ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9. நெருப்பாகும் உன் தீண்டல்கள்- நாவலுக்கான விமர்சனங்கள்

Gowri

Well-known member
#கௌரிவிமர்சனம்

#videoediting

#நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்

குடும்ப கதை தான் ஆன அதிலே காதல், வஞ்சம், துரோகம், ரொமான்ஸ் எல்லாமே இருக்கு🤩🤩🤩🤩

ஈஸ்வர் - ஆரம்பத்தில் இவனா பிடிச்சது, பட் மதி பக்கம் இருக்கற நியாயம் தெரிஞ்ச அப்பறம், நோ கமென்ட்ஸ்🤭🤭🤭…உன் தொங்கச்சியா ஒழுங்காக வளர்க்க தெரியல, ஆன மதி மட்டும் எல்லாம் விட்டு கொடுத்து போகணுமா🙄🙄🙄🙄

கூட பிறந்த பாவத்துக்கு நீ அவளை தாங்கு மேன், அவ ஏன்??????

ஆன அப்படி இருந்தும் மதிக்கு கிடைச்சது😥😥😥😥

கொஞ்சம் பாவமா தான் இருந்துச்சி, அந்த கார் பின்னாடி போன சீன் எல்லாம்……

மதி - உன் கேரக்டர், காதல் எல்லாமே ரொம்ப அழகு🤩🤩🤩🤩

ஆன அவனை சட்டுனு மன்னிச்சிட்டா, ம்ச் 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

ஆறுமுகம் - பார்க்க பாவமா இருந்தது ஆரம்பத்தில் சண்முகம் பின்னாடியே சுத்தும் போது எல்லாம், இத்தனைக்கும் இவர் நடந்த தப்புக்கு காரணம் இல்ல…..

எல்லாம் இவர் மனைவி, பொண்ணு & மாமியார் தான்….கொஞ்சம் கண்டிச்சி இருக்கலாம் அமுதாவை ஆரம்பத்தில்….

சரி நீங்க விட்டு பிடிக்க நினைச்சின்க, அதை விட அவளும் கேட்டுடு தான் வேற வேலை பார்ப்பா😒😒😒😒😒

அமுதா - பண்ணினா பாவத்துக்கு, பேசினா பேச்சுக்கு எல்லாம் தேவை தான்😤😤😤😤😤

சண்முகம் & மேகலா - நல்ல அப்பா அம்மா மதிக்கு, அந்த மீனா புள்ளை சொல்ற மாதிரி நீங்க தப்பு எல்லாம் செய்யல,...

யாரா இருந்தாலும் அப்படி தான் பண்ணி இருப்பாங்க…..

எப்பவும் மதிக்கு உறுதுணையாக தான் இருந்து இருக்கீன்க👏👏👏👏

அணுகுண்டு - இது வர இடம் எல்லாம், அவளோ கியூட்🤩🤩🤩🤩….

யாருனு கதையில் பாருங்க…..

மீனா - எல்லாம் ஓகே தான், கடைசில எதுக்கு உங்க அண்ணனுக்கு சப்போர்ட் செய்த????

அவன் பக்கம் இருக்கற நியாயம் சொல்ற வரை ஓகே, அதுக்கு மேல ஏதோ மதி தப்பு பண்ணினா மாதிரி அவளை குற்றம் சொல்ற😏😏😏😏

சீதா - இது எல்லாம் பிறக்காமையே போய் இருக்கலாம், பிறந்து பிள்ளை பெத்து, அதை ஒரு அப்பாவி ஜீவனுக்கு கட்டி கொடுத்து, இது பண்றது எல்லாம் ஒரு நல்ல வேலை கூட இல்ல😬😬😬😬😬

மொத்த விச பாட்டிலும் இது தான்😤😤😤😤😤

விசாலா - ச்சைக் இது யாருக்கும் நேர்மையா இல்ல, அது ஒன்னும் இல்ல அந்த விச பாட்டில் வளர்த்த பிள்ள இல்ல விச பூச்சியா தானே இருக்கும்🤮🤮🤮🤮🤮

சுதா - நோ கமெண்ட்ஸ் 🤐🤐🤐🤐🤐

ஆல்ரெடி இந்த பக்கிகளுக்கு எல்லாம் நிறைய பொங்கல் வைத்ததால் இத்துடன் முடிச்சிக்கறேன் 😁😁😁😁....

