"பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே"
பரபரப்பாக இயந்திரத்திற்கு போட்டியாய் இயங்கிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் மொட்ரோவிற்க்காக காத்திருந்தனர்.
ஊ...ஊங்...எனும் சத்தத்துடன் வந்து நின்ற வண்டியில் முந்தியடித்துக் கொண்டு ஏறியவர்களின் பெட்டியில், ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாய் இருந்தது இன்றைய நவ நாகரீக உலகத்தின் ரயில் பெட்டி.
முந்தைய காலத்து ரயில் பயணம் என்பது பலரால் விரும்பப்பட்டது, பெயர் தெரியாத நட்பு, முகவரி அறிந்த உறவு, பொருளாதார விவாதம், இன்றைய அரசியல் என பல தலைப்புகளை அலசி ஆராய்ந்துக் கொண்டு வரும் இரயில் பயணத்திற்கு இன்றைய மெட்ரோ முரண்பாடே.
தனக்கென ஒரு உலகத்தை தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு மனிதனின் முழு முகவரி அறியாது, போலி ஐடியில் சமூக ஊடகத்தில் காதில் புளுடூத் உதவியுடன் வந்த மெட்ரோ பெட்டியின் மௌனத்தை கலைத்தது பாடல் சத்தம்.
கிளாசிக்கல் வெஸ்டனையும் ஒன்றாக இணைத்த கிடாரின் இசையும், ஹம்மிங்கில் தொடங்கிய இசையுடன்ஒரு பெண் குரல் பாடல் பாட தொடங்கியது.
இசைக்கு ஏற்ப அவளின் குரலும் கிளாசிகல் வெஸ்டன் என மாறிக்கொண்டிருக்க. கடைசியில் கர்நாடிக் சங்கித்தில் கொண்டு முடித்தாள்.
அவள் குரலின் இனிமையில் கட்டுண்டு அவளை ரசித்த மக்கள், அவளை காண விழைய அது முடியாமல் போனது.
கருப்பு தொப்பியும், முக்கிலிருந்து ஷாலால் முடியவளின் முகத்தில் கண்கள் மட்டுமே பார்பவர்களுக்கு தென்பட்டது. இசையின் மயக்கத்தில் பலர் அதை வீடியோவாக பதிவு செய்து, கொண்டு ஒரு சிறு புன்னகையுடன் தனது நிறுத்தத்தில் இறங்கி சென்றனர்.
பாடலை முடித்துக் கொண்ட பட்டாளம் தனது இசை கருவிகளை பைக்குள் திணித்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கினர்.
ஏய் ஹரிஷ், இன்னொரு முறை இந்த மாதிரி மெட்ரோல பாட எல்லா வர மாட்டேன், தாத்தாக்கு தெரிஞ்சிது நான் அவ்வளவு தான். என மிரட்டலில் தொடங்கியவள் கெஞ்சலில் முடிக்க, அவளின் தொனியை ரசித்தவன்.
இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் தாத்தாக்கு பயப்பட போற, ஒழுங்காக பயப்படாம ஒரு பிரபசர் மாதிரி நடந்துக்க, என்றவன். அவள் தலையில் இருந்த தொப்பியை எடுத்து தன் தலையில் மாட்டியவன், அவள் தோளில் கிடார் பையை மாட்டியபடி, நான் கரண் கூட போறேன் நீ பாத்து போ என்று கரண் பைக்கில் சீறி பாய்ந்தான்,
கைகடிகாரத்தில் மணியைக் கண்டவள் தனது வண்டியை வீட்டை நோக்கி விட்டாள்.
ஆர். எம் பொறியியல் கல்லூரி,
விழாக் கோலம் பூண்டு இருக்க, அங்கு செல்லும் மாணவர்களின் பேச்சில் தெரிந்தது இன்று முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகை என.
மேடையில் வரிசையாக அடுக்க பட்டிருந்த பெயர் பலகைக்கு ஏற்ப வந்தமர்ந்தனர் அக்கல்லூரியின் உறுப்பினர்கள்.
