ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் -‌ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
ஹாய் நண்பர்களே...

இங்கு உயிரிலே சடுகுடு ஆடினாய் கதை பதிவிடப்படும்...
 

T22

Well-known member
Wonderland writer
Pooja-Hegde-1.jpeg

அத்தியாயம் 1

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது ..அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டு இருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்.யாராவது அந்த அறையில் இருக்கிறார்களா என்று தனது கண்களை நாலா பக்கமும் திருப்பிப் பார்த்தாள்.. ஆனால் அவளை தவிர அங்கு வேறு யாரும் இருப்பதைப் போல தோன்றவில்லை அவளுக்கு ..என்ன செய்யலாம் என்ற யோசனை ஒரு பக்கம் இருக்க மற்றைய பக்கம் அவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது ..



யோசிக்கக் கூட முடியாத நிலை என்று தான் சொல்ல வேண்டும். ‌சரியாக சாப்பிட்டு எத்தனை நாள் என்று அவளிடம் கேட்டால் அவளுக்கு அது தெரியாது..



இப்போது இங்கிருந்து தப்பிச் செல்வதே அவளது முதல் வேலை என உறுதியாக மனதில் நினைத்தவள் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்பட்டு இருந்த தனது கைகளை அசைத்துப் பார்த்தாள். அவளது நல்ல நேரமோ இல்லை அவளை இருக்கை உடன் சேர்த்து கட்டியவனின் கெட்ட நேரமோ என்னவோ கை லேசாக அசைந்தது ..




அதனை உணர்ந்து திகைத்தவளோ மேலும் மேலும் தனது கைகளை அசைத்தாள் ..சிறிது நேரத்தில் அவளது விடா முயற்சியின் பலனாக கயிறு தளர்ந்து அவளது கை வெளியே வர இடம் கொடுத்தது.. முதலில் வலது கையை மட்டுமே வெளியே எடுத்து அதன் மூலம் இடது கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை கயிற்றை மேலும் தளர்த்தி அந்த கையையும் வெளியே எடுத்தாள்..



கயிறு கட்டப்பட்டு இருந்த கைகள் இரண்டும் வலித்தன. அதனை பார்த்துக் கொண்டு இருந்தால் தப்பிக்க முடியாது என உணர்ந்தவள். வலியை மறைத்துக் கொண்டு கைகளால் கால்களில் கட்டப்பட்டு இருந்த கயிற்றையும் அகற்றினாள்.


வலித்த கால்களையும் கைகளையும் தேய்த்துக் கொண்டவள் மெல்ல சத்தம் வராமல் அங்கிருந்து அந்த அறையின் வாசலை நோக்கி சென்றாள் அந்த ஒற்றை விளக்கின் வெளிச்சத்தில் ..
அவளது துரதிருஷ்டம் அந்த அறை கதவை மெல்ல கைகளால் திறந்தும் அது திறந்து கொள்ள வில்லை.. அது வெளிப் பக்கமாக பூட்டி இருந்தது..



இப்போது என்ன செய்வது என தெரியாத நிலை தான் அவளுக்கு. வெளியே பேச்சு சத்தம் கேட்டது . நன்கு காதை கூர்மையாக்கி கேட்டாள் என்ன பேசுகிறார்கள் என்று.


ஆனால் ஒருவன் மட்டுமே பேசுவது தெளிவாக கேட்டது ..வேறு எந்த சத்தமும் அவளுக்கு கேட்கவில்லை.. "சரி பாஸ். நான் அவங்களை பத்திரமா பாத்துக்கிறேன்.. ஆனா நைட் என்னால தனியா இருக்க முடியாது.. இன்னொருத்தனையும் அனுப்பி வைங்க"
என்று வெளியே ஒருவன் பேசுவது அவளுக்கு தெளிவாக கேட்டது..



அந்தக் கணம் புரிந்து கொண்டாள் வெளியே ஒருவன் தான் இருக்கிறான் என்று ..எப்படியாவது இங்கிருந்து அவனை சமாளித்து விட்டு செல்ல வேண்டும் என்ற முடிவோடு அவன் உள்ளே வரும் வரை அங்கு கிடந்த ஒரு கட்டையுடன் காத்துக் கொண்டிருந்தாள்..


