#உன்_பாதையில்_என்_கைகள்_கோர்த்து
நாயகன் : விஜயராகவன்
நாயகி : மஹாலக்ஷ்மி
ஐபிஎஸ் ஸான நாயகனும் ஐஏஎஸ் ஸான நாயகியும் விவாகரத்து வாங்குறதோடத்தான் கதை தொடங்குது. அவங்க பிரிவுக்கு பிறகு நகரத்தில நடக்குற கொ*லைகள் ரெண்டு பேரையும் ஒருத்தரோட ஒருத்தரை சந்திக்க வைச்சுக்கிட்டே இருக்கு. பனிரெண்டு வருஷ காதல் ஏன் பிரிஞ்சுது? பிரிஞ்சவங்க சேர்ந்தாங்களா? அந்த கொலைகள் பண்ணினவங்க யாரு? என்ன காரணம்? எல்லாம் கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே.





விஜய் ஒரு அக்மார்க் ஹீரோ மெட்டீரியல். அவன் முதல்ல பேசின பேச்சு இந்த பிரிவுக்கு அவன் தான் காரணமோன்னு யோசிக்க வைக்குது. ஆனா அவன் மஹா மேல வைச்சிருக்கிற கண் மூடித்தனமான காதல் நம்மளை யோசிக்க வைக்குது. அவங்க பிரிவுக்கான காரணம் விஜய் கோபத்தில விட்ட வார்த்தைதான் ஆனா அதுக்கான காரணம் தெரிய வரும் போது விஜய்கிட்ட இருக்கிற நியாயம் புரியுது. மனைவிக்கிட்ட கெஞ்சலும், ரொமான்ஸும்,மகனான ப்ரணவ் குட்டி கிட்ட கொஞ்சலையும், வேலையிலே திறமையும் அப்படின்னு பல பரிமாணங்கள்ல நம்மளை ஈர்த்தெடுக்குறான் விஜய். அவனோட கிளுகிளுப்பான பேச்சால மஹாவுக்கு மட்டுமில்லாம நமக்குமே வெக்கத்தை வர வைக்குறான் காஜிப்பய. பிரிவுக்கு பிறகும் தன்னையே சுச்சி சுத்தி வர்ற அத்தை பொண்ணை நிமிர்ந்து கூட பாக்காத அவனோட குணமும், கலெக்ட்டரான பொண்டாட்டிக்கு கீழே வேலை பாக்குறோம்னு எந்த ஈகோவும் இல்லாம அவளுக்கு முழு சப்போர்ட் பண்ற அவனோட சுபாவமும், மனைவியை உயிருக்கு மேலா நினைக்குற அவனோட காதலும், பையனா மேல வைச்சிருக்கிற பாசமும்னு எல்லா விதத்திலேயும் முழு ஹீரோவா மிளிர்றான்.



கலெக்ட்டரா இருந்தாலும் காதல் மனைவியா, பாசமான அம்மாவா, அருமையான மகள் மற்றும் மருமகளா மஹாவும் விஜய் க்கு கொஞ்சமும் குறையாம ஸ்கோர் பண்றா. குறையாத காதலும், தெளிவான தீர்க்கமான முடிவுகளும், எல்லாரையும் அனுசரிச்சு போற பாங்கும், விஜயை அவனோட பெருங்குறையான கோபத்தோட ஏத்துக்குற குணமும் மஹாவை அருமையான ஹீரோயினா காட்டுது.


பிரிஞ்ச தம்பதிக்கிடையே பாலமான அவங்க காதலுக்கு கிடைச்ச பரிசான ப்ரணவ் குட்டி தன்னோட மழலை பேச்சால அள்ளுறான். அவன் கேட்குற கேள்விகளுக்கு அந்த போலீஸ்காரன் முழிக்குறது சிரிப்பு.


விஜயோட அம்மா சாந்தியும், மஹாவோட அப்பா சிதம்பரமும் தங்களோட பிள்ளைங்களுக்கு துணை நிக்குற அருமையானவங்க. மாமியார்- மருமகள் , மாமனார் - மருமகன் பாண்டிங் தூள்.


விஜயோட அப்பாவும், மஹாவோட அம்மாவும் குணத்தில ஒரே மாதிரி இருக்காங்களேன்னு யோசிச்சா அதுக்கு காரணம் பின்னாடி வருது. எவனோட குழந்தைக்கோ விஜயை அப்பாவாக்க முனைகிற ஸ்வேதாவும், காசு குடுத்தா தானே குழி தோண்டி படுத்துக்குற அவ அம்மா சந்தியாவும் எரிச்சல் படுத்துறாங்க நம்மளை. கடைசில சந்தியா தரமான ஒரு சம்பவம் செஞ்சு அந்த எரிச்சலை குறைக்குறாங்க.



விஜயோட தங்கச்சி வைஷ்ணவி தான் ரொம்ப பாவம். மஹாவோட தம்பி இந்தர் அக்கா பேச்சை தட்டாத தம்பி. நட்புக்கு ரொம்ப சிறந்த உதாரணம் வினோத். தன்னோட மருத்துவ தொழிலைக்கூட விட்டுட்டு நண்பனோட சேர்ந்து தர்மயுத்தம் நடத்துறான். கொ*லைகள் யாரு பண்ணினாங்க எதுக்கு நடந்ததுன்னு காரணம் தெரிய வரும் போது நடந்தது கொ*லை இல்லை சம்ஹாரம்னு தெரிய வருது. செத்தவனுங்க இந்த சமுதாயத்துக்கு தேவையில்லாத ஆணிங்க. புடுங்கி போடத்தான் செய்யணும்.


மொத்தத்தில காதல், மோதல், க்ரைம், சஸ்பென்ஸ், செண்டிமெண்ட் எல்லாமும் சேர்ந்த முழுமையான கதையோட பாதைல ரீடர்ஸும் கை கோர்த்து நடப்போம். வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே.


