ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

22.தீராதாகம் தீருமோ கதைக்கான விமர்சனங்கள்

வணக்கம் சகோதரிகளே ...

#தீராததாகம் தீருமோ

கதை எண் 22

பொம்மு நாவலின் போட்டிக் கதை

வனத்திலே கடத்தலிலே முகவிழிப்பில்
ஏதோ மாயவலை நிகழ்வில்..
எந்த தாகம் தீருமோ என பணிக்க
ஒவ்வொன்றாக தாகநிலைகள்
அணை உடைக்க வந்ததுவே விடைகள்..

நகுலன்,நிகிலன் நண்பர் கூட்டணி கலகலப்பில் காட்டில் கைவிடபட்ட நிகழ்வில்.. பாதை தேடி ஓடும் பயணமா இவர்களின் கால் நடைகள்.

வேறுபுரம் இதே போல் ரிதி ,ரியாவும் அதே காட்டில் கடத்தல் நிகழ்வில் தோய்ந்திருக்க...

என்ன தான் மர்மமோ என நான் நினைத்திருக்க..

விக்கரம நாயகனின் கையிலே ஊஞ்சலாடும் நூல் பதுமைகள் இவர்கள்.. எப்படி அந்த நூல் ஆட்டப்படுகிறதோ அதன் படியே கதையும்.. கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. இந்த பெயர்கள் வடிவில்.

கிரிஷ் ரவுடி காதல் மிகவும் அழகானது.

தேவ் மகி நட்பு ஆத்மார்த்தம்.

அண்ணன் தங்கை பாசம் உயிரான ஒன்று

தந்தை மகள் பாசம் ஒருபுரம் நரகமாகவும் , ஒரு புரம் சொர்க்கமாகவும் காட்டியிருப்பது அழகு.

மலைவாழ் மக்களின் அறியாமை,வறுமை எனபனவற்றை வைத்து காசாக்கும் பணமுதலைகளை எப்படி காவல்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி வைக்க போராடுகிறார்கள் என்பதும்.

அதனால் பலிவெறிக்கொள்ளும் ஏனையவர்களும் காலத்தின் சாபக்கேடு என கூறியிறுப்பது நிதர்சனம்.

தெய்வம் நின்றே கொல்லும். தப்புக்கு தண்டனை உண்டு என்பதை அழகாக சொல்லியுள்ளிர்கள் .ஆசிரிய தோழி.

விக்ரம்... !!!!!??????? எதிர்பாராத ஒருவன். சபாஷ்.

கடைசியில் விடைகான பதில் கிடைத்த போது வியந்து போனேன்.
வாழ்த்துக்கள் மா.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
 
கதை எண் 22

தீரா தாகம் தீருமோ

நிகிலன், நகுலன் இருவரும் நண்பர்கள், இவர்களுடன் பணி புரியும் இரு பெண்களுடன் ஒரு காட்டுக்குள் மாட்டி கொள்கிறார்கள் இவர்கள் அங்கு எப்படி சென்றார்கள் மீண்டு வருவார்களா??

நகுலனின் காதலும், நகைச்சுவையும் அருமை ?? இவனின் பேபி என்றே அழைப்பும் அவளை பற்றியே யோசிப்பதும் ?? நிகிலன் உடன் போடும் செல்ல சண்டைகள் எல்லாம் செம ???

ரியா தன் காதல் நிறைவேறுமா இல்லையா என்றே தெரியாமல் பரிதவிக்கிறாள் ??ரொம்ப பாவம்

ரிதி முதலில் காதலித்து பின்பு வேண்டாம் என்று மறுக்க என்ன காரணம்??

மகி க்ரிஷ் காதலும், இவர்களின் துணிவும் சூப்பர், ரகுபதி தந்தை பாசமும், ஜெகனின் ஆழமான அன்பும் மிகவும் நன்று

ராஜன், சங்கரன், தாகூர், ராபின் ????? மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்னி தனக்கு வந்தால் மட்டும் ரத்தமா ராஜன் ???

தேவ் அருமையான நண்பன், இவனின் துணை எல்லாம் இடங்களிலும் சூப்பர் ?

மகி ஒரு விஷயத்தை தேடி பயணிக்க அதில் பல சம்பவங்கள் அரங்கேற எல்லாவற்றையும் கடந்து வெற்றி அடைவாளா??

காதல், துரோகம், வஞ்சம், நகைச்சுவை எல்லாம் கலந்த கதை

பின்குறிப்பு ( பெயர் கொஞ்சம் பார்த்து வைத்து இருக்கலாம் ஒரே மாதிரி இருப்பது போல் இருக்கு ???இவ்வளவு கதாபாத்திரங்கள் ??? கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ???)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???

லிங்க் ???

 
Top