கல்லூரி தொழில் வட்டாரத்தில் ராமமூர்த்திக்கு பிறகு மதிக்கதக்க ஒருவர் விஸ்வநாதன். இருவரும் தொழில் முறையில் நல்ல நண்பர்கள்.
இன்று குடும்ப முறையில் இணைய
வருகை தந்திருந்தார் விஸ்வநாதன்.
ஹேய் ராமமூர்த்தி, எப்படி இருக்க என்ற துள்ளல் கலந்த பேசில் உள்ளே நுழைந்தவரை, கண்ட ராமமூர்த்தி
வாடா, வா.. நல்லா இருக்கேன் உட்காரு. பாத்து ரொம்ப நாள் ஆகுது. வெளிநாட்டு பயணம் எல்லாம் சுகமா.என கேள்விகளை அடுக்க
என்ன செய்ய முன்ன மாதிரி வேலை செய்ய உடம்பு ஒத்துழைக்கமாட்டேங்குது, எல்லாரும் உன்ன மாதிரி பிட்டா இருக்க முடியுமா என்ன. வயசு அறுபது ஆகுது ஆனா இன்னும் இருபது போலவே வேலை செய்யுற எப்படி டா என ஆற்றாமையில் அவர் கேட்க.
கண்ணு வைக்காதடா, என்ன விஷயம் இவ்வளவு தூரம் வந்திருக்க.
உன்ன சம்மந்தி ஆக்கலானு வந்திருக்க.
என்னடா சொல்லுற.
ஆமா டா உன் பேத்திய என் பேரனுக்கு கேட்டு வந்திருக்க, என் பேரன பத்தி சொல்லனும்னு அவசியம் இல்ல, எல்லா உனக்கு தெரியும். நீ என்ன சொல்லுற, அவரின் பேச்சில் சிறிது நேரம் யோசித்தவர்.
நான் வீட்ல கலந்து பேசிட்டு சொல்லுறேன் டா, என்க.
சரி டா, பேசிட்டே சொல்லு, அதுக்கு முன்ன என் பேரனோட வருங்கால மனைவியை நான் பாக்கலாமா, சின்ன வயசுல பார்த்தது, இப்ப எப்படி இருக்கானு பார்க்கனும் என அவர் கேட்க .
வாடா, உன் பேத்திய பார்க்க எதுக்கு என்ன கேக்குற, என்றவர் அவருடன் இணைந்து எழில் வகுப்பறையை நோக்கி சென்றார்.
தனது டியூன் ஓகேயான மகிழ்ச்சியில் வந்தவன், எழில் வகுப்பறைக்கு சென்று அங்கு கணிதம் கற்பித்திருந்தவளை எழில்... என தூக்கி சுற்றி அவளை கீழே விட்டவன் அவள் வாயில் குலாப்ஜாமுனை அடைக்க,
அவனின் தீடீர் தாக்குதலிலும், மிரண்டவள் அவன் குலாப்ஜாமுன் அடைப்பில் பேச முடியாமல் கண்களில் பயத்துடன் வாசலை பார்க்க.
எழில் என்னடி அங்க பாக்குற, என திரும்பியவன் கண்ணில் பட்டார் கைகளை கட்டிக்கொண்டு தன்னை முரைத்துக் கொண்டிருக்கும் ராமமூர்த்தி.
ஹரிஷ் தூக்கி சுற்றியதில் அங்கிருந்த மாணவர் பட்டாளம் விசில் அடித்து கைத்தட்ட, என்ன சத்தம் என்றபடி வகுப்பறைக்கு நுழைந்த ராமமூர்த்தி,
அங்கு கண்ட காட்சியில் மிகுந்த கோபத்துடன் கண்கள் சிவக்க, கைகட்டி நின்றுவிட்டார்.
தாத்தாவை கண்ட ஹரிஷ் அமைதியாக வெளியே செல்ல, எழிலுக்கோ வாயில் இருந்த குலாப்ஜாமுன் தன் இருப்பை காட்ட, அதை துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவள் நெளிந்தபடி நிற்பதை பார்த்தவர். வீட்டுக்கு கிளம்பு என்று கூற. அமைதியாக தலையை ஆட்டியபடி வெளியே சென்றாள்.
வெளியே வந்தவள் வாஷ் பேஷனில் வாய்குள் இருந்த பத்து குலாப்ஜாமுனை துப்பி முகத்தை கழவிக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
ஹரிஷ் எழிலின் நெருக்கத்தை கண்ட, விஸ்வநாதன், சாரி டா, சின்ன பசங்க மனசு தெரியாம பேசிட்டேன். காலம் நம்பல நண்பராக இருக்க சொல்லுது போல. சரிடா நா வரேன் என கிளம்ப. ராமமூர்த்தியும் அமைதியாக வழியனுப்பினார்.
இருவரும் சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்ததால் அவன் தூக்கி சுற்றியது அவளுக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் அவன் தன்னை சுற்றிய இடம் சரியானதில்லை. மாணவர்களின் செயலுக்கு தாங்களே முதல் காரணம் என எண்ணியபடி தன் அறையில் இருந்தவளை, ராமமூர்த்தியின் ஹரிஷ் என்ற கத்தல், வெளியே வர வைத்தது.