சிறிது நேரம் சென்ற பின்னர் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே வெளியே கையில் கட்டுடன் அந்த ஒருவனின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள் ...கதவு திறக்கப் படவும் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டு அவன் உள்ளே வந்ததும் அவனுக்கு பின்னால் இருந்து தனது முழு பலத்தையும் திரட்டி அவனது தலையை கையில் இருந்த கட்டையால் ஓங்கி அடித்தாள்..


"ஆ..." என்ற அவர்களோடு தலையை பிடித்த வண்ணம் சாய்ந்து விட்டான் அவன்.. பின்னர் ஒரு நொடியும் தாமதிக்காது அந்த அறையில் இருந்து எழுந்து வேகமாக வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் எதையோ தேடினாள் ...சிறிது நேர தேடலுக்குப் பின்னர் தேடியது கிடைத்தது அங்கு போடப்பட்டிருந்த மேசையில் இருந்த அவளது தோள் பை..


வேகமாக அதன் அருகே சென்று அதனை ஆராய்ந்தாள்..அவளது செல் போன் உட்பட அவள் கொண்டு வந்த அனைத்து பொருட்களும் அதன் உள்ளே இருந்தது.. பிறகு அதனை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்றாள்.. வெளியே வந்தவள் அந்த இடத்தை கண்டு மகிழ்ந்து தான் போனாள்..



அந்த இடத்தில் நன்றாகவே ஆட்கள் நடமாட்டம் இருந்தது ..அதுவும் அந்த இடம் அவள் பிறந்து வளர்ந்த சென்னை .. மகிழ்ச்சியில் அந்த இடத்தை விட்டு சற்றுத் தள்ளி வந்தவள் தனது தோழிக்கு அழைத்தாள் அவள் .. அதை ஏற்றதும் "சுபா அந்த ஆதித்யன்
என்னை கடத்திட்டான் .."என்று நடந்த அனைத்தையும் கூறினாள் சுபாவிடம்..


அந்தப் பக்கம் இருந்த சுபா பயந்து விட்டாள்..
" நீ ஏன்டி இன்னும் இங்க வராம இருக்க ..சீக்கிரமா வந்து சேருற வழியைப் பாரு.." என்று மேலும் சில அறிவுரைகளைக் கூறி விட்டு அழைப்பை துண்டித்தாள் சுபா .



அதன் பிறகு சுபா கூறியதற்கிணங்க சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டவள் அதன் பின்னே நிம்மதியாக மூச்சு விட்டாள். அந்த பேருந்தின் இருக்கையில் தலை சாய்த்த படி இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது அவளது அனுமதி இல்லாமலேயே..


தனது வாழ்க்கையை பற்றி நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள்... வேறு என்ன தான் செய்து விட முடியும் அவளால்..


****************

அவள் அருந்ததி..சராசரி உயரம் கொண்ட அழகான பெண்.. பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் கொள்ளை அழகு அவளிடத்தில்.. வயது இருபத்தி மூன்று ..சென்னையை சேர்ந்தவள் ..அவள் இருக்குமிடம் கலகலப்பாக இருக்கும் ..



ஒரு கூட்டத்தில் அவள் இருந்தால் அவளது பேச்சும் சிரிப்பும் தனியே கேட்கும் .
அவள் கூட இருந்தால் சோகம் பயந்து ஓடி விடும்.. அவளது வீடு பங்களா போன்றது‌‌.. பணத்திற்கு எந்த வித குறைவும் இல்லாத குடும்பத்தில் பிறந்தவள் அவள்..




வீட்டில் அவளுடன் சேர்த்து மூன்று பெண் பிள்ளைகள்.. அவள் தான் கடைக்குட்டி.. தந்தை வேதநாயகம் .. தாய் பவித்ரா.. மூத்தவள் பாமினி இரண்டாமவள் பானுமதி.. அவர்கள் இருவரும் திருமணம் முடிந்து தங்கள் கணவன் குழந்தை என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.



அருந்ததியோ தந்தையுடன் சேர்ந்து அவர்களது கம்பெனிகளுக்கு செல்வது ,தனக்கு விருப்பமான செயலான புகைப்படம் எடுப்பது என்று சுற்றிக் கொண்டு இருந்தாள் ..விடுமுறை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றவும் அவள் செல்வது உண்டு ..


