ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரின் தேடல் நீய(டா)டி- கதைதிரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நட்புகளே!!?
இது என் முதல் கதை. இது வரை நான் எத்தனையோ நாவல்கள் படித்துள்ளேன். அது என்னவோ கதை படிப்பதில் அலாதி பிரியம். படிக்க படிக்க கதை நிழல் படங்கள் போல் என் மனதில் பதிந்து விடும்.(என்னடா நாலு நாவல் படிச்சா கதை எழுதுவியா அப்டின்னு கேட்க கூடாது அனைவருக்குள்ளும் கட்டாயம் ஒரு கதாசிரியர் உண்டு அது நாம் சில தேர்வுகளில் எழுதும் கதையிலேயே தெரிந்து விடும். இதில் நானும் ஒருத்தி ?) பின்னர் தான் நாமும் ஏன் கதை எழுத கூடாது என்று தோன்றியவுடனே கண்முன் வந்த கதை தான் இது . ஒரு வேளை இப்படி எல்லாம் நடந்தா எப்படி இருக்கும்னு தோன்றியது. முதல் முறை என்பதால் குறை நிறைகளை கட்டாயம் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அறிமுகம் மற்றும் முன்னோட்டம் இன்று. முதல் அத்தியாயம் நாளை முதல் தொடர்ந்து பதிவிடுகிறேன்.
நன்றி.


தலைப்பு : உயிரின் தேடல் நீய(டா)டி
நாயகன் : ஆருஷி-(சூரியனின் முதல் கதிர்) இருளை நீக்கி ஒளி தரக்கூடிய சூரியனைப் போன்றவன்.
நாயகி : ஸ்ரீ நிதி

குட்டி டீசர்:
அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டிருந்த சாக்லேட் ஐஸ்கிரீம் கேக்கை நாவில் எச்சில் ஊற கண்களாலே விழுங்கி கொண்டிருந்தாள் ஸ்ரீ. கைகள் பரபரக்க சுற்றும்முற்றும் பார்த்து மீண்டும் அதையே கண்களில் ஆசை மின்ன பார்த்து கொண்டிருந்தாள்.
அப்போது "உன்னால் அதை பார்க்க மட்டுமே முடியும் சாப்பிடவோ ஏன் தொடக்கூட முடியாது அப்புறம் ஏன் ஆசையை வளர்த்துக் கொள்கிறாய்!" பின்னால் இருந்து கேட்ட அழுத்தமான குரலில் தூக்கிவாரிப் போட ஒரு முழு நிமிடம் கண்களை மூடி தன்னை சமன்படுத்தி கொண்டு திரும்பி பார்த்தாள் ஸ்ரீ.
அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டு அவள் கண்கள் சாசர் போல் விரிந்தன. இவனுக்கு எப்படி நான் தெரிகிறேன்.
அவனோ இதழை கேலிபோல் வளைத்து அவளையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ஆருஷி.
 

Anucharan

Active member
Wonderland writer
IMG_20210103_093829_987.jpg images (1).jpg
அத்தியாயம் 1

அம்மா... என்ற அலறலுடன் தன் கண்களை மூடி காதுகளை கைகளால் மூடியும் அவ்விடத்தில் இருந்து தப்பி சற்று தள்ளி நின்று கொண்டாள்.
சில நொடிகளில் நடந்து முடிந்த செயலில் கால்கள் தடுமாற அங்கிருந்த நடைமேடையில் அமர்ந்து விட்டாள்.

அவளின் பயம் தன் கைகளிலும் முகத்திலும் வழியும் குருதியைக் கூட துடைக்க மனமின்றி கைகள் நடுங்குவதிலேயே தெரிந்தது. தான் உயிரோடு இருப்பதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. என்ன வேகம் அந்த கார். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ
தன்னை தாண்டி சென்ற ஆம்புலன்ஸ் சத்தத்தில் திடுக்கிட்டவள். அந்நிலையிலும் ஒரு நொடி கண் மூடி அதில் செல்வது யாராயினும் நலம் பெற வேண்டினாள்.அவள் வேண்டுதலுக்கு ஆயுள் இல்லை என்றும் அதில் செல்வது தாம் தான் என்றும் யார் அவளிடம் சொல்வது!!!

பின் சுயநினைவு பெற்றவளாய் தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி சென்றாள்.தோழியின் ஸ்கூட்டி அது. இன்று இரவு தன் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு மூன்று மாதங்கள் கழித்து செல்லவுள்ளாள். அதனால் தன் பெற்றோருக்கும், தம்பிகளுக்கும் பொருட்கள் வாங்கி வந்தாள்.

சில நொடிகளில் நடந்த களோபரத்தில் அவளின் வண்டி சேதாரமுற்று பரிதாபமாக ரோட்டில் கிடந்தது.
அவள் பைகள் ஆங்காங்கே கிடக்க முதலில் வண்டியை தூக்க எண்ணி அதன் அருகில் சென்று தூக்க முயற்சி செய்தாள்.ம்கூம்..முடியவில்லை.. அவள் தொடுகை எல்லாம் காற்றுடனே கரைந்தது.

அது ஒரு வழி பாதை தோழி வீட்டிற்கு சீக்கிரம் செல்லவே அந்த குறுக்கு வழியில் சென்றாள். அவள் இது வரை தன் குடும்பத்தை பிரிந்து இருந்தது இல்லை. முதல் முறையாக மூன்று மாதங்கள் வேலைக்காக சென்னையில் தங்கியுள்ளாள்.
உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று சுற்றும் முற்றும் பார்க்க ஆங்காங்கே சிலர் நின்று தங்களுக்குள் ஏதோ பேசியும், மேலும் அருகில் போலீஸ் வண்டியில் ஒருவர் சாய்ந்து கொண்டு அலைபேசியில் ஏதோ பார்த்து கொண்டிருந்தார்.

அவரிடம் வண்டியை தூக்கி தர சொல்லலாம் என்று எண்ணி பக்கத்தில் சென்று அழைக்க.. அந்நேரம் சரியாக அவருக்கு அழைப்பு வந்தது..
அழைப்பை ஏற்று அவர் கூறிய செய்தியை கேட்டவள் அவ்விடத்திலேயே உறைந்து நின்று விட்டாள் அவள் ஸ்ரீ நிதி..
-----------------------------------------------------------

ஒரு வருடத்திற்கு முன்பு...

பொள்ளாச்சி அருகில் சிறிய கிராமம் ஸ்ரீநிதியினது,

சுந்தரம்- வள்ளி (தாத்தா பாட்டி) தம்பதியருக்கு நான்கு மகன்கள். மூத்தவர் மூர்த்தி இளையவர் ரத்தினம் , ராஜ் , கோபால் அடுத்தடுத்து பிறந்தவர்கள்.
மூர்த்தி-சித்ராவிற்கு விஷ்ணு என்ற மகனும் ஸ்ரீநிதி மகளும்.
ரத்தினம்-கமலா தம்பதியருக்கு இரு மகன்கள் ரவி,ராம்.
ராஜ்-வித்யா தம்பதியருக்கு இரட்டையர்கள் நவீன்,நரேன்
கோபால்- செல்வி(தற்போது உயிருடன் இல்லை) தம்பதியருக்கு ஒரே மகன் மனோஜ்.
அண்ணன் தம்பி நால்வரும் அருகருகே வீடு கட்டி வசிக்கின்றனர். சுந்தரம் தம்பதியினர் மூத்தவர் வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். கோபால் மட்டும் படித்து அந்த ஊரில் உள்ள அரசாங்க பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். வறுமை காரணமாக மற்ற மூவரும் படிக்க முடியவில்லை. ஆனால் தம்பியை படிக்க வைத்தனர்.

