#Twist21
#No10
#நிழல்_போல_தொடர்வாயோ?
ஷம்ருதா என்ற பெண் காணாமல் போவதில் ஆரம்பிக்கும் கதை அவளை தேடும் தேடுதல்களில் விறுவிறுப்பாக நகர்கிறது... என்ன நடந்து இருக்கும்? யார் கடத்தி இருப்பா? என்ற தேடுதல்களில் கிடைக்கும் விஷயங்கள் என்னவா இருக்கும்? ஏன்? எப்படி? எதற்கு? என பல வித யூகங்கள் கொடுத்து கிடைக்கும் எதிர்பாரா விடைகள் அதிர்ச்சியை அளிக்கிறது??? கடைசி வரை ஒரு டென்ஷன், எதிர்பார்ப்பிலேயே கதையை நகர்த்தி இருக்காங்க... கண்டு பிடிப்பாங்களா? என கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க ப்ரெண்ட்ஸ்...
யாரிடம் கேட்டாலும் அவளை பற்றிய நல்ல விசயங்கள் தான்.. அன்பாலே உருவான பெண்???... அனைவரையும் அன்பு செய்யும் அருமையான பெண்.. அந்த அன்புதான் ஆபத்தையும் கொடுக்குது.. என்ன அது?
ஆஜீஷ் அண்ட் வித்யுத் இந்த மூவரின் நட்பும், அன்பும், நேசமும் சூப்பர்... இந்த உறவுதான் என்று சொல்ல முடியாது எல்லாவகையான உறவையும் உள் அடக்கிய ஒரு பாண்டிங்???
மூவருக்கும் இடையிலான அறிமுகம், அவர்கள் இடையிலான பல நிகழ்வுகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது???
எனக்கு அவன் கொண்ட அந்த நம்பிக்கை ரொம்ப பிடிச்சது!!!???
ஒரு மனுஷனோட புகழ் போதைக்கு ஊறுகாய் போட ஒருவன் கிடைத்து விட்டால்??? அவன் எந்த அளவுக்கு எல்லாம் போவான் என கதையை படிச்சு தெரிஞ்சுக்கலாம்... பொதுநலம் என்ற பெயரில் பக்கா சுயநலம்???.. இன்றைய சூழலுக்கும் பொருந்தி போகின்ற கதைக்கரு..
கமல்நாத், சுஷ்ரிதா அண்ட் சீனிவாசன் இவர்களின் அன்பின் வெளிப்பாடு கண்கலங்க வைக்குது??? ஷில்பா ஷம்முவின் ரசிகையாய் அறிமுகமாகி, நட்பாய் இணைந்து, காதல் கொள்ளும் இவளின் காதல் ஏற்றுக்கொள்ள படுமா? நிராகரிக்கப்படுமா?
உதவியும் உபத்திரமாய் மாறினால் யார் தான் உதவி செய்ய மனம் உவந்து வருவாங்க??? ஒரு சிலரின் அலட்சியத்தால், பொறாமையால் எவ்வளவு பிரச்சனைகள் வருது...
கதையை யார் என்ன பண்ணி இருப்பாங்க என விறுவிறுப்பா நகர்த்தி இருக்கீங்க... பரபரப்பான நிகழ்வுகள், பலரின் வேதனைகள், எதிர்பார்ப்புகள் என வேகமா போச்சு... எனக்கு ரொம்ப பிடிச்சது
நிறைய சொன்னா கதையே சொன்ன மாதிரி ஆகிடும்..
அந்த ரசிகையின் கடிதம்???எழுத்து நடை நல்லா இருந்தது சிஸ்???
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????