வணக்கம் சகோதரிகளே ..
#பவாவிமர்சனம்
#உயிரிலேசடுகுடுஆடினாய்
#விருட்சம்16
பருவயதின் காதல் நிலை பசுமரத்தாணி நினைவாக
பக்கம் வந்த போது சொல்லாது செல்லாது என நினைக்க..
பூவுக்குள் பூகம்ப தரிசனமாய் நேசன்
பூமகளை பூமிக்குள் புதைக்க..
காதலும் தூரம் நேசமும் தூரம்
மீண்டும் மீண்ட நிலை விதிகையில் பெண்ணவள்..
உயிரிலே சடுகுடு ஆடி என் உயிரோவியம் நீயென நினைக்க
ஊஞ்சலானதோ மனதோ தென்றலாய் ஆடி மகிழ..
சசிதரன்.: வந்தவுடன் பிடித்த நிலை.. இவனின் ஒரு செயலால் பிடிக்கவில்லை ...போக போக பிடிக்காத நாயகன்
முடிவில் ஏனோ பரவாயில்லை ரகமாய் எனக்கு.
ஆனாலும் ஹீரோவாச்சே சரி ஓகே ரகமாய் போச்சு.❤❤
அருந்ததி: காதலின் அழகு பாவை. கடைசிவரை இவளின் காதல் அசத்தலாவே இருந்தது. அருமையாகவும் இருந்தது❤❤❤
தூக்கி எறிந்த காதலுக்காக பெற்றோரை விட்டகல்வது பிடிக்கவில்லை எனக்கு இவளிடம்.
தேவ்: அருமையான நண்பன். நேர்மையான தம்பி. இவனின் இருப்பக்க சார்பு நட்பின் உன்னதம் அருமையே.
ஹாசினி: வந்தாள் சென்றாள் என்ற கேள்விகுறி பெண்.
ஆசிரிய தோழியே. கதைக்கரு அருமையக இருந்தது. அதி பாத்திரம் மிகவும் அருமை. பட்டு பட்டென கேட்கும் இடமெல்லாம் மிகவும் அருமை.
தேவின் பாத்திரம் சபாஷ் அழகாக கொண்டு சென்றீர்கள் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கணக்காக
இன்னும் சசிதரன் பாத்திரத்தை வலுவேற்றி இருக்கலாம் மா
ஆனாலும் கதையில் ஏதோ ஒரு தோய்வு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் எடுத்து இருக்கலாமோ என நினைக்கத் தோன்றியது
.
நிறைய இடங்களில் சிலவார்த்தைகளை முடிக்கவே இல்லை தொக்கி நிற்கிறது. கவணித்து கொள்ளுங்கள் மா.
எழுத்து பிழைகளை சரி பாருங்கள் நிறையமா.
ஆனாலும் ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரசியங்கள் குறையவில்லை அழகாக கொண்டு சென்றீர்கள் .வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.