இவர்கள் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு ஸ்ரீ நிதி மட்டுமே அதனால் அவள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை. 'டேட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்' கேள்வி பட்டிருப்போம் ஆனால் அவள் அந்த குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறையினருக்கும் இளவரசி...

--------------------------------------------------------------------

'மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்.....'

என்ற பாடல் ஹைடெசிபெல்லில் ஒலிக்க இரு கைகளையும் விரித்து வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த மாலை வேளையில் ஆள் அரவமற்ற சாலையில் வேகமாக சென்ற 'ராயல் என்ஃபீல்டில் ' பின் அமர்ந்து ஏகாந்த்தை கண் மூடி ரசித்தாள் ஸ்ரீ நிதி.

படாரென விழியை திறந்தவள் முன்னால் வண்டியை ஓட்டிச் சென்ற அவளவனின் முகத்தைக் காண முயன்றாள்.
அவளின் முயற்சியை உணர்ந்து சட்டென வண்டியை நிறுத்தினான் அவன்.இந்த திடீர் செயலில் அவன் மேலே தடுமாறி விழுந்தாள் ஸ்ரீ. அதில் முகம் சிவக்க வண்டியில் இருந்து இறங்கினாள்.
புன்சிரிப்புடன் தன் கையுறைகளையும், தலை கவசத்தையும் கழற்றினான். இவள் விழி விரித்து ஆவென அவனைக் காண்பதற்குள்

தீடீரென மாறிய வானிலையில் மழை பெய்ய ஏதோ வித்தியாசமாக உணர்ந்து 'மழைத்தண்ணி சூடாவா இருக்கும்' அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள். 'அய்யோ இன்னைக்கும் வட போச்சே' நிலைமை புரியவே சில நிமிடங்கள் ஆக அதற்குள் கத்தியிருந்தாள் அவள்.

சுற்றி இருந்தவர்கள் முகம் இதை கேட்டு அஷ்டகோணலாகியது.. இதில் கடுப்பான ராம் "சரியான தீனி பண்டாரம் எப்ப பாரு சாப்டறத பத்திதான் நினைப்பு.. நவீன் போய் இன்னொரு வாளி சுடு தண்ணீர் கொண்டு வா இன்னு இவ தெளியல..' என்றான் .
'சரிண்ணா' நவீன்
மலங்க மலங்க விழித்தவள் முன் அவளுடைய சித்தப்பா பசங்களான ரவி, ராம், நவீன்,நரேன், மனோஜ் நின்றிருந்தனர்.

ரவி ஸ்ரீயை விட இரண்டு வயது மூத்தவன்.அவனுக்கு போலீஸ் அதிகாரி ஆவதுதான் கனவு.எனவே கடும் உழைப்பால் இருமுறை தோல்வி கண்டு மூன்றாம் முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்விலும் அடுத்தடுத்த எழுத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று ஐபிஎஸ் பயிற்சிக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லவுள்ளான்.
ராமும் ஸ்ரீயும் எட்டு மாதங்கள் இடைவெளியில் பிறந்தவர்கள்.ஸீரீக்காக ராமை ஒரு வருடம் கழித்து இருவரும் ஒன்றாக படிப்பது போல் பள்ளி சேர்த்தனர். ஸ்ரீக்கு பாடிகார்ட் போல். ஆனால் இவள் செய்யும் லூட்டிகளில் விழிபிதுங்கி நிற்பது என்னவோ ராம் தான்.
நவீன்,நரேன் இருவரும் பள்ளி இறுதி ஆண்டில் உள்ளனர். மனோஜ் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.

ராம் கூறியதை கேட்டு பதறியபடி எழுந்தவள் "டேய்.. டேய்... இருங்கடா அர்த்த ராத்திரியில் ஏன்டா இப்படி பண்றீங்க.." என அழுவதை போல் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.

நரேன்"என்னது அர்த்த ராத்திரி ஆ விடிஞ்சு ஆறு மணியாச்சு.. எழுத்துரு பாப்பா.. இன்னைக்கு என்ன நாளாவது தெரியுமா!" என்றான் பாவமாக..

"சண்டே தான்டா இன்னைக்கு... ஏண்டா இவ்வளவு சீக்கிரம் எழுப்புனீங்க..ஆமா சண்டே எப்பவும் நான் தானே பத்து மணிக்கு உங்களை எழுப்பவேன்... என்ன எல்லாரும் சேர்ந்து பழிவாங்குரீங்களா!!" என்று சிணுங்கினாள்
இவர்களின் சம்பாஷனைகளை ஒரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள் ஸ்ரீ யின் அண்ணி சவிதா ( விஷ்ணு வின் மனைவி.திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. ஸ்ரீ யின் கல்லூரி சீனியர்.அப்பொழுதே இருவருக்கும் நல்ல இணக்கம்.அமைதி குணமுள்ள சவிதாவிற்கு துறு துறு ஸ்ரீ யை எப்போதும் பிடிக்கும். எதார்த்தமான குணமுள்ளவள்)

இதில் மானசீகமாக தலையில் அடித்து கொண்ட ராம்"ஹே லூசு.. உன் புத்தி போகுது பாரு... சரி காய்ஸ ரெடி.. ஒன்..டூ... த்ரீ... ஹாப்பி பர்த்டே ஸ்ரீ குட்டி" என கோரசாக அனைவரும் கத்த திகைத்து நின்றாள் ஸ்ரீ.

எப்படி மறந்தேன் என ஒரு நிமிடம் தன்னையே திட்டிக் கொண்டு அனைவரின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டாள். பின் அனைவரையும் வெளியில் அனுப்பிய சவிதா அவளை அணைத்து வாழ்த்து கூறி சீக்கிரம் குளித்து வர சொன்னாள்.
குளிக்க சென்ற ஸ்ரீ காலையில் கண்ட கனவை எண்ணி புன்னகை பூசிக் கொண்டாள்.

இது கடந்த சில நாட்களாக வரும் கனவு வேறு வேறு சூழலில் அவளவனுடன். யார் அவன்? எங்கிருக்கிறான்? ஏன் அவனின் முகம் கூட கண்டதில்லை.ஆனால் கனவில் அவன் தோன்றினால் அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் வலம் வருவாள். மிகுந்த சிவபக்தியுடைய ஸ்ரீ மற்ற பெண்கள் போல் அவ்வயதிற்குரிய ஆசைகள் அற்று ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவள். தோழிகள் நாவல்கள் படித்தால் இவள் சிவபுராணங்களும், திருவாரமும் படிப்பாள். பிரதோஷத்திற்கும் பௌர்ணமிக்கும் கட்டாயம் சிவன் கோவில் சென்று விடுவாள். தன் வலது கையில் உடுக்கை மற்றும் வேல் கொண்ட ஒரு வித டாட்டூ வரைந்துள்ளாள். இவ்வளவு வருடத்தில் இப்படி ஒரு கனவு அவளுக்கு வந்ததில்லை அதுவும் ஒரே மாதிரியான கனவு எனவே தான் அதில் அவளுக்கு சற்று ஆர்வம் அதிகம்.