கதை ரொம்ப நல்ல விறுவிறுப்பா போச்சி, கண்டிப்பா படிங்க எல்லாரும்🥰🥰🥰🥰🥰🥰

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ …..
 
#நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்
#yagnithaavideoediting
#yagnithaareview
மதிவதனா 😍 சங்கமேஸ்வரன்

மதிவதனா தன் சிறுவயது காதலை பலரின் சதியால் இறக்க நேரிடுகிறது.. மூன்று வருட வனவாசம் முடிந்து வருகையில் கையில் மூன்று வயது குழந்தையுடன் வருகிறாள்.. அந்தக் குழந்தைகும் வதனாவுக்கும் உள்ள சம்மந்தம் என்னவோ.. அதிரடியான கதையின் போக்கில் ஆசிரியர் கூறிய விதம் சுவாரசியமாக உள்ளது.... குடும்பம், நட்பு, பிரிவு,காதல் கொண்டு கதை நகர்கிறது..

சங்கர் குடும்பத்திற்காக பார்த்து தன் வாழ்க்கையை பணயம் வைக்கிறான்.. "சரி" என்ற ஒற்றை வார்த்தையில்... அதன் விளைவு 🤧

தங்கள் சுயநலத்துக்காக சங்கருடன் ஒட்டி உறவாடும் உறவுகள்... அம்மா தங்கை பாட்டி 🤐🤐🤐 அவன் ஒன்னும் பணம் சம்பாரித்து போடுற மிஷின் இல்ல 😤😤😤

சுதா இவ எல்லாம் என்ன பொண்ணு சாரி சாரி இவ எல்லாம் பொண்ணே இல்ல ரத்தம் குடிக்கிற காட்டேரி 🤬🤬🤬 உனக்கு கொஞ்சம்கூட உடம்பு கூச வில்லையா ச்சி....

மீனுக்குட்டி இதுல ஒரே உருப்படியான கேரக்டர் நீ மட்டும் தான்.. வேணும்ன்ன உன் புருஷனை யும் வச்சுக்கலாம் நீங்க ரெண்டு பேருமே சாக்கடையில் முளைத்த செந்தாமரை...

அமுதா உனக்கு இதெல்லாம் பத்தாது மா நீ பண்ண வேலைக்கு 🤬 பெத்த பையன்னு கூட பாக்காம சுயநலம்..

சண்முகம் & ஆறுமுகம் நட்பு உண்மையிலேயே அருமை....

சண்முகம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு முடிவு எடுத்து இருக்கலாம், அவருடைய அவசரம் மதி வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிட்டது🤧... யாரோ ஒருத்தரு ஒரு இடத்தில தாழ்ந்து போய் தான் ஆகணும்... கொஞ்சம் பிரச்சனையே ஆறவிட்டு இருந்தால் இவ்வளவு தூரம் வந்து இருக்காது 🤧 சண்முகத்துக்கு அந்த நேரம் பொண்ணு மேல இருந்த பாசம், பயம் அவரால யோசிக்க முடியல, இவங்க மேலயும் முழு தப்பு சொல்ல முடியாது...

அணுகுண்டு வாத்துக்குஞ்சு 🤣🤣 மறக்கவே முடியாது இந்தக் கதை இல்ல என்ன ரொம்ப இழுத்த விஷயம் இது 😍😍😍😍

எனக்கு மதி மேல கொஞ்சம் கோபம் தான் யோசிக்காம முடிவு எடுத்துட்டா... அட்லீஸ்ட் அவன் காருக்கு பின்னால் ஓடி வர அப்ப யாவது என்னன்னு பேசி இருக்கலாம் 😔 உன்னுடைய ஈஸ்த்தான நீ தவிக்கவிட்டு இருக்கக்கூடாது.....

