காதல் வானிலே
விமர்சனம்
அகரன் சின்ன வயசிலேயே தந்தை பிரிந்து சென்றுவிட தாயுடன் தாத்தா வீட்டில் வளர்கிறவன். தாத்தா வீட்டில் தாத்தாவும் மாமாவும் போனை நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும் அத்தையும் அத்தை மகளும் தங்களுடைய சொத்தைக்கு போட்டியாக வந்து விட்டார்கள் என்று அவனை ரொம்ப கஷ்டப்படுத்தி காயப்படுத்துகிறார்கள்.
அகரனுக்கு பெண்களை கண்டாலே பிடிக்காது. தந்தை விட்டு சென்றுவிட்டால் ஆண்களை தானே பிடிக்காமல் இருக்கணும் பெண்கள் ஏன் பிடிக்காது இல்லை என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்குது அதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
பெண்களே பிடிக்காத அகரணனுடைய வாழ்க்கையில் ஒரு விபத்தில் வந்து பவதாரணி. இருவருக்கும் எப்படி காதல் மலர்கிறது. அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என கதை சுவாரசியமாக நகர்கிறது
மது ஆண்டாள் இவர்கள் இருவரும் சொத்துக்காக செய்யும் செயல்களும் பேச்சும் அவ்வளவு கடுப்பா இருக்கு.
பாண்டியன் தெய்வா இவங்களை என்ன சொல்றதுன்னு தெரியல ஆரம்பத்துல இவங்க குணம் ரொம்ப பிடிச்சது அப்புறம் போகப்போக ஆண்டாள் மதுவுக்கு இவங்க கொஞ்சம் கூட சளைச்சவங்க இல்லைன்னு நிரூபிச்சிட்டாங்க இவங்க அவசர புத்தியினால்.
மருதன் தாத்தா இந்த கதையோட ஆணிவேரே இவர் தான் ரொம்ப நல்லா இருந்துச்சு இவருடைய கேரக்டர். வயதுக்கு ஏற்றவாறு தன்னுடைய அனுபவத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் அவசரத்தில் முடிவெடுக்காமல் பொறுமையாக யோசித்து முடிவெடுத்து. அகரனுக்கும் புரிய வைத்து அவனை உண்மையை தேட சொல்லும் விதம் அருமை.
வைபவ் கதையில கலகலப்புக்கு பஞ்சம் இல்லாதவன் இவன் கொடுக்கும் கவுண்டர்கள் அருமை ஒரு நண்பனாய் இவன் சொல்ல அறிவுரைகளும் அருமை.
அகில் இவன் ஏஞ்சல் உருகி உருகி தாரணியிடம் காதல் வசனங்கள் பேசினாலும் அது கடுப்பை தான் கொடுத்தது எனக்கு. இவன் ஏதோ பெருசா பிரச்சனையே கிளப்பப்போறான் நினைச்சுட்டே தான் படிச்சேன் ஆனா காதல் வசனங்களை பேசி கடைசில மனசுல நல்லா இடத்தை பிடிச்சிட்டான்.
தாரணி, சந்திரன் இவங்க ரெண்டு பேரும் ரொம்ப பாவம் தங்கள் துணைமீது அவ்வளவு காதலை வச்சும் அவங்க துணைகளோட அவசர புத்தியினால் பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க.
குமுதினி கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்தது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தாரணி மீது அவங்க காட்டுன அக்கறை பாசம் அவங்க அகரம் கேட்ட கோவமா பேசின விதம் எல்லாம் அருமை
ஆண்டாள் மதுவுக்கு எந்த யாரும் எந்த தண்டனையும் கொடுக்கல அது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது கொடுக்காமல் விட்டது. அந்த நகை விஷயம் எப்படி குடும்பத்தாருக்கு தெரிஞ்சது அது தெரிஞ்ச பிறகும் அவங்களுக்கு ஏன் எந்த தண்டனையும் கொடுக்காமல் விட்டார்கள் என்று இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாம்.
எல்லா உண்மையும் தெரிஞ்சு ரெண்டு ஜோடிகளும் காதல் வானிலே( காரில் )சந்தோசமாக சேர்ந்து இருப்பது ரொம்ப நிறைவா இருந்துச்சு
ரொம்ப அருமையான காதல் கதை சூப்பர்
வாழ்த்துக்கள்