#உயிரின்_உறையிடம்_விமர்சனம்
தமிழ் பாரதியின் வாழ்வில் நிகழ்ந்த கசப்பான சம்பவத்தால் மனதால் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறாள்

அதிலிருந்து மீள உறுதுணையாக சத்யன் இருக்கின்றான்.
அப்படி என்ன நிகழ்ந்தது பாரதியின் வாழ்வில்? ஏன் அவளது குடும்பம் உறுதுணையாக இல்லை? சத்யனுக்கும் பாரதிக்குமான உறவு என்ன? பாரதி அந்நிகழ்வில் இருந்து கடந்து வந்தாளா? இப்படியான கேள்விகளுக்கான பதில் கதையில் ❤
கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சீரான எழுத்துநடையா இருந்தது . இந்த மாதிரி கொடுமைகள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எவ்வளவு ஆழமாக பாதிக்கிறது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கீங்க
சத்யன் நல்ல தோழனாவும் காவல் அதிகாரியாகவும் மனசுல நிக்கறாரு❤ எல்லா இடத்திலும் ரதிக்கு உருதுணையா இருந்தது அருமை ❤ ரதி மாதிரி சில விஷயங்களில் என்னையும் ஆச்சரியப்படுத்திட்டாரு சத்யன்❤
தமிழின் வாழ்வில் நடந்தது ஆகட்டும் அத்தனை உறவுகள் உடன் இருந்தும் தனித்து இருந்தது ஆகட்டும் மிகவும் கொடுமை


சத்யனின் ரதியா பார்க்க நல்லா இருக்கு.
கதையின் இடையிடையே வரும் சப்ரைஸஸ் நல்லா இருக்கு. பாரதியின் குடும்பம் மீது வரும் கோபத்தை தவிர்க்க முடியல
எதற்காக பாரதியை அனைவரும் ஒதுக்குகிறார்கள்? இவ்வளவு வருடங்கள் இல்லாமல் திடீரென எதற்கு இந்த அக்கறை? இதற்கான பதில் இன்னும் சரிவர ஆழமா சொல்லீருக்கலாம் மற்றும் எழுத்துபிழையை தவிர்த்து இருக்கலாம். அதை தவிர்த்து அழகான கதை ❤
சத்யனும் ரதியும் வாசகர்கள் நெஞ்சத்தை நிறைத்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
