#Dikshi_review
AP-100
கதையின் பெயர் : ஆபூர்வ வானவில் நூறடி.
கதையின் ஆசிரியர் : ஆத்விகா பொம்மு.
தலைப்புக்கு ஏற்றது போல் அபூர்வமானவள் தான் அவள்.
ஆம் தனக்கென்று சுயநலம் இல்லா ஒரு ஜீவன்.
அவள் பெயர் அபூர்வா.
ஒளியை இழந்து இருளை ரசித்தவள் அவள்.
ரசிக்க துடிக்கும் ஒளியை கண்டு ஓடுங்கி போனவள் அவள்.
ஓடுங்கி போனவளின் வாழ்வின் ஒளியாக வழிபாதை வகுத்துக் கொடுக்க வந்தவன் அவன் ஒருவனே.
வழிபாதை அமைத்து விட்டான். ஆனால் என்ன பாதைகளில் ஆங்காங்கே மேடு பள்ளங்களை தெரிந்தே சிதைத்து விட்டான்.
சிதைந்து போக இருந்த வழியை சீரமைக்க ஒரு வழி பாதை உருவாக, இனி அதன் வழியே நடப்போம் என்று நடக்க தொடங்கியவளை மீண்டும் விதி இரு வழி பாதை உருவாக்கியது.
இம்முறை இரு பாதை அல்லவா. அதனால் அவள் மட்டுமில்லாமல் அவளுடன் சேர்ந்து எதிர் எதிர்புறம் பயணிக்க தொடங்கியது அவனின் வாழ்க்கை என்னும் வழி பயணம்.
தூரதேசம் போல் இருந்தாலும் இருவருக்குமே சாலைகளில் கற்களும் முள்களும் சம அளவு குத்தி கிழித்து வலியை கொடுக்க, அதன் காயங்களிலிருந்து வெளியே வர வழி இருந்தும் சுகமான வேதனையுடன் இருவருமே தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
இருவருக்குமே பின்னிப்பிணைந்த கரங்களோடு ஒரே பாதையில் நடக்க ஆசை தான். ஆனால் உரியவனின் சிந்தை ஏனோ சுயநலமாக முடிவெடுத்து விட்டது.
ஆம் எதிரே இருந்து பார்ப்பவர்களுக்கு அவனின் சுயநலம் மட்டுமே விளங்கும். ஆனால் உரியவளுக்கு சுயநலத்தில் இருக்கும் வலி தெரியும்.
அதனால் தான் என்னவோ அவனை அவளால் வெறுத்து விட முடியவில்லை. உடன் இருந்து துணையாகி போனாள் அவனின் வலியை பகிர்ந்துக் கொள்வதற்கு.
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் காதலில் சேர்வது மட்டும் காதல் இல்லை.
ஒருவர் சூழ்நிலை கைதியாக இருக்கும் சமயத்தில் அதை புரிந்து விலகி நிற்பதும் ஒரு வித காதல் தான்.
அபூர்வா - ஒளி இழந்த தன் வாழ்க்கையை கடினப்பட்டு துணிச்சலுடன் வாழ்க்கையோடு போராடும் அபூர்வமானவள். பொல்லாத கயவர்களிடமிருந்து உயிரிலும் மேலான தன் மானத்தை காக்க நித்தமும் போராடிக் கொண்டு இருப்பவள். திடீர்னு தோன்றும் அற்புதம் போல் இவள் வாழ்விலும் ஒரு அற்புதம் நிகழ, அதற்கு சொந்தமானவனை தொலைத்து விட்டு தவித்து போனவள் இவள்.
சாகரன் - என்ன சொல்ல இவனை பற்றி. சுயநலம் உள்ளவன் தான். ஆனால் அதில் இருக்கும் காயங்களை தினமும் வலியோடு அல்லவா கடத்திக் கொண்டு இருக்கிறான். வலிகள் அவளுக்கு மட்டுமே என்று ஒரு மனம் கூறினாலும், அருகில் இருந்தும் கிடைத்த பொக்கிஷத்தை ஆசை தீர தொட்டு கூட பார்த்து சந்தோஷம் அடைய முடியாத இவனின் வலி எத்தனை கொடுமையானது. ஒரு கணம் ஒரே ஒரு நொடி அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சிந்தித்து முடிவெடுத்து இருந்தால் இந்நேரம் உயிர் கொடுத்த தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் சகோதரியையும் முதல் முறையாக தந்தை என்று பட்டம் கொடுத்த மகனையும் இழந்து இருப்பனே.
அப்பொழுது அவனுக்கு கிடைத்து இருக்கும் பெயர் இதே சுயநலம் என்னும் வார்த்தை தான். ஆனால் இந்த சுயநலத்தின் காயங்கள் மிகவும் வீரியமாக இருந்து இருக்கும்.
அதற்கு தாயின் மகனாகவும் அண்ணனாகவும் மட்டும் முடிவெடுத்த சுயநலக்காரன் என்ற பட்ட பெயரே எவ்வளவோ சிறந்தது.
