"வழியில் உன் வழியில் வந்து வீழ்ந்தேன் இந்த நொடியில் என் எதிர் காலம் நீதான் என்று நிழல் சொன்னதே"
ராமமூர்த்தி பேசியதற்கு ஹரிஷ் கோபமாக பேச வரும் முன், வேகமாக மாடியிலிருந்து இறங்கி எழில் தாத்தாவின் முன் நின்று, இன்னொரு முறை அவனை அப்படி சொல்லாதிங்க அவன் ஒன்னும் தண்டசோறு இல்ல. என முதல் முறையாக அவனுக்காக அவரை எதிர்த்து பேசியிருந்தாள்.
ஏன் நான் அப்படி கூப்பிடகூடாது, அப்படிதான் கூப்பிடுவேன், இவன் வயசுல நான் மிலிட்டரில கேப்டன்.
ஆனா இவன் இன்னும் ஒரு ரூபாய் கூட சுயமா சம்பாதிக்கலனா அதுக்கு தண்டசோறுனுதா பேரு என ஹரிஷை ஒரு ஏளண பார்வை பார்த்தபடி. எழிலிடம் கூற.
தாத்தா இவ்வளவு நாள் நீங்க அவனை என்ன என்னமோ சொல்லியிருக்கிங்க, ஆனா நான் ஏன் அப்படி சொல்லுறீங்கனு கேட்டதில்ல, இனி அவனை அப்படி சொல்லாதிங்க ஏன்னா அவன் என் புருஷன். இதுக்கு மேல அவனை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்ல.
இந்த வீடல இருந்தா தானே அவ உங்களுக்கு தண்டசோறு . அவன் கெரியர்ல சக்சஸ் பண்ணும் வரைக்கும் நாங்க இந்த வீட்டு படி ஏற மாட்டோம்.
ஏய் ஹரிஷ் நீ போய் உன் டிரஸ் எடுத்து வை என அவள் கூற, அந்த நிமிடம் குடும்பமே அதிர்ந்து விட்டது.
அம்மா எழில், இந்த வீட்ல இருக்க காசு வேண்டா, ஆனா வெளிய போனா காசு இல்லாட்டி வேலை ஆகாது கண்ணா என எழிலிடம் தொடங்கிய ராமமூர்த்தி ஹரிஷை பார்த்து சொல்ல.
அது எங்க பிரச்சணை தாத்தா, எங்க வாழ்க்கைய பாத்துக்க என்கிட்ட போதுமான பணம் இருக்கு, உங்க கிட்ட வந்து நிற்போனு மட்டும் எதிர் பாக்காதிங்க என அவள் கோபமாக கூற.
பெண்டாடாடி சம்பாதியத்தில எவ்வளவு நாள் நிம்மதியா வாழ முடியும், சாப்பிடும் போது தொண்டையில உருத்தாதா என அவர் கேட்டதில்.
ஏன் தாத்தா, பெண்ணுங்க சம்பாதியத்தில சாப்பிட்டா மட்டும் உருத்தும், அதே புருஷன் சம்பாதியத்தில பொண்ணுங்க சாப்பிட்ட எங்களுக்கு உருத்தாதா என்ன.
காலம் மாறி போயிடுச்சி தாத்தா, கல்யாணம் பண்ணும் போது ஏழு வலம் வந்து சத்தியம் பண்ணுறோம் இல்ல, அதில ஒன்னு எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு நீ உனக்கு நானு ஒன்னு இருக்கே தாத்தா. அதை உணர்த்த தான் சிவனே தன் பாதியா உமையை வைத்திருக்கார்.
ஹரிஷ் உன்ன பேக் பண்ண சொன்ன என அவள் கோபமாக கத்த, அவன் தன் அறைக்குள் சென்றான்.
அடுத்த நொடி அனைவரும் அவளிடம் எவ்வளவு எடுத்து பேசியும் எதையும் காதில் வாங்காதவள் தன் பையை எடுத்துக் கொண்டு ஹரிஷுக்காக காத்திருந்தாள்.
அவன் வந்தவுடன், ஜெயிச்சிட்டு வந்து பேசுவான் என் ஹரிஷ் என ராமமூர்த்தியின் முகத்தை பார்த்து சொன்னவள். அவரிடம் சென்று கையில் இருந்த சாவியை காண்பித்து இது என் சம்பாதியத்தில வாங்கினது அதனால இதை நான் எடுத்துட்டு போறேன் என்றவள் ஹரிஷிடம் சாவியை கொடுத்து பொட்டியை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல, ஹரிஷ் அவள் பின்னே சென்றான்.
அதை பார்த்தவர், இந்த நைட்ல எங்க தங்குவீங்க, வேணும்னா இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் இடம் தரேன் காலையில போயிடுங்க என ராமமூர்த்தி கூற.
அவரை திரும்பி பார்த்தவள்" மதியாதார் தலைவாசல் மிதியிதே" எங்க தாத்தா எனக்கு சொல்லி கொடுத்தது. என வேகமாக நடக்க,
வீட்டினர்கள் எத்தனை முறை சொல்லியும் தன் பிடிவாதத்தை மாற்றாதவள், ஹரிஷ் அவளது ஸ்கூட்டியை எடுக்க அதில் ஏறிக் கொண்டாள்.
இருவரும் அமைதியாக நெடு தூரம் செல்ல, ஒரு பேருந்து நிறுத்ததத்தில் வண்டியை நிறுத்தியவன், எழிலை பார்த்து ஒரு நிமிஷம் என பேனை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் தள்ளி நின்று பேசியவன். வண்டியை எடுத்துக் கொண்டு ஸ்டுடியோ முன் நின்றான்.
எழில் அவனை புரியாமல் பார்க்க, வா என்றவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
காலை நான்கு மணியே ஆகியிருக்க, ஸ்டுடியோவில் உள்ள அனைவரும் சுருசுருப்பாக டியூனை பிராக்டீஸ் செய்துக் கொண்டிருந்தனர்.
ஹரிஷை பார்த்த ஆரவ், எழுந்து வந்து, ஹாய் எழில் எப்படி இருக்க என்றான்.
நல்லா இருக்கேன்.. நீங்க.
சூப்பர் மா, உன் புருஷனால இந்த படத்தோட மியூசிக் நல்லபடியா நடந்திட்டு இருக்கு, இன்னும் ஒரு வாரத்தில வேலை முடிக்கனும் அதா நைட்ல இங்க இருக்கான் தப்பா எடுத்துக்காத, என்றவன். எழில் முன் சாவியை நீட்ட,
அதை புரியாமல் பார்த்தவள், ஹரிஷை பார்த்தாள்.