ஹாலுக்கு வந்த ஹரிஷை, பார்த்தவர் ஒரு காலேஜில எப்படி நடந்துக்குனும்னு உனக்கு அறிவில்ல, ஒரு பொண்ண தொட்டு பேசுற பழக்கம் என்ன பழக்கம், இதை முதல்லயே நான் கன்டிச்சு இருக்கனும் என் தப்பு தான் என்றவர். கையில் இருந்த பிரம்பால் அவனை அடிக்க.
அதை கண்ட குடும்பத்தினர்கள் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பி நின்றனர்.
முழுவதும் மூன்று அடிகள் வாங்கியவனின் கண்களில் கண்ணீர் வெளிவர,
அப்பா நிறுத்துங்க எதுக்கு இப்ப இவனை அடிக்குரிங்க. என அவனுக்கு முன்னை வந்து நின்றார் ராணி
உன்னாலயும் உன் மகளாளையும் தான் அவன் இப்படி இருக்கா.
யுனிவேர்சிடி டாப்பர் கோல்டு மெடலிஸ்ட், காலேஜ் முடிச்ச உடனே பிரபசர் வேலைக்கு வர சொன்ன, ஒரு வருஷம் ஊர சுத்திக்கிட்டே ஓட்டிட்டா,
அடுத்த வருஷம் எனக்கு மியூசிக்லதா இன்ட்ரஷ்னு சொல்லி கிடார எடுத்துக்கிட்டு தெரு தெருவா சுத்தினா, அவன் திருட்டு தனமா மியூசிக் படிக்க நீயூம் உன் பொண்ணும் துணை.
அடுத்த வருஷம் என் கெரியர்ல நான் சாதிக்கனும் எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்கனு வந்து நின்னா அப்பவும் அவனுக்கு நீ உடந்தை,
ஒரு வருஷம் இப்ப இரண்டு வருஷம் தாண்டி ஓடிடுச்சி, வேலைக்கு போக மாட்டான், ஊதாரியா எல்லா இடமும் சுத்துவான், ஒரு இடத்துல எப்படி நடந்துக்கனும்னு தெரியாது.
காலேஜ் பிரபசரை ரயில்ல பாட வைப்பான், இன்னைக்கு பசங்க முன்னாடி அவள தூக்கி சுத்துறா, பசங்க அதுக்கு கைதட்டி விசில் அடிக்குறாங்க. என்ன பழக்கம் இது என கூறியவர் அவனை அடிக்க மேலும் முன்னேற,
அப்பா பிளிஸ் எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான்,அவன் பண்ணினது தப்பு தான். நான் பேசுறேன் என்க.
ராணி உன்னால தான் அவன் இப்படி இருக்கான். மறுபடியும் நீ ஒன்னும் பேச வேண்டாம். அவனை நாளையில இருந்து காலேஜ் வர சொல்லு என்றார்.
அத்தை என்னால காலேஜ் போக முடியாது. எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு.
அவன் பதிலில் அவர் கோபம் பன்மடங்காக, தனக்கு எதிரே இருந்த கிடாரை எடுத்தவர். ஆமா டா , இதை எடுத்துகிட்டு ரயில் ரயிலா ஏறி பாட போற அப்படி தான.
ஆமா பாடதா போறேன். ரோடு ரோடா, ரயில் ரயிலா, எல்லா இடத்திலும் பாடதான் போற காலேஜூக்கு வர மாட்டேன் என்றவனின் பதிலில் மேலும் வெகுண்டவர்.
இது இருந்தா தானே பாடுவ, என்றவன் கிடாரை தரையில் தூக்கி அடிக்க அது சுக்கு சுக்காக உடைந்து நிலத்தில் எங்கும் சிதறி இருந்தது.
அதில் இருந்த ஒற்றை நரம்பு ரிங்...ங்ங்....ங்ங்ங்... என அவன் இதயத்தை போல் துடிக்க.
உடைந்த கட்டைகளை வாரி நெஞ்சோடு அனைத்தவன் கோபத்தில், இத உடைக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல என சீற.
இத உடைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு, வயது இருபத்து ஏழாகுது இன்னும் சுயமா சம்பாதிச்சி சொந்த கால்ல நிக்க துப்பில்ல, அப்பா கிட்டையும் பெம்பளங்களையும் ஏமாத்தி செலவுக்கு காசு வாங்கிட்டு ஊர சுத்துற உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்.
எழிலுக்கு வந்த நல்ல வாழ்க்கைய கெடுத்துட்ட, இனி அவள எவன் கட்டிக்க வருவா. நீ செய்த காரியம் காலேஜ் முழுக்க பரவிடுச்சி இனி அவ எப்படி பாடம் எடுக்க முடியும், பசங்க எப்படி அவள மதிப்பாங்க. இனி நீ இந்த வீட்ல இருக்காத வெளிய போ என கத்த.
தாத்தாவின் பேச்சில் அதிர்ந்த குடும்பத்தினர், அவனுக்காக பேச விழைய,
தாத்தா பிளிஸ், ஹரி எங்க போவான், அவன் வேணும்னு அப்படி செய்யல, அவனோட டியூன் சக்சஸ் ஆனதால ஒன்னும் புரியாம சந்தோஷத்தில அப்படி செய்துட்டான். அவன் எங்க போவான் தாத்தா, கொஞ்ச நாள் அவனுக்கு டைம் கொடுங்க கன்டிப்பா அவன் கெரியர்ல சக்கஸ் பண்ணி காட்டுவா. எனக்காக தாத்தா பிளிஸ்.. என அவனுக்காக அவள் தாத்தாவின் காலில் விழுந்து கேட்க.
