ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அவனுக்கு நிலவென்று பேர்-கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பகுதி. கடந்த பதிவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு மிக்க நன்றி...

நிலவு 03

“இந்த லேட் நைட் ஷோ கண்டிப்பா அவசியமாங்க? நாளைக்கு நீங்க வேலைக்கு வேற போகனும்ல…” எனக் கேட்ட மனைவியை சிறு புன்னகை கொண்டு அடக்கினான் அவன். புதிதாக மணமானவர்கள் என்பது அவர்களைக் கண்டாலே தெரிந்துவிடும். முதல்முறை இருவரும் திரையரங்குக்கு வந்துள்ளது அவர்கள் எடுத்துத்தள்ளிய புகைப்படங்களில் தெரிந்துவிடும்.

“நீ எங்கிட்ட ஒன்னு கேட்டு அது முடியாதுன்னு சொல்ல கஷ்டமா இருந்துச்சுடா. அதான் எந்த டைமா இருந்தா என்னன்னு போட்டுட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு போயிடலாம். கவலைப்படாத”

“என்னமோ போங்க. இந்த நேரத்துல போய் வீட்டுல எல்லாரையும் எழுப்பப் போறோம். மாத்துசாவி வாங்கிட்டு வரவும் மறந்தாச்சு” என்றவள் அங்கலாய்க்க,

“நாம அத கொண்டுட்டு வந்திருந்தாலும் நாம வர்ற வரை அம்மா முழிச்சுட்டு தான் இருந்திருப்பாங்க” என்றவன் முகத்திலோ தாயைப் பற்றிய பெருமிதம். அதனை ஒத்துக்கொண்டவளிடம் மாமியார் மெச்சும் மருமகள் பட்டம் வாங்க வேண்டுமென்ற தவிப்பு.

இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டே வர, திடீரென்று அவர்களின் இருசக்கர வாகனம் அடுத்த அடி முன்னேற தடுமாறியது. ஆள் அரவமற்ற பகுதி அது. என்ன காரணத்தால் நின்றது என்பதை உணரும் முன்பே அவர்களை சுற்றி வளைத்திருந்தனர் சிலர்.

“யார் நீங்க?” என்று பயத்தோடும் தன்னவளை காக்கவேண்டும் என்னும் முனைப்போடும் வினவியவனிடமும் பின்னிருந்தவளிடமும் கத்தியை நீட்டி, “ம்ம்ம்… உங்ககிட்ட இருக்குறது எல்லாம் எடுத்து கொடுங்க” என்று மிரட்டினான் எதிரில் உள்ளவன்.

அவர்கள் சூழ்ந்ததிலேயே பயந்து பின்புறம் ஒட்டியிருந்தவள், இன்னும் பயத்தோடு “என்னங்க” என்னும் விளிப்போடு அவனோடு ஒன்றினாள்.

கள்ளன்களுக்கு ஏது காந்தையின் பயம் புரியும்? அவர்கள் பொருளைப் பெறுவதில் முனைப்போடு இருந்தார்கள். அப்போது, அந்த கணவனின் பயமுகம் வேறுவிதமாக மாறியது.

சிறிது நேரம் கழித்து அவ்விடத்தை விட்டு சிட்டாய் பறந்திருந்தனர் அந்த தம்பதியினர். அங்கிருந்து உயிரோடு சென்றவர்கள் என்னும் அடைமொழியோடு.

*****

கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. நேற்று நள்ளிரவு ஒரு சமூக விரோதி கும்பல் கொலை செய்யப்பட்டது. அதுவும் அதேபோல ஒரு ஆள்நடமாட்டம் அதிகமில்லா பகுதியில், சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலைகளைப் போல்.

இச்சம்பவத்தால் மக்கள் அனைவருமே பயத்தில் இருந்தனர். அதுவும், தற்போது அரசாங்கத்தின் மீது இந்த கோபம் முழுவதும் திரும்பியிருந்தது, நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென.

அதனால், அது என்னவென்று கண்டுபிடிக்க காவல்துறையினர் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடிக்கொண்டிருந்தனர். அப்படைக்கு தலைமை நம் ஹீரோ சார் தான். அவரும் தன்னால் முடிந்தவரை இவ்வழக்கைப்பற்றி யோசித்து வந்த தலைவலி தாங்க முடியாமல் பொறுப்பை தன் உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினான்.

அவன் செல்லும் பாதை யாவும் பின்தொடரும் பணியை சமீபமாக எடுத்திருக்கும் ஆர்கலி இப்போதும் அதனை செம்மையாக செய்தாள். (‘உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே’ மட்டும் தான் இப்போ வந்திருக்கு. ‘உன்மேல ஆசப்பட்டு பார்த்து காத்து நின்னேனே’ன்னு எப்போ பாடப்போறியோ!)

ஒரு பிரபலமான காஃபி ஷாப்பினுள் நுழைந்தான் அவன். மஃப்டியில் இருந்தாலும் சில நாட்களாக தொலைக்காட்சியில் காணும் முகம் என்பதால் சிலர் அடையாளம் கண்டு அவனை கண்டும் காணாமல் நோக்க, இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது மறைவாக ஒரு இருக்கையை தேர்வு செய்து அமர்ந்து தன் ஆர்டரினை தெரிவு செய்யத் துவங்கினான்.

அப்போது, அவன் முன்னே இரு கால்கள் தென்பட, அது யாரென்று நோக்கியவனைக் கண்டு புன்னகைத்தாள் ஆர்கலி. அவள் எதிரிலிருந்தவனிடமோ ஒரு சலிப்பான பாவம். அதைக் கண்டாலும் பொருட்படுத்தாது அவனிடம் தோழமையை குரலில் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“சாரி சார். உங்ககிட்ட அன்னைக்கு அப்படி பேசியது என் தப்புதான். அப்போ எப்படியாவது ஏதாவது டீடைல்ஸ் கிடைக்குமான்னு தேடிட்டு இருந்தேன்” என்றவள் கூற, அவளையே கூர்ந்து பார்த்தவன்,

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட். இப்போ எந்த கேஸோட டீடெய்ல்ஸ் வேணும் மிஸ்?” எனக் கேட்டான், அவனது வழக்கமான ஸ்டைலான இருகைகளையும் கட்டி நிமிர்ந்து உட்காரும் போஸில். அதில் அதிர்ச்சியடைந்தவள் பதில் கூறும் முன்பே தப்பான நேரத்தில் சரியாக எண்டரி கொடுத்தார் பேரர்.

அவரிடம் தனக்கான பாணத்தைக் கூறியவன் ஆர்கலியை நோக்க, வாய்க்கு வந்த ஒரு பெயரைக் கூறியவள் எதிரில் இருந்தவனை நோக்க, அவனோ இவள் விடையை தெரிந்துகொள்ளும் நோக்குடன்.

‘கேட்டதுக்கு பதில் சொல்லாம விடமாட்டான் போலவே ஆரு… சமாளி…’ என்று தனக்குள்ளே கூறியவள் அவனிடம், “எந்த டீடெய்லும் இல்ல சார். உங்கள இந்தப்பக்கம் பாத்தேன். அன்னைக்கு நடந்ததுக்கு ஒரு மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன் சார். வேற எதுவும் இல்ல. அப்போ நான் வரேன் சார்” என்று எழும்ப எத்தனிக்க,

“உக்காருங்க மிஸ். சாப்பிட்டு போகலாம்” என்று தன் கையில் இருந்த பேசியை நோண்ட ஆரம்பித்தான், அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல்.