என்னமா அவனை பாக்குற, இது உங்க கல்யாணத்துக்கு நான் கொடுக்கனும்னு வைத்திருந்த பரிசு, அப்ப வீட்டு வேலை முடியல அதா கொடுக்க முடியல. இப்ப வாங்கிக்கோங்க என அவன் நீட்ட.
இல்ல அண்ணா, வேணாம் என அவள் மறுக்க.
எழில் இது என்னோட பரிசு என அவன் அழுத்தமாக கூற, அவள் ஹரிஷை பார்க்க அவனோ வாங்கிக்க என கூற. அதை வாங்கிக் கொண்டாள்.
கரண் காபியோடு அங்கு வர, அனைவரும் காபியை அருந்தினர்.
ஹரிஷ் நீ இன்னைக்கு வீடு செட் பண்ணிடு நாளைக்கு ஸ்டுடியோ வா, வேற எதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுடா என்க.
ஓகே சார், என்றவன் எழுந்து செல்ல. எழில் கையில் இருந்த சாவியை பார்த்து தேங்கஸ் ணா நீங்க பண்ண ஹெல்ப் எப்பவும் மறக்க மாட்டேன் என்றாள்.
ஒரு அண்ணனா தங்கச்சிக்கு செஞ்சது ஹெல்ப் இல்ல கடமை, என அவன் அவள் தலையை வருட, அவளும் சிரித்தபடி சென்றாள்.
வீட்டிற்கு வந்தவர்கள் அங்கிருந்த செட்டப்பை பார்த்து வியந்து விட்டனர். ஹாலில் இருந்த சமயல் அறை வரை தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி வைக்க பட்டிருந்தது.
இருவரும் அமைதியாக தங்கள் பெட்டிகளில் உள்ள பொருட்களை அறையில் அடுக்க, அங்கு பொருட்களின் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்க வில்லை.
தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்தவன் ஹாலில் அமர, அவளோ சமையல் அறையில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தாள்.
இவ அங்க என்ன பண்ணுறா, நம்ப ஆளுக்கு சமைக்க தெரியாதே என எண்ணியவன் சமையல் அறையின் உள்ளே செல்ல,
அங்கு டேபுலின் மேல் இருந்த நான்கு வெள்ளை மாவுகளை கையில் எடுத்து எடுத்து பார்த்தவள், இதுவா இல்ல அதுவா என கன்னத்தில் கை வைத்து யோசிக்க. அதை பார்த்தவன் அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பில் திரும்பியவள், என்ன என புருவம் உயர்த்த.
என்ன டி பண்ணுற குள்ளச்சி என்றான்.
ஒரு வாரம் முழுவதும் கேட்காத அவனின் பிரத்யோக அழைப்பு, அதுவே அவள் உணர்வை பெருக்க அவள் கண்களில் நீர் பெருகியது அதை அவன் பார்க்கும் முன் மறைத்தவள் தன்னை சமன் படுத்திக் கொண்டு.
இதுல எது தோசை செய்யுற மாவு ஹரி என அவன் முன் இரண்டு டப்பாவை நீட்டி கேட்க.
அடி பாவி, உன் கூட வந்த முதல் நாளே என் உயிருக்கு உத்திரவாதம் இல்ல போல.
அம்மா தாயி, நீ ஒன்னும் செய்ய வேண்டாம் வெளிய வா. என அவளை கையை பற்றி இழுத்து வர.
ஹரி பசிக்குதுடா, சாப்பிட வேண்டாமா
வெளிய சாப்பிட்டுக்கலாம் நீ முதல்ல வாடி, என அவளை இழுத்து வந்தவன் அவள் கன்னத்தில் இருந்த மாவை துடைத்து விட்டு, அவள் உடையை கண்டு.எங்க போற, இப்ப சாரி கட்டியிருக்க என கேட்க.
காலேஜ் போறேன் டா.
சரி வா சாப்பிட்டு காலேஜ் போயிடு, நானும் ஸ்டுடியோ போயிடுவ என்றவன் சாவியை எடுத்துக் கொண்டு செல்ல,
வீட்டை பூட்டியவள் அவனுடன் வண்டியில் சென்றான்.
ஹோட்டலில் காலை உணவை முடித்து, வெளியே வந்தவன் அவளிடம் சாவியைக் கொடுத்து பாத்து போ என கூற.
ஏய் எங்கடா போற, என்றாள்.
நான் அப்படியே ஸ்டுடியோ போயிடுறன்டி நீ பாத்து போ என்க.
அவன் கையை பிடித்தவள் அதில் சாவியை வைத்து, இது உனக்கு தான் நான் பஸ்ல போய்குறேன் என்றாள்.
ஏய், வேணா என அவள் கையில் சாவியை கொடுக்க முயன்றவன். நான் நடந்தே போயிடுவ வாக்கபல் டிஸ்டென்ஸ் தா நீ பஸ்ல எல்லா போகாதா பிடி என அவன் அவள் கையை பிடிக்க, அதில் முடியிருந்த அவள் விரல்கள் திறக்க மறுத்தது.
எழில் பிளீஸ் நீ எடுத்துட்டு போ என அவன் கூற.
உனக்கு வேணும்னா எடுத்துட்டு போ, இல்ல நா தொடமாட்டன்னா அந்த சாவிய அப்படி தூக்கி போட்டுட்டு போ என்றாள் கோபமாக.
எழில்....ல்... அவன் இயலாமையில் அழைக்க.
என்னை பத்தி உனக்கு தெரியும் என்றாள் பிடிவாதமாக. ஆம் அவள் பிடிவாதம் அவன் அறிந்ததே அவன் ஒருவனுக்காக குடும்பத்தையே துறந்தவள் ஆவாளே.
சரி வண்டிய நான் எடுத்துட்டு போறேன் ஆனா ஒரு கன்டிஷன் என்றான்.
அவன் கன்டிஷனில் குழம்பியவள் என்ன என்று கேட்க.
தினமும் நான் தான் உனக்கு டிரைவர் ஓகேவா என அவன் புருவம் உயர்த்தி கேட்டதில் சிரித்தவள்.
டூவீலருக்கு டிரைவர் அதுவும் ப்ரீயா வேணானு செல்ல நா என்ன லூசா, போலாம் பாகனே நேரம் ஆகிவிட்டது என அவள் சிரித்தபடி கூற.
சரிங்க மகாராணி போகலாமே, என அவன் வண்டியை கிளப்பினான்.
சாரல்_7 "எதற்காக நீ என்னை தவிர்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்"
கல்லூரிக்கு சென்றவள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முதன்மையர் அறைக்குள் சென்று, குட் மார்னிங் சார் என்றாள்.
குட் மார்னிங் தாத்தா என்பது இன்று சாராக மாறியிருக்க, அதை அறிந்தவர் தலை அசைத்து பதில் வணக்கத்தை தெரிவித்திருந்தார்.
