ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

10 நிழல் போல தொடர்வாயோ? கதைக்கான விமர்சனங்கள்

Art pearl

Member
ஆஜிஷ் வித்யூத் இவங்க தேடலில் ஆரம்பிக்கிற கதை, இவங்க தேடல் என்ன??அவங்க தேடலுக்கும் இவங்களுக்கும் உள்ள சம்மந்தம் என்ன?? இவங்க உறவு என்ன??


எதிர் பாக்காத நேரத்துல எதிர் பாக்காத ஆள் மூலமா இவங்க தேடல் முடிவுக்கு வருது. அந்த முடிவு இவங்களால ஏற்க கூடியதா??


ஷம்மு உண்மையா தேவதை பொண்ணு தான் இவ, எல்லாரோட குட் புக்ல இருக்குற பொண்ணு ஒருநாள் கடத்த(???)படுறா அதுக்கான காரணம் என்ன??


அவளை தேடுற முயற்சில அவளை கடத்த சொன்னது ஆஜிஷ் னு தெரிய வரும்போது வித் என்ன பண்ணுவான்???நிஜம் நிழல் ஆச்சா?? இல்லை நிழல் நிஜமாக வாய்ப்பு இருக்கா?? இதுக்கான விடை தான் ஸ்டோரி.


வாழ்த்துக்கள் மா. ஷம்மு கடத்த பட்ட ரீசன் கெஸ் பண்ண முடிஞ்சிது ஆனா ஆள் எதிர் பாக்கல. கிளைமாக்ஸ் எனக்கு வருத்தம் தான். ஆனா எங்கையோ இது மாதிரி நடத்துட்டு தான் இருக்கு. அதான் உண்மை.
 
  • Love
Reactions: T21

Sriraj

New member
வணக்கம்.

Twist 21 போட்டி

கதை விமர்சனம்


கதை எண்:10 - நிழல் போல தொடர்வாயோ?


இக்கதையில் நாயகன் நாயகி என்று யாரையும் என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. கதையே இக்கதையின் நாயகன் நாயகிகளே. ?


அழகான அழுத்தமான கதை.?

போட்டியின் தலைப்புக்கு ஏற்ற ஒரு கதை.??



ஒரு தேடுதல் வேட்டையில் தொடங்கி
தேடுதல் வேட்டை பலமாக மாறி…
அத்தேடுதல் வேட்டையின் உண்மை காரணம் தெரிய வர அதிர்ச்சிக்குள்ளாகியதோ…?


அதிர்ச்சியான செய்திகள் நெஞ்சை அழுத்தியதோ…?

நெஞ்சை அழுத்திய செய்தி
தீரா வலியை பரிசளத்ததோ…?

நட்பு என்ற உறவில் பல மர்மங்கள் மறைந்துள்ளதோ…
நட்பின் மர்மங்கள் வெளி வர
அதனின் எதிர்வினை தான் யாதோ…?

நிழலாய் தொடர்வது
நிஜமாய் மாறியதோ…?

அதன் தாக்கத்தில் மீண்டும்
நிஜமானது நிழலாய் மாறியதோ…?

நிழல் நிஜத்தை தொடர்ந்ததா
இல்லை நிஜம் நிழலை தொடர்ந்ததா…?

என அறிய கதையை வாசியுங்கள்.?


அழகிய கதையை அழகாய் தந்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்…???

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…???


