ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 21- உயிரின் உறைவிடம்

#உயிரின்_உறைவிடம்….
#கௌரிஸ்ரிவ்யூ

காதல், சஸ்பென்ஸ் டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை சூப்பர் 🥰 🥰 🥰 🥰

சத்யன்…. போலீஸ்….அவன் கூட அவனோட ரதி…..

மனைவியா அப்படினா இல்ல….காதலினா அது சஸ்பென்ஸ்….

தோழி அப்படினு சொல்லலாம் 🤩🤩🤩🤩🤩…..

காலேஜ் படிக்கர பெண் போல இல்லாமல் எப்பவும் அவளிடம் இருக்கும் இறுக்கம்…..

ஏனோ🥺🥺🥺🥺🥺…..

மனநல மருத்துவரிடம் சில காலமா சிகிச்சை…..

அவள் வாழ்வில் நடந்த துயர சம்பவம் தான் காரணம்…..

என்ன அது????

அவள் வீடு & பெற்றோர், கூட பிறந்தவங்க எல்லாம் எங்கே?????

ஏன் சத்யனிடம் இருக்கா????

இதற்கெல்லாம் விடை கதையில்…..

சத்யன்…ஈகோ இல்லாத நாயகன்….அன்பே அனைத்தையும் மாற்றும் என்பதை நம்பி அதை செயல் படுத்தியும் காட்டி இருக்கான்…..

எதிர்பார்ப்பில்லா நேசம் இவனோடது…..

ரதி…..அப்பா தான் எல்லாம் இருக்கற பெண்ணை அவ அப்பாவும் பாதியில் விட்டு போக…அங்க ஆரமிக்குது அவளோட கஷ்ட காலம்……

அம்மா, அண்ணன்கள் இருந்தும் தனிமையை உணரறா…..அவங்களும் கண்டுக்காம இருக்காங்க…..

அவளோட துயரத்துக்கும் அதுவே காரணம் ஆகுது…..

அதில் இருந்து, அவள் வெளி வரும் அவளோட மனோ திடம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

ரொம்ப ரொம்ப கதை நல்லா இருந்தது ❤️❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐…..

ரைட்டர் யா
ருனு தெரியல….அட்மின் ஜி plz tag her/his…..
 
உயிரின் உறைவிடம்
நாயகன் : சத்யன்
நாயகி : தமிழ் பாரதி
நாயகன் சத்யன் போலீஸ் அதிகாரியா இருக்கிறார் அவரோட வீட்டில் தங்கி காலேஜ் படிக்கும் நாயகி தமிழ் பாரதி....
ரதிக்கு பதினேழு வயது இருக்கும் போது சில கயவர்களால் பலாத்காரம் பண்ணபடறாங்க.. அதில் இருந்து மீள முடியாமல் மன நல சிகிச்சையோடே படிக்கிறாங்க அவங்களுக்கு உறுதுணையாக நாயகன் இருக்கிறார்....

காதல் என்கிற பெயரில் பெண்களை ஏமாற்றி குழுவாக வன்புணர்வு செய்யும் ஆட்களை கைது செய்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சத்யன் போராடுகிறார்...
அதில் பத்திரிகை ரிப்போர்ட்டர் மானசாவிற்க்கு சத்யன் மீது ஒரு பிடித்தம் ஏற்படுகிறது....

ரதி தன் தனிமை பயத்தை போக்கி துணிச்சல் உடன் அவளின் கடந்த காலத்தை கடந்து வர சத்யன் எடுக்கும் முயற்சிகள் அவரின் அப்பழுக்கற்ற காதலை எழுத்தாளர் அழகான முறையில் சொல்லி உள்ளார்...சத்யனின் பெற்றோர்கள் ராஜ் முருகன் சாருமதி ரதியை திருமணம் செய்து வைத்தது சூப்பர்... இறுதியில் தன் குழந்தையும் இந்த சமூதாயத்தில் தைரியம் நிறைந்து வளர வேண்டும் என்று ஜான்சி என்று பெயர் சூட்டுதல் அவளின் கடந்த கால வலியின் சாயல்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 ❤️ ❤️ 🧡 🧡
 
உயிரின் உறைவிடம்

தமிழ் பாரதி நம் நாயகி. அவளுக்கு 17வயசுல ஒரு கொடுமை நடக்குது. அதுனால ரொம்பவே பாதிக்க படுறா. சத்யன் நம் நாயகன். பாரதியை அதுல இருந்து வெளிய கொண்டு வரான். பாரதிக்கு என்ன நடந்துச்சு. சத்யன் அவளை அதுல இருந்து எப்படி வெளிய கொண்டு வரான்னு கதையில் தெரிஞ்சுக்கலாம்.

