மகனை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அளவிற்கு அடித்து விட்டனர் என்று கோபம் கொண்டவனுக்கு அவர்களை கூடிய
விரைவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற
எண்ணம்தான்.

வீட்டிற்கு வந்த நட்ராஜ் நடந்த அனைத்தையும் வீட்டில் இருந்த அனைவரிடமும் கூற ஓரே கலவரமானது. இதற்கு பின் அவளை கல்லூரிக்கு போக வேண்டாம் என்று சொல்ல நிலாவிற்கு அழுகை வந்தது.

அப்போது நட்ராஜ் எல்லாரையும்
சமாதானம் செய்வதாக நிலாவிடம் கூறியவன் சிறிது நாட்களுக்கு பின் மறுபடியும் அவளை கல்லூரிக்கு அனுப்புவதாக கூறினான்.

வீட்டில் அனைத்தையும் கூறிய நட்ராஜ் ஒரு பையன் என்று கூறினான் தவிர யார் மகன் என்று கூறவில்லை கல்லூரி வாழ்க்கையில் இது சாதாரணம் என நினைத்து மற்றவர்களும் இதை ஆராயவில்லை அவர்கள் செய்த சிறுதவறு மிகப் பெரிய அளவில் தண்டனையை தர காத்து இருக்கிறது.

அவளும் அதுவரை வீட்டில் நல்ல படியாக நாட்களை கடத்தினாள். நிலா வீட்டில் இருந்த நாட்கள் அனைத்தும் திருவிழா போல் இருந்தது.

இது போல் இதற்கு பின் இப்படி ஒரு நாள் வரப்போவது இல்லை என்பதை அனைவரும் அறிந்து வைத்திருப்பவர் போல் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

பத்து நாட்களுக்கு பின் அனைவரிடமும் நட்ராஜ் சமாதானம் பேசி ஒரு வழியாக நிலா இன்று கல்லூரிக்கு சென்றாள். இதை அறிந்த சிவா நண்பர்கள் அவனிடம் கூற விஷயத்தை அறிந்துக் கொண்ட ராசா அவளை கண்காணிக்க ஆட்களை நியமித்தான் இதை அறியாத நிலா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்தாள்.

இதற்கிடையில் ராசா தன் செய்ய வேண்டிய வேலையை ஆரம்பித்து இருந்தான் அவர்கள் தொழிலை முடக்குவதற்காக
பல வழிகளில்
செயல்பட்டான்.

அவர்கள் இருவருக்கும் சிறிய அளவில் ஆர்டர் கொடுத்த அனைவரிடமும் இருந்து அழைப்பு வந்தது.உடனே நூல்கள் வேண்டும் இல்லை ஆர்டர் வேண்டாம் என்று.

ஏற்கனவே பெரிய அளவில் வேற ஆர்டர் வந்து இருப்பதால் என்ன செய்வது என்று தடுமாற அடுத்து அடுத்து பல அடிகள் விழுந்தது.

இதற்கு எல்லாம் காரணம் யார் என்று ஆராய்ச்சி செய்வதற்குள் அடுத்த பிரச்சினை என இருவருக்கும் மிகவும் கொடிய நாட்கள் ஆனது.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு அடுத்த வாரம் வளைகாப்புக்கு தயார் செய்ய அவள் வேண்டாம் என்று கூறியபோதும் வீட்டில் அனைவரும் இது எல்லாம் வாழ்க்கையில் வரும் நல்ல தருணம்.

அதனால் அனைத்தையும் மறந்து குழந்தையை மட்டும் நினைத்து விழாவை நடத்த வேண்டும் என்று கூறியதால் அனைத்தும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.

ராசா வீட்டில் தன் மகனுக்கு ஒரு தந்தையாக எதை எல்லாம் சொல்ல கூடாதோ அவை அனைத்தையும் சொல்லிக் கொடுத்தான். அவன் பேச்சை கேட்டு மல்லிகா மனம் வேதனை அடைந்தது தன் கணவன் ஒரு குடும்பத்தையே அழிக்க முடிவெடுத்து உள்ளான்.

ஆனால் மகன் அது தெரியாமல் அந்த குடும்பத்து பெண்ணின் வாழ்க்கையும் தன் காதல் மனதையும் காயப்படுத்துகிறான் என கடவுளிடம் முறையிட்டு கொண்டிருக்கிறாள்.

ஆனால் ராசா ஓன்றை மட்டும் மறந்துவிட்டான் இதனால் பாதிக்கப்படுவது நிலாவின் குடும்பம் மட்டும் அல்ல தன் மகனின் வாழ்க்கையும் என்று. அதை அறியும் போது விதி தன் அடுத்த விளையாட்டை ஆரம்பித்து இருக்கும்.

இந்த விழாவை பற்றி அறிந்த ராசா அனைவர் முன்னிலையில் அவள் குடும்பத்த அசிங்கப்படுத்த முடிவு செய்தான்.

அதற்காக நிலா மற்றும்
தன் சொந்த மகனின் வாழ்க்கையை பணயம் வைத்தான். அதற்கு ஏற்றாற்போல் நாட்களும் வெகு விரைவில் வந்தது.