அவனது இந்த செய்கையைக் கண்டவள், ‘நல்லா வருவடா நீயு… பேருல மட்டும் தான் கண்ணு இருக்கு போல… மத்தபடி ஆப்போசிட்ல ஒரு அம்சமான பொண்ண வெச்சுட்டு ஃபோன பாத்துட்டு இருக்க’ என்று தன்னை கண்டுகொள்ளாத காண்டில் திட்ட,

“சொல்லுங்க மிஸ். ஆர்கலி. உங்களுக்கு எப்படி இந்த ஃபீல்ட்ல இண்டரஸ்ட் வந்தது?” என்றான், தன் பார்வையை மொபைல் திரையில் இருந்து திருப்பாமல்.

“சார், இஃப் யூ டோண்ட் மைண்ட். இந்த மிஸ் வேண்டாமே! பேர் மட்டும் போதும். ஏதோ ஸ்கூல்ல மிஸ்ஸ கூப்பிடற மாதிரி இருக்கு” என அது பிடிக்காத பாவனையில் கூற,

“அப்போ நீங்க மட்டும் என்னை சார்ன்னு கூப்பிடறீங்க. அதுவும் தான் எனக்கு வாத்தியார கூப்பிடுறப்போல இருக்கு” என்றான் அவன்.

‘இவன் என்ன நம்ம பேர் சொல்ல சொல்றானா?’ என்றவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அப்படித்தான் என்று வார்த்தையாலேயே உரைத்துவிட்டான் அவன்.

அவனையே பார்த்தவளிடம், “தென், சொல்லுங்க ஆர்கலி. எப்படி இண்டரஸ்ட் வந்தது?” என்றான்.

“அதுவந்து சார்…” என்று ஆரம்பித்தவள், அவன் பார்வையில் திருத்தி, “அது வந்து தண்விழியன், சின்ன வயசில இருந்தே இந்த ஜாப்ன்னா ரொம்ப இஷ்டம். அதான் ஜார்னலிசம் எடுத்து படிச்சேன். இப்போ **** நியூஸ் பேப்பர்ல ரிப்போர்ட்டரா இருக்கேன்” எனக் கூற, (ஓருவழியா நம்ம ஹீரோ பேர சொல்லியாச்சு)

“என்ன மாதிரி ரிப்போர்ட்டர்? இன்வெஸ்டிகேட்டிவ்? பொலிட்டிக்கல்? க்ரைம்?” என்றவன் அடுக்கிக்கொண்டே போக, அவளுக்கு விழி பிதுங்கியது. அவள் இருப்பதோ இன்வெஸ்டிகேட்டிவ். அதை இவனிடம் எப்படி சொல்வது?

இவள் வேலை என்னவென்றால், வாரம் ஒருமுறை ராகுலுடன் அர்த்தராத்திரியில் ஏதேனும் ஒரு ஏரியாவில் சுற்றி அங்கே நடக்கும் சட்டத்திற்குப் புறம்பான செய்திகளை மறைமுகமாக பத்திரிக்கையில் வெளியிடுவது. இந்த யோசனையை அவள் முதலில் எடிட்டரிடம் கூறியபோது அவர் இவளை இவ்வளவு கடினமான வேலையில் ஈடுபடுத்த வேண்டுமா என்று யோசித்தார். நேரம் அத்தகையது அல்லவா? ஆனால், இவள் விடப்பிடியாக செய்தே தீருவேன் என்று ஆரம்பித்தாள். அப்படி ஒரு தருணத்தில் தான் அவள் தண்விழியனை சந்தித்தது. தற்போது அந்த கேஸைப் பற்றி தானே விசாரணை செய்ய ஆரம்பித்திருந்தாள். என்றேனும் திருப்பங்காள் நிறைந்த வழக்குகளைப் பற்றி கட்டுரை எழுதுவதும் அவள் வழக்கம். இதையெல்லாம் அவனிடம் சொன்னால், அவனை பின்தொடர்கிறாள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிடுமே!

எனவே, “செலிப்ரிட்டி சார்” என்று பதிலளித்தாள்.

“ஓ… குட்… செலிப்ரிட்டி ஜார்னலிஸ்ட் மிட் நைட்ல ரொடீஸ் பின்னாடி சுத்துவாங்கன்னு இப்போ தான் எனக்கு தெரியும்” என்றவனின் கூற்றில் அப்போதுதான் வந்த ஜூஸை தன் வாயில் வைத்தவளுக்கு புரை ஏறியது.

தன் தலையில் தட்டியவாறே, “அன்னைக்கு வேற ஒரு ரிப்போர்ட்டர் போக வேண்டியது சார். என்னை இழுத்துட்டு போயிடுச்சு அந்த லூசு” என வாய் கூசாமல் பொய்யுரைத்தாள், ராகுலிடம் மனதில் மன்னிப்பு கேட்டுக்கொண்டே.

பின், அவன் மேலும் கேள்வி கேட்காமல் இருக்க, “இஃப் யூ டோண்ட் மைண்ட், எனக்கு ஒரு இண்டர்வியூ தர முடியுமா? உங்க ஃப்ரீ டைம்ல?” எனக் கேட்டாள், அதன்மூலம் அவனிடம் இருந்து ஏதேனும் தகவல் பெறும்பொருட்டு.

“கண்டிப்பா ஆர்கலி. உங்க ஃபோன் நம்பர் கொடுங்க. என் ஷெட்யூல் பார்த்துட்டு சொல்றேன்” என்றவன் அவள் இலக்கத்தை வாங்கிக்கொண்டு தன்னுடையதையும் அவளிடம் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் இருவரும் விடைபெற, வெளியே வந்தவளோ, “பாக்க தான் முரட்டு பீஸா இருக்கான். ஆனா சரியான முட்டா பீஸ். ஈஸியா மாட்டிட்டான். இவனுக்கா பயந்தேன்? இண்டர்வியூல எப்படியாவது அவங்கிட்ட இருந்து ஏதாவது விஷயம் கறந்தறனும். இல்லைன்னாலும், எப்படியாவது அவனோட க்ளோஸ் ஆகிடனும். யூஸ் ஆகும்” என்று நினைத்தவாறு வெளியேற,

உள்ளே அமர்ந்திருந்தவனோ, அவள் தன் பெயர் சொன்ன விதத்தை மறுபடி மறுபடி மனதில் கொண்டுவந்து புன்னகையுடன் தன் தொலைப்பேசியை கையில் எடுத்தான். அதில், இன்னும் பதிவு செய்யப்படாத அவள் எண் ஒளிர்ந்தது. அதனை ‘மை சோல்’ என்று பதிந்தவன், ‘நீ ஏன் இப்படி என்னையே சுத்தி வரேன்னு எனக்கும் தெரியும் ஆழி. எது வரைக்கும் போறன்னு தான் பார்ப்போமே’ என்று சொல்லிக்கொண்டான்.

ஆனால், அவன் அறியவில்லை அவளை இப்போது தடுக்காததால் பின்னாளில் அவள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தப்போகிறோம் என்று.

Attachments

  • BeFunky-collage.jpg
    BeFunky-collage.jpg
    298.5 KB · Views: 0

கருத்துக்களை பதிவு செய்ய
 
T21

Well-known member
Wonderland writer
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்....

ரொம்ப நாளா சில பல காரணங்களால் அப்டேட் செய்ய முடியவில்லை. இதோ அடுத்த பதிவு.

சென்ற பதிவிற்கு ஆதரவளித்ததற்கு நன்றி.

நிலவு 04

மனதைக் கொள்ளை கொள்ளும் மாலை நேரம். ஆனால், அதனை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவர். அவர்தான் திருமூர்த்தி, ஆர்கலியின் தந்தை. அவர் யோசனையை கலைக்கும் வண்ணம் அவரிடம் டீயை நீட்டினார் மேகலா, “என்ன யோசிக்கறீங்க?” என்று கேட்டவாறு.