இது வெறும் உணர்வு என்றளவிளேயே எண்ணி இருந்தாள் ஸ்ரீ.ஏனெனில் எதார்த்தமான வாழ்க்கை வாழ நினைப்பவள் இது போன்ற கனவுகளை அதிகம் ஆர்வம் காட்ட மாட்டாள். ஆனால் இந்த கனவில் வருபவனுக்கும் தனக்கும் நிச்சயம் எதோ தொடர்பு உண்டு என்பதில் உறுதியாக இருந்தாள்.

அன்றும் அதே போல் தான் புது உற்சாகம் தானாய் ஒட்டி கொண்டது. கனவை நினைத்து பார்த்தவள் கண்கள் ஆச்சரியமாக விரிந்து கொண்டது ஆம் அவனின் அடையாளமாக வலது கையில் கட்டைவிரல் பக்கமுள்ள சிறிது பெரிய மச்சம். வழக்கம் போல் சிறிது நேரம் அதில் மூழ்கி விட்டு பின் தலையில் தட்டிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
 
Last edited:

Anucharan

Active member
Wonderland writer
tumblr_mloa8r4ZHL1rw6ssfo1_1280.jpg

அத்தியாயம்-2

குளித்து முடித்து வந்தவள் கட்டிலில் இருந்த பிங்க் நிற தாவணியை கண்டு வியப்பில் ஆழ்ந்து விட்டாள். இதை வாங்கியவர் யார் என்று அறிய அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. புது துணியை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னையே சுற்றி பார்த்து கொண்டாள். ஜந்தரை அடிக்கு சற்று உயரமான துறு துறு கண்களும் இயற்கையிலேயே சிவந்த அதரங்களும், எலுமிச்சை நிறத்தில் அம்சமாக இருப்பாள். அலங்காரம் செய்வதில் விருப்பம் இல்லாதவள் நீளமான முடியை தளரப் பிண்ணி பொட்டிட்டு திருப்தியுற்று வெளியில் வந்தாள்.

வீடே அமைதியாக இருந்தது.அது நான்கு அறைகளும், சமையலறை, பூஜை அறை, வரவேற்பு அறை முற்றம் என பெரிய அளவிலான வீடு. ஸ்ரீ யின் அண்ணன்(விஷ்ணு) இன்ஜினியரிங் கட்டிடக் கலை முடித்தவுடன் அறைகளை எடுத்துக் கட்டி பாரம்பரிய வீட்டை மாற்றாமல் இக்காலத்திற்கான வசதிகளுடன் மாற்றி அமைத்து உள்ளான்.இதே போலவே மற்ற சித்தப்பாவின் வீடுகளையும் அவரவர் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொடுத்துள்ளார்.
முதலில் சாமியறை சென்று விளக்கு ஏற்றி

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி "

என்று சிவபுராணத்தை மனதார கண் மூடி மனதினுள் பாடியவள். திருநீறு இட்டு வெளியில் வந்தாள்.அவள் குடும்பத்தினர்கே ஆச்சர்யம் அவளின் சிவ பக்தியில்... திருவிழா எதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே கோவில் செல்வது அவர்களின் வழக்கம். ஆனால் மாதம் இருமுறை எப்பாடு பட்டாவது சிவன் கோயில் சென்று விடுவாள் ஸ்ரீ. டாட்டூ குத்தி வந்த போது அனைவரும் அதிர்ந்ததே விட்டனர் ஆனால் கடிந்து அவளை பேசிராதவர்களுக்கு மனம் சுணங்கினாலும் அவள் போக்கிலேயே விட்டு விட்டனர். இவர்களுக்கு இடையில் மாட்டியது என்னவோ ராம் தான்.அதுவும் அவள் டாட்டூ குத்தியதால் வந்த காய்ச்சலில் குடும்பத்தினரிடையே மாட்டி நொந்து விட்டான்.

பூஜை முடிந்த பிறகு வெளியே வந்தவளுக்கு வீட்டினர் ஒருவரும் கண்ணில் படவில்லை. வீட்டின் வெளியே பார்க்க வாசலில் கால் வைக்க மேலிருந்து ஒரு கூடை ரோஜாப்பூ இதழ்கள் அவள் மேலே விழுந்தது.. இந்த திடீர் செயலில் முதலில் அதிர்ந்து பின் சிறுபிள்ளை போல் குதிக்க ஆரம்பித்தாள். பின் அனைவரையும் தேடி வீட்டின் பின்புறம் செல்ல

அங்கு கண்ட காட்சியில் மெய் மறந்து விட்டாள்.அங்கு வேப்பமரம் அடியில் டேபிள் போடப் பட்டு அதில் அவளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் பிறந்த நாள் வாழ்த்துடன் சிரித்து கொண்டிருந்தது.. சுற்றிலும் அவளுடைய தாத்தா பாட்டி பெற்றோர் அண்ணா அண்ணி , அவளுடைய சித்தப்பாக்கள் மற்றும் சித்தியுடன் அவள் தம்பிகளும் சில வாண்டுகளும் நின்றிருந்தனர்.. வேக எட்டுகளுடன் அவர்களை நோக்கி சென்றவள் தன் அண்ணி சவிதாவை அணைத்து உடைக்கு நன்றி கூறி அனைவரிடமும் அதனை சுற்றி சுற்றி காண்பித்தாள்.. அனைத்து பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் பெற்று பின் கேக் வெட்டினாள்.

முதலில் "என் பெண் இவ்வளவு வளர்ந்து விட்டாளா" என கண் கலங்க ஓரமாய் நின்று கொண்டு இருந்த தன் தாய்க்கும் பின் தந்தைக்கும் ஊட்டினாள். பின் மனோஜிற்கு ஊட்டிவிட்டாள். மனோஜ் மூன்று வயதிருக்கும் போதே அவனுடைய தாய் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுபடுத்த படுக்கை ஆனார் அதன் பின் மானோவை வளர்த்தது முழுக்க முழுக்க ஸ்ரீ யும் அவள் பெற்றோருமே. எனவே மனோவிற்கு ஸ்ரீ இன்றியமையாதவள் ஆகிவிட்டாள். மேலும் ஒரு வருடம் நோயுடன் போராடியவர் பின் ஓய்ந்து மரணத்தை அடைந்தார்.மறுமணத்தை மறுத்து தன் மகனுக்காக ஸ்ரீ வீட்டிலேயே தங்கி கொண்டார் கோபால்.

அனைவருக்கும் கேக்கை ஊட்டிவிட்டாள். தந்தை மற்றும் சித்தப்பாக்கள் சேர்ந்து ஒரு கணிசமான தொகை கொடுத்து பிடித்ததை வாங்கிக்கொள்ள சொன்னார்கள். அவள் அண்ணன் விஷ்ணு அவளுக்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்தான். பின்பு காலை உணவை முடித்து விட்டு பெரியவர்கள் அனைவரும் கிளம்பி விட சின்னவர்கள் அனைவரும் ஊர் சுற்ற கிளம்பி விட்டனர்.

ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு முதலில் கோவையில் உள்ள தர்மலிங்கேஸ்வர் கோவில் சென்று வணங்கி விட்டு பின் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து விட்டு பின் மால், படம் பார்த்து விட்டு இரவு உணவு முடித்து வீடு வருவதாய் திட்டமிட்டனர்.

