ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 26- ஒரே ஒரு வானம்

ஒரே ஒரு வானம்

சிந்துஜா, பிரபாவதி, ரத்னா, மாதவி இவங்க எல்லாம் ரெயில் நண்பர்கள் அவங்க ஒவ்வொருத்தரோட லைப்ல என்ன நடக்குது அவங்க ப்ரோப்லேம் என்னென்னnu சொல்லும் கதை தான் ஒரே ஒரு வானம்.

சிந்து அவளுக்கு ஒரு ப்ரோப்லேம் இருக்கு. அதை அவங்க வீட்ல மறைச்சு அவளையும் சொல்ல கூடாதுனு மிரட்டி மனோரஞ்சினுக்கு கட்டி வைச்சுடுறாங்க. பிரஸ்ட் நைட் அப்போ தெரிஞ்சு ப்ரோப்லேம் ஆகி அவளை வீட்டை விட்டு அனுப்பிடுறாங்க.

டிவோர்ஸ் நடக்கும் போது அவ வேலை பார்க்குற இடத்துக்கு ரஞ்சன் வேலைக்கு வரான். அங்க சிந்துவை அவ்வளவு கஷ்டம் படுத்துறான். அவங்க லைப் என்னாச்சு சிந்து ரஞ்சன் சேர்ந்தாங்களானு சொல்லும் கதை சிந்துவோடது.

பிரபாவதி ஐடில வேலை பார்க்குறா அங்க மதன் அவ கூட வேலை பார்க்குறான். அவளை விட 2 வயசு சின்னவன் பிரபாவை லவ் பண்ணுறான். மதன் வயசை காரணம் காட்டி பிரபா அவனை ஏத்துக்க முடியாமல் போராடுறா மனசுக்குள்ள. அவங்க சேர்ந்தாங்களானு சொல்லும் கதை பிரபாவோடது.

மாதவி மாமியார்னால புருஷன் பொண்டாட்டி ஒரே வீட்ல இருந்தாலும் பிரிஞ்சு இருக்காங்க. மாதவி சேகர் லைப் எப்படி போகுதுனு சொல்லும் கதை மாதவியோடது.

ரத்னா ஒரு விதவை தன்னோட மகள் ஹேமாவோட அவ லைப் போகுது அவ வீட்டு பக்கத்துல வேணு குடும்பம் இருக்காங்க. அவரும் அவர் வொய்பை இழந்து தன்னோட மகளோட வாழுறாரு. 2 பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு ஹெல்ப்பா இருக்காங்க.

2பேர் மனசுலயும் ஆசை இருந்தாலும் இந்த பாழா போன சமூகத்துக்கு யோசிச்சு ரத்னா வேணு கூட சேர யோசிக்கிறாங்க. அவங்க லைப் எப்படி போகுதுனு சொல்லும் கதை ரத்னாவோடது.

இந்த 4 பேரோட ஸ்டோரியும் திகட்டாம அழகா சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க 🫶🫶🫶

எனக்கு ஒரு சின்ன மனகுறை எல்லாருக்கும் ஹாப்பி எண்டிங் இருந்துச்சு ரத்னாவை தவிர அவளை வேணு கூட சேர்த்து வைச்சு முடிச்சு இருந்தால் நிறைவாக இருந்து இருக்கும் 😒😒😒

ஸ்டோரி படிக்க நல்லா இருந்துச்சு

வாழ்த்துக்கள் 💐💐💐
 
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதம்.


வலிகளும் பலவிதம்.அதனை தாங்கும் இதயமும் பலவிதம்.


ஒன்று இருக்கமாக, ஒன்று எதார்த்தமாக, ஒன்று மென்மையாக, ஒன்று மௌனமாக என விதங்கள் தான் பல…



ஆனால் தாங்கி பிடிக்க, தோள் கொடுக்க,யாரேனும்‌ ஒருவர் இருந்தால்…

பசிக்கிது என்னும் சொல்லும்‌ முன்னே , உணவுடன் நம் முன்னே ஒரு கரம் நீண்டால்…


விழும் முன்னே தாங்கிட தோள்கள் முன்னே வந்தால்…


பணத் தேவைக்காக இரவு பகல் நிற்காமல் ஓடினாலும்,இக்கட்டில் நம் வாய் திறக்கும் முன்னே அவர்கள் கரம் நீண்டால்..