அவளின் சார் என்ற அழைப்பு, அவள் இந்த கல்லூரி ஊழியர் என்பதை கூற, அதை அறிந்தவரின் உள்ள தீயாய் சுட்டது. இருந்தும் தன்னுடைய திட்டம் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என பொறுத்துக் கொண்டார்.
எழில் கல்லூரிக்கு வந்ததை அறிந்த விஜயனும் மணியும் அவளை பார்க்க வர, அவளோ மார்னிங் சார் என்று கடந்து சென்று விட்டாள்.
அவளின் பிடிவாத குணத்தை அறிந்தவர்கள், தந்தையும், மாமாவையும் மீறி எதுவும் செய்ய முடியாது என வேலையை கவனிக்க சென்றுவிட்டனர்.
ஸ்டுடியோவிற்கு சென்றவனை பார்த்த ஆரவ்,
ஹரிஷ் உன்னை நாளைக்கு தானே வர சொன்ன எதுக்கு இப்ப வந்த என கேட்க.
இல்ல சார், வீட்ட நீங்களே அழகா ரெடி பண்ணி தரும் போது எனக்கு அங்க என்ன வேலை இருக்கு, அதா இங்க வந்துட்டேன்.
சரி, சாப்பிட்டியா..
சாப்படேன் சார் என்றவன், இசை குறிப்புகளை எடுத்துக் கொண்டு திரை காட்சியோடு பொருத்த துவங்கினான்.
அவன் வேலை அவனை அன்னம் தண்ணீர் என அனைத்தையும் மறந்து செய்ய வைக்க, மாலை நேரம் ஆனது தெரியாமல் வேலையில் மூழ்கி இருந்தான்.
அவனுக்காக கல்லூரியில் ஆறு மணி வரை காத்திருந்தவளை, ராமமூர்த்தி குழப்பமாக பார்க்க, விஜயனோ எழில் வாடா வீட்ல விடுறேன் என்றார்.
இல்ல சார், நானே போய்டுவேன் என்றவள். காலேஜ் கேம்பசில் நடக்க. அதை பார்த்த ராமமூர்த்தி அவனை எல்லா நம்பினா நடு தெருனு பதினாலு மணி நேரத்தில நிருபிச்சிட்டான் பாரு என உரக்க கூற.
அப்போது தன் அருகே வந்த வண்டி சத்தத்தில் நிமிர்ந்தவள். பதினாலு யுகம் ஆனாலும் என்னை நடு தெருவுல நிறுத்த மாட்டான். நீங்க கவலை படாம போங்க பிபி ஏறிட போகுது என்றவள் அவன் பின்னே ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
பாத்தியா மணி, உன் பொண்ணுக்கு கொழுப்ப அவனுக்காக என்னையே எதிர்த்து பேசுறா.
சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா விடுங்க மாமா, வாங்க போலாம் என்றார்.
வண்டியில் சென்றவன், முன் கண்ணாடியில் எழில் முகத்தை பார்த்து எண்ண சிந்தனை பலமா இருக்கு என்றான்.
ஆ...ஆங்.. என சுய நினைவிற்கு வந்தவள் ஒன்னும் இல்லையே என்க.
நா வரும் போது என்ன பேசின அவர் கிட்ட.
யாரு கிட்ட டா...
உங்க தாத்தா கிட்ட..
அவர் எனக்கு மட்டும் தான் தாத்தாவா என புருவம் உயர்த்தி கேட்டவளை கண்ணாடி வழியே ரசித்தவன்.
சாரி என்றான்.
எதுக்கு? சாரி
லேட் ஆகிடுச்சில அதா.. டியூன் செட் பண்ணிட்டு இருந்ததுல மறந்திட்டேன். கரண் நீ வந்திட்டு இருப்பியானு கேட்ட பிறகு தான் ஞாபகம் வந்தது. இனி கரெக்ட் டைமுக்கு வந்திடுறேன்.
பராவாயில்ல விடு, காலையில மட்டும் நீ கொண்டு போய் விடு, ஈவ்னிங் நானே வந்திடுறேன்.
இல்ல நான் அலாரம் செட் பண்ணிட்டேன் இனி கரெக்ட் டைமுக்கு வந்திடுவேன். என்றவன் அவளை வீட்டில் விட்டு ஸ்டியோவிற்கு சென்றிருந்தான்.
புது வீடு யாரும் இல்லாத தனிமை பெரியதான ஹால் என எல்லாம் இரவு நேரத்தில் அவளை பயம் கொள்ள செய்ய. பயந்தபடி அமர்ந்திருந்தவள் ஹரிஷுக்கு அழைத்தாள்.
சொல்லு குள்ளச்சி என்ன?.. என்க
எப்ப வருவ என்றாள்.
லேட் ஆகும் டி நீ லாக் பண்ணிட்டு படுத்து தூங்க. நா இன்னொரு கீல திறந்துக்குறேன்.
சரி என்றவள், அழைப்பை துன்டித்துவிட்டு அவனை அர்சிக்க துவங்கினாள்.
பயத்தில் இரவு தனியாக உறங்க முடியாமல் அவனுக்காக ஹால் சோபாவில் ஓரத்தில் அமர்ந்திருக்க. இரவு மின்சாரம் துன்டிக்கப்பட்டது அதில் பயந்தவள் அம்மா...ஆஆ என்று கத்த, உடனே அருகில் யாரும் இல்லை என உணர்ந்தவள் பயத்தில் சரவண பவ சொல்லிக் கொண்டாள்.
அரை மணி நேரம் ஆகியும் கரண்ட் வராமல் இருக்க, பயத்தில் வியர்வை வழிய அமர்ந்தவள் சரவண பவ வை மட்டும் விடவில்லை.
தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவு திறந்தவனை டார்ச் ஒளியில் அறிந்தவள் எழுந்து சென்று பயத்தில் அவனை கட்டி அணைக்க.
அவளின் வேகமான இதய துடிப்பையும் விம்மலையும் உணர்ந்தவன், எழில்.. எழில்... செல்லம்ல அழாதடா சாரி, இனி லேட்டா வர மாட்டேன். சாரி என அவள் முகத்தை உயர்த்த. கரண்ட் வந்தது.
கண்ணீர் கோடுகள் அவள் கன்னத்தில் பதிந்திருப்பதை பார்த்தவன் மனம் பதைபதைக்க.
சாரிடி...சாரி அழாத என கண் துடைத்து அருகில் இருந்த தண்ணீரை கொடுக்க. அதை குடித்தவள். அமைதியாக சோபாவில் அமர்ந்தாள்.
அவள் மனதை மாற்ற எண்ணியவன். என்ன, ஜான்சி ராணி ஹிட்லரை தனி ஆளா சமாளிக்குற நீங்களே, கரண்ட இல்லாததுக்கு இப்படி பயப்படலாமா என அவள் முன் மண்டியிட்டு கேட்க.
அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடித்தபடி போடா லூசு, பன்னி, மாடு***** என அவள் அறிந்த வார்த்தைகளில் அவனை விலங்கினங்களோடு சேர்க.
தலையணையை பிடுங்கி எறிந்தவன் அடிக்காதடி வலிக்குது என்க, அவளோ
தன் கைகளில் அவனை அடித்துக் கொண்டிருந்தாள். அவள் அடித்தது வலியில்லாத போதிலும் போலி கோபத்தோடு,
எதுக்குடி இப்படி ஓவரா பண்ணுற கரண்ட் தானே ஆப் ஆச்சி அதுக்கு இப்படி பண்ணினா நான் போறேன் என அவன் எழுந்து செல்ல,
அவன் கூறியதில் கோபமானவள் எனக்கு யாரும் இல்லங்குறதால தான இப்படி தனியா விட்டுட்டு போற, போடா போ எனக்கு யாரும் வேணாம் என அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து விட்டாள்.
அவன் விளையாட்டிற்கு சொன்னது அவள் மனதை பாதித்திற்கிறது என அறிந்தவன் வேகமாக உள்ளே சென்று எழில் என அழைக்க.
முகத்தை திருப்பிக் கொண்டு முழுவதுமாக போர்வை போர்த்திக் கொண்டாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்தவன் அவளை மேலும் சீண்ட எண்ணி, மொத்த இடத்திலும் நீயே படுத்திட்டா நா எங்க படுக்க என்றான்.
தலையணையை எடுத்தவள் கட்டிலுக்கு கீழே சென்று படுக்க, மெத்தையில் படுத்தவன் மேல இடம் இருக்கு வரவங்க வரலாம்.. என அவளை எட்டி பார்த்தபடி கூற.
அவளோ அமைதியாக படுத்திருந்தாள்.
எழில்... எழில்... என அழைத்தவன் குனிந்து பார்க்க அவள் தூங்கியிருந்தாள்.
அவளையே பார்த்தபடி இருந்தவன் இந்த கோபத்துக்கு மட்டும் குறை இல்ல, என அவளை தூக்கி மெத்தையில் படுக்க வைத்து அவள் அருகே உறங்கினான்.
காலை அலரத்தில் எழுந்தவள் அருகே இருந்த காபி பிளாஸ்கை பார்க்க அதில் ஒட்ட பட்டிருந்த பேப்பரில் " மார்ரிங் டி குள்ளச்சி, நீ ரெடியாகி இரு நா வந்து காலேஜ்ல விடுறேன். மறக்காம இந்த பிளாஸ்க்ல இருக்க காபிய குடிச்சிடு" என எழுதி கீழே ஸ்மைலி வரைந்திருக்க. அதை பார்த்தவள் அமைதியாக பிளாஸ்கை இருந்த இடத்தில் வைத்து சென்று விட்டாள்.
காலை அவன் வரும் பொழுது வீடு பூட்டி இருக்க, குழம்பியவன் அவளுக்கு அழைத்தான். அவளோ போனை எடுக்காமல் போக மீண்டும் மீண்டும் அடித்தான்.
எழில் அருகில் இருந்த அவள் தோழி கவிதா, ஏய் போன எடுத்து என்னனு பேசு என்றாள்.
எழில் அமைதியாகி வர, அதில் கடுப்பானவள் போனை எடுத்து ஹலோ என்க,
எங்க இருக்க போன் எடுக்க இவ்வளவு நேரமா என அவன் கோபமாக கேட்க.
அண்ணா நா கவிதா பேசுறேன் என்றாள் அவன் குரலில் பயந்து.
கவி, அவ எங்க என்றான் கடுப்பாக
என் கூட தா அண்ணா இருக்கா, காலேஜ் போயிட்டு இருக்கோம் என்ன அண்ணா அதாவது சொல்லனுமா என்றாள்.
இல்ல கவி, எதுல போறீங்க
காலேஜ் பஸ்ல அண்ணா.
சரி கவி அவ இன்னும் சாப்பிடல சாப்பிட சொல்லு, நா ஈவ்னிங் வரேனு சொல்லு என அழைப்பை துன்டித்தவன். கோபமாகவே வேலையை செய்ய துவங்கினான்.
எழிலிடம் போனை கொடுத்தவள், என்னடி பிரச்சணை உனக்கு ஏன் அவரை இப்படி கஷ்ட படுத்துற என்க.
ஆமா டி நான் தான் கஷ்ட படுத்துற என்றவள். ஜன்னல் புறம் திரும்ப. கவிதாவோ இங்க ஏதோ உள்நாட்டு போர் போல நமக்கு வேணாம் என்றவள் அமைதியானாள்.
எழில் மேல் இருந்த கோபத்தில் அங்கு சரியாக டியூன் எடுக்காதவர்களை எல்லாம் கடுமையாக திட்டியவனை அனைவரும் வியப்பாக பார்த்தனர்.
வேலை சரியாக செய்யாதவர்களையும் அவர்களின் வழியில் சென்று ஊக்கபடுத்தி விரும்பி வேலை செய்ய வைப்பவன் இன்று கோபமாக பேசியது அனைவரையும் அதிர வைத்தது.
ஹரிஷ், வா வெளிய போகலாம் என கரண் அவனை காபி ஷாப்பிற்கு அழைத்து சென்றான்.
வெளியே சென்றவன் மனம் சற்று நிலைப்பெற்று இருக்க, திரும்பி வந்தவன் அமைதியாகவே டியூன்களை சரி பார்க்க துவங்கினான்.
வேலையில் இருந்தவனை அவன் அலாரம் மீண்டும் எழிலை நினைவுபடுத்த, போனை எடுத்துக் கொண்டு அவளை அழைக்க சென்றுவிட்டான்.
காலேஜ் வெளியே அவன் நிற்க அவனை பார்த்தவளோ கவிதாவுடன் பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.
அதை பார்த்து கோபமானவன் கவிதாவிற்கு அழைக்க, அவளோ பயந்தபடி போனை ஆன் செய்தாள்.
கவிதா அவ வரமாட்டாளாமா என கோபமாக கேட்க.
கவிதாவோ பயந்தபடி, எழில் அண்ணா கூட போடி என்றாள்.
அவளை பார்த்தவள் முடியாது என அழுத்தி சொல்ல, அதை கேட்டவன் போனை வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
"காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்"
எழில் தன்னுடன் வராததால் கோபமானவன் ஸ்டுடியோவிற்கு சென்று வேலை செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்றான்.
அறையில் பாடத்திற்கு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளை பார்த்தபடி, சாவியையும் கைகடிகாரத்தையும் மேசை மேல் வைக்க, அங்கிருந்த காபி பிளாஸ்கை கண்டான்.