விஷ்ணு ஏதோ வேலை இருப்பதாய் கூறி வீட்டில் இருந்து கொண்டான். குடும்பத்துடன் வெளியே செல்வதற்காக இரு கார்கள் லோன் போட்டு வாங்கியுள்ளனர் பகிர்ந்து.. ரவி வண்டியை ஓட்ட அருகில் ராமும் பின் நவீன் நரேன் நடுவில் சவிதா ஸ்ரீ மனோவும் அமர்ந்து கொண்டனர். வண்டியை ஓட்டிக் கொண்டே ரவி "காலேஜ் முடித்து என்ன செய்ய போகிறீர்கள் " என்று ஸ்ரீ மற்றும் ராமிடம் கேட்டான் அதில் இருவரும் திருதிருவென விழித்தனர்.
"இன்னும் ஆறு மாசம் இருக்கு ல அப்போ பாத்துக்கலாம் ரவி அண்ணா" என்றாள் ஸ்ரீ.

ராமும் ஸ்ரீ யும் கோவையில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் கடைசி வருடம் படிக்கின்றனர். ஸ்ரீ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலும், ராம் சிவில் இன்ஜினியரிங்கும் படிக்கிறார்கள்.

ராம் " வந்துடுவான் பெரிய மிலிட்டரி மாறி இவன் பிளான் பண்ணி ஐபிஎஸ் பாஸ் பண்ணா நாங்களும் இப்ப இருந்தே ஓடனுமா??" என்று மனதினுள் அண்ணணை வறுத்து கொண்டு வெளியில் அண்ணணை பார்த்து 'ஈஈஈ..' என சிரித்து வைத்தான். அவன் முகத்தை கண்ட ஸ்ரீ யும் சவிதா வும் பக்கென சிரித்து விட ராம் பின் திரும்பி அவர்களை முறைத்தான்.

இவர்களின் சம்பாஷனைகளை ஒரக் கண்ணால் கண்ட ரவி மனதில் சிரித்து வெளியே விறைப்பாக இருந்தான். கோவிலில் தரிசனம் முடிந்து நேராக ஆசிரமம் சென்றனர். அங்கு ஸ்ரீ யை கண்ட கண்ணன் வேகமாக ஓடிவந்து கட்டிக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து சென்னான். கண்ணன் பதிமூன்று வயது தாய் தந்தையை இழந்த கண்ணன் பஸ் ஸ்டாண்டில் கையேந்தி கொண்டிருந்தான் ஒன்றரை ஆண்டுகள் முன்பு அவளிடம் பரட்டை தலையுடன் கிழிந்த பனியனும் அரைக்கால் டவுசர்முமாக பிச்சை எடுக்கும் போது பேசி அவனைப்பற்றி விவரம் தெரிந்து கொண்டு இந்த ஆசிரமத்தில் சேர்த்து விட்டாள்.

ஸ்ரீ சற்று இளகிய மனம் கொண்டவள் அவள் முன் யாரேனும் அழுதாலோ அல்லது துன்பத்தில் இருந்தாலோ அவளால் தாங்கிகொள்ளவே முடியாது.. இங்கு இதுபோல் ஆதரவற்ற குழந்தைகள் பத்து பேரை சேர்த்துள்ளாள் .
அவனிடம் இருந்து பிரிந்த ஸ்ரீ நன்றி கூறி சாக்லேட் கொடுத்தாள். பின் அனைவரும் சாபிட்டு முடித்ததும்.. அங்கிருந்த அனைவரிடமும் சிறிது நேரம் விளையாடி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் மால், படம் என்று அன்றைய நாளினை கடத்திவிட்டு இரவு எட்டு மணி வாக்கில் வீட்டிற்கு வந்தனர்.
வள்ளி பாட்டி சின்னவர்கள் அனைவரையும் சேர்த்து சுத்திப் போட்டார் மகிழ்வுடன். ரவி விஷ்ணு விடம் கண்ணசைக்க அவன் வெற்றி என கட்டைவிரல் உயர்த்தி காட்டினான்.

அனைவரிடமும் ஸ்ரீ கொஞ்சிவிட்டு அவள் அறைக்கு சென்றாள் அங்கு அவள் கண்ட காட்சியில் கண் கலங்க நின்று விட்டாள். அவளினது சற்று பெரிய அறை அங்கு சன்னலின அருகே மரத்தாலான இருக்கை ஊஞ்சல் போல் தொங்கிக் கொண்டிருந்தது. பின் சுவற்றில் விஷ்ணு திருமணத்தன்று எடுத்த குடும்ப போட்டோ பெரிதாகவும் அதனை சுற்றி ஸ்ரீ யின் விதவிதமான போஸ்களிலும் அதிலும் இன்று காலை பூக்கள் அவள் மீது விழுவது போன்ற புகைப்படம் மிக அழகாக இருந்தது ..

வெளியில் வந்தவள் நேராக சென்று தன் அண்ணனை கட்டிக் கொண்டாள். விஷ்ணு வாஞ்சையுடன் தங்கையின் தலையை வருடிக் கொடுத்தான். இருவருக்கும் எட்டு வருடங்கள் வித்தியாசம். ஸ்ரீ எப்பவும் அவனின் முதல் குழந்தை போல...
" பிடிச்சு இருக்கா பாப்பா" விஷ்ணு..
" சூப்பரா இருக்கு... தாங்க்ஸ் அண்ணா" வார்த்தைகள் வராமல் தடுக்க.. "பச் என்ன இது சின்ன பிள்ளை போல"..

"சரி சரி போதும் கொஞ்சியது போய் தூங்குங்க " என அதட்டல் போட்டார் மூர்த்தி.. அதில் சிரித்து கொண்டே அவரவர் அறைக்கு சென்றனர்.

வள்ளி தன் மகன் மருமகளை அழைத்தார்.
" மூர்த்தி ஸ்ரீ க்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணணும் டா எனக்கு என்னமோ மனசு சரியில்லை... அவ ஜாதகத்தை நம்ம குருஜி கிட்ட ஒருதடவை காட்டிரலாம்." என்றார் வள்ளி

"ஸ்ரீ இன்னும் சின்ன பொண்ணு மா . இருபது வயதுதான் ஆகிறது.. மெதுவா பண்ணலாம் மா.. உங்க திருப்திக்கு வேணா நாம நாளைக்கு போய் குருஜி அ பாக்கலாம்" மூர்த்தி.

"சரிப்பா... அவ எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்.." என மனதார வேண்டிக் கொண்டார்.

மனிதன் நினைப்பதும்,வேண்டுவதும் நடந்து விட்டால் பிறகு நான் என்ன செய்வேன்!!!!!என
இவர்களின் மகிழ்ச்சியை கண்ட விதியோ ஏளனமாக புன்னகைத்து கொண்டது....







(ஹலோ நட்புகளே..... என்னுடைய முதல் முயற்சி இது... நிறை குறைகளை பதிவிடுங்கள் மக்களே .. உங்கள் கருத்துக்களே என் ஊக்கம் ?? வாரம் இருமுறை யூடி பதிவிடுகிறேன்... நன்றி!!!)
 
