ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

உருகி விட்டேனடி உன் உயிர் காதலினாலே!

Screenshot_20210930_204124.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : வில்லியம் ஸ்மித்
ஹீரோயின் : வாணி

ஆழமான காதல் கதை...

மேற்கத்திய கலாச்சார வாசத்தில் தாயின் தவறு பூதாகரமாய் குழந்தை நெஞ்சில் பதிந்து போக பெண்களை தள்ளி நிறுத்திய அவன் செய்கை விதி செய்த சதியா அல்லது தாய் செய்த சதியா???

ஆண் வாசமே அறியாதவள் ஈர்ப்பையும் தாண்டிய காதலில் விழ அது காதலே அல்ல என கொன்று புதைத்திட்டான் பாவையை...

பிரிவின் தாக்கம் வதைக்க வாய் விட்டு அழ முடியா நிலை எந்த பெண்ணுக்குமே கொடிது!

இருந்தும் அவன் மேல் பித்தாகிப் போன ஓரே காரணத்திற்காக மங்கல நாண் மறைக்கப்பட்டது காரிகையின் கழுத்தில்!

நீ வருவாயென காதலில் திளைத்திருந்தவள் காளையின் செய்கையில் மோதலுக்காய் நின்றது தான் விந்தையிலும் விந்தை!

உன் மேல் காதலில்லை என சொன்னவன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக மட்டுமே அவளை ஏற்க துணிந்திட்டானோ???

மறைக்கப்பட்டு புதைந்து போயிருந்த காதல் குழந்தை ஜனனத்தில் காற்றாற்று வெள்ளமாய் வெளி வந்து கதறித் துடிக்க மீண்டும் விளையாடிய விதியை என்னவென்று சொல்ல???

தந்தை தான் தனக்கு எல்லாமுமாய் இருக்க மீறி பேச முடியா அவன் நிலை என்றும் கவலைக்கிடம்!

மங்கல நாணின் மதிப்பறிந்தவன் வார்த்தைகள் தந்தியடிக்க தந்தை சொல் எதிர்த்து அவளுக்கே அவளுக்காக மட்டுமே மீண்டும் சரணடைந்தான்.

கடல் தாண்டி வர வைத்த அவள் காதலில் உருகியே நிற்பான் அவளவனாய் என்றும்!

வாழ்த்துக்கள் கா ❤️

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.

ரிஷி.

20-06-2021.

https://pommutamilnovels.com/index.php?forums/uuuk.228/page-2

பி. கு: ரொம்ப நல்லா இருந்துது கதை... (நான் அழுதேன்னு யாருகிட்டவும் சொல்லிடாதிங்க)

பணத்தை விட உணர்வுகளே மதிக்கப்பட வேண்டும்குற அந்த வசனங்கள் ஆழமா பதிஞ்சு போச்சு...

குழந்தையை கையில ஏந்தும் அந்த நொடி ஒரு அப்பாவுக்கான அந்த உணர்வை நீங்க சொல்லி இருக்க விதம், உங்க எழுத்து நடையில நான் உண்மையில நெகிழ்ந்து போயிருக்கேன்.
 
உன்னில் தொலைந்தேனடி பெண்ணே!

448C30E2-745D-4C49-A9EE-FCFBB938518D.jpeg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : விக்ரம் செபஸ்தியன்
ஹீரோயின் : நிலா

அழுத்தமான காதல் கதை...

கண்டவுடன் என்னில் பாதியாக உணர்ந்த உன்னை சீண்டிப் பார்த்து கோபப்பட வைப்பதில் அப்படி ஓர் ஆர்வம் எனக்கு!

தோழிகளில் பார்வை உன்னில் படிந்த போது வராத உணர்வு எப்போதும் தொடரும் உன் கடைக்கண் பார்வை என்னில் விழாத அன்று புரிந்து கொண்டேன் நீ எனக்கானவன் என!

பெயருக்கு பின்னால் உள்ள என் அடையாளம் என்னை உன்னிலிருந்து பிரிக்க மதம் தாண்டி கோவிலில் கரம் பிடிக்க எண்ணியிருந்தவனை கரம் கோர்க்கவே முடியாதபடி இடையில் வந்தது விதி!

