ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 28- என் மரணமும் உனக்காக

என் மரணமும் உனக்காக கதை விமர்சனம்:::: நம்ம நாயகி குழலி ஒரு டாக்டர் அவங்க அடாப்ஸி பண்ணுன ஒரு ஆண் சடலம் மறுநாள் அவங்களை கல்யாணம் செய்யப்போர மாப்பிள்ளையாக வரார்... நம்ம ஹூரோயினுக்கு சும்மா அல்லுவிட்ருது அவர் ஒரு ஆன்மா அப்படின்னு நம்ம ஹூரோயினுக்கு நிஜ உருவில் காட்டிக்கிறார்... இந்த ஆன்மாவான சத்ரியன் குழலியை ஏன் தேடி வர்றார் குழலிக்கும் ஆன்மாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இப்படியும் ட்விஸ்ட் வைப்போம்ல அப்படி வச்சு நம்மை சுத்தல்ல விடறார் ரைட்டர்...
பரிதி மந்திரம் தெரிந்தவர் அவர் குழிக்கு உதவ வருகிறார்.. மந்திரவாதி சூனியன்னு மொத்த அமானுஷ்ய தந்தையும் கொண்டு வந்து த்ரில்லர்+ரொமான்ஸ்னு செம்ம சூப்பர்...பரிதி குழலி மேல லவ்வாகிடறார்
குழலியோட நண்பர்களுக்கும் சத்ரியன் ஆன்மா ஏன் தெரிகிறது நல்ல ஆன்மாக்கள் தீயஆன்மாக்கள் எல்லாம் என்ன செய்கின்றன... நீலம் ஹைவேசில் நடக்கும் மர்மம் என்ன
பெண்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் நடக்கும் காரணம் என்ன
ஒரு ஆன்மாவாக மாறிய பின்பும் தன் காதலியை காப்பாற்ற முயற்சிக்கும் சத்ரியன் மனதில் நீங்காத இடம் பெற்று உள்ளான்❤️❤️❤️❤️❤️ மர்மத்தை வெளிக்கொணர நாயகன் எடுக்கும் முயற்சிகள் என்ன என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤️ 🧡 🧡 🧡
தங்கள் அருமையான கருத்திற்கு மிக்க நன்றி சகோ!😊🩵
 
#என்_மரணமும்_உனக்காக_விமர்சனம்

ஃபேன்டசி கதை 🤩

குழலி மருத்துவர் இவளை சுத்திதான் கதை நகருது ❤ குழலி சத்ரியன் உடலுக்கு பிரேத பரிசோதனை பண்ணுறாங்க முதல் நாள் இரவு . அடுத்த நாள் சத்ரியனே அவளை பெண் பார்க்க வருவது திக் திக் திகில் 🫣👻👻 காட்சி அமைப்பு.

சத்ரியன் யாரு குழலியை தேடி ஏன் வருகிறார்? குழலிக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாத்த பாரி வருகிறார். பாரி யாரு? குழலிக்கும் பாரிக்கும் என்ன சம்பந்தம்? சத்ரியனை யாரு கொலை செய்கிறார்கள்? இப்படி பல கேள்விக்கான பதிலை சுவாரஸ்யமா குடுத்திருக்காங்க 😍

பாரி மாயாஜால விந்தைகாரன். அவனின் சக்தி அவன் அதை உபயோகிக்கும் முறையெல்லாம் நல்ல கற்பனை 👏👏

லியா, குழலி மற்றும் வேதா நட்பு நல்லா இருக்கு 🙂 சத்ரியனின் காதல் அழகு 😍 பாரி குழலியிடம் செய்யும் குட்டி குட்டி சில்மிசங்கள் நல்லா இருக்கு 😅😅

நீலம் ஹைவேஸ் சம்பவங்கள் எல்லாம் கொடுமை 😡😡 விதுரும் அவன் நண்பர்களும் ச்சீ 🥵🤬🤬 திட்ட வார்த்தையே இல்லாத ஜென்மங்கள்.

லியா மற்றும் விதுர் லிங்க் சற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

பாரிக்கு எப்படி சக்தி கிடைத்ததுனு சொன்னப்போல விதுரின் சக்தி பற்றியும் கொஞ்சம் விளக்கி இருக்கலாம். ஒரு ஆறு அடுக்கு கட்டிடத்தை இதுக்காகவே கட்டி வெச்சுருப்பாங்களா என்ன??? 😧😧😧 பெண்ணாலதான் சாபம்னு சொல்லுறாங்க ஆனால் யாரு சாபம் கொடுத்தா? ஏன்? காரணக்காரியங்களை சரியா விளக்கி இருக்கலாம். அதை தவிர்த்து நல்ல சுவரஸ்யமான கதை❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
தங்கள் அருமையான கருத்திற்கு நன்றி சகோ!😊🩵
 
#என்_மரணமும்_உனக்காக….
#கௌரிஸ்ரிவ்யூ…..

ஃபேண்டஸி+ஹாரர்+கிரைம்+திரில்லர்+சஸ்பென்ஸ்+டுவிஸ்ட்+லவ் & கொஞ்சம் போல ரொமான்ஸ்……

இது எல்லாம் ஒரே கதையில்🤩🤩🤩🤩🤩🤩….

குழலியும், லியாவும் pathologist ஆ இருக்காங்க…..

ஒரு நாள் வந்த டெட் பாடியை பார்த்து லியா மயங்கி விழ…..

குழலி தான் அதை அட்டாப்சி செயற….

அந்த அட்டாப்சி செய்ய பாடியே அடுத்த நாள் அவளை பெண் பார்க்க மாப்பிள்ளையா வந்தா????

எல்லாருக்கும் மாப்பிள்ளையாய் தெரியும் சத்ரியன்…..