Last edited:

Anucharan

Active member
Wonderland writer
3a745d3dcba72feb73e44e399ec97bea--little-girl-drawing-girl-face-drawing.jpg
அத்தியாயம் 3

அடுத்த நாள் காலை அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது.. சின்னவர்கள் அனைவரும் பள்ளி கிளம்பி விட... ஸ்ரீ யும் ராமும் கல்லூரி கிளம்பி விட பெரியவர்கள் தோட்டத்திற்கு கிளம்பி கொண்டிருந்தனர்.. சாப்பிட்டுக்கொண்டு இருந்த மூர்த்தியிடம் வந்த வள்ளி பாட்டி

"இன்னைக்கு வேலை இருக்காப்பா"

"இல்லைமா அதான் முருகன் இருக்கான் ல மா அவன் பாத்துக்குவான்" மூர்த்தி.(முருகன் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவன் சிறுவயதிலேயே பெற்றோர்கள் இழந்த நிலையில் மூர்த்தியிடம் எட்டு வயதில் அடைக்கலமானவன். படிக்க சொல்ல படிப்பு வரவில்லை என விவசாயத்தை கற்றுக் கொண்டான்‌. தற்போது இருப்பத்தி ஐந்து வயது ஆகிறது)

"சரிப்பா நாம குருஜி அ பார்த்ததுட்டு வந்தரலாம்.. ரத்தினத்தையும் ராஜையும் இன்னொரு நாள் பாத்துக்க சொல்லிக்கலாம். கோபால், மனோஜ் ஜாதகத்தையும் எடுத்துகோ." பாட்டி

"சரிம்மா" மூர்த்தி.

--------------------------------------------

கல்லூரி வாகனத்தில் இருந்து இறங்கிய ஸ்ரீ யும் ராமும் பேசிக்கொண்டே தங்கள் கல்லூரி வளாகத்தை நோக்கி சென்றனர்.

ராம் " உன்னால தாண்டி நான் டெய்லியும் இந்த இந்துப் போன ஊர் சுத்தி பஸ்ல வர வேண்டி இருக்கு அரைமணி நேரத்தில் வர வேண்டடிய பஸ் ஒன்றரை மணிநேரம் ஆகுது. அவுட் பஸ்ல போலானு சொன்னா ஸ்ரீ ரொம்ப சிரமப்படுவா அப்டிங்கராங்க சரி பைக் வாங்கி தர சொன்னா அதையும் நீ கெடுத்து விட்டுட்ட.. " என்று லட்சத்தியொரு முறையாக புலம்பிக் கொண்டே வந்தான். "

"டேய் எவ்வளவு வாட்டி தாண்டா இதையே சொல்லுவ" என்று காதுக்குள் சுண்டுவிரல் விட்டு இரத்தம் வருவது போல் செய்து காட்டி அவனை வெறுப்பேற்றினாள்.

அதில் கடுப்பான ராம் அவள் தலையில் நங்கென கொட்டினான். இவர்களை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டேவந்த விக்னேஷ் ராமின் செயலில் கோபம் கொண்டு அவனை அழைத்தான்.

விக்னேஷ் அங்கு எம்பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன். பணக்கார வீட்டு பையன் ஸ்ரீ யை பார்த்தவுடனே அவள் மீது ஒரு ஈர்ப்பு. அவளுடன் பேச முயற்சி செய்கையில் ராம் அதற்கு தடையாக இருந்தான். அவளுக்காக தான் அவன் இதே கல்லூரியில் முதுகலை சேர்ந்ததும். பணக்கார வீட்டு பையன்களுக்கே உரியதான குடி, பெண் தோழிகள் என இருந்தவன் தான் ஆனால் ஸ்ரீ யை கண்ட நாள் முதல் அவன் திருந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

அவனின் நடத்தையை அறிந்த ராம் பல முறை அவனை எச்சரித்து விட்டான் அவளுடன் பேச முயற்சி செய்யாதே என்று.
ஆனாலும் அவள் கல்லூரி முடிப்பதற்குள் ஆசையை சொல்லியே தீரவேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.

அன்றும் அவன் அழைத்து திரும்பிப் பார்த்த ராம் ஸ்ரீ யை வகுப்பறை அனுப்பி விட்டு விக்னேஷை நோக்கி வந்தான்.

விக்னேஷ் "ஏன்டா உன்னால அவ கூட சண்டை போடாம இருக்கவே முடியாதா "

"ஆரம்புச்சுட்டான்...." என மனதில் சலித்துக் கொண்டு
"உனக்கு இப்போ என்ன பிரச்சினை அவ என் லிஸ்டர் நாங்க அப்படித்தான் அடிச்சுப்போம் உன் வேலையை பாத்துட்டு போ" என்றான்.

அதில் கோபம் கொண்டவன் "அவதான் என்னைக்கா இருந்தாலும் என் வொய்ஃப் சோ நான் கேட்பேன்"என்றான். இதில் ஆத்திரமடைந்த ராம் "இது கண்டிப்பாக நடக்காது.. ஸ்ரீ மே இதுக்கு ஒத்துக்க மாட்டா"

"அவ ஒத்துக்கலனாலும் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிபேன்" என்று வாயை விட்டான். கண்கள் சிவக்க ராம் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

விக்னேஷ் அவன் அமைதியில் திகைத்து தான் கூறியதை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான். அவன் தெரிந்து அவ்வாறு கூறவில்லை அந்த எண்ணம் கூட கிடையாது கோபத்தில் வார்த்தையை விட்டு விட்டான் பின் விளைவை அறியாமல்...

கடைசி ஆறு மாதம் என்பதால் பிராஜெக்ட் சம்பந்தமாக மட்டுமே கல்லூரி வந்துகொண்டிருந்தனர் இருவரும்.ஒருவாரம் வேகமாக ஓடியது.. ராம் அவன் பேசியதில் இருந்து தீவிர யோசனையிலேயே இருந்தான். பின் ஒரு முடிவு எடுத்தவனாக ரவி விஷ்ணு விடம் பேச சென்றான்.. இருவரிடம் நடந்த அனைத்தையும் கூறிய ராம் தன் திட்டத்தையும் கூறினான்.. முதலில் அதிர்ந்து பின் தவறு என்று தெரிந்தும் இருவரும் சம்மதித்தனர். பின் அந்த ஞாயிறு அன்றே அதை செயல்படுத்தினர்.

அடுத்தநாள் கல்லூரி சென்ற ராம் பார்த்தது அங்கு டீசி வாங்கி கொண்டு வந்த விக்னேஷின் தந்தையையே.. இதழில் ஒரு வெற்றிப் புன்னகையுடன் வகுப்பறை சென்றான்.

--------------------------------------------------------------------

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்ரீ தன் அப்பத்தாவை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள் இது எப்போதும் நடப்பதே .
அவரோ "ஏண்டி இப்படி சும்மா சும்மா கட்டி புடிக்கற.. பொம்பளை புள்ள மாதிரி நடந்துகோ "என்பார். ஆனால் இன்று அமைதியாக இருக்கவே தன் அன்னையிடம் என்னவென கண்களாலேயே கேட்டாள்.

அதுக்கு அவரோ தெரியல என்று சொல்ல யோசனையுடன் அறைக்கு சென்றாள்.

இங்கு அவரோ அன்று குருஜி கூறியதையே நினைத்து கொண்டிருந்தார்..