உன்னை காதலித்து கரம் பிடித்து உன்னுடன் வாழ எட்டு வைத்த என்னை தன் உயிரை நீத்து மொத்தமாய் புதைத்து விட்ட தாயின் செயலில் மறைந்தே போயிற்று உன் மீது நான் கொண்ட அத்தனை நேசங்களும்!

என் உயிரை நீ சுமந்த போது தேவதையாய் மனதில் நிறைந்திருந்தவள் என் உயிரை அநாதையாக்கிய போது ராட்சஸயாய் மாறிப் போனதன் மாயம்?

தாயிற்காக சகோதரிக்காக இழந்த வாழ்க்கையில் எனக்காக நீயிருப்பாய் என நினைத்திராதது தான் இங்கு பிழையாய் போயிற்று போலும்!

காதல் தாண்டி என்னில் எல்லாமுமாய் நீயிருக்க உனக்கு நானிக்கிறேன் என நெஞ்சை நிமிர்த்திய என்னை தூர விலக்கி நீ காயப்படுத்திய போதும் உன் மீது நான் வைத்த காதலே வென்றதடி!

சூழ்நிலை கைதியாய் மாற்றி விட்ட விதியை நான் ஒரு போதும் சபித்ததில்லை நீயே விதியில் தான் என்னவனானாய் எனும் நினைப்பில்!

குழந்தையாய் ஏற்றுக் கொண்ட ஓர் உயிர் என்னை காதலிக்க என் மனம் உன்னை தேடியதில் நானே உனக்கான என் காதலில் தோற்று நின்றேனடி!

உனக்காய் காத்திருந்தவளை சித்தி என நீ அறிமுகப்படுத்திய போது மரித்துப் போனேன் என்னவனே!

உன்னை மரிக்கச் செய்து பூமியில் நான் மட்டும் வாழ்ந்துவிடவியலாது தவிக்க மீண்டுமொருமுறை விமோச்சனமளித்தாய் தாய்மையில்!

தாயுணர்வு எனை துரத்த நம் மகவுக்காய் உன் நண்பியின் நினைவுகளை புதைத்திட்ட போது உணர்ந்தேன் உன் காதல் ஆழத்தை!

தாய்மை இல்லையென உனை வெறுத்தவன் மீண்டுமொர் தாய்மையில் உன்னில் தொலைந்தேனடி பெண்ணே!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

12-10-2021.
 
#review

உள்ளம் உனக்கே உனக்கு!

1BD39213-D533-4A57-A957-5E7DE61377E1.jpeg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : அருண்
ஹீரோயின் : நிவேதா

அழுத்தமான காதல் கதை...

அவன் சிறு அசைவையும் ரசித்துப் பார்க்கும் காரிகைக்கு முறை மட்டும் அண்ணனாம்!

அவன் தங்கையாய் இருந்தவள் தோள் கொடுத்த தோழியாய் மாறிப் போக விதியாய் தொடங்கியது ஓர் விளையாட்டுப் பயணம்!

தீவிர ரசிகையாய் இருந்தவளை மணைவியான பின்பும் அண்ணன் எனும் அழைப்பை கொண்டே வதம் செய்யத் துவங்கினான் வேங்கை!

அன்னையை விட்டு விலக்கி நிறுத்திய காதல் மனைவியிடம் மட்டும் விலக விடாமல் கட்டி வைத்தது தான் விந்தையிலும் விந்தை!

உலகின் மாபெரும் நடிகனாய் புகழ் பெற்றவன் அவனவளுக்கு மட்டும் ராக்ஷஸனாய் மாறியதன் மாயம்!

உயிருக்கு போராடிய போது கொண்டாடித் தீர்த்த காதல் தாயிறப்பில் மடிந்து போக ராட்சஸனின் ராட்சஸியாய் மாறிப் போனாள் பாவை!

விதி தொடங்கிய விளையாட்டில் நடிகனாய் இருந்தவன் வில்லனாய் தடம் மாற வலி தந்துவிடக் கூடாதென ஆடிய நாடகம் அவனுக்கே வலியான பாதையாய்!