வளைகாப்பிற்கு இரு நாட்களுக்கு முன்பு அன்று வழக்கம்போல கல்லூரி முடிந்து நிலா மாலை வேளையில் வீட்டிற்கு நடந்து வரும் வழியில் தீடிரென நன்றாக பெய்ய ஆரம்பித்தது. மழை வரும் என்று தெரியாததால் குடையும் கொண்டு வரவில்லை.

தொடர்ந்து நடக்க முடியாமல் ஒரு இடத்தில் நின்றால் அது ஊருக்கு வரும் வழியில் இருக்கும் வீடு அங்கு யாரும் வசிப்பதில்லை அது அனைவரும் அறிந்தது. மழை மேலும் வலுவடைந்தது இதனால் வெளியே நிற்க முடியாது வீட்டின் உள் பக்கம் நின்றாள் அங்குதான் விதி தன் சதியை செய்தது.

அவளை மறைந்து மறைந்து பின் தொடந்து வந்த சிவாவும் இதுதான் நல்ல சமயம் அவளிடம் பேசி எப்படியாவது தன் காதலை புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம்.

அல்லது அவள் காதலை பெறுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ன ஆனாலும் அவனுக்கு நிலா மட்டும்தான் என நினைத்தான் .

ஆனால் அப்போது அவள் வரும் நேரம் பார்த்து மழை வேறு வந்ததால் அவளை அழைத்து செல்ல நட்ராஜ் வந்தான். அந்த நிமிடம் பார்த்து அவள் உள்ளே சென்றுவிட அவனுக்கு தெரியாமல் போனது.

அதை மறைவில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த சிவாவிற்கு கடுப்பானது இருவருக்கும் நடுவில் அவ்வப்போது நட்ராஜ் வருவது அவனுக்கு பிடிக்கவில்லை

அதனால் அவளிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள செய்ய வேண்டும் என்ற முடிவுடன் அவள் இருந்த வீட்டை அடைந்தான்.

இவ்வளவு விஷயங்கள் நடந்த போதும் சிவா அவளிடம் தவறாக நடக்க நினைக்கவில்லை. எப்படியாவது அவளை கல்யாணத்திற்கு மட்டும் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான் ஆனால் அவன் ஓன்று நினைக்க வேறு நடந்தது.

அவள் இருக்கும் வீட்டை அடைந்தவன் அவளிடம் தன் காதலை கூறினான் மேலும் அவளிடம் நிறைய பேசினான். அவளுக்கு அவனிடம் பேச பிடிக்கவில்லை.

ஆனாலும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை அந்த சமயம் பார்த்துக் வேகமாக காற்று அடிக்க ஆரம்பிக்க அந்த வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் அடைத்துக் கொண்டது.

வீட்டில் வெளிச்சம் கூட இல்லை அவளுக்கு பயமாக இருந்தாலும் அவன் ஒன்றும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்தாள் ஆனால் அந்த நம்பிக்கை அவள் உயிரை கொல்லும் ஆயுதம் ஆனது. சுமார் இரண்டு மணி நேரம் பெய்த மழை ஓய்ந்தது.

இருவரும் வீட்டிற்கு சென்றனர் அவளிடம் கேட்டதற்கு வரும் வழியில் இருக்கும் பழைய வீட்டில் இருந்ததாக கூறினாள். ஆனால் சிவாவும் அவளுடன் இருந்ததை கூறவில்லை. அவனை பற்றி கூறி மீண்டும் சண்டை வருவதை அவள் விரும்பவில்லை.

வீட்டிற்கு வந்த சிவா மிகுந்த சந்தோஷமாக இருந்தான்.
காரணம் கேட்ட தன் நண்பர்களிடம் இன்று நடந்த நிகழ்வை கூறினான். இப்போது எல்லாம் ஓரளவு திருந்தி இருந்தான்.

அதனால் எப்படியும் அவளுக்கு தன்னை பிடிக்கும் என்று கூறி கொண்டு இருந்தான் இவன் பேசுவதை கேட்டுக் கொண்ட ராசா தன் வேலையை ஆரம்பித்தான்.

ஊரில் இருக்கும் அனைவரிடமும்
தன் ஆட்களின் மூலம் சிவாவும் நிலாவும் தனியாக இருந்தது பற்றி தவறாக பேச வைத்து இருந்தான்.
இது ஊரில் பலரின் காதுகளுக்கு சென்றது. அனைவரும் அதைப்
பற்றி ரகசியமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.

இன்றைய வளைகாப்புக்கு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து இருந்தனர். நல்ல படியாக ஆரம்பம் ஆகியது நிலாவை பார்க்கும் போது எல்லாம் தங்களுக்குள் ஏதோ
பேசிக்கொண்டனர்.

திடிரென வாசலில் சத்தம் பலமாக கேட்க என்ன என்று அனைவரும் திரும்பி பார்க்க வாசலில் ராசா தன் மகன் மனைவி மற்றும் சொந்தங்கள் உடன் நிலாவை பெண் கேட்டு வந்திருந்தான்.