அவன் ஆறு மாசத்தில சக்கஸ் பண்ணி காட்டுவானு நான் எப்படி நம்ப, என கேட்டவரை நிமிர்ந்து பார்த்தவள்.
ஹரிஷிடம் ஓடி சென்று, டேய் ஆறு மாசத்தில சக்சஸ் பண்ணுவலடா சொல்லுடா, ஏன் இப்படியே நிக்குற என அவனை உலுக்க,
பண்ணிடுவேன் என்றவனின் பதிலை பெற்றவள்.
தாத்தா கேட்டிங்க தானே, கடைசியா ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க என அவள் கை கூப்பி கேட்க.
அப்ப எனக்கு நீயும் அவனும் ஒரு சத்தியம் பண்ணும், அது படி நடக்கனும் முடியும்னா மேல பேசு. என அவர் ஏதோ குறிவைத்து பேச.
அதை அறியாதவள், ஹரிஷை காப்பாற்ற வேண்டும் என எண்ணி தாத்தா நீங்க என்ன சொன்னாலும் நான் ஏத்துகுறேன். அது படியே செய்யுறேன் இது சத்தியம் என கூற.
என் மேல சத்தியம் பண்ணு எழில் என அவர் கூற.
உங்க மேல சத்தியமா நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்.
அப்ப அவன், என்றவரின் பேச்சில்,
ஹரிஷை திரும்பி பார்த்தவள், வாடா சத்தியம் பண்ணுடா என அவள் அழைக்க.
அவருக்கு எதுக்கு சத்தியம் பண்ண சொல்லுறாருனு சொல்ல சொல்லு நான் பண்ணுறேன் என்றான்.
டேய், எதா இருந்தாலும் செய்யலாம் டா, காலேஜ் வர சொல்ல மாட்டார் வாடா, பிளிஸ். உன் கெரியர் ரொம்ப முக்கியம் இப்ப தான் நீ சினி இன்டர்ஸ்டி உள்ள போய் இருக்க, இந்த வாய்ப்ப பயன் படுத்திக்க வா டா எனக்காக சத்தியம் பண்ணு, என அவனின் கையை பிடித்தபடி அவள் மன்றாட.
தன் அன்னை அத்தை எழிலுக்காக தாத்தாவிடம் நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் என சத்தியம் செய்தான்.
ராமமூர்த்தியோ, இன்னும் மூனு நாள்ல ஹரிஷ்கும் எழில்கும் கல்யாணம் சொந்தங்களுக்கு சொல்லிடுங்க.
என் பேத்தி, காலேஜ் பசங்க முன்ன தலை குனிந்து நிற்க கூடாது. அவன் செயலால கெட்ட அவ பேர அவன் தான் மாத்தனும். அதுக்கு தான் இந்த கல்யாணம். எல்லாரும் வேலைய பாருங்க,என்றவர் மணிகண்டனிடம் சென்று,
என்ன மணி உன் பெண்ண ஹரிஷ்கு கட்டி கொடுப்ப தானே என கேட்க, நீங்க சொல்லுறத நாங்க என்னைக்கு மீறியிருக்கோம் மாமா என்றார்.
என்னடா விஜி உன் மகனுக்கு என் போத்து சரி தான என்க , சரி பா உங்க விருப்பம் என அவரும் சொல்ல. குடும்பமே அவர் முடிவை ஏற்றுக் கொண்டது.
திருமணம் பேசிய இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க,
எழிலிடம் வந்த ராமமூர்த்தி என் மேல சத்தியம் பண்ணி இருக்க, ஞாபகம் இருக்கட்டும் என அவள் கன்னத்தை தட்டி சென்றார்.
ஹரிஷை ஏற்கவும் முடியாமல், தாத்தாவின் மேல் செய்த சத்தியத்தை மாற்றவும் முடியாமல், அவள் கலங்கி நிற்க.
ராமமூர்த்தியின் கட்டளையில், அருகில் இருந்த பூ ஜாடியை தட்டி விட்டு தன் பைக்கில் சீறி பாய்ந்தான் ஹரிஷ்.
"நேரம் கூட எதிரிஆகிவிட
யுகங்கள்ஆக வேடம் மாறி விட
அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ செய்தாய்"
ராமமூர்த்தியிடம் செய்ய சத்தியத்தின் வீரியத்தை அறிந்த ஹரிஷ், தனது வண்டியை எடுத்துக் கொண்டு கடற்கரையை நோக்கி சென்றான்.
ஆர்பரிக்கும் கடல் அலையைவிட அவன் மனம் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.
என்ன செய்வது என அறியாமல் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தவனின் தோளை ஆருதலாய் ஒரு கரம் பற்ற.
நிமிர்ந்து பார்த்தவன், மௌனமாக இருக்க, கரணே முதலில் பேச துடங்கினான்.
மச்சா, தண்ணீ குடி என பாட்டிலை நீட்ட, அமைதியாக இருந்தவன் முன் வந்து அமர்ந்தவன்.
அமைதியா இருந்தா எல்லா சரி ஆகிடுமா, எதுனாலும் பேசுடா, ஏன் கல்லு மாதிரி இருக்க பேசு என அவன் சட்டையை பற்றி உலுக்க.
நான், எழில கல்யாணம் பண்ணிக்க சத்தியம் பண்ணிட்ட, ஆனா அவள என்னால கல்யாணம் பண்ண முடியாது, இப்ப நான் என்ன பண்ண... சொல்லுடா செல்லு என மனம் தாலாமல் கத்த.
ஹரிஷை தன்னோடு அணைத்தவன், ஏதும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான்.
இவ்வளவு நாள் யாழிய லவ் பண்ணிட்டு, இப்ப எழில கல்யாணம் பண்ண எப்படிடா முடியும் என்னால, யாழி என்னை என்ன நினைப்பா,
எழில கல்யாணம் பண்ணா அவ கூட என்னால எப்படி உண்மையா வாழ முடியும்,
யாழிக்கும் உண்மையா இல்லாம, எழிலுக்கும் உண்மையா இல்லாம, ஓ.....ஓ.....ஆஆ இந்த வாழ்க்கை இருக்கே நரகமடா நரகம்.
என் வாழ்க்கைக்காக பேச பேய் இப்ப அவ வாழ்க்கையே கேள்விகுறியா நிக்குதடா,
சின்ன வயசில இருந்து எனக்காக பேசி, தாத்தாக்கு தெரியாம மியூசிக் காலேஜ் அனுப்பி, கிடார் வாங்கி கொடுத்து, என் திட்டெல்லாம் அவளும் வாங்கி சாப்பிடாம இருக்கும் போதெல்லாம் ஊட்டிவிட்டு, இந்த நாலு வருஷமா எனக்காக எல்லாம் பாத்து பாத்து செய்தவ டா அவள்,
அவளால தாதாதாக்கு கொடுத்த சத்தியத்தை மீற முடியாது. அதால தான் நான் கோபமாக வீட்ட விட்டு வரும் போது கூட, என் பின்னாடி வரவே இல்ல டா அவ .
முதல் முறை எழில் என்னிடம் இருந்து தள்ளி நின்னிறுக்கா, அதுவே என்னால தாங்க முடியலடா என அவன் கரணிடம் புலம்ப.
யாரு சொன்னா அவ உன்ன விட்டு தள்ளி இருக்கானு, நீ கோபமா வீட்ட விட்டு போன உடனே அவ எனக்கு தா போன் பண்ணினா.
வீட்ல ஒரு பிரச்சணை ஹரிஷ் கன்டிபா பீசுக்கு தான் போய் இருப்பான், நீ அவன் கூட இரு, அவனை சாப்பிட வையுனு எனக்கு போன் பண்ணிணா,
நானும் ஏதோ வழக்கமான பிரச்சனைனு தான் நினைத்தேன், ஆனா விஷயம் இப்படினு நான் நினைக்கல டா,
நீ முதல்ல தண்ணீ குடி, நாம பொறுமையா யோசிக்கலாம்.
எப்படி டா பொறுமையா யோசிக்க முடியும், இன்னும் மூனு நாள்ல கல்யாணம் நான் என்ன செய்ய .
தாத்தாக்கு பண்ணின சத்தியத்தை மறந்திட்டு, வெளிஊர் எங்கனா போய்டு,என கரண் கூற
எழில என்னால ஏமாத்த முடியிதுடா, என்றான் இயலாமை கலந்த குரலில்.
அப்ப யாழினிய மறந்திடு,
டேய்.....
என்னடா டேய், எழிலும் வேணும் யாழினியும் வேணும்னா எப்படி,
நீ யாழினிக்கு ஓகே சொல்லி ஒரு மாசம் தானே ஆகுது. அவ தான் உன்ன முனு வருஷமா ஒன்சைடா லவ் பண்ணினா.உனக்கு அப்ப அதுல விருப்பம் இல்ல, எழில் பல முறை சொன்ன பிறகு தானே நீ யாழினிக்கு பிரபோஷ் பண்ண அதுவும் போன்ல தானே பண்ண,
அதே போன்ல எனக்கும் எழிலுக்கும் கல்யாணம்னு சொல்லு, இனி என்கிட்ட பேசாதனு சொல்லு என அவன் கூற,
டேய்... என கோபமாகன ஹரிஷ், கரணின் சட்டை காலரை பிடிக்க,
என்னடா என்ன, ஒன்னு வேணுன்னா ஒன்ன இழந்துதா ஆகனும்,
உனக்காக சின்னதுல இருந்து வாழ்ந்தவ எழில், அவளுக்காக யாழினிய விடுறது ஒன்னும் தப்பில்ல, நீ எழில கல்யாணம் பண்ணு, உனக்காக தாத்தாக்கு ஒரு வாக்கு கொடுத்தா பாரு அத காப்பாத்துவியா, என்ற கரணின் பேச்சில் மீண்டும் குழம்பிய ஹரிஷை,
மச்சான், உன் கெரியர்ல நீ சாதிக்கனும்னு ஆசப்பட்டு இவ்வளவு நாள் உனக்காக இருந்த எழில கல்யாணம் பண்ணுறது கடவுள் கொடுத்த வரும் டா,
எழில் மட்டும் எதுக்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுத்துடாதடா,
நீ யாழினிகிட்ட பேசி உனக்கும் எழிலுக்கும் கல்யாணம்கிறத சொல்லிடு இந்தா என அவன் கையில் போனை திணிக்க,
அதை பெற்றவன் இரண்டு நிமிடம் கண்களை மூடினான், இரண்டு நிமிடமும் எழினின் முகமே அவன் கண் முன் தோன்ற, கடைசியாக அவன் மன கண் முன் அவனுக்காக இவள் வாங்கிய அடியில் வந்து நிற்க. தலையை சிலுப்பி கண்களை திறந்தவன். யாழினிக்கு அழைத்திருந்தான்.