“பெருசா என்ன இருக்கப்போகுது? எல்லாம் உன் பொண்ணப் பத்தி தான்”

“அவளப் பத்தி நினைக்க என்ன இருக்கு? ஜான்சி ராணி மாதிரி பொண்ண வளர்க்கப் போறேன்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க. இப்போ ஜான்சி ராணியே பொண்ணா வந்திருக்க, உங்களுக்கு என்ன கவலை?” என்றவரிடம் எப்படி சொல்வார், கவலையே அந்த ஜான்சி ராணியைப் பற்றி தானென்று?

அவரும் பெண்ணா? என்று முதலில் சுணங்கியவர் தான், பிள்ளை பிறந்த தகவல் கேட்டதும். அது எல்லாம் பறந்துதான் போனது, பெண்ணவள் தன் பாட்டியை உரித்து வைத்து இருந்ததைப் பார்த்ததும். ‘எங்கம்மா…’ என்று அலுவலகம் விட்டு வந்ததும் அவளை தூக்கி அரைமணி நேரம் கொஞ்சாமல் அவருக்கு நாளே முடியாது.

அவை அனைத்து மாறும் நாளும் வந்தது. மகள் பள்ளியில் படிக்கும்போது ஒரு நாள் அவள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவர் ஜோசியரைக் காணச் செல்ல, அங்கே தான் அவர் மனதில் பாரம் ஏறியது. அதிலிருந்து அவர் மகளை தன் கைக்குள் பொத்தி வைக்க ஆரம்பித்தார்.

ஆனால் ஆர்கலிக்கோ, அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறியும் வயது. அவளும் அதற்கு ஏற்றாற்போல் அனைத்தையும் மீறித்தான் சென்றாள். இதோ, இப்போதுவரை அவருக்கு எதிர்முனையில் தான் நிற்கிறாள் அவள், அன்றிலிருந்து. எதுவும் புரிந்துகொள்ள முடியாத வயதவளுக்கு அப்போது. அதுவரை தன்னோடு நட்பாக பழகிய தந்தையின் திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவள் முதலில் கெஞ்சிப் பார்த்தாள். அது வேலைக்கு ஆகாததால் அவரிடம் தன் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில், அதுவே அவளுக்கு பழக்கமாகிப்போனது. எடுத்துக்கூறியிருந்தாலே அவர் பேச்சைக் கேட்டிருப்பாள் என்பது தெரியாமல் போயிற்று அவருக்கு.

இன்று மீண்டும் அந்த ஜோசியரைக் காண சென்றவர் தான் இந்த யோசனையில் இருந்தார். அந்த பெரியவர் சொன்னது இன்னும் அவர் செவியில் கேட்டது.

‘அவன் வந்துவிட்டான். உன் மகள் வாழ்வில் தன் கால்தடத்தைப் பதித்துவிட்டான். உன் மகளுக்கு காவலனும், காலனும் அவன் உருவமே!’

இது இன்று நேற்றல்ல, பல வருடங்களாக திருமூர்த்தி மட்டுமே தன் மனதில் ஏற்றி வைத்துள்ள பாரம். அந்த பாறாங்கல்லின் மேல் நர்த்தனம் ஆட ஒருவன் வந்துவிட்டானாம். எப்படி நிம்மதியாக இருக்க முடியும் அவரால்?

இவை எல்லாம் ஆரம்பித்த நாளுக்கு அவர் மனம் சென்றது.

*****

அப்போது அவள் இரண்டாவது படித்துக்கொண்டிருந்தாள். நீண்ட காலமாக திருமூர்த்திக்கு ஒரு முறை அவள் ஜாதகத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அவர் தாத்தாவிடம் இருந்து வந்த பழக்கம் அது. பிறந்தவுடன் பிள்ளைகளுக்கு மறக்காமல் எழுதி வைத்து பார்க்க வேண்டும்.

அதனை பல வருடங்களால செய்யாமல் விட்டிருந்தவர், சிறிது ஓய்வு கிடைக்கவும் கிளம்பிவிட்டார், தான் வழக்கமாக பார்ப்பவரிடம். அங்கே தான் விழுந்தது இடி.

ஆர்கலியின் ஜாதகத்தை பல முறை புரட்டிப் பார்த்த அப்பெரியவர், திருமூர்த்தியை நோக்கி, “இதுவரைக்கும் இந்த ஜாதகத்த யார்கிட்டையாவது காட்டிருக்கியா?” என்று கேட்க,

பொதுவாக கேட்கிறார் போலும் என நினைத்து, “யாருகிட்டையும் காமிச்சதில்ல சாமி!” என்றார்.

“தப்பு பண்ணிட்டியேப்பா! நீ எப்பவோ செய்திருக்கனும் இத. அப்போ முடிந்த அளவுக்கு சரி செய்திருக்கலாம்” என்று அவர் சொல்ல, கேட்டவருக்கோ ரத்த அழுத்தம் ஏறியது.

“என்ன சாமி சொல்றீங்க? கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” என பதறிக் கேட்டார் திருமூர்த்தி.

“உன் பொண்ணு ஜாதகத்த நானும் எத்தனையோ தடம் படிச்சுட்டேன். எல்லாமே ஒரே பதிலைத்தான் தருது. உன் பொண்ணுக்கு கண்டம் இருக்கு. அதனால அவ உயிர் போகக்கூட வாய்ப்பிருக்கு” என்று அவர்கூற,

“இதில் இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கா?” எனக் கேட்டார் அந்த பாசமிகு தந்தை.

“உன் பொண்ணோட ஆறு வயசுக்குள்ள ஒரு பரிகாரம் செய்திருக்கனும். அப்படி செய்திருந்தா அந்த கண்டத்தை ஒரு அளவுக்கு வலுவிழக்கச் செய்திருக்கலாம். இப்போ, அந்த காலம் தாண்டிப் போயிடுச்சு. இனி வருவதை சந்திச்சுதான் ஆகனும்” என்றவர், மேலும் கூறலானார்.

“உன் பொண்ணுக்கு அவ இருபத்தி மூன்று வயசு ஆரம்பித்த சில காலத்துலயே அவ உயிருக்கு ஆபத்து வரும். அதுவும், அதற்கு காரணமானவனை அவ தான் விரும்பி எடுத்த துறை மூலமாகவே சந்திப்பா” என்க,

“அப்போ அவ விரும்பற துறைக்கு போக விடாம தடுத்தா அவளுக்கு ஆபத்து இல்லையே சாமி?” என்று தன் பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்னும் தவிப்புடன் கேட்க,

திருமூர்த்தியின் கேள்வியில் சிரித்தவர், “விதியை மதியால் வெல்ல பார்க்கிற. ஆனா, நடப்பது நடந்தே தீரும்” என்றார்.

அதிலிருந்துதான் தந்தையும் மகளும் எதிரும் புதிருமானார்கள். அவர் அவளை பாதுகாப்பதாக நினைத்து ஒவ்வொன்றையும் செய்ய, அதுவே இருவரையும் பிரித்துவிட்டது. அதைக்கூட தன் மகள் நலனே முக்கியம் என நினைத்து தன்னை தேற்றிக்கொண்டவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் வரவிருக்கும் அவள் பிறந்தநாளை நினைத்து அச்சம் கொண்டவர் தற்போது என்ன நடக்குமோ என்னும் ஐயத்தோடே திரிகிறார். இது எங்கே புரியப்போகிறது அவர் துணைவியாருக்கு? புரிந்துகொள்வதற்கு அவரிடம் என்ன பிரச்சினை என்று கூறியிருக்க வேண்டுமல்லவா இவரும்?

இவர் கவலை தீருமா? இல்லை, கவலை ஏற்ற வந்தவன் வைத்து செய்வானா?

