ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆத்விகா பொம்முவின் நிறைவடைந்த நாவல்களுக்கான விமர்சனங்கள்

Rishi24

Well-known member
Wonderland writer
#review

அனலில் உருகும் மெழுகின் காதல்!

FB_IMG_1633013309490.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : ரோஹித் ஷேத்ரா
ஹீரோயின் : விருஷா

ஆழமான அழுத்தமான காதல் கதை...

தந்தை இழப்பில் தீயாய் தகித்து வேட்டையாடத் துடிக்கும் வேங்கையாய் சுற்றிக் கொண்டிருந்தவனை காலம் மாற்றவில்லை மாற்றான் தாயுறவு மாற்றியது மனிதனாய்!!!

அடையாளத்தை துறந்து வெற்றியின் அடையாளமாய் சுற்றித் திறிந்தவன் வெற்றி பெறவே பிறந்து வந்தவன்!

பணத்தில் புரண்டவனுக்கு ஏழ்மை எல்லாம் தாயன்பு முன் எதுவுமே இல்லையென தொன்றி விட்டது போலும்!

அவள் சொன்ன ஒற்றை வார்த்தைக்காய் காக்கியை அணிந்தவனை வீரனாய் மாற்றியமைத்தது உள்ளிருந்த தேசப்பற்று!

தந்தைகாகாய் பழி தீர்க்க நாடகமாடியவனின் நாடக அரங்கில் அவனே கதாசிரியன்!!! அவனே கதாநாயகன்!!! அவனே எதிர்த்தரப்பு வேங்கை!!!

மாறுவேடமிட்ட தந்தையாய் மகளை அரவணைத்தவனுக்கு சகோதர உறவாய் மாறன்!!!

அனலாய் தகிப்பவன் அவளிடம் மட்டும் மெழுகாய் கரையும் விந்தை அவள் காதலில் மட்டுமே சாத்தியம்!!!

அவளுக்காகவே அவளவனாகவே என்றும் அவன், அவள் அனலில் உருகும் மெழுகாய்!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

23-07-2021.

 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

தீராத விளையாட்டுப் பிள்ளையடா!

Screenshot_20210930_202041.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : ஆகாஷ்
ஹீரோயின் : நித்யா

ஆழமான காதல் கதை...

திரை மறைவில் செய்யப்பட்ட தவறில் வழி தவறிப் போனவனுள் தேவதையாய் நுழைந்திட்டவள் அவள்!

பெண்களை எல்லை தாண்டி தீண்டிய கண்கள் அவளைக் கண்ட பின் பார்க்கவே தயக்கம் காட்டியது தான் காதல் செய்த மாயாஜாலமா?

அனைவரிடமும் காட்டிய உதாசீனம் தாய் என்ற ஒற்றைச் சொல்லின் முன் தோற்றுப் போனதில் தாய்மையின் நெகிழ்வே வரமாய்...

சகோதரணாய் சித்தித்த உறவு உண்மைக் காதலை கூட உணர மறுக்க வார்த்தைகளின் சிதறலில் விலகிச் சென்றான் வேங்கை..

காதல் சொல்லியும் விலகிச் செல்பவனை மீண்டும் மீண்டும் காதலித்த தன் காதலை உணர்த்தப் போராடிய அவள் காதலில் கசிந்துருகியே போனது அவளவனின் காதல் கூட!

தனக்குள் புதைக்கப்பட்ட காதல் அவள் திருமணத்தில் தான் நிறைவு பெறுமென்று எண்ணியிருந்து விலகியவனுக்கு விதியால் மீண்டும் ஓர் முறை விதி எழுதப்பட கண் மூடி மயங்கி இருந்தவளுக்காய் அவன் கண்கள் வடித்த கண்ணீர் சொன்னது இருவரின் காதல் ஆழத்தை!!!

தீராத விளையாட்டுப் பிள்ளையாய் உலகம் சுற்றிய வாலிபன் தீரா காதல் தீவிரவாதியானான் அவனவளுக்கு மட்டும்!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

10-08-2021.

 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

காதல் ராட்சஷியே!

FB_IMG_1633013560711.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : வித்யுத்
ஹீரோயின் : சாஹித்யா

ஆழமான காதல் கதை...

திருமணமானவள் என்பதையும் தாண்டி அவன் காதலே அவளை கைகோர்க்கத் துடித்திட விலகிச் சென்றவளுக்கு அதிர்ச்சியாய் ஓர் திருமணம்!

தன்னை ஏதும் சொல்லும் போது கூட வராத வலி அவனுக்கொன்றென்றால் தாங்கிடவியலாமல் துடித்ததற்குப் பெயர் காதலல்லாமல்???

எதிர்ப்பாரா வலியினில் தனக்குள் ஒடுங்கியவளை தட்டிக் கொடுத்து தூக்கி நிறுத்திய அவன் காதலில் வார்த்தைகளற்றுப் போகிறது அனைத்துக் காவியங்களும்!

அடிபட்டு கீழே விழுந்திருந்தவளை தூக்கி நிறுத்தி தன் தோளோடு சேர்த்தனைத்து நிமிர்வாய் நின்ற போது உலகையே வென்றிட்டவன் அவள் மனதை வெல்லாமல் இருந்தால் தானே விந்தை!

அவளுக்காய் அவன் நின்ற போது கரைகடந்திட்ட அவன் காதல், அவளவனே அவனுக்காக வாழ்வில் நிமிர்ந்த போது அவனுக்கான அவள் காதலில் சற்றே தொலைந்து தான் போயிற்று போலும்!

உனக்காக நானிருக்கிறேன் என்ற சொல்லின் இலக்கணமாய் அவள் வாழ்வின் தீபம் அவன்!!!