அதை எடுத்து பார்த்தவன், அவள் அவன் வைத்து சென்ற காபியை ஒரு துளியும் அருந்தவில்லை என தெரிந்தது. அதனுடன் அவளிடம் சென்றவன்
ஏன் காபி குடிக்கல, என்றான்.
அவன் யாருடனோ பேசுவது போல் நினைத்து அவள் அமைதியாக அவள் வேலையை பார்க்க,
என்ன கொழுப்பாடி உனக்கு கேட்டா பதில் சொல்ல முடியாதா என அவன் கேட்க. அதற்கும் பதில் வராது போக, பிளாஸ்கை மேசையில் வைத்துவிட்டு ஹாலுக்கு சென்றுவிட்டான்.
கண்களை மூடி மூச்சிழுத்துவிட்டவனின் கோபம் மட்டுபடாமல் போக, தன் எண்ணத்தை மாற்ற இசை குறிப்பெழுத தொடங்கினான்.
பல குறிப்புகளை எழுதியவன் அதை வாசித்து பார்க்க தன் கிட்டாரை தேட, அப்பொழுதே அவன் மூளைக்கு உரைத்தது அது உடைந்து போனது என்று. உடனே கரணை அழைத்தவன் கிடாரைக் கொண்டு வந்து கொடுக்கும் படி கூற. அடுத்த அரை மணி நேரத்தில் கிடார் கிடைத்தது.
தான் உருவாக்கிய இசை குறிப்புகளை கிடாரில் வாசித்து, குறிப்பில் சில திருத்தங்களை செய்ய தொடங்கினான்.
பாட குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவள் காதில் கிடார் இசை கேட்க, அறையிலிருந்து எட்டி பார்த்தாள்.
ஹரிஷ் கரண் கிட்டாரில் வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தவள். தன் வேலையை செய்ய தொடங்கினாள்.
கிடாரில் வாசித்து முடித்தவன், போனில் பியானோ கீ போர்டில் வாசிக்க. அவன் வாசிப்பதை பார்க்க ஆவலானவள் புத்தகத்தை மூடிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.
அவன் உருவாக்கிய புதிய இசையில் மூழ்கியவள் பால் சுண்டியதை அறியவில்லை. அவன் நிறுத்திய பின்னே நினைவிற்கு வந்தவள் பால் கிண்ணத்தை பார்க்க அதில் ஒரு கிளாஸ் பாலே இருந்தது.
அதை குடித்தவள் பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு அறைக்குள் சென்றாள்.
இசை குறிப்புகளை வாசித்து பார்த்தவனின் வயிற்றில் எலியும் பூனையும் சண்டையிட, கிடாவை சோபாவில் வைத்தவன் அறையை எட்டி பார்த்தான்.
அங்கு எழில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். சாப்பிட்டாளானு தெரியலையே என்றபடி பால் பாத்திரத்தை பார்க்க அது சுத்தபடுத்தி இருந்தது.
அடி பாவி, அரை லிட்டர் பால ஒன்னா குடிச்சிருக்கா ஒருத்த பட்டினியா இருக்கானு கவலை இருக்கா ராட்சசி, என அவளுக்கு பல அர்சணைகளை செய்தவன் வாழை பழத்தை சாப்பிட்டு விட்டு கீழே படுத்திருந்தவளை மெத்தையில் படுக்க வைத்து அருகில் படுத்து விட்டான்.
காலை அலாரம் அடிக்க எழுந்தவள் தன் வேலையை முடித்துவிட்டு கீழே வர அவளுக்காக காத்திருந்தான் ஹரிஷ்.
அவனை கவனிக்காதவள் போல முன்னே நடந்து செல்ல, அவனும் அவள் அருகே வண்டியை வேகமாக கொண்டு நிறுத்தினான். அவள் கவனிக்காமல் முன்னே செல்ல அவனும் தொடர்ந்து செல்ல, அவனை கவனிக்காதது போல் பஸ்ஸில் ஏறிக் கொண்டாள்.
அவள் சென்றவுடன், ஸ்டுடியோவிற்கு சென்றவன் தன் அறையில் உள்ள மேசையில் படுத்து விட,
அவனை பார்க்க வந்த கரண், என்ன மச்சா டயாடா இருக்க என்ன விஷயம் எதாவது ஸ்பெஷலா என கேட்க.
அட போடா முகம் கொடுத்தே பேச மாட்டங்குறா இந்த நிலைய ஸ்பெஷலாவா. என அவன் குறை பட.
என்ன மச்சா என்ன ஆச்சி, நீ என்ன பண்ணின.
நா ஒன்னும் பண்ணலடா, நேத்து முழுக்க பேசல, இன்னைக்கு வா கொண்டு போய் காலேஜ்ல விடுறேனு சொல்லுற, பதிலே பேசாம பஸ்ல ஏறி போறாடா, போன் போட்டா எடுக்க மாட்டேங்குறா, எனக்கு தெரிஞ்சி அவ காலையிலயும் நைட்டும் சாப்பிடுறதே இல்ல. பால குடிச்சிட்டு உயிர் வாழுறா, என் கையால காபி கொடுத்தா கூட குடிக்க மாட்டேங்குறாடா என அவன் குற்ற பத்திரிக்கை வாசிக்க.
என்ன மச்சா தனியா வந்த ஒரே நாள்ல இவ்வளவு கஷ்டமா போயிடுச்சே உன் நிலைமை என அவன் சிரிக்க.
டேய் சிரிக்காத கடுப்புல இருக்கேன் அடிச்சிட போறேன் என அவன் சொல்ல.
சரி மச்சா, சிரிக்கல, உன் கையால காபி கூட குடிக்க முடியாத அளவுக்கு நீ என்ன பண்ண சொல்லு என கரண் கேட்க.
நான் ஒன்னும் செய்யலடா, முதல் நாள் வீட்டுக்கு லேட்டா போனல அப்ப பயந்து இருந்திருக்கா, அந்த நேரத்தில கரண்ட் போயிடுச்சி என நடந்த அனைத்தையும் அவன் கூற முடிக்க.
அதை கேட்ட கரண், நீ செய்த வேலைக்கு அவ உன் கூட இருக்குறதே அதிகம் டா என்றான்.
என்னடா நீ இப்படி பேசுற, என ஹரிஷ் கவலையாக கேட்க.
பின்ன என்னை என்ன சொல்ல சொல்லுற, உனக்காக உன் கெரியர்காக, உங்க ஹிட்லரை எதிர்த்து பேசி உன் கூட வாழ வந்தவளை பாத்து நீ இங்கிருந்து போயிடுவனு சொன்னா என்ன அர்த்தம்,
அவளை பத்தி உனக்கு நல்லா தெரியும் கரண்ட் இல்லனா அவ எப்படி இருப்பானு தெரிஞ்சி, அவ நிலைமைய புரிஞ்சிக்காம நீ விளையாட்டுக்கு பேசுறனு போடா... எதாவது சொல்லிட போற என கரண் அவனிடம் பேசிக் கொண்டிருக்க, கரணின் மொபைல் ஒலித்தது.