சொல்லு கரண் என்ன இந்த நேரத்தில, என அவள் அழைப்பை எடுத்தவுடன் கேட்க,
நான் கரண் இல்ல, ஹரிஷ் என்றான் வற்றிய குரலில்.
ஏய் என்னடா, உன் போன் என்ன ஆச்சி எதுக்கு கரண் போன்ல இருந்து கூப்பிட்டிருக்க என அவள் கேட்க.
யாழினி சாரி...
எதுக்குடா சாரி, நீ என்ன பண்ணின குரலே சரியில்லையே என அவள் கேட்க.
யாழினி எனக்கும் எழிலுக்கும் கல்யாணம் நடந்திடுச்சி, என அவன் கூறியதில் கரண் அதிர்ந்து விட்டான்.
யாழினியோ பயம் கலந்த குரலில் ஏய் பொய் சொல்லாத என்றாள்.
டேய், பொய் சொல்லாத இப்ப நீ என் முன்னாடி இருந்த அப்படியே நாலு அப்பு அப்புவேன்.ஒழுங்கா உண்மைய சொல்லு, எனக்கு எழில பத்தி தெரியும், அவ இப்படி செய்ய மாட்டா நீ ஏதோ பொய் சொல்லுற,
இல்ல யாழினி, இது வீட்ல முடிவு பண்ணது. எங்க இரண்டு பேராலையும் மீற முடியல, அவ தான் என் மனைவி. இத யாராலையும் மாத்த முடியாது. உன்னை காத்திருக்க வைத்ததுக்கு சாரி, இனி நான் உன்ன டிஸ்டப் பண்ணி மாட்டேன். என அவன் கூறி முடிக்க.
என்னடா, என்ன டிஸ்பட் பண்ணாதனுச் சொல்லாம சொல்லுற அப்படி தானே, அதைவிட அசிங்கம் எனக்கு வேற எதுவும் இல்ல, என அழுதபடி கூறியவள்.
என்னை தான் பாதியில விட்டுட்ட, உன்னை நம்பி வந்த எழிலயாவது ஒழுங்கா வச்சு வாழ பாரு,
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
குட் பாய்... என்றவள் அவன் பேச வாய்ப்பளிக்காமல் அழைப்பை துன்டிக்க,
ஹரிஷ் போனை கரணிடம் கொடுத்தான்.
எதுக்குடா கல்யாணம் முடிஞ்சிடுச்சினு சொன்ன, என கரண் கேட்க.
இவ்வளவு நாள் எனக்காக எழில் வாழ்ந்தா, இனி அவளுக்காக நான் வாழப்போறேன்டா . கல்யாணம் மூனு நாள்லனு சொன்னா வந்து நின்னுடுவா, எழில் தாத்தாவுக்கு பண்ணிண சத்தியத்தை நான் தான் காப்பாத்தனும் அதா. இனி என் வாழ்க்கையில எழிலும், இசையும் மட்டும் தான். என்றவன் ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு தலையில் தண்ணீர் ஊற்றி கோபத்தை தனித்தான்.
மச்சா நா கூட யாழினிக்காக எழில விட்டுடுவனு தப்பா நெனச்சிட்டேன்டா. சாரி என கரண் கட்டிபிடிக்க. அவனுக்கு அந்த அணைப்பு தேவை பட அவனும் அணைத்துக் கொண்டான்.
ஹரிஷ் கோபமாக வெளியே சென்றவுடன் தன் அறைக்கு சென்றவள், கரணை அழைத்து ஹரிஷின் நிலையை சொன்னவள். கட்டிலில் அமர்ந்து யாழினிக்கும் ஹரிஷூக்கும் இடையான உறவை பற்றி எண்ணிக்கொண்டிருந்தாள்.
யாழினி வேண்டாம் என கூறியவனை, கட்டாயப்படுத்தி காதல் சொன்ன வைத்த நிகழ்வை நினைத்தவள் மனம் தீயாய் சுட, கண்களை துடைத்தவள், இனி ஹரிஷுடன் எப்படி என்னால் வாழ முடியும், இது யாழினிக்கு நான் செய்யும் துரோகம் அல்லவே என ஒவ்வொரு நிகழ்விலும் யாழினியை முதன்மைப் படுத்திய அவள் எண்ணம்,
ஹரிஷை யாழினியின் காதலனாக பார்க்க முடிந்த அவளால், தன் கணவனாக பார்க்க முடியவில்லை.
தனக்குள்ளே பல போராட்டங்களை நடத்தியவள், கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தாள்.
