romba romba nantri ma.... azhakaana kavithai variyil arumaiyana ungal vimarsam manthil nekizhchiyai kodukkirathu. Thank you sooooooooooooo much bawa ma..வணக்கம் சகோதரிகளே ..
#பவாவிமர்சனம்
#முடிவிலா_முத்தங்கள்
#விருட்சம் 33
கொள்ளையடித்தவனும் நீ தான் அதை
கொட்டி வைத்தவனும் நீ தான்..
சொல்லி அடித்தவனும் நீ தான்
அதை துரத்த வைத்தவனும் நீ தான்..
காசு பணம் துண்டு மணி மணி என பல
ஓட்டங்கள் இங்கே ஓட..
அதை பின்னாடி துரத்திட ஒருவன் ஓட
சாணக்கிய அஸ்வனோ பறந்தான் அஸ்வத்தோடு..
முடிவிலா முத்தங்கள் இது பணப்பைக்கே அன்றோ
காதல் விழுதுக்கு அல்லவே..
முத்தமிட்டு சென்ற கள்வனே..இந்த ராபின்வூட்..
அஸ்வத் : மௌனமானவன் பழையதை மறந்து வாழும் சூழ்நிலையன். அவனை ஒரு கும்பல் தேட. அவனுக்கு பாதுகாப்பாய் பல பேர் தொடர. சுவாரசியங்கள் இவனிடம் நிறைய.
ஏன் இவனை தொடர்கிறார்கள்!? எதற்காக இவனை கொலைபண்ண துடிக்கிறார்கள் !?என்பதில் ஆச்சரியங்கள் நிறைந்த ஆளுமையன் இவனே.❤❤❤
அமிர்தா: திருடனுக்கு பின்னால் ஓடும் காதலலங்காரி. ஆனாலும் முதலில் இவள் பாவமே என நினைத்தேன். பின்னாளில் தான் தெரியும் தன் தேவையரிந்தே தன்னவன் பின்னால் அழைவது.❤❤
கவி: பிலிப்பைன்ஸ் பெண் தமிழ்நாட்டின் ஜடி கம்பெனியின் புராஜக்ட் மேனேஜர். டிங்கனன் மோ மகடா கவியாகி போனது தனிக்கதை. இவளை சுற்றியே பல நிலைகள் தொடர்வது அருமை.
அதிலும் கடைசியில் ஹப்பா நெத்தியடி சூப்பர் .
பவன்: இந்திய சீன கலவையானவன். இவன் வரும் இடமெல்லாம் ரசனையே. காதல் இவனிடம் சொதப்புவதும், காதல் இவனையே சுற்றலில் விடுவதும் .பாவமே என்றாலும் . உனக்கு வேண்டும் டா.என சொல்லவே தோன்றியது. ❤❤❤
நான்கு நட்புகள் ஒருவறியா ஒருவர் தாங்குவதும், தவிப்பதும்,ஏங்குவதும், ஏமாற்றப்படுவதும் சுவாரசியமான நேரங்களே.❤❤❤❤
ஆசிரிய தோழியே முதல் பாராட்டு ஆரம்பத்திற்கு!! அந்த பெண்ணை அந்த கைகட்டி போடுவதை பின்னால் அருமையாக சொன்னிர்கள் பாருங்கள் சூப்பர் டா.
எனக்கு அஸ்வத் அவனின் மொழிபெயர்பாளினி இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் அருமையே. அதுவும் அந்த விமானத்தில் இருந்து பாய்வது, காடு குன்றுகளில் ஏறுவது என அழகாக சொல்லி சென்றீர்கள்.
பவன் வரும் காட்சிகளும் சூப்பர். கடைசிவரை அவனை சுத்தலில் விட்டது அசத்தல்.
கவியின் காதல் விழிநிரே !!!?????
அந்த வீடு தேடிவரும் காட்சிகளும் ஜோடிகள் அலறியடித்து மாறும் காட்சிகளும் சிரிப்பின் உச்சமே. "யாருக்கு யார் புருஷன் பொண்டாட்டினு முடிவு பண்ணிட்டிங்களா "" சூப்பர் .
ஒரு ஐடி கம்பெனி கதையூடு பயணித்து கடைசியில் ராபின்வூட் வடிவில் கதை முடித்தவிதம் சபாஷ் சூப்பர் சூப்பர் ..❤
ஆனால் குழந்தை பிறந்ததா என சொல்லவில்லை மறந்து விட்டிர்களாமா!??
கடைசிவரை நாயகனின் மௌனமான அந்த செயல்கள் எல்லாம் கடைபரப்பாது கொண்டு சென்று முடித்தது அருமை மா.
கடைசிவரை அண்ணன்மார் இருவரை ஓட வைத்து வேடிக்கை பார்க்கும் மச்சானுக்கு ..ஜே.. சொல்ல தோன்றியது.
ஆக்கிவிடும் கள்ளிக்கு ஆடு திருடும் கள்ளன் என்பதை தங்கையும் கணவனும் நிறுபித்து உள்ளார்கள்.