விலக்கி நிறுத்திய உதாசீனம் வலித்திட்ட போதும் மனம் பொருந்திய காதலின் உள்ளங்கள் இரு துணையினரையே சார்ந்திருக்கும்!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

02-11-2021.

"உள்ளம் உனக்கே உனக்கு"
https://tamil.pratilipi.com/series/hrpmeputyamg?utm_source=ios&utm_campaign=content_series_share — with Pommu Novels.
 
விழிகள் தேடும் மொழிகள்!

C55F72A5-46F5-4421-BD60-0E769F0F0092.jpeg


நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : பிரவீன்
ஹீரோயின் : வருணிகா

அழகான காதல் கதை...

அறியா மொழியாய் அவன் இதயத்தில் தடம் பதித்திருந்தவளின் மீதான காதலை உணராமலேயே போனது தான் அவன் செய்த பிழையாய் போயிற்று!

சுதந்திர கிளியாய் சிறகடித்துப் பறந்தவள் அவனிடம் சிறைப்பட்ட கிளியாகிப் போக அறிந்தும் அறியா நிலைப் பேதையாய்!

தந்தையின் வளர்ப்பின் இளவரசி கணவனின் கூட்டின் வேலைக்காரியாகிப் போன மாயம் தான் விதி போலும்!

தடம்பதித்திருந்த காதல் அவள் விலகிய பின்னே உணர தேடிச் சென்றவனுக்கு அவல் விலகலே பதிலாய்!

கரம் கோர்த்த கணவனின் கையை இன்னோர் பெண்ணுக்கு கொடுக்கும் மனமுள்ளவள் காதல் வந்த பின் அவனை விட்டு இம்மியும் விலகாதது தான் காதல் செய்திருந்த மாயாஜாலம்!

ஈர்ப்பை காதலாக்கி முன்னால் காதலனென சொன்ன பொய் அவளவனிடம் காதல் சொல்லத் தடுக்க அறியா வேங்கையாய் அவன்!

காத்திருந்த காதல் கை சேர அவளி(னி)ன் விழிகளின் தேடல் மொழியாய் அவள்(ன்)!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

03-11-2021.
 
#review

மௌனம் பேசிடும் பாஷைகள்!

AD90D1AA-B491-409C-9927-F915349F5F10.jpeg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : ராம் பிரசாத்
ஹீரோயின் : அதிதி

அழுத்தமான காதல் கதை...

எதிரெதிராய் இணைந்த இரு துருவங்களின் காதல் மொழி!

துரோகியாய் தடம் பதித்து மணந்தவளில் காதல் கொண்டது வேங்கை மனம்!

நட்பிற்காய் கட்டிய கணவனை தூர விலக்கி வைத்தது பாவை மனம்!

விலகி இருந்த துருவங்கள் ஈர்க்க அவன் நெருங்கிய போது விலகிச் சென்றது தான் பாவையின் தவறா?

சொல்லாத காதலில் காதலை தேடித் தோற்றது வேங்கையின் தவறா?

நட்பிற்காய் மணம் முடித்தவனின் நேசத்தில் நட்பின் இலக்கணங்கள் மாறுபடுவதாய்!

காதல் பிரிவில் மனைவியின் மனம் புரியாமல் போக மீண்டும் மீண்டும் விலகல்!

அவன் குருதி கை நனைத்த நொடி வெளிப்பட்ட காதல், அவன் உயிர் ஜனித்த நொடி கூட அவன் காதலை புரியாமலேயே போனது தான் விந்தை!

சொல்லா காதலில் யாசகம் கேட்டு நின்றவன் அவள் பிறந்தநாளில் மீண்டும் முழுதாய் மண்டியிட்டான் அவளுக்காய் காதல் யாசகனாய்!

வாய் மொழியில் வெளிப்படா காதல் அவன் மௌனத்தின் மொழியாய் என்றும்!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்காச்சி ❤️
லவ் யூவ் ?

04-11-2021.
 
Top