அதில் தெரிந்த பெயரை பார்த்தவன் போனை ஸ்பீக்கரில் போட்டு,
சொல்லு எழில் என்றான்.
கரண் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணும்டா பண்ணுவியா என அவள் கேட்க.
ஏய் என்னடி புதுசா ஹெல்ப் எல்லா கேக்குற என்னனு மட்டும் சொல்லு என்க.
நான் உனக்கு பணம் அனுப்சியிருக்கேன் நீ ஹரிக்கு பிடிச்ச மாதிரியான் கிடார் வாங்கிக் கொடு டா என்க.
எதுக்குடி அவனுக்கு கிடார் அதா ஸ்டுடியோ முழுக்க இருக்கே என்றான்.
அட லூசு, உன்ன வாங்கி கொடுக்க சொன்ன அவ்வளவு தான். உன்ன கேள்வி கேட்க சொல்லல புரியுதா. என எழில் பேசியதை யோசித்தவன்.
இவர்கள் இருவரையும் சேர்க்க எண்ணி உடனே திட்டம் போட்டான்.
வாத்தியார் அம்மா நீங்களே உங்க புருவனுக்கு வாங்கி கொடுங்க என்னால அது என்ன சொன்னிங்க என யோசித்தவன்.. ஹெல்ப்.. அதே தான் ஹெல்ப் பண்ண முடியாது என்றான்.
சரி டா தகரடப்பா நானே என் புருஷனுக்கு வாங்கி கொடுத்துக்குற நீ அங்க இருக்க தகரடப்பாவேயே தட்டு. என்றவள் அழைப்பை துன்டித்திருந்தாள்.
பாரு மச்சா இப்ப கூட உனக்காக எப்படி பாத்து பாத்து செய்யுறா அவள போய் அப்படி பேசிட்டியே டா என அவன் குறைபட.
மச்சா உண்மையாவே வேணும்னு அப்படி சொல்லலடா, விளையாட்டா சொன்ன அது அப்படி ஆகும்னு எனக்கு தெரியாது.
மச்சா பெண்ணுங்கள பொருத்த வரைக்கும் யாரே ஒருத்தம் நம்பல தப்பா பேசினா பெருசா எடுத்துக் மாட்டாங்க, ஆனா அதே நமக்கு ரொம்ப நெருங்கினவங்க உன்ன விட்டு போறேனு விளையாட்டுக்கு சொன்னாலும் தாங்கிக்க மாட்டாங்க.
முதல்ல அவளை புரிஞ்சிக்க, இப்ப அவ உனக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்திருக்கா அவ கூட நேரம் செலவு பண்ணு, கிடைக்குற நேரத்தில அவள சந்தோஷமா பாத்துக்க. உன்கிட்ட கிடார் இல்லனு ரொம்ப பீல் பண்ணுறா அதனால,
ஈவ்னிங் நீ காலேஜ் போ கன்டிபா உன் கூட தா வருவா, உனக்கு கிடார் வாங்கனும்ல என்றான்.
உண்மையா வருவாளாடா என்றான் ஏக்கம் கலந்த குரலுடன்.
அட என் பாப்பா எவ்வளோ கஷ்ட படுது, கன்டிபா வருவாடா. இப்ப நம்ப வேலைய பாக்கலாமா என கேட்க.
ஏய் உன் அங்க டியூன் சொல்ல சொன்னா இங்க என்கிட்ட பேசிகிட்டு இருக்க என ஹரிஷ் குரல் உயர்த்த.
புருஷனும் பொண்டாட்டியும் ஒருமார்கமா தான் டா இருக்கீங்க. என தலையை ஆட்டியவன், இரு இரு எனக்கு ஒரு நேரம் வராதா என்ன. அப்ப வச்சுக்குற என வெளியே சென்றான்.
மாலை நேரமானவுடன் ஹரிஷ் செல்வதை பார்த்த கரண்.
என்ன மச்சா கிடார் வாங்க போறீயா, என்க.
இல்ல மச்சா என் பொண்டாட்டிய சமாதானம் படுத்த போறேன்.
பண்ணிடுவியா?
பாக்க தானே போற, என்றவன் வண்டியை எடுத்துக் கொண்டு காலேஜை நோக்கி சென்றான்.
அவன் அவளுக்காக காத்திருக்க, பொறுமையாக வந்தவள் அவனை பார்த்தவுடன் நின்று, அவள் மூளை யோசனையில் ஆழ்ந்திருந்தது.
ஹரிஷூக்கு கிடார் வாங்க வேண்டும் எனில் அவனுடன் தான் இன்று செல்லுவேண்டும் என மூளை கூற, கவிதாவிடம் விடை பெற்றவள் வண்டியில் ஏறிக் கொண்டாள்.
அவள் ஏறியதும் ஹரிஷ் சிரிப்பை அடக்கியபடி, என்ன குள்ளச்சி கோபம் எல்லா போயிடுச்சா? என கேட்க.
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் அமைதியாக வர, அதை அறிந்தவன். அமைதியாகவே வண்டியை செலுத்தினான்.
சிறிது தூரம் சென்றதும் எழில் ஹரிஷை கண்ணாடியில் பார்த்தபடி கிடார் ஷாப் போகனும் என்றாள்.
எதுக்கு என்றான் ஒற்றை வார்த்தையில் அனைத்தையும் அறிந்துக் கொண்டு.
போகனும் என அவள் மீண்டும் அதே சொல்ல.
கடையின் முன் வண்டியை நிறுத்தினான். அவனுடன் சென்றவள் கடையில் லேட்டஸ்ட் மாடல் கிடாரை காட்ட சொல்ல,
ஹரிஷ் ஒரு கிடாரை கொண்டு வந்து. இது ஓகே என கூற. அந்த பழைய மாடல் கிடாரை பார்த்தவள் கோபமான முகத்துடன் அதை வாங்கி கடை காரரிடம் கொடுத்து விட்டு புதிய மாடல் கிடாரை அவன் கையில் கொடுத்தாள்.
அதை அவன் வாசித்து பார்த்து ஓகே சொல்ல, பணத்தை கொடுத்துவிட்டு வெளியே சென்றனர்.
அங்கிருந்து ஓட்டலுக்கு சென்றவன், அவளுக்கு பிடித்த உணவுகளை ஆடர் செய்ய அது அவள் முன் பந்தியிடப் பட்டிருந்தது.