குருஜி என்பவர் குருமூர்த்தி ஜோசியம் பார்ப்பவர் அல்ல நிதமும் சிவனை நினைத்து பூஜித்து தொழுபவர். சிறு வயதிலேயே குரு ஆன்மீக நாட்டம் கொண்டு அவர் சொல்லும் வாக்கு அனைத்தும் நடக்க அதில் நல்லது மற்றும் கெட்டதும் அடக்கம். அவரின் தந்தை பெரிய செல்வந்தர் ஆனால் பணத்தில் விருப்பம் அற்று ஆசிரமம் அமைத்து அங்கேயே வசிக்கிறார். அவர் தெரிந்த சிலருக்கு மட்டுமே ஜாதகம் கணித்து கூறுவார். அதில் சுந்தரம் தம்பதியரும் ஒருவர். ஒரு சிறு விபத்தில் குருவும் சுந்தரமும் சந்திக்க அதன் பின்னர் நட்புடன் உள்ளனர். பெண் குழந்தை கேட்டு குருவிடம் செல்ல அவரோ 'உனக்கு புத்திரி யோகம் இல்லை என்றும் அடுத்த தலைமுறையில் உண்டு....'என்றும் கூறினார் அது போலவே தான் நடந்ததும்..

சுந்தரம் வள்ளி மூர்த்தி மூவரும் குருஜி யை வணங்கி பின் சிலபல நலம் விசாரிப்புகுப்பின் வள்ளி அவரிடம் சின்னவர்களின் ஜாதகத்தை கொடுத்தார். முதலில் இறைவனை நன்றாக வேண்டிக்கொண்டு அதனை பார்த்தார்.

முதலில் விஷ்ணுவிற்கு "சொந்த தொழில் தொடங்குவார் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம்" என்றார்.

பின் ஸ்ரீ யினதை பார்த்து முதலில் திகைத்து பின் குழம்பமாகி பின் தெளிவானார். இதனை மற்றவர்கள் கவனிக்கவில்லை ஆனால் வள்ளி கவனித்து யோசனையானார்.

பின் "லட்சுமியின் அருள் பெற்ற பொண்ணு, அவளுடைய மகிழ்ச்சியே உங்கள் குடும்பம் செழிக்க வைக்கும்" என்றார்.

சுந்தரம் "எங்கள் குடும்பத்தின் ஆதாரமே அவள் தான்.திருமணம் எப்போது நடக்கும்"என்று கேட்டார். ஒரு பெருமூச்சுடன் "ஒரு வருடம் கழித்து வாருங்கள்" என்று கூறி மற்றவர்களதை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என அனைவரையும் அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றவுடன் கண்மூடி இறைவனோடு மானசீகமாக "ஏன் அந்த குழந்தைக்கு மட்டும் இப்படி கஷ்டத்தை கொடுக்க போகிறாய்.. அவள் என்ன தவறு செய்தாள்.. எதுவும் அறியாத உன்னையே தொழுது வாழும் பெண்ணிற்கு ஏன் இந்த முடிவு காத்திருக்கிறது... அவள் குடும்பத்தில் இதை எவ்வாறு தாங்க போகிறார்கள்..."என்று மனமுருகி கேட்டுக் கொண்டிருந்தார
 

Anucharan

Active member
Wonderland writer
unnamed.jpg
அத்தியாயம் 4

சென்னையில்...

மாலை நேரத்தில் அந்த பெரிய வரவேற்பு அறையில் தன்முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன் பெரியப்பா பையனான ஆருஷியைக் கண்டு எச்சில் கூட்டி விழுங்கி கொண்டு 'இவனுக்கு அவனுங்களே பரவாயில்லை.. அவனுங்களாவது கை கால தான் ஒடச்சானுங்க இவன் நம்மள பார்வையாலையே எரிப்பானே... கடவுளே எப்படியாவது என்ன இவன்ட இருந்து காப்பாத்து..." என மனதினுள் புலம்பிக் கொண்டு இருந்தான் விக்னேஷ்.. அவனின் தந்தையும் சற்று பயத்துடனே அவன் முன் அமர்ந்திருந்தார்.

அந்நேரம் உள்ளே நுழைந்தவர்களை கண்டு "அப்பாடா தப்பிச்சேன்.. இனி பெரியப்பா பாத்துக்குவாரு.." என சற்று ஆசுவசமானான். உள்ளே வந்த கிருஷ்ணன் தன் தம்பியை வரவேற்று பின் இருக்கையில் உடலில் கட்டுடன் அமர்ந்திருந்த விக்னேஷை கண்டு அதிர்ந்தார்.

" டேய் விக்கி.. என்னாச்சு டா.. " கிருஷ்ணன்.

"ஒன்னும் இல்லை பெரியப்பா தடுக்கி விழுந்துட்டேன்".. விக்னேஷ். இதைக் கேட்ட ஆருஷி தீயாய் அவனை முறைத்தான்.

"என்னாச்சு ஆருஷி ஏன் அவனை முறைக்குற.. என்ன நடந்தது.." கிருஷ்ணன்.

"ஒன்னும் இல்லை ப்பா... ஒழுங்கா நடக்க கூட தெரியல .. இன்னும் என்ன சின்ன பிள்ளையா!" என சமாளித்தான் ஆருஷி.

"ஹப்பாடா ... தப்பிச்சோம்..." என நிம்மதி ஆனான்.. ஏனெனில் நடந்த உண்மையை சொன்னால் இவரே கொண்டு போய் மறுபடியும் அவன்களிடமே ஒப்படைத்து விடுவார் அவ்வளவு நேர்மையான மனிதர்..

கிருஷ்ணன் அவருடைய தம்பி அன்புசெல்வன்.. சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில் தாய் சொத்துக்களை விற்று சொந்த ஊரான கோவையிலேயே வாகனங்கள் உதிரி பாகங்கள் செய்யும் தொழில் தொடங்கினர்... இருவரும் கடுமையான உழைப்பாளிகள்... தொழிலும் வளர ஆரம்பித்தது... இருவருக்கும் அவர்களின் அத்தை மகள்களையே மணம் முடித்தனர்.
கிருஷ்ணன்-கீதா தம்பதியருக்கு ஆருஷி - அபிநந்தன் இருமகன்கள். அன்பு - செல்வி தம்பதியருக்கு விக்னேஷ் ஒரே மகன். கிருஷ்ணன் சற்று நேர்மைவாதி.. தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி...ஆருஷி நல்ல அறிவாற்றல் கொண்டவன்.. சென்னையில் கல்லூரி படித்து முடித்து அங்கேயே தன் தந்தையின் தொழிலை தொடங்கிவெற்றி கண்டான். மூன்று ஆண்டுகள் உழைப்பில் வளரும் இளம் தொழிலதிபர் வரிசையில் உள்ளான்.. அங்கேயே வீடு கட்டி தன் பெற்றோர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டான். கோவை நிறுவனத்தின் முழுப் பொறுப்பும் தன் தம்பியான அன்புவிடம் ஒப்படைத்து விட்டு சென்னை வந்து விட்டார் கிருஷ்ணன். அபிநந்தன் வெளிநாட்டில் தொழில் கல்வி படிக்கிறான்.