அவளுக்கும் மட்டும் தன் உண்மை உருவத்தை காட்ட…..

பயந்து அலற…..சத்ரியன் ஆன்மாவும் அவளை விடாம வெச்சி செய்து…..

குழலி ஓட ப்ரெண்ட்ஸ் லியா & வேதாவும் அவளை நம்ப….

சத்ரியன் அவங்களுக்கும் அவனோட ரூபதை காட்ட…..

ஒன்னும் செய்ய இயலா நிலை…..

பேய் ஓட தான் வாழ்க்கையா அப்படினு அவளே பயந்து இருக்க…..

அவளை காப்பாத்த வரான்….மந்திரவாதி பாரி😁😁😁😁….

ஆன்மா, பேய் போதாதுனு இப்ப மந்திரவாதி 🤣🤣🤣🤣🤣…..

அப்பறம் வருவான் சூனியக்காரன்🤭🤭🤭🤭🤭….

சத்ரியன் ஏன் குழலியை பயம் காட்டாரான்?????

பாரி வந்து ஏன் குழலியை காக்கணும்?????

இதுக்கெல்லாம் காரணமான சூனியக்காரன் யார்?????

இது தான் மீதி கதை🥰🥰🥰🥰🥰…..

கதை அடுத்து என்ன என்ன….அப்படினு விறுவிறுனு நகருது 🤩🤩🤩🤩🤩…..

பக்கா என்டர்டெயின்மென்ட் கதை🫰🫰🫰🫰🫰🫰..

சத்ரியன் ஒரு பக்கம் பயம் காட்ட…..

பாரி ஒரு பக்கம் மாயாஜாலம் காட்ட…..

சூனியக்காரன் எல்லாருக்கும் சூனியம் வைக்க….

கதை சரியான அல்டி🔥🔥🔥🔥🔥🔥……

கதையை narate பண்ணின விதம்…..அதனோட காட்சி எப்படி இருக்கும்னு imagine பண்ணி பார்த்தவே செம்மையா இருக்கு 🤩🤩🤩🤩🤩……

கதை ரொம்ப ரொம்ப பிடிச்சது எனக்கு❤️❤️❤️❤️❤️

போட்டியி
ல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
தங்கள் அருமையான கருத்திற்கு நன்றி சகோ!😊🩵
 
என் மரணமும் உனக்காக



நாயகி குழலி.. இவ ஒரு உடற்கூராய்வு மருத்துவர். ரொம்ப சிதிலடைஞ்ச பாடி ஒன்னு வர அதைய போஸ்ட்மார்ட்டமும் பண்றா..

வீட்டுல இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க, இவளுக்காக மாப்பிள்ளையாக போஸ்ட்மார்ட்டம் பண்ணுன சத்ரியன் வர்றான்😱😱😱

மத்தவங்க கண்ணுக்கு மனிதனா தெரியறவன் குழலி கண்ணுக்கு மட்டும் ஆன்மாவா தெரியறான்..

அதோட விடறானா.. அதுவும் இல்ல.. அவளை பயப்படுத்த.. அவளும் பயந்து போக.. கடைசில இவன் கூட தான் நம் வாழ்க்கையானு அவ பதறி நிற்க.. அவளை ஆபத்துல இருந்து காப்பாத்த வர்றான் மந்திரவாதி பரிதி..

சத்ரியன் ஏன் குழலியை தொந்தரவு பண்றான்.?

பரிதி தான் குழலியை காப்பாற்றுனானா.?

ஒரு பயம் பேய்னா..

இன்னொரு பக்கம் மந்திரவாதி..

கடைசில சூனியக்காரன் வேற..

ஒரே கதைல அத்தனையும் வெச்சு செஞ்சாச்சு..

ரைட்டரே உங்களுக்கு ஒரு பிக் சல்யூட்.. அல்டிமேட் போங்க.. கதையை பின்னி எடுத்துட்டீங்க..

போட்டியில் வெற்றி பெ
ற வாழ்த்துக்கள் டியர்...
தங்கள் அருமையான கருத்திற்கு நன்றி சகோ!😊🩵
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP28
தீபிகா அவர்களின் எழுத்தில்
"என் மரணமும் உனக்காக"
குழலி.. தான் பிரேத பரிசோதனை செய்த ஒருவன் மறுநாளே தன்னைப் பெண் பார்க்க வந்தால் எப்படி இருக்கும் பயந்தது பெண் அவள் மட்டுமல்ல படிக்கும் நாமும்தான் 😳😳
சத்ரியன்.. ஆன்மாவாக பெண்ணவளை சுற்றி வருகிறான் அவளோடு சேர்ந்து பயந்து நடுங்குகிறார்கள் அவள் நண்பர்கள் லியா மற்றும் வேதா பூஜை அறையில் இவர்களின் சம்பாஷனை அனைத்தும் சிரிப்பு 😀
ஆன்மாவாக மாறியவன் பெண் அவளை ஏன் துரத்தி வருகிறான். இவளால் அவனுக்கு என்ன காரியம் ஆக வேண்டி இருக்கிறது கதையின் தலைப்பை போல் இவனின் மரணம் அவளுக்காகவா இவை அனைத்துக்கும் விடை கதையில்
பரிதி.. மந்திர சக்திகள் கொண்ட நவீன அழகான மந்திரவாதி 😀 ஆன்மாவிடம் இருந்து பெண் அவளை காக்க முற்படுவது எதனால் அவள் மீது காதலாக படியும் இவன் பார்வைக்கு அர்த்தம் என்ன வில்லனுக்கு உயிர் காதலியாக இருப்பவள் யார் இவை அனைத்தும் கதையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
தங்கள் அருமையான கருத்திற்கு நன்றி சகோ!😊🩵
 
Top