டாம் அண்ட் ஜெர்ரி
நாவலாசிரியர்: ஆத்விகா பொம்மு
ஹீரோ: அஷ்வின் (அஜித், ஆகாஷ்)
ஹீரோயின்: அஞ்சலி
(அனன்யா, அருக்காணி)
நகைச்சுவை கலந்த மிக ஆழமான கருத்துள்ள கதை.
என்ன தான் சண்டை போட்டாலும் காதல் பாசம்னு வரும் போது எந்த ஒரு மனிதனும் அடங்கிப் போவது இயல்பே... அது அஷ்வின் அஞ்சலி கேரக்டர் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டது.
நம்பிக்கை... எந்த விடயத்திலும் நம்பிக்கை தான் மிக முக்கியம். நம்பிக்கை பொய்த்துப் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் அலாதியானது.
யார் என்ன சொன்னாலும் தன் வளர்ப்பு பொய்த்துப் போகாது என்ற நம்பிக்கையை தந்தை மகள் மீது வைக்காத அதேநேரம் மகளுக்கு இப்படி நடந்திருப்பது கண்டு தாயும் பேசாமல் இருந்தது மிகவும் வருத்தம்.
தந்தை நிலைமையில் பார்க்கும் போது அப்போதைய அவரின் மனநிலைக்கு அவர் நியாயவாதியே ஆனாலும் மகளின் நிலையிலிருந்து பார்க்கும் போது அது அவளுக்கு நியாயமானதே.
தந்தை மகளிடம் நம்பிக்கை எதிர்ப்பார்பது போல் தானே மகளும் தந்தையிடம் எதிர்ப்பார்த்திருப்பாள்.
மகளாக இருப்பதால் ஒதுக்கி வைத்து விட்டால் மகள் பார்வையில் நிச்சயமாக தந்தை நம்பிக்கையற்றவராகவே சித்தரிக்கப்படுவார்.
கதையில் மிக முக்கியமான பகுதி சந்தேகம் கொள்வதால் வரும் விளைவு.
அஜித் கேரக்டரின் குணநலன்களின் அடிப்படையில் அவன் செய்தது சரி அனன்யாவை பொருத்த வரை அவள் செய்தது சரி அல்ல இங்கு கருத்து.
இருவருக்கும் அவரவர் பார்வை சரி.
அஜித் கேரக்டரின் குணநலன் படி மனைவியை நோவித்தது சரி என்றாலும் அவன் வார்த்தைகள் பிழை.
பெண் மனம் எவ்வளவுக்கு எவ்வளவு மன்னிக்க கூடியதோ அவ்வளவுக்கு அவ்வளவு மன்னிக்க மறுப்பதும் உண்மை.
ஒரு விடயத்தை கணவனுக்கு சொல்லாமல் அனன்யா மறைத்திருந்தாலும் அவளுக்கு அவன் கொடுத்த தண்டனை அதிகம்.
மன்னிப்பு கேட்பவனை மன்னிக்க முடியாது அவனை அந்நிலையில் பார்க்கவும் முடியாத அவள் மனவேதனை கொடிது.
அஜித் பார்வையில் மனைவி மறைத்தது பிழை என்றால் அனன்யா பார்வையில் அவன் தண்டனை பிழை.
மனம் விட்டு வார்த்தைகள் பரிமாறப்படும் போது சந்தேகள் சிதறிப் போகின்றன என்பது கதையில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.
பெண்கள் உயர்வாய் நினைக்கும் விடயம் கற்பு.
அளவு கடந்த காதல், எங்கே அவள் தன்னை விட்டு போய் விடுவாளோ என்கிற பயம் போன்ற காரணங்கள் அடிப்படையில் ஆகாஷ் என்கின்ற தனிமனிதன் செய்தது சரி.
ஒரு பொருளை தக்க வைத்துக் கொள்ள அவன் வழி அந்த நேரத்தில் அவனுக்கு சரியாக இருந்திருக்கிறது.
என்றாலும் பெண் பார்வையில் அது முழுக்க முழுக்க தவறான விடயம்.
நியாயம் கற்பிக்க கூட முடியாத ஓர் செயல்.
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்து என்ன பிழை செய்தாலும் பெண்ணையே குற்றம் சொல்வது தான் சமூகத்திலிருக்கும் மோசமான நீதி...
பெண் தவறு செய்தாலும் அவள் தான் குற்றவாளி ஆண் செய்தாலும் அவள் தான் குற்றவாளி.
ஆகாஷை மன்னிக்காமல் அருக்காணி செய்தது நூறு விகிதம் சரி... அதே நேரம் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டது அவள் குணத்தின் உயர்வு... அது அவள் வளர்க்கப்பட்ட முறை.
இங்கே அவரவர் பார்வையில் அவரவர் நியாயவாதியே தவிர யாரும் குற்றம் செய்தவர்கள் அல்ல...
அவர்கள் சித்தரிக்கப்படும் விதமே நம்மை புரிந்து கொள்ள தூண்டுகிறது.
நம்பிக்கை, காதல், சந்தேகம், கற்பு... நான்கும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கம் செலுத்துகிறது என்பதை நகைச்சுவை கலந்த உணர்வுடன் விளக்கிய ஆசியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
லவ் யூ கா
ரிஷி.
16-04-2021.