*****

“வணக்கம் சார்!” என்றவாறு விழியனின் வீட்டின் முன் நின்றிருந்தாள் ஆர்கலி.

“உள்ள வாங்க” என்றவன் அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க, அதை வாங்கி குடித்தவள் கண்களோ வீட்டை ஆராய்ந்தது. அவன் கண்களோ எதிரில் இருக்கும் பாவையை மொய்த்தது.

‘வீட்ட நல்லா தான் வெச்சிருக்கான். இப்போவே என்னென்ன எங்கெங்கே இருக்குன்னு தெரிஞ்சு வெச்சுக்கனும். பின்னாடி யூஸ் ஆகலாம்’ என அவள் நினைத்துக்கொண்டிருக்க, அவன் எண்ணமோ முற்றிலும் வேறாய்.

‘எப்பவுமே ஜீன்ஸும் டீ-ஷர்ட்டும் தான் போடுவாளா? அடியே என் மணிக்குயிலே! ஒரு நாளாவது சாரி கட்டிட்டு வாடி என் பட்டு…’ என்று கொஞ்சியவாறிருந்தான்.

(அடேய் போலீஸு… நீ முடிக்க மாட்ட கேஸு… வருது உன் வாயில இருந்து வாட்டர் ஃபால்ஸு…)

தண்விழியன் அங்கேயே அமர்ந்திருக்க, அவன் பார்வையை தவிர்க்க நினைத்தவளோ, “என்ன சார்! முதல் தடவை வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் தண்ணீ மட்டும் தானா?” எனக் கேட்டாள்.

“ஓ… சாரி ஆர்கலி. என்ன குடிக்கறீங்க? டீ, காபி ஓர் கூல் ட்ரிங்க்ஸ்?” என்று கேட்க,

“கூல் ட்ரிங்க்ஸ் சார்” என்றவள், அவன் சமையலறை நோக்கி செல்லவும், “நான் ஃப்ரெஷ் ஜூஸ் மட்டும் தான் சார் குடிப்பேன்” என்றவள் அவன் தலை மறையவும், ‘ஒரு பத்து நிமிஷத்துக்கு இந்த பக்கம் வர மாட்டான். நாம ஏதாவது தடயம் கெடைக்குதான்னு தேடுவோம்’ என நினைத்தவள், அங்கே இருந்த அலமாரிகளில் எல்லாம் தேடலானாள், ஏதேனும் பைல்ஸ் அல்லது புகைப்படங்கள் இருக்கின்றனவா என்று.

அந்த இரண்டு கொலைகளும் எவ்வாறு நடந்தது என்பதைக் கூட யாருக்கும் தெரியப்படுத்தாமலே இருக்கின்றனர். அதுவே ஆர்கலியை இந்த கொலைகளைப் பற்றி ஆராய சொல்லிற்று.

இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதும், இவை இன்னும் தொடரும் என்பதும் இவள் அனுமானம். ஆனால், அனுமானத்தை விட, ஆதாரத்தைத் தானே உலகம் நம்பும்? அப்படி ஏதேனும் ஆதாரம் கிட்டுமா?

ஹாலில் தேடிப் பார்த்தவளுக்கு வேறு ஏதேனும் அறையில் தேடலாம் என அருகிலிருந்த அறையின் கதவை நெருங்கியவளுக்கு விழியன் வரும் அரவம் கேட்க, முன் அமர்ந்திருந்தாற்போலவே சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.

உள்ளிருந்த அறையினுள் கதவு திறந்ததும் தாக்குவதற்காக காத்திருந்து ஏமாந்து போனது ஒரு உருவம்.

*****

“ஆரம்பிக்கலாமா சார்?” என வீட்டு லானில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி ஆர்கலி கேட்க,

“சுயர்…” என்று தன்னை தயார்படுத்திக்கொண்டான் விழியன்.

“இவ்வளவு சின்ன வயசில் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்டிங் வாங்கிருக்கீங்க. அதுக்கு எங்க பத்திரிக்கை சார்பா வாழ்த்துக்கள் சார். கூடவே, உங்களோட முதல் பேட்டி எங்களுக்கு குடுக்க நினைச்சதுக்காக நன்றி” என்றவள், அவன் நன்றியைப் பெற்றுக்கொண்டதும் கேள்விகளை வரிசையாக தொடுக்களானாள்.

“முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்க சார்” என்றவள் கேட்க, அவனும் தன்னைப் பற்றி கூறலானான்.

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பை தான். அங்கே என்னோட அப்பா ஒரு தனியார் கம்பனில வேலை செய்துட்டு இருந்தார். அப்பா, அம்மா, அண்ணன், நான் இவ்வளவு தான் எங்க குடும்பம். அப்பாக்கு சின்ன வயசுல இருந்தே போலீஸ் ஆகனும்னு ஆசை. ஆனால், அது நிறைவேறாம போயிடுச்சு. ஸோ, என்னையோ இல்லை, அண்ணாவையோ போலீஸ் ஆக்கனும்னு அவருக்கு கனவு, லட்சியம், என்ன வேணாலும் சொல்லலாம். ஒரு ஆக்ஸிடெண்ட்ல என் அம்மா, அண்ணா இரண்டு பேரும் இறந்துட்டாங்க. அதே ஆக்ஸிடெண்டால நானும் ஹாஸ்பிட்டலைஸ்ட் ஆகிட்டேன். அந்த கவலைலயே அப்பா இறந்துட்டாரு. அதுக்கு அப்புறம் நான் தேறி, முழு முயற்சியோட படிச்சு இப்போ இங்க உக்காந்துட்டு இருக்கேன்”

“ரொம்ப சாரி சார்” என ஆர்கலி வருத்தப்படவும், “பரவாயில்லை ஆர்கலி. நான் என்னைப் பற்றி அவ்வளவா வெளிய சொல்றது இல்ல. ஆனா, இப்போ சொன்னதுக்கு காரணம் என்னன்னா, ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் நிறைய பேர், முக்கியமா குழந்தைகள் மனசொடிஞ்சு தப்பான முடிவு எடுக்குறாங்க. அப்படி இருக்கவங்க யாராவது ஒருத்தர் நாமலும் எல்லாம் சமாளிக்க முடியும்னு நினைச்சா போதும்” என்க,

“சூப்பர் சார். நீங்க ஏன் மும்பைல இருந்துட்டு சென்னைக்கு வந்தீங்க?” என்று அடுத்த கேள்வியை வீசினாள் பெண்.

“போலீஸ்காரனைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா? எங்க மாற்றல் குடுக்கறாங்களோ, போக வேண்டியதுதான்” என்றவன் சிரிக்க, அதில் தெரிந்த சிறு குழி காந்தமென இழுத்தது கன்னியவளை.

அதிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டவள், “வரும்போதே கேஸோட வந்துட்டீங்க போலவே சார்” என்க,

“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே!” என பதிலளித்தான் அவன்.

“அதாவது சார், நீங்க இங்க ஜாயின் செய்த உடனேயே உங்களுக்கு வரிசையா கேஸ் கிடைச்சுருச்சே! அதைப் பற்றி சொன்னேன். அதுவும், இப்போ நீங்க ஹேண்டில் செய்யற கேஸ் தான் டால்க் ஆஃப் த டவுன். அதை மட்டும் நீங்க சால்வ் செய்துட்டீங்கன்னா, பல மாசத்துக்கு உங்க பேச்சு தான் சார் பத்திரிக்கைகளில் ஓடும்” என்று அவள் ஒரு கூடை ஐஸை அவன் தலையில் கவுத்த, அதிலிருந்து தப்பித்தவனோ,

“நான் எந்த கேஸுமே பேர் வாங்குறதுக்காக எடுக்குறதில்லை ஆர்கலி. குற்றமே நடக்காம இருக்கனும், அதான் என் நோக்கம்” என்றவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்க்க, அவன் பார்வை வீச்சில் சில நொடிகள் சிக்குண்டவள், அதை தவிர்க்க வேறு புறம் பார்வையை திருப்பினாள்.