அடங்காத வேங்கையாய் உலகம் சுற்றியவனை அடக்கியாளும் ராட்சஸி அவள்!!!

அவனவளின் காதலுக்கு மட்டுமேயான அவனின் காதல் ராட்சஸி!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

23-08-2021.

 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

மலரிதழில் மடிந்தேனே!

FB_IMG_1633013652070.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : வீர்
ஹீரோயின் : லதாங்கி

ஆத்மார்த்தமான காதல் கதை...

தாய் தந்தையே உலகமென சுற்றி வந்தவளுக்கு புது இடத்தில் அரனாய் அவன்!!!

நாடு விட்டு தொடர்ந்த பந்தம் முடிவுக்கு வராமல் புகைப்படங்கள் சதி செய்திட ஏற்க முடியா திருமண பந்தம் இருவரையும் மீண்டும் நேர் கோட்டில் இணைத்து விட்டது போலும்!

வேண்டாமல் மனதில் புதைந்தவள் தாயாகி பின் விட்டுச் சென்றது அவள் பிழையா? விலக்கி வைத்து தாயன்பில் நிலைத்திருந்த அவன் பிழையா?

தந்தையானதை கூட அனுபவிக்க விடாமல் கை கொட்டி சிரித்த விதி மீண்டுமோர் திருமணத்தின் மூலம் அவளவனை அவளுக்கே கொண்டு போய் சேர்த்தது தான் விந்தை!

மனித நிறங்களின் அடிப்படையையும் தாண்டிய அவளுக்கே அவளுக்கேயான அவன் காதலை அவன் புரிய வைத்த விதம் அழகு!

முதல் அறிமுகத்தில் பிடிக்காமல் போனாளும் காதல் என்ற ஒற்றை சொல்லில் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருப்பாள் அவனுக்கு என்றும் அவள்!!!

அழகான கதை!!!

வாழ்த்துக்கள் கா ❤️

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

30-07-2021.


..............................................................................

வெறும் முத்தத்தில் கணவன் என்ற உரிமையை கோரி நான் வரவில்லை!

கிராமத்தில் வளர்ந்தவள் எனக்கு அந்த புகைப்படம் செய்திட்ட சதியே உன்னை திருமணம் செய்ய தூண்டி விட்டது என்பேன்!

உன் அருகில் அமர்ந்திருந்த மணப்பெண்ணை பார்த்ததும் தயங்கிய வினாடி நேர என் மௌனமும் மனதுமே நானாக!!!

பிடிக்கா பந்தத்தில் வலுக்கட்டாயமாய் உன்னை இணைத்திட்டாலும் மங்கல நாணை நீ ஏற்றிய பின் என்றும் எனக்கானவன் ஆனாய் நீ!

குடும்பம் விலக்கி விட்டாலும் அன்னை உறவாய் பாட்டியில் தொடங்கி வேலைக்காரன் வரை என்னை மதித்ததுவே போதுமென நினைத்திருந்தேனே நீ அன்று உன் தாயிற்காய் நிற்கும் நாள் வரை!

தாய் பக்கமாய் நீ நின்றது என்ன வருத்தவில்லை... என்னை நம்பி ஒரு வார்த்தை கேட்காததுவே வலித்தது ஆழமாக!

மன்னிப்பு தன்மானத்தை தூண்டி விட உன் கருவை சுமந்திருந்த நான் நெஞ்சில் சுமந்தேன் உன்னை!

விவாகரத்து கிடைத்திட்ட நாளில் என் தலையணையே என் கண்ணீருக்கு சாட்சியாய்!

மரித்துப் போயிருந்தவளை மீண்டுமோர்முறை மரிக்கச் செய்ததுது உன் திருமண வாழ்த்து அட்டை!

திருமணமானவன் நீ என்று நான் நினைக்க என் மனைவி நீயே என்று நீ வந்து நின்ற நாளில் மாயமாய் மறைந்து போயின நான் கொண்ட வேதனையெல்லாம்!

நிறத்தை காதலிப்பவரை தாண்டி என் மனதை காதலித்த உன்னை நான் என்றும் மறவேன் என்னவனே!

மலரிதழில் மடிந்து வீழ்ந்தவனையும் காதலால் ஜெயம் பெற்றிட வைப்பவளாய் என்றும் நான் உந்தன்

-மனதிற்கினியவள்.
 

Rishi24

Well-known member
Wonderland writer
#review

யாரோ இவன்?

FB_IMG_1633013715473.jpg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : ருத்ரன்
ஹீரோயின் : நந்தினி

அழுத்தமான காதல் கதை...

உணர்ச்சிகளை உயிருடன் புதைத்தவனை அவன் மேலிந்த காதலுக்காகவே ஏற்றவள் அவள்!

காதலிருந்தும் புதைத்தவன் சிறு உயிருக்காக அவளை விலக்க, நண்பனாய் வெற்றி பெற்றவன் கணவனாய் தோற்றது தான் இங்கு விதி போலும்!

மறைத்த உண்மை திரையில் தெரிய உயிருடன் மரித்துப் போனவளுக்கு குழந்தையே இருவருக்கும் நபாலமாகவும் தடையாகவும்!!!

தடையாய் இருந்த குழந்தை ஐந்து வருடங்கள் விலக்கி வைக்க பாலமாய் மாறியது மீண்டும் அவள் மூலமே!

தாயன்பு ஜெயிக்க காதல் கொண்ட மனம் தான் கணவனை ஏற்க முடியாமல் தோற்றே போனது.

உயிர் போகும் நொடியில் அவன் கண்ணீரின் தவிப்பில் வெளிப்பட்ட காதல், புதைந்திருந்த காதலை தட்டியெழுப்ப விரும்பியே அவனுள் தொலைந்து போனாள் அவனவள்!!!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

27-08-2021.
 
Top