பாரதி ஒரு பணக்கார வீட்டுல பிறந்து பாசத்துக்கு ஏங்குற ஏழை குழந்தை அவள். அவ அப்பா போனதுக்கு அப்புறம் அவ மேல பாசம் காட்ட அக்கறை காட்ட அவ வீட்ல யாருமே இல்ல.

அம்மா 4 அண்ணங்கள் இருந்தும் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நடக்குது. அது கூட தெரியாமல் இருக்குதுங்க அவ வீட்ல உள்ளதுங்க 😤😤😤😤

அவ வீட்டை விட்டு போய் 2 வருசமா அவளை தேடவே மாட்டாங்க. அவ அம்மா கூட அக்கறை இல்லாமல் இருக்குறது ஏத்துக்கவே முடியல 🤧🤧🤧

சத்யன் பாரதிக்கு எல்லாமா இருந்து அவளுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்குறது தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்குறதுனு அழகா மனசுல நின்னுட்டான்.

சத்யன் பாரதி லவ் அவ்வளவு அழகா இருந்துச்சு. ரதினு கூப்பிடும் போது அவன் லவ் எல்லாம் அவ்வளவு சூப்பரா இருந்துச்சு.

அவளை அவ குடும்பத்து கூட சேர்த்து வைச்சு அவளை கட்டிக்கிட்டு ஒரு தேவதையோட முடிச்சது நிறைவாக இருந்துச்சு.

பாரதி மாதிரி பொண்ணுங்களுக்கு சத்யன் மாதிரி ஒருத்தன் கிடைச்சா எல்லாமே சாதிக்க முடியும்னு சொல்லி இருக்கீங்க 👏👏👏👏

படிக்கும் போது நிறைய இடத்துல எழுத்து பிழை இருந்துச்சு அது படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு 🥹🥹🥹

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#உயிரின்_உறையிடம்_விமர்சனம்


தமிழ் பாரதியின் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவத்தால் மனதால் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறாள்💔 அதிலிருந்து மீள உறுதுணையாக சத்யன் இருக்கின்றான்.


அப்படி என்ன நிகழ்ந்தது பாரதியின் வாழ்வில்? ஏன் அவளது குடும்பம் உறுதுணையாக இல்லை? சத்யனுக்கும் பாரதிக்குமான உறவு என்ன? பாரதி அந்நிகழ்வில் இருந்து கடந்து வந்தாளா? இப்படியான கேள்விகளுக்கான பதில் கதையில் ❤


கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சீரான எழுத்துநடையா இருந்தது . இந்த மாதிரி கொடுமைகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எவ்வளவு ஆழமாக பாதிக்கிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கீங்க 👏


சத்யன் நல்ல தோழனாவும் காவல் அதிகாரியாகவும் மனசுல நிக்கறாரு❤ எல்லா இடத்திலும் ரதிக்கு உருதுணையா இருந்தது அருமை ❤ ரதி மாதிரி சில விஷயங்களில் என்னையும் ஆச்சரியப்படுத்திட்டாரு சத்யன்❤


தமிழின் வாழ்வில் நடந்தது ஆகட்டும் அத்தனை உறவுகள் உடன் இருந்தும் தனித்து இருந்தது ஆகட்டும் மிகவும் கொடுமை 😰😰 சத்யனின் ரதியா பார்க்க நல்லா இருக்கு.


கதையின் இடையிடையே வரும் சப்ரைஸஸ் நல்லா இருக்கு. பாரதியின் குடும்பம் மீது வரும் கோபத்தை தவிர்க்க முடியல 😡


எதற்காக பாரதியை அனைவரும் ஒதுக்குகிறார்கள்? இவ்வளவு வருடங்கள் இல்லாமல் திடீரென எதற்கு இந்த அக்கறை? இதற்கான பதில் இன்னும் சரிவர ஆழமா சொல்லீருக்கலாம் மற்றும் எழுத்துபிழையை தவிர்த்து இருக்கலாம். அதை தவிர்த்து அழகான கதை ❤


சத்யனும் ரதியும் வாசகர்கள் நெஞ்சத்தை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
 
Top