ராசா தன் மகனிடம் நிலா உனக்கு வேண்டும் என்றால் நான் கேள்வி கேட்கும் போது ஆமாம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்து வந்து இருக்க தன் தந்தை நிலாவை சபையில் அசிங்கபடுத்த போவது தெரியாமல் அவனும் வந்து இருந்தான்.

ராசா அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தான் தன் மகனும் நிலாவும் ஒருவரை ஒருவர் விரும்புவதாகவும் அதனால் திருமணத்திற்கு பெண் கேட்டு வந்ததாகவும் கூறினான். இதை கேட்டு அதிர்ச்சி மற்றும் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி மற்றும் முத்து இருவரும் ராசாவிடம் சண்டையிட்டனர்.

ஆனால் அவன் தன் மகனிடம் நீங்கள் இருவரும் காதலிப்பது உண்மைதான என்று கேட்க அவனும் அவள் வேண்டும் என்ற ஆசையில் ஆமாம் என்று கூறினான். சபையில் இவ்வாறு சொன்னால் வேறு யாரும் அவளை திருமணம் செய்ய மாட்டார்கள் என்று அவ்வாறு சொன்னான்.

அப்போது அங்கு இருந்த அனைவரும் ஆளுக்கு ஒன்றாக நிலாவை பற்றி பேசினர். இது கேட்டு குடும்பத்தினர் கோபம் அடைந்தனர். அப்போது நட்ராஜ் நடந்ததை கூற அதை கேட்டு சிரித்த ராசா என் மகனும் நிலாவும் இருவரும் விரும்பாமல் தான் மழைக்கு ஓரே வீட்டில் கதவு அடைத்து விட்டு இருந்தார்களா

அங்கு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும் என்று கேட்க குடும்பத்தினர்க்கு மட்டும் இது புது விஷயம் மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அதைப் பற்றி அதிகமாக பேசினர்.

தன் தந்தை இப்படி நிலாவை பற்றி பேசுவதைக் கேட்டு கோவப்பட்டாலும் அனைவர் முன்னிலையில் தன் தந்தையை அவமானபடுத்த விரும்பவில்லை.

மேலும் அவள் பெயர் தன்னுடன் சேர்ந்து வருகிறது என்பதால் அவனும் அவர் பேசியதற்கு எல்லாம் ஆமாம் என்று கூறினான்.

எப்படியும் திருமணம் முடிந்தபின் சமாதானம் செய்யலாம் என்று நினைத்தான் ஆனால் அந்த நிமிடம் அவன் வாழ்நாளில் வராமல் போனது.

தன்னை பற்றி மற்றவர்கள் முன் ராசா தவறாக பேசினாலும் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாதவள் சிவா கூறிய ஒரு வார்த்தையில் உடைந்து போனாள். அவள் கண்ணிரோடு பார்த்த ஒற்றை பார்வையில் அவன் காதல் கொண்ட மனம் அடிப்பட்டது.

அனைவரின் முன்னிலையில் தங்கள் வீட்டு பெண் அசிங்கப்பட்டு அழுவது பிடிக்கவில்லை என்றாலும் சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தனர்.

ஊர்காரர்கள் முன்னிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் அங்கு இருக்கும் பெரியவர்கள் அனைவரும் இருவருக்கும் திருமணம் செய்து என முடிவு செய்தனர்.

வீட்டில் ஒருவருக்கும் விருப்பம் இல்லை ஆனால் காலம் கடந்துவிட்டது இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

அனைவரின் முன்னிலையில் தான் காதலித்த பெண்ணை அவள் விருப்பம் இல்லாமலே கையை பிடித்து மோதிரம் போட்டுவிட்டான். அவனுக்கு தன் காதல் கைகூடிய சந்தோஷம் அதே நேரம் கண்களால் மன்னிப்பு வேண்டினான்.

அவன் வாய்மொழி வார்த்தைகளே அவளுக்கு புரியாத போது அவன்
கண் பேசும் காதல் வார்த்தைகளை மட்டும் பேதை அவள் அறிவாளா என்ன.

குழந்தை பிறந்த பின் திருமணம் என்று முடிவானது வந்திருந்த அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக திரும்பி சென்றனர். வீட்டிற்கு வந்த சிவாவிற்கு மனது கஷ்டமாக இருந்தது.

என்ன இருந்தாலும் தான் விரும்பிய பெண்ணை இப்படி பலர் முன்னிலையில் தன் தந்தை தவறாக பேசியது. எனவே திருமணம் முடியும் வரை அவரிடம் பேசுவது இல்லை என இருந்தான்.

அழகாக ஆரம்பித்த நாள் இவ்வளவு மோசமாக போகும் என்று யாருக்கும் எதிர் பார்க்கவில்லை. ஒரு வழியாக அன்றைய பொழுது ஓய்ந்தது

ஓவ்வொருவருக்கும் வெவ்வேறு எண்ணங்கள் அதனால் அனைவரும் தூக்கம் இன்றி தவித்தனர். ஆனால் யாருக்கும் தங்கள் வீட்டு பெண்ணின் மீது கோபம் இல்லை.

