#Twist21
#No22_தீராதாகம்_தீருமோ
தலைப்போட அர்த்தமே கடைசி அத்தியாயத்தின் இறுதியில் தான் புரிஞ்சுது...
ஆரம்பமே ஒண்ணுமே தெரியாத அப்பாவிகளின் கடத்தலில் தான் ஆரம்பம்???
நகுலன் அவனின் காதலி ரிதி ஆனால் அதில் இப்போ ஒரே இடியாப்ப சிக்கல்???அவள் அவனை விட்டது விலக, அவன் புலம்ப, நிகிலன் இடையில் மாட்டி தவிக்க, அப்பாவி ரியா வேற இவங்க கூட??? எல்லாம் மலைவாழ் மக்கள் கிட்ட மாட்டி, வில்லன் விக்ரம் கிட்டயும் மாட்டிகிறாங்க...
ஒருபுறம் இவங்க மாட்டி இருக்க இன்னொரு புறம் ரீதியின் கிரிஷ்(??? குழப்பமே வேண்டாம், இவன் தான் ரித்தியின் மனதில்) அவங்ககிட்ட மாட்டி இருக்க எப்படி எல்லாரும் தப்பிப்பாங்க?
ரித்தி நகுலன் கிட்ட காதல் சொல்லி இப்போ ஏன் மறுக்குறா? யார் அவளின் மனம்கவர்ந்தவன் உண்மையில்? யார் அந்த கிரிஷ்? இப்படி பலபல கேள்விகள்.. எல்லாத்தையும் சில பல எதிர்பாரா திருப்பங்களோடு கதையை கொண்டு போய் இருக்காங்க...
மக்களின் அறியாமையை பயன்படுத்தி தப்பு செய்யும் விக்ரமுக்கு தண்டனை கிடைக்குமா? அப்படி அவன் என்ன பண்ணுறான்? ஊசலாடும் கிருஷ் உயிர் தப்புமா? எல்லாம் கதையில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க ப்ரெண்ட்ஸ்..
தேவ் அவனின் குடும்பம் மீதான பாசம் சூப்பர்ப்??? அவனின் காதல் செம்ம??? அவனின் செல்ல அழைப்பு??? எந்த நிலையிலும் அவளை காக்க அவன் இருக்கான்...
மகி போலீஸ் ஆக இருந்தாலும் இவளின் அவசரம் பல பிரச்சனைகளில் கொண்டு போய் விடுது.. கொஞ்சம் நிதானமாக இருந்து இருக்கலாம்?? இவளின் அப்பா மீதான பாசம், குடும்பம் மீதான அன்பு??? என்ன ஆனாலும் எதிர்த்து நின்னது சூப்பர்???
ராஜன் அண்ட் கோ எல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்லை??? அண்ட் சங்கரன் சரியான psycho எல்லாரும்??? பாவம் ரித்து தான்? ஜெகனின் அவனின் பாப்பா மீதான பாசம் வியக்க வைத்தது.. ரகுபதி பாசமும் தான்???
மகி அண்ட் தேவின் நட்பு சூப்பர்... நகு அண்ட் நிகி atrocities செம்மங்க??? அதுவும் அவனுங்க நட்பு ஆரம்பிச்ச கதை??? பாவம் நிகி அவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கும் போது, ஆர்யா கிட்ட மாட்டுன சந்தானம் நிலை தான்???அதுவும் காதலியின் பிரிவில் நகு பண்ணும் extreme அலப்பறைகள்??????
அவனின் காதல் சூப்பர்.. ரியாவுடைய காதலும் எதிர்பார்ப்பு இல்லா அன்பு????
சூப்பரா டுவிஸ்ட் கடைசி வரை maintain செய்து இருக்கீங்க... கடைசியில் தான் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தது சூப்பர்??? எப்படின்னு நல்லா தலையை பிச்சுக்க வச்சீங்க...
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????