அன்புடன்
ஸ்ரீராஜ்
 
  • Love
Reactions: T21

Shayini Hamsha

Active member
டுவிஸ்ட் 21 நாவல்போட்டி

கதை இல ~ 10

கதையாசிரியர் ~ பென் டென்

நிழல் போல தொடர்வாயோ



மிகவும் நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களாக இருக்கும் வித்யூத் , ஆஜிஷ் மற்றும் ஷம்மு என்னும்
ஷம்ருதா. இவர்கள் மூவரில் ஷம்ருதா யாரும் எதிர்பாரா நேரத்தில் திடீரென மாயமாக ,

அவளின் நிஜத்தை தேடும் பயணமா?
நிழலை தேடும் பயணமா? என்ற உணர்வு பூர்வ தேடல் பயணமாக "நிழல்போலதொடர்வாயோ" கதையின் கதைக்களம் அடுத்தடுத்து என்ன நடக்குமென்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்புகளுடனும், ஷம்ருதா காணாமல் போனதன் பிண்ணனி என்ன ? இதற்கெல்லாம் யாரெல்லாம் பின்புலமென்று எம்மை யோசிக்க வைப்பதென்று அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன்
சுவாரஸ்யமாக மனம் நிறைய பதைபதைப்புகளுடன் நகர்கின்றது..???


ஷம்ருதாவை தேடிச் செல்லும்
பயணத்தில் வித்யூத்துடன் எம்மையும்
(வாசகர்களையும் ) சேர்த்து ஷம்முக்கு
என்னதான் ஆகியதென்று எம்மை
பரிதவிக்க வைப்பது அவளை
ஆரம்பம் முதல் இறுதிவரை மனதில் ஒன்றென கலக்க வைப்பது எல்லாம் கதையாசிரின் திறமை.. ?????

மேலும் ஷம்மு என்ற ஷம்ருதாவை
தேடிச் செல்லும் தேடலின் முடிவுகள்?
இதற்கெல்லாம் பிண்ணனி யார் ?
இதற்கான காரணங்கள் எல்லாம்
மீதி கதையில்...

நண்பர்கள், உறவினர்கள், மற்றும் அயலவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஷம்மு. அவளைத் தெரிந்த யாரிடமும் அவளைப் பற்றிக்
கேட்டாலும் அவளைப் பற்றி போற்றிப்
புகழுவர் . அந்த அளவிற்கு அன்பு ,
பாசத்திற்கென்றே பெயரெடுத்தவள்..


அத்தகையவள் மாயமாகியதன் பிண்ணனி என்ன?

வித்யூத் சிறந்த உறவினன் , நண்பன் ,
எல்லாமே..???? ஷம்முவிடம் காட்டும் அக்கறை பாசத்தில் மெய்
சிலிர்க்க வைப்பவன். இவனே சிறந்த நட்புக்கு இலக்கணமென்றால்
மிகையில்லை. நட்பை சந்தேகப்பட
வேண்டிய சூழல் இருந்தாலும் யாரும்
மனம் நோகாமல் சூழ்நிலையை சிறப்பாக கையாளுவது அருமை..?????

அஜீஷ் அமைதியாக இருந்தே கவரும்
அழுத்தவாதி..??

திலீப் அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டுமென்று சிறப்பாக நிதானமாக திட்டமிட்டு செய்யும் திறமையாளன் . இவனுக்கு
இடைஞ்சலாக ஸாரி ...???.. துணையாக இருக்கும் வீணா மற்றும் ஜெகன் அடிக்கும் லூட்டிகள். ஹப்பா ...???? அழகு.

கமல்நாத் , சுஷ்ரிதா, ஸ்ரீனிவாசன்
கதையில் சிறிது இடங்களிலயே
வந்தாலும் கவருகின்றனர்..???


நிழல் போல தொடர்வாயோ ஆத்மார்த்த நேசங்களின் தேடல் பயணம்...


டுவிஸ்ட்டுக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றியதற்கு பாராட்டுக்கள் ??? டுவிஸ்ட்21 நாவல் போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்துக்கள்.


அன்புடன் ஷாயினி
ei0C5IK58243.jpg

●●●●●●●●●●●●●●●●●●●

கதை திரி


●●●●●●●●●●●●●●●●●●●

கருத்து திரி


●●●●●●●●●●●●●●●●●●●
கதை விமர்சன திரி
 
  • Love
Reactions: T21
Top