நிலாவிற்கு வாழ்க்கையே சூனியமான உணர்வு தன் உணர்வுகளை கொன்று விட்டு எப்படி அவனோடு வாழ்வது என்று அதற்கு சாவது மேல் என்று நினைத்தாள். இங்கு நிலா நிலைமை இப்படி இருக்க ராசா தன் வேலையை
ஆரம்பித்து இருந்தான்.

ஒவ்வொரு நாளும் புது பிரச்சினை தொழிற்சாலையில் வந்தது.என்ன செய்வது என்று தெரியாது இருவரும் தவித்தனர்.

வாடிக்கையாளர்கள் பொருளை உடனே தருமாறு கேட்டனர். பணி புரிபவர்கள் சரியாக வேலைக்கு வராமல் இருந்தனர்.

ஆர்டர் கொடுத்த இடத்தில் பொருட்களை சரிவர கொடுக்க இயலவில்லை இதனால் பெரும் பின்னடைவு இருவருக்கும். ஏற்கனவே தொழிற்சாலை ஆரம்பிக்க வங்கியில் கடன் வாங்கி இருந்ததால் வட்டி கட்ட இயலாது போனது மேலும் தொழில் சரியாக இல்லாததால் வெளியே பணம் வாங்க இயலவில்லை.

தொடர்ந்து பல விஷயங்கள் நடப்பதால் அனைவரும் கோயிலுக்கு செல்வது என முடிவு செய்தனர். நிலா உடல்நிலை சரி இல்லை என்று கூறியதால் மற்ற அனைவரும் செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் திரும்பி வரும் நேரம் நிலாவின் நிலை
என்ன என்று யாரும் அறியவில்லை.

அனைவரும் தங்கள் குலதெய்வம்
கோவிலுக்கு சென்றனர்.

நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும்
என்றும், அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்ந்து நல்ல முறையில் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நிலா வாழ்க்கை நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று வேண்டினர்.


அனைவரின் வேண்டுதல் நிறைவேறியதா???
 
Last edited:

T23

Moderator
FB_IMG_1686678915224.jpgEpisode 8


இங்கு நிலா தன் குடும்பத்தில் நடந்த அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் காரணம் அவள்தான் என்றும் அவளால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் மேலும் அன்று அனைவர் முன்னிலையில் தன்னை எப்படி எல்லாம் அசிங்கபடுத்தினார்கள் என்று நினைத்து மருகி கொண்டு இருந்தவள் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்தாள் இன்று இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதை செயல்படுத்தினால்.

என்னை மன்னித்து விடுங்கள் என்று ஒற்றை கடிதம் எழுதி வைத்துவிட்டு அரளி விதையை குடித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். இரவு நேரம் அனைவரும் வீட்டிற்கு வரும் போது வெளிச்சம் எதுவும் இல்லாமல் இருக்க நிலாவை திட்டிக் கொண்டு வந்த செல்வி பார்த்தது என்னவோ வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக
இருந்த தன் மகளைதான்.

அவளை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். கடைசி வரை தன் மனதில் இருந்த காதலையும் சரி வலியையும் சரி யாரிடமும் சொல்லவில்லை. அவள் மரணம் அனைத்தையும் சரி செய்யும் என்று எண்ணினால் ஆனால் அதுவே வரும் காலத்தில் தங்கள் வீட்டின் வாரிசை கஷ்டபடுத்தும் என்று அறியாமல் போனாள்.

ஏற்கனவே தந்தையின் மீது கோபத்தில் இருந்த சிவா விஷயம் தெரிந்து துடிதுடித்தான் தன் செய்த
செயலால்தான் நிலா இப்படி செய்தாள் என அறிந்து அழுதான் கடைசியாக அவனை பார்த்த பார்வை இன்றும் அவன் மனதில் இருக்கிறது. வாழ்க்கையை தன் இஷ்டம் ரசித்து வாழ்ந்தவன் ஒற்றை நொடியில் அதை வெறுத்துவிட்டான். இனி அவள் இல்லாமல் எப்படி வாழ்வது.

ராசா தன் நண்பர்களுடன்
தென்னந்தோப்பில் சந்தோஷமாக குடித்து கொண்டு இருந்தான். ஆனால் அவனுக்கு ஓன்று மட்டும்
தெரியவில்லை அவன் மகிழ்ச்சிக்கான ஆயுள் மிகவும் குறைவு என்று.

அப்போது அங்கு வந்த சிவா நண்பன் கூறிய செய்தியில் ஒரு நிமிடம் உலகமே இருண்ட உணர்வு தன் மகன் இந்த நிமிடம் உயிருடன் இல்லை என்பதை அறிந்தபோது.

ஏற்கனவே அவன் நிச்சயம் முடிந்ததில் இருந்து சரியாக பேசுவது இல்லை ஆனாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுது அறிந்தான்.

சிவா தன்னை யாரும் காப்பாற்றிட கூடாது என்பதற்காக அரளி
விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்து இருந்தான். ராசா வீட்டிற்கு சென்ற போது அங்கு கண்டது மகனின் உடலை மடியில் போட்டு கதறி அழும் அவன் மனைவியைதான்.

