ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

11. என்னை தீண்டும் உயிரே- நாவலுக்கான விமர்சனங்கள்

Ruby

Well-known member
#என்னை_தீண்டும்_உயிரே

மெல்லிய ஆன்டி ஹீரோ வகை காதல் கதை...

தாயின் இருமுகம் அண்ட் சூழ்ச்சி அறியாது மகிய மிரட்டி திருமணம் செய்யும் தேவ்...

தாயின் உடல்நிலையில் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது, காதல் சொன்ன கிருஷ்ணாவிடம் கூட உதவி கேட்க முடியாது தேவ் அவனுக்கும் பிரச்சனை குடுக்க வழி இல்லாது அவனை மணந்து அவன் கொடுக்கும் அத்தனை துன்பங்களையும் ஏன் என்றே தெரியாது தாங்கும் அவலநிலை மகிக்கு 😢😢😢

தாயின் இறப்பை கூட அவன் அறிந்து கொள்ளாது அவளை படுதும் பாடு😡😡😡

அவனின் அமமுவை அவன் இழக்க அவள் காரணம் சொல்றான்... அவளுக்கு அம்மு யாருன்னே தெரியலை... யார் அவ....!? அப்படி என்ன நடந்து இருக்கும்.....!? தாய் சூழ்ச்சியை கண்டு பிடிப்பானா....!?

வேதவல்லி சரியான வில்லி🤬🤬🤬 எவ்வளவு கொடுமை... இந்தம்மா திட்டம் போட்டு எப்படி காய் நகர்த்தி இருக்கு சனியன்😡😡😡

சொத்துக்காக வில்லியும் ஷாலி செய்யுற வேலை🤬🤬🤬 ச்சைக்... என்னனு கதையில் பாருங்க...

கிருஷ்ணா அண்ட் மஞ்சு அருமையான நட்பு.மம் எண்ணவாகினும் உடன் இருப்போம் அப்படினு அழகிய நட்பு...

பாட்டி அண்ட் ஃபேமிலி💖💖 மேன்மக்கள் தான்... ஆபத்துக்கு உதவி அவங்களை அவ்வளவு நல்லா பார்த்துகறதுக்கு நல்ல மனசு வேணும்😍😍

தேவ் இவன் எல்லாம் என்ன சொல்ல... அம்மாவையும் தெரியலை, மனைவியையும் தெரியலை, இவனையும் ஒழுங்கா புரிய வைக்கல, ஆனால் இவனை மட்டும் புரிஞ்சுக்கணும்😡😡😡 எருமை மாடு, சூழ்ச்சி தெரியாம தொலைசுட்டு டயலாக் பேசுது...

ஹரிஹரன்💖 மனைவியை நல்லா தெரிஞ்சு நீங்க செஞ்சது, அந்தாம்மாக்கு செக் வச்சது சூப்பர்.. அதை கொஞ்சம் மகனுக்கு முன்ன சொல்லி இருக்கலாம்.. தவிச்சு கிடைச்சா தான் அருமை தெரியும்😂😂😂

மாறனின் முடிவு அருமை😍😍 சூப்பர் டா... இழந்த ஒன்றை அவங்களுக்கு முழுமனசா கொடுத்து இருக்கான்...

Cute ஆதினி அவளோடு போட்டி போடும் ஸ்வீட் யாழினி... அவளின் மிரட்டல் காதல் எல்லாம் nice 😍😍😍

Congratulations 💐💐 வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 

Pranavi

New member
Super story sis nalla kadhal kadhai ore oru suggesstion solren kovichukadhenga rombbsaa eluthu pilai iruku kadhaila mudinjavaraikum correction parthutu ponga vaasichutrukapa irritate aagudhu matha padi kadhai nenga solra vidham Super aprm enga nama யாழினி and மாறன் a kaatamale mudichutengale ennachu
 
#priyareviews

கதை எண் 11

என்னை தீண்டும் உயிரே

மகிழினி மிகவும் கஷ்டத்தில் இருக்கும் இவளுக்கு எதிர்பாராமல் நடக்கும் சில நிகழ்வுகளால் வாழ்வா சாவா போராட்டம் தான் ஏற்படுகிறது 🤧🤧🤧 எல்லாவற்றையும் முறியடித்து சரி செய்வாளா இல்லை மாய்ந்து தான் போவாளா?