போகும் இடங்களில் எல்லாம் தனது அதி நவீன கேமராவை வைத்தும், தனது உயர்ரக தொலைபேசியை வைத்தும் புகைப்படங்கள் எடுத்து நிறைத்து விடுவாள் அவள்.. அவர்களின் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவள் செல்லம் என்பதால் அவளுடைய விருப்பப் படியே சுற்றிக் கொண்டிருந்தாலும் யாரும் எதுவும் சொல்வதில்லை அவளை.



அவளது வீடு இருக்கும் பகுதி செல்வந்தர்கள் அதிகமாக இருக்கும் பகுதி.. அங்கே பங்களாக்கள் தான் பெரும்பாலும் காணப்படும் ..அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்கள் உடன் நட்பாகத் தான் பழகுவாள்.
.



அருந்ததி அன்று காலையில் தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களிடம் வம்பளந்து விட்டு அடுத்த பங்களாவுக்கு சென்றாள். அந்த பங்களாவின் வாட்ச்மென் அவளைக் கண்டதும் புன்னகைத்து விட்டு அவளுக்கு கேட்டை திறந்து விட்டார்..



பங்களாவின் வாயிலில் நின்று "தேவகி ஆன்ட்டி..." என்று அந்த வீட்டின் எஜமானியின் பெயரை ஏலம் விட்டாள்.. அவளது சத்தத்தை கேட்டு சமையலறையில் மேற்பார்வை செய்து கொண்டிருந்த இருந்தவர் ஓடி வந்தார் ..




"என்ன அரு இது ..எத்தனை வாட்டி சொல்றது.. இப்படி சத்தமா கூப்பிடாதன்னு.. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டே.. சரி சரி உள்ளே வா.." என்று முதலில் அவளை கடிந்து கொண்டவர் பின் அவளை உள்ளே அழைத்துச் சென்றார் பாசமாக.


"என்ன இது இன்னைக்கு வீடே பரபரப்பா இருக்கு.. ஏதாவது விசேஷமா என்ன ?
எனக்கு தெரியாமல் இங்கே என்ன நடக்குது ?"
என சிறு பிள்ளை போல கண்களை உருட்டிய படியே கேட்டாள்..


அவளது செயலில் மனம் மயங்கியவர் "அதுவா இன்னிக்கி சசி ஊருக்கு வரான் டா.. அதனால தான் இந்த ஏற்பாடு .."என்று அவளது தலையை வருடிய படி கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்..


சசி என்ற பெயரைக் கேட்டதும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவளது வயிற்றுக்குள் பறந்ததது.. அவள் இதழ்கள் "தரு.." என முணுமுணுத்தது..
இப்போது இருந்தே அவன் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தாள்..


தொடரும்..





 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
wp6761198.jpg


அத்தியாயம் 2


சசிதரன் இன்று சில வருடங்களுக்குப் பிறகு இந்தியா வருகின்றான்.
அவன் தனது மேற்படிப்புக்காக லண்டன் சென்றவன் தான்..
அங்கு நண்பர்களுடன் சேர்ந்து படித்து முடித்ததுமே கம்பெனி ஒன்றை ஆரம்பித்தான். சில காலம் அங்கேயே தங்கி அதனை கவனித்தவன் இப்போது அங்கு உள்ள ஒரு நண்பனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு சொந்த நாட்டிற்கே திரும்புகிறான் ..



அவனது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.. நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் தாய்நாடு வருவதே அதற்கு காரணம்.. அவனது குடும்பத்தினர் தான் லண்டன் சென்று அவனை பார்த்து விட்டு வருவார்கள்.. இவன் இத்தனை நாட்களில் இங்கு வந்ததே இல்லை..


அவன் தான் அந்த வீட்டின் மூத்த வாரிசு .அவனுக்கு ஒரு தம்பி மட்டுமே இருக்கிறான் .அவன் அருந்ததியை விட ஒரு வயது சிறியவன்‌‌.. தாய் தேவகி.. தந்தை பாலகிருஷ்ணன்.. தம்பி தேவ்.. தேவன் தான் அவனை அழைத்து வர வேண்டி விமான நிலையம் சென்று இருந்தான்.



தாயும் தந்தையும் அவர்களுடன் சேர்ந்து அருந்ததியும் அவனது வருகைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தனர்.
கார் கேட்டில் இருந்து உள்ளே வர இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் அருந்ததி.. கிட்டத்தட்ட அவனை நேரில் கண்டு ஐந்து வருடங்களாவது இருக்கும்..