பல சுவாரசியங்கள் நிகழ்வுகள் நிறைந்த மாறுபட்ட கதைவடிவம் ரசித்து படித்தேன். நல்ல சொற்றொடர்களில் விளையாடி உள்ளிர்கள் வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
Thank you sooooooooooooooooo much dear. pala thadaikal thaandi mudivilaa muyarchiku kidaiththa arputhamana parisu. Really sooooooooooooooo happy.. love you...#yagnithaareview #yagnithaavideoediting #முடிவில்லா_முத்தங்கள்
சஸ்பென்ஸ், காதல் காமெடி, த்ரில்லர் எல்லாம் கலந்த ஸ்டோரி.... ஃபர்ஸ்ட் ஆஃப் ஃபுல்லா சஸ்பென்ஸ், செகண்ட் ஆப் எனக்கு சிரிப்புதான் வந்துச்சு
உண்மையாலுமே கதை முடிவில்லா மர்மங்கள் தான்....
40,000 கோடி பணம் அதனைச் சுற்றியுள்ள மர்மங்களே இக்கதை...
நம்ப ஊர்ல இளைஞருக்கு இருக்கிற முக்கியமான பிரச்சனை "பேச்சுலர்க்கு வீடு இல்ல"
சம்பந்தமே இல்லாத நால்வர் வீட்டிற்காக கணவன் மனைவியாக நடிக்கின்றனர்.. ஆனால் இதன் பின் வரும் மர்மங்கள்வாவ்...
வீட்டில் கற்பூரம் ஏற்றுவதற்கு விளக்கம் கொடுத்தது அருமை
அஸ்வந்த்
பேசுறதுக்கு காசு கேட்கும் ஆளு நம்ப ஹீரோ.சுருக்கமா சொல்லணும்னா அஸ்வந்த் கஞ்சன் சொந்தமா ஏரோப்ளேன் இருந்தாலும், சாதா கிளாஸ்ல தான் போவோம்... ஆனா பின்னால இவனா என்கிற அளவுக்கு பார்க்க வச்சுட்டான் பயபுள்ள . என்னதான் சொன்னாலும் உன்னுடைய காதல்
அமிர்தா
Born with a silver spoon... இப்படிப் பட்டவ ஒரு சாதாரண கம்பெனியில் ட்ரான்ஸ்லேட்டர் ஆ பணிபுரிய காரணம் என்ன.. பார்க்க ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி இருந்துகிட்டு இவ செய்ற வேலை எல்லாம் ..
மக்கடா ( கவி )
என்ன பொண்ணுடா இவ, வேலை செய்ற கம்பெனிக்காக இவ்வளவு பண்ண முடியுமா, இந்தக் கேள்வி ஆரம்பத்திலிருந்து என்கிட்ட இருந்தது... இவளுடைய துணிச்சல் தைரியம் எல்லாம் வேற லெவல். அதுவும் காதல் சான்சே இல்ல மா... காதல் வந்தால் கண்ணு தெரியாது என்பது கவி விஷயத்தில் உண்மை..
பவன்
ப்ளே பாய் இவனின் விளையாட்டு குணத்தினால், சிலபல சூழ்ச்சிகளில் மாட்டிக் கொள்கின்றான். ஆனால் இவன் காதலை புரிந்து கொள்ளாதது வருத்தமே ... இவனையெல்லாம் இன்னும் அலையவிட்டு இருக்கணும்....
மாமி
மாமி அதிரடி சரவெடி தான், நாலு பேத்தியும் வறுத்து எடுத்து எல்லாம் செம ஆனா அமிர்தா மேல இருந்த சாஃப்ட் கார்னர் ஏன்னு தெரிஞ்சவுடனே
சித்தேஷ்
அடேய் ஒரு பிராடு வேளையாவது உருப்படியா பண்றீங்களா டா சீப்பை ஒளித்து வெச்சுட்டா கல்யாணம் நடக்காது னு சொல்ற மாதிரி ரொம்ப சிறப்பா செய்றீங்க...
நகுலன்
இவன் ஒரு முரட்டு பீஸ்காட்டுக்குள்ள
அடைஞ்சி சாமியாரா போக வேண்டியவனை
நாட்டுக்குள்ள விட்டு என் மனசை சிதைக்கிற..."
ரேணு
செம இன்ட்ரஸ்டிங் கேரக்டர் இவ வாய தொறந்தா சிரிப்புக்கு பஞ்சமில்லை
ரெண்டு பேரும் காதலை புரிஞ்சிகிட்ட இடத்தில இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இருக்கலாம்...
இந்தப்போட்டியில் பாதியில் கதையை விட்டுச் செல்லாமல், கதையை ஃபுல்லா எழுதி முடித்ததே உங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
#முடிவிலா_முத்தங்கள்
Full story....
Thread 'முடிவிலா.... முத்தங்கள்....- கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/முடிவிலா-முத்தங்கள்-கதை-திரி.969/
விமர்சனம்...
Thread '33. முடிவிலா முத்தங்கள்- நாவலுக்கான விமர்சனங்கள்' https://pommutamilnovels.com/index.php?threads/33-முடிவிலா-முத்தங்கள்-நாவலுக்கான-விமர்சனங்கள்.1066/