நிகழ்ச்சி தொடங்க நேரம் நெருங்கி இருக்க, மேடையில் ஒரு இருக்கை மட்டும் காலியாக இருந்தது.
காலி இருக்கையை பார்த்த அறுபது வயது மதிக்கதக்க கல்லூரி முதன்மையர் ராமமூர்த்தி தன் அருகில் இருந்த மணிகண்டனிடம் எழில் எங்கே என கேட்க.
உலகம் சுற்றும் வாலிபன், இப்ப எங்க சுத்திட்டு இருக்காரு என்ற தாத்தாவின் கேள்வியில் மிரண்டாள்.
தெரியாது தாத்தா, என்றபடி தலையை ஆட்ட, கேபமாக பேச வந்தவர் மேடை தொகுப்பாளினியின் குரலில் அமைதியானார் ராமமூர்த்தி.
36 வருடங்களால் பொறியியல் கல்லூரியில் முதல் நிலையில் இருக்கும் ஆர்.எம் கல்லூரியின் முதன்மையர் ராமமூர்த்தி, பத்து வருடம் மிலிட்டரியில் கேப்டனாக இருந்தவர் தன் தந்தையின் ஆசைக்கு தன் விருப்போய்வு எடுத்துக் கொண்டு கல்லூரை நிர்வாகிக்க துவங்கினார்.அவர் மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு பிள்ளை
மகன் விஜயன் அவர் மனைவி விமலா இவர்களின்,
முதல் மகன் விஜய் அவன் மனைவி தாரிகா இவர்களின் ஐந்துவயது குழந்தை பூமிகா.
இரண்டாம் மகன் நம் நாயகன் உலகம் சுற்றும் வாலிபன் என ராமமூர்த்தியால் அழைக்கப்பட்ட "ஹரிஷ்"
அடுத்து மகள் ராணி. விஜயனுக்கு பிறகு ஐந்து வருடம் கழித்து பிறந்தவள், அப்பாவின் செல்லம், அவளை பிரிய மனமின்றி பண்பில் சிறந்த மதிக்கதக்க மணிகண்டனை வீட்டோடு மாப்பிளையாக்கி தன் கல்லூரியில் உறுப்பினராக்கி இருந்தார்.
இவர்களின் ஒரே மகள் "எழில்" . தாத்தா சொல்லை தட்டாதவள்.
ஹரிஷூக்கும் தாத்தாவிற்கும் ஏழாம் பொருத்தம். எப்பொழுது ஹரிஷ் தப்பு செய்து தாத்தாவிடம் மாட்டிக்கொண்டாலும் அவனும் சேர்ந்து அர்சணை வாங்கிக் கொள்ளுவாள் எழில்
வீட்டில் ராமமூர்த்தியின் பேச்சை எதிர்த்து பேச யாரும் முன் வருவதில்லை, அதனால் வீடே சில நேரங்களில் மிலிட்டரி விடுதியாக மாறிவிடும். இதுவே ஹரிஷூக்கு தாத்தா மீது கோபத்தை கிளப்பியது அதனாலே அவன் அவருக்கு இட்ட பெயர் ஹிட்லர்.
சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்ததால் அவர்களின் தோழமை அதிகம். தந்தையாய் தாயாய் அண்ணணாய் தங்கையாய் என எல்லாமும் ஒருவருக்கு மற்றொருவராய் இருந்து வருகின்றனர் இன்று வரை.
ஹரிஷ் ஆசைப்பட்டு கேட்டதை எழில் என்றும் மறுத்ததில்லை. இன்றும் அப்படி தான் பாடினாள் அவனுக்காக.
முதல் வருட மாணவர்களின் வருகை விழாவில் பேசிய ராமமூர்த்தி தன் கனத்த குரலில் ஊக்குவிப்பு பேச்சில் முதல் நாளே அவர்களை பொறியாளர் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார். அவர் பேச்சில் மகிழ்ந்த மாணவர்கள் விழா முடிந்த உடன் சீனியர் மாணவர்களின் உதவியோடு வகுப்பறையை நோக்கி சென்றனர்.
கரணுடன் சென்ற ஹரிஷ், மியுசிக் ஸ்டுயோக்குள் நுழைய அங்கிருந்த ஒருவன், ஹரிஸ் சார் உன்ன உடனே வர சொன்னாரு ஓடு என்றவன். அவன் குரலிலே உற்சாகத்தை ஹரிஷுக்கு வழங்க, அதே உற்சாகத்தோடு உள்ளே சென்றான்.
ஹாய் சார், என கீ போட்டு முன் அவன் நிற்க.
ஹேய் ஹரிஸ் சூப்பர் டா, கலக்கிட்ட ஒன் ஹார்ல 2k வீவர்ஸ் செம போ, சீக்கிரமா என்ன விட பெரிய மீயூசிக் டிரைக்டர் ஆகிடுவ போல. என உற்சாகமாக பேசினார் பிரபல மியூசிக் டிரைக்கடர் ஆரவ்.
ஆரவிடம் கடந்த இரண்டு வருடமாக ஜூனியராக வேலை செய்கிறான் ஹரிஷ்.
என்ன சார் சொல்லுறிங்க என்றபடி ஹரிஷ் குழம்பி நிற்க.
இத பாரு என சமூகவலைதளங்களில் அதிகமாக பார்வையிட பட்டு வரும் அவன் இன்று காலை மெட்ரோவில் வாசித்த பாடலை காட்ட.
அதை பார்த்தவன் இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்தது.
ஆரவிடம் போனை வாங்கியவன் இந்த வீடியோ பதிவிடப்படிருந்த ஐடியை பார்க்க அது போலி ஐடியாக இருந்தது. உடனே கேப்சர் வாக்கியத்தை பார்க்க அதில் ராஜாவின் கிரிடம் தவிர வேறு எதுவும் அதில் இல்லை அதை பார்த்தவுடன் புரிந்தது இது யாருடைய வேலை என்று.
போனை ஆரவிடம் கொடுத்தவன் சிரித்தபடி வெளியே வந்த, வீடியோ பதிவிட்டவளை அழைத்தான்.
ஹாய் மன்னா, மியூசிக் சூப்பர் என அவளின் ஆனந்த குரலை கேட்டவன்.
யாழி, எதுக்கு அதை சோசியல் மீடியால போட்ட, எங்க தாத்தா பார்த்தா அவ்வளவு தான். என ஹரிஷ் குறை பட.
என் காதலன் இசைய இந்த உலகம் கேட்கனும்னு நான் ஆசைபட்டேன். அதா போட்ட இப்ப என்ன, உங்க தாத்தாகிட்ட நீ எப்ப பஜனை வாங்காம இருந்திருக்க அது கூட இதையும் சேத்துக்க மன்னா, என அவள் உற்சாகமாக பேச
நா மட்டும்னா பரவாயில்ல டி, அதுல எழில் வேற இருக்கா, என அவன் கவலையாக கூற.
ஏய் ஆமா டா, எழில் வாய்ஸ் சூப்பர், நான் அவ வாய்சுக்கு விசிறி ஆகிட்டேன். ஹா..ஆஆ எவ்ளோ அழகா பாடினா அந்த " சரிரிகமபதநிநிச" அடிச்சி தூள் கிளப்பிட்டா. என் சார்பா அவளுக்கு இன்னைக்கு நைட் பிளாக் கரண்ட் ஜஸ் வாங்கிட்டு போ,
இப்ப பாய், மீட்டிங் போறேன், என்றவள்.
ஏய்... யாழி.... யாழி என்ற அவன் அழைப்பை பொருட்படுத்தாமல் அழைப்பை துன்டித்தாள்.
ஆரவுடன் சேர்ந்து படத்திற்கு புதிய டியூன்களை உருவாக்கியவன், இரவே வீட்டிற்கு சென்றான்.
கல்லூரியை முடித்தவர்கள் மாலை நேரம் வீட்டில் இன்றைய கல்லூரி நிகழ்வை பேசிக்கொண்டிருக்க,
ஆறு மணி செய்தியில் தொலைகாட்சியில் அழகிய பெண் ஒருத்தி இன்றைய சமூக வலையதளம் என்ற தலைப்பில்
இன்று அதிக நபரால் பார்த்து ரசிக்கபட்டு பகிரப்பட்ட வீடியோ என காலை மெட்ரோவில் ஹரிஷ் எழிலின் வீடியோவை போட,
தொலைகாட்சியை பார்த்தபடி உண்டு கொண்டிருந்த எழிலுக்கு உணவு நாசிக்கு ஏறி புரையேற கண்கள் கலங்கியபடி அமர்ந்திருந்தாள்.
அந்த வீடியோவை பார்த்த வீட்டினர் அமைதியாக இருக்க, தாத்தாவின் முரைப்பிற்கு ஒற்றை ஆளாய் மாட்டிக் கொண்டாள் எழில்.
தாத்தா..ஆ ,என அழைத்தவளை பேசாத என கர்ஜித்தவர். அவன் வரட்டும் என்றபடி அறைக்கு சென்றார்.
ஹரிஸ் வீட்டை நோக்கி வர, எழில் வாசலுக்கும் கதவிற்கும் இடைபட்ட துரத்தை நூறு முறைக்கு மேல் அளந்துக் கொண்டிருந்தாள்.
வீட்டினர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க, சோபாவில் அமர்ந்திருந்த ராமமூர்த்திக்கு எதிரே ஹரிஷும் எழிலும் நிற்க. தனது நீண்ட மௌனத்தை களைத்து பேச தொடங்கினார்.
ஏய் இங்க பாருடா நீ வேணுனா இந்த கிடாரை தூக்கி கிட்டு இரயில் இரயிலா போய் பாடு நான் எதுவும் சொல்ல மாட்டேன். எதுக்கு என் பேத்திய பெட்டில பாட வைக்குற, என கனத்த குரலில் அவர் கேட்க.
நான் ஒன்னும் உங்க பேத்திய பாட வைக்குல, என் எழில தான் பாட வைச்சேன். என்றவன் பேச்சில் வெகுண்டவர்.
அடேய் எவ்வளவு கொழுப்பு இருக்கும் உனக்கு..என கையை ஓங்கி செல்ல, அவர் அடித்த அடி எழில் கன்னத்தை பதம் பார்த்தது.
எழில் என ஹரிஷ் அவளை தன் புறம் திருப்ப,
நீயேன் மா நடுவுல வந்த என ராமமூர்த்தி அவளை தன் புறம் இழுத்திருந்தார்.
இங்க பார் என் பேத்தி உன்ன மாதிரி ஊர் சுத்துறவ இல்ல, அவ ஒரு பிரபசர் அவளை இன்னொரு முறை வெளிய எங்கனா பாட வைச்ச, நடக்குறதே வேற என கத்தியவர்.
எழில் சாரிடா, நீ ஏன் குறுக்க வந்த தாத்தா நீனு தெரியாம அடிச்சிட்டேன் டா. சாரி என அவர் குழைந்தபடி கேட்க.
தாத்தா இதுல ஹரி மேல எந்த தப்பும் இல்ல, நான் தான் அவனை கம்பல் பண்ணி வாசிக்க வெச்சேன் தாத்தா, அதா நான் பண்ணின தப்புக்கு நானே தண்டனை வாங்கிட்டேன் என அவள் கூறியதை. யாரும் நம்பவில்லை.
ஒவ்வொரு முறையும் ஹரிஷை அவள் காப்பாற்றுவது புதிதில்லை, விவரம் அறிந்ததிலிருந்து அவள் அவனை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள்.
இன்றும் செய்தாள் இனியும் செய்வாள். இதுவே அவள் வாழ்க்கையை மாற்றும் என அறியாமல்.
எழில் அறையில் அவள் கன்னத்திற்கு மருந்திட்டிருந்தவன். எதுக்குடி குறுக்க வந்த என கேட்க.
அவன் முகத்தை பார்த்தவள் ம்...ம்ம் ஆசை அதா என்றபடி ஜன்னலை பார்த்தவள். ஹரிஷை இழுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
ஏய் எதுக்கு இழுக்குற என அவன் கேட்க,
சும்மா வாடா என்றவள் படியிலிருந்த அவனை மாடியை நோக்கி தள்ளினாள்.
