ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 37- மகிழனின் விழி அவள்

மகிழனின் விழி அவள்

மகிழன் நம் கதையின் நாயகன்.. விழி நாயகி..

இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். கல்லூரியில் இசையவன் விழி மீது காதல் கொள்ள, விழியும் இசையின் காதல் ஏற்கிறாள்.

இடையில் மதுசூதனன் என்ற ஒருவன் வந்திட, கதையே மாறுகிறது.

இசையவன் விபத்தில் இறக்க, இசையின் நண்பனான மகிழன் விழியை திருமணம் செய்கிறான்.

நண்பனே கணவனாக வந்ததை விழியால் ஏற்று கொள்ள முடிந்ததா.?

இசையவனின் விபத்திற்கான காரணத்தையும் கண்டறிந்தானா.?

இது தான் இக்கதை..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
#மகிழனின்_விழி_அவள்….
#கௌரிஸ்ரிவ்யூ…..

பீல் குட் ஸ்டோரி 🤩 🤩 🤩 🤩…..

மகிழன், விழி ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்🥰🥰🥰🥰🥰🥰….

அவங்க குடும்பமும் நல்ல பழக்கம்…..

விழி & இசை ரெண்டு பேரும் லவ் பண்ண…..அது விழி வீட்டில் தெரிஞ்சி முதலில் படிங்க, வேலைக்கு போங்க அப்பறம் இந்த காதல் அப்படினு சொல்லிறாங்க….

அப்பாவோட செல்ல பெண் விழியும் அதற்கு ஓகே சொல்ல…..இசைக்கும் இதில் சம்மதம் தான்…..

அவங்க வாழ்க்கையும் நல்லா போகுது……

மது…வில்லன் எண்ட்ரி…விழியை பார்த்து பிடிச்சி போக…..

கட்டினா விழியை தான் கட்டுவேன்னு இசையை கட்டம் கட்டி தூக்கிட்டான் பாவி பய…..

இதில் மனம் உடைந்த விழி…..மகிழனை மனக்கும் நிலை…..

கல்யாணமும் நடக்குது……

அதன் பின் இவங்க வாழ்க்கை எப்படி போகுது என்பது மீதி கதை…..

மகிழன் விழி காதல் இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம்…..

கதை நல்லா இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐
 
சக்தி தாராவின்

மகிழனின் விழி அவள்

எப்பொழுதும் இருப்பதை விட்டு,இல்லாததிற்கு அசைப்படுவது தான் மனதின் இயல்பு,..பேராசை நம்மை அழித்தால்அது நமது செயலுக்கான விளைவாக கொள்ளலாம்,மற்றவர்களின் வாழ்க்கையை சிதைத்து,சின்னாபின்னமாக்கினால்….அவர்களது பாவத்திற்கான சம்பளத்தை அனுபவிப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை…

காரணம் பட்டது இல்லை என்று ஆகிவிடுமா என்ன???


கல்யாண கனவுகளில் மகதக்கும் இளம் ஜோடி,,கனவு கனவாகவே மாறிவிடுகிறது கயவனால்.


தவிர்க்க முடியாத காரணங்களால் ஜோடிகள் மாறுகின்றனர்.

ஆயிரம் கனவுகள் கல்யாணத்தை பற்றி கண்டிருக்க,இப்பொழுதோ இன்னொரு வாழ்க்கை துணையாங,நண்பனாய் இருந்தவன் நாயகனாய்.பெண்ணின் மனம் பரிதவிப்பின் உச்சம்..அவளுக்கான இடைவெளியை வழங்கி உற்ற துணயாக மட்டுமில்லாமல் உறுதுணையாகவும் மாறுகிறான்,சில கயவர்கள கலையெடுக்கக.


காக்கி உடையில் அவனும் கருப்பு அங்கியில் இவளும்,கயவர்களை களம் காண்கின்றனர்.


இவர்கள் முயற்சி பயனளித்து வெற்றிபெற்றார்களா…


நண்பர்களாக இருந்த இவர்கள் கணவன் மனைவியாக இவர்கள் பயணம் எப்படி இருந்தது …


என அறிய வாசித்திடுங்கள்

மகிழனின் விழி அவள்..கவனதாதுடன்

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💖 💖 💖
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP37
சக்தி தாரா அவர்களின் எழுத்தில்
"மகிழனின் விழி அவள்.."
அகமகிழன்.. மகிழ்விழி..
பள்ளி கால நண்பர்கள் இருவரும்.
நாயகி மகிழ்விழி.. வெண்மதியன்.. கவியரசி அவர்களின் செல்ல மகள்.
அவள் அத்தை கீர்த்தனா ஆகியோரின் மொத்த அன்புக்கும் ஒற்றை வாரிசாக அவர்களின் பாசத்தில் மூழ்கி மகிழ்ச்சியாக வாழ்பவள் 🥰
கல்லூரியில் இசையவன் மீது காதல் ஏற்படுகிறது பெண் அவளுக்கு.
இதற்கிடையில் பெற்றோர்கள் அவளுக்கு மதுசூதனனை மாப்பிள்ளையாக முடிவு செய்கிறார்கள். என்ன செய்வது எனத் தவித்துக் கொண்டிருக்கும் போது காதலனின் மரணம் அவளை பெரிதும் பாதிக்கிறது அதைவிட அதிக பாதிப்பாக நண்பனே அவளுக்கு கணவனாகிறான்.
காதலனின் மரணத்தையும் நண்பனோடு நடந்த திருமணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள் பெண். 😔
தன் காதலனுக்கு ஏற்பட்டது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என வழக்கறிஞரான இவள் அதை கண்டுபிடிக்கிறாள் காவல்துறை அதிகாரியான தன் கணவன் மகிழனுடன் சேர்ந்து.
மகிழ்விழி, ரம்யா, அகமகிழன் நட்பு சூப்பர் 🥰
இசையவனின் காதல் அருமை 🥰 அவனின் இறப்பு பாவம் 😔
நண்பனின் இறுதி ஆசைக்காக தன் பள்ளி கால நண்பியை மனைவியாக ஏற்றுக் கொண்டவன். அவள் மனம் மாற காத்திருப்பது அழகு 🥰
போதை கடத்தலை கண்டுபிடித்து வில்லனான மதுசூதனனுக்கு தண்டனை கிடைக்க வழி வகுக்குகிறார்கள் கணவனும் மனைவியும்.
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
Top