அவளது 17 வயதிலேயே ஆரம்பித்த காதல் தான் இது .அந்த வயதில் அது வெறும் இருக்கும் என்று நினைத்திருந்த அவளுக்கு அவன் இங்கிருந்து சென்றதுமே அது வெறும் ஈர்ப்பு அல்ல காதல் தான் என்று புரிந்தது.


அவனை போட்டோவில் பார்ப்பது மட்டுமே தான் ..தேவ் வீடியோ கால் பேசும் போதெல்லாம் பின்னால் இருந்து பார்க்க சொல்லி மனம் ஏங்கிய போதும் வெட்கம் காரணமாக இது வரை அவள் அவனைப் பார்த்தது இல்லை..



கார் வேகமாக வழுக்கி கொண்டு வந்து அவர்கள் முன் நின்றது ..அதிலிருந்து தேவ் முதலில் இறங்க அவனைத் தொடர்ந்து ஸ்டைலாக காரின் பின் கதவை திறந்து கொண்டு இறங்கினான் சசிதரன் .அவனுக்கு வயது இருபத்தி ஆறு தான் இருக்கும் ...6 அடி உயரம் ,செதுக்கி வைத்த சிலை போல இருந்தான் அவன், ஜிம் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.



ஆண் அழகன் என்றே கூறலாம் அவனை ..இப்போது அருந்ததியோ அவனை நேரில் கண்டதில் பரவசமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..


அவர்களை நோக்கி வந்தவன் தாய் தந்தை இருவரையும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தி விட்டு அதன் பிறகே அங்கு இருந்த அருந்ததியை கண்டான் ..
"இது?" என்று திரும்பி தேவை பார்க்க
"அதுவா அண்ணா ..நம்ம வீட்டு பக்கத்திலேயே இருந்தாளே ஒரு அறுந்த வாலு பொண்ணு ..அந்த அருந்ததி தான் இவ.." என்று அவளை பார்த்துக் கண் சிமிட்டியபடி கூற சசியின் முன் அவனை அடிக்க முடியாமல் முறைத்துப் பார்த்தாள் அருந்ததி.


"ஐயோ நம்ம அருந்ததியா இது ?இவ்வளவு வந்துட்டாளா?" என்றவன் "ஹாய்..." என்று தனது கைகளை நீட்டினான்..
அவளும் பரவசத்தில் தனது கையை அவன் முன் நீட்ட அதை பற்றி குலுக்கியவன் அவர்களுடன் பேசியவாரே உள்ளே சென்றான்..


அவன் முன் இருப்பதற்கு சங்கடப் பட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள். அன்றைய நாளை அவன் நினைவிலேயே கழித்தாள் பெண்ணவள். இப்படியாக அவளது நாட்கள் அவன் நினைவிலும் ,அவனை நேரில் பார்த்து ரசிப்பதிலும் சென்றது..




அவன் அவளிடம் பேசினாலே தவிர அவளாக சென்று பேசுவது இல்லை.. எல்லோரிடமும் வாயாடிப்பவள் அவனிடம் மட்டும் நல்ல பிள்ளையாக இருந்து கொண்டாள். அவனும் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவனது நாட்களோ தந்தையின் பிசினஸை கவனிப்பதிலேயே சென்றது ..



தந்தையே ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு தானே அனைத்தினையும் பார்த்துக் கொண்டான்.
இப்படியே நாட்கள் கழிய இங்கு அருந்ததியும் தன்னுடைய வேலைகளில் ஈடுபட்டாள். அது வேறொன்றுமில்லை ..வீட்டில் வேலை செய்பவர்களை வம்பிழுப்பது, அக்கம்பக்கத்தினரை வம்பிழுப்பது, எப்போதாவது தந்தையுடன் ஆபீஸ் செல்வது ,புகைப்படம் எடுப்பது என்று நாட்களைக் கழித்தாள்..



இடையிடையே சசிதரனை சைட் அடிக்கவும் மறக்கவில்லை அவள் ..ஆனால் இந்த விடயம் அவளுடன் தோழன் போல் பழகும் தேவிற்குக் கூட தெரியாது.
அத்தனை சாமர்த்தியமாகத் தனது சைட் அடிக்கும் வேலையை செய்தாள் அவள்.