தாத்தாவிற்கு செய்த சத்தியத்தாலும், ஹரிஷின் கெரியருக்காகவும் அவன் சாதிக்கும் வரை உற்ற துணையாக இருந்து பின்பு அவனை விட்டு பிரிந்து யாழினியை அவனுடன் சேர்க்க வேண்டும் என எண்ணியவளின் சிந்தனையை பைக் சத்தம் கலைக்க, ஓடி சென்று பால்கனியை எட்டி பார்த்தவள் கண்ணில் விழுந்தான் ஹரிஷ். அவன் வீட்டிற்கு வந்துவிட்டான் என்ற மன நிம்மதியில் அவள் உள்ளே செல்ல,
பூட்டி இருந்த எழில் அறையை பார்த்தவன், அமைதியாக தன்னறைக்குள் சென்றுவிட்டான்.
நாளும் பொழுதும் ஒரு நொடியும் யாருக்கும் காத்திருக்காமல் சூரியன் தன் கதிர்களை எங்க பரவி விடியவை உணர்த்த,
வீடே கல்யாணம் ஏற்பாட்டை சந்தோஷமாக ஆரம்பித்திருந்தது.
விஜயனும் மணியும் ஒவ்வொரு சொந்தத்திற்கும் திருமண விஷயத்தை கூற,
ராணியும் விமலாவும், லட்சுமி சொல்லும் ஒவ்வொரு சடங்கு முறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.
விஜய் டெக்கடேட்டருடன் வீட்டின் சுவர்களை கைகாட்டி கல்யாண வீடாக மாற்றுவதை பற்றி பேசிக் கொண்டிருக்க,
தாரிகாவோ, அத்தை பட்டு புடவை காரங்க வந்திருக்காங்க என்றாள்.
அம்மா தாரிகா, நீ நம்ப எழில அழைச்சிட்டு வாமா என லட்சுமி கூற,
சரி பாட்டி என எழில் அறையை நோக்கி சென்றாள்.
யவண ராணி புத்தகத்தை திறந்தவள், ஒரு வரியும் படிக்காமல் புத்தகத்தை முரைத்தபடி இருக்க,
எழில் என உள்ளே நுழைந்தாள் தாரிகா,
அவளின் குரலில் நிகழ்விற்கு வந்தவள், என்ன அக்கா என்றாள்.
பட்டு புடவை எடுக்க உன்னை அழைச்சிட்டு வர சொன்னாங்க, வா போலாம் என அவளின் கையை பிடித்து இழுத்து செல்ல,
வாயிலை அடைந்த தாரிகா, தன் அறையிலிருந்த வெளியே வந்த ஹரிஷை பார்த்து.
ஹரிஷ் நீயும் வா புடவை எடுக்கனும். நீயே எப்பவும் போல எழிலுக்கு ஏத்த கலரா செலக்ட் பண்ணு வா என தாரிகா அழைக்க.
எழிலை பார்த்தவன் இல்ல அண்ணி நீங்களே எடுங்க எனக்கு வேலை இருக்கு என வெளியே சென்றுவிட்டான்.
சாரல்_5 "இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு.."
வீட்டின் நடுவே ஐந்து புடவை கடையே வந்திருக்க வண்ண வண்ண புடவைகள் பார்ப்பவர்களின் ஆசையை தூண்டிக் கொண்டிருந்தது.
எழில் வந்தவுடன், எழில் பாட்டிகிட்ட வாமா என அவளை அழைத்து தன் அருகே அமர வைத்த லட்சுமி, ஒவ்வொரு புடவையாக அவள் மீது வைத்து பார்க்க,
தாரணியோ, இப்ப இந்த நேரம் இங்க ஹரிஷ் இருந்தான்னா ஒரே நிமிஷத்தில எழிலுக்கு புடவை எடுத்திருப்பா; நாம ஒரு மணிநேரமா பாக்குறோம். என்றவள் ஹரிஷுக்கு விடியோ காலில் அழைத்தாள்.
அண்ணி வேலையா இருக்க அப்பறம் பண்ணவா என அவன் பதிலில்,
ஹரிஷ் ஒரே நிமிஷம், எழிலுக்கு புடவையே செட் ஆகல ஒரு மணி நேரமா போராடிகிட்ட இருக்கோம் நான் வீடியோல காட்டுறோம் நீ ஒன்னு செலக்ட் பண்ணி கொடு டா. என்க.
அவள் புடவை வரிசையாக காண்பிக்க, அடுத்த நிமிடம் அங்கு தாமரை நிறத்திலிருந்த புடவையை சொல்லி, உடனே அழைப்பை நிறுத்தியவன் தனது வேலையில் ழூழ்கினான்.
அட இவ்வளவு நேரம் தேடினோம், ஒரு நிமிஷத்தில செலக்ட் பண்ணிட்டானே, சூப்பர் ரெம்ம நல்லா இருக்கு என் பெண்கள் அவனை வாழ்த்த,
எந்த உணர்வும் இன்றி பாவையாக வீற்றிருந்தாள் எழில்.
நகை கடைக்கு சென்றவர்கள், அவளுக்கு ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி அழகு பார்த்து மற்ற தேவைகளை முடித்து வீட்டிற்கு வர இரவானது.