தான் பார்த்ததைக் கண்டு அடுத்த நொடியே அவள் வாய் “ஆஆஆஆஆ….” என்றலறியது.

கருத்துக்களை பதிவு செய்ய
 
T21

Well-known member
Wonderland writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... இதோ கதையின் அடுத்த பதிவு. சென்ற எபிக்கு லைக்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்...

நிலவு 05

அலுவலகத்தில் அமர்ந்திருந்தவள், கையில் இருந்த பேனாவை சுழற்றியவாறே யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவள் கண்டது உண்மை, ஆனால், அவ்விடத்தில் சென்று பார்க்கும்போது மட்டும் எவ்வாறு மறைந்து போயிருப்பான்? இத்தனைக்கும் அவ்வறையில் வேறு வழிகளும் இல்லையே! அதையும் ஆராய்ந்துவிட்டு தானே வெளியேறினார்கள்?

வந்தவன் விழியனை கொல்ல வந்தவனா? அல்லது அவன் துணையோடு கொலை செய்பவனா?

இரண்டு நாட்களாக ஆர்கலி தலையை பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். இன்னும் எதையும் கண்டுபிடித்த பாடுதான் இல்லை.

மீண்டும் ஒரு முறை நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

*****

தண்விழியனிடம் நேர்க்காணல் நடத்திக்கொண்டிருந்தவள் ஒருகணம் அவன் வீட்டை நோக்கி பார்வையை திருப்ப, அங்கு அவள் கண்டதோ திரைசீலை ஒன்றின் பின்னே தெரிந்த ஒரு உருவம்.

யாருமில்லா வீட்டில் யாரது? விழியன் வெளியாட்களை உள்ளே வரக் கூட விடமாட்டானே!

அதுவும் அந்த உருவத்தின் கையில் நீண்டதொரு பொருளைக் காணவும் அலறியே விட்டாள் பெண்ணவள்.

அவள் சத்தத்தில் எதிரே அமர்ந்திருந்தவன் அவளருகே வந்து தண்ணீரை பருகக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினான்.

“என்ன ஆச்சு ஆழி? எதுக்கு இப்படி கத்தின?” என்று கேட்க, அவளுக்கு பயத்தில் பேச்சு சட்டென வரவில்லை.

“கூல்… ஒன்னும் இல்லைம்மா… ரிலாக்ஸ்…” என அவளை சமாதானப்படுத்தியவன், அவளை நோக்கி அணைக்க நீண்ட கைகளை அடக்கி அவள் தோளைத் தொட்டு ஆற்றுப்படுத்தலானான்.

பின் மெதுவாக, “எதுக்காக பயந்த ஆ…ர்கலி?” என மென்மையாக கேட்க, சற்று நிதானமடைந்திருந்தவளோ, சிறிது பயத்துடனேயே அந்த திரைச்சீலையை காட்டினாள்.

அதனைப் பார்த்தவனோ, “அங்க என்ன இருக்கு?” எனக் கேட்டான். அவன் புலனாய்வு கண்களுக்கு ஒன்றும் தட்டுப்படவில்லையே!

“அங்க யாரையோ பார்த்தேன் சார். நிழல் மாதிரி தெரிஞ்சுது” என்றவள் அவ்விடம் நோக்க, உருவம் எதுவும் தெரியவில்லை, திரைச்சீலையிலும் எந்த அசைவுமில்லை.

அதில் திகைத்தவள் விழியனை நோக்கி, “சார், அங்க நான் என்னவோ பாத்தேன். ஒருத்தர் ஜன்னல் பக்கத்துல நின்னுட்டு இங்க தான் பாத்துட்டு இருந்தாரு” எனக் கூற, சட்டென்று அவளை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.

அந்த அறை வீட்டின் தரைத்தளத்தில் இருக்கும் ஒரு விருந்தினர் அறை. அதிகம் புழங்காமல் இருக்கும். அவன் எதிரிகள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைத்தவன், தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அறைக்கதவை நோக்கி விரைந்தான்.

அங்கே ஒவ்வொரு இடமாக தேடியவன், ஒன்றும் அகப்படாமல், சாளரத்தினருகே வந்து, வெளியே நின்றிருந்த ஆர்கலியை நோக்கி எதுவுமில்லை என கைகாட்டினான்.

அவன் சைகையைக் கண்டவள் சிறிது கூட ஆசுவாசப்படவில்லை. அதற்குள் அவன் பின்னே ஏதோ நிழல் தெரிய, “விழி!” என கத்தியவள், வீட்டை நோக்கி ஓடலானாள்.

ஆர்கலி தன்னை நோக்கி வரவும், அனைத்தையும் மறந்து அவளிடம் விரைந்தவன் என்னவென உணரும் முன்பே அவனை அணைத்திருந்தாள் ஆர்கலி, அவனின் ஆழி.

அதில் பால் கேட்டவனுக்கு பாயாசம் கிடைத்த கதையாக விழியன் மனதில் பூச்சாரல். அதுவும் சிற்சில நிமிடங்களே!

தன்னிலைக்கு வந்திருந்த ஆர்கலி அப்போதுதான் அவனை அணைத்திருப்பதை உணர்ந்து சட்டென விலக, அந்த பாயாசத்தை சுவைக்கும் முன் பிடுங்கிய உணர்வில் நின்றிருந்தான் அவன்.

“உங்க பின்னாடி என்னவோ இருந்தது விழி!” என்றவள் அவனை அழைத்துக்கொண்டு அவ்வறைக்கு செல்ல, ‘ரொம்ப முக்கியம் இப்போ!’ என நினைத்தவாறே அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான் அவன்.

இருவரும் சேர்ந்து மீண்டும் அறையை சோதனையிட, ஒன்றுமே கிட்டவில்லை. யாரும் வந்துபோன தடயமும் இல்லாதிருக்க, குழப்பமடைந்தாள் ஆர்கலி.

சோஃபாவில் அவளை அமரவைத்தவன், “ஆர்கலி, நீங்க ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க. இப்போ நீங்க வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க. இன்னொரு நாள் இந்த இண்டெர்வியூவ கண்டினியூ பண்ணலாம். ஓகே?” என்றவன் அவளை தானே அவள் வீட்டில் விட ஆயத்தமானான்.

அதனை இதமாக மறுத்தவள், வீட்டிற்கு கிளம்பிச்சென்றாள்.

இடைப்பட்ட நேரத்தில், அத்தனைக்கும் காரணமான அறையிலிருந்து ஒரு மனிதன் முகம் கூட தெரியாத அளவு தன்னை மறைத்தவாறு சாளரத்தின் வழியே வெளியே குதித்து ஓடினான். அவன் மனமெங்கும் இருவரிடமும் மாட்டியிருந்தால் என்னவாகியிருக்கும் என்றே ஒரு சிந்தனை. வந்த காரியமும் இன்னும் முடியவில்லை. அனைத்திற்கும் காரணம் அந்தப் பெண். அவளை நினைக்கையில் அவன் கண்ணில் சீற்றம் தெரிந்தது. ஆனால், எதுவும் தற்போது தான் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கலானான்.

*****

அனைத்தையும் யோசித்தவள், மீண்டுமொரு முறை தன் நினைவலையை மீட்ட, அதை கெடுக்கவென வந்து சேர்ந்தான் ராகுல்.

