ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

17 ஆஹா கல்யாணம் கதைக்கான விமர்சனங்கள்

Art pearl

Member
வடிவேல் சொல்ற மாதிரி இது வாலிப வயசு அந்த டயலாக் தான் நியாபகம் வந்துச்சு எனக்கு.சைட் அடிச்சது தப்புனு சொன்னா யாராது ஒத்துப்பாங்களா ??இங்க அதான் ஆச்சு.

பிரண்ட்ஸ் கூட பப் எப்படி இருக்கும்னு பாக்க வந்த ஷன்மதி அழகா இருக்கான்னு சரண சைட் அடிக்கிறா அதுவே அவளுக்கு பெரிய ஆப்பா மாறிடுது.

அவளை பாத்து ரேட் என்னனு ஆரம்பிகிற அவன் பேச்சு பயத்தை கொடுக்க அங்க எதுக்கு வந்தானு சொல்லாம இவளும் உளறி வைக்க ஏதோ பொம்மையை தூக்கிட்டு போற மாதிரி அவளை தூக்கிட்டு ரூம்க்கு போயிடுறான்.

அவ கிட்ட கொஞ்சம் அத்து மீறினாலும் எதும் பண்ணாம(??) விட்டுடுறான் யாரு நேரமோ இல்லை சதியோ அங்க ஹோட்டல்க்கு ரெய்டு வராங்க எப்டியோ இவளை காப்பாத்தி வீட்டுக்கு போக சொல்றான். ஹாஸ்டல்க்கு வர அவ suicide ட்ரை பண்ண,அவளை காப்பாத்தி (???)அவளை எடுத்துகிறான் ??.

அதே நேரம் ஷன்மதி அம்மா கிட்ட இருந்து போன் வருது மாப்பிளை பாத்து இருக்கோம்னு போட்டோ பாத்தா அந்த நல்லவன் இவன் தான்.

அவனுக்கு அவன் பண்ண தப்பு புரியவே இல்லை பாத்ததும் விரும்ப (???)ஆரம்பிச்ச அவனுக்கு அவ உணர்வு புரியல.

கல்யாணம் வேணாம்னு மறுக்குற அவளை மிரட்டியே ஓகே சொல்ல வைக்கிறான். அவ வேலை பாக்குற ஹாஸ்பிடல் டாக்டர் ரகு அவள விரும்பி அவ கிட்ட சொல்லும் போது கூட அவ காதல மறச்சி நோ சொல்லிடுறா.

ஆனாலும் அவ காதலன் ரகுவ மறக்க முடியாம ரொம்ப கஷ்ட படுறா. ஒரு சூழ்நிலைல இவ ரகு பேர பச்சை குத்தி இருக்குறத பாத்து சரண் ஷாக் ஆகிடுறான்.

கல்யாணத்தனிக்கு மதி ஓடி போக அவ தங்கச்சி வான் மதிய ஷரன்க்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க ?அவ சரண் தம்பி சரத் ரெண்டு பேரும் விரும்புவாங்க

அவங்க காதல் என்ன ஆச்சு? ஷன்மதி அவ ரகு கூட சேர்ந்தாளா??? சரண் என்ன பண்ணான்?? அவன் தப்ப உணர்ந்தானா??சரத் வான் ஜோடி காதல் என்ன ஆச்சு??

எம்புட்டு கேள்வி ஆனாலும் இந்த ரைட்டர்க்கு தைரியம் ஜாஸ்தி தான்.கடைசி வர சரண் அவன் காதல் (??) கல்யாணத்துல முடிகிறதுல குறியா இருந்தான்.
இது ஆஹா கல்யாணம் தான்.வாழ்த்துக்கள் ??ரைட்டர்.உங்க எழுத்து நடை சூப்பர்.
#ஆஹா_கல்யாணம்.
 

Thaarapavi

New member
#ஆஹா_கல்யாணம் ???
#கதை_எண்17

உண்மையிலேயே ஆஹா ஓஹோன்னு என்னை ஃபீல் பண்ண வச்ச கதை இது.

சரண் செல்லகுட்டி??

நம்ம ஹீரோ இவனை எனக்கு ஸ்டார்டிங்கில இருந்து பிடிச்சு. அவன் பண்ணுன எல்லா விஷயத்தையும் ரொம்ப ரசிச்சேன். அவனோட அடாவடி காதல் என்னை ரொம்ப ஈர்த்திச்சு?? எக்ஸ்பீரியன்ஸ்சுன்னு இவன் பண்ணுனானே பாரு ஒன்னு? அந்த அக்கப்போருல பாவம்
அந்த புள்ள ஷான் தான் மாட்டிக்கும்...!! எல்லா இடத்துலையும் தன்னோட காதலை அடாவடியா காட்டுறவன் அதுவும் எல்லார் கிட்டையும் ஒரு முகம் அவனவளிடத்துல எந்த முகபூச்சும் இல்லாத அவன் விரும்பிய இன்னொரு முகமும்னு அப்பியாவும் ரெமோவாவும் அன்னியனாவும் அவன் இருக்குறது எல்லாம் செம.?? ஆனா கொஞ்சம் அவனவளோட உணர்ச்சிகளையும் மதிச்சிருகணுமோ. ??

