#நெருப்பாகும்_உன்_தீண்டல்கள்
சிறு வயதில் இருந்தே பாசம் கொண்டு நேசமாகி கரம் பிடிக்க காத்து இருக்கும் வேலையில் தங்கை, பாட்டியின் சூழ்ச்சியால் தன்னவளை காயப்படுத்தி அவளை இழக்கும் சங்கு
நேசித்தவனை சதியால் கைப்பிடிக்க முடியாது, தந்தையின் தேர்வை மணந்து போனவள் சிறிது நாட்களில் அவனை இழந்து பெண் குழந்தையுடன் தனித்து நிற்கும் மதி
காதலனை கரம் பிடிக்க, தனக்கு பிடிக்காத மதியை பழிவாங்க என பாட்டி மற்றும் வருங்கால நாத்தனாரின் பேச்சை கேட்டு
கீழ்த்தரமாக நாடகம் ஆடும் விசாலாட்சி(விஷம்
) துணைக்கு ஆடும் பாட்டி, சலங்கை சேர்க்க அம்மா அமுதா என சரியான விஷங்கள்
சங்கு வாழ்வு யாரோடு...!? சதியை தெரிந்து என்ன செய்வான்....!? மதியின் வாழ்வு என்ன ஆகும்...!? என்பதே கதை....
விஷம்
எத்தனை பட்டும் அடங்காத ஜென்மம் இது எல்லாம்
சீதா வயசுக்கு தகுந்த நடவடிக்கை இல்ல, கொஞ்சம் கூட சம்பந்த வீட்டில் நடந்து கொள்ளும் முறையும் தெரியலை
இதோட போதனையில் சீரழிந்து போன விஷம்
அமுதா
அம்மாவா இருக்க தகுதியே இல்ல... சரியான பைத்தியம்....
அரசு பரவால்ல லேட் என்றாலும் பேசிட்டான்... சரியான நேரத்தில் சரியா அவங்களை வெளிய அனுப்பி இருக்கான்... அதைவிட அடிமையாய் இருந்த வாழ்வில் இருந்து மீண்டு மனைவி தாய் என அழகா போயிட்டு... மனைவிக்காக, தங்கள் தவறு புரிந்து முன் வருவது nice....
காளி,முனி பாட்டி இவங்களை தான் எனக்கு பிடிச்சது...
மீனு தப்பு எல்லாம் இவங்க குடும்பத்து மேல வச்சுக்கிட்டு அந்த இடத்தில் ஒடிஞ்சு போய் நின்ன அவளை குறை சொல்லுறது எனக்கு சரியா பாடலை... எப்போவும் அவனுக்கு தங்கைகள் மட்டும் தான் முக்கியம் அப்படினு திரும்ப திரும்ப நிரூபிக்கிறது போல இருக்கு அவனோட பேச்சு.. இப்போ அவ மீனை பேசினதில் என்ன குறைந்து போச்சு எனக்கு புரியலை... அப்படி எதிர்பார்த்த நீ கையை பிடிச்சு கூட்டி கிட்டு போறது, இல்ல உன் புருஷன் அமைதியா இருந்தப்போ பேசுறது, இல்ல உங்க அண்ணன் சரி சொன்ன அப்போ பேசுறது, இதெல்லாம் உனக்கும் தா பொருந்தும்
சண்மு கொஞ்சம் அவசர பட்டுட்டார்... ஆனால் பாவம் அவர்... சங்கு அவன் பேசினது எல்லாம் செம்ம எரிச்சல்
எங்குமே எதையும் யோசிக்காத, மூளையை எதுக்கு வச்சு இருக்கான் தெரியலை, இப்போ வந்து ஓவரா வழின்சுட்டு
ஏனோ சங்கு மேல எனக்கு செம்ம கடுப்பு
அத்தனை தப்பும் இவன் பண்ணிட்டு பெரிய இவன் மாதிரி அவளை பேசுறது
அவ சொன்னதில் என்ன தப்பு இருக்கு... என்னமோ இவன் தெரியாம பண்ண மாதிரி பேசுறான்... ஆளும் மண்டையும்...
வடிவு, சுதா
chaik கொஞ்சம் கூட மானம் ரோஷம் இல்லாத ஆட்கள்... மகள் வளர்ந்து நின்ன லட்சணத்தில் எவன் கட்டுவான்
அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் ஆனால் மேடம் ரெண்டாம் தாரமா போக மாட்டாங்க
என்ன கொடுமை டா...
ஆறுமுகம் பாவம் உங்களுக்கு இப்படி ஒரு மனைவி, பிள்ளைகள்
குடும்ப தலைவரா பேசாமல் இருந்ததுக்கு உமக்கு வேண்டும் இது எல்லாம்
மதியை எனக்கு ரொம்ப பிடிச்சது... ஒவ்வொருமுறை ஏமாற்றம் வந்த போதும் அவனுக்காக என்று எவ்வளவு பொறுத்து போனா... என்னை பொறுத்தவரை அவளுக்கு அவன் சரியான ஜோடி இல்ல... குட்டி அணுகுண்டு செம்ம
ஷாலினி அண்ட் கோ
Congratulations ரைட்டர் ஜி
bp ஏத்தி இறக்கி ஒருவழியா சுபம் போட்டிட்டீங்க சூப்பர்...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்