இரெட்டைக் கதிரே!
நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு
ஹீரோ : அகர்னண், அங்கதன்
ஹீரோயின் : தான்யா, நயனா
அழகான காதல் கதை...
சிறு வயதுக் காதல் விருட்சமாய் வளர்ந்து நிற்க மனதை திறந்து காட்டியதில் தோழ்வி என்ற ஒரு சொல்லே அவளால் தான் அவனுக்கு அறிமுகம் போலும்!
தமையனின் அன்பை முழுதாகப் பெற்று அவனால் ஜெயிக்க வைக்கப்பட்டவன் மறுத்த காதலில் துவண்டு போக மீண்டும் மீண்டும் தோள் கொடுத்தது சகோதரம் எனும் ஆழமான உறவு!
காதலை புதைத்து விட்டு தம்பிக்காக தியாகியானவன் பாவையின் மீது பித்தாகிப் போனது தான் காதலின் விந்தையோ???
பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிந்தவளை தன் காதலினால் சுருட்டிக் கொண்டான் காளை!
சுதந்திரம் தேடாமல் அவனுள் மட்டுமே அடங்கிப் போனவளுள் தான் எத்தனை காதல் அவன் மீது!
அடுத்தவர் மனதை அறிந்து நடப்பவளுக்கு அவள் மனதை அறிந்து நடப்பவன் அவளவனாய் அவன் என்றும்!
தம்பியின் காதலின் வெற்றிக்கு வழியமைத்தவன் வலி மறந்து விலகி விட தமக்கையின் வாழ்க்கையை தான் பறித்துக் கொண்டதாய் பரிதவித்துப் போனாள் காரிகை!
குற்றவுணர்ச்சியில் அவள் விலக சிறு விலகலை கூட தாங்க முடியாதவன் அவள் பெரும் பிழையில் ஒதுக்கியே வைத்து விட்டது தான் விதியின் சதியோ???
வலி மறந்து அவளவனாய் மாறியவன் என்பதை விட வலி மறக்கச் செய்து அவளவனாய் மாற்றியமைத்த அவள் மனம் பேரழகு!
காதல் அழகில் அல்ல மனம் என்ற ஒன்றே அனைத்திற்குமான விடையாய் அவள் என்றும் அவனின் "டான்"
அதிரடிக்கு மட்டுமல்ல காதலில் அவனை வீழ்த்தி மனதை புரிய வைத்தவர்களும் இவளால் "டான்" எனும் பெயராய் மாறிப் போன விந்தை உங்கள் எழுத்து நடைக்கே சமர்ப்பணம் அக்கா!
நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,
நன்றி.
ரிஷி.
27-06-2021.