அவரவர் அறைக்கு சென்றபின் விக்னேஷ் அறைக்கு சென்று
"உன்னை அடிச்சது யாரு??" என இரு கைகளையும் கட்டி கூர்மையாக அவனை பார்த்தவாரே வினவினான். அதில்'உண்மையை என்னிடம் மறைக்காதே!! ' என்ற கட்டளையுடனே!!

அவன் இங்கு வந்தவுடனேயே கண்டுகொண்டான்
யாரோ அவனை நன்றாய் அடி வெளுத்துள்ளனர் என்று...இவனோ சற்று பயத்துடனே நடந்தவற்றை கூறினான்..

ராமிடம் பேசிவிட்டு கிட்டதட்ட அவன் அந்த விசயத்தை மறந்தே போனான். வழக்கம் போல் அவன் செல்லும் பப்பிற்கு அந்த வீக்கென்டும் செல்ல அங்கு வந்த ரவி விஷ்ணு ராம் மூவரும் முகத்தை மறைத்து கைக்குட்டையை கட்டிக்கொண்டு அவன் வெளிவர காத்திருந்தனர்.. முழு போதையில் வெளிவந்த விக்கியை முகத்தை மூடி வெளியில் ஒதுக்குபுறம் இழுத்து வந்து அடி வெளுத்துவிட்டனர். இறுதியில் இனி அவளை தூக்குவேன்‌‌.. ஏன் அவ நினைப்பே உனக்கு வர கூடாது நாளைக்கே நீ இந்த ஊருல இருக்க கூடாது என மிரட்டி அவன் சட்டைப்பையில் 'உன் பையன் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் இந்த ஊரில் இருக்க கூடாது' என எழுதிய கடிதத்தை வைத்து விட்டு அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றனர்.

"போலீஸ் கம்ளைன்ட் எதுவும் வேண்டாம். தப்பு உன் மேலையும் இருக்குனு சொல்லி கொஞ்சநாள் இங்க இருக்க சொல்லி என்ன கூட்டிட்டு வந்துட்டாரு அண்ணா " என கூறி முடிக்கும் முன் அவனை ஓங்கி அறைந்திருந்தான் ஆருஷி.

" ஏண்டா அறிவுகெட்டவனே அந்த பொண்ணு வேணானு சொன்னா தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா அவ்வளவு தைரியமா உனக்கு"

"சாரிண்ணா ... எனக்கு அவளை பார்த்ததும் பிடிச்சுருச்சு அண்ணா ராம் வேணானு சொல்லும் போது இன்னும் ஆர்வமாகிருச்சு அண்ணா.. அவன் என்னை அவமான படுத்த அப்படி பேசிட்டேன் அண்ணா மத்தபடி தப்பான எண்ணம் லா எதுவும் இல்லை.. இன்ஃபேக்ட் அவங்க அடுச்சதுல தப்பே இல்லணா எந்த அண்ணா முன்னாடியும் இப்படி தங்கச்சிய தூக்குவேன்னு சொன்னாளும் இப்படி தான் நடந்துக்குவாங்க.. நானா இருந்தாலும் இதுவும் இதுக்கு மேலயும் செய்வேன்.. " என தன்னிலை விளக்கத்தை கொடுத்தான்..

தன் மீதே தவறு என்பதை தெளிவாய் உணர்ந்தவனை மேலும் திட்டாமல் அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவன் கோவையில் உள்ள தன் நண்பனுக்கு அழைத்து விவரம் கூறி அந்த பெண்ணின் முழுவிவரமும் கேட்டான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அழைத்த அவன் நண்பன் "அந்த பொண்ணு என் தங்கச்சியோட காலேஜ்மெட் மச்சி நல்ல பொண்ணு.. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூடப்பிறந்த அண்ணன் விஷ்ணு.. சித்தப்பா பசங்க ஐந்து பேரு அவளுக்கு ஒன்னுன்னா இவனுங்க உயிர கூட கொடுப்பானுங்க.. நல்ல குடும்பம் டா எதுவும் பண்ணிராதடா " என சற்று
வருத்தத்துடன் சொன்னான் ..
ஏனெனில் எதிரிகளை முளையிலேயே கிள்ளி எறிய நினைப்பவன் ஆருஷி என தன் நண்பனை பற்றி தெரிந்தவனாக..

ஆருஷியோ.."ச்ச ச்ச அப்டியெல்லாம் இல்ல மச்சி அவனுங்க அடிச்சி ஹாஸ்பிடல் சேர்த்துட்டு போயிருக்கும் போதே நல்லவன்னு தெரிஞ்சுது .. நான் அவங்க இடத்துலே இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பேன் .. கொஞ்ச நாள் போய் அப்பவும் விக்கி அந்த பொண்ண விரும்புனா முறைப்படி பொண்ணு கேட்க தான் உன்கிட்ட கேட்டேன்" என கூற அப்போதுதான் அவன் நண்பனுக்கு நிம்மதியாக இருந்தது. பின் "அந்த பொண்ணு போட்டோ மெயில் பண்ணிருக்கேன் பாரு... " என கூறி அழைப்பை துண்டித்தான்.

மெயிலில் வந்த புகைப்படத்தை பார்த்த ஆருஷின் இதயம் வேகமாக துடித்தது.. வேகமாக விக்கி அறைக்கு சென்று " இன்னும் நீ அந்த பொண்ண உண்மையா விரும்புகிறாயா" என கேட்டான். விக்கி " தெரியல அண்ணா இப்போ மனசு முழுக்க குற்ற உணர்ச்சி தான் இருக்கு.. அவ ரொம்ப இரக்க குணம் உள்ளவள். இந்த மாதிரி அவனுங்க அண்ணனுங்க ஒருத்தனை அடிச்சுருக்காங்கன்னு தெரிஞ்சாலே எனக்கு பரிதாபபட்டு அண்ணனுக்கு கூடதான் சண்டை போடுவா ... நான் தான் சின்னபுள்ள தனமாக நடந்துட்டேன்.. நல்லவேளை அவளுக்கு தெரியாது தெரிஞ்சுது அவ்வளவு தான்." என்றான்.

அதைக்கேட்ட ஆருஷி" சரி நீ குணமானதும் அபி கூட போய் தொழில் பயிற்சி எடுத்துக்கோ முடிஞ்சதும் நம்ம பிசினஸ்அ விரிவுபடுத்தாலாம்" என கூறிவிட்டு சென்றான். ஆருஷி அவன் அறைக்கு வந்து தன் நண்பன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்து அதை தன் விரல்களால் வருடி ஒரு விஷம புன்னகையுடன் இரசித்துக் கொண்டிருந்தான். கனவிலும் நினைக்காத வகையில் அவர்களின் சந்திப்பு நடக்க போவதை அறியாமல் அவன் ஒரு கணக்கை வகுத்துக் கொண்டிருந்தான்.

-----------------------------------------------

விக்னேஷை அடித்து விட்டு வந்ததிலிருந்தே மூவருக்குள்ளும் பயம் இருந்து கொண்டே தான் இருந்தது ... எங்கே மீண்டும் பிரச்சனை வந்துவிடுமோ என...

அவனை பற்றி முழுவிவரம் விசாரிக்கும் போது ஒரே பையன் என்றும்.. பணக்காரர்கள் என்றாலும் அவரின் தந்தை அவ்வளவு தைரியசாலி இல்லை தான் உண்டு தன் வேலையுண்டு என தொழில் முடிவுகள் கூட வேறு ஒருவர் தான் எடுப்பர் என்றும் அறிந்தவர்கள் வருவதை பார்த்து கொள்ளலாம் என தான் இறங்கிவிட்டனர்.