காலை சொந்தகள் புடை சூழ, எழிலுக்கு நலங்கு வைத்தனர். அவளுக்கு பிறகு ஹரிஷுக்கு வைக்க இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
ஆடல் பாடல் என தொடங்கிய விழாவில் இருவரும் மூன்றாவது மனிதன் போல அமர்ந்திருக்க. குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்தனர்.
மாலை மெஹந்தி விழா நடக்க, எழில் கையில் மெஹந்தியிட்ட பெண்ணோ, மேடன் உங்க கணவர் பெயர் சொல்லுங்க என கேட்க, அப்பொழுது அவ்வழியே சென்ற ஹரிஷ், அமைதியாக நின்று அவளை பார்த்தவன்,
மெஹந்தி வைக்கும் பெண்ணிடம், பெயர் எல்லாம் வேண்டாம் நீங்க சாதாரணமா போடுங்க என்றவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்துக் கொண்டாள் எழில்.
இரண்டு கையும் காலும் மெஹந்தியில் இருக்க, எழில் அருகில் இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்க, அவளோ தனது கைப்பேசியில் மூழ்கியவள் எழில் கூறியதை கேட்கவேயில்லை.
நா வறண்டு இரும்லை கொடுக்க உடனே தண்ணீரை கொண்டு வந்து அவளுக்கு புகட்டினான் ஹரிஷ்.
அவனின் கவனிப்பை கண்ட, பெண்கள் கூட்டம், ஓ....ஓ....ஓ.... என கத்த, புகைபட கலைஞர்கள் அத்தருணத்தை தனது கேமராவின் வழியே பதித்துக் கொண்டனர்.
விமலாவிடம் வந்த ஹரிஷ், அம்மா எழில் ரொம்ப டையாடா இருக்கா, அவளுக்கு டிபன் கொடுத்து படுக்க வை, எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு கரணோட வந்திடுறேன்.
ஹரிஷ் கல்யாணம் ஆகாமலேயே எழில இப்படி தாங்குறானே இன்னும் கல்யாணம் ஆனா எப்படி எல்லா தாங்குவ, உங்க அண்ணனே உன்கிட்ட இருந்து கத்துக்கனும், என தாரிகா குறைபட.
அண்ணி அதெல்லா ஒன்னும் இல்ல, என்றவன் கரண் வா போகலாம் என வெளியே சென்றுவிட்டான்.
எப்படியோ இரண்டும் சந்தோஷமா இருந்தா போதும் என விமாலா கூற.
கண்டிப்பா நல்லா இருப்பாங்க அத்தை கவலபடாதிங்க. இப்ப உங்க சின்ன மருமகளை கவனியுங்க இல்ல உங்க பிள்ளைக்கு கோபம் வந்திடும் போங்க போங்க, என தாரிகா விமலாவை விரட்ட அந்த இடமே கலகலப்பானது.
இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தவன் எழில் அறை கதவு மூடியிருப்பதை பார்த்து அமைதியாக சென்று விட்டான்.
காலை வேளையில் பிரம்ம முகூர்தத்தில் திருமண நேரம் குறித்திருக்க, மேடையில் அமர்ந்திருந்தவன் ஐயர் கூறி மந்திரத்தை கூறிக்கொண்டிருக்க, மனமகள் அவன் அருகே வந்து அமர்ந்தாள்.
திருமண சடங்குகள் முடிய, முடிச்சிட்டு தன்னவள் ஆக்கியவன். பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டான்.
பந்தி முடிந்து, சொந்தங்கள் கிளம்ப, விமலாவிடம் வந்த ஹரிஷ் அம்மா எனக்கு வேலையிருக்கு நா கிளம்புறேன் என அவரின் பதிலை எதிர்பாராது தன் அறைக்கு சென்றவன் உடை மாற்றிக் கொண்டு கரணுடன் சென்றுவிட்டான்.
அவன் வெளியே சென்றது எழிலை பாதிக்குமோ என விமலா அவளை அறைக்கு அனுப்ப, அவளும் அமைதியாக சென்றுவிட்டாள்.
இரவு நெடு நேரம் ஆகியும் அவன் வராமல் இருக்க, விஜயன் அவனை அழைக்க, அவன் போனோ வீட்டிலே அடித்தது, அதை அறிந்தவர்கள் கரணுக்கு அழைக்க.
சொல்லுங்க பா என்றான் கரண்.
கரண், ஹரிஷ் எங்க.
அப்பா அவ டைரக்டர் கூட சாங் ரெக்காடிங்ல இருக்கான் பா. என்ன விஷயம் பா நான் வேணுமானா சொல்லவா.
அடேன் அவனுக்கு இன்னை கல்யாணம் ஆனது ஞாபகம் இருக்கா இல்லையாமா? வேலைய நாளைக்கு பாத்தா ஆகாதாமா உடனே அவன கிளம்பி வர சொல்லு என அவர் கோபமாக கூற.
சரி பா நான் அவகிட்ட சொல்லுறேன் பா என்றவன் அழைப்பை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல,
அங்கு சரியாக டியூன் போடாத பின்னனி இசை குழுவை திட்டிக் கொண்டிருந்தவனை பார்த்த கரண், அமைதியாக வெளியே வந்து போனை ஆப் செய்து விட்டான் ஹரிஷின் அப்பாவிற்கு பதில் சொல்ல முடியாத காரணத்தால்.