ஸ்டார்டிங்கில இருந்து எண்ட் வரை அவனோட அடாவடி காதல்ல நான் அப்படியே பிளாட் ஆகிட்டேன் மத்தவங்களுக்கு எப்படினு தெரியல ஆனா எனக்கு இவனை ஸ்டார்டிங்ல இருந்து எண்ட் வரை ரொம்ப பிடிச்சிச்சு. அதுவும் கடைசியா அவன் தப்பை ரியலைஸ் பண்ணுறது எல்லா செம..!! இவனோட கேரெக்டரை இப்படி அடாவடியா எழுதுன ரைட்டர்க்கு ஒரு உம்மா..!!???

ஷான் பேபி...!!

பாவ பட்ட புள்ள ஹீரோ கிட்ட வாலென்டெரியா மாட்டிகிட்டு பாடாத பாடு பட்டிச்சு? எக்ஸ்பீரியன்சுக்காக அந்த புள்ள பப்புக்கு வந்தது ஒரு குத்தமாட டா அதுக்காக எத்தனை விஷயத்தை நீ அவளுக்கு எக்ஸ்பீரியன்சுன்னு சொல்லி பண்ணிட்ட???? ரொம்ப பேட் பாய் டா சரண் நீ. ??.

ஸ்டார்டிங்ல இருந்து இந்த பிள்ளை ரொம்ப பாவம் ஹீரோ கிட்ட பாடாத பாட்டு போகுது. அதுவும் அவனை வெறுப்பேத்துறதா சொல்லி அந்த ரகுவரன் கூட டேன்ஸ் ஆடுனதை பார்த்து ஹீரோ வெறியானானோ நான் வெறியாகிட்டேன்?? அதுவும் அந்த டேட்டூ...?? ஹா.ஹா.. கொஞ்ச நேரத்துல ஹீரோ சார் கூட சேர்ந்து எங்க எல்லாரையும் சேர்த்து பதற வச்சிட்டீயே மா?? இவ பிரெக்னெட் ஆன டைம் உண்மையிலேயே அந்த இடத்துல அவ ரொம்ப கஷ்ட பட்டிருப்பா. பட் இதுக்கெல்லாம் சேர்த்து இன்னும் கொஞ்சம் ஹீரோவ வச்சு செஞ்சிருக்கலாம் பட் பாவம் என் செல்லகுட்டி சோ ஷான் பண்ண வரைக்குமே போதும்.??

சரண் எண்ட் ஷான் பேர் செம???

அடுத்து நம்ம "சர்பத்" ப்ச் ஹி..ஹி சாரி சாரி சரத் குட்டி எண்ட் வானே என்றகிற வான்மதி பேர்??

சரத், யாரு டா நீ..?? எப்பிடி டா இவ்வளவு நல்லவனா இருக்க..?? அதுவும் சரண் மாதிரி ஒரு அண்ணனுக்கு அவனுக்கு ஆபோசிட்டா இப்படி ஒரு தம்பியானு பீல் பண்ண வச்சா கேரெக்டெர் அதுவும் அந்த புல் ஹியூமன் பெயின்டிங் மேட்டெர் எல்லாம் செம..!! வித்தியாசமான முறையில விழிப்புணர்வை புகுத்திய ரைட்டர்க்கு ஒரு ஹேட்ஸ் ஆப்..!!??

இவனுக்கு ஏத்த அராத்து ஜோடிதான் வானே..!!?? சரியான அறந்த வாலு அதுவும் பீச்சுல வச்சு சரத் வானேவ கிஸ் பண்ணுறது மெய்யாலுமே நான் கூட அதை சுத்தமா கெஸ் பண்ணல ச்சீ.. சரத் பேட் பாய்?????.

கேடிங்க அனக்கம் காட்டாம கமுக்கமா கல்யாணத்தை யாருக்கும் சந்தேகம் வாராதது போல முடிச்சிடிச்சிங்க?? அதுவும் சரத் தன்னை அடிச்சான்னு அவனை புருஷன்னு கூட பார்க்காம தொடப்பை கட்டையாலையே வீட்ட சுத்தி தொரத்தி தொரத்தி அடிச்சியே மா வானே நீ அல்லவா உண்மையான மனைவி..!!??? உன் கிட்ட இருந்து நிறையவே கத்துக்கணும் போலையே??

ஆக மொத்தம் அவ்வளவு அருமையா ஒவ்வொரு கேரெக்டரையும் அழகா எழுதியிருக்கீங்க ரைட்டர். இவ்வளவு அழகான ஒரு கதையை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்கஸ் எண்ட் அன்பளிப்பா உங்களுக்கு என்னோட உம்மா???

இன்னும் நிறைய கதை இதே போல எழுதனும் எண்ட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்?????

வித் லவ் தாரா பவி??