கதை நல்ல விறுவிறுப்பா போச்சு, அங்கங்க சிறிய எழுத்துப் பிழை மட்டும் 😍.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍

T22 _ N0 _ 9_ #நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்
கதை திரி https://pommutamilnovels.com/index.php?threads/நெருப்பாகும்-உன்-தீண்டல்கள்-கதை-திரி.936/post-22153
 
  • Love
Reactions: T22
#priyareviews

கதை எண் 9

நெருப்பாகும் உன் தீண்டல்கள்

தலைப்பே சூப்பர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பீல் உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது டக்கு டக்குனு கதை நகர்ந்த விதமும் அருமை 👌👌👌 அந்த வட்டார வழக்கு கொண்டு சென்ற விதமும் சிறப்பு ☺️☺️

சங்கமேஸ்வரன், மதிவதனா இருவரும் விரும்பும் நிலையில் வீட்டிலும் எதிர்ப்பு இல்லாத நிலையிலும் சிலர் செய்யும் செயல்களால் இவர்களின் அழகான காதல் திசைக்கு ஒன்றாய் பிரிந்து விட இருவரும் இணைவார்களா? விதி என்னும் பெயரில் இந்த எழுத்தாளர் செய்யும் சதியை முறியடிப்பார்களா?

சங்கமேஸ்வரன் காதல், குடும்பம், அவனின் வேலை என்று நன்றாக செல்லும் வேளையில் இவனே எதிர்பாராத கூட்டு சதியால் இவனின் வாழ்வே அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்க இவன் சொல்லும் ஒரு வார்த்தையில் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ளும் கதையாக மாறி விடுகிறது. நல்ல மகனாக, நல்ல அண்ணனாக இருப்பவன் நல்ல காதலானாக தான் இருக்கிறான் ஆனால் நம்பிக்கை கொடுக்க வேண்டிய சமயத்தில் யோசிக்காமல் ஒரு விஷயம் செய்து அதனால் இவன் வாழ்க்கையில் ஏற்படும் சூறாவளியில் இருந்து மீள்வது எப்படி? இவனின் காதலும் தவிப்பும் இவனின் ஒவ்வொரு உணர்வுகளையும் அழகா காட்டி இருக்கீங்க ☺️☺️👌👌

மதிவதனா சரியான ரவுடி தான் இவள் எங்கு பாசம் வைக்க வேண்டும் எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் சரியாக இருக்கிறாள் 🤩🤩 இவளின் ரணமும், வேதனையும் ரொம்ப அதிகம் ரொம்ப பாவம், இவளுக்கும் மீனாட்சிக்கும் உள்ள பாண்டிங் செம 🥰🥰 இவளும் சில இடங்களில் யோசிக்காமல் வார்த்தையை விட்டு அதன்பின் தவிப்பது உண்மையை புரிந்து கொள்வாளா?

மீனாட்சி கேரக்டர் அருமை 😍😍😍

முனியம்மாள் பாட்டி எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் இவர் கொடுக்கும் பதிலடி எல்லாமே செம 🤗🤗🤗

சண்முகம், ஆறுமுகம் நட்பும், அருகே இருந்தும் பேச முடியாமல் தவிப்பதும் அதன்பின் சேருவதும் பிள்ளைகளுக்காக விட்டு கொடுத்து செல்வதும் 😍😍😍

அமுதா இந்த அம்மா ஒரு தண்டம் இதுக்கு அறிவு என்பதே சுத்தமா இல்லவே இல்ல போல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

விசாலாட்சி, வடிவு, சுதா 🤐🤐🤐🤐🤐

காதல், நகைச்சுவை, வலி, துரோகம், அழகான உணர்வுகளை எல்லாம் கலந்து அருமை அதுவும் முதல் கன்டென்ட் செம 🤣🤣🤣🤣 (விதையில் இருந்து விருட்சம் க்கு கொடுத்தது) இப்படி ஒரு விஷயம் எதிர்பார்க்கவே இல்ல அல்டிமேட் 🤭🤭🤭

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
  • Love
Reactions: T22
Top