ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

32. தேடல் தீருமோ கதைக்கான விமர்சனங்கள்

கதை எண் 32

தேடல் தீருமோ

மித்ரா தன் காதலனை தேடி செல்லும் பயணத்தில் அவனை கண்டு கொள்வாளா??

அவனை தேடி செல்லும் சமயம் பல திடிக்கிடும் உண்மைகள் வெளியாக அதை எல்லாம் தாங்கி கொள்வாளா???

விக்கி முதலில் இவனை பார்க்கும் போது அவ்வளவு கோபம் தான் வருது அப்படியே நாலு அப்பு அப்பலாம் போல ???இவன் ஒருவன் யோசிக்காமல் செய்யும் தவறால் எவ்வளவு பேரின் வாழ்வு திசை மாறி விடுகிறது ???

மித்ரா பார்க்க துறு துறு என்று ஜாலியா இருந்தாலும் அவளுக்குள் எவ்வளவு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறாள் இதில் இவளின் காதலை வேறு கண்டு பிடிக்கணும் அதையும் கை பற்ற நினைக்கும் போது அவனே அதற்கு முட்டு கட்டையாக நிற்கிறான் ??? அதுவும் அவள் மீது அவ்வளவு காதல் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறான் ???

அரவிந்த் வாவ் என்ன மனுஷன் டா இவன் எவ்வளவு பாசம் அவள் மீது ஒவ்வொரு வினாடியும் அவளை பற்றி சிந்தித்து கொண்டு அவளுக்காக வாழ்ந்து அவளுக்காக ஒரு துணையை கூட ஏற்று கொள்ளாமல் இவனின் நட்பு மெய் சிலிர்க்க வைக்கிறது ?????

மகாலக்ஷ்மி சூப்பர் தோழி ??அவள் துவளும் போது எல்லாம் கூடவே தாங்கி நின்று அவளுக்கு தைரியம் ஊட்டி ?? அதுவும் அவர்கள் நட்பை பார்த்து பொறாமை கொள்ளும் விதம் சோ ஸ்வீட் ??

அபி ஒரு மனுஷன் எந்த நிலைமையிலும் இப்படி சிரித்து கொண்டே இருக்க முடியுமா ??இவன் ரொம்ப பாவம் அதுவும் எல்லாம் தெரிந்த பிறகு இவனை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இவனின் மகி பற்றிய எண்ணமும் இவனின் டைரியும் ???

ஜெகன் இவன் எல்லாரையும் விட ரொம்பவே பாவம் ??? அன்புக்கு ஏங்கும் வளர்ந்த குழந்தை மாதிரி தான் தோன்றியது இவனின் உணர்வுகள் எல்லாம் இருந்தும் இல்லாத நிலைமை ?? கண் முன்னே காதல் இருந்தும் கை பற்ற முடியாத இவனின் வலி ரொம்பவே கஷ்டம் தனக்குள்ளே எல்லாம் போட்டு புதைத்து விட்டு இவன் நடமாடும் விதமும் காதலுக்காக ஏங்கி நிற்கும் விதமும், தன் குடும்பத்திற்கு நியாயம் செய்ய நினைப்பதும் செம ☺️☺️

வசுந்தரவின் அந்த கடித வரிகள் ??? எவ்வளவு வலி மிகுந்தவை

உங்களின் எழுத்து நடை ரொம்பவே அழகா இருக்கு ??? ட்விஸ்ட் வைக்குறேன் என்று நீங்க செய்தது எனக்கு என்னவோ போலவே இருக்கு வேற ஏதாவது செய்து இருக்கலாம் ????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???

லிங்க் ???

நீ எப்போ தர்ஷு கா போட்ட நான் இன்னிக்கு தான் பாக்குறேன்

நன்றி ❤️
 
வணக்கம் சகோதரிகளே..

#தேடல்தீருமோ

கதை எண் 32

பொம்மு நாவலின் போட்டிக் கதை.

தேடலின் வலித்தேடல் காதல் தேடலே..
தேடித் தேடித் தொலைந்த நிலைகள்..
தேடலால் தொடார்ந்திட..
தீராத தேடலும் தீர்ந்ததோ..

மித்ர மங்கையின் தேடல் அபிநய நாயகனை
கைபிடிக்க துடிக்க..
ஜெகமிட்ட நேசனோ தோய்ந்த தேடலை தூர்வாரிட
தேடல் தீர்ந்திட விதி செய்த..
தேடல் தான் என்னவோ..

மித்ரா (மகி) தன் நாயகனை தேடி செல்லும் வலி நிறைந்த பயணம், கண்ணீரே.. கண்ணீரை துடைத்து போராடி அவனை நெறுங்கிய நேரமெல்லாம். சுமையான வலியே.. கலகலப்பான பெண்ணவளோ கண்ணீரின் நாயகியாகி போனது விதியே..