பிடித்த வாழ்க்கையை வாழ முடியாமல் நிலாவும்,
பிடித்தவளுடன் வாழ முடியாமல் சிவாவும் மரணத்தை எய்தினர்.
இருவருக்கும் இறுதி சடங்கு முடிந்தது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் இருந்தனர் நிலா வீட்டில்.

இங்கு ராசாவிற்கு பழிவெறி தீரவில்லை தன் மகன் இறப்பிற்கு காரணம் அவர்கள் என்று எண்ணினான். தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு அவர்களை எப்படி பழிவாங்குவது என்று ஆலோசனை செய்தான்.

நாட்கள் செல்ல மணி மற்றும் நட்ராஜ்க்கு தங்கள் சொந்த ஊரில் வாழ விருப்பம் இல்லை எங்கு சென்றாலும் நிலாவின் ஞாபகம் வருவதால் சென்னை செல்லலாம் என்று முடிவு செய்தனர் ஏற்கனவே தொழிற்சாலையிலும் பிரச்சினை இருப்பதால் அனைத்தையும் சரி செய்து விட்டு செல்ல ஆயத்தம் செய்தனர்.

ஒரு வார இடைவெளியில் அனைத்தையும் செய்தவர்கள் தங்கள் நிலத்தை குத்தகைக்கு விட்டு தொழிற்சாலைகளை பராமரிக்க மட்டும் ஏற்பாடு ஆட்களை செய்தனர். மேலும் ராஜேஸ்வரிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால் அனைத்தையும் உடனே செய்தனர்.

ராசா இவர்கள் அனைவரும் ஊருக்கு செல்வதை அறிந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தான். அவர்கள் எப்போது எப்படி செல்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டான்.

குருமூர்த்தி மற்றும் முத்து குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு வாடகை வண்டியில் செல்ல முடிவு செய்தனர்.

மனதில் பாரத்தோடு பிறந்த வளர்ந்த மண்ணை விட்டு அனைவரிடமும் கூறிவிட்டு விடைபெற்றனர். இரவு நேரத்தில் சாப்பிடுவதற்காக ஒரு உணவு கடையில் நிறுத்தினர்.

இவர்கள் கிளம்பியதில் இருந்து அவர்களை ராசாவின் ஆட்கள் இருவர் பின்தொடர்ந்து வந்ததை அறியவில்லை. அனைவரும் சாப்பிட சென்ற நேரத்தில் வந்தவர்கள் வண்டியின் பிரேக் ஒயரை வெட்டிவிட்டு சென்றனர்.

சாப்பிட்டுவிட்டு வந்து வண்டியை எடுத்த சிறிது நேரத்தில் மதுரை டூ சென்னை சாலையில் செல்லும் போது சரியாக பிரேக் பிடிக்கவில்லை என்பதை டிரைவர் தெரிந்துக் கொண்டு அவர்களிடம் கூறினார்.

ஆனால் காலம் கடந்து விட்டது எதிரில் வண்டி வருவது அறிந்து நட்ராஜ் தன் மனைவியின் கையில் ஒரு பையை மட்டும் கொடுத்து விட்டு கதவை திறந்து வெளியே தள்ளி விட்டான். அவர்கள் சென்ற வண்டி எதிரில் வந்த வண்டியில் மோத அந்த இடத்திலேயை வண்டி சிதைந்தது.

கீழே விழுந்த ராஜேஸ்வரிக்கு கையில் இருந்த பையுடன் விழுந்ததால் வயிற்றில் அதிகம் அடியில்லை ஆனால் பிரசவவலி வந்தது ராசாவின் ஆட்கள் இதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு சென்றனர்.

அதே நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரிரு வண்டியில் வந்தவர்கள் உதவி செய்தனர் அப்படி இருந்தும் ஒருவரையும் காப்பாற்ற இயலவில்லை. அந்த நேரம் ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஒருவர் அவருக்கு உதவி செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு ராஜேஸ்வரி ஒரு அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தாள்.

அதன்பின் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றாள் அங்கு வெளியே இருந்தவரிடம் குழந்தையை கொடுத்தனர் பார்த்த அவருக்கு அதை விட்டு செல்ல மனமில்லை அதனால் தன்னோடு எடுத்துக்கொண்டு போக விரும்பினார்.

ஆனால் தாயையும் குழந்தையையும் பிறக்க மனமில்லை. அதனால் ராஜேஸ்வரி மயக்கம் தெளியும் வரை இருந்து இருவரையும் உடன் அழைத்து செல்ல விரும்பினார்.

உடலாலும் மனதாலும் சோர்ந்து இருந்த ராஜேஸ்வரிக்கு ஐந்து மணி நேரத்திற்கு பின்னர் தான் மயக்கம் தெளிந்தது. அவரை பார்த்து நடந்ததை அறிந்தவர் தன்னை பற்றி கூறினார்.

தன்னுடைய பெயர் நாகராஜன் என்றும் சென்னையில் தொழில் செய்வதாகவும் கூறிய அவர் தனக்கு மனைவி பிள்ளைகள் இல்லை ஆனால் இந்த குழந்தையை மிகவும் பிடித்து இருக்கிறது எனவே தன்னுடன் வரும்படி இருவரையும் அழைத்தார்.