“என்ன களி, ஒரே யோசனையா இருக்கு. அந்த கம்ம நினைச்சு டூயட்டா?” என்று கேட்க,

“யாருடா அந்த கம்?” எனக் கேட்டாள், மற்றதை தவிர்த்தபடி.

“வேற யாரு? இப்போ நீ யாரு பின்னாடி சுத்தறியோ அவருதான். மிஸ்டர் அசிஸ்டெண்ட் கமிஷனர்” என்றவன் கண்ணடிக்க, அருகிலிருந்த கைப்பையை எடுத்து அவனை மொத்தியவள்,

“அவரப் பத்தி கேஸத் தவிர நினைக்க என்ன இருக்கு? சரியான சிடுமூஞ்சி. எப்போ பாத்தாலும் உர்ருன்னே இருக்க வேண்டியது. ஓட்றதும் தான் ஓட்ற, நமக்கு ஒத்துபோற மாதிரி ஆள் கூட வெச்சு ஓட்ட மாட்ட?” என்றவள்,

“சரிடா, நான் வெளிய கெளம்புறேன். ஒருத்தர பாக்கனும்” என்று நகர, அவள் சில அடிகள் எடுத்து வைத்திருக்க, பின்னிருந்து பாடல் ஒலித்தது.

‘என் ஆளப் பாக்கப் போறேன்

பாத்த சேதி பேசப்போறேன்’ என.

அதில் இன்னும் கடுப்பானவள், ராகுலிடம் திரும்பி இன்னும் இரு அடிகளை அவனுக்கு வழங்கிவிட்டே சென்றாள்.

அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியேறியவள் தண்விழியன் எங்கிருக்கிறான் என்பதறிய அவன் அலுவலகத்தில் உள்ள அவள் உதவியாள் ஒருவனுக்கு அழைக்க, அவனோ விழியன் அன்று விடுமுறை என்றுரைத்தான்.

சிறிது யோசித்தவள், விழியனின் வீட்டை நோக்கி தன் வாகனத்தை இயக்கினாள்.

*****

தண்விழியனின் வீட்டை அடைந்தவளுக்கோ உள்ளே செல்ல பெரும் தயக்கம். அந்த பெரிய வாயிலின் முன்னே பேந்தப் பேந்த முழித்தவாறு நின்றிருந்தாள்.

முன்பு இங்கே வந்தபோது எழுந்த அதே கேள்வி இப்போதும் அவளுக்கு எழுந்தது.

‘இவ்வளவு பெரிய வீட்டுல இவரு மட்டும் தனியா இருக்காரே! இவரு இருக்கற பொஸிஷனுக்கு எவ்வளவு மிரட்டல் வரும்? ஒரு காவலாளியாவது வெச்சுக்கக்கூடாது?’

அன்று நடந்த சம்பவத்தில் ஏனோ விழியனின் உயிருக்கு ஆபத்திருப்பதாகவே பட்டது அவன் மைவிழியாளுக்கு.

அங்கேயே அமைதியாக அவள் நிற்க, கைப்பேசி அழைத்து தானும் அவளுடன் நிற்பதை உணர்த்தியது. திரையைப் பார்த்தவளுக்கு விழியனின் பெயர் தெரிய, யோசனையுடனேயே அதனி உயிர்ப்பித்து காதில் வைத்தாள்.

“கேட் வரைக்கும் வந்துட்டு இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே இருக்குறதா ஐடியா? உள்ள வாங்க ஆர்கலி” என்றவன் அழைப்பை துண்டித்துவிட, சுற்றும் முற்றும் பார்த்தாள் பெண்.

சி.சி.டி.வி. வைத்திருக்கிறானா? அல்லது உள்ளிருந்து தன்னை கண்டானா?

அவனிடமே கேட்டுவிடலாம் என உள்ளே செல்ல, ஹாலில் அவன் இல்லை. எங்கே என விழிகள் அவனைத் தேட, ஒரு அறையில் இருந்து அவன் குரல் கேட்டது. அத்திசையை நோக்கி சென்றவளுக்கு மேலும் செல்ல தயக்கம். அது அவன் உபயோகிக்கும் அறை போலும்.

தயங்கி நின்றவளை அசைத்துப் பார்த்தது அவன் குரல். பலவீனமாக அவன் குரல் ஒலிக்க, அதற்குமேல் தாங்க மாட்டாதவளாய் உள் நுழைந்திருந்தாள்.

அந்த பெரிய அறையின் கட்டிலில் அவன் படுத்திருக்க, அவனை கண்டதுமே தெரிந்தது, உடல் சுகமில்லையென.

“ஆச்சச்சோ! என்ன ஆச்சு சார்?” என பதறியவள், அவனருகே வந்து உடல்சூட்டை பரிசோதிக்க, அது சரியாக இருந்தது.

“ஓன்னும் இல்ல. ரொம்ப டையர்டா இருக்கு. அவ்வளவு தான். வேற எதுவும் இல்ல” என்றவன் மீண்டும் கண்களை மூட,

“டையர்டா இருந்தா இந்த அளவுக்கா சார் இருக்கும்? ஹை ஃபீவர் வந்துட்டு போன மாதிரி தெரியுறீங்க. வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என்றவள் அவனை தூக்கவர,

“எனக்கு ஒன்னும் இல்ல ஆர்கலி. நேத்து நைட் இருந்து வயித்து வலி. அவ்வளவுதான். சரியாகிடும்” என சமாதானப்படுத்தினான் விழியன்.

உடனே அவள் தன் கைப்பையில் எப்போதும் வைத்திருக்கும் சில அத்தியாவசிய மருந்துகளில் இருந்து அவனுக்குத் தேவையான மருந்தையும் தண்ணீரையும் எடுத்து நீட்ட, அவள் கரிசனத்தில் கண்கள் கரித்தன அவனுக்கு.

“வேண்டாம்மா… நான் டேப்லெட் அவ்வளவா சாப்பிட மாட்டேன். எதுவா இருந்தாலும் அதுவே சரியாகட்டும்னு விட்டுடுவேன்” என்றவன் மீண்டும் படுத்துக்கொள்ள, அவனை அந்நிலையில் பார்க்க முடியாமல் வெளியேறினாள்.

அவள் எண்ணப்போக்கு அவளுக்கே விசித்திரம் தான். அன்று அவனுக்கு ஆபத்து என்றதும் அவளுள் ஏதோ ஒன்று அவனை காப்பாற்றச் சொல்லி உந்தியது. ‘அவனுக்கு ஒன்றென்றால் தனக்கும் பாதிக்கும்’ என்ற அவள் மனச்செய்தி அவளை செயல்பட வைத்தது. இன்றும், விழியனை இந்த நிலையில் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் பெண்.

அவனை எவ்வாறு இந்த வலியில் இருந்து வெளிக்கொண்டு வரலாம் என்ற யோசனையுடன் மாடிக்கு சென்றவள் அங்கேயே நின்றுவிட்டாள்.

தண்விழியன் இருப்பிடத்தை சுற்றி அவ்வளவாக வீடுகள் இருக்காது. அதுவும் அவன் வீட்டைச் சுற்றி முழுவதும் மரங்களும் புதர்களும் நிறைந்திருக்கும்.

“நல்ல இடத்தப் புடிச்சிருக்கான் தங்குறதுக்கு. பாம்பு, பல்லி, ஓணான் எல்லாம் வீட்டுக்கு விசிட் வந்துட்டு போக ஏத்த இடமா பாத்து புடிச்சிருக்கான்” என நினைத்தவாறே அவ்விடத்தை மேலிருந்து ஆராய்ந்தாள், அவன் பாதுகாப்பை உறுதி செய்ய.

