கதையை சுருக்கமாக அழகாக சொல்லிவிட்டீர்கள் திரும்ப ஒருமுறை படித்த திருப்தி தான் எனக்கு. மிக்க நன்றிகள் சகி.மனசுக்குள் மந்தாகினி
விமர்சனம்
சஸ்பென்ஸ்,குடும்பம், கலகலப்பு நிறைந்த போலீஸ் கதை.
மகிழ்நன் பாண்டியன் போலீஸ் ஏசிபி. போலீஸ்னா விரைப்பா நின்னு பார்வையாலே அடக்குவாங்கன்னா இவன் நக்கல் பேச்சிலே அடக்கி விடுறான் எல்லாரையும்.
பாண்டியன் இரண்டு தம்பிகளுக்கு கல்யாணம் ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் மூத்தவன். இவனுக்கு கல்யாணம் பண்ண இவன் அம்மா செய்யும் அலப்பறைகள் வேற லெவல்.
எட்டு வருடமா கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறவன் மரகதவல்லிய பார்த்தவுடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல.
இவர்கள் ஜாதகத்தைப் பார்க்கும் அய்யர் ரெண்டு பேரும் லவ் பண்ணா தான் கல்யாணம் நடக்கும் இல்லனா தடங்கல் ஏற்படும் என்று சொல்ல
பாண்டியன் மரகதம் இரண்டு பேரையும் லவ் பண்ண வைக்க அவங்க குடும்பமா சேர்ந்து போடும் பிளான்கள் எல்லாம் வேற லெவல்
பாண்டியன் மரகதத்திடம் மந்தாகினி பெயர் சொல்லி கடுப்பேத்தி வம்பு இழுக்க பேசும் வார்த்தைளும், அவளை குடும்பத்திடம் மாட்டிவிடும் காட்சிகளும் நிச்சயமா சிரிப்ப அடக்க முடியவில்லை.
வாசுகி மரகதத்தை கொஞ்சி பேசுவதும் அகிலா மரகதத்தை முறைத்து தள்ளுவதும் மரகதம் தாயை முறைத்துக் கொண்டே திரிவதும் ரொம்ப ரசிக்கும்படியாக இருந்தது.
ஒரு பக்கம் குடும்பம் கல்யாண அலப்பறை என்று சென்று கொண்டிருக்க.
இன்னொரு பக்கம் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மர்மமான முறையில் கொ**லை செய்யப்படுகிறார்கள். யாரு பண்றாங்க என்ன காரணம் என்று கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது.
கொ***லைக்கான காரணம் தெரிய வரும்போது அந்த சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை சரியாகவே தோணுது.
கோர்ட்டு சீன்கள் ஒவ்வொன்றும் செமையா விறுவிறுப்பா இருந்தது அருமை
மந்தாகினி பாதிக்கப்பட்டிருந்தும் அவளுக்கு மறுபடியும் சட்டம் தண்டனை வழங்கினது கொஞ்சம் மனசுக்கு ஏத்துக்க முடியல. அவளோட பாதிப்பை மனசுல வச்சு அவளோட வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு தண்டனை குறைத்துக் கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கலாம்.
சிறுவர்களின் ஒரு சில தவறுகள் தெரிந்தாலும் பெற்றவர்கள் அவர்களுக்காக பரிந்து பேசிக் கொண்டு வருவது அவர்களின் பிள்ளை வளத்தின் லட்சணத்தை காட்டுகிறது.
அந்தப் பசங்க செஞ்ச செயலை கேட்கும் போது படிக்கிற வயசுல செய்யக்கூடிய செயல்களாக இதெல்லாம்னு நினைக்க வைக்கிறது. நிச்சயமாகவே அவங்க தண்டிக்கப்பட வேண்டியவங்கலாம் மந்தாகினி சொன்ன மாதிரி வருங்காலத்தில் இவர்கள் எப்படிப்பட்டவர்களாக வளர்வார்கள் என்பது அந்த வயசில் அவங்க செய்த செயலே பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது
படிக்கிற பசங்களுக்கு பெத்தவங்களும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவங்க என்ன செய்றாங்க எங்க போறாங்க என்று கொஞ்சம் கவனிக்கணும் தவறினால் எப்படிப்பட்டவர்களாக வளர்வார்கள்னு அந்த ஏழு பிள்ளைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
ஷீலா விசாலாட்சி வாசுகி மாமியார் மருமகள் காம்பினேஷன் அலப்பறைகள் அருமை
மந்தாகினி பெயரைச் சொல்லி வெறுப்பேற்றும் மரகதக் கள்வனின் ரொமான்ஸ்கள் நிறைந்த காதல் கதை. ஏ சி பி பாண்டியன் ரொம்ப அருமையா மேகி கிண்டி இருக்கிறார்
ரொம்ப அருமையா இருந்தது சூப்பர்
வாழ்த்துக்கள்
மந்தாகினிக்கான தண்டனை கிடைக்கும் என்பது நிஜத்தில் விசாரித்தே சேர்த்துக் கொண்டேன். அப்படி விடமாட்டார்கள் குறைந்தபட்ச தண்டனையாக கொடுப்பார்கள் என போலீஸாக இருக்கும் என் அண்ணனிடம் கேட்டே எழுதினேன் சகி. கதைக்காக வேண்டுமென்றால் விடுதலை செய்ததாக காட்டியிருக்கலாம். நா விசாரித்ததை சேர்த்து விட்டேன்.
தங்களுக்கு கதை பிடித்ததில் எனது மனமார்ந்த நன்றிகள்