அதை பார்த்தவளின் நா உழிழ் நீரை சுரக்க, இரண்டு நாட்களாக பாலை மட்டும் அருந்தி வந்தவளின் உண்ணா விரதத்தை ஹரிஷ் இன்று முடித்து வைத்திருந்தான்.
வீட்டிற்கு சென்றவள் உடை மாற்றிவிட்டு பாட குறிப்பெடுக்க துவங்க, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் ஹரிஷ்.
சாரல் _9 "கூட்டத்தில் இருந்தும்
தனியாக தெரிந்தாய்
தோட்டத்தில் மலர்ந்த
பூவாக திரிந்தாய்
என்னை ஏதோ செய்தாய்"
பாட குறிப்பெடுத்து கொண்டிருந்தவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன். அவன் பாதத்தை தன் தொடை மேல் வைக்க அதில் மிரண்டவள். தன் காலை இழுக்க அவனோ அதை திடமாக பிடித்திருந்தான்.
தன் பாக்கெட்டிலிருந்த கொலுசை எடுத்தவன் அவள் காலில் போட, அதை பார்த்தவள் கண்களில் அவள் அறியாமல் கண்ணீர் சிந்தியது.
அவள் ஒரு முறை அவனிடம் ஆசையாக கேட்க விஷயம் அல்லவா இது.
ஹரி உன்னோட முதல் சம்பளத்தில எனக்கு கொலுசு வாங்கி கொடுடா என அவள் ஆசையாக கேட்டதை இன்று அவன் நிறைவேற்றியிருந்தான்.
எப்ப சம்பளம் வாங்கின என அவள் சந்தோஷமாக கேட்க.
என்னோட மியூசிக்கு ஆரவ் எனக்கு 40% ஷேர் பேசியிருந்தார். அதுல நேற்து 10% ஷேர் கொடுத்தார் மீதம் இரண்டு நாள் கழித்து வரும் என்றபடி அவள் இரு காலிலும் கொலுசு அணிவித்தவன்.
அவள் முகத்தை தன் இரு கையில் ஏந்தியபடி, சாரி டி அன்னைக்கு அப்படி பேசினதுக்கு, தெரியாம விளையாட்டுக்கு பேசிட்டேன் என கூற.
அவள் முகம் முழுவதும் சிகப்பேறி இருப்பதை கண்டவன். அழனும்னா அழு, நான் தப்பா பேசினா இந்த காலரை பிடிச்சி ஏன்டா அப்படி சொன்னனு கேளு அதவிட்டுட்டு என் கூட பேசாம இருக்காதடி, ரொம்ப வலிக்குது என தன் நெஞ்சை தொட்டு காட்டியவன் அவள் ஸ்டாபரி முகத்தில் நெற்றியில் முத்தம் இட, அவளோ அவனை அரைந்திருந்தாள்.
ஏய் என கன்னம் பற்றியவன், எதுக்குடி என்ன அடிச்ச என்றான்.
என்ன விட்டுட்டு போறனு சொன்னு அடிக்காம கொஞ்சிவேனு நினைச்சியா. இன்னொரு முறை இப்படி பேசுன கொன்னுடுவ என அவள் மிரட்ட,
வர வர உனக்கு வாய் அதிகமாயிடுச்சிடி குள்ளச்சி என அவள் மூக்கை ஆட்டினான்.
சரி வா மேல போலாம் என அவன் அழைக்க,
எதுக்கு ஹரி மேல என்றாள்.
வாடி என அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்.
மொட்டை மாடியில் பௌர்ணமி இரவில் மொழுகுவர்த்தி ஒளியில் அங்கு உணவு மேடை தயாராகி இருந்தது.
அதை பார்த்தவள், அவனை பார்த்து என்ன என்றபடி புருவம் உயர்த்த.
அவளை இருக்கையில் அமர வைத்தவன் அவன் எதிரே அமர்ந்தான்.
அவன் முன் அவளின் பிடித்த உணவு வகைகள் அடுக்க பட்டிருக்க அதை பார்த்தவள்.
டேய் நீ என்ன லூசா, இப்ப தானே சாப்பிட்டேன் உடனே இந்த இடத்தில திரும்ப எப்படி சாப்பிட முடியும் என கேட்க.
சாரி டி நீ ஈவ்னிங் டையாடா இருந்தியா அதா அங்கு அழைச்சிட்டு போன, இதை மறந்திட்டேன் என அவன் அசடு வழிய அதை ரசித்தவள் கிண்ணதில் இருந்த பிளாக் பெரியை சுவைக்க துவங்கினாள்.
மெழுகுவர்த்தி ஒளியில் அவள் முகத்தை கண்டவன், குள்ளச்சி நீ ஏன் மூக்கு குத்தல என்றான்.
ஹான், குத்திக்கனு யாரு சொல்லல அதா குத்தல என அவள் கூறிய பதிலில் சிரித்தவன். சரி எனக்காக குத்திக்க என அவன் ஆசையாக சொன்னான்.
ஐ... ஆசை தான் யாருக்காக வேணும்னாலும் குத்திப்பேன் உனக்காக மட்டும் குத்த மாட்டேன் போடா என. அவள் ஜஸ்கீரீமை சாப்பிட ஹரிஷ் அவள் முன்னே ஒரு பெட்டியை வைத்தான்.
என்ன இது என அவள் கேட்க.
திறந்து பாரு என்றாள்.
அதை அவள் திறந்து பார்க்க அதில் தங்க சைனில் EH என்ற எழுத்து எச் இன் மேல் ஈ யை சாய்வாக எழுதி டாலராக கோர்க்க பட்டிருந்ததை பார்த்தவள், என்ன இது என்று கேட்க.
உனக்கு தான் என்றவன் அந்த சையினை அவள் கழுத்தில் அணிவித்து டாலரை சுட்டி காட்டி எழில் ஹரிஷ் என்றான்.
அதை பார்த்தவளின் மனம் மகிழ்ந்தாலும் அவள் மூளையோ அவன் யாழினி காதலன் என்பதை நினைவு படுத்த, மனம் பாரம் ஏறி அமைதியாகிவிட்டாள்.
அவனுடன் வாழ வேண்டும் என அவள் முதலில் ஆசை பட வில்லை ஆனால் இந்த இரண்டு நாள் அவள் அவனிடம் பேசதது அவளை மிகவும் பாதித்திருந்தது. அவனுடன் தான் அவள் வாழ்க்கை என மனம் உரைத்தாலும் மூளையோ அவன் யாழினியின் காதலன் என இலவச செய்தியாக சொல்லி செல்ல, இனி அவனிடம் அதிகம் பழக கூடாது என எண்ணிக் கொண்டு அமைதியானாள்.
எழில் சைன் பிடிச்சியிருக்கா என அவன் கேட்க.
அதை தூக்கி பார்த்தவளின் மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அதை அவனிடம் காட்ட விரும்பாதவள்.
