BawaniBala
Member
வணக்கம் சகோதரிகளே ..
#பவாவிமர்சனம்
#என்னைதீண்டும்உயிரே..
#விருட்சம்11
முகமூடி காதல் திருமண ஒப்பந்த நிகழ்வாய்
முட்டிக்கொண்டே காதல் களவாட..
முறைத்த நிமிடங்களில் எல்லாம் காதலே..
தீண்டி.. தீண்டி.. காரியம் சாதித்ததோ..
பொருந்தாத மணவியல் புரிதலற்ற விதிகளாய்
யாருக்கு வந்த விருந்தோ என்ற நிலையில்
பரிதவிப்பான பல நிலைகள்..
இதுவே காதலை மறைத்த காவியமோ..
என்னைத் தீண்டும் உயிரே உனையறியா
உன்னை களவாடிக்கொண்டேன் காதலால்..!!
ருத்ரதேவ் : ஒப்பந்தமாய் திருமண வாழ்க்கையில் நுழைய. அங்கே விதி வைத்ததோ பல விடையங்கள். எல்லாம் புரிதலற்ற நேரமோ என நினைக்கத்தோன்றியது.❤
இவனின் சில நேர ரேமோ நிமிடங்கள் கசிந்துருகி வந்தாலும், அந்நியனாக இவன் எப்போது மாறுவானோ என்ற பதைப்பு இருக்கத்தான் செய்தது.
ஆனாலும் இவனின் மூன்றுவருட தேடல் காதல் காவியமே.
மகிழினி : திருமணம் எதற்காக என்றாலும் அதனால் இவள் படும் பாடு கவலையே. தன் சுயத்தையே தொலைத்து நடமாடும் போது துயரமே தோன்றுகிறது .
தன் கணவனின் பலநேர கோபங்களை எதற்கு ,எதனால் என்றே புரியாமல் நடமாடுவது பாவமே.
காதல் வந்தபோது தடுமாறினாலும் மறுநிமடமே விலகி செல்வது கவலையே. முதல் இருந்த துணிவு காதலால் தொலைந்து போவதும்
பரிதாபமே.
மாறன். வாவ் இவ்வளவு பெரியவன் ஆனான என நினைத்த நிமிடங்கள் அழகே. அதனோடு யாழினியின் இவன் மீதான காதல் நிமிடங்களும் ரசனையே.
கிருஸ்ணா மற்றும் மஞ்சு அருமையான நட்பு இந்த மகிக்கு.
ஆசிரிய தோழியே.. முதலில் அழுத்தமான கதையாக வந்து கொண்டிருந்தது .ஆனால் கடைசியாக அந்த அழுத்தம் காணாமல் போய்விட்டது போன்ற நிலை ..!? ஏனோ தெரியவில்லை.
மற்றும் முதலில் மகியை நிமிர்ந்தவளாக காட்டி பின்பு காதல் வந்தவுடன் பலகீனமவளாக காட்டி அவளின் காதலை நிலையினை சொல்லிய விதம் அருமை.
எதையும் பேசிமுடிக்காமல் கண்ணால் பார்ப்பதும் ,காதால் கேட்கப்படுவதை விட தீர விசாரித்து இருந்தால் இந்த தேவுக்கு என்னவாம் என எண்ணத்தோன்றியது அவனின் பாத்திரத்தை அழகாக கொண்டு சென்றீர்கள். ❤
காதலுக்கு இருவரின் சமநிலை புரிதல் வேண்டும் .இல்லையெனில் பிரிவே ...!!? என்பதை அருமையாக சொல்லி சென்றீர்கள்.
எழுத்துப்பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள் மா. சில இடங்களில் வசனங்கள் அதனால் மாறிவிட்டது .
வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.