ராஜேஸ்வரி தனக்கும் யாரும் இல்லாததால் குழந்தை உடன் சென்னை செல்வதாக முடிவு செய்தனர். இரு நாட்களுக்கு பிறகு மூவரும் சென்னை சென்றனர்.
அவனுக்கு ருத்ரன் என்று பெயரிட்டனர்.

சிறுவயதில் இருந்தே பெயற்கேற்ற மாதிரி வளர தொடங்கினான். மற்றவர்களிடம் இருந்து சற்றே வித்தியாசமாக இருந்தான்.

தன்னுடைய மூன்று வயது வரை தாயின் அரவனைப்பில் இருந்தான் தீடிரென ஒரு நாள் உடல் நிலை சரியில்லை என்று படுத்த ராஜேஸ்வரி அதன்பின் எழவே இல்லை.

அதற்கு பின் ருத்ரனுக்கு அனைத்துமாக இருந்து கற்றுக்கொடுத்தது நாகராஜன்தான் சிறுவயது முதல் தன் குடும்ப கதையை கேட்டு வளர்ந்தவன் தன்னை அனைத்திலும் பட்டை தீட்டிக் கொண்டான்.

ருத்ரனின் சிறுவயதிலேயே நாகராஜன் தன் வாரிசாக ருத்ரனை நியமித்து இருந்தார். அதை அறிந்த அவருடன் இருந்த சில குள்ள நரிகள் அவரை வீழ்த்த எண்ணினர்.

பத்து வயதில் நாகராஜனை அவரின் எதிரிகள் சதியால் கொன்று அவருடைய தொழில்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டனர் இதை எல்லாம் இறக்கும் தருவாயில் நாகராஜன் மூலம் அறிந்தவன் ருத்ரனாக அவதாரம் எடுத்தான்.

இனி ருத்ராட்டம் ஆரம்பம்.....
 

T23

Moderator
என்னுள் நீ episode 9

பதினைந்து வருடங்களுக்கு பிறகு


இன்று ஏர்போர்ட் மிகவும் பரபரப்பாகப் காணப்பட்டது அதற்கு காரணம் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்று பல தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து சாதனை படைத்து தனது இருபத்தி ஓன்றாவது வயதில் தன் தந்தையின் பிசினஸ் கையில் எடுத்ததில் இருந்து இன்று வரை
பிசினஸ் டைகுன் மற்றும் வளர்ந்து வரும் சிறந்த தொழில் அதிபர் என பல அவார்டுகளையும் இந்த ஐந்து வருடத்தில் பெற்று இருக்கும் இவன் R2 கம்பெனியின் சிஇஓ ராகேஷ்.

இந்த கம்பெனி அமெரிக்காவில் மட்டும் பிரபலமானது அல்லாமல்
உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களை செய்யும் R2 கம்பெனி பல நாடுகளில் அங்கு இருக்கும் அந்த
நாட்டு கம்பெனிகளுடன் இணைந்து மேஜர் ஷேர்கோல்டர் ஆக செயல்படும் அது போல்தான் இங்கும் இருக்கிறது.

ஆனால் இந்த முறை ஒரு புதிய தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி செய்து அதை உலகிற்கு அறிமுகப்படுத்த இருக்கிறது R2 அதற்கான சிறந்த இடம் இந்தியா என முடிவு செய்து இங்கு பணிகள் ஆரம்பித்து
அதன் மூலம் தனது சாம்ராஜ்யத்தை தனியாக தொடங்க இருக்கிறது.

அதற்காக வருகை தந்து இருக்கும் கம்பெனியின் எம். டி. மிஸ்டர் S.ராகேஷ் அவர்களை வரவேற்கிறோம் என்ற சின்ன போர்டு அங்கு இருந்த அனைத்து பகுதிகளுக்கும் காணப்பட்டது.

இது அனைத்தும் அவர்களுடன் இணைந்து தொழில் செய்யும் மற்ற கம்பெனியில் இருந்து வைக்கப்பட்டது அதுபோக அனைத்து கம்பெனியில் இருந்தும் அவனை வரவேற்க ஒருவரை அனுப்பி இருந்தனர்.

மேலும் இந்த பரபரப்பிற்கு
காரணம் அவன் முகம் இதுவரை எந்த மீடியாவிலும் வரவில்லை. அவன் படித்த பள்ளி மற்றும்
கல்லூரிகளில் எப்போதும் தனக்கு பின்னால் இருக்கும் தன் தந்தையின் அடையாளங்களை காட்டியது இல்லை.

அதனால் அவன் உடன் படித்தவர்களுக்கு கூட அவனை பற்றிய உண்மை முழுதாக தெரியாது. அவன் எண்ணம் தனக்கான இடம், மற்றும் அடையாளம் அனைத்தும் தன் திறமையினால் உழைப்பால் மட்டும் வர வேண்டும் அது மற்றவர்களால் வர கூடாது என்று கூறுவான்.

அதனால் பல கம்பெனிகளில் அவன் பொறுப்பில் இருந்தாலும் அனைத்தையும் தன் தந்தையின் மூலமாக மட்டுமே செய்தான. தனக்கான இடம் ஏற்கனவே இருப்பதால் அதை அடைய பல வருடங்கள் விடாமுயற்சி செய்து இன்றைய நாளை உருவாக்கி இருக்கிறான்.