ஒரு நாள் மாலை நேரம் தனது வீட்டில் அக்கா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்.. அப்போது அங்கு வந்த தேவ்
" அடியே அருந்ததி.." என்று அருந்ததி படத்தில் வில்லன் அழைப்பது போன்று அழைத்தவாறு அங்கு வந்தான்.


அவன் அழைத்த விதத்தில் அவளது மூத்த அக்காவின் மகள் அனன்யா வாயில் கை வைத்து சிரித்தாள் தனது சித்தியை பார்த்து .மற்றவனுக்கு இது தெரியாவிடினும் அக்கா சிரிப்பதைப் பார்த்து அவனும் சிரித்தான்.. அவன் மூன்று வயதான ஆதர்ஷ் .இரண்டாவது அக்காவின் குழந்தை ..




அனன்யாவுக்கு இப்போது எட்டு வயது ..அதில் மூவரையும் தீயென முறைத்துப் பார்த்தாள் அருந்ததி.
" சரி செல்லம் கோச்சுக்காத.. அப்புறம் என்ன நம்ம வீட்டு பக்கம் ஆளையே காணோம். இன்னைக்கு அண்ணனோட பிரெண்ட்ஸ் வராங்களாம்.. நீயும் வா சூப்பரா இருக்கும்.." என்று அவளை அவன் வீட்டிற்கு அழைக்க ..



‌"அது வந்து ..அங்க வந்து நான் என்னடா பண்ண.." என்றாள் சற்றே தயங்கி ..
"என்ன நீ அப்படி கேட்டுட்ட.. அவர் ஃப்ரெண்ட்ஸ கூப்பிட்டுட்டு வர்றாரு.. நாம அவங்களை நம்ம முறைப்படி வரவேற்க வேணாம்?அதனால நான் என்ன சொல்ல வரேன்னா இன்னைக்கு நீ அங்க வர்ற .ஓகே பாய்..." என்றவன் வந்த வேகத்திலேயே இவளது பதிலை எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.


இவளோ போகவா? வேண்டாமா ?என்று மனதில் பட்டி மன்றம் நடத்திக் கொண்டு இருந்தாள். பிறகு "போலாம்... போலாம் ...அப்போ தான் நம்ம ஆளை பக்கத்துல இருந்து சைட் அடிக்கலாம் ..வேற என்ன வேலை நமக்கு .."என்று தனக்குத் தானே கூறியவள் மீண்டும் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்..




பகல் உணவை ஒரு கட்டு கட்டிவிட்டு குட்டி தூக்கம் போட்டு விட்டு எழுந்து அழகாக உடையணிந்து அவனைப் பார்க்க கிளம்பினாள்..
" ஏ ஆள பாக்க போறே...லால லாலா... லால லா.." என்று வாயில் பாட்டு வேறு ..குஷியாக சென்று கொண்டிருந்தாள் அவள்.


அவள் அங்கு செல்கையில் அவளுக்காக காத்து கொண்டு இருந்தான் தேவ்.
"ஹே வா வா .."என்று ஏகபோக வரவேற்பு அவளுக்கு.. அவனை சந்தேகமாக பார்த்த படியே உள்ளே சென்றவள்
"என்னடா இவ்வளவு பெருசா வரவேற்பு எல்லாம் ..."என்று கேட்டாள்..



அதில் அவளை முறைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்தான் சசி தரன் .. அவனைக் கண்டதும் அவளது வேக நடை தளர்ந்து செம்மை படர்ந்தது முகத்தில்..."வா
அருந்ததி.." என்று கூறி விட்டு தனது வேலையான போன் பார்பதை தொடர்ந்தான்.


"ம்..."என்று மட்டுமே கூறினாள் அரு.. அப்போது வெளியே கார்களின் சத்தம் கேட்டது ..சசிதரன் வேகமாக எழுந்து வெளியே சென்றான். அவன் பின்னால் இவர்களும் சென்றனர் ..அங்கு தொடர்ந்து மூன்று கார்கள் இருந்தன..




அதிலிருந்து இறங்கி வந்தனர் மூன்று ஆண்கள் மற்றும் 2 பெண்களும்..
ஜீன்ஸ் டி-ஷர்ட் தான் அணிந்து வந்து இருந்தனர் அந்தப் பெண்கள்.அதில் அனைவரையும் கட்டி அணைத்து வரவேற்றவன் ஒரு பெண்ணை மட்டும் பார்க்கவே இல்லை..