அபி காதலின் உயிர்மூச்சு என்றால். அவனின் பாசமும் உயிரான ஒன்று. புன்னகையே இவனின் புழங்காகிதம்.

ஜெகன் சொல்லமுடியாத வலி நிறைந்த வளர்ந்த புகழ் பூத்த நல்ல நேயன். இவனின் பார்க்காத காதலும்.. கிடைத்து மறைந்த சகோதர
பாசமும்,பெற்றவர்களின் தூரவிலகிய பாசமும் வலி.. வலி.. வலிமட்டுமேயான பாரமான உணர்வு.

காதல் வந்தும் கைபிடிக்க முடியாத ஜெகனின் காதல் வலி .எமக்கும் வலியே.. அவனின் இறுதி நிமிட தண்டனை தீயவனுக்கு எமனாக வருவது சபாஷ் போட வைத்தது. அவன் கடைசியாக சொல்லும் வரிகள் எல்லாம் மிகவும் அருமையே..

வசுந்தராவின் தமிழுரை கடிதம் ஆச்சரியம் .. ஆனாலும் அதுவே
நீதி தேவதையின் தண்டனை கடிதமன்றோ...

அர்வி,விக்கி,மகா இவார்களின் அன்பில் பிரதியில்லி நேசம் கண்டேன். விக்கியை புரிந்து கொண்ட போதும் பாவமே நிதர்சனமாக..

அழகான எழுத்து நடை. முதிர்ச்சியின் சாயலில் வந்தது மிகவும் அருமை ஆசிரிய தோழியே.. பல முடிச்சுகளை அழகாக விடுவித்தது அருமை. அதிலும்.. ஒன்றில் மனதில் பாரம் ஏறி போனது.. ஆனால் அதுவே கதையின் உயிர் என்றபோது .அருமையாக இருந்ததது. மனதை தேற்றவும் முடிந்தது.

அருமையான உணர்வை தூண்டிய கதை. வாழ்த்துக்கள் மா.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
எனக்கு கவிதை வரிகள் மனனம் அம்மா ❤️❤️
 
டுவிஸ்ட் 21நாவல் போட்டி

கதை இல 32


கதை விமர்சனம்

தேடல் தீருமோ

ஆரம்பம் முதல் இறுதிவரையும் விறுவிறுப்புகளுக்கும் , எதிர்பாராத
கதை நகர்வுகளுக்கும் பஞ்சமில்லாது,
கதையின் நாயகி அவளின் காதலை
தேடிச் செல்லும் தேடல் பயணத்தில் ஆரம்பிக்கும் கதை
தேடல்தீரூமோ

நாயகி மித்ராவின் தேடல் பயணம்
கதை இறுதிவரை தொடர்கிறதா ? அல்லது தேடல் தீர்ந்ததா? என்பதை
கதைப் போக்கில் படித்து தெரிந்து
கொள்ளுங்கள்....


நாயகி மித்ரா அமைதி சுபாவமுள்ள,
அருமையான பெண். காதலை தேடிச்
செல்லும் காதல் போராளி , ஆனால்
அவளிற்கே காரணம் தெரியாது
இருக்கையில் அவனின் காதலே
முட்டுக்கட்டையாக இருப்பது சதியா ?
விதியா?


விக்கி சிறந்த காதலன் , ஆனால் காதலுக்காக இவன் திடீர் தீடீரென ஒவ்வொரு செயலுக்குமு எடுக்கும்
முடிவுகளின் பின்விளைவுகளால் நேரும் அவலம் ? ??


காதல் கொள்ளும் பெண்ணவளை அவனை மீறி அவனே வருத்துவது அதனால் பெண்ணவள் விலக நினைப்பது ????

அபி இவனைப் பற்றி சொல்ல
வார்த்தையே இல்லை. என்ன மாதிரியானவன் ! ?? கதையில் வரும் இடங்களில் இவன் சிரிப்புடன் சந்தோஷமாக இருக்க , நமக்கோ..! ??(ரைட்டர் ?????)

அரவிந்த் ஒருவகையில் இவனின்
நிலை பரிதாபம் உணர்வுபூர்வமான ஆத்மார்த்த காதலை மனதில் வைத்து
கொண்டு வெளிப்படுத்த இயலாமல்
தவிக்கும் இடங்கள் ...???


அருமையான ஆத்மார்த்த காதலியின்
தேடலினை உணர்வு பூர்வமாக தந்த கதையின் ஆசிரியர்க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் மென்மேலும்நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்களுடனும்..!


? என்றும் View attachment 1196அன்புடன் ஷாஜினி?
●●●●●●●●●●●●●●●●●●●

கதை திரி

●●●●●●●●●●●●●●●●●●●
விமர்சன திரி

அண்ணி நீங்க எல்லாம் இப்படி போட்டிருக்கறத நான் இன்னிக்கு தான் பாக்குறேன் ??
 
Top