இதற்காக தனது வாழ்வில் பல தடைகளை மட்டும் இல்லாமல் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து கடல் தாண்டி கடந்து வந்து தனக்கான இடத்தை அடைய மற்றும் அவனுடைய அடையாளத்தை நிருபிக்க அவன் வருகையை அவனே அறிவித்து இருந்தான்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறான். 25 வயதில் ஆறடிக்கும் மேல்
மாநிறத்தில் இருக்கும் ஆண்மகன், மேலும் அவன் அருகில் சற்று பின்னால் அவனை போல ஆறடியில் தோற்றம் கொண்ட அவன் பி.ஏ ஒருவன் என இருவரும் வந்தனர்.

இருவருக்குமிடையே எந்த ஒரு வித்தியாசமும் பெரிதாக இல்லை. பின் வந்தவன் பேக் டிராலி என அனைத்தையும் தள்ளிக் கொண்டு வர ராகேஷ் மீடியா முன் நின்று அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்தான்.

ஒரு சில கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு மற்றவற்றை நாளை மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் இது பற்றி விரிவாக பேசலாம் என கூறி விட்டு அங்கு இருந்து புறப்பட்டுச் சென்று இருந்தனர்.

இனி இருவருக்கும் சில வருடம் வசிப்பிடம் இந்தியா மட்டும் தான் அதனால் பல நாட்களுக்கு பிறகு களைப்பு தீர உறங்க முடிவு செய்தனர். சொந்த மண்ணில் ஒரு நிம்மதியான தூக்கம் அதுவும் பல வருடங்களுக்கு பிறகு.

இவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்லும் முன் அவனை பற்றிய விவரங்கள் அனைத்தையும் டிவி மற்றும் வலைதளங்களில் வைரல் ஆனது. வந்த ஒரே நாளில்
சென்னையில் பல பெண்களின் தூக்கத்தை கெடுக்கும் கனவு கண்ணன் ஆனான்.

அவன் காலையில் எழுவது முதல் இரவு உறங்கும் வரை அவனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என அனைத்தையும் டிரோல் செய்ய ஆரம்பித்தனர் நம் இளைய தலைமுறை இணையவாசிகள்.

ஆனால் இது எதையும் அறியாத இரு ஆண் மகன்களும் பயணம் செய்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர். இங்கு நிஹாரிகாவின் தாயார் அவளை எழுப்பிக் கொண்டு இருந்தார்.

நிஹா இப்போ மட்டும் நீ எழுந்து வரலை அப்போ இருக்கு என்று சத்தம் போட்டு கொண்டு இருக்க அவளோ நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று அவள் கனவில் வந்த அந்த முகம் தெரியா ஒருவனுடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள்.

அவனும் இவள் உதடுகள் பேசும் அழகை மட்டும் அல்லாமல் கண்கள் பேசும் அழகையும் ரசித்துக் கொண்டு இருந்தான். கடந்த இரு வருடங்களாக அவனை பார்க்கிறாள்.

ஆரம்பத்தில் இவள் கனவில் அவன் வரும் போது எல்லாம் பயந்தவள் அடிக்கடி அவன் மட்டுமே வர ஒருவாறு அவனோடு பேச ஆரம்பித்து இருந்தாள் ஆனால் இன்று வரை அவன் முகத்தை கண்டதும் இல்லை அவன் இவளோடு பேசியதும் இல்லை.

இருந்தும் அவ்வப்போது கனவில் வரும் போது அவனோடு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறுவாள். அவள் மணம் விட்டு பேசும் ஆண்மகன் அவன். இதோ இன்று விடியும் போது இப்போது தான் வந்தான் அதற்குள் தாயின் சத்தம் கேட்டு அவனிடம் கூறி விட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள்.

நிஹாரிகா 22 வயதில் இருக்கும் பிரம்மன் வடித்த சிலை அவளை மட்டும் பிரம்மன் பார்த்துக் பார்த்துக் செதுக்கி இருந்தார் என்று கடந்து போகும் போது பார்க்கும் அனைவருக்கும் தோன்றும். பெயற்கேற்ற மாதிரி அந்த வீண்மீன் கூட்டங்களைப் போல் எப்பொழுதும் மற்றவர்கள் உடன் இருப்பது இவள் சிறப்பு.

பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு NR என்ற எம்.என்.சி கம்பெனியில் பணி புரிகிறாள் கடந்த ஆறு மாதங்களாக அவளுக்கு பல திறமைகள் உண்டு எதையும் உடனடியாக கற்றுக் கொள்வாள் அதனால் அந்த கம்பெனியில் இருக்கும் மிக கஷ்டமான பிராஜெக்ட் ஒன்றில் இருந்தாள்.

பேச பழக மிகவும் அன்பான பெண் அவளுக்கு மிகவும் இனிமையான குரல் வளம் அவள் பேச்சைக் கேட்க ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆபிசில் பலருக்கு நிஹா என்று சொன்னால் அவ்வளவு இஷ்டம் இல்லை என்று சொல்லாமல் கேட்ட அனைவருக்கும் உதவி செய்பவள்.