எதுக்கு இந்த தண்ட செலவு, ஸ்டுடியோ வைக்கனும்னு ஐடியாவே இல்லையா உனக்கு என கேட்க.
ஏய் நீ ஆசையா என்கிட்ட கேட்டது, நான் ஆசையா உனக்கு குடுக்க நினைச்சது. இத போய் தண்ட செலவுனு சொல்லுற என அவன் கரகரத்த குரலில் கேட்க.
சரி சாப்பிடு எனக்கு தலை வலிக்குது சீக்கிரம் கீழ போலாம் என பேச்சை மாற்றி அவளின் மாறுபட்ட உணர்வையும் பேச்சையும் கண்டவன்.ஏதோ சரியில்லை என அமைதியாகி விட்டான்.
காலை ஹரிஷ் எழிலை கல்லூரியில் விட்டு, ஸ்டுடியோ சென்று அங்கு எடிட்டிங் கட்டிங் வேலைகளை பார்த்து முடித்தான்.
இன்றுடன் படத்திற்கான மியூசிக் வேலைகள் முடிய இன்னும் இரண்டு நாளில் இசை வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் பட குழுவினர். இப்படியே நாட்கள் விரைவாக செல்ல. இசை வெளியீட்டு விழாவும் வந்து சேர்ந்தது.
ஆரவின் கட்பாயத்தில் இசை வெளியீடாடு விழாவிற்கு சென்றிருந்தாள் எழில்.
அங்கு ஒவ்வொரு பாடலும் கலைஞர்கள் பாட மேடையில் கீ போட்டில் வாசித்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.
கருப்பு ஷர்டை கை முட்டி வரை மடித்து விட்டவனின் கையில் உள்ள பிரேஸ்லைட் அவள் வாசிப்பிற்கு ஆட, அவன் தலை முடிகளும் அதற்கு ஏற்றது போல் ஆடிக்கொண்டிருக்கும் அழகை ரசித்தவளின் கண்கள் அவன் இடத்தே நிற்க,
தன்னை யாரே பார்பது போன்ற உணர்வை உணர்ந்தவன் கண்களை அங்கும் இங்கும் சுழல விட, கடைசியில் அவன் கண்கள் நின்ற இடம் எழில் இருந்த இடமே.
அவனோ என்ன என புருவம் உயர்த்த, அவள் சூப்பர் என கை காட்டினாள்.
அவன் தலையசைத்து சிரித்தபடி வாசிக்க, அவளோ அவனுடைய ரசிகையானாள்.
அனைத்து பாடல்களும் ஒளிபரப்பாகி இருக்க, கடைசியாக சீடியை திறந்தனர் அதில் இசையமைப்பாளர் " ஆரவ்& ஹரிஷ்" என்று இருக்க அதை பார்த்த ஆரவ் சார் என்ன இது என்று கேட்க.
தொகுப்பாளினியிடம் மைக்கை வாங்கியவன், இந்த படத்துக்கு என்னுடைய உழைப்பைவிட அதிக உழைப்பு ஹரிஷூடையது தான் அவன் மட்டும் இல்லையின இந்த படமே எனக்கில்லாம போய் இருக்கும். இந்த படத்தோட ஹைலைட் மியூசிக் இவன் பண்ணிணது தான். இந்த படத்தோட உண்மையான மியூசிக் டிரைக்கடர் இவன் தான் என ஆரவ் கூற மேடையே பலத்த கரகோஷங்களை எழுப்பியது.
ஹரிஷின் பார்வை எழிலை தொட்டது, அவளோ மிகுந்த சந்தோஷத்தில் கண்ணை அடித்து முத்தம் இட அங்கிருந்த தென்றலோ அதை தவறாமல் அவனிடம் சேர்த்தது.
விழா முடிந்து அனைவரும் சாப்பிட, ஆரவிடம் ஹரிஷ் பேசிக் கொண்டிருக்க, படத்தின் நடிகர் ஆரவிடம் வந்து சார் உங்க கூட வந்தாங்கல அந்த ஒயிட் டாப் வித் ஜீன் கேர்ல் என எழிழை சுட்டி கிட்டியவன் அவங்க நம்பர் கிடைக்குமா என கேட்க.
பிரியாணி உண்டு கொண்டிருந்த ஹரிஷுக்கு புரையேறியது. அருகே இருந்த தண்ணீரை ஆரவ் எடுத்து கொடுக்க, அதை குடித்தவன்.
அந்த நடிகனை நோக்கி சார் எதுக்கு உங்களுக்கு அவ நம்பர் என கேட்க.
சிங்கிளா இருந்தா கமிட் ஆக தான் சார், சிங்கிளா தான் இருப்பா சின்ன பொண்ணா இருக்கா என அவன் அவளை பார்த்தபடி கூற.
அதில் கடுப்பானவன் சார் அவ என் வைஃப் என்றான்.
சார் பொய் சொல்லாதிங்க என அவன் கூற.
சார்.. என அதிர்ந்தபடி அவ உண்மையா என் மனைவி தான். என்றவனை நம்பாதவன் அப்படின்னா அவங்க கிஸ் பண்ணுங்க பாக்கலாம் என கூற.
டேய்.. என்றான் ஹரிஷ் அதிர்ந்து,
என்ன சார் உங்க மனைவினா கிஸ் பண்ணுங்க, இல்ல நானே அவங்கிட்ட பேசிக்குற என அவன் எழுந்து செல்ல முயல,
அந்நடிகனின் குணத்தை நன்கு அறிந்தவன். உங்களுக்கு என்ன கிஸ் தானே என மூச்சை இழுத்துவிட்டவன் அவள் அருகே சென்றான்.
எழில் என அவன் அழைக்க, கையில் இருந்த ஜீசுடன் திரும்பியவள் என்னடா என்க.
வண்ண ஒளியில் அவள் முகத்தை பார்த்தவள் தன்னவள் என்னும் உரிமையோடு அவள் இதழில் நடிகன் சொன்ன திட்டத்தை நிறைவேற்றியிருந்தான்.
அவன் தீடீர் தாக்குதலில் அதிர்ந்தவள் கிளாசை கீழே போட அங்கிருந்த சத்தத்தில் அது யார் காதிலும் விழவில்லை.
முதலில் நடிகனுக்கு நிருபிக்க வந்தவன் அவளின் மீதிருந்த காதலால் விட முடியாமல் தன் வேலையை தொடர்ந்துக் கொண்டே இருக்க.
அவள் மூச்சிக்கு சிரம படும் போதே அவளை விட்டு விலகியவன் தலை குனிந்து நின்றான்.
அவளும், அவன் முகத்தை பார்க்காமல் கரணுக்கு அருகே சென்று அமர்ந்துவிட்டாள்.