Post in thread 'ஆஹா கல்யாணம்-கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/ஆஹா-கல்யாணம்-கதை-திரி.559/post-14033
 

Shayini Hamsha

Active member
டுவிஸ்ட்21 நாவல் போட்டி

கதை எண்17

கதைவிமர்சனம்


ஆஹா கல்யாணம்

சகோதர்களான சரண் மற்றும் சரத் , சகோதரிகளான ஷண்மதி மற்றும் வான்மதி இரண்டு ஜோடிகளிகளின் கல்யாணமும் ஆஹா கல்யாணமாக இருந்ததா அல்லது முதல் கோணல் முற்றும் கோணலாக மாறியதா..?என்பதை கதையின் போக்கில்..தெரிந்து கொள்ளுங்க ப்ரண்ட்ஸ்.??:love:

இரு வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட சகோதரர்களாக நாயகர்கள் அவர்களுடன் அமைதியின் சிகரமும், பொறுமைக்கும் இலக்கணமென இருக்கும் ஷண்மதி , குறும்புக்கும் வாலுத்தனத்துக்கும்பெயர்பெற்ற வான்மதியென இரு சகோதரிகள் கதையின் நாயகிகளாக,

இவர்களைச் சுற்றி பின்னப்பட்ட
கதைக்களமே ! ஆஹா கல்யாணம்

கலகலவென ஜாலியாகவும்,
என்னடா இதெல்லாம்? இதென்ன இப்படியெல்லாம் நடக்குது?னு சில இடங்களில் என்னை போல ஜாலி நபர்களையும் பொங்கவும் (காண்டாக்கியதும்)


பல இடங்களில் கதையினது மாந்தர்களினை பார்த்து எப்படி எல்லாம் இந்தளவுக்கு லவ்வோ லவ் பண்றாங்க..னு கதையின்
மாந்தர்களின் மேல் மரியாதையையும் கதை மேலே (17) எந்த எழுத்தாளரின் கைவண்ணமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பையும் நொடியும் எனக்கு வரவைத்த , டுவிஸ்ட் எதிர்பார்ப்பற்ற உணர்ச்சிகரம் நிறைந்த நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையுமுடைய காதல் கதை ?????

சரண் :- அனைவருக்கும் ஹூரோ..! லெவலுக்கு நடந்து கொள்பவனாக இருக்கும் சரண் செயலிலும் சுற்றிவர எல்லோராலும் மதிக்கப்படும் நிலையில் இருப்பவன் , தனக்கு உரிமைப்பட்டவளுக்கோ ! ???? இவன் இல்லையென்றால் கதையே இல்லை இருந்தாலும் இவனின் நியாயங்கள் எனக்குப் பிடிக்கல!?

ஷண்மதி :- அமைதியின் சிகரம்,
பொறுமைக்கு பெயர்பெற்றவள் ஒரு கணத்தில் அந்த பொறுமை கடக்கும் நிலை வந்தால் அவளின் நிலமை!?

சரத் :- ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை மிகவும் கவர்ந்த ஹூரோ! பேச்சில் மட்டுமன்றி நிஜத்திலும் அவன் மற்றவர்களுக்கு முன்மாதிரி, சிறந்த எடுத்துக்காட்டாக நிஜ ஹீரோ என்று மனதில் பதிந்தவன்????

வான்மதி :- சுட்டிப் பெண் கல்லூரியில் பயின்று தனியே தொழில் செய்யும் நிலைக்கு உயர்ந்தாலும் இவளினது வயதுக்கேற்ற பக்குவமில்லாத சில செயல்களால் ! இவளுக்கு ஆபத்து நேர இருந்தால்!இவளின் நிலமை !??

உறவுகளுக்கான அருமையையும்
குடும்ப வாழ்வில் உணர்வுகளிற்கான முக்கியத்துவத்தையும் கதையின்
மாந்தர்களினால் , வெளிப்படுத்திய ஆசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆனாலும் அதை வெளிப்படுத்த வேறு வகையினை கையாண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையானதும் அன்பானதுமான கருத்து.

நெருங்கிய உறவுகளிடம் இத்தகைய தப்புக்களை அன்பு , பாசம் உரிமை உணர்வு என்று நல்லவன் என்னும் முகமூடி மாயவலையில் செய்துவிட்டு பின்னர் நிலமை கை மீறிய பின்னர், இழக்க கூடாததை இழந்த பின்னர் தம்மை வருத்தி வருந்துவதால் எந்த
பயனும் இல்லையே ! ?????

ஆனாலும் உறவுகள் கண்ணாடிக்கு ஒப்பானது உடைந்தால் இலகுவில் ஒட்ட முடியாது..! நிதர்சனமான உண்மை..??

மேன்மேலும் பல பல கதைகள் எழுதவும், எழுத்துலகில் நீங்காத
உயரத்திற்கு செல்ல மனமார்ந்த வாழ்த்துக்களுடன்

அன்புடன் ஷாயினி

eiAEO4E71844.jpgeiVS5DR1363.jpg

●●●●●●●●●●●●●●●●●●●
"ஆஹா கல்யாணம்"கதை மற்றும் கருத்து திரி


விமர்சன திரி

 
Last edited:
Top