ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

44. காதல் வானிலே- விமர்சன திரி

Gowri

Well-known member
#TT_24

#கௌரிவிமர்சனம்

#காதல்_வானிலே

ஃபீல் குட் லவ் ஸ்டோரி…..

அகரனுக்கு பெண்களையே பிடிக்காது….அவன் அம்மா வயசு பெண்கள் மட்டும் வீட்டில், வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வேலைக்கு சேர்த்து இருக்கான்….

இளம் பெண்களை பிடிக்காததுக்கு காரனம் அவன் மாமா பெண் மது…..

ரெண்டு பேருக்கும் எப்பவும் ஆகாது…..

அவன் அமைதியா போனாலும், வேணும்னு அவனை டீஸ் பண்றது அவளும் அவ அம்மாவும்…..

சின்ன வயசில் அவன் அப்பா அவனையும் அவன் அம்மாவையும் விட்டு செல்ல ….

அதுவே அவங்களை டீஸ் செய்ய காரணம் ஆயிருச்சு…..

விளைவு…..அப்பாவின் மீது பயங்கர வெறுப்பு…..

இப்படி இறுக்கமா இருக்கும் வாழ்க்கையில் அவனின் பவதாவின் வரவு….

பார்த்ததும் காதல் இல்லைனாலும்….. சீக்கரமே கல்யாணம் வரை அவர்களின் காதல் இட்டு செல்லுது……

அப்ப பவதாவின் பின்னணி தெரிய வர…..

எப்பவும் போல அவனின் அவசர குணம் தப்பு தப்பான முடிவை எடுக்குது…..

பாவதாவின் பின்னணி என்ன, எப்படி திரும்ப சேர்ந்தாங்க அப்படிகரது மீதி கதை…..

அகரன், சரியான அவசரத்துக்கு பிறந்தவன்🤦🤦🤦🤦🤦

ஒரு கட்டத்தில் இவன் தான் ஹீரோவா அப்படினு டவுட் நமக்கு வந்துரும்…..

பவதா….அவன் அவசரம்…இவள என்ன சொல்றது…..இவளுக்கு எல்லாரும் ஹெல்ப் செய்வாங்க…..

ஆன அதை டக்குனு மறந்துட்டு, எங்க மாமா தான் எல்லாம்னு வசனம் பேசிட்டு இருப்பா🤷🤷🤷🤷🤷…..

ஆன அவன் அளவு மோசம் இல்ல…..

தெய்வா…..அந்த அவசரத்தை பெத்த அரலூசு…

இவங்க அண்ணியும் அண்ணன் பெண்ணும் பெத்த பையன் வாழ்க்கையில் கொஞ்சம் விட்டு இருந்தா கும்மி அடிச்சி இருப்பாங்க…..

ஆன அதை எல்லாம் மறந்துட்டு அவங்க கூடவே எப்படி கூட்டணி போட முடியுது இவங்களால்🤦🤦🤦🤦🤦🤦…..

ஆன பவதா விசயத்தில் மட்டும் சராசரி மாமியார்🤷🤷🤷🤷🤷

பாண்டியன்…..இவர் அவர் மனைவி ஆண்டாளுக்கு கணவனா இருக்கார்🤭🤭🤭🤭🤭…..

ஆண்டாள் & மது…..என்ன ஜென்மங்களோ 🙄🙄🙄🙄🙄

மருதன்….அந்த குடும்பத்தில் கொஞ்சம் நிதானமான மனிதர்…..

வைபவ்…..இவன் வர இடம் எல்லாம்🤣🤣🤣🤣🤣🤣🤣

அகில்….நீ pure soul da….உனக்கு அந்த லூசு வேணாம் டா…..

கதை நல்லாவே இருக்கு….

பட் இழு இழுனு இழுத்து இருக்கு….ஒரு கட்டத்தில் போர் அடிக்குது பா…..

இனி இவளோ இழுக்க வேண்டாமே…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
Top