அதுவும் தங்கையை தூக்குவேன் என சொல்லியவனை சாதரணமாக விட அவர்கள் ஒன்றும் அவ்வளவு நல்லவர்கள் இல்லையே.. ரவி கூட முதலில் தவறு என நினைத்தவன் பேசி பார்கலாம் என்று தான் நினைத்தான் ஆனால் அவன் மேலும் கோபம் கொண்டு ஸ்ரீ க்கு ஏதும் தொல்லை கொடுத்தால் என்ன செய்ய என்றே சரி என்று கூறினான்.

நினைத்தை செய்த பின் அவர் தந்தை டீசி வாங்கி வருவதை கண்டு தான் சற்று நிம்மதி ஆனார்கள். அதன்பின் அவன் வெளியூர் அனுப்பபட்டான் என்று கேள்வி பட்டதிலிருந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்ரீ க்கு மிகுந்த பாதுகாப்பு செய்தனர். ராம் முன்பை விட அவளுக்கு நிழலாகிபோனான்.அதைவிட முக்கியமாக இந்த விசயத்தை அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.இல்லையேல் ஸ்ரீ யே அனைவரையும் கூட்டி பஞ்சாயத்து வைத்து வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஏனெனில் அவ்வளவு கண்டிப்பு தன்னால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் அவ்வளவு உறுதியானவள்.

நாட்கள் வாரங்களாக அன்று ரவி தன் ஐபிஎஸ் பயிற்சிக்காக டெல்லி செல்லவுள்ளான்..அங்கு அண்ணன் தம்பி என அனைவரின் வீடே பரபரப்பாக இருந்தது..பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா என அனைவரும் ரவியை மாறி மாறி அறிவுரை கூறி உணவுகளை ஊட்டிவிட்டு என வீடே அல்லோலப்பட்டது.. ரவியோ அனைவரின் பாசமழையிலும் விருப்பியே நனைந்தான் எனலாம்..

இரவு கோவையில் பஸ் ஏறி விடியற்காலை ஐந்து மணிக்கு சென்னையில் உள்ள டெல்லி செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும்.. விஷ்ணு வையும் ரவியையும் தனியாக அழைத்து ஸ்ரீ யை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொன்னான்.

ஸ்ரீ ரவியை கட்டிக் கொண்டு ஆல் த பெஸ்ட் சொல்ல ரவியோ தனியாக எங்கும் செல்ல கூடாது என்று பல அறிவுரைகள் கூறினான். இதுவே அவன் ஸ்ரீ யை கடைசியாக பார்ப்பது என தெரியாமல் அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்..

பெரியவர்களிடம் ஆசி வாங்கி கொண்டும் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று தன் கனவை நினைவாக்க சென்றான்.

காலச்சக்கரம் யாருக்கும் காத்திராமல் அதன் பணியை செவ்வனே செய்ய ராமும் ஸ்ரீ யும் கல்லூரியில் இறுதி கட்டத்தில் இருந்தனர். ராமிற்கு பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்திலும், ஸ்ரீ க்கு கோவையிலேயே ஒரு நிறுவனத்திலும் வேலை கிடைத்தது..

ஸ்ரீ க்கு மூன்று மாதங்கள் பயிற்சிக்காக சென்னை செல்லவும் அழைப்பு வந்தது. முதலில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸ்ரீ தனியாக சென்னை செல்வதில் சற்றும் விருப்பம் இல்லை ... அதுவும் ராம் பெங்களூர் செல்ல அவனும் இல்லாது எவ்வாறு தனியே அனுப்புவது என்பதில் துளியும் ஆர்வம் இல்லை..

பின்னர் தான் 'பெண்பிள்ளை சொந்தகாலில் நின்று பழகட்டும் மூன்று மாதங்கள் தானே அதன்பின் கோவையே வந்துவிடலாம்.. சென்னையில் தன் நண்பன் வீடு உள்ளது அவனுடைய பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறாள் .. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று கோபால் பலவாறு பேசியே அனைவரையும் சம்மதிக்க வைத்தார்..

ஏனெனில் ஸ்ரீ அவரின் செல்லமகள் ஆம் அவரின் மனைவி இறந்த பிறகு அவருக்கு ஸ்ரீ யே பெரும் ஆறுதல்.

மற்றவர்கள் தடுக்க ஸ்ரீ நேராக வந்தது தன் கோபால் சித்தாப்பாவிடமே. படித்தவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதே அவளின் எண்ணம்..
அவர் கூறியதும் சரியென படவே அனைவரும் சம்மதித்தனர். இருந்தும் வள்ளி அப்பத்தாவை சமாளிப்பதற்குள் அனைவருக்கும் தான் போதும் போதும் என்றாகி விட்டது.

இறுதியில் அனைவரிடமும் கெஞ்சி கொஞ்சி என சம்மதம் பெற்று என அவள் சென்னை கிளம்பும் நாளும் வந்தது ... மனோஜ் தான் ஸ்ரீ யை கட்டிக் கொண்டு ஒரே அழுகை‌. பின் அவனை சமாதானம் செய்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று கிளம்பினாள்..

இரவு எட்டு மணிக்கு இரயில் குடும்பம் மொத்தமும் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்து விட்டனர். தாயும் சித்திகளும் அவளுக்கு பல அறிவுரைகள் கூறி சவிதா வாழ்த்துகள் கூறியும் வழியனுப்பினர். உடன் ஸ்ரீ யின் தந்தை, விஷ்ணு, கோபால்,ராம், சென்றனர்.

வண்டி கிளம்பும் அறிவிப்பு வர இவளோ வண்டியின் படிகளில் நின்று தன் குடும்பத்தை கண்களால் நிரப்பிக் கொண்டாள்.. ஏனோ மனம் பாரமாக இருப்பது போல் உணர்ந்தால்... பிறந்ததிலிருந்து குடும்பத்தையே பிரிந்து இருந்திராதவள் மூன்று மாதங்கள் எவ்வாறு இருக்க போகிறாள்..

இனி இவர்களை காணவே முடியாதோ என தோன்றிய நொடி இதயம் வேகமாக துடிக்க நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்து பயத்தை போக்க முயற்சித்தாள்.. இரயில் வண்டி நகரத்துவங்க அவளும் அனைவருக்கும் கையசைத்து விடை பெற்றாள்.. மூன்று மாதங்கள் எவ்வாறு அவளை விட்டு இருக்க போகிறோம் என பெரியவர்கள் கண்கலங்கினர்..

இவர்களை கண்ட விதியோ இனி ஆயுசு முழுக்க இதே நிலை தான் என அகோரமாக சிரித்தது...

பார்ப்போம் விதி ஜெயிக்குமா!!! இல்லை இவர்களின் பாசம் ஜெயிக்குமா என்று இனி வரும் நாட்களில்....




(இக்கதையின் போக்கை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே... சரியாக தான் கதை செல்கிறதா என்பதில் சிறு பயம்... உங்கள் கருத்துக்கள் நிறையாயினும் குறைகளாயினும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்.... உங்கள் கருத்துக்களே என் ஊக்கம்... நன்றி ?)
 
Last edited:
Status
Not open for further replies.
Top