அதில் அப்பெண்ணின் முகம் சுருங்கினாலும் மற்றவர்கள் முன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை அவள் ."அண்ணா
அவங்கங்களை எங்களுக்கு இன்ட்ரோ குடு.." என்று சொல்ல முதலில் அவன் ஆண்களை அறிமுகம் செய்தான்..



ஷ்யாம், தனுஷ், விதுன் என்று படிப்படியாக கூறி விட்டு அங்கு இருந்த இரு பெண்களையும் அனிதா மற்றும் ஹாசினி என்றான் ..ஹாசினி என்று அவன் கூறிய பெண்ணோ அவனையே தன் பார்த்தபடி இருந்தாள்..



இவன் தான் அவளை தவிர்த்தான்.. பிறகு அருந்ததி மற்றும் தேவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் . ஹாசினி மற்றும் சசிதரனின் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து கொண்டு தான் இருந்தாள் அருந்ததி..

தொடரும்.....

 

T22

Well-known member
Wonderland writer
AlluArjun_Pooja-Hegde-696x504.jpg


அத்தியாயம் 3



அவர்கள் 5 பேர் உடனும் அருந்ததியும் தெவ்வும் நன்றாக பழகினார்கள். அவர்களும் இவர்களுடன் நட்புடன் பழகினர் ...அன்று இரவு உணவை முடித்து விட்டு தனது வீட்டிற்கு செல்ல வெளியேறினாள் அருந்ததி ..அப்போது
"அதி .."என்று அழைத்தவாறு அவள் அருகில் வந்தான் சசி தரன்..


அவன் இங்கு வந்ததில் இருந்து அரு என்றே அழைப்பான்.. ஆனால் இன்று அவனது அதி என்ற அழைப்பு வித்தியாசமாக இருந்தது அவளுக்கு. இருந்தும் அதை அவள் உள்ளுக்குள் ரசித்தாள்..மீண்டும் அவன் அப்படி அழைத்தபடி அவள் அருகில் வர என்ன என்பது போல் திரும்பி பார்த்தாள்..அவர்கள் நின்றிருந்த இடம் சசிதரனின் வீட்டு தோட்டம்..



அவளருகே வந்தவன் " என்ன அவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டே?" என்றான் இதுவரை அவளிடம் பேசியே இல்லாத மென்மையான குரலில் ..அவனது கேள்வியில் திகைத்தாலும்
"ரொம்ப டைம் ஆச்சு .இப்பவே வீட்டுக்கு போகணும். இல்லனா அம்மா திட்டுவாங்க .."என்றாள் அவள்..



" ம்..சரி நாளைக்கும் இங்கே வருவே தானே ..இவங்க எல்லாரும் சுத்தி பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க‌. நீங்களும் எங்க கூட வந்தா நல்லா இருக்கும். வர்றியா ?" என்றான் மேலும் அவளிடம் பேச்சுக் கொடுக்க எண்ணி ....



"அது எப்படி? நீங்க பிரண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா போக ஆசை படுவீங்க.. நாங்க இடையில வந்தா உங்களுக்கு டிஸ்டர்பா இருக்குமே .."என்றாள் தயங்கிய படியே..
" ஹே..அப்படி எல்லாம் யாரும் நினைக்க மாட்டாங்க ..நீ வா ..."என்றவன் இப்போது அவள் முகத்தை உற்று கவனித்த படி "இன்னும் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.." என்று நிறுத்தினான் அவன் என்ன சொல்லப் போகிறான் என ஆர்வத்துடன் அவனையே பார்த்து இருந்தாள் அருந்ததி..


"என்னன்னு கேக்க மாட்டியா?"என்றான் மீண்டும் ..அவளும்
"என்ன?" என்றாள் அவனது சொல்லுக்கினங்க..
"அதுவா இன்னைக்கு இந்த டிரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க.." என்று கூறி விட்டு அவளது முகத்தை தான் பார்த்தான்.


அவன் இப்படி சொல்வான் என்று எதிர் பார்க்காதவள் வெட்கத்தில் சிவக்கும் தனது முகத்தை பெரும்பாடு பட்டு மற்றைய பக்கம் திருப்பினாள் அவன் கண்ணில் படாமல்‌‌..ஆனால் அவனோ அதையும் கண்டு கொண்டான் . "இப்போ ரொம்ப ரொம்ப அழகா க்யூட்டா இருக்க.." என்றான் மேலும்.. அதில் இன்னமும் வெட்கம் வர இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என உணர்ந்தவள் வேகமாக அங்கிருந்து சென்றாள்.