இரவு மணி பதினொன்னை தாண்ட, அவன் இன்னும் வராமல் இருப்பதை அறிந்த விமலா எழிலை தூங்க சொல்ல, அப்பொழுதே அவளுக்கு உயிர் வந்தது போல் இருந்தது.
அவனுக்காக காத்திருந்தவர்கள், நேரம் கடந்து செல்ல அமைதியாக தங்கள் அறைக்கு சென்று விட்டனர்.
இரண்டு மணிக்கு வந்தவன் தன் அறைக்குள் சென்றுவிட்டு காலை ஐந்து மணிக்கே வேலைக்கு கிளம்பி விட்டான்.
காலையில் அவன் அறையை காண, அது வெற்றறையாகவே காட்சியளித்தது.
உடனே அவனுக்கு அழைத்த விமலா , எங்க இருக்க என கேட்க.
அம்மா ஸ்டுடியோல இருக்கேன். வேலை போயிட்டு இருக்கு நானே உங்கள அப்புறம் கூப்பிடுறேன் என்றவன் போனை பிளைட் மூடில் போட்டு விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
காலை உணவின் போது ராமமூர்த்தி ஹரிஷ் எங்கே என கேட்க.
மாமா அவன் காலையிலயே கிளம்பிட்டான். என்றார் விமலா
துரைக்கு அப்படி என்ன வேலையாம், என நொடிந்தவரை.
தாத்த, நான் காலேஜ்கு வரட்டுமா என எழில் தயங்கி தயங்கி கேட்க.
அவள் கலையிழந்த முகத்தை பார்த்தவர், அவள் மனநிலையை மாற்ற எண்ணி, வாமா எப்பவும் போல நீ காலேஜ் வா என அவர் கூற.
சரி தாத்தா, என்றவளின் முகத்தில் இந்த முன்று நாட்களாக மறைந்திருந்த புன்னகை உதிர்ந்தது.
அனைவரும் காலை அவர் அவர்கள் வேலையை பார்க்க செல்ல, கல்லூரிக்கு சென்ற எழில் தன் பாவை நோன்பிலிருந்து ( பொம்மை நிலை) மாறியிருந்தாள்.
மாலை வீட்டிற்கு வந்தவள் எப்பொழுதும் போல, தனது வேலையை செய்ய, இரவும் தாமதாமாக வீட்டிற்கு வருபவன் காலை விடியும் முன் சென்றுவிடுவான் இதுவே ஒரு வாரமாக தொடர. பொறுத்திருந்த ராமமூர்த்தி இன்று அவன் வருகைக்காக ஹாலில் அமர்ந்து விட்டார்.
இரவு இரண்டு மணிக்கு வந்தவன், ஹாலில் அமர்ந்திருந்த ராமமூர்த்தியை பார்த்து விட்டு, மாடி ஏற.
துரைக்கு இவ்வளவு நேரம் என்ன வேலை என்றார் கோபம் கலந்த குரலில்.
அவன் அமைதியாக மேலே செல்ல, அதை கண்டவருக்கு கோபம் அதிகமாக,
உன்னதான் டா தண்டசோறு இவ்வளவு நேரமா எங்க சுத்திட்டு வர என்று கத்த,
ராமமூர்த்தியின் முதல் கேள்வியில் அனைவரும் அவர் அவர் அறையின் வெளியே நிற்க. அவர் கேட்ட கேள்வி அனைவரையும் மிரள வைத்தது.
அவர் சொன்ன தண்டசோறில் வெகுண்டவன், கோபமாக முரைக்க,
அதை கண்டவர் என்னடா, ரோஷம் பொத்துகிட்டு வருதோ, ஒரு ரூபாய் கூட இது வரைக்கும் சுயமா சம்பாதிச்சது இல்ல, அப்ப உன்ன தண்டசோறுனு கூப்பிடாமா வேற எப்படி கூப்பிட சொல்லுற.
என்றவரின் கோபத்தை அறிந்த ராணி, அப்பா அவ நம்ப ஹரிஷ் நாம அவனுக்காக தானே சம்பாதிக்குறோம். நீங்க ஏன் இப்படி பேசுறீங்க. பாவம் பா அவன் வேலை செய்திட்டு வந்திருக்கா சாப்பிட்டானானு தெரியல, கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு அவன் தூங்கட்டும் விடுங்க பா. என ராணி அவரிடம் கெஞ்ச.
நைட்டெல்லாம் ஊர சுத்துனா கண்ணு சிவக்காம எப்படி இருக்கும்.
நான் ஊரை சுத்தினத நீங்க பாத்திங்களா என அவன் கோபமாக கேட்க.
அத நா வேற பாக்கனும்மா என்ன. தண்டசோறு என அவர் மீண்டும் அவ்வார்த்தையை அழுத்தி சொல்ல.
அதில் வெகுண்டவன் பேச வரும் முன், எழில் பேசியிருந்தாள்.
அவள் பேசியதில் அதிர்ந்த குடும்பத்தினர், அவளிடம் வேண்டாம் வேண்டாம் என கூற,
எதையும் கேட்காதவள் அவள் வேலையில் குறியாக இருந்தாள்.