இனிக்கும் விஷமடி நீ
விமர்சனம்
குடும்ப பாசம் கலந்த அழகான கிராமத்து கதை
அய்யனார் ஆதி பெருமாள் இருவரும் அரசியல் பகை, குடும்பப் பகை கொண்டு எதிரெதிர் இரு துருவங்களாக இருக்கிறார்கள்.
ஆதி பெருமாளுக்கு அய்யனாரின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவரது வெறியாக இருப்பது அதற்காக தனது மகளை பகடைக்காயாக வைத்து திட்டம் போடுகிறார்.
எதிர்பாராத சூழ்நிலையில் இருவிட்டு பெண்களுக்கும் எதிரி வீட்டு பையன்களுக்கும் கட்டாய கல்யாணம் நடைபெறுகிறது.
துரைசிங்கம் பெயரைக் ஏற்ற மாதிரியே கதை முழுவதும் சிங்கமாக மாஸ் காட்டி இருக்கிறான் இவன் அதிரடி பேச்சும் அனல் பார்வை வீச்சும் ஆழமான பாசமும் வேற லெவல்

ரதிதேவி தந்தையின் பேச்சைக் கேட்டு சிங்கம் வீட்டில் இவள் செய்யும் அலப்பறைகளும் தவறு செய்து சிங்கத்திடம் மாட்டி முழிக்கும் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கு

பொன்வண்ணன் ஆரம்பத்துல இவன் இது ரொம்ப நல்ல எண்ணம் இருந்தது ஆனால் துரியாவிடம் அவள் அவள் விருப்பம் இல்லாமல் முத்தம் கொடுப்பது தாலி கட்டுவது அத்து மீறுவது என்று செய்யும் அவசரகுடுக்கை செயல்கள் அவன் மீது கடுப்பைத்தான் வர வச்சுது. ஆனாலும் இவனின் பாசத்திற்காக ஏங்கும் ஏக்கமும் சிங்களின் மீதான பொசசிஸிவும்,நல்லா இருந்தது.
கௌதம் அலர்விழி ஜோடி ரொம்ப க்யூட் இருந்தாங்க

சிங்கமும் ரதியும் ஒருத்தருக்கு ஒருத்தர் கடுப்பாக கோபமாக பேசிக் கொண்டாலும் அவர்களின் காதல் காட்சிகளும் அருமை

கோதை சிங்கம் பாசம் மனதை உருக வைக்கிறது பிறந்த வீட்டை பிரிந்து தவிக்கும் கோதை, அத்தைக்காக ஏங்கும் சிங்கம், அண்ணன் மற்றும் குடும்பத்தை பிரிந்து தவிக்கும் தூரிகா, தங்கம் தான் விரும்பிய தன் மாமன் கிடைக்காமல் அழுகும் அலர் தன் தவறை உணர்ந்து கணவனின் அன்புக்காக ஏங்கும் ரதி என ஒவ்வொருவரின் உணர்வுகளையும் ரொம்ப அருமையா வெளிப்படுத்தி இருக்காங்க.
பஞ்சுப் பாட்டியும் வேறையும் தாத்தாவும் குடும்பத்தை ஆலமரமாக அரவணைத்து பிள்ளைகளுக்காக இவர்கள் கொடுக்கும் அறிவுரைகள் அருமை

பதவி ஆசைக்காகவும்,தன்னை விரும்பாதவரின் மீது ஏற்படும் ஈர்ப்பின் வெறி காரணமாகவும் பழி உணர்வில் சுற்றித் திரியும் ஆதி பெருமாள் மீனாட்சிக்கு சிங்கம் கொடுத்த தண்டனை ரொம்ப சரியானது
உணர்வுகள் நிறைந்த அருமையான குடும்ப பாசம் கலந்த கதை சூப்பர்

எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது.
கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அங்கங்க கேரக்டர் பெயர்கள் மாறி இருக்கு அதையெல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க
கதை ஒருமுறை படித்து பாருங்க தவறுகள் புரியும்
வாழ்த்துக்கள்