போகும் அவளையே புன்சிரிப்புடன் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் சசி தரன்.. இவை அனைத்தையும் செடிகளின் மறைவிலிருந்து பார்த்தபடி இருந்தாள் ஹாஷினி..
அருந்ததி சென்ற பிறகு வீட்டுக்குள் நுழைந்தான் சசி தரன்.. அவன் பின்னாலேயே ஹாஷினியும் உள்ளே சென்றாள்.
" சசி..." என்ற அழைப்போடு அவனது முன்னால் நின்றாள் அவள்..


"என்ன?" என்றால் தெரியாத ஒருவரிடம் பேசுவது போல் "எதுக்காக இப்படி என்னை அவாய்ட் பண்ற சசி ...எனக்கு கஷ்டமா இருக்கு. எல்லார் கூடவும் நல்லா தானே பேசுற.. அப்புறம் ஏன் என்கிட்ட மட்டும் பேச
மாட்டேங்குற ?"என்று அவள் கவலைப் படிந்த முகத்துடனேயே அவனிடம் கேட்க திரும்பி அவளை உற்றுப் பார்த்தவன்


"ஏன்னு உனக்கு தெரியாதா?" என்றான் கேள்வியாக.."அது.." என்று அவள் பேச ஆரம்பிக்கும் நேரம் அங்கு வந்து சேர்ந்தனர் அவர்களுடைய மற்ற நண்பர்கள்.. எனவே இருவரின் பேச்சும் இடையில் நின்று போனது அதில் ஹாஷினிக்கு ஏமாற்றமே.. இருந்தாலும் மற்றொரு சந்தர்ப்பத்திற்காக அவளும் காத்திருக்க ஆரம்பித்து விட்டாள்.


அனைவரும் ஒன்று சேர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை..



அன்றைய நான் அவ்வாறே கழிய ஆதவன் தனது கதிர்களை மெல்ல இவ்வுலகுக்கு பாய்ச்சினான்..
அதில் தனது கண்களை திறந்து பார்த்தாள் அருந்ததி... இன்று காலையில் எழும் போதே அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி ...நேற்று இரவு அவன் பேசியதே அதற்கு காரணம்.. கட்டிலில் இருந்த படியே அதை நினைத்து பார்த்தவள் முகம் இப்போது வெட்கத்தால் அந்தி வானம் போல் சிவந்து போனது...


அவனே தானாக வந்து பேசியதை இன்னும் அவளால் நம்ப முடியவில்லை." அரு அரு.." என்று அவளது அறைக் கதவைத் தட்டினாள் அவளது தாய் பவித்ரா .....அந்த சத்தத்தில் சுயநினைவு வந்தவள்
"ஆ.. அம்மா இதோ வந்துட்டேன்...."என்று கூறியவாறே குளியலறை சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு கீழே இறங்கினாள்.

அங்குஏற்கனவே அவளது மொத்த குடும்பமும் காலை உணவிற்காக உணவு மேசையில் அமர்ந்து இருந்தனர்..
"ஹாய்.." என்ற படியே அவளது தந்தையின் அருகில் சென்று அமர்ந்தவள் உணவு உண்ண ஆரம்பித்தாள்..



"குட்டி இன்னைக்காவது ஆபீஸ் வர ஐடியா இருக்கா?" என்று அவளது தந்தை வேதநாயகம் பாசமாக அவளிடம் கேட்க அவரை ஏதோ விசித்திரப் பிறவியைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள் ...



அவளது பார்வையில் தான் என்ன புதிதாக கேட்டு விட்டோம் என்று நினைத்து பயந்து போய் அவளைப் பார்த்தார் அவளது தந்தை..
" நோப்பா ...நான் வாரத்தில் ரெண்டு நாள் தான் ஆபீஸ் வருவேன்னு தானே சொல்லி இருக்கேன்.. எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு..." என்றாள் அருந்ததி...


"என்னாது?" என்று தான் பார்த்தது அவளது மொத்த குடும்பமும்.."என்ன அரு.. உனக்கு என்ன அவ்ளோ பெரிய வேலை இருக்கு?" என்றாள் அவளது மூத்த அக்கா பாமினி.. "எனக்கு என்ன வேலை இருக்கா ?இன்னைக்கு நானும் தேவும் அவங்க அண்ணா ஓட பிரண்ட்ஸ் வெளியே போகும் போது அவங்களுக்கு துணையா போகப் போறோம்.." என்று கெத்தாக கூறினாள் அருந்ததி ..


