#என்_மரணமும்_உனக்காக_விமர்சனம்
ஃபேன்டசி கதை
குழலி மருத்துவர் இவளை சுத்திதான் கதை நகருது ❤ குழலி சத்ரியன் உடலுக்கு பிரேத பரிசோதனை பண்ணுறாங்க முதல் நாள் இரவு . அடுத்த நாள் சத்ரியனே அவளை பெண் பார்க்க வருவது திக் திக் திகில்



காட்சி அமைப்பு.
சத்ரியன் யாரு குழலியை தேடி ஏன் வருகிறார்? குழலிக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாத்த பாரி வருகிறார். பாரி யாரு? குழலிக்கும் பாரிக்கும் என்ன சம்பந்தம்? சத்ரியனை யாரு கொலை செய்கிறார்கள்? இப்படி பல கேள்விக்கான பதிலை சுவாரஸ்யமா குடுத்திருக்காங்க
பாரி மாயாஜால விந்தைகாரன். அவனின் சக்தி அவன் அதை உபயோகிக்கும் முறையெல்லாம் நல்ல கற்பனை

லியா, குழலி மற்றும் வேதா நட்பு நல்லா இருக்கு

சத்ரியனின் காதல் அழகு

பாரி குழலியிடம் செய்யும் குட்டி குட்டி சில்மிசங்கள் நல்லா இருக்கு

நீலம் ஹைவேஸ் சம்பவங்கள் எல்லாம் கொடுமை


விதுரும் அவன் நண்பர்களும் ச்சீ



திட்ட வார்த்தையே இல்லாத ஜென்மங்கள்.
லியா மற்றும் விதுர் லிங்க் சற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
பாரிக்கு எப்படி சக்தி கிடைத்ததுனு சொன்னப்போல விதுரின் சக்தி பற்றியும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம். ஒரு ஆறு அடுக்கு கட்டிடத்தை இதுக்காகவே கட்டி வெச்சுருப்பாங்களா என்ன???



பெண்ணாலதான் சாபம்னு சொல்லுறாங்க ஆனால் யாரு சாபம் கொடுத்தா? ஏன்? காரணக்காரியங்களை சரியா விளக்கி இருக்கலாம். அதை தவிர்த்து நல்ல சுவரஸ்யமான கதை❤❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்