#Twist21
#No17_ஆஹா_கல்யாணம்
ஒரு பெண்ணின் உணர்வுகளையும், அது சரியாக கையாளபடாவிட்டால் வியம் விளைவுகளையும் வேதனைகளையும் அழகா சொல்லி இருக்காங்க...
ஷன்மதி காதலிப்பதில் இருக்கும் தைரியம் அதை சொல்லுவதில் இல்லை... சொல்லும் முன்பே அவளின் காதல் கருகி போய் விடுது, காரணம் அவளின் ஆசையே... நிச்சயம் இல்லா உலகில் இவள் செய்த ஒரு விசயம் எனக்கு பிடிக்கல... தென்றலாக வேண்டியது புயலாக மாறி சுருட்டி போட, காதல் துறந்து, பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையும் கரம் பிடிக்க முடியாது இவள் படும் துன்பங்களை பார்த்தா பாவமா இருக்குது... ??? இவ என்ன பண்ணுனா? ஏன் அவளுக்கு, யாரால், என்ன, பிரச்சனை? அவள் மனதை மீட்பானா? ஊஞ்சலாடும் மனதை நிறுத்தி திருமணம் நடக்குமா?
சரண்குமார், தப்பை செஞ்சுட்டு அவன் ஒத்துக்கவே மாட்டுரான்??? அதில் அவன் மேல் செம்ம கடுப்பு... அவன் சொல்லுவது தான் அவனுக்கு சரி! நேசம் இருந்தும் இவனின் செயல்களாலே பல பல இன்னல்கள் இவனுக்கு மட்டுமல்ல சுத்தி இருப்போருக்கும்... பாவம் விக்கி??? இவனுக்கு நண்பனா வாச்ச பாவத்துக்கு எண்ணலாம் பண்ண வேண்டி இருக்கு??? இவன் தப்பை நெற்றியில் அடிச்சு உணர்த்த நடக்கும் சம்பவம்??? என்னனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
லீலாவதி எனக்கு இவரை பிடிச்சது.. என்ன தான் அவர் கோபமாக பேசினாலும், எந்த சூழ்நிலையிலும் சரியாக தான் பேசினார்... அம்மாவாகவும் யோசித்தார், பெண்ணாகவும் யோசித்தார், அதனால் எனக்கு அவர் மேல கோபம் எல்லாம் வரலை???
அடுத்து சரத் இவனையும் எனக்கு ரொம்ப பிடிச்சது... இவனின் காதல்
சூப்பர்... அவளின் இயல்புகளை கடைசி வரை அப்படியே கொண்டு போய் இருக்கான்... அதற்கு அவனின் அம்மாவும் ஒரு காரணம்.. அவனின் மும்முவை அவ்வளவு அக்கறையா பார்த்துகிரான்... இவனின் செயலின் பின்விளைவு மோசமாக இருந்த போதும்??(!?) அழகா அவளை மீட்டு எடுக்கிறான்.. இவன் மேல அவள் கொண்ட நம்பிக்கை, அதை கொடுத்த இவனின் காதல்???
வாலு இது உண்மையிலேயே வாலு தான்... Virtual வாலு... கொஞ்சம் கூட பயமில்லாமல் எல்லா வேலையும் பண்ணுரா.. அதைவிட செஞ்சிட்டு தான் யோசிக்கிறது???
அபி தேவையான இடத்தில் சரியா பேசுகிறா... மதி அப்பா தாமதம் ஆனாலும் அவரின் மறைக்கப்பட்ட பாசத்தையும், நம்பிக்கையும் தரார் பெண்களுக்கு...
பாவப்பட்ட ஜீவன் நம்ம ரகு?? ஆனால் அம்மாவுக்கு டாஸ்க் எல்லாம் ஓவர் டா டேய்... "ரகுவின் சமையல் அறையில் 100 நாட்கள்"??? டாஸ்க் வெற்றி பெற வாழ்த்துகள் ரகு...
நல்லா சுத்தல்ல விட்டுட்டீங்க ஆரம்பத்தில் இருந்து... யார்னு தெரியட்டும்...
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????