ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விமர்சன திரி

#பவாவிமர்சனம்

ஹாய் பொம்முமா வணக்கம் .🙏
முதலில் உங்களின் நூறாவது(100)நாவலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .💐💐💐 இந்த நூறில் (100/75% வீதம்) அதாவது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உங்களோடு பயணிப்பதும் உங்களின் நாவலை வாசித்த பெருமையும் எனக்கு உண்டு .😊😘அதேபோல் உங்களை நேரில் சந்தித்த பெருமையும் எனக்கே எனக்குண்டு.😘😘 ஒரு ஆளுமையான எழுத்தாளரின் ரசிகை என்பதில் மிகையில்லை .👌😘😘💐💐

#அபூர்வவானவில்நூறடி.

சத்யசாகரன் -அபூர்வா

இக்கதைபற்றிய எந்நிலை.மகளிர்தினத்தை கொண்டாடும் இம்மாதம் (2024.3.8) 💖 இந்த கதை வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி .👏👏
மூன்று விதமான பெண்களை மையப்படுத்தி இக்கதை அமைந்தவிதம் அருமைமா. 👏👏👏👏

அபூர்வா,மேனகா,ரங்கநாயகி இவர்களை நோக்கிய என் கணிப்பு👌 😠😥😘
மேனகாவால் அழிக்கபட்ட குடும்பத்தை, 😠ரங்கநாயகியம்மா பாதுகாத்து ஆள, 👌அதை அரவணைப்பாக பூரணமாக ஆக்கப்படுத்திய பெருமை அபூர்வாவுக்கு வந்தது👏 அருமையேமா.👏👏

வெள்ளைபிரம்பும் கருமை விழியும் கொண்ட பெண்ணவளுக்கு வர்ணங்களாய் வானவில்லையும் , 💞தன் வாசனை நுகர்வையும் ,🌹 காதலையும் தந்து 💞விடைபெற்ற நாயகன் .தன் குடும்ப நிம்மதிக்காக தனித்தே வாழ்வது நெகிழ்வேமா.😪😪

காதல் சுயநலம் பார்ப்பதில்லை என்ற கருத்தை நாயகன் நாயகி இருவரும் விடைபெறும் இடம்.கண்ணீரே வந்தது😪😪. அதே காதலுக்கும் சக்தியும் உண்டல்லவா அது சேர்த்து வைக்கும் அல்லவா !!,👌👌👏👏சேர்த்து சேர்ந்த போது மகிழ்ந்து போனேன்.😊😊😊

அபூர்வவானவில் நூறடி 🌈
ஒளியிழந்த பேதை ஆயினும் துணிவு இழக்கா மங்கையவள்
வெள்ளை பிரம்பின் துணைக்கோலாய் வாழ்வியல் தகிக்க
வந்தானோ தேவதூதனாய் கண்ணொளி பட்டுத்தெறிக்க🌹

வந்தவன் தன் வாசனை தந்து தன்னை தந்து காதலும் தந்து
நேசமிட்டவளை நெஞ்சாங்கூட்டில் பதித்தே வசம் செய்ய
அரண் அவனாய் தூரத்தே விழிவழி நோக்கி இமைகாத்தனலே..🌹

ஓசை அவன் வாசனை மேனி வரியணை என
நுகரும் மாதவளும் அவனே ஒளி ஒலி யென உவகை துள்ள
துன்பியல் சுவடெல்லாம் தூரத்து மேகமாய் களைய..🌹

இருட்டிய வானின் வானவில்லாய் அவளுக்கு அவனாய் உருவமிட
அபூர்வ மங்கையும் சாகர நீராய் அவனும் மாரிபொழிய
கலந்தனலே காதல் மழை பூமழை பொழிவாய்..!!🌹

சூழ்நிலைகள் கைதியாகளாம் தன்னலம் சுரக்காது போகுமிடத்து.😐
புரிதலே விலகளை தந்தாலும் அதுவும் காதலன்றி வேறது இங்கே.💘💘
அருமையான கதை படித்த திருப்தி எனக்கு. 👌👌ஒரு பெண்ணின் பார்வை கனவை நனவாக்கி உங்களின் எழுத்தின் ஆளுமையில் சிலிர்க்காத நிலையே இல்லை.👏👏👏

இன்னும் பல நூறுகள் கதைகள் நீங்கள் தொடரவும் நான் உங்களை பின் தொடரவும் எதிர்பார்ப்பு கூடுதம்மா.😘😊😊😘😘

வாழ்த்துக்கள் மா.💐💐💐
 

Hanza

Well-known member
#hanzwriteup

#அபூர்வ_வானவில்_நூறடி

#AP_100

First of All my hearty congratulations to hit a century… 💐💐💐

Wish you to reach double.. 💥💥💥

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

பாதை நடுவே பெற்றோரை இழந்து...

பார்வையை இழந்து...
பாட்டி மடி தவழ்ந்த…
பாவை இவளோ...