குளித்து முடித்து தனது நிறத்திற்கு ஏற்றவாறு உடை உடுத்தி ஆபிஸ் செல்வதற்கு தயாராகி வந்தாள். என்றைக்கும் விட இன்றைக்கு மிக அழகாக தெரிந்தாள் அதனால் எப்போழுதும் போல் அவள் அன்னை திட்ட அவளோ அதை அறியாமல் ஒரு வித மோகத்தில் இருந்தாள்.

அவள் அன்னை மற்றும் தந்தைக்கு ஏனோ அவளை பிடிப்பது இல்லை காரணம் அவர்களை போல் அவள் இல்லை என்பதால். தங்கள் மகன் அவர்கள் பேச்சை கேட்டு படித்து வெளிநாடு சென்றது போல் இவள் அவர்கள் சொல்வதை கேட்டு எதையுமே செய்யவில்லை என்ற கோபம்.

நிஹா தன் அண்ணனை போல இல்லை அவளுக்கு பிடித்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று விரும்புவாள் அதனால் தனக்கு பிடித்த பலவற்றையும் கற்றுக்
கொண்டாள் பிறமொழிகள் பயின்றாள். ஆண்களுக்கு நிகராக தன்னை தயார்படுத்தி கொண்டாள்

பள்ளியில் படிக்கும் போது
கூட பல்வேறு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றாள். தனக்கான ஒரு பெயரை விளையாட்டு துறையில் பெற்றிருந்தால் அவள் களத்தில் இருந்தாள் போதும்.

வெற்றி நிச்சயம் என்ற
ஒரு எண்ணத்தை சுற்றி இருக்கும் அனைவர் மனதிலும் தன் திறமையினால் உருவாக்கி இருந்தாள்.

வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை விடாமல் போராடுவாள். ஆனால் இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் ஏனோ அவள் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் போனதுதான் கொடுமை.

ஆனாலும் அவர்கள் பேச்சை மீறி பல தடவை சென்றாள் அதனால் உருவான மோதல் அவளுக்கு பிடித்த அனைத்திலும் இன்றும் தொடர்கிறது. வெளியில் மற்ற அனைவருக்கும் பிடித்த அவளை அவர்களுக்கு
பிடிக்கவில்லை

இன்றைய பொழுது மிகவும் அழகான விடிந்தது அவளுக்கு அதற்கு காரணம் அவனுடன் கனவில் பேசியது அதனால் எப்போதும் அன்னை திட்டும் போது வருந்துபவள் இன்று மிகவும் ஆனந்தமாக இருக்கிறாள்.

தனக்கு பிடித்த ஸ்கூட்டில் ஆபிஸ் கிளம்பி சென்றாள். ஏனோ ஒரு புதிய உற்சாகம் அவளுக்குள் அதே சந்தோஷத்துடன் வந்த அவளுக்கு இன்று ஆபிஸ் மிகவும் வித்தியாசமாக பரபரப்பாகப் இருப்பது போல் காணப்பட்டது .

அதற்கு காரணம் என்ன என்று கேட்ட போது புதிய பிராஜெக்ட் ஒன்றை ஓப்பந்தம் செய்வதற்காக இன்னும் இரு தினங்களில் ராகேஷ் இந்த ஆபிஸுக்கு வருகை தருவதாக அவளுக்கு அருகில் இருக்கும் பிரியா கூற கேட்டு கொண்டு இருந்தாள்.

மேலும் பலர் அதற்காக இந்த கம்பெனியில் இருந்து அந்த பிராஜெக்ட்க்கு வேலை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தனர். மேலும் பிரியா ராகேஷ் மற்றும் அவன் பி.ஏ இருவரையும் டிவியில் பார்த்ததை பற்றி ரசித்து பேச ஏனோ தெரியாது பிரியா மேல் கோபம் வந்தது நிஹாவுக்கு.

மேலும் இந்த பிராஜெக்ட் தங்கள் டீமிற்க்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் அதனால் தினமும் வரும் போது எல்லாம் அவர்களை பார்த்து சைட் அடிக்கலாம் என்று கூறினாள். இது கேட்டு இன்னும் கடுப்பு ஆனது என்னவோ நிஹாதான்.

ஏனோ என்றும் இல்லாத ஒரு ஏக்கம் அவன் அருகில் அவள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தன் எண்ணம் போக்கை கண்டு அவளுக்கும் அதிர்ச்சி ஆனது அவன் யார் என்று இப்போதுவரை தெரியாது.


சிறிது நேரத்திற்கு முன்தான் அவனை பற்றி கேட்டு இருக்கிறாள் அப்படி இருந்தும் அவன் மீது வரும் நினைப்பு மட்டும் பல நாட்களாக இருப்பது போல் ஒரு தோற்றம்.

ஆனால் இங்கு வீட்டில் அவள் எண்ணத்திற்கு சொந்தகாரன் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். உறக்கம் கலைந்து எழுந்து தன் கனவு தேவதையின் ஏக்கம் தீர்ப்பானா???
 
Status
Not open for further replies.
Top