அன்பும்.. கோபம் கொள்ளும், வார்த்தையால் வதைக்கும், காயப்படுத்தி இதம்‌ காணும்…நம்பிக்கயற்று போனால்…

ஆனால் விட்டுகொடுக்காது…என



அலட்டாமல்,ஆராவரிக்காமல்..அன்பாய் ஒரு வார்த்தை, நான் இருக்கிறேன் என ஆதுரமாய் ஒரு பார்வை..என யாசிக்கும் மனிதர்கள்…




யாதர்த்தம் கலந்த வாழ்க்கை போக்கில் எதிர்நீச்சல் இட்டு செல்லும் இன்றைய சில பெண்களின் பிரிதி தான்‌ இங்கே உலா வருகின்றனர்.


நான்கு பெண்கள், அவர்களின் குடும்பங்கள்,வலிகள், அவர்களுடனான புரிதல், தேர்தல்கள்

எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள்,சங்கடங்கள் என அலசப்படட்டு

அவர்கள் வெவ்வேறு துரையில் பணிபுரியும் பெண்கள், எப்படி எங்கு சந்திக்கின்றனர், ஒருவருக்கு ஒருவர் எப்படி மனத்தாலும் பணத்தாலும் உதவி கொண்டனர் என்பது தான் கதையின் நகர்வு.


என்ன பிரச்சனை …எப்படி எதிர்கொண்டனர்…என்பதே கதையின் போக்கு…



கடிமான தருணம் பல வந்தாலும் மதன் போன்ற சுவாரஸ்யமான, பக்கங்கள் தான் அனைத்தையும் மறக்க வைத்து வாழ்க்கையையும் இரசிக்க வைக்கின்றது.



ஒரே ஒரு வானம்…வாழ்வின் கலவை


வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ💖💖💖
 
ஒரே ஒரு வானம்



நான்கு பெண்களின்.வாழ்க்கை கதை..


சிந்து- இவளுக்கு ஒரு குறை இருக்கு..திருமணம் செய்யறப்ப அதைய மறைச்சு திருமணமும் செஞ்சு வெக்கறாங்க.. அப்பறம் அவ கணவனுக்கு அது தெரியறப்ப பிரச்சனையாகி அவ வீட்டை விட்டும் போறா..

அதோட அவளோட கணவன் ரஞ்சன் இவளை விட்டானா என்ன.? சரியா இவ வேலை பார்க்கற பக்கமே அவனும் வர்றான்..வர்றதோடு இல்லாம சிந்துவை எவ்வளவு கஷ்டப்படுத்த முடியுமோ அவ்ளோ கஷ்டப்படுத்தறான்.. ச்சைக் மனுசனா இவன்.?

இரண்டாவது பிரபா - இவ வேலை செய்யற இடத்துல மதன் இவளை லவ் பண்றான்.. ஆனா இவளை விட அவன் ரெண்டு வயசு சின்னவன்.. அந்த காதல் இவளை என்ன பண்ணுச்சு.? அதைய ஏத்துக்க முடியாம இவ படற கஷ்டம் 🥺🥺🥺

மூன்றாவது மாதவி - இவளும் இவ புருசனும் ஒன்னா இருந்தாலும் பிரிஞ்சே இருக்காங்க.. அதுக்கான காரணம் என்ன.?

நான்காவது ரத்னா - இவ ஒரு விதவை.. இவளுக்கு ஒரு பொண்ணு.. அவங்க வீட்டு பக்கத்துல வேணு வர்றாங்க.. அவங்களும் அவ மனைவியை இழந்து மகளுடன் தான் இருக்காங்க.. ரெண்டு பேரா மனசுலயும் ஆசை இருந்தாலும் வெளில சொல்லிக்காம இருக்காங்க..

சிந்து - ரஞ்சன் வாழ்க்கை என்னவானது.?

பிரபா - மதன் இருவரும் திருமணத்தில் இணைந்தார்களா.?

மாதவியும் அவ கணவனும் சேர்ந்து வாழ்ந்தாங்களா.?

ரத்னா வேணு திருமணம் நடந்ததா.?

இதெல்லாம் கதைல தெரிஞ்சுக்கோங்க..

போட்டியில் வெற்றி பெ
ற வாழ்த்துக்கள் சிஸ்டர்..
 
ஒரே ஒரு வானம்
This story follows four women பிரபா, மாதவி, சிந்து and ரத்னா on a journey together, exploring the real struggles women face in society and how they fight to overcome them.
Prabha, the eldest daughter, sacrifices her personal happiness for her family. Madhavi faces neglect and lack of understanding in her marriage. Sindhu is emotionally abused by her husband, while Rathna bravely raises her child as a single mother.
The author beautifully shows that whether inside a family or alone, women face challenges but rise above them with strength and courage. Realistic, inspiring, and heartfelt, this story celebrates the resilience of women.❤️✨❤️
 
Top