என்னுள் நீ episode 2
இவள் நிஹாரிகா 25 வயது அழகி, நீண்ட கார் கூந்தல், மையல் கொள்ளும் விழிகள், வண்டு வந்து தேன் உண்ண ஆசைப்படும் உதடுகள், நீண்ட கைகள் அதில் நேர்த்தியாக வெட்டப்பட்ட நகங்கள் மென்மையான கன்னங்கள், கோவப்பட்டால் சிவக்கும் மூக்கு, போதை வரச் செய்யும் முன்னழகு, மெல்லிய இடை, செதுக்கப்பட்ட சிலை என்று இவளை சொல்லலாம். நிஹாரிகா பெயற்கேற்ற மாதிரி அந்த வீண்மீன் கூட்டங்களைப் போல் எப்பொழுதும் மற்றவர்களுடன் கூட்டமாக இருப்பது இவள் சிறப்பு. அந்த விண்னை விட்டு மண்னைத் தொடும் முதல் மழைதுளி போல் உள்ளத்தால் தூய்மையானவள், இயற்கையை ரசிப்பவள், தன்னை சுற்றி இருப்பவர்களை நேசிப்பவள், விளையாட்டுத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவள், பல சாதனைகளுக்கு சொந்தகாரி, தோல்வி அடைந்து விடுவாள் என்று மற்றவர்கள் எண்ணும் போது கூட கடைசி நொடியில் வெற்றியை தன் பக்கம் ஈட்டுபவள் அதற்காக போராடுபவள். பல மொழிகள் பேசும் திறன் உடையவள், இனிமையான குரல் மூலம் பலரை தன் பேச்சால் கவர்பவள். அனைவரும் விரும்பும் பெண், மிகவும் அரிதாக பிறக்கும் போதே ஐந்து அதிஷ்ட திசைகளைக் கொண்டு பிறந்தவள். ஆனாலும் ஏனோ பெற்றோருக்கு பிடிக்காத பிள்ளை. இன்பா அரசு அதிகாரி- இனியா குடும்பத் தலைவி இவர்களின் இரண்டாவது புதல்விதான் நம் கதையின் நாயகி. முதலாவது கரண் எம்.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படித்து முடித்தவுடன் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி இன்று யுகேவில் பல இலட்சம் சம்பளம் வாங்கும் பிள்ளை இவளை விட மூன்று வயது மூத்தவன். நிஹாரிகா பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு பல்வேறு இடங்களில் பல துறைகளில் வேலை செய்தவள். எதையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் உடையவள், மற்றவர்களால் இவளை எளிதில் புரிந்துக்கொள்ள இயலாது மிகவும் தனிதிறன் கொண்டவள். கொடுப்பதையே திருப்பிக் கொடுப்பவள் அது அன்பாக இருந்தாலும் சரி இல்லை வம்பாக இருந்தாலும் சரி. இத்தனை ஆண்டுகள் மற்றவர்களோடு இருந்து தன் வாழ்க்கையை அவர்களுக்காக வாழ்ந்தவள், தனக்கான வாழ்வின் சந்தோஷங்களை தொலைத்து விட்டு சூழ்நிலை கைதியாக கடல் தாண்டி வந்தவள் இன்று ஏனோ அந்த பெளர்ணமி இரவின் ஏகாந்த பொழுதில் தான் ரசிக்கும் அழகிய கடல் அலைகளின் நடுவில் நின்று அந்த நிலவிடம் உரையாடிவிட்டு தன் வாழ்வை முடித்துக் கொள்ள காத்திருக்கிறாள். காரணம் இவள் மட்டும் அறிவாள்...