ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Teaser time

T22

Well-known member
Wonderland writer
டீ கப் பிரியாணி 2

"வீட்டை விட்டு வெளியே வந்தவனின் கண்களும் மனமும் எதிர் வீட்டை நோக்குமாறு சண்டித்தனம் செய்ததில் தடுமாறி கொண்டிருந்தவனின் அறிவு,

"ச்சீ...உனக்கு வெட்கம் இல்ல உன்னை வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டு போனவள திரும்பவும் பாக்க நெனைக்குறியே ரோஷம் உள்ளவனாடா நீ????" என இடித்துரைத்ததில் நிகழ் கால நினைவுகள் பொட்டில் அடித்து அவனின் நிலையை உணர்த்தியதில் அதுவரை தடுமாறிய உள்ளத்தினை இறுக்கி பிடித்தவனின் முகம் இறுகி போயிற்று.
பைக்கில் ஏறி அமர்ந்தவன் அதனை கிளப்ப "அம்மீ..." என்ற அழுகுரலில் கல்லுக்குள் சிறு ஈரம் பூத்தது போல் அவனின் இறுகிய மனதில் சிறு நெகிழ்வு உண்டாக அதற்கு மேல் முடியாமல் சட்டென திரும்பி பார்த்திருந்தான்.

குள்ள வாத்து சைஸில் பாவடை சட்டையை போட்டு கொண்டு அழுகையுடன் நின்றிருந்தவளை கண்டதும் அவனின் முகம் சற்றே இளகிட பார்வை அந்த அணுகுண்டை வாஞ்சையுடன் தடவியது.

புதியவனின் பார்வையை கண்டதும் சட்டென தனது அழுகையை நிறுத்தி அவனை முறைத்து பார்த்தது அந்த குள்ள வாத்து.

"பெத்து விட்டுருக்க பாரு எருமை மாடு அவள மாதிரி ரவுடியாட்டும்..முறைக்கிறத பாரு குள்ள வாத்து" என திட்டியவன் பதிலுக்கு தானும் அவளை முறைத்து பார்க்க....

அதில் வெகுண்ட அந்த வாத்து குஞ்சு "கொன்னுடுவேன் போ" என தனது ஒற்றை விரலை உயர்த்தி அவனை மிரட்டிட,

அவளின் செய்கைகளில் ஏகத்திற்கும் கடுப்பான வன் "அடிங்க..... வாத்து குஞ்சு..."
என்றபடி வண்டியிலிருந்து கீழிறங்கிட இதனை எதிர்பாராத அந்த வாண்டு மிரண்டு வீட்டினுள் ஓடி விட்டாள்.
 
Top