காற்றில் கலந்த மழைநீர், மழையாய் பொய்யாது சாரல் மழையாய் எங்கும் வீசியபடி செல்ல,
அதில் எழில் கைகளை விரித்து தலையை தூக்கி சிரித்தபடி சுற்றி ஆட, அதை கண்டவனின் கண்கள் அத்தருணத்தை தன் கைப்பேசியில் படமாக்கியது.
சாரல் மழை சூப்பரா இருக்கும், எப்பவாவதுதா வரும் வாடா என அவன் கையை பிடித்து இழுத்து குதித்தபடி நனைந்தவளின் செயலை ஆமோதிப்பதாய் அவன் கைபேசி அலரியது.
அதில் கண்ட பெயரை பார்த்தவன் வீடியோ காலை ஆன் செய்ய,
ஹரிஷ் எங்க இருக்க, உன் முகமே தெரியல என்றவளின் கேள்வியில் மாடியிலிருந்த விளக்கை போட்டான் ஹரிஷ்.
எதுக்கு கூப்பிட்ட சொல்லு என்றான் கோபமாக.
என்ன என் மன்னவனுக்கு கோபம், நான் அருகில் இல்லாததாலா என ஆசையாக யாழினி கேட்க.
மண்ணாங்கட்டி, நீ பண்ணின வேலைக்கு நீ என் பக்கத்தில இருந்தா இந்நேரம் என அவன் பேச வருவதற்குள் அவன் கையில் இருந்த போனை வாங்கிய எழில்.
ஹாய் யாழினி, எப்படி இருக்க எப்ப நம்ப ஊர் பக்கம் வர ஐடியா,
நல்லா இருக்கேன் எழில், இன்னும் ஒரு வருஷம் ஆகும். அதுவரைக்கும் என் மன்னவனை பார்த்துக்க.
ஹலோ மேடம், என் ஹரி பாத்துக்க எனக்கு தெரியும், ரொம்ப அக்கறையா இருந்தா நீ வந்து பாத்துக்கோ இல்ல அவனை உன் கூட அழைச்சிட்டு போ.
தாத்தாகிட்ட இருந்தாவது சந்தோஷமா இருக்கட்டும் என அவள் முடிக்க.
அவள் பின் வந்த நின்ற ஹரிஷ், யாழினி நீ பண்ணிண வேலைக்கு எழிலுக்கு கிடைத்தத பாரு என அவள் கன்னத்தை திருப்ப.
சிவந்து கன்றி போயிருந்த அவள் கன்னத்தை பார்த்தவள். என்ன ஆச்சி நான் என்ன பண்ணின என குழம்பினாள்.
நீ போட்ட வீடியோவோட பரிசு, என அவன் நக்கலாக கூற.
அதில் நடந்ததை உணர்ந்தவள்.எழில் சாரிடி.நான் இப்படி ஆகுனு நினைக்கல நீ ரொம்ப நல்லா பாடியிருந்த. அவனும் நல்லா வாசிச்சியிருந்தான் அதா போட்டேன். இப்படி ஆகுனு நான் நினைக்கல என அவள் வருத்தமாக கூற.
ஓ....யாழினி அதெல்லா ஒன்னும் இல்ல, நீ போட்ட வீடியோவால இவனுக்கு எத்தனை ரசிகர்கள் தெரியுமா, சாரோட மியூசிக்க பலர் பாராட்டி தள்ளிட்டாங்க. இன்னைக்கு புகழ் மழையில நினைந்துட்டார். பல பெண் ரசிகர்கள். இன்னைக்கு காலேஜ்ல இவன் புகழ் தான் எல்லா இடத்திலும்
ஒருத்தர் வளரும் போது பல தட்டுபாடு வர தான் செய்யும். அது எதுவும் என் ஹரிய தாக்காமல் நான் பார்த்துப்பேன். நீ அதுக்கெல்லாம் கவலை படாத. நீ வர வரைக்கும் உன் ஹரிஷை நான் பத்திரமா பாத்துகுறேன்.
நீ அவன பாத்துக்காத, உன்ன ஒழுங்கா பாத்துக்க என திரையில் தெரிந்த அவள் கன்னத்தை வருடியபடி அவள் சொல்ல,
இது இரண்டு நாள்ல சரியாகிடும், நீ கவலை படாத. நல்லா சாப்பிடு என்றவளின் கூற்றில் நினைவிற்கு வந்தவள்.
எழில் அவன் உனக்கு பிளாக் கரண்ட் வாங்கி கொடுத்தானா என கேட்க.
ஹரிஷ் பிளாக் கரண்ட் ஜஸை யாழினி பார்க்குமாறு ஊட்டிவிட்டான்.
எதுக்கு ஜஸ் என அவள் கேட்க.
உன் பாட்டுல சொக்கி போயிட்டேன் அதா உனக்கு பிடிச்ச பிளாக் கரண்ட்.
சரி சரி உருகுது நீங்க பேசுங்க என்றவள் ஐஸை வாங்கிக் கொண்டு மாடியின் ஓரத்திலிருந்த மேடையின் மீது சாரல் மழையை ரசித்தபடி உண்ண தொடங்கினாள்.
யாழினியுடன் பேசி முடித்தவன் எழிலின் அருகில் அமர்ந்து. அவன் வாய் ஓரங்கலில் இருந்த ஜஸை துடைத்தபடி, குட்டச்சி நாளைக்கு டிரைக்கடர் கிட்ட நான் கம்போஸ் பண்ணின மியூசிக்க காட்ட போறேன், செலக்ட் ஆகுமா என அவன் கேட்க.
அவன் வாயில் ஐஸை திணித்தவள், கண்டிபா என் ஹரிஷோட மியூசிக் ஹிட் ஆகும். என படத்தில் வரும் அம்மனை போல் நின்றுக் கொண்டு,
இந்த எழிலின் அருள் உனக்கு எப்பொழுதும் இருக்கும் பக்தா, வெற்றியோடு திரும்பி வா என அவள் கூற.
அடிங்.... என அவளை அடிக்க அவன் அருகில் கல்லை தேட.
போடா லூசு, என்று ஓடியவள் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
காலையில் ஒவ்வொருவராக கல்லூரிக்கு கிளம்ப, கடைசியாக வந்தால் எழில்.
சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவள், அத்தை ஹரி சாப்பிட்டானா என கேட்க.
இல்லமா, என்றவரின் பதிலைஹகேட்டவள், சாப்பிடாம கிளம்பிட்டானோ என வாசலை எட்டி பார்க்க, அவன் பைக்கை அங்கு இருந்து அவன் இன்னும் கிளம்பவில்லை என உறுதிப்படுத்தியது.
தட்டில் இட்டலியை வைத்தவள் சாம்பாரை கிண்ணத்தில் ஊற்றிக் கொண்டு ஹரிஷின் அழைக்குள் நுழைய, அங்கு அரக்கபறக்க கிளம்பிக் கொண்டிருந்தவனை பார்த்தவள்,
காலையில நேரத்துக்கு எழ மாட்ட, டிரைக்கடர் பார்க்க கரெக்ட் டைம்க்கு போகனும்னு தெரியாதா, என்றபடி இட்டலியை அவன் வாய்க்குள் திணிக்க.
சாரி... என்றபடி கிளம்பினான்.
அவன் தன்னை தயார் படுத்துவதற்குள் இட்டலியை ஊட்டி முடித்தவள். அவனோடு கீழே செல்ல,
அவர்களின் இருவரையும் பார்த்த விமலா, சிரித்தபடி, அவனுக்கு ஊட்டினது போதும் நீ சாப்பிடு என எழிலை அழைக்க,
இதோ அத்தை என்றவள். பூஜை அறைக்குள் சென்று கடவுளின் முன் தன் விண்ணப்பத்தை வைத்து விட்டு, ஹரிஷை நோக்கி வாசலுக்கு சென்றாள்.