ருத்ரதேவ் பெயருக்கு ஏற்றார் போலவே ருத்ரமாகவே சிம்ம சொப்பனமாகவே திகழ்பவன் வாழ்வில் எதிர் பாராமல் ஒரு தென்றல் நுழைய அவளை மனதில் நிறுத்தி விரும்பவும் செய்கிறான் இவனின் வாழ்வில் இவன் அம்மு இருக்க இவனின் தாய் செய்யும் சதியால் வேறு ஒரு துணையை மணக்க நேரிட எதையும் தீர யோசிக்காமல் ஆராயாமல் இவன் எடுக்கும் விபரீத முடிவால் ஏற்படும் பல இன்னல்களை எவ்வாறு சரி செய்வான் கை நழுவி போனதை கை பற்றுவானா?

மகிழினி இவ்வளவு கஷ்டம் இவளுக்கு இருக்க கூடாது ரொம்ப பாவம் 😭😭😭 தன்னை மணக்க காத்து இருக்கும் கிருஷ்ணாவா? ஒருவர் செய்யும் சூழ்ச்சியால் கிடைக்கும் மண வாழ்க்கையா மகிழினி நிலைமை என்ன தான் ஆகும்? இவளின் நட்பும், காதலும், தவிப்பும், வலியும், வேதனையும் துடிப்பும் மிகவும் அருமை 🥰🥰

கணபதி தாத்தா,லட்சுமி பாட்டி இருவரும் மிகவும் அருமையான கதாபாத்திரங்கள் 🤩🤩

மித்ரயாழினி சிறிதே வந்தாலும் என்டேர்டைன்மெண்ட் தான் அவள் வரும் இடங்களில் 🤣🤣 அதுவும் ஒரே டயலாக் கொண்டு ஸ்கோர் செய்து விடுகிறாள்.

மாறன் நல்ல பக்குவப்பட்ட அருமையான பையன், தமக்கைக்கு ஏற்ற சரியான தம்பி 👌👌

மஞ்சு அருமையான தோழி கொஞ்சமே வந்தாலும் சரியான இடங்களில் சரியான நேரத்தில் வந்து செல்கிறாள் சிறப்பு 🥰🥰

கிருஷ்ணா இவன் ரொம்ப பாவம் தான் 🤧🤧🤧ஆனால் சரியான முடிவு இவனுக்கு ரொம்ப அழகு 🤩🤩

அந்த இரண்டும் என்ன ஜென்மங்களோ 😬😬🤮🤮🤮

காதல், வலி, பிரிவு, நட்பு, தவிப்பு எல்லாம் கலந்த கலவையாக அருமை

எழுத்து பிழை தான் படிக்க சிரமத்தை ஏற்படுத்துகிறது 😔😔😔

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
#yagnithaareview

#yagnithaavideoediting
#என்னைதீண்டும்உயிரே

ருத்ர தேவ்

அதிரடி ஆன்ட்டி ஹீரோ.. தன் தாயின் சூழ்ச்சி( சுயநலம் ) தெரியாமல், தனக்கு கீழே வேலை செய்யும் பெண்ணை கட்டாய திருமணம் செய்கிறான் தேவ் ..... ஒரு கட்டத்தில் காதலின் வெளிப்பாடு இன்மையால் நடக்கும் விபரீதம் 🤐🤐....

நீ பண்றதெல்லாம் தப்பு தேவ் கடைசியா அவளை குறை சொல்ற 😤😤😤

மகிழினி
அம்மா அப்பா தம்பி என்று சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கையில் சாபம் என்ன வருகிறது தந்தையின் இழப்பு... நம்பிக்கையாக, எதிர்நீச்சல்யிட்டு தன் குடும்பத்தை காப்பாற்றியவள் நாள், தன் திருமணத்தில் ஊமையாய் போவது ஏனோ 😤🤐

ஆதினி
தந்தையின் மறு உருவம், சோ க்யூட் பேபி 😍😍

மாறன்
ஹேண்ட்சம் பாய் 🙈🙈 இவனோட பொறுப்பு காதல் எல்லாமே அழகு 😍😍😍
யாழினி
இவ பண்ற அட்டூழியம் இருக்கிறதே🤣🤣🤣

வேதவள்ளி
🤬🤬🤬🤬 நீ எல்லாம் எதுக்கு மா உலகத்துக்கு பாரம்மா, குழந்தையின்னு கூட பாக்காம என்னென்ன பேசின 🤬🤬🤬
ஹரிஹரன்
இவரு மட்டும் இந்த குடும்பத்துல தப்பி தவறி மாட்டிக்கிட்டாரு... சரியான நேரத்தில் இவரது பேச்சு👏👏

கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்து இருக்கலாம், ஆரம்பத்தில் இருந்த அழுத்தம் இறுதியில் குறைவே ....

என் தனிப்பட்ட கருத்து( வேறு கதையின் தாக்கம் இதில் அதிகமாக உள்ளது🙏🙏🙏 ) இன்னும் தனித்துவமாக கொடுத்து இருக்கலாம்...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍😍😍
 
Top