கண்ணிருந்தும் குருடர்கள் இருக்கும் இப்பாரில்...

கண்ணகியிவள் கையில் வெண் சிலம்பு…

திடம் கொண்ட இதயத்தை…

திறக்க வருகிறான் கந்தர்வனவன்...

பாறை மீதும் பூப்பூக்குமோ...

பாயும் கூட பஞ்சணை ஆகுமோ...

இணைந்தது இதயங்கள் மட்டுமல்ல...

இருவர் யாக்கைகளும் தான்...

காணும் கருப்பு பக்கங்கள் வானவில்லாய் மாறி..

காட்சிகளின் வண்ணங்கள் அவதரிக்கும் தருணம்...


தலைவனவன் தலைமறைவாக…
தத்தளிக்கும் தத்தையவளோ…

இரங்கல் செய்தியும்
இடியாய் இறங்க…
அனலில் இட்ட புழுவாய்…

அணங்கிவள் துடிக்க…

ஆறாண்டுகள் உருண்டோட…

ஆசிரமம் இவளில்லமாக…
ஆயினள் இவள் அன்னையென…

சின்னஞ்சிறு மொட்டாய்…
சிரித்தாடும் சில்வண்டாய்…
சிற்பியின் சிறந்த கைவண்ணமாய்…

சிறகில்லா தேவதையொருத்தி…

காவலன் விட்டுச்சென்ற…

காதலின் சின்னமிவள்…
ஏந்திழை உயர் வாழ…
ஏக காரணியிவள்…

மீண்டுமோரு புள்ளியில்…
மீட்டப்படும் நினைவுகள்…


இறந்தவன் போலொருவன்…
இப்புவியில் இன்னொருவன்…
நிஜமானவனின் சாயலில்…

நிழலானவனின் வாசனை…

காரண காரியங்கள் மாற….

காட்சியில்தான் எத்தனை மாற்றங்கள்…

மீதி அத்தியாயங்களை கதையோட்டத்தில் புரட்டுங்கள்...

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

அழகான கதை...
முதல் பகுதியை நிறைத்தது அபூர்வாவின் துணிவு என்றால்...
இரண்டாம் பகுதியை அலங்கரித்தது அவளோட தவிப்பு...
தன்னம்பிக்கையோட மொத்த உருவம் அபூர்வா... உண்மையிலேயே இவள் ஒரு அபூர்வ பிறவி...

வேலம்மாள் பாட்டி பக்கத்துக்கு வீட்டு மாலா போன்ற நல்ல உள்ளங்களும் இந்த உலகத்தில் வாழ்கிறதால் தான் பூமி இன்னும் செழித்து நிற்கின்றது போல...

ஒரு சாதாரண பெண் வேலைக்கென வெளியே கிளம்பினாலே ஆயிரம் தொல்லைகள்... பார்வைகளற்ற இவளுக்கு சொல்லவும் வேண்டுமா...

தீபன் போன்ற தீயவர்கள் வாழும் இந்த உலகத்தில் தான் பிரவீன் போன்ற பவித்திரமானவர்களும் இருக்கிறார்கள்... ❣️❣️❣️

பிரவீன் அபூர்வாவிற்கு கிடைத்த வரம்...
அவன் நிலைத்து நிற்காதது அவள் வேண்டி வந்த சாபம் போல...
தன்னோட கடமை முடிந்துவிட்டது என்று தன்னோட உயிரை அவளுள் விதைத்துவிட்டு தன்னுயிர் நீத்துவிட்டான் போல 💔💔💔

அபூர்வா பிரவீனை சாகரனில் தேடும் தருணங்கள் மனதை கனக்க வைக்கின்றன.. 😢😢😢

பிரவீனாவின் நிராதரவான நிலை படிக்கும் பொழுது இதயம் கனக்கிறது...
'5 வயசு' என்று ஐந்து விரல்களை காட்டிய வரிகளை 5 முறை படித்திருப்பேன்... அவ்வளவு அழகு... 🥰🥰🥰

சாகரனின் நிலையோ பொறியில் மாட்டிய எலி தான்...
அவனுடைய நோக்கம் சரியென்றாலும் என்னால் அவனை முழுமையாக மன்னிக்க முடியவில்லை.. 😑😑😑

ரங்கநாயகியின் மனதின் ரணமே அவரின் வார்த்தைகளால் வெளிப்படுகின்றது... 😒😒

யாஷ் பிரவீனா உறவு 👌🏻👌🏻👌🏻
ஆரம்பத்தில் முட்டி மோதினாலும் அப்புறம் ஒரே ஒரு balloon இல் touch பண்ணிட்டான்.. 🤣🤣🤣

யஷோட அம்மா???? 😖😖😖 simply waste…

உணர்வுகள் மொத்தத்தையும் கொட்டி மேலே கீழே என்று எம்மை tune பண்ண வைத்துவிட்டீர்கள் writer ஜி... 👏🏻👏🏻👏🏻
வாழ்த்துக்கள்...

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
 
Top