அப்போது அவள் கண்ணில் பட்டது அச்செடி. அதனைக் கண்டதும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. மலைப்பிரதேசங்களில் பெருமளவு வளரும் செடி அதிவிடயம் என்பது. பல்வேறு நற்பலன்களை தன்னகத்தே கொண்டதால் இச்செடி இப்பெயர் பெற்றது. இந்த குறுஞ்செடியானது, அளவில் பெரிய இலைகளையும், நீல நிறத்தில் மிளிரும் மலர்களையும் கொண்டது. அதன் பூக்களைக் கண்டே செடியை கண்டறிந்தாள் ஆர்கலி. அதிவிடயத்தின் சாம்பல் நிற வேர்கள் மிக்க மருத்துவப் பலன்களைத் தருவன.

உடனே வீட்டை விட்டு வெளியே சென்றவள், செடியைக் கண்ட இடத்தை நினைவுக்குக் கொண்டுவந்து அங்கு சென்று அதனை பறித்தும் வந்துவிட்டாள்.

உள்ளே விழியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அவள் வெளியே சென்று செடியைப் பறித்து வந்ததை அவன் தன் கைப்பேசியில் காணாமல் போய்விட்டான்.

சமையலறைக்கு வந்தவள், தன் தாயார் தனக்கு செய்வதை யோசித்து அதேபோல அவனுக்கும் அதனை நீரில் விட்டு காய்ச்சி எடுத்தாள்.

கசக்கும் சாறான இதனை குடிக்க தான் செய்யும் அலப்பறையை எண்ணியவாள், கையோடு ஒரு பாட்டில் சர்க்கரையும் எடுத்துக்கொண்டு அவன் அறை நோக்கி விரைந்தாள்.

உறங்கிக்கொண்டிருந்தாலும் விழியனின் முகத்தில் அதீத களைப்பும் அதை மீறிய வலியும் தென்பட்டது.

அவனை மெதுவே எழுப்பி அமரவைத்தவள் அவன் வாயருகே அச்சாறை கொண்டுசெல்ல, அதனை முகர்ந்து பார்த்தவனோ குவளையை விசிறியடித்தான்.

அதில் திகைத்து நின்றவளை மேலும் திகைக்க வைத்தான் அவன்.

“கெட் அவுட் ஓஃப் மை ப்ளேஸ்…” என்று விழியன் கத்த, தைரியமான பெண்ணவளையே சுவற்றோடு ஒன்ற வைத்தான்.

கருத்துக்களை பதிவு செய்ய
 
T21

Well-known member
Wonderland writer
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி. இதோ அடுத்த அத்தியாயம்.

நிலவு 06

தன்னை மறந்து கத்திய விழியன் மீண்டும் இயல்புக்கு வர சில நிமிடங்களானது. அதற்குள் ஆர்கலியின் நிலையோ பரிதாபகரமாக இருந்தது. அங்கிருந்து ஓடவும் முடியவில்லை அவளால், ஏதோ ஒன்று தடுத்தது. கால்களோ, வேறூன்றி நிற்க, இந்த நிலையிலும் அவனை எவ்வாறேனும் சமாதானப்படுத்தக் கூறிய உள்மனதைக் கண்டு திகைத்தாள் அவள். ஆனால், தன்னைப் பற்றி ஆராய தற்போது நேரம் இருக்கவில்லை அவளுக்கு.

கட்டிலில் இருந்தவனைக் கண்டால் அவன் கண்களை மூடி கை முஷ்டிகள் இரண்டையும் இறுக்கி தன்னை கட்டிக்குள் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருந்தான்.

‘வெறும் சாறப் பாத்து ஏன் இப்படி டென்ஷன் ஆகுறான்? கசக்கத் தான் செய்யும். இத்தனை வருஷத்துல எனக்கும் இப்படி தான் செய்யத் தோணும், அம்மா அதை எடுத்துட்டு வரும் போது. ஆனா, இந்த அளவு ஆக்ரோஷப் படனும்னு எதுவும் இல்லையே!’ என யோசித்தவாறே அவள் இருக்க, மெல்ல தன் விழிகளைத் திறந்தான் காளையவன்.

அவன் கண்கள் முதலில் தேடியது தன்னவளைத் தான். ‘அவள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவள் உன்னவள். அதுவும் இன்றைய உன் செயலின்பின் அது சாத்தியமே இல்லாதது’ என ஒரு மனம் இடித்துரைக்க, அதை புறம்தள்ளியவன், அவ்வறையில் அவள் இருக்கிறாளா இல்லை வெளியேறிவிட்டாளா என அலசினான்.

ஆர்கலியைக் கண்டதும் அவன் கண்கள் வலியோடு நோக்கின. அவன் செயலில் பயந்து சுவற்றோடு ஒன்றி அமர்ந்திருந்தாள். மார்போடு கால்களை சேர்த்து வைத்து இரு கைகளைக் கொண்டு காதுகளை அடைத்து கண்களையும் இறுக மூடி அவள் அமர்ந்திருந்த கோலம் அவனை அசைத்துப் பார்த்தது.

ஆர்கலியை காயப்படுத்தியதற்காக தன்மீதே கோபம் வந்தது அவனுக்கு. ஆனால், அதை தற்சமயம் காட்டவும் முடியாது, பயந்துவிடுவாள், பாவம்.

தான் தைரியமான பெண் தான் என அவள் வெளியுலகிற்குத் தான் முகமூடி போட்டுக்கொண்டாளோ அல்லது அவளையே ஆட்டுவித்ததோ அவன் குரல், யாம் அறியோம்.

“ஆர்கலி” என்றவன் மென்மையிலும் மென்மையாக அழைக்க, அதிலும் நடுங்கி ஒடுங்கியவளைக் கண்டு தனக்குள் மரித்தான் அவன். இதற்கே இவ்வாறு இருக்கிறாளே! அவன் தன்னைப் பற்றி கூறும்போது? அவள் தன்னை விட்டு செல்வது போல் ஒரு படம் வர, அவனுக்கு அதுவே வலித்தது.

‘அவள் எப்போது உனதானாள், உன்னை துறப்பதற்கு?’ என்று மனம் கேட்க, அதை ஒதுக்கியவன், தன் வேதனையும் விழுங்கிவிட்டு அவளை நோக்கி வந்தான்.

ஆர்கலியின் உயரத்திற்கு குனிந்தவன், அவளிடம் இருந்து சிறிது விலகி அமர்ந்து, “சாரி ஆர்கலி!” என்றான்.

அதில் மெதுவாக தன் கண்களை திறந்தவள், அவனை நோக்க, அவனோ எதிரில் எங்கோ வெறித்திருந்தான். அவளைப் பார்க்காமலேயே கூறலானான்.

“எனக்கு இந்த சாறு நிறைய நியாபகங்களைக் கொடுத்திருக்கு. அது எல்லாத்தையும் உனக்கு சொல்ல முடியாது. அண்ட், நான் செய்தது சரின்னு நியாயப்படுத்த விரும்பல. அது தப்பு தான். ரொம்ப தப்பு. என்னோட இயலாமைய உன்மேல காமிச்சிருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடு” என்றவன் எழுந்து தள்ளாடியபடி வெளியேற, அவனையே பார்த்தவாறிருந்தாள் அவள் பார்வைவட்டத்தை விட்டு அவன் மறையும் வரை.

அதன்பின்பே அவள் புத்தியில் உரைத்தது அவனுக்கு உடல்நிலை சரியில்லையென. எழுந்து வெளியே ஓடியவள் அவனைத் தேட, வீட்டில் எங்கும் அவன் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. வெளியே எங்கே தேடுவது என்றும் தெரியவில்லை. அவன் தொலைப்பேசியோ அறையிலேயே ஒலித்தது.

‘எங்க போனானோ தெரியலியே!’ என பயந்தவளுக்கு இரண்டே வழிகள் தான். அவனை தேடுவதோ, காத்திருப்பதோ. ஆனால், காத்திருக்க முடியாது. நேரம் கடந்து இருட்டவும் துவங்கிவிட்டது. நடுகாட்டினுள் கட்டியதுபோல் சுற்றியும் ஆள் நடமாட்டம் இல்லா இடத்தில் வீடு. தனியே இவள் மட்டும் எவ்வளவு நேரம் இருக்க?

சினத்தோடு அவன் முகம் நினைவிற்கு வர, ‘உசுரு முக்கியம் பிகிலு…’ என்று தன் உடமைகளை எடுத்து வெளியேறிவிட்டாள் அவள்.

*****​

தனது தனி ரகசிய அறையில் அமர்ந்திருந்தான் விழியன். ஆர்கலியிடம் திட்டிவிட்டு கால் போன போக்கில் திரிந்தவன் வெகு நேரம் சென்று வீடு திரும்ப, பெண்ணவள் வாசம் மட்டுமே இருந்தது.

அவளை அழைக்க அலைபேசியை எடுத்தவனுக்கு அவள் அனுப்பிய எண்ணற்ற செய்திகளும், அழைப்புகளும் கண்ணில் பட. ‘ஐ ஆம் ஸேஃப்’ என்று பதில் அனுப்பியவனின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. ‘நான் கேள்விப்பட்ட கதை எனக்கு நடக்காது. நானும் ஆழியும் நல்லா வாழ்வோம்’ என்றவன் மனம் கொண்டாட, அதே புன்னகையுடன் இவ்வறையில் நுழைந்திருந்தான் அவன்.

இந்த அறை, அவன் தன் விசாரணை சம்பந்தமான அனைத்தையும் வைத்திருக்கும் இடம். அவன் எடுக்கும் கேஸ்களைப் பற்றி வீட்டில் தான் அதிகமாக யோசிப்பான். அவ்வாறு இருக்கும்போது இங்கே வந்துவிடுவான். சுருக்கமாக சொன்னால், இது இவன் வீட்டில் இருக்கும் இன்னொரு ஆபீஸ் ரூம்.

கேஸ் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலவற்றில் அதன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அழிக்க நினைத்து யாரேனும் வந்தால் அதனை அவர்கள் கையில் எட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வறையை தயார் செய்திருந்தான். எனவே, வெளியுலகத்திற்கு இவ்வறை தெரிய வாய்ப்பில்லை.

அங்கே தான் தற்போது அமர்ந்து தன் முன் உள்ள பலகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு எதுவுமே பெரியதாக கிட்டவில்லை.

மீண்டும் மீண்டும் தன் முன் இருந்த ஃபைல்களில் எதையோ தேடினான். பின், அதன் அருகே குறிப்பேடில் குறித்து வைத்திருந்தவற்றையும் ஒரு முறை பார்த்தான். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஏதேனும் வகையில் குற்றவாளிகள். அதுவும் அவர்களைப் பற்றி விசாரிக்கும்போதுதான் தெரிந்ததே! ஆனால், கொலைகாரனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

அல்லது, இதன் பின்புலம் வேறா? கண்முன் இருக்கும் ஒரு செய்தியை வைத்து ஆராய்கிறானா? யோசிக்க யோசிக்க விழியனுக்கு தலைவலி அதிகரித்தது.

நகரத்தில் தொடரும் கொலைகள் ஒரு புறம், அதன் காரணமானவனைப் பிடிக்கச் சொல்லி அழுத்தம் தரும் மேலிடம் ஒரு புறம், இவை யாரோ ஒரு சீரியல் கில்லரால் நடத்தப்பட்டவை என கிழிக்கும் ஊடகத் துறை ஒரு புறம் என இவனுக்கு டென்ஷனோ டென்ஷன்.

சென்ற கொலையில் கிடைத்த சாட்சிகளோ உபயோகமற்று போய்விட்டன. அந்த தம்பதிக்கு அங்கு என்ன நடந்ததென்றே நினைவில்லை. அவர்களை உளவியல் சோதனைக்கும் ஆட்படுத்தி பார்த்தாயிற்று, தோல்வியே கிட்டியது.

‘எங்கடா இருக்க?’ புலம்பிக்கொண்டிருந்தான் விழியன்.

இந்தியாவில் பல வருடங்களுக்குப் பின் ஒரு சீரியல் கில்லர் கொலைகள் நடக்க, அதையே பேசி தங்கள் டி.ஆர்.பி.யையும் மக்களின் பீ.பி.யையும் ஒருங்கே ஏற்றிக் கொண்டிருந்தனர் தொலைக்காட்சி நண்பர்கள்.

சீரியல் கில்லர்/கொலையாளி பற்றி தெரியாதவர்களுக்காக:

இவர்கள் ஒருவரோ அல்லது பலரோ இருக்கலாம். பெரும்பாலாக ஒருவர் தான் இருப்பர். ஏனென்றால், சீரியல் கில்லராக மாறுபவர் பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒத்த அலைவரிசை உள்ள சீரியல் கில்லர்கள் இணைவது என்பது அரிதிலும் அரிது. இதுவரை அத்தகைய கூட்டம் ஒன்று மட்டுமே இருந்தது. இவர்களது காரணம் பணமாக இருக்கலாம், அல்லது, வேறு ஏதேனும் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டு, தீரன் படத்தில் வரும் கும்பல், பணத்திற்காக மட்டும் கொலை செய்பவர்கள்.

இவர்களின் செயல்கள் ஒன்று போல் இருக்கும், ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் தொடர்பு இருக்கும். ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட சுற்று வட்டாரத்தில் கொலை செய்யலாம், சிலர் எங்கே வேண்டுமானாலும். பெரும்பாலும் கொலை ஒன்று போல் நிகழ்ந்திருக்கும்.

இங்கும் அப்படியே! ஒன்று போலவே பல கொலைகள். இவற்றில் இறந்தவர்கள் குற்றத் தொடர்புடையவர்கள். ஆனால் செய்தது யார்? இதுவே ஒரு மிகப்பெரிய கேள்வியாக முளைத்தது அவனுக்கு.

செய்த முறையை வைத்து தேடி உபயோகமில்லை. ஏதோ ஒரு மிருகத்தைக் கொண்டு கடிக்கச் செய்திருக்கிறானாம். ஆனால், அது என்னவென்று வரையறுத்து கூற முடியவில்லை மருத்துவர்களால்.

எப்பகுதியில் நடக்கின்றதோ அதனைச் சுற்றி காவல்துறை கண்காணிப்பை பலப்படுத்தலாமென்றால், அது நடந்ததோ நகரத்தின் பல பகுதிகளில்.

ஓன்று வடக்கு என்றால், மற்றொன்று நகரின் தெற்கு. ஒன்று மேற்கென்றால், அடுத்தது தென்கிழக்கு. இதனால் மொத்த நகரத்திற்கும் இரவு ரோந்தை பலப்படுத்தியிருந்தான் விழியன்.

ஆனால், அவன் அறியாததும் இருந்தது. அடுத்த கொலை அவன் இருக்கும் இடத்திலேயே நிகழப்போகிறதென்றும், அதனால் இவனை மேலிடம் இன்னும் தாளிப்பார்கள் என்றும்!

இத்தனை கொலைகளும் விழியன் வந்தபின் தான் நடக்கிறது. இதற்கு இவன் தான் காரணமா என்று தேடிக்கொண்டிருப்பவளுக்கு அவனே போய் வசமாய் சிக்கிக் கொள்ளப்போகிறான் என்றும்!

கருத்துக்களை பதிவு செய்ய
 
Status
Not open for further replies.
Top