"அது சரி நீ போமா .." என்று கூறிய பாமினி உணவு உண்பதில் கவனமானாள். அருந்ததியும் உண்டு முடித்தவள் கொஞ்ச நேரம் வீட்டின் உள் சுற்றி திரிந்தாள்..அந்நேரம் அவளது போன் இசைக்க யாராக இருக்கும் என்று பார்க்க அதில் தெரியாத எண் இருந்தது ..இருந்தும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் "அதி.."என்ற அலைப்பிலேயே அது யார் என்று கண்டு கொண்டாள்.



நேற்று தான் அவளை அப்படியே அழைத்து இருந்தான் அவன் ..மறக்குமா என்ன அவளுக்கு..
" உம் சொல்லுங்க .."என்று அவள் கூற
"இன்னும் வராம என்ன பண்ற ?சீக்கிரம் வா.." என்று கூறியவன் அவளது பதிலைக் கூட எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டான்..


அவன் இப்படி போன் செய்து அழைத்ததும் அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.. அவனது வீட்டை நோக்கி சென்றாள் குதூகலத்துடன்..
இன்று அவளது வருகைக்காக சசிதரன் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான் ..அவள் அவன் அருகில் சென்றதும்
" அதி என்ன இது ..நேத்து நைட்டு உன்கிட்ட என்ன சொன்னேன்.. டைமுக்கு வர வேணாமா ?
நான் உனக்காக எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது.. உள்ளே வா "என்று தாமதத்திற்காக அவளை கடிந்து கொண்டவன் அவளுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்..


அவன் பிடித்திருந்த தனது கையை பார்த்த படியே அவன் பின்னால் சென்றாள் அருந்ததி .அவனது நண்பர்கள் அனைவரும் அங்கு தான் அமர்ந்து இருந்தனர் .
தேவ் மட்டும் இருக்கவில்லை ..அவர்கள் முன் சென்றும் அவளது கையை அவன் விடவே இல்லை ..



அருந்ததிக்கு தான் அவர்கள் முன்னால் இவ்வாறு நிற்க சங்கடமாக இருந்தது.. அவனிடம் சொல்ல முடியாத காரணத்தால் தனது கையை மெல்ல அவனது கையிலிருந்து எடுக்க முயற்சித்திள் அவள். அவளது முயற்சியை புரிந்து கொண்டவன் மேலும் அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.. என்ன செய்வது என தெரியாமல் அவள் நிற்கும் போது அவளை காக்க வென்றே அங்கு வந்து சேர்ந்தான் தேவ்..



"அம்மா .."என்று அழைத்த படியே வந்தவனை கண்டதும் அவளது கையை விட்டான் சசிதரன்..
"அரு.. இவ்வளவு காலைல வந்து இருக்க..இன்னைக்கு செம ஜாலி பண்ணலாம்.." என்று அவளுடைய தோளில் கை போட்டவாறு பேசிக் கொண்டே அவளை அழைத்து சென்றான்..


அவனைத் திரும்பிப் பார்த்தபடியே தேவுடன் சென்றாள்.. அவர்கள் சென்ற பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து பேசிக் கொண்டிருந்தான் சசிதரன் ..அவனது நண்பர்கள் அவனது அச் செயலில் திகைத்து போய் அமர்ந்திருந்தனர்.. இவன் ஏன் அருந்ததி இடம் இப்படி நடந்து கொள்கிறான் என்ற யோசனை தான் அனைவர் மனதிலும்.. ஆனால் அவனிடம் கேட்கும் தைரியம் இல்லை யாருக்கும் ..


தொடரும்..



 

T22

Well-known member
Wonderland writer
ரியலி சாரி ஃபிரண்ட்ஸ்...
??
என்னோட சித்தி நேத்து தவறிட்டாங்க..
?
அதனால என்னால இரண்டு மூன்று நாளைக்கு யூடி போட முடியாது . யூடி எழுதுற மனநிலையிலையில் நான் இல்லை ..

ஆனால் கண்டிப்பாக முடிச்சிடுவேன்..
 
Status
Not open for further replies.
Top