வலிகள் அவளுக்கு மட்டுமில்லை அவனுக்கும் தான். கண் இருந்தும் குருடனாக நடிக்க வேண்டிய கட்டாயத்தின் வேதனை அவனும் அவளும் மட்டுமே அறிவார்கள்.
பிரவீன் - சுயநலமே இல்லாத மனிதன். ஒளி இழந்தவளின் வெளிச்சமாக இவன். அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தனுடன் காதல் கொண்டு வாழ்க்கை முழுவதும் இவன் கரம் பற்றி நடந்திட ஆசைகளுடன் முதல் அடியை எடுத்து வைத்தவளின் கரத்தை வலுக்கட்டாயமாக பிரித்து விட்டு, பாதியிலே மறைந்து போனதின் மாயம் என்னவோ! வெளிச்சம் அளித்தவனே இருளையும் கொடுத்து விட்டு சென்று விட்டான். விதி ஆழமாக காதலிப்பவர்களை தான் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும். அப்படி என்ன ஆனந்தோமோ அந்த விதி இதில்.
ரங்கநாயகி - கடுமையானவர் தான். ஆனால் மிகவும் மென்மையானவரும் கூட. கல்லுக்குள் ஈரம் போல் தான் இவரின் குணம். பட்ட காயத்திலே திரும்ப அடி பட்டு விட கூடாது என்று எச்சிரிகையாக இருந்ததின் விளைவு தான் காதல் கொண்டவர்களை பிரித்து விட்டது.
ஒரு விதத்தில் பார்த்தார் இவரின் மனமும் குணமும் குழைந்தையின் நினைவுகளை தான் கொடுக்கும். எப்படி ஒரு குழந்தை கீழே விழுந்தால் அடிப்பட்டு விடுமோ என்று பயத்தில் கீழே விழாமல் நடக்க பயலுமோ. அதே போல் தான் இவரும். ஆனால் சிறு வித்தியாசம் என்வென்றால் குழந்தைகள் கீழே விழுந்து அடிப்பட்டாலும் மீண்டும் எழுந்து நடை பயல முயலும்.
ஆனால் இவரின் காயம் அவருக்கு ஆறாத வலி. மீண்டும் அந்த வேதனையின் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் போயிவிடுமோ என்று பயந்தவர் தான் யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.
சத்தியேந்திரன் & மதி - அண்ணனுக்கு நல்ல தம்பி இவன். தெரியாமலே அண்ணனின் வாழ்க்கையில் மீண்டும் ஒளி வீச இவன் செய்த ஒரு செயல் நன்மையில் முடிந்து போனது. அண்ணனை போல் சுயநலமாக இல்லாமல் தன்னலமாக செயல்பட்டத்தின் பலன் அவன் காதல் கைகூடியது தான்.
சத்யவாணி & ஷஷன் - கைகூடும் காதல் இருந்தும் தாயின் வார்த்தைக்காக காதலனை விலகி வைத்தவள். ஷஷனும் தன் காதலுக்காக காத்திருந்து காதலியை கரம் பிடித்தவன். சத்தியேந்திரன் காதலை விட இவர்கள் காதல் ஒருபடி மேலே தான்.
மேனகா - இவளை எல்லாம் திட்டவே புதுசா வார்த்தையை கண்டுபிடிச்சிட்டு வரனும் போல. இவளை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்ல தகுதி இல்லாதவள்.
சத்தியவர்மன் - மூடனாகி போனான். இது தான் அவனுக்கு பொருந்தும் ஒரே வார்த்தை.
அபூர்வாவின் பாட்டி - மிகவும் தங்கமானவர். உறவுகள் கைவிட்ட நிலையிலும் உடன் இருக்கிறேன் என்று புது நம்பிக்கையை முதல் முதலில் அபூர்வாவுக்கு கொடுத்தவர்.
பிரவீனா - கல்லை கூட கரைக்கும் சக்தி படைத்தவள். குழந்தையின் உலகத்தில் நம் பிடிவாதங்கள் அனைத்தும் தளர்ந்து போகும் என்பதற்கு இவளே சாட்சி.
யாஷ் - மகனை, தமையனை, பேரனை என்று அனைத்திலும் அவன் தந்தை போல். அதாவது சாகரனின் மகன் இவன் என்றும். வில்லனாக தோன்றினாலும் இறுதியில் நாயகனாக மாறி போனதின் மாயம் என்னவோ.
முன்பு சொன்னது தான்...
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் காதலில் சேர்வது மட்டும் காதல் இல்லை.
ஒருவர் சூழ்நிலை கைதியாக இருக்கும் சமயத்தில் அதை புரிந்து விலகி நிற்பதும் ஒரு வித காதல் தான்.
இப்படிக்கு.
என்றும் ப்ரியமுடன்
திக்ஷிதா லட்சுமி.