வண்டியில் அமர்ந்திருந்தவனின் முன் வந்தவள் வெந்நீரை அவன் நெற்றியில் வைத்து. கிளம்புங்க மியூசிக் டிரைக்கடர் என மறைமுகமாக அவன் வெற்றியை அவள் கூற. சரித்தபடி கிளம்பினான்.
ஹரிஷ் நேத்து நம்ப கம்போஸ் பண்ண நோட்ஸ் எங்க என ஆரவ் கேட்க,
இதோ சார் என்றவன் அதை அவன் கையில் கொடுத்து, பிழையின்றி வாசித்து காட்ட, டிரைக்டர் உள்ளே வந்தார்.
ஒவ்வொரு பாடலுக்கும் டியுனை ஹரிஷ் போட்டு காட்ட, அதில் பல மாற்றங்களை உட்படுத்திய டிரைக்கடர். பல திருத்தங்களுக்கு பிறகே ஒவ்வொரு டியூனையும் ஓகே செய்தார்.
இந்த டியூன்கள் எல்லாம் ஆரவும் ஹரிஷூம் இணைந்து தயாரித்தது என்றாலும் இதன் மியூசிக் டிரைக்டர் ஆரவ் மட்டுமே ஆவான். ஹரிஷ் வெறும் ஜீனியர் தான்.
கடைசி மெலோடி பாட்டிற்கு மட்டும் டியூன் எத்தனை மாற்றம் செய்தும் சரியாக வராதாதால் சோர்ந்து அமர்ந்திருந்த டிரைக்கடரை, மகிழ்ச்சியாக்கியது ஹரிஷின் மொபைலில் ஒலித்த டியூன்.
அதை கேட்டவர் இந்த டியூன் போடுங்க என்க,
ஹரிஷ் ஆரவை பார்க்க, போடு என்றான்.
உடனே கண்களை மூடியவன் உணர்ந்து தான் உருவாக்கிய டியூனை வாசிக்க, அதில் மகிழ்ந்தவர்.
இந்த டியூன் படம் முழுக்க போடலாம், ரொம்ப நல்லா இருக்கு என்றவர் டியூன்களை ஓகே செய்து கிளம்பினார்.
ஆரவும் ஹரிஷை வாழ்த்தி சூப்பர் எனக்கே காட்டல, செம கேடிடா நீ என கூற.
சார் அதெல்லாம் இல்ல, முன்ன பண்ணது சார், போன் ரிங்டோனா வைத்திருந்தேன் அத கேட்டுட்டு அவர் அப்படி சொல்லிட்டார்.
திறமை எங்க இருந்தாலும் பாராட்டனும் ஹரிஷ். உண்மையா டியூன் சூப்பர். மியூசிக் டிரைக்கடர் ஆகிட்ட, என்னையே பின்னுக்கு தள்ளிடுவ போல என ஆரவ் மகிழ்சியாக கூற.
அப்படியெல்லாம் இல்ல சார், எப்பவும் உங்களுக்கு கீழ தான் இருப்பேன்.
ஏய் எனக்கு மேல நீ வளர்ந்தா தான் உன் குருவான எனக்கு சந்தோஷம், நிறைய டியூன் போடு, நீ தனியா ஸ்டுடியோ திறக்க வாழ்த்துக்கள். என ஆரவ் வாழ்த்தி சென்றான்.
படம் முழுவதும் என் டியூன் என குதித்தவன், வண்டியை கல்லூரியை நோக்கி விட்டான்.
எழில் வகுப்பறையை ஸ்டாப் ரூமில் இருந்த பிரபசரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி சென்றவன்.
மாணவர்களுக்கு கணித்தை கற்பித்துக் கொண்டிருந்தவளை, எழில் என அழைத்து அவள் வாயில் குலாப்ஜாமுனை அடுக்க,
ஜீரா ஒழுகியபடி அரண்டு நின்றிருந்தவளை பார்த்தவன். என்னடி என பின்னால் பார்த்தான்.
அங்கு கைகளை கட்டிக்கொண்டு ராமமூர்த்தி நின்றிருந்தார்.