உன் பாதையில் உடன் கைகள் கோர்த்து... விமர்சனங்கள்
நாயகி: மகாலெட்சுமி ஐ ஏ எஸ்
நாயகன்: விஜயராகவன் ஐ பி எஸ்...
இரண்டு பேரும் நல்லா படிச்சு நல்ல பதவியில் இருக்கிறவங்க திடீர் என டைவர்ஸ் பண்ணிக்கிறாங்க காரணம் என்னன்னு தெரியலை.... இவங்க ரெண்டு பேரும் விஜயோட தங்கை வைஷூவுக்கும் மகாவோட தம்பி இந்தர்க்கும் கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதை நோக்கி கதை நகர்கிறது ஆனால் எதிர்பாராத விதமாக நடக்கும் கொலைகளின் காரணங்கள் என்ன என்பதை சஸ்பென்ஸ் ட்விஸ்ட்டோட கொடுத்து இருக்கிறார் எழுத்தாளர்.... ரகுநாதன் குடும்பத்தில் கூட இருந்தே குழி பறிச்சிட்டான் துரோகி...
கவர்ன்மென்ட் மீட்டிங்கில் என்னடா இப்படி பாவா நோவான்னு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு திரியறிங்க
டைவர்ஸ் பண்ணிக்கிட்டு இரண்டாம் ரிலீஸ் வேற...வைஷூவுக்கு நடந்தது ரொம்ப கஷ்டம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது அருமை...இவனுங்க எல்லாம் சாகவேண்டிய ஆளுங்க தான் டாக்டர் வினோத் தன்னோட காதலிக்கு நடந்த கொடுமையை பார்த்து அவரோட ப்ரொபஷனை விட்டுட்டு பழிவாங்குவது சூப்பர்....மஹாவோட அம்மாவையும் விஜயோட அம்மாவையும் சந்திக்க வச்சிருந்தா லவ் கதை முடிஞ்சிடுக்கும் ஏன்னா கதையை படிச்சு ட்விஸ்ட்ட தெரிஞ்சுக்கொங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள்
This story follows IPS officer விஜய் ராகவன் and IAS officer மஹா லக்ஷ்மி, who go through a divorce why they separated and whether they reunite forms the heart of the story. Set against two murders with an unexpected twist, it blends romance, suspense, and emotion. Vijay’s witty “mind voice” and his deep emotions add charm,
though the murder
investigation and Vaishnavi’s struggles could be stronger.
The divorce scene feels unnecessary, but overall, it’s an engaging read