ஏங்க இப்படி அழ வச்சீங்க...
பாவம் ரிதா!!?
அவளின் தப்பு என்ன! அவளை அவள் அம்மா அப்பா வெளியில் போ சொன்னால் கூட ஒரு நியாயம் இருக்கு(சரி கிடையாது)..
எவனோ ஒருத்தன், சம்பந்தம் இல்லாமல் அவங்களோட உணர்வை அசிங்கமா பேசிட என்ன உரிமை இருக்கு அவனுக்கு... அவனுக்கு பிடிக்கலை என்றால் தள்ளி இருக்கணும்.. ஆனால்.அவங்களை வச்சே சம்பாரிப்பானாம் அது அசிங்கம் இல்லையா என்ன????
இதுல இவன் காதல் பெருசாம்??? அடச்சீ நீயெல்லாம் மனுஷனா இருக்கவே தகுதி இல்லாதவன், இதில கதலனா கணவனா எல்லாம் வாய்ப்பே இல்லை... உன்னோட காதல் என்னை ஈர்க்கவே இல்ல? நீ தான் தெரியும் முன்பே! அவள் அவளுக்கு நடந்ததை சொல்ல வரும் போது எல்லாம் பழசை மறந்துரு சொன்னியே, தவிர அவள் மன நிம்மதி குடுக்க கூட என்ன ஏதுன்னு கேட்கலை.. அப்போவே பிடிக்கலை உன்னை.. அப்போ தான் உன் மீது சந்தேகமும் வந்துச்சு... அதோட ஆரம்பத்தில் விருந்தா உன்னை பார்த்தா நல்லவன் போல இல்லனு உன்கிட்ட ரிதாவை விடாமல் அடைக்காப்பா அந்த விசயம் மனசில் உருத்திகிட்டே இருந்துச்சு.. அதனால் எனக்கு முதலில் இருந்தே உன்னை அவ்வளவா பிடிக்கலை.. ஆனால் பாரு நீ பிடிக்கலை சொல்ற அளவை விட கேவலமானவன்???
அவங்க சாபமாம் அதை இவருக்கு வரமாய் மாத்திப்பாராம்??? அடி செருப்பால நாயே??(செம்ம கோபம், அதான், சாரி) இப்படி சொல்லி நாயை கேவல படுத்த விரும்பலை நான்... கேடுகெட்ட நீயே வாழும் போது அவங்க வாழ என்ன தா தடை! எவன்டா தகுதி வகுத்தான் உலகில் வாழ! படைச்சவன் சும்மா இருக்கான், உங்களுக்கு வலிக்குதோ???
ரிதாவின் முடிவு நிஜமா அச்செப்ட் செய்ய முடியலை... அவனின் பாசத்தை நினைச்சு சாதாரணமா இருந்தா நல்ல வாழ்வு நினைச்ச பாரேன் அதான் அவன் காதலின் தோல்வி! நீ சாதாரணமா இருந்து இருந்தால் கூட அவன் உனக்கு வேண்டாம்! அவன் காதல் சந்தர்ப்பவாத காதல்... முன்னாடியே உண்மை சொல்லி இருந்தால் நீ நரகத்தை அனுபவிச்சு இருப்ப அண்ட் கடைசியாக உன் குடும்பத்தை பார்க்க வாய்ப்பு இருந்து இருக்காது!
அப்போ இவ ஃபோட்டோ குடுத்து கேட்டது எல்லாம் அவனுக்கு தெரியாதா! இவனுக்கு தெரியாமல் தான் அவளை கடத்தி எல்லாம் பண்ணி இருக்காங்களா? அப்போ எப்படி அன்னைக்கு அண்ணன் கூப்பிட்டார் என ஒருத்தன் கூப்பிட்டான்... இல்ல ரிதி கிட்ட பொய் சொன்னாணா?
இந்த தேவா அண்ட் கிரிஷ், அவ குழந்தையை கேட்டவன் கிட்ட கொடுக்க போறது இல்லனு ஜி சொன்னார், vikarnan கிட்ட போனதும் ஒன்னும் பண்ணாமல் விட சொன்னார் என்று எல்லாம் சொல்லும் போது இவனுங்க ரெண்டு பேருக்கும் சந்தேகம் வந்து இருந்தால் இன்னைக்கு ரிதி உயிரோடு இருந்து இருக்கலாம்.. ஆனால் விதி என்ன செய்ய!
பாவம் அவனின் அம்மா அண்ட் அப்பா... நல்ல மனுஷர் அவர்! அவன் டக்குன்னு செத்து போனது கொஞ்சம் கடுப்